Archive for the ‘கிடார்’ Category

பாட்டுப்பாடி பேன்டு வாசித்த பெண்களை ஆபாசமாக பேஸ்புக்கில் திட்டியவர்களில் மூன்று பேர் கைது!

பிப்ரவரி8, 2013

பாட்டுப்பாடி பேன்டு வாசித்த பெண்களை ஆபாசமாக பேஸ்புக்கில் திட்டியவர்களில் மூன்று பேர் கைது!

பாட்டுப்பாடி பேன்டு வாசித்த காஷ்மீரப் பெண்கள்: காஷ்மீரில் அடிப்படைவாதம் போர்வையில், இந்திய-விரோத, இஸ்லாம் தீவிரவாதிகள் எதிர்ப்புத் தெரிவித்து பத்வாவும் போட்டிருக்கறார்கள். இந்தியாவில் பெண்களும் எல்லா துறைகளிலும் முன்னேறி வருகின்றார்கள். மருத்துவ-தொழிற்துறைகளில் பெண்களின் ஆதிக்கம் மற்றும் தாக்கம் அதிகமாகவே உள்ளது, இந்நிலையில் ஆண்களால் ‘பேண்ட்’ எனப்படும் இசைக்குழுக்கள் நடத்தப்பட்டு வந்த நிலையில், காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவிகள் ஒன்றிணைந்து ‘பிரகாஷ் பேண்ட்’ (Pragash) என்ற பெயரில் புதிய இசைக்குழு ஒன்றை உருவாக்கினார்கள். அதில், நோமா நசீர், ஃபாரா, அனீகா காலித் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இசைக்குழுவுக்கு ”பிரகாஷ்” (முதல் ஒளி) என்று பெயரிடப்பட்டனர். கடந்த டிசம்பரில் அவர்கள் முதல் போட்டியில் கலந்து கொண்டனர். முற்றிலும் பெண்களே இடம்பெற்ற இந்த இசைக்குழு, அரங்கேற்றத்தின் போதே, இசைக்குழுக்களுக்கிடையே நடந்த திறைமைப் போட்டியில் முதல்பரிசையும் வென்றுள்ளார்கள்[1].

பெண்கள் இசைக்கருவிகளை வாசிப்பது, பாடுவது இஸ்லாமிய வாழ்க்கை நெறிக்ககு எதிரானது: இந்நிலையில், இசைக்கருவிகளை வாசிப்பதும், பாடுவதும் இஸ்லாமிய வாழ்க்கைக்கு எதிரானது “ஹராம்” (இஸ்லாத்தில் விலக்கப்பட்டது, ஏற்றுக் கொள்ளமுடியாதது) என்று குற்றம் சாட்டிய பழமை வாதிகள், இந்த இசைக்குழுவை தடை செய்ய வேண்டும் என ‘பத்வா’ (இஸ்லாம் கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது விதிக்கப்படும் தடை ஆணை) வழங்கினார்கள். இந்த பத்வாவை மீறி பிரகாஷ் இசைக்குழுவின் பயணம் தொடர்ந்தால், எதிர்விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் அவர்கள் மிரட்டல் விடுத்திருந்தனர். ஜம்மு-காஷ்மீர் மாநிலம் 1980களினின்றே அடிப்படைவாதிகள், பழமைவாதிகள், தீவிரவாதிகள் கைகளில் சிக்கித் தவித்து வருகின்றது. இந்துக்கள் பெரும்பாலாக விரட்டியளிக்கப் பட்டுள்ள நிலையில், முஸ்லீம்களும் தீவிரமான இஸ்லாம் மயமாக்குதல் முறைக்குத் தள்லப்பட்டுள்ளனர். இதனால், முஸ்லீம் பெண்களும் பலவிதக கட்டுப்பாடுகளில் சிக்கித் தவித்து வருகின்றனர்.

இருவிதமாகப் பேசி மழுப்பிய உமர் அப்துல்லா: இந்த மிரட்டலுக்கு கண்டனம் தெரிவித்த ஜம்மு-காஷ்மீர் மாநில முதல் மந்திரி உமர் அப்துல்லா, பிரகாஷ் இசைக்குழுவினரை மிரட்டும் அதிகாரம் யாருக்கும் இல்லை. அந்த குழுவின் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும். இருப்பினும், இசை நிகழ்ச்சிகள் நடத்துவதை அவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று சொதப்பலாக கூறியிருந்தார். ஆங்கில செனல்களில் இருவிதமாகப் பேசியதிலிருந்தே அவரும் பழமைவாதிகளுக்கு துணைப் போவது தெரிந்தது. பொதுவாக ஆக்ரோஷமாகப் பேசி கொதிக்கும் திருமதி முப்தி முஜஹமது காணாமல் போனது வேடிக்கைதான். ஆகவே எதிர்பார்த்தப்படியே, இந்நிலையில், பிரகாஷ் இசைக்குழு இனிமேல் நிகழ்ச்சிகள் எதையும் நடத்துவதில்லை என முடிவெடுத்துள்ளதாக அந்த குழுவினருக்கு நெருக்கமான ஒருவர் கூறியதாக காஷ்மீர் ஊடகங்கள் நேற்று தெரிவித்துள்ளன. இதைத் தொடர்ந்து, இசைக்குழுவை கலைக்க 3 மாணவிகளும்முடிவு செய்தனர்[2]. இதற்குள், இணைத்தளத்தில் இப்பெண்களுக்கு எதிராக விவாதம் தொடங்கப் பெற்று, அவர்களைக் கடுமையாக விமர்சிக்கப்பட்டனர்.

பேஸ்புக்கில் ஆபாசமாக இடுகைகளையிட்ட முஸ்லீம்கள்: ஜம்மு-காஷ்மீரில் செயல்பட்டு வந்த, பெண்கள் இசை குழுவுக்கு, சமூக வலைத் தளங்கள் மூலமாக, மிரட்டல் விடுத்தவர்களுக்கு எதிராக, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்[3]. மிகவும் தரக்குறைவான வார்த்தைகள் உபயோகப்படுத்தி தாக்கியுள்ளனர். சுமார் 900 பேர் பேஸ்புக்கில் விமர்சனம் செய்துள்ளனர். அதில் 26 பேர் அத்தகைய வார்த்தைத்தீவிரவாதம் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளனர். “விரைவில், அவர்கள் கைது செய்யப்படுவர்’ என்றும், அறிவித்துள்ளனர். அத்துடன், காஷ்மீரிலுள்ள, இஸ்லாம் மத குருவான, பஷீருதீன் அகமது (Mufti Bashir-ud-din) என்பவரும், இந்த பெண்கள் இசை குழுவுக்கு எதிராக, தடையுத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து, இசை குழுவில் இடம் பெற்றிருந்த, மூன்று பெண்களுமே, “இனிமேல் இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்க போவது இல்லை’ என, அறிவித்தனர்.

மற்ற முஸ்லீம் பெண்களை விடுத்து எங்களை ஏன் எதிர்க்க வேண்டும்?: பல இஸ்லாமியப் பெண்கள் பாட்டுப் பாடி வருகிறார்கள், ஆனால், அவர்களை யாரும் எதிர்த்ததில்லை. எங்களை ஏன் எதிர்க்கிறார்கள் என்று தெரியவில்லை, இருப்பினும் நாங்கள் நிறுத்திக் கொள்கிறோம் என்று அறிவித்துள்ளனர். இதற்கிடையே, இவர்களுக்கு, சமூக வலைத் தளமான,”பேஸ்புக்’ மூலமாக, மிரட்டல் விடுத்தவர்களுக்கு எதிராக, காஷ்மீர் போலீசார், வழக்கு பதிவு செய்துள்ளனர். “தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ், சம்பந்தபட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து முழு வீச்சில் விசாரணை நடக்கிறது. மிரட்டல் விடுத்தவர்கள், விரைவில் கைது செய்யப்படுவர்’ என, காஷ்மீர் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், “மிரட்டல் விடுத்துள்ளவர்களில், ஆறு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மற்றவர்களையும், அடையாளம் காணும் பணி, நடக்கிறது. அடுத்த சில நாட்களில், கைது நடவடிக்கை துவங்கும்‘ என்றன.

தாராளமனப்பாங்குக் கொண்ட முஸ்லீம்கள் கேள்வி கேட்டது: இதற்கிடையே, காஷ்மீரில் செயல்பட்டு வரும், பிரிவினைவாத அமைப்புகளுக்கு இடையே, இந்த பெண்கள் இசைக் குழுவை எதிர்ப்பதில், கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. எம்.கே.எம்., என்ற அமைப்பைச் சேர்ந்த, ஜமருதா ஹபீப் கூறுகையில், “ஆண் பாடகர்களுக்கு எதிராக, தடையுத்தரவு பிறப்பிக்காதது ஏன்? அரசுப் பணிகளிலும், ராணுவ நடவடிக்கைகளிலும், ஏராளமான பெண்கள் பணியாற்றுகின்றனர்; அவர்களுக்கு தடையுத்தரவு பிறப்பிக்காதது ஏன்?,” என, கேள்வி எழுப்பியுள்ளார். வக்கம் போல அருந்ததி ராய் மாயமாகியுள்ளார் அல்லது அமைதியாக உள்ளது வேடிக்கையாக உள்ளது. பெண்கள் இப்படியெல்லாம் பாடக்கூடாது என்றால், நூர்ஜஹான்[4], ரூனா லைலா, நாஸியா ஹுஸைன் போன்றோர் பாடியிருக்க முடியாது; குறிப்பாக பாகிஸ்தானிய பாப் பாடகி நாஸியா ஹுஸைன் குர்பானி படத்தில் “ஆப் ஜைஸா கோயி மேரி ஜிந்தகி மே ஆயி” என்ற பாடலைப் பாடி அடியிருக்க முடியாது என்று முஸ்லீம் கலைஞர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தானிலேயே பாப் இசைக்குழுக்களில் பல பெண்கள் பாடி வருகின்றனர்[5].

ஆறில் மூன்று பேர் கைது: பேபுக்கில் அவ்வாறாக இடுகைகளையிட்டவர்களில் ஐ.பி.எண்களை வைத்துத் துப்புத்துலக்கித் தேடியதில் மூன்று பேர் சிக்கியுள்ளனர்[6]. பிஜ்பேஹராவில் தாரிக் கான் (தெற்கு காஷ்மீரில் ஒரு ஊர்), ரமீஜ் ஷா கந்தேர்பல் (மத்திய காஷ்மீர்) மற்றும் இர்ஷத் அஹமத் சாரா படமலூ (ஶ்ரீநகர்) என்ற இடங்களிலிருந்து கைது செய்துள்ளதாக போலீஸார் அறிவித்துள்ளனர்[7]. முதலமைச்சர் உமர் அப்துல்லா அவர்களை பாராட்டியுள்ளதை[8] வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேதபிரகாஷ்

08-02-2013


[4] 1940-60களில் ஹிந்தித் திரைப்பட பிரபலமான பாடகி. இவருக்குப் பின்னால்தான், லதா மங்கேஸ்கர் வந்தார்.

[8] Three persons have been arrested by the Jammu and Kashmir Police in connection with the alleged online abuses and threats to the all-girls rock band, Pragaash. Jammu and Kashmir Chief Minister Omar Abdullah tweeted, “I’m glad the police in Kashmir has identified and arrested people for the online threats made to the girls. I’m told more arrests are possible.”