Archive for the ‘குரியன்’ Category

திவாரி திருமணம், திக் விஜய் கூடாத உறவு, சிங்வி செக்ஸ், கேரள காங்கிரசாரின் செக்ஸ் லீலைகள் – இப்படி சிக்கியுள்ள சோனியா காங்கிரஸ்!

மே20, 2014

திவாரி திருமணம், திக்விஜய் கூடாதஉறவு, சிங்வி செக்ஸ், கேரளகாங்கிரசாரின் செக்ஸ் லீலைகள் – இப்படி சிக்கியுள்ள சோனியா காங்கிரஸ்!

Meenakshi Natarajan.3

காங்கிரஸ், செக்ஸ், பாரம்பரியம்: ஆரம்பத்திலிருந்தே காங்கிரசுக்கும் செக்ஸுக்கும் தேவையில்லாத தொடர்புகள் இருந்து தான் வந்தன. நேரு மாமா அதில் அதிகமாக மாட்டிக் கொண்டுள்ளார்.  காங்கிரஸ்காரர்கள் இதில் ஏன் அதிகமாக மாட்டிக் கொள்கிறார்கள் என்று  2009லேயே அலசப்பட்டது[1].  பதவி, பணம், வசதி முதலியவையெல்லாம் இருந்தால், ராஜா மட்டுமல்ல, இக்கால அரசியல்வாதிகளும், ஜாஜபோகம் அனுபவிக்க ஆசைப்படத்தான் செய்வார்கள். 2004-2014 பத்தாண்டு சோனியா ஆட்சி ஊழல் ஆட்சிக்கு மட்டுமல்ல, செக்ஸ் ஊழலுக்கும் பெயர் போனது, பலருக்குத் தெரியாது. ஏப்ரல் 2012ல் சோனியா விசுவாசியான அபிஷேக்சிங்வியின் செக்ஸ் வீடியோ வெளிவந்தது[2].

Abishek Singhvi Sex

Abishek Singhvi Sex

 காங்கிரஸின் செய்தி தொடர்பாளர் என்ற அந்தஸ்த்தில் இவர் ஏஹோ காந்தியின் மறுவுருவம் போன்று பேசி வருவார். ஆனால், இவரது சேம்பர் செக்ஸ் இவரது முகமூடியைக் கிழித்து விட்டது. ஏப்ரல் 16, 2013 அன்று ராகுல் கேரளாவிற்குச் சென்றபோது,  அவருக்குமுன்னாலேயேதொண்டர்கள்அடித்துக்கொண்டதுடன், தலைவர்களின் செக்ஸ் விவகாரங்களை வெளிப்படுத்தினர்[3].

Kissed Nehru

Kissed Nehru

கேரள காங்கிரஸ்காரகளின் செக்ஸ் லீலைகள் எல்லைகளைக் கடந்தன: சோனியா காங்கிரஸ் செக்யூலரிஸம் பேசினாலும், கேரளாவில் கம்யூனலிஸம் தான், அது முஸ்லிம் கட்சி, கிருத்துவக்கட்சி எதுவானாலும் சரி. கிருத்துவக்கட்சியின் தலைவர் பி.சி.ஜார்ஜ் சாதாரணமாக அசிங்கமாக, ஆபாசமாக, பாலியல் பாஷைப் பேசிவருபவர்[4] என்று பல செய்திகள் வந்தன[5]. வயலார் ரவி என்ற அமைச்சரும் இதில் சளைத்தர் அல்ல[6]. இதற்கான வீடியோ ஆதாரங்கள் “யூ டியூப்”பில் உள்ளன. கேரள அரசியல்வாதிகள் செக்ஸ் விஷயத்தில் மாட்டிக்கொள்வதும் சகஜமானதுதான்[7]. “ஐஸ்கிரீம் பார்லர் செக்ஸ்” என்ற வழக்கு மிகவும் பிரசித்தம்[8], ஏனெனில், இதில் பல கேரள புள்ளிகள் சிக்கினர். டிசம்பர் 11, 2011ல்கூட, பி.கே. குன்னாஜக்குட்டி என்ற IUML அமைச்சர் போலீஸாரால் விசாரிக்கப் பட்டுள்ளார்[9]. இப்பொழுது 2013ல், அச்சுதானந்தன், “ஐஸ்கிரீம் பார்லர் செக்ஸ்” விஷத்தைப் பற்றிய ஒரு டைரி கிடைத்துள்ளது என்றும், அதில் குட்டி எவ்வாறு சம்பந்தப்பட்டுள்ளார் என்ற ஆதாரங்கள் உள்ளதாக கூறியுள்ளார்[10]. ஆகஸ்ட் 2013ல் ராகுலுக்கு திருமணம் ஆயிற்றா, இல்லையா என்றெல்லாம் செய்திகள்வந்தன[11]. வழக்கம்போல பெண்களுடன் தொடர்பு என்று செய்திகளும், புகைப்படங்களும் வெளிவந்தன[12]. நவம்பர் 2013ல் பீதாம்பர் குரூப் ஸ்வேதாமேனனிடம் மாட்டிக் கொண்டார்[13].

Sasi-Sunanda-third-marriage-with-each other

Sasi-Sunanda-third-marriage-with-each other

ஜனவரி 2014ல் சசி தரூர் விவகாரம், அவரது மணவாழ்க்கை மீறிய பந்தங்களை எடுத்துக் காட்டியது. அவர் மறுத்தாலும், மனைவி சுனந்தா புஷ்கரே எடுத்துக் காட்டி, பொறுக்கமுடியாமல் “தற்கொலை” செய்து கொண்டாள்[14].மார்ச் 20914ல் கேரள உமன் சாண்டியின் சூரிவொளி மின்சாரம் ஊழலும் பற்பல செக்ஸ் தொடர்புகளை எடுத்துக் காட்டின[15]. இனி சமீபத்தைய திவாரியின் செக்ஸுக்கு வருவோம்.

Swetha Menon - Petambara Kurup-2

Swetha Menon – Petambara Kurup-2

நீதிமன்றம் மூலம் மாட்டிக் கொண்ட என்.டிதிவாரி (ஏப்ரல் 2014): காங்கிரஸ் கட்சியின் மூத்ததலைவரும், ஆந்திர முன்னாள் கவர்னருமான என்.டி. திவாரி தான் தன் தந்தை என்று ரோகித்சேகர் (வயது 34) என்பவர் கடந்த 2008ம் ஆண்டு பரபரப்பான குற்றச்சாட்டை கூறினார்[16]. தனது தாயாரான உஜ்வலா மற்றும் திவாரிக்கும் பிறந்த மகன் என்று குறிப்பிட்டார் மகன். ஆனால், உஜ்வாலாவுக்கும் தனக்கும் எந்த தொடர்பும் கிடையாது என்றும், ரோகித் தனது மகன் இல்லை என்றும் பல ஆண்டுகளாக திவாரி கூறிவந்தார். இதையடுத்து, தன்னை திவாரியின் மகன் என்று அறிவிக்கக் கோரி டெல்லி உயர்நீதி மன்றத்தில் ரோகித் 2007ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார்[17]. இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம்,  என்.டி.திவாரியிடம் மரபணுசோதனை நடத்த உத்தரவிட்டது.  இதற்கும் திவாரி முதலில் மறுத்தார், பிறகு “சேம்பில்” எடுக்கப்பட்டது. மரபணுசோதனையில் ரோகித் சேகருக்கு தந்தை திவாரி தான் என தெரிய வந்தது[18]. வழக்கை விசாரித்த நீதிமன்றம், திவாரி தான் ரோஹித் சேகரின் தந்தை என்று கடந்த மாதம்  22ஆம் தேதி தீர்ப்பளித்தது. இந்த பரிசோதனை முடிவை ஏற்க மறுத்த திவாரி,  தன் மீது அவதூறாக பழிபோடுவதாக ரோகித் சேகரை குற்றம் சாட்டினார்.  பின்னர் வழக்கு தொடுத்த ரோகித் சேகருடன் கோர்ட்டுக்கு வெளியே சமரசம் செய்து கொள்ள விரும்பினார்.  6 வருட சட்ட போராட்டத்திற்குப் பிறகு ரோகித் சேகரை தன் மகனாக ஏற்றுக் கொண்டதையடுத்து உறவுப் பிரச்சினை முடிவுக்கு வந்தது[19].

ND Tiwar forcing a woman singer to dance with him 2013 Jharkhand function

ND Tiwar forcing a woman singer to dance with him 2013 Jharkhand function

திருமணம் செய்து கொண்ட திவாரி (மே 2014): உத்தரபிரதேசத்தில் 3 முறை முதல்வராக இருந்தவர் என்.டி. திவாரி.  ஜார்கண்ட் மாநில முதல்வராகவும் ஒருமுறை இருந்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் விசுவாசமான தலைவர்.  2007 – 2009ம் ஆண்டுகளில் ஆந்திர மாநில ஆளுநராக இருந்தபோது,  இளம்பெண்களுடன் நிர்வாணமாக இருந்த வீடியோ காட்சிகள் வெளியானதால் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அவருக்கு வயது 89.  இவருக்கும் உஜ்வாலா சர்மா என்ற பெண்ணுக்கும் இளமைகாலத்தில் இருந்த நெருங்கிய உறவுகாரணமாக, . ரோகித் சேகர் என்ற மகன் பிறந்தார்[20].  89 வயதான திவாரி,  லக்னெள நகரில் உள்ள தனது இல்லத்தில் உஜ்வலாவை புதன்கிழமை (14-05-2014) திருமணம் செய்துகொண்டார்[21]. 88வது வயதில் திவாரி இரண்டாவது திருமணம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது[22].

ND Tiwari Ujwala.wedding

ND Tiwari Ujwala.wedding

மகிழ்ச்சியில் உஜ்வலா– மனைவி: இந்நிலையில், திவாரியின் வீடு முன்பாக இம்மாத தொடக்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட உஜ்வலா, பின்னர் வீட்டுக்குள் அனுமதிக்கப் பட்டார். அதன் பிறகு,  அந்த வீட்டிலேயே தங்கியிருந்த உஜ்வலாவுக்கும் திவாரிக்கும் புதன்கிழமை திருமணம் நடைபெற்றது.  “எங்கள் உறவுக்கு சமூக அந்தஸ்து கொடுக்க அவர் விரும்பினார். அதனால், என்னை திருமணம் செய்துகொண்டார். இதனால், நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.  சட்ட நடைமுறைகளை முடித்த பின்னர் அனைவரையும் அழைப்போம்”  என்று நிருபர்களிடம் தெரிவித்தார் சர்மா.திருமணம் குறித்து செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை (15-05-2014) உஜ்வலா கூறுகையில்,  “பாரம்பரிய முறைப்படி எங்கள் திருமணம் நடைபெற்றது.  எங்கள் உறவுக்கு சமூகமதிப்பு கொடுக்க வேண்டும் என்று திவாரி விரும்பினார். இன்னும் சில சட்ட நடைமுறைகள் உள்ளன.  அவை முடிந்த பிறகு அனைவரையும் விருந்துக்கு அழைப்போம்’  என்றார்.

ND Tiwari Ujwala

ND Tiwari Ujwala

உபியின் தலைவர்கள் புறக்கணித்தனர்: திவாரிக்கு நெருங்கிய தலைவர்கள் பலர் உள்ளனர்.  சமீபத்தில் தேர்தலின் போதுகூட, ரீடா பகுகுணா போன்ற காங்கிரஸ்காரர்கள் அவரிடம் சென்று ஆசிபெற்றனர். ஆனால்,  திருமணத்திற்கு அவர்கள் வரவில்லை.  முல்லாயம் சிங் யாதவ் மற்றும் இப்பொழுதைய முதன்மந்திரி அகிலேஷ் யாதவ் முதலியோரும் கண்டுகொள்ளவில்லை[23]. இவ்விழா அவரது வீட்டு விழா போன்றே அமைந்து விட்டது[24]. இருப்பினும் பீஹார் பிஜேபி தலைவரான சுசில்குமார் மோடி, இப்பொழுது திவாரி அடுத்தது திக் என்று டுவிட்டரில் கிண்டலடித்துள்ளார்[25].

[1] Sushil Kumar Modi         ✔ @SushilModi

Follow

ND Tiwary in nupital knot at the age of 88.Next is Digvijay Singh.Many more Congmen to follow.

3:48 PM – 15 May 2014

Khamba @gkhamba

Follow

Quite cool of N.D. Tiwari to get married at an age where ones only commitment is to kidney failure.

தனது 88 வயதில் திவாரி இரண்டாவது முறையாக திருமணம் செய்து கொண்டுள்ளார். இனி அடுத்தது திக் விஜய் சிங்;  அதற்குப் பிறகு மற்றும் பல காங்கிரஸ்காரர்கள் அவர்களை பின்பற்றுவார்கள், என்று நாஜுக்காக சொல்லியிருக்கிறார்.  சில பொது மக்கள் வேறுமாதிரி கிண்டலடித்துள்ளனர். “ஆஹா, நல்ல விசயம்தான்.  இந்த வயதில் திவாரி திருமணம் செய்து கொண்டுள்ளார், ஆனால், பிரச்சினை என்னவென்றால் கிட்னி வேலை செய்யாமல் இருக்கும் நிலைதான்”, என்று கம்பா என்பவர் நக்கலடித்துள்ளார்[26].

காங்கிரஸ்காரர்கள் இப்படி நாறும் வேளையில் தான், காங்கிரஸ் பெண்மணிகள் சேர்ந்து கொண்டு, மோடியை தாக்கினர்! தூஷித்தனர்!!

The Cong-women attacking Modi

The Cong-women attacking Modi

தமது கட்சியில் மேலிருந்து, கீழுள்ள தலைவர்கள் எல்லாம் இப்படி வெளிப்படையாக சிக்கியுள்ள நிலையில், அவர்களுக்கு புத்தி சொல்லாமல், ஒழுங்காக நடந்து கொள்ள அறிவுரை சொல்லாமல், இந்த பெண்மணிகள் ஊடகங்களுக்கு பேட்டியையும் கொடுத்தார்கள். ஆனால், காங்கிரஸ் செக்ஸ் விவகாரங்களைப் பற்றி, ஊடக விற்பன்னர்களும் கேட்கவில்லை!

© வேதபிரகாஷ்

20-05-2014

[1]http://socialterrorism.wordpress.com/2009/12/28/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/

[2]வேதபிரகாஷ், நித்யானந்தாவும், அபிஷேக்சிங்வியும்: செக்ஸ்வீடியோகுற்றங்கள், பரிசோதனைகள், நீதிமன்றங்கள் (1), http://secularsim.wordpress.com/2012/04/24/alleged-sex-cds-judicial-action-differs-in-nityananda-and-singvi/

[3] http://secularsim.wordpress.com/2013/04/17/738-rahul-kerala-sexist-ministers-secularism-discourse/

[4] http://www.youtube.com/watch?v=spJwbHBfvAc

[5] George’s most recent outburst was against T V Thomas, late husband of veteran communist leader K R Gouri. Local newspapers edited out some of his abusive words when they published his comments to the media. This was after his attack on Ganesh but before the minister’s resignation this week.

[6] There was an outrage in Kerala after Union Minister Vayalar Ravi was caught on video making a personal swipe at a female reporter who wanted his reaction on PJ Kurien’s alleged involvement in the 1996 Suryanelli gangrape case. In the video, Ravi is seen asking the reporter if she has had a personal problem with Kurien. Women journalists in Kerala have expressed outrage over the incident and staged protests.http://www.youtube.com/watch?v=cd7DpiQiwaY

[7] http://ibnlive.in.com/blogs/rajeshkumar/388/64398/kerala-minister-in-sex-scandal-a-detectives-diary.html

[8] http://secularsim.wordpress.com/2011/03/04/ice-cream-parlour-sex-scandal-kerala/

[9] Kerala Industries Minister P K Kunhalikutty has been been questioned by a police team re-investigating the “ice cream parlour” sex scandal case in connection with allegations made against him by a relative. The team led by ADGP Vinson M Paul questioned the Minister at his residence here on Thursday night, police sources said on Friday. Kunhalikiutty, a senior Indian Union Muslim League (IUML) leader, was learnt to have denied the allegations and told the police that ‘unfounded’ accusations were made against him with the motive of destroying his political career.

 http://zeenews.india.com/news/kerala/kerala-minister-grilled-by-police-in-sex-scam-case_746175.html

[10] Reportedly the opposition leader VS Achuthanandan has gotten hold of the case diary of the sensational “ice-cream parlour case” in which Kunhalikutty was allegedly involved. Also, the case diary apparently shows that the minister had paid off the victims to exclude himself from being investigated.

http://www.firstpost.com/politics/after-kurien-yet-another-sex-scandal-catches-up-with-congress-in-kerala-618856.html

[11] http://secularsim.wordpress.com/2013/08/09/rahul-is-he-married-bachelor-in-love-why-debates-about-his-marital-status/

[12] http://secularsim.wordpress.com/2013/08/09/controversies-regarding-rahul-affairs-with-different-women/

[13] http://evilsofcinema.wordpress.com/2013/11/03/73-years-old-congress-mp-involved-in-molesting-40-years-actress/

[14] https://womanissues.wordpress.com/2014/01/18/sunanda-pushkar-sasi-tarur-polygamy-ended-with-death-the-story-of-a-hindu-woman-who-was-driven-away-by-the-islamic-terrorists/

[15] http://secularsim.wordpress.com/2014/03/11/solar-panel-scam-politics-involving-actresses-and-continued-sexual-harassment/

[16]ஒன்இந்தியா,88 வயதில் 2வதுதிருமணம்செய்தகாங்கிரஸ்தலைவர்என்.டி. திவாரி, Posted by: Siva Updated: Thursday, May 15, 2014, 16:48 [IST]

[17]தினகரன், தனதுமனைவிஇல்லைஎன்றுகூறிவந்த 67 வயதுபெண்ணைமணந்தார்திவாரி, May 15, 2014.

[18] http://www.maalaimalar.com/2014/05/15170219/89-year-old-Tiwari-marries-mot.html

[19] மாலைமலர், ரோகித்சேகரின்தாயாரைதிருமணம்செய்தார்என்.டி.திவாரி, பதிவுசெய்தநாள் : வியாழக்கிழமை, மே 15, 5:02 PM IST

[20] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=92011

[21] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=92011

[22] http://tamil.oneindia.in/news/india/veteran-leader-nd-tiwari-marries-ujjwala-sharma-201009.html

[23] http://www.prabhatkhabar.com/news/114896-Narayan-Dutt-Tiwari-was-married.html

[24]यहीवजहहैकिएनडीतिवारीकेशादीकरनेकीखबरफैलनेकेबादभीमुलायमसिंहयादवसेलेकरमुख्यमंत्रीअखिलेशयादवतकनेउन्हेंशादीकीबधाईनहींदी. जबकिमुलायमसिंहयादवतिवारीजीकोअपनेपरिवारकासदस्यमनानेहैं.

[26] http://ibnlive.in.com/news/the-best-twitter-reactions-to-88yearold-politician-nd-tiwaris-wedding/471968-79.html

சூரியநெல்லி பெண் கற்பழிப்பு வழக்கு, தொடரும் சட்ட முரண்பாடுகள், அரசியன் பின்னணிகள்!

ஜூன்30, 2013

சூரியநெல்லி பெண் கற்பழிப்பு வழக்கு, தொடரும் சட்ட முரண்பாடுகள், அரசியன் பின்னணிகள்!

அரசியல்வாதிகளும் செக்ஸ் தொடர்புகள், தொல்லைகள், தீர்ப்புகள்: இந்திய அரசியல்வாதிகல் செக்ஸ் குற்றங்களில் ஈடுபடுவது ஒன்றும் புதியதல்ல[1]. அப்பொழுதெல்லாம், ஒருவேளை பெரிய இடத்து விவகாரம் என்று ஊடகங்கள் அமுக்கிவிட்டனவா என்பதெல்லாம் தெரியவில்லை. இப்பொழுதே ஊடகங்களில் அதிகமாகவே வந்துக் கொண்டிருக்கின்றன. என். டி. திவாரியின் லீலைகள் வெளிவந்தன[2]. அபிஷேக் சிங்வி என்ற காங்கிரஸ் சட்டவல்லுனரின் செக்ஸ் விளையாட்டு வீடியோவாக வெளியிடப்பட்டது[3]. கேரளாவிலும் அரசியல் செக்ஸ் விவகாரங்கள் அதிகமாகவே இருந்து வந்துள்ளன. அவற்றில் ஐஸ்கிரிம் பார்லர் செக்ஸ்[4], சூரியநெல்லி கற்பழிப்பு, அபயா கொலை வழக்கு என்பவை அதிகமாக பேசப்படுகின்றன. பலமுறை காங்கிரஸ்காரர்கள் தங்களுக்குள்ளேயே இவற்றைப் பற்றி ஒருவர்மீது ஒருவர் குற்றம் சாட்டிக் கொண்டிருப்பர்[5]. நீதிமன்ற தீர்ப்புகளும் மாற்றிக் கொண்டே இருக்கின்றன.

கேரளாவில் காங்கிரஸ்-கம்ய்யூனிஸ்ட் வாத-விவாதங்கள்: சூரியநெல்லி மாணவி பாலியல் பலாத்கார வழக்கு கேரள அரசியலில் நெடுங்காலமாகவே பிரச்சினையாக, சர்ச்சையாக இருந்து வருகிறது. காங்கிரஸ்-கம்யூனிஸ்ட் வாதங்கள்-விவாதங்கள் இந்த விஷயத்தில் பலமுறை ஆபாசத்தின் எல்லைகளைக் கடந்துள்ளன. இருப்பினும், கற்பழிக்கப்பட்ட அப்பெண்ணிற்கு நியாயம் கிடைக்கும் என்பதைவிட ஊடக-தொந்தரவு, மீடியா-அவதூறு, அரசியல்-தாக்குதல் என பலவற்றிற்கும் அப்பெண் அகப்பட்டிருக்கிறாள். கேரளா காங்கிரஸ் எம்.பி. கே. சுதாகரன் விபச்சார வழக்கு, கற்பழிப்பு வழக்கு இரண்டும் வேறானது[6], அவற்றை அவ்விதமாகத்தான் விசாரிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்[7]. அரசியல்வாதிகளிடம் அத்தகைய வாதங்கள் நடந்தாலும், ராஜ்யசபா துணைத் தலைவர், பி.ஜே.குரியனையும் சேர்க்க உத்தரவிட வேண்டும்’ எனக் கோரி, அந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண், தாக்கல் செய்த மனுவை, தொடுபுழா செஷன்ஸ் கோர்ட், 29-06-2013 அன்று தள்ளுபடி செய்தது[8] வியப்பாக இருந்ந்தது. கடந்த மார்ச்சில் இவ்வழக்கில் சம்பந்தபட்ட 31பேருக்கு பெயில் வழங்கப்பட்டது[9].

தரமராஜனும், குரியனும், சாட்சியமும்: கடந்த, 1996ல், கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், சூரியநெல்லி கிராமத்தைச் சேர்ந்த, 17 வயது மாணவி கடத்தப்பட்டு, பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, பலரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில், காங்கிரஸ் மூத்த தலைவரும், ராஜ்யசபாவின் தற்போதைய துணை தலைவருமான, பி.ஜே.குரியனுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. ஆனாலும், மாணவி பலாத்கார வழக்கில், அவர் சேர்க்கப்படவில்லை. இந்நிலையில், இந்த பலாத்கார வழக்கில், முக்கிய குற்றவாளி என, அறிவிக்கப்பட்டு, சமீபத்தில், சுப்ரீம் கோர்ட்டால் தண்டனை விதிக்கப்பட்ட, தர்மராஜன் என்பவர், சமீபத்தில், மீடியாக்களுக்கு அளித்த பேட்டியின் போது, “சூரியநெல்லி மாணவி பலாத்கார வழக்கில், பி.ஜே.குரியனுக்கும் தொடர்பு உண்டு. குமுளி விருந்தினர் இல்லத்தில், மாணவி தங்கியிருந்த போது, அங்கு, குரியனை காரில் அழைத்துச் சென்று விட்டேன்’ என, தெரிவித்தார். அதையடுத்து குரியனிடம் மறு விசாரணை செய்ய வேண்டும் என பொது நலன் வழக்குகள் பதியப்பட்டன[10].

மாறிய தர்மராஜன், மாறிய சாட்சியங்கள்: ஆனாலும், பின்னர், இந்தத் தகவலை, தர்மராஜன் மறுத்தார். “நான் ஒரு போதும், குரியனை பார்த்ததில்லை. மீடியாக்களுக்கு பேட்டி அளித்த போது, போதையில் இருந்தேன்’ என்று கூறினார். இதற்கிடையில், “தர்மராஜன் தெரிவித்த புகாரின் அடிப்படையில், சூரியநெல்லி மாணவி பலாத்கார வழக்கில், பி.ஜே.குரியனையும், ஒரு குற்றவாளியாக சேர்க்க வேண்டும்’ எனக்கோரி, அந்த சம்பவத்தில், பாதிக்கப்பட்ட பெண், தொடுபுழா செஷன்ஸ் கோர்ட்டில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். இந்த மனு, நேற்று விசாரணைக்கு வந்த போது, “அது விசாரணைக்கு உகந்தது அல்ல’ எனக் கூறி, செஷன்ஸ் நீதிபதி, ஆப்ரகாம் மேத்யூ தள்ளுபடி செய்தார். பிறகு மறுபடியும் மேல் முறையீடு என்ற சடங்கு ஆரம்பிக்குமா, இன்னொரு 20 வருடங்கள் சென்றுவிடுமா? அப்பெண்ணின் கதியென்ன? குற்றம் செய்தவர்கள் இப்படியேத் தப்பித்துக் கொண்டு காலங்கடத்திவிடுவார்களா, காலம் சென்றுவிடுமா? பிறகு வழக்குகள் செத்துவிடுமா?

வேதபிரகாஷ்

© 29-06-2-13


[7] Congress MP from Kerala K. Sudhakaran has kicked up a political storm by allegedly making a defamatory statement against the victim of Suryanelli rape case . Hitting out at Sudhakaran, Kerala opposition leader V.S. Achuthanandan said: “Sudhakaran’s statement is not befitting of a member of Parliament.
If Sudhakaran had a girl child would he have dared to make a statement like that?”
The case that created a storm in Kerala in 1996, returned to limelight recently following a Supreme Court verdict setting aside a Kerala High Court verdict discharging 35 of the 36 accused in the case.
Though the victim, who was then 16-year-old, had repeatedly alleged that Rajya Sabha deputy chairman P.J. Kurien was one of the many who gangraped her over a period of 40 days, the SC has discharged him.
Meanwhile, Sudhakaran stood by his statement saying rape cases and prostitution cases should be treated differently. Read more at: http://indiatoday.intoday.in/story/suryanelli-victim-congress-mp-k-sudhakaran-doubts-character/1/250642.html