Archive for the ‘காதல் அரசன்’ Category

தமிழச்சிகளின் வீரமா, திராவிடச்சிகளின் சோரமா, பெண்ணிய வீரங்களின் உரிமைகளா, என்னென்பது, ஏதென்பது?

பிப்ரவரி27, 2015

தமிழச்சிகளின் வீரமா, திராவிடச்சிகளின் சோரமா, பெண்ணிய வீரங்களின் உரிமைகளா, என்னென்பது, ஏதென்பது?

வலையில் விழுந்த தொழிலதிபர்கள் 5வது திருமணம் செய்ய முயன்ற கல்யாண ராணி சிக்கியது எப்படி

வலையில் விழுந்த தொழிலதிபர்கள் 5வது திருமணம் செய்ய முயன்ற கல்யாண ராணி சிக்கியது எப்படி

பேச்சால் ஆண்களை மயக்கிய கல்யாண ராணி: 5வது திருமணத்துக்கு முயன்ற இளம்பெண் போலீசில் சிக்கினார்: பரபரப்பு தகவல்கள்:  இதுவரை கல்யாண மன்னன்கள், திருமண ராஜாக்கள், காதல் அரசன்கள் என்றெல்லாம் கேள்வி பட்டோம். அதாவது, ஒரு ஆண் பல பெண்களை ஏமாற்றிக் கல்யாணம் புரிந்து கொண்ட சமாச்சாரங்கள். இப்பொழுது, அதே போல ஒரு பெண் மாறியுள்ளாள். “நகை, பணத்துக்காக 4 வாலிபரை திருமணம் செய்து ஏமாற்றிய பெண் கைது”, “காதல் வலையில் பணக்கார வாலிபர்கள்…4 பேரை ஏமாற்றி திருமணம் செய்த கில்லாடி பெண்”, “வசீகர பேச்சால் ஆண்களை மயக்கிய கல்யாண ராணி: 5வது திருமணத்துக்கு முயன்ற இளம்பெண் போலீசில் சிக்கினார்: பரபரப்பு தகவல்கள் ”, “வலையில் விழுந்த தொழிலதிபர்கள்: 5வது திருமணம் செய்ய முயன்ற கல்யாண ராணி சிக்கியது எப்படி?,”, என்றெல்லாம் செய்திகள் வந்துள்ளன. ஏற்கெனவே, ஆர்குட்டினால் பெண்கள் சீரழிந்தனர்; செல்போன் காதலால் சோரம் போக நேரிட்டது; பேஸ்புக்கினால் கற்பிழந்தனர்; இதை பெண்ணுரிமைகள் என்பதா, நவநாகரிக மனித உரிமைகள் என்பதா, மேற்கத்தைய கலாச்சாரத்தின் தாக்கம் என்பதா, தமிழச்சிகளில் சமூக பிறழ்சி என்று விளக்கம் கொடுப்பதா என்று பெண்கள், பெண்ணிய வீராங்கனைகள், தமிழச்சிகள் தாம் தீர்மானிக்க வேண்டும்.

இந்து, சுபிக்‌ஷா, சவுந்தரவள்ளி, காயத்ரி

இந்து, சுபிக்‌ஷா, சவுந்தரவள்ளி, காயத்ரி

சீனிவாசன் புகார்நவம்பர் 2014ல் திருமணம், பிப்ரவரி 2015ல் புகார்[1]: சென்னை பி.வி.எஸ்.நகரை சேர்ந்தவர் சீனிவாசன் கட்டிட காண்டிராக்டர். வீடு, அலுவலகங்களில்  உள் அலங்காரம் செய்யும் தொழில் செய்து வருகிறார்.  இவர் கடந்த 2014 நவம்பர் மாதம் மணமகன் தேவை என்ற விளம்பரத்தை இணையதளத்தில் பார்த்துள்ளார். அதில், மணமகளின் பெயர், கோவையை சேர்ந்த காயத்ரி (30), பிஎஸ்சி பட்டதாரி என்று குறிப்பிட்டு இருந்தது. உடனே அதில் இருந்த செல் எண்ணில் காயத்ரியை தொடர்பு  கொண்டு சீனிவாசன் பேசினார். இதையடுத்து இருவருக்கும் திருமணம் நடந்தது.  இவர் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் நேற்று புகார் மனு அளித்தார்[2]. அதில், ‘‘கோவையை சேர்ந்த பி.எஸ்.சி. பட்டதாரி பெண் காயத்ரி என்ற பெண்ணை கடந்த 2014–ம் ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் செய்துக்கொண்டேன். திருமணத்துக்கு பிறகு அவள் நடத்தையில் எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. சில தினங்களுக்கு முன்பு காயத்ரியின் செல்போனை பார்த்தபோது அதில், ஏராளமான ஆண்களின் எண்கள் இருந்தன. உடனே சீனிவாசன் அந்த நம்பர்களுக்கு தொடர்பு கொண்டு பேசிய போது காயத்ரிக்கு ஏற்கனவே பல திருமணம் முடிந்தது தெரிய வந்தது. விசாரணையில் அவள் ஏற்கனவே 3 பேரை திருமணம் செய்து அவர்களிடம் இருந்து நகை–பணத்தை அபகரித்துக்கொண்டு ஏமாற்றி விட்டு என்னை மணந்துள்ளது தெரியவந்தது. தற்போது 5–வதாக இன்னொரு வாலிபரை திருமணம் செய்து கொள்ள முயற்சிக்கிறார். அவள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறியுள்ளார்[3].

கல்யாண ராணி - ஐந்து திருமணங்கள்

கல்யாண ராணி – ஐந்து திருமணங்கள்

இந்து, சுபிக்‌ஷா, சவுந்தரவள்ளி, காயத்ரி…………எல்லாமே நான்தான் எனும் வீராங்கனை[4]: இந்து, சுபிக்‌ஷா, சவுந்தரவள்ளி, காயத்ரி ….இதெல்லாம் கடைப்பெயர்களோ, சாம்பு-சோப்புகளின் நாமங்களோ இல்லை. சீனிவாசன் என்பவர் மாட்டிக் கொண்ட பெண்ணின் பெயர்கள். இவர் ஏமாந்ததால், போலீஸில் புகார் கொடுத்தார். திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையம் இன்ஸ்பெக்டர் பிரான்வின் டேனி இந்திய குற்றவியல் சட்டப் பிரிவுகளில் பெயர்மாற்றம் செய்து ஏமாற்றுதல், மோசடி செய்தல், ஏமாற்றுதல் முதலிய குற்றங்களுக்காக [ sections 294 (b), 417, 419 (punishment for cheating by personation) , 406 (punishment for criminal breach of trust) and 420 (cheating)[5]] வழக்குப்பதிவு செய்து, காயத்ரியை பிடித்து விசாரணை நடத்தினார். விசாரணையில் அவளது உண்மையான பெயர் இந்து என்பதும், தாய்–தந்தை இல்லாத அவர் கோவையில் உள்ள ஒரு விடுதியில் தங்கி பி.எஸ்.சி. படித்து வந்ததும் தெரியவந்தது. இணையதளம் மூலம் வரன் தேடி வசதியான வாலிபர்களை தனது காதல் வலையில் வீழ்த்தி அவர்களை திருமணம் செய்து நகை–பணத்தை அபகரித்த பின் அவர்களை கழற்றி விடுவதும் தெரியவந்தது. இதற்காக அவள் தனது பெயரை இந்து, சுபிக்‌ஷா, சவுந்தரவள்ளி, காயத்ரி என பல பெயரை மாற்றி மோசடி செய்து உள்ளார்[6]. தனது வயதையும் குறைத்து தனது பெயரை பதிவு செய்துள்ளார். இதை நம்பி ஏராளமான ஆண்கள், அவரை தொடர்பு கொண்டு பேசும்போது, வசீகரமாக பேசி அவர்களை வலையில் சிக்க வைத்துள்ளார். முக்கியமாக காயத்ரி, தனது சாதியினரை மட்டுமே ஏமாற்றியுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்[7].

பலதார உரிமைகள் மற்றவர்களுக்கு உண்டு என்றால், எங்களுக்கும் உண்டு

பலதார உரிமைகள் மற்றவர்களுக்கு உண்டு என்றால், எங்களுக்கும் உண்டு

ஐந்தாண்டுகளில் ஐந்து ஆண்களுடன் உறவு[8]: பெண்கள் வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும், ஜாலியாக செலவழிக்க வேண்டும், ஊரைச் சுற்ற வேண்டும், கார்-பங்களா என்று சொகுசு வாழ்க்கை வேண்டும் அதற்காக சிறிது “அட்ஜெஸ்ட்” செய்து கொண்டால் தவறில்லை என்ற எண்ணம் வலுப்பட்டுள்ளது. “கற்பு” பற்றிய மேன்மை, உயர்ந்த சிந்தனைகள் முதலியவை நீர்த்துபோய் விட்டுள்ளன. ஒரு தடவை போனால் என்ன, பலதடவை போனால் என்ன, போனது போனது தானே, இதைப் பற்றி யாரும் கவலைப்படப் போவதில்லை என்று துணிந்து இம்மாதிரியான உறவுகளில் ஈடுபட ஆரம்பிக்கிறார்கள். இல்லையென்றால், ஐந்தாண்டுகளில், ஐந்து ஆண்களுடன் மனைவியாக வாழ முடியாது.

2010–ம் ஆண்டு நரசிம்மராவ்[9]: காயத்ரி 2010–ம் ஆண்டு திநகரைச் சேர்ந்த நரசிம்மராவ் (40) என்ற கட்டிட காண்டிராக்டரை திருமணம் செய்து உள்ளார். அவரிடம் இருந்து ரூ.2 லட்சத்தை பறித்து விட்டு விவாகரத்து பெற்று விட்டார்.

 

2012–ம் ஆண்டு ரவிக்குமார்[10]: 2012–ம் ஆண்டு திருச்சியை சேர்ந்த ரவிக்குமார் (35) என்ற தொழிலதிபரை திருமணம் செய்துள்ளார். இவரிடமும் இருந்து ரூ.1 லட்சம் பெற்றுவிட்டு விவாகரத்து வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விசாரணையில் உள்ளது.

 

2013–ம் ஆண்டு ராஜகோபால்[11]: 2013–ம் ஆண்டு மாம்பலத்தைச் சேர்ந்த கோவில் பூசாரி ராஜகோபால் (33) என்பவரை திருமணம் செய்து ரூ.1 லட்சம் பணம், மற்றும் 5 பவுன் நகையை அபகரித்து உள்ளார்.

 

2014 சீனிவாசன்: இதன்பின் காயத்ரி என்ற பெயரில் முகப்பேர் சீனிவாசனை தனது வலையில் வீழ்த்தி உள்ளார். அவரிடம் தனக்கு கடன் இருப்பதாக கூறி, ரூ.50 ஆயிரம் பணம், 5 பவுன் நகை ஆகியவற்றை பெற்றுள்ளார். மேலும் ஆடம்பர பொருட்களை வாங்கி அனுபவித்துள்ளார்[12].

 

2015 பாலாஜி[13]: அதன்பிறகு அம்பத்தூரை சேர்ந்த பாலாஜி என்ற வாலிபரை தனது திருமண வலையில் வீழ்த்தி உள்ளார். இவர்களது திருமணம் திருவொற்றியூரில் நடப்பதாக இருந்தது[14].

அடுத்ததாக, சீனிவாசனை திருமணம் செய்துவிட்டார். திருமணம் முடிந்த பிறகு கணவன்களிடம், வீட்டில் உள்ள அனைத்து நகைகளையும் தனக்கு கொடுத்தால்தான், தாம்பத்திய உறவுக்கு வருவேன் என கண்டிஷன் போட்டுள்ளார். அதன்படி நகைகளையும், பணத்தையும் கொடுத்துள்ளனர். பின்னர், நகைகளை அபேஸ் செய்துவிட்டு, கணவன்களுக்கு அல்வா கொடுத்துவிட்டு பிரிந்து சென்றுள்ளார்[15].

கல்யாணம், குறுகிய நேர இல்லறம், நகைபணம் கறப்பு, விவாக ரத்து, மறுமணம் அல்லது அதே பாதையில் தொடர்வது: சீனிவாசன் சந்தேகப்பட்டு புகார் கொடுத்ததால், இவள் மாட்டிக் கொண்டுள்ளாள். விவரங்களை அறிந்ததால் அவர் திருமங்கலம் போலீசில் புகார் செய்தார். விசாரித்த போலீசார் காயத்ரியை கைது செய்தனர்[16]. மற்றவர்கள் தங்களது மானம், மரியாதை போய் விடுமே என்று அமைதியாக இருந்து விட்டார்கள் என்று தெரிகிறது. திருமணங்கள் பதிவு செய்யப்பட வேண்டும் என்றுள்ளது. மேலும், பல ஆவணங்களில் மனைவியின் பெயர் எழுதப்பட, அறிவிக்கப்பட வேண்டியுள்ளது. அவ்வாறிருக்கும் போது, எப்படி குறுகிய காலத்தில் எல்லா ஆவணங்களையும் சரிசெய்ய முடியும் என்பதும் புரியவில்லை.  ஆண்கள் எப்படி திருமணத்திற்கு முன்னர், விவரங்களை சரிபார்க்காமல் ஒப்புக் ஒண்டு மணம் புரிகின்றனர் என்பதும் வியப்பாக இருக்கிறது. கிட்டத்தட்ட பாதிக்கப்படும் பெண்களின் நிலையை ஆண்களும் அடைகிறார்கள் என்பது தெரிகிறது. பெற்றோர், உற்றோர், மற்றோர் பார்த்து கல்யாணம் செய்து கொடுக்கும் பழக்கம் கொஞ்சம்-கொஞ்சமாக மாறிவரும் வேளையில், பெண்களே இத்தகைய இல்லற மோசடிகளில், தாம்பத்திய ஏமாற்றிவேலைகளில், கள்ள உறவுகளில் ஈடுபடுவது வருத்தத்திற்குரிய பிரச்சினையாகும். மேலும், இத்தகைய பெண்கள் கருக்கலைப்பு, அபார்ஷண் போன்ற யுக்திகளிலும் ஈடுபடுவார்கள் என்பது தெரிந்த விசயமே. அத்தகைய நிலையில் பலருக்கு “மனைவியாக”ப் படுத்து சோரம் போய், மறுபடி-மறுபடி அதே பாதையில் செல்லும் போக்கு விபச்சாரத்தைவிட படுமோசமானது எனலாம். தாய்மை, பெண்மை போன்ற மகத்தான அணிகலன்கலன்களைப் போற்றும் பெண்கள், இத்தகைய நவீன விபச்சாரிகளாக மாறிவருவது கேவலமான விசயம் தான். இனி பெருமாள் முருகன்கள் இதைப் பற்றியும் கதை எழுதலாம், சிலர் சினிமா எடுக்கிறேன் என்றும் புறப்படலாம். ஆனால், அவர்கள் தமிழச்சிகளின், பெண்களின் கற்ப்பை ஏலம் விடுகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

© வேதபிரகாஷ்

27-02-2015

[1]http://www.dinamani.com/latest_news/2015/02/26/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-4-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%88-/article2688104.ece

[2] http://www.dinamalar.com/news_detail.asp?id=1193807

[3] மாலைமலர், நகை, பணத்துக்காக 4 வாலிபரை திருமணம் செய்து ஏமாற்றிய பெண் கைது, மாற்றம் செய்த நாள் : வியாழக்கிழமை, பெப்ரவரி 26, 1:07 PM IST பதிவு செய்த நாள் : வியாழக்கிழமை, பெப்ரவரி 26, 1:08 PM IST .

[4] தினமலர், இணையத்தில் மணமகனை தேடி 4 பேரை மணந்த பெண் கைது, 27-02-2015: 00:15.

[5] http://www.newindianexpress.com/cities/chennai/Much-Married-Woman-Runs-Out-of-Luck-Arrested/2015/02/27/article2689091.ece

[6] http://www.maalaimalar.com/2015/02/26130816/married-cheating–woman-arrest.html

[7] தினகரன், வலையில் விழுந்த தொழிலதிபர்கள்: 5வது திருமணம் செய்ய முயன்ற கல்யாண ராணி சிக்கியது எப்படி?, 27-02-2015.

[8] தினமணி, காதல் வலையில் வீழ்த்தி 4 பேரை திருமணம் செய்த கில்லாடி பெண் கைது, By dn, சென்னை; First Published : 26 February 2015 05:26 PM IST

[9]http://www.newindianews.com/view.php?22cOl72bc440Wb4e3KMM402dKmD3dd0pDmI203CgA42e4A04Oecb3lOoc3

[10]. நியூ இந்தியா நியூஸ், காதல் வலையில் பணக்கார வாலிபர்கள்…4 பேரை ஏமாற்றி திருமணம் செய்த கில்லாடி பெண், வியாழக்கிழமை, 26 பெப்ரவரி 2015, 10:00.59 AM GMT +05:30

[11] http://tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=71165

[12] தினத்தந்தி, 4 வாலிபர்களை ஏமாற்றி திருமணம் செய்த பெண் 5-வது திருமணத்தின் போது கைது, பதிவு செய்த நாள்: வியாழன் , பெப்ரவரி 26,2015, 2:51 PM IST; மாற்றம் செய்த நாள்: வியாழன் , பெப்ரவரி 26,2015, 3:00 PM IST.

[13] தமிழ் முரசு, வசீகர பேச்சால் ஆண்களை மயக்கிய கல்யாண ராணி : 5வது திருமணத்துக்கு முயன்ற இளம்பெண் போலீசில் சிக்கினார்: பரபரப்பு தகவல்கள், பிப்ரவரி.26,2015 

[14] http://www.dailythanthi.com/News/State/2015/02/26145143/woman-cheated-4-youths-by-marriage-and-arrested-on.vpf

[15] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=133799

[16] http://www.dhinasari.com/latest-news/4-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88-003138.html