Archive for the ‘குளியல்’ Category

பாலியல் ரீதியிலான குற்றங்கள் 1960களிலிருந்து ஏன் பெருகுகின்றன – அவற்றைக் கட்டுப்படுத்த, குறைக்க என்ன செய்ய வேண்டும்?

ஜூன்11, 2016

பாலியல் ரீதியிலான குற்றங்கள் 1960களிலிருந்து ஏன் பெருகுகின்றன அவற்றைக் கட்டுப்படுத்த, குறைக்க என்ன செய்ய வேண்டும்?

கல்யாணம், தாலி கட்டுதல், சடங்குகள்

 கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன்: ஒரு ஆண், ஒரு பெண், பெற்றோர், உற்றோர் மற்றோர் ஒப்புதலுடன், திருமணம் என்ற சடங்கிற்குப் பிறகு உடலுறவு கொண்டு, வாழ்க்கை வாழ்வது, சமூகத்தில், உலகத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டு, நடந்து வந்துக் கொண்டிருக்கின்றன. “குடும்பச் சட்டங்கள்” அப்படித்தான் உருவாகின, இன்றும் தொடர்ந்து அமூலில் இருந்த் கொண்டிருக்கின்றன. “கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன்” என்று பெண்கள் வாழ வேண்டும் என்பது ஆணாதிக்க விதிகளால் ஏற்பட்டதல்ல. பெண்களுக்கு பாதுகாப்புக் கொடுக்கப்பட வேண்டும் என்றா நோக்கில் உருவாக்கப் பட்டது. பெண்ணை எல்லாவிதங்களில் கல்லாக இருந்து தாங்கிக் கொண்டு, புல்லாக இருந்து வளைந்து கொண்டு மனைவியை அனுசரித்துக் கொண்டு வாழ வேண்டும் என்ற அர்த்தத்தில் அது சொல்லப்பட்டது. அதாவது, பெண்மை எப்படியாகிலும் காக்கப்படவேண்டும் என்பது தான் கொள்கையாக இருந்தது. ஆனால், இக்காலத்து பெண்கள் நாங்கள் எங்கள் விருப்பப்படி, உரிமைகள் உள்ளபடி, நாங்கள் என்னவேண்டுமானாலும் செய்து கொண்டிருப்போம், தொழில் ரீதியில் அவையெல்லாம் அத்யாவசியமாகிறது, தேவையாகிறது என்றெல்லாம் கூட நியயப் படுத்தி செய்யும் போது, “கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன்” என்று தான் கணவன்மார்கள் தள்ளப்படுகிறார்கள்!

Rexona soap exposing woman

பெண்மையை போற்றிக் காக்க, பல்விதமான விதிமுறைகள், சட்டதிட்டங்கள் ஏற்படுத்தியது ஏன்?: மனித இனம் உருவாக்கம், பெருக்கம், வளர்ச்சி முதலியன மாற்றும் உலகவாழ்க்கையே பெண்ணினால் கட்டுப்படுத்தப் பட்டு வருகிறது. இதனால், தான் எல்லா சமூகங்களும் பெண்மையை போற்றிக் காக்க, பல்விதமான விதிமுறைகள், சட்டதிட்டங்கள் ஏற்படுத்தின. குறிப்பாக, அவளது கற்பு காக்கப்பட வேண்டும் என்பதற்காகத்தான் குடும்பம், சமூகம், நாடு என்று சிரத்தையோடு இருந்து செயல்பட்டன. கிரியைகள் மற்றும் சடங்குககளும் அவ்வாறே ஏற்படுத்தப் பட்டன. நவீனகாலத்தில் அவையெல்லாம், பெண்களை அடிமைப்படுத்த உருவாக்கப் பட்டன, என்று விளக்கம் அளிக்கப்படுகின்றன. ஆனால், பெண்மை சீரழிந்து கொண்டிருக்கிறது, அதனை எப்படி கட்டுப் படுத்துவது என்பது பற்றி அத்தகைய பெண்ணியப் பெண்டுகள் நினைப்பதாகத் தெரியவில்லை.

Liril girl exposing old and new ad

இந்திய பெண்கள் கற்புடன் இருப்பதை எதிர்பார்க்க முடியாது என்ற போது, பெண்களுக்கு ஏன்  கோபம் வரவில்லை, போராடவில்லை?: கற்பழிப்புகள் அதிகமாகிக் கொண்டிருக்கும் நிலையில், பெண்கள் முறையாக ஆடை அணியவேண்டு எனும்போது, அதன், அர்த்தத்தைப் புரிந்தும், புரியாதது மாதிரிக் கொண்டு, நவீன பெண்கள், பெண்ணிய வீராங்கனைகள், மனித உரிமைகள் போராளிகள் போன்றோர் பொரிந்து தள்ளினர். ஆனால், பெண்கள் கற்புடன் இருக்க வேண்டும் என்று போராட வில்லை. இந்தியா டுடே, செக்ஸ்-சர்வே செய்து, இந்திய பெண்கள் கற்புடன் இருக்கவில்லை, திருமணத்திற்கு முன்பாகவே செக்ஸ் வைத்துக் கொள்கின்றனர், திருமணம் ஆனபின்பும், மற்ற ஆண்களுடன் செக்ஸ் வைத்துக் கொள்கின்றனர், நவீன பெண்கள் இவற்றையெல்லாம் தவறாகக் கொள்வதில்லை என்றெல்லாம், அட்டவனைப் போட்டுக் காட்டியபோதும், என்னடா அல்லது என்னடி பெண்மையை இப்படி கேவலப்படுத்துகிறார்களே என்று கவலைப்படவில்லை. மாறாக, குஷ்பு போன்ற பெண்ணிய பிருகஸ்பதிகள், திருமணத்திற்கு முன்பு செக்ஸ் வைத்துக் கொள்வதில் ஒன்றும் தவறில்லை என்று பேசியதை, தவறில்லை என்று உச்சநீதி மன்றமும், வழக்குகளைத் தள்ளுபடி செய்தது, கற்புக்கு வெற்றியா-தோல்வியா என்று சொல்ல முடியவில்லை.

Indian Bra advertisements chaning and exposed

சேர்ந்து வாழும் ஆண்பெண் வாழ்க்கையும், விபரீத சந்ததியினரும்: பிறகு, திருமணம் போன்ற சடங்குகள்-பந்தங்கள்-பந்தங்கள்-கட்டுப்பாடுகள் இல்லாமல், சேர்ந்து வாழும் வாழ்க்கைக் கூட வாழலாம் என்று பேச ஆரம்பித்து விட்டனர். அவ்வாறே அவர்கள் வாழ்ந்து காட்டுகின்றனர். அதாவது, ஒரு ஆண், ஒரு பெண் என்ற நியதி இல்லை, ஒரு ஆண்-பல பெண்கள்; ஒரு பெண்-பல ஆண்கள் என்று சேர்ந்து வாழலாம், பிரியலாம் என்ற முறை “வாழ்ந்து-கெட்டவர்கள்” என்ற பிரிவினரால் அங்கீகரிக்கப்பட்டு, பரிந்துரைக்கப் படுகிறது. இப்பிரிவினரில் பெரும்பாலோனோர் வாழ்க்கையில், குறிபாக தாம்பத்தியத்தில் தோல்வியடைந்த நடிகர்-நடிகைகள், சமுதாய-உச்சத்தில் இருக்கும் அறிவிஜீவிகள் போன்றோர்தான் உள்ளனர். இத்தகைய உடலுறவுகளில் முன்னர் மற்றும் பின்னர் பிறந்த குழந்தைகளின் கதி என்ன என்பதனை அவர்கள் யோசிப்பதாகத் தெரியவில்லை. அவர்கள் பெரியவர்கள் ஆகும்போது, யார் தந்தை, யார் தாய் என்பதனை ஆவணங்களில் எப்படி குறிப்பிடுவார்கள், பிறப்பு முதல் இறப்பு வரை உள்ள நிகழ்வுகளில் எப்படி தம்மை அடையாளப் படுத்திக் கொள்வார்கள் என்று தெரியவில்லை. பணக்காரர்களுக்கு இதைப் பற்றி கவலையில்லை. ஆனால், நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் ஏழைகளின் நிலை என்னாகும் என்பது பற்றி அவர்கள் நினைத்துப் பார்ப்பதில்லை.

Axe ad changing - 1890, 1950, 2013

பாலியல் ரீதியிலான குற்றங்கள் 1960களிலிருந்து ஏன் பெருகுகின்றன: 1960கள் என்று ஏன் குறிப்பிடப்பது என்றால், அக்காலத்தில் திமுக என்ற திராவிட கட்சி பலமாகி, ஆட்சியில் அமர்ந்தது. ஆட்சிக்கு வந்ததும், இந்து திருமணச் சட்டத்தில் [The Hindu Marriage Act] திருத்தம் கொண்டு வந்து, செல்லுபடியாகாத “சுயமரியாதைத் திருமணம்” மரியாதைப் பெற்றது. இதனால், அவ்வாறு திருமணம் செய்து கொண்டவர்கள் மற்றும் அவர்களது மகன்கள், மகள்கள் முத்லியோரும் சமூகத்தில் மரியாதை பெற்றனர். 1960-70, 1970-80, 1980-90, 1990-2000, 2000-2010 என்று பார்த்தால், ஆண்-பெண் உறவுகள் எப்படி சீரழிந்தன என்பதை கண்டு கொள்ளலாம். மேனாட்டு கலாச்சாரம்-நாகரிகம் தாக்கம் என்பது மட்டுமல்லாது, பெண்கள் உரிமைகள் என்று பெண்கள், எல்லகளை மீறியதும் காரணமாக அமைந்தது. அதே காலத்தில், சினிமா, நாளிதழ்கள், பத்திரிக்கைகள் முதலியனவும் பெண்களை ஒரு அனுபவிக்கும் பொருளாக மாற்ற ஆரம்பித்தன. ஆனால், பாலியல் குற்றங்கள் நடந்தபோது, இதையே கருவியாகப் பயன்படுத்தி சமூகத்தை சாடின. பெண்களை பண்டங்களாக நினைத்து துர்பிரயோகம் செய்து வருகிறார்கள் என்று குற்றஞ்சாட்டினர்.

LUX then and now

1980 வரை பெண்கள் ஓரளவிற்கு நாகரிகமாக சித்தரிக்கப் பட்டு வந்தனர். ஆனால், அதற்குப் பிறகு, பெண்கள் “சந்தப் பொருளாதார” [market economy] தேவைகளுக்காக மாற்றப்பட்டனர். சேலை-ரவிக்கைகளிலிருந்து விடுபட்டு, கையில்லா ரவிக்கை, ஸ்கர்ட், குட்டைப்பாவாடை, மார்பகங்கள், இடுப்பு முதலியவற்றை தாராளமாகக் காட்ட ஆரம்பித்தனர்[1]. “காட்டும் கலையில்” [exhibitionism] போட்டிப் போட்டுக் கொண்டு பெண்மையினை நவநாகரிகமாக்கினர். சினிமாதுறை வெளிப்பாடு பற்றி சொல்லத்தேவையில்லை. “போர்னோகிராபி” [pornography] நிலையை அடந்துள்ளது. இவ்வாறு பெண்கள் ஈடுபடுகின்றனரே என்று கவலைப்பட்டாலும், அக்கருத்துகள்,

 1. ஆணாதிக்கம் [patriarch, குலமுதலித்துவம் என்கிறார்கள் தமிழில்],
 2. இடைக்கால அடக்கியாளும் தன்மை,
 3. பிற்போக்குத்துவம்,
 4. குறுகிய மனங்கள்,
 5. பெண்மை-விரோத சக்திகள்
 6. மதவாதிகள்

என்றெல்லாம் சாடப்பட்டு அடக்கப்பட்டன. இதனால், 2010களில் அத்தகைய கருத்துகளை வெலியில் சொல்லவே பயப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். யாரும் கேட்பதற்கு இல்லை எனும்போது, ஆண்-பெண் உறவுகள் தாம்பத்திய எல்லைகளை மீறி, சோரம் போய் விபச்சாரமாவதில் ஆச்சரியம் இல்லை ஆனால், அது சமூகத்தைக் கெடுக்கும் பெரிய அபாயமாகி விட்டது.

LIRIL then and now

என்ன செய்ய வேண்டும்?: இந்திய பெண்மை தாக்கப்படுகிறது, இந்திய பெண்கள் பலவித தாக்குதல்களுக்கு உடபட்டிருக்கிறாற்கள் எனும்போது, இந்திய சமூகம் சும்மா இருக்க முடியாது. கூட்டுக் குடும்பத்தை சிதைத்த நிலையில், கணவன் மனைவி மனங்கள் இணைந்து, அன்புடன் – பாசத்துடன், சந்தோசமாக வாழ இப்பிரச்சினையுள்ள நிலையில் ஆலோசனைகள் சொல்ல வேண்டிய அவசியம் உள்ளது.

 1. நமது இந்திய கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம், நாகரிகம் பற்றிய காரணிகளை மதிக்க வேண்டும் [இதை விமர்சித்தாலும் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை].
 2. பெற்றோர் மற்றும் பெரியவர்கள் மதிக்கப் பட வேண்டும் – பெயரன், பேத்தி [தாத்தா, பாட்டி பெயரை உடையவர்] என்பவற்றிற்கு அர்த்ததுடன் உறவுமுறைகள் இருக்க வேண்டும்.
 3. வேலை, பணம் சம்பாதிப்பது என்றிருந்தாலும், வார இறுதியில், குடும்பத்துடன் இருக்க வேண்டும் [கம்பெனியின் கவர்ச்சி பார்ட்டிகளில் மயங்கக் கூடாது].
 4. கணவன் மனைவியை, மனைவி கணவனை மதிக்க வேண்டும், பாராட்ட வேண்டும், அனுசரித்துப் போக வேண்டும், உதவ வேண்டும் [பெற்றோர் மற்றோர் இல்லாத நிலையில் இவை அவசியமாகின்றன].
 5. நவீனத்துவத்திலும், இந்தியத்துவம் இருக்க வேண்டும் [மாறாக இந்திய எதிர்ப்பு காரணிகள் இருக்கக் கூடாது].
 6. செக்யூலரிஸம் பெயரில் இந்திய மதங்கள் தாக்கப்படுவது, உரிமைகள் பெயரில் பெண்ணியம் குறைகூறப்படுவது, நவீனத்துவம் போர்வையில் சமூக தர்மங்கள் எதிர்க்கப்படுவது முதலியன தடுக்கப்பட வேண்டும் [குறிப்பாக இந்துமதத்தைத் தாக்குவது இந்திய காரணிகளை தூஷிப்பதில் வெளிப்படுகிறது].
 7. இந்திய சமூக சீர்திருத்தம், மாற்றம் மற்றும் முனேற்றம், பாரம்பரிய பெண்ணிய காரணிகளை எதிர்ப்பதால் உண்டாகாது [இந்திய பென்களை அப்படியே அமெரிக்கப் பென்களைப் போன்று மாற்றி விட்டால் என்னாகும்?].
 8. பெண்களின் வறுமையைப் போக்க வேலைவாய்ப்பைப் பெருக்க வேண்டும். இதில் பாரம்பரிய தொழில்கள் தான் உதவும் [அதிக அளவில் உற்பத்தி மற்றும் அதிக மக்களால் உற்பத்தி இரண்டிற்கும் வித்தியாசம் உள்ளது].

Mother India then and now

© வேதபிரகாஷ்

08-06-2016

[1] http://www.huffingtonpost.com/entry/axe-commercial-suggests-that-women-ruin-everything_n_3689409.html?section=india

வழக்கமாக இராவணன் சட்டமீறல்களுடன் நர்ஸ் கல்லுரி நடத்தினானாம் மாணவிகள் குளிப்பதைப் பார்த்து ரசித்தானாம், பாலியல் சேட்டைகளை செய்தானாம்!

ஓகஸ்ட்11, 2014

 

வழக்கமாக இராவணன் சட்டமீறல்களுடன் நர்ஸ் கல்லுரி நடத்தினானாம் மாணவிகள் குளிப்பதைப் பார்த்து ரசித்தானாம், பாலியல் சேட்டைகளை செய்தானாம்!

Girl students taking bath

Girl students taking bath

குற்றம், குற்றம் செய்யும் தன்மை முதலியவை வளரும் விதம்: இந்தியாவில் ஜனத்தொகை பெருகுகிறது, அதனால் எல்லா தேவைகளும் அதிகரிக்கிறது. பெண்களும் வேலைக்கு என்று கிளம்பி விட்டார்கள். இதனால், பெண்களுக்கு வேண்டிய வேலைகள் பெருகுகின்றன, அத்தகைய வேலைகளுக்கு தேர்ச்சி என்றும் பயிற்சி வகுப்புகள், பள்ளிகள், கல்லூரிகள் என்று ஆரம்பிக்கப் படுகின்றன. வர்த்தக மயமாக்கும் எண்ணம் இருப்பதால், இதனை வைத்து சம்பாதிக்கலாம் என்ற எண்ணத்தில் ஆரம்பிக்கப் படுகின்றன. முதலில் பணம், பணம் சம்பாத்தியம் முதலியனத்தான் பிரதானமாக இருக்கின்றன. அதற்குப் பிறகு தான், ஒழுக்கம், சட்டங்களை மதித்தல், வரிகளைக் கட்டுதல் போன்ற எண்ணங்கள் வர்த்தகம் செய்யும் நபர்களுக்கு வருகின்றன. அப்பொழுதும், பணம் செலவழிக்காமல் எல்லாவற்றிலிருந்தும் தப்பித்து விடலாம் என்ற எண்ணம் மேலிடும் போது, சட்டமீறல்களிலும் ஈடுபடுகிறார்கள். அச்சட்டமீறல்கள் செய்யும் காரியங்களுக்கு ஏற்ப மாறுபடுகின்றன. குழந்தைகள், இளம் பெண்கள், பெண்கள் முதலியோரை வைத்து நடத்தப் படும் நிறுவனங்கள், காரியங்கள், என்னத்தான் சேவை, உதவி, தர்மம் என்ற போர்வைகளில் ஆரம்பித்தாலும், செயல்பட்டாலும், நாளடைவில், அவற்றிலிருந்து ரஎப்படி பணம் சம்பாதிக்கலாம், அரசு சட்டதிட்டங்களை ஏய்க்கிலாம் என்று தான் செயல்பாடுகளில் மாற்றம் ஏற்படுகின்றன.

Girls taking bath - roofless bathrooms - illustrative purpose

Girls taking bath – roofless bathrooms – illustrative purpose

சித்தாந்தங்கள் குற்றங்களைக் குறைக்கின்றனவா, பெருக்குகின்றனவா?: குழந்தைகள், இளம் பெண்கள், பெண்கள் சம்பந்தப்படும் பள்ளிகள், கல்லூரிகள் முதலியவற்றில், செக்ஸ்-தொல்லைகள், பாலியல் பலாத்காரங்கள், வக்கீர வன்புணர்வுகள் முதலியவையும் சேர்ந்து விடுகின்றன. கிருத்துவ நிறுவனங்களில் தொடர்ச்சியாக அத்தகைய சம்பவங்கள், நிகழ்வுகள் குற்றங்களுடன் நடப்பது வாடிக்கையாகி விட்டன. பெரியாரிஸம், கம்யூனிஸம் முதலியவை பெண்களுக்கு உரிமைகள் கொடுத்தன, அவர்களை அடுப்பறைகளிலிருந்து வெளியே வரச்செய்தன, அவர்களது சுதந்திரங்களைக் கொடுத்தன என்றெல்லாம் ஒரு பக்கம் வாதங்கள் வைக்கப் படுகின்றன. தமிழகத்தைப் பொறுத்த வரையில் கடந்த 60 ஆண்டுகளாக திராவிட-நாத்திக-இந்துவிரோதமான ஆட்சிமுறை, சித்தாந்தத் தாக்குதல்கள் முதலியவை நடைப் பெற்று வருகின்றன. அதனால், தார்மீக உணர்வுகள் போய்விட்டன, யாருக்கும் அடங்க வேண்டாம் என்ற வக்கிர குணங்கள் பெருகிவிட்டன, சட்டங்களை மதிக்கவும் வேண்டாம் என்ற நிலையும் ஏற்பட்டு விட்டது, குற்றங்கள் பெருகிவிட்டன, என்ற வாத ங்களும் வைக்கப்படுகின்றன.

Registrar looking at Girl-students taking bath from first floor

Registrar looking at Girl-students taking bath from first floor

சித்தாந்தவாதிகள், அரசியல்வாதிகள், அதிகாரிகள் கூட்டில் நடக்கும் குற்றங்கள்: குற்றவாளிகளுக்கு அதே சித்தாந்திகள், சித்தாந்த எண்ணங்கள் கொண்ட அரசியல்வாதிகள், நீதிபதிகள், போலீஸ் அதிகாரிகள், மேலும் சட்டதிட்டங்களை நடைப்படுத்த வேண்டியவர்கள், பெரிய இடங்களில் பொறுப்பான பதவிகளில் இருப்பவர்கள், முதலியோரும் இத்தகைய சித்தாந்த எண்ணங்களில் கட்டுப்பட்டுக் கிடப்பதால், குற்றங்களிலும் பாரபட்சம் பார்க்கின்றார்கள். நீதி-நியாயம் முதலியவை எல்லோருக்கும் ஒரே மாதிரியாகக் கிடைப்பதில்லை என்ற கருத்தும் வெளிப்படையாக பதிவு செய்யப்பட்டுள்ளன, இன்னும் செய்யப் பட்டு வருகின்றன. ஊடகங்களும் அவர்களது கைகளுக்குள் இருப்பதால், அல்லது அவற்றின் சொந்தங்காரர்களாக இருப்பதால், அல்லது அத்தகைய சித்தாந்த கொள்கைகளில் கட்டுண்டுக் கிடப்பதால் அத்தகைய பாரபட்சம், ஒடருதலை பட்சம் முதலியவை சட்டமீறல்களில் ஈடுபடும் குற்றவாளிகள், குற்றங்களில் ஊறிப்போன பழக்கமான மனிதவிரோதிகள் தாம் இன்று படிப்பு, வேலை முதலிய சேவைகளை செய்யும் வித்தகர்களாக தோன்றுகிறார்கள். அவர்களால் நடத்தப் படும் நிறுவனங்களில் எவ்வாறு பெண்கள், மற்ரவர்கள் அல்லது அவர்களுக்கு வேண்டாதவர்கள், சித்தாந்தவிரோதிகள், மாற்றுக் கருத்துக் கொண்டவர்கள் நடத்தப் படுவார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

Registrar looking at Girl-students taking bath

Registrar looking at Girl-students taking bath

சட்டவிரோதமாக மூன்று ஆண்டுகளாக நடத்தப் பட்டு வரும் ராயல் நர்சிங் கல்லூரி: தஞ்சை நாஞ்சிக்கோட்டை ரோடு ஆசிரியர் காலனி முதல் தெருவை சேர்ந்தவர் ராவணன்(48). இவர் காவேரி நகர் பகுதியில் கடந்த 3 ஆண்டுகளாக “ராயல் நர்சிங் கல்லூரி” நடத்தி வருகிறார்[1]. இக்கல்லூரி நடத்த அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளார். ஆனால், இதுவரை அனுமதி கிடைக்கவில்லை, இப்படி ஒரு நாளிதழ் கூறுகிறதுஆனாலும் மாணவிகள் சேர்க்கப்பட்டு கல்லூரி செயல்பட்டு வருகிறது[2]. இந்தாண்டு 36 மாணவிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். மூன்று ஆண்டுகளாக சட்டவிரோதமாக நடத்தி வருகிறார் என்றதை எப்படி மறைக்க முடியும்? பிறகு எப்படி மாணவிகளை சேர்த்து ஏமாற்ற முடியும்? இவற்றிற்கு ஊடகங்கள் பதிலை சொல்லவில்லை. மாணவிகள் தங்கும் விடுதி, நாஞ்சிக்கோட்டை சாலை ஆசிரியர் காலனியில் உள்ள தாளாளர் ராவணன் வீட்டு மாடியிலும், வீட்டின் பின்பக்கம் உள்ள கட்டடத்திலும் செயல்பட்டு வருகிறது[3].

sneha-latest-wet-bathroom-illustrative purpose

sneha-latest-wet-bathroom-illustrative purpose

ஜூலையில் மாணவிகள் கொடுத்த புகார்: கடந்த சில நாட்களுக்கு முன்பு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரிடம் செவிலியர் கல்லூரியில் பயிலும் 10-க்கும் மேற்பட்ட மாணவிகள் சென்று புகார் அளித்தனர். அதில், கல்லூரியிலும், விடுதியிலும் அடிப்படை வசதிகள் இல்லை. கல்லூரிக்கு உரிய அனுமதியும் இல்லை. மேலும், கல்லூரி விடுதியில் தங்கியுள்ள பெண்கள் குளிக்கும் போது தாளாளர் எட்டிப்பார்த்து ரசிக்கிறார். விடுதி மாணவிகளுக்கு அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்து வருகிறார் என கூறியிருந்தனர். புகாரைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் என். சுப்பையன், புகார் குறித்து விசாரிக்க வல்லம் காவல் துணைக் கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டார்[4].

குறிப்பிட்ட மாணவி கொடுத்த புகார்: திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பூங்கொடி(வயது 17) (பெயர் மாற்றப்பட்டுள்ளது), இவர் தஞ்சை தமிழ்பல்கலை போலீசில் ஒரு பரபரப்பு புகார் கொடுத்தார்.  அந்த புகாரில் கூறியிருப்பதாவது[5]:–நான் தஞ்சையில் நாஞ்சிக்கோட்டையில் உள்ள ஒரு பாராமெடிக்கல் கல்லூரியில் முதலாம் ஆண்டு நர்சிங் படிப்பில் சேர்ந்தேன். சேரும் போது தமிழ்நாடு அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி என்றும், மாணவிகளுக்கு பாதுகாப்பாக தங்கும் விடுதிவசதிகள் உள்ளன என்றும் கல்லூரி தாளாளர் ராவணன் (47) கூறியதை நம்பி எனது பெற்றோர் அவர்கள் விடுதியில் தங்கி படிக்க வைத்தனர். பின்னர் கல்லூரியில் சேர்ந்த பிறகு தான் கல்லூரி எந்தவித அங்கீகாரமும் பெறவில்லை என்பது தெரியவந்தது. அதேபோல் விடுதி என்ற பெயரில் கல்லூரி தாளாளரின் வீட்டின் பின்புறம் ஆஸ்பெட்டாஸ் சீட் போட்ட ஒரு சிறிய அறையில் தங்க வைத்தனர். என்னுடன் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவிகள் பலர் தங்கியிருந்தனர். அவர்கள் அனைவரும் 17 வயது முதல் 18 வயதிற்குள்ளான மாணவிகள்.

ஜூலையில் மாட்டிக் கொண்டு ஆகஸ்டில் சிறை சென்ற இராவணன்: கடந்த ஜூலை மாதம் ஒருநாள் எங்களது கல்லூரி உரிமையாளர் ராவணன் நாங்கள் குளிக்கும் குளியறை அருகே வந்தார். அப்போது நான் அவரை மறைந்திருந்து பார்த்தேன். அவர் மாணவிகள் குளிக்கும் போது எட்டி பார்த்து கொண்டிருந்தார். அதைக்கண்டு நான் அதிர்ச்சி அடைந்தேன். அதன் பின்னர் எந்த மாணவி குளித்தாலும் அவர் எட்டிப்பார்ப்பதை நாங்கள் பார்த்தோம். இதை நாங்கள் வெளியில் சொன்னால் எங்களுடைய பள்ளி படிப்பு அசல் சான்றிதழ்களை எதாவது செய்து விடுவார்களோ என்ற பயத்தில் வெளியில் சொல்லாமல் இருந்தோம். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்கும் படி கேட்டுக்கொள்கிறேன்”, இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது[6]. இந்த புகாரின் அடிப்படையில் தஞ்சை தமிழ்பல்கலை கழக போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ரத்தினாம்பாள் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். தஞ்சாவூர் மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், இதையடுத்து மாணவிகள் குளிப்பதை பார்த்து ரசித்த கல்லூரி தாளாளர் மீது பெண் வன்கொடுமை, பெண் மானபங்கம், பாலியல் குற்றங்களில் இருந்து பெண்கள் பாதுகாப்பு ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து ராவணனை 09-08-2014 அன்று கைது செய்தனர்[7].திருச்சி மத்திய சிறையில் / பாபநாசம்  சிறையில்  அடைக்கப்பட்டார்[8].

© வேதபிரகாஷ்

11-08-2014

[1] தினகரன், தஞ்சையில் நர்சிங் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கல்லூரி உரிமையாளர் கைது, 11-08-2014.

[2] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=104679

[3] தினமணி, செவிலியர் கல்லூரித் தாளாளர் கைது,  By dn, தஞ்சாவூர், First Published : 11 August 2014 01:55 AM IST

[4]http://www.dinamani.com/tamilnadu/2014/08/11/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0/article2373528.ece

[5] மாலைமலர், விடுதியில் மாணவிகள் குளிப்பதை பார்த்து ரசித்த கல்லூரி தாளாளர் கைது , பதிவு செய்த நாள் : ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் 10, 1:13 PM IST

[6] தினமலர், மாணவிக்கு பாலியல் தொல்லை நர்ஸிங் கல்லூரி தாளாளர் கைது, பதிவு செய்த நாள் : ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் 10, 4:20

[7] http://www.maalaimalar.com/2014/08/10131342/shower-at-the-hostel-and-enjoy.html

[8] http://www.dinamalar.com/news_detail.asp?id=1043130