Archive for the ‘குழந்தையை இழந்த தாய்’ Category

பாலியல் தொல்லைகளுக்கு உட்பட்ட பள்ளி-கல்லூரி மாணவிகள் தற்கொலை முயற்சி செய்வது, தற்கொலை செய்து கொள்வது முதலியன – பலாத்காரங்களின் உருவங்கள் (2)

ஓகஸ்ட்3, 2017

பாலியல் தொல்லைகளுக்கு உட்பட்ட பள்ளிகல்லூரி மாணவிகள் தற்கொலை முயற்சி செய்வது, தற்கொலை செய்து கொள்வது முதலியனபலாத்காரங்களின் உருவங்கள் (2)

Nilakottai girl student attempted suicide-30-04-2017 - Dinamani

ஏப்ரல்.30 2017 – பி.டி.மாஸ்டரின் செக்ஸ் டார்ச்சர் தாங்காமல் மாணவி தற்கொலை முயற்சி: வத்தலகுண்டுவை சேர்ந்த மாணவி நிலக்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்துள்ளார். இவரிடம், அப்பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் கார்த்தி என்பவர் மாணவியின் செல்லிடபேசிக்கு ஆபாசமாகப் பேசியும், ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பியும் பாலியல் தொந்தரவு கொடுத்தாராம்[1]. இதனால், பாதிப்புக்குள்ளான மாணவி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை உறவினர்கள் மீட்டு வத்தலகுண்டு காந்திநகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இத்தகவலை அறிந்த விடுதலை சிறுத்தை கட்சியினர் மாணவியை தற்கொலைக்கு தூண்டிய உடற்கல்வி ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வத்தலகுண்டு காளியம்மன்கோவில் அருகே கட்சியின் மாநில துணை செயலர் சக்தி தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்[2]. மறியலில் ஈடுபட்டவர்களிடம் வத்தலகுண்டு காவல் துறையினர் பேச்சு வார்த்தை நடத்தியதை தொடர்ந்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. பின்னர், மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

10th student committed suicide - 31-03-2017-The Hindu

தார்மீகம், ஒழுக்கம், கட்டுப்பாடு…..போன்றவை இல்லாமல் இருக்கும் போது, எதைப் பற்றியும் கவலைப் படாமல், இரையைத் தேடும் விலங்குகளாக மாறுகிறார்கள்: பி.டி.மாஸ்டர், உடற்பயிற்சி ஆசிரியர், ஸ்போர்ட்ஸ் மாஸ்டர், என்.சி.சி. மாஸ்டர், என்.எ.ஸ்.எஸ்.மாஸ்டர், என்றெல்லாம் இருப்பவர்கள், இக்காலத்தில் வரம்பு மீறி மாணவிகளிடம் நடந்து கொள்கிறார்கள். தட்டிக் கொடுப்பது என்று ஆரம்பித்து தொட்டுப் பேசுவது என்று விளையாடுகிறார்கள்.   ஃபீல்டு விசிட் பெயரில் அதிகமாகவே மாணவிகளை சதாய்க்கிறார்கள். இதெல்லாம் தான் இவர்களுக்கு பாலியல் ரீதியில் சதாய்ப்பதற்கு உதவி அளிக்கின்றன. தார்மீகம், ஒழுக்கம், கட்டுப்பாடு…..போன்றவை இல்லாமல் இருக்கும் போது, எதைப் பற்றியும் கவலைப் படாமல், இரையைத் தேடும் விலங்கு மாதிரி அலைந்து, வலைவீசி சிக்க வைத்து, பலிகடா ஆக்குகிறார்கள். மானமிழந்த, கற்பிழந்த மாணவிகள் பெற்றோர்களுக்கு சமூகத்திற்கு அஞ்சி தற்கொலை புரிய துணிகிறார்கள். முயற்சி செய்கிறார்கள். உயிரையும் விடுகிறார்கள். எனவே, இத்தகைய, பாலியல் வன்மங்களை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது.

Man held for raping niece - India Today - 01-04-2017

மார்ச்.31 2017 – பள்ளி தாளாளர் ஆபாசபடம் எடுத்து மிரட்டியது: ஆபாச படம் எடுத்து மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்ததால் பத்தாம் வகுப்பு மாணவி சென்னையில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலைக்கு முன்பாக மாணவி எழுதிய கடிதத்தின் அடிப்படையில் பள்ளி தாளாளரை கோயம்பேடு போலீசார் கைது செய்து உள்ளனர்[3]. தற்கொலை செய்து கொண்ட மாணவியின் பெயர் மணிமாலா. 15வயதாகும் மணிமாலா பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார். இவர் சென்னை கோயம்பேடு சேமாத்தம்மன் நகர் 2-வது செக்டர் பகுதியை சேர்ந்தவர் பழனிவேலு. இவரது மனைவி மகேஸ்வரி ஆகியோரின் மகளாவார். தேர்வு விடுமுறையில் வீட்டில் இருந்த மணிமாலா புதன்கிழமையன்று திடீரென தனது உடலில் தீவைத்துக்கொண்டார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்[4].

Man held for raping niece - The Hindu 01-04-2017

மயக்க மருந்து கொடுத்து, கெடுத்து பள்ளி தாளாளர் ஆபாசபடம் எடுத்தது மற்றும் மிரட்டியது: இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது[5]: கைது செய்யப்பட்டுள்ள சரவணன் தனியார் தொடக்கப் பள்ளி நடத்திவருகிறார். அதன் தாளாளராகவும் உள்ளார். அவருக்கு மனைவி, 12 வயதில் பெண் குழந்தை உள்ளனர். இந்த நிலையில், 10-ம் வகுப்பு தேர்வு சம்பந்தமாக மாணவிக்கு சில ஆலோசனைகள் கூறவேண்டி இருப்பதால், தன் வீட்டுக்கு அனுப்பிவைக்குமாறு, மாணவியின் பெற்றோரிடம் சரவணன் சில மாதங்களுக்கு முன்பு கூறியுள்ளார். இதை நம்பிய பெற்றோர், மாணவியை அவரது வீட்டுக்கு அனுப்பிவைத்தனர். வீட்டில் தனியாக இருந்த சரவணன், மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை மாணவிக்கு கொடுத்துள்ளார். மாணவி மயங்கியதும் அவரை பலாத்காரம் செய்துள்ளார். இதை செல்போனிலும் படம் பிடித்துள்ளார். மயக்கம் தெளிந்து எழுந்த மாணவி, நடந்ததை ஊகித்து சரவணனிடம் கேட்டுள்ளார். இங்கு நடந்த அனைத்தையும் செல்போனில் படம்பிடித்து வைத்துள்ளதாக கூறிய சரவணன், இதை யாரிடமாவது சொன்னால் இணையதளத்தில் வெளியிடுவேன் என்று கூறி மிரட்டியுள்ளார். பயந்துபோன மாணவி இதுபற்றி யாரிடமும் சொல்லவில்லை.

பாதிக்கப்படும் பெண்கள்

பாதிக்கப்படும் பெண்கள்

வீடியோவைக் காட்டிமிரட்டி, மறுபடிமறுபடி செக்ஸ்: வீடியோவை காட்டி மிரட்டியே மாணவியிடம் சரவணன் தொடர்ந்து தகாத முறையில் நடந்துள்ளார். இந்த வன்கொடுமை தொடர்ந்ததில், மாணவியின் உடல்நலம் பாதிக்கப்பட்டது. மருத்துவமனைக்குச் சென்று காண்பித்ததில், மாணவி கர்ப்பமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதை அறிந்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர், இதுபற்றி மகளிடம் கேட்டுள்ளனர். மாணவியும் அழுது கொண்டே, நடந்த சம்பவங்களை தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து, ‘என் மகள் வாழ்க்கையை பாழாக்கி விட்டாயே’ என்று சரவணனிடம் சென்று பெற்றோர் கதறியுள்ளனர். ‘தவறு செய்துவிட்டேன். மன்னித்து விடுங்கள்’ என்று சரவணன் கூறியுள்ளார். இதுபற்றி வெளியில் சொன்னாலோ, போலீஸுக்கு சென்றாலோ அவமானம் என்று கருதி, பெற்றோர் அதோடு விட்டுவிட்டனர். ஆனால், இதையும் தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட சரவணன், அதற்குப் பிறகும் வீடியோவைக் காட்டி மிரட்டி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதில் விரக்தி அடைந்த மாணவி, தன் சாவுக்கு சரவணன்தான் காரணம் என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு தீக்குளித்துள்ளார். பெற்றோர் அதன் பிறகுதான் போலீஸில் புகார் கொடுத்தனர். இதையடுத்து, சரவணன் கைது செய்யப்பட்டார். சம்பவம் குறித்து தெரிந்ததுமே போலீஸில் தெரிவித்திருந்தால், மாணவி தற்கொலையை தடுத்திருக்கலாம். இவ்வாறு போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது[6].

Man held for raping niece - India Today - 01-04-2017-2

கெட்டவர்களை தடுக்க வேண்டும், வேலைக்கு வருபவர்கள் கண்காணிக்கப் பட வேண்டும்: இப்படி ஆசிரியர், தலைமை ஆசிரியர், தாளாளர், ……என்று பள்ளிகள்-பள்ளிகளில் இருக்கும் பாலியல் குற்றவாளிகளை, கேடுகெட்ட மிருகங்களை, காம அரக்கர்களை ஏன் சமூக ஆர்வலர்கள், பெண்ணியப் போராளிகள், மனித உரிமை சூராதி சூரர்கள், என்றிருக்கும் யாரும் எதிர்க்கவில்லை, கண்டிக்கவில்லை, போராட்டம் நடத்தவில்லை, பொங்கியெழவில்லை……என்று தெரியவில்லை. நிர்பயா, ஸ்வாதி போன்ற குரூரக் கொலைகளுக்கு வீரிட்டெழுந்தவர்கள், இப்பொழுது ஏன் அடங்கிக் கிடக்கிறார்கள் என்றும் புரியவில்லை. தொடர்ந்து மாதம்-மாதம் நடந்து கொண்டிருப்பது, சாதாரணமான விசயம் அல்ல. நமது பெண்களை அவ்வாறு விட்டுவிட முடியாது. உடனடியாக யாதாவது செய்தே ஆகவேண்டும். அத்தகையவர்கள் நியமிக்கப் படும்போது, யோக்கியமானவர்களா என்று சரிபார்க்க வேண்டும். ஏனெனில், மிருகங்களை பள்ளி-கல்லூரி-ஹாஸ்டல்களின் வைக்க முடியாது.

© வேதபிரகாஷ்

03-08-2017

Sex crimes - solution - Vedaprakash - 03-08-2017

[1] தினமணி, பாலியல் தொல்லை; மாணவி தற்கொலை முயற்சி: நிலக்கோட்டை பள்ளி ஆசிரியர் மீது நடவடிக்கை கோரி மறியல், Published on ஏப்ரல்.30, 2017. 04:11 AM.IST

[2] http://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2017/apr/30/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-2693579.html

[3] தமிழ்.ஒன்.இந்தியா, 10ஆம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலைபலாத்காரம் செய்து மிரட்டிய பள்ளி தாளாளர் கைது, Posted By: Mayura Akilan, Published: Friday, March 31, 2017, 11:15 [IST].

[4] http://tamil.oneindia.com/news/tamilnadu/chennai-sslc-student-raped-driven-suicide-278413.html

[5] தமிழ்.இந்து, 10-ம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை: பாலியல் வன்கொடுமை செய்த பள்ளி தாளாளர் கைது, Published :  01 Apr 2017  09:26 IST;, Updated :  16 Jun 2017  14:11 IST.

[6] http://tamil.thehindu.com/tamilnadu/10%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81/article9611119.ece

குழந்தைகள் கடத்தல் பற்றி, புகார் மற்றும் வழக்கு தொடுத்ததால், நீதிமன்றம் எழுப்பியுள்ள கேள்விகள்!

ஜூன்3, 2016

குழந்தைகள் கடத்தல் பற்றி, புகார் மற்றும் வழக்கு தொடுத்ததால், நீதிமன்றம் எழுப்பியுள்ள கேள்விகள்!

Chennai Children kidnapped - disappearedஇந்தியாவைப் பொறுத்த வரையில், ஏன் தமிழகத்தைப் பொறுத்த வரையிலும், குழந்தைகள் கடத்தல் என்பது புதிய விசயமே இல்லை. கடந்த காலங்களில் “குழந்தை கடத்தல்” ஒரு திட்டமிட்ட வியாபாரமாகி விட்டது. என்.ஜி.ஓக்கள் இதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. சினிமா மற்ற ஊடகங்களில் இதைப் பற்றி தாராளமாகவே விவரிக்கப்பட்டாலும், பல உண்மைகளை மறைத்தே வேலை செய்து வருகிறார்கள். பெரும்பாலும், கடத்தப் பட்ட குழந்தைகள் பிச்சை எடுப்பதற்கு உபயோகப் படுத்தப் படுகிறார்கள் என்றே கருத்தை உருவாக்க முயல்கிறார்கள். விடப்பட்ட பெண்குழந்தையை காப்பாற்றி வளர்ப்பது போன்ற நிலையிலும் சில நிறுவனங்கள் ஈடுபட்டு, பிறகு கடத்தல், தத்து, அயல்நாட்டவர்களுக்கு விற்பனை போன்ன்ற வேலைகளில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் கடத்தப்பட்ட குழந்தைகள் எத்தனை? என்றும், அதில் எத்தனை குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டுள்ளன? என்றும் தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது வேடிக்கையாக இருக்கிறது எனலாம்.

Parthiban filed petition - untraceable kids - India 2011-14குழந்தை கடத்தல் விசயமாக போலீஸாருக்கு புகார் செய்தது, ஆள்கொணர்வு மனு தாக்கல் செய்தது: கடந்த பல ஆண்டுகளாக இவ்வியாபாரம் நடந்து கொண்டிருக்கும் போது, சென்னையில் சாலையோரத்தில் பெற்றோருடன் தூங்கிக்கொண்டிருக்கும் பல குழந்தைகள் கடத்தப்படுவதாகவும், அந்த குழந்தைகளை மீட்க போலீசார் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், சென்னை போலீஸ் கமிஷனரிடம் தயா பவுண்டேஷன், நடிகர் பார்த்திபன், எக்ஸ்னோரா அமைப்பை சேர்ந்த எம்.பி.நிர்மல் ஆகியோர் கடந்த ஏப்ரல் மாதம் புகார் செய்தனர் என்பது, அதை விட வேடிக்கையான விசயமாக இருக்கிறது. அவர்கள் செய்த நல்ல காரியத்தை விமர்சிக்கவில்லை, ஆனால், இத்தனை ஆண்டுகள் சும்மாயிருந்து விட்டு, இப்பொழுது திடீரென்று, இந்த உணர்வு எப்படி ஏற்பட்டது என்று தெரியவில்லை. இந்த நிலையில், சென்னை ஐகோர்ட்டில் எக்ஸ்னோரா அமைப்பை சேர்ந்த எம்.பி.நிர்மல், ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார்[1] என்று செய்திகள் வந்துள்ளன.

untraceable kids - India 2011-14கடந்த மூன்று ஆண்டுகளுக்கான குழந்தை கடத்தல் புள்ளி விவரங்கள் கொடுக்கப்பட்டது: இதனிடையே, கடந்த 3 ஆண்டுகளில் இதுவரை 1000க்கும் மேற்பட்ட குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளதாக மனுதாரர் தரப்பில் புள்ளி விவரம் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் 2013க்கு முன்னால் என்ன நடந்தது, அதைப் பற்றி மனுதாரர்கள் ஏன் கவலைப்படவில்லை என்ற கேள்விகளும் எழுகின்றன.

  • 2014 ஆம் ஆண்டில் மொத்தமாக 441 குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளதாகவும், அதில் சென்னையில் மட்டும் 114 குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • 2015 ஆம் ஆண்டில் 656 குழந்தைகள் கடத்தப்பட்ட நிலையில், அதில் 305 பேர் பெண் குழந்தைகள் என்றும், சென்னையில் மட்டும் மொத்தமாக 149 குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
  • இதேபோன்று 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை 271 குழந்தைகள் காணாமல் போயுள்ளதாகவும், அதில் பெண் குழந்தைகள் 126 பேர் என்றும், சென்னையில் மட்டும் மொத்தம் 58 குழந்தைகள் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது[2].

missing children 2011-14- India Todayகாணாமல் போன குழந்தைகளை ஆஜர்படுத்த வேண்டும்: அந்த மனுவில், ‘சென்னை எஸ்பிளனேடு பகுதியில் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் பெற்றோருடன் தூங்கிக்கொண்டிருந்த 8 மாத குழந்தை விமல் / ராகேஷ் கடத்தப்பட்டான்[3]. சில நாட்களுக்கு பின்னர் பெற்றோருடன் தூங்கிக்கொண்டிருந்த மற்றொரு 9 மாத குழந்தை சரண்யா கடத்தப்பட்டாள். இந்த குழந்தைகளின் பெற்றோர்கள் வசதியில்லாதவர்கள். அவர்களால் குழந்தைகளை தேடி கண்டுபிடிப்பது மிகவும் கஷ்டமானது. போலீசாரும் கடத்தப்பட்ட குழந்தைகளை கண்டுபிடித்து மீட்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, இந்த இரு குழந்தைகளை மீட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீசாருக்கு உத்தரவிடவேண்டும்’ என்று கூறப்பட்டு இருந்தது[4]. “கடந்த ஆண்டு பிப்ரவரி 23 ஆம் தேதி வால்டெக்ஸ் சாலையில் 8 மாத ஆண் குழந்தையும், அதற்கு அடுத்த மாதம் 29 ஆம் தேதி அதே பகுதியில் சரண்யா என்ற பெண் குழந்தையும் காணாமல் போனதாக குறிப்பிட்டிருந்தார்”, என்று நியூஸ்.7.டிவி குறிப்பிடுகின்றது[5]. வழக்கபோல, ஊடகங்களின் மாறுபட்ட அறிவிப்பு-செய்திகளும் இப்படி உள்ளன.

Three-year-old Chikash missing at the Chennai Central reunited with his parents on 22-05-2015- Indian Expressபோலீஸார் கேட்ட கால அவகாசம்: இந்த வழக்கு கடந்த ஏப்ரல் மாதம் விசாரணைக்கு வந்தபோது, கடத்தப்பட்ட குழந்தைகளை ஜூன் 2–ந் தேதி ஆஜர்படுத்த வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் மற்றும் எஸ்பிளனேடு போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது[6]. சென்னையிலேயே “பிடோபைல்”, அனாதை இல்லங்கள், முதலிய விவகாரங்களில் ஏகப்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ளன. அனைத்துலக குழந்தைக் கற்பழிப்பாளிகளே இங்கு கைதாகியுள்ளனர். வில் ஹியூம் போன்றவர்கள் கைதாகி, தண்டனை பெற்று சிறையிலும் இருக்கின்றனர். “குழந்தை காணவில்ல”, “குழந்தை திருட்டு”, போன்ற செய்திகளும் ஆயிரக்கணக்கில் வந்துள்ளன. எனவே, இவ்விகாரங்கள் புதியது போல அறிவிப்பது, அணுகுவது, புகார் கொடுப்பது, வழக்குப் போடுவது முதலியவை திடீரென்று ஏன் வருகின்றன என்று புரியவில்லை. இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, வி.பாரதிதாசன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கடத்தப்பட்ட குழந்தைகளை மீட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்த கால அவகாசம் வேண்டும் என்று போலீஸ் தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், ‘குழந்தைகள் கடத்தல் என்பது சமுதாயத்தில் மிகப்பெரிய பிரச்சினை. இதை எளிதான விஷயமாக எடுத்துக் கொள்ள முடியாது’ என்று கருத்து தெரிவித்தனர்[7]. “குழந்தைகள் கடத்தல்” என்பது சமுதாயத்தில் மிகப்பெரிய பிரச்சினை எனும்போது, நீதிபதிகள் அதை அறியவில்லை என்றாகாது.

CCTV -woman kidnapping Sridhar from Central - The Hinduஎத்தனை வழக்குகள் என்று நீதிமன்ற கேள்விகள் கேட்டது?: பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது[8]: “இந்த வழக்கில் 3–வது எதிர்மனுதாரராக தமிழக உள்துறை செயலரை தாமாக முன்வந்து சேர்க்கின்றோம்.

  • தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் எத்தனை குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளன?
  • குழந்தை கடத்தல் தொடர்பாக எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன?
  • அந்த வழக்குகளில் எத்தனை குழந்தைகள் மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன?
  • எத்தனை வழக்குகளில் குழந்தைகள் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை?
  • எத்தனை வழக்குகள் புலன் விசாரணையில் உள்ளன?

இந்த கேள்விகளுக்கு எல்லாம் தமிழக உள்துறை செயலர் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்யவேண்டும்[9]. விசாரணையை வருகிற ஜூன் 16–ந் தேதிக்கு தள்ளிவைக்கிறோம்[10]. நீதிமன்றம் இவ்விசயத்தில் மிகவும் கவலையோடு இருக்கிறது”, இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்[11].

© வேதபிரகாஷ்

03-06-2016

[1] தினத்தந்தி, கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் கடத்தப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை எத்தனை? தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி, மாற்றம் செய்த நாள்: வெள்ளி, ஜூன் 03,2016, 3:30 AM IST, பதிவு செய்த நாள்: வெள்ளி, ஜூன் 03,2016, 2:37 AM IST

[2] http://ns7.tv/ta/children-go-missing-supreme-court-orders-report.html

[3] தினத்தந்தி விமல் என்றும், மாலைமலர் ராகேஷ் என்றும் குறிப்பிடுகின்றன.

[4] http://www.dailythanthi.com/News/State/2016/06/03023744/In-the-last-5-years-in-the-state–Abducted-childrenNumber.vpf

[5] நியூஸ்.7.டிவி, காணாமல் போகும் குழந்தைகள்அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு, June 02, 2016

[6] மாலைமலர், கடந்த 5 ஆண்டுகளில் கடத்தப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை எத்தனை?: பதிலளிக்க அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு, பதிவு: ஜூன் 02, 2016 13:11

[7] http://www.dinakaran.com/Latest_Detail.asp?Nid=221317

[8] http://www.maalaimalar.com/News/District/2016/06/02131129/1016077/last-5-years-number-of-children-abducted-High-Court.vpf

[9] தினமணி, 5 ஆண்டுகளில் காணாமல் போன குழந்தைகள் பற்றிய விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும்: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு, By  சென்னை, First Published : 03 June 2016 01:41 AM IST.

[10] http://www.dinamani.com/tamilnadu/2016/06/03/5-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8/article3463590.ece

[11] தினகரன், குழந்தைகள் கடத்தல் வழக்கு: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ், பதிவு செய்த நேரம்: 2016-06-02 12:33:49.

தமிழகத்தில் குழந்தை கடத்தல், விற்றல் முதலியன நடந்துவரும் விதம்!

ஜூன்30, 2011

தமிழகத்தில் குழந்தை கடத்தல், விற்றல் முதலியன நடந்துவரும் விதம்!

தமிழகத்தில் குழந்தை கடத்தல், விற்றல் முதலியன வேறுவிதங்களில் குறிப்பாக தத்தெடுப்பு தவிர, மற்ற காரியங்களுக்கு ஈடுபடுத்தி வருவது தேரிந்த விஷயமே. ஃபிடோஃபைல் (சிறுவர்சிறுமியர் பாலியல், வன்புணர்வு பாலியல் முதலிய) வழக்குகள் வக்கிர புத்தி படைத்த சில கிருத்துவ மிஷினரிகள், குறிப்பாக, அனாதை இல்லம், குழந்தைகள் இல்லம் நடத்தி வந்த / வரும் நிறுவனங்களினால் அவ்வப்பொழுது குற்றங்களில் ஈடுபடும் போது, விஷயங்கள் வெளிவருகின்றன. இருப்பினும், மறைக்கப்படுகின்றன. இந்நிலையில், குழந்தையில்லாதோ ர் தத்தெடுக்கும் விஷயங்களிலும், குற்றங்கள் நடப்பது கவலையளிக்கும் செய்தியாக இருக்கிறது. பச்சைக் குழந்தகளை ஈன்றெடுத்து, அவற்றை விற்கும் அளவிற்கு இருக்கும் தாயார் மற்றும் சம்பந்தப் பட்டுள்ள பெண்களை கவனிக்கும் போது, கவலை அதிகமாகிறது. ஏனெனில், சமூகத்தில் இத்தகைய குற்றங்கள் சாதாரணமானவை அல்ல. அவை சமூகம் மற்றும் நாட்டையே பாதிக்கக் கூடிய விஷயமாகிறது.

குழந்தை கடத்தலை வியாபாரமாக செய்யும் முறை: குழ‌‌ந்தைகளை கட‌த்‌தி ‌வி‌ற்கு‌ம் கு‌ம்பலை சே‌ர்‌ந்த 4 பேரை செ‌ன்னை‌யி‌ல் காவ‌ல்துறை‌யின‌ர் ‌பிடி‌த்து‌ள்ளன‌ர். கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டவ‌‌ர்க‌ளிட‌ம் இரு‌‌ந்த 2 ‌சிறு‌மிகளை ‌‌‌ப‌த்‌திரமாக ‌மீ‌ட்டு‌ள்ள காவ‌ல்துறை‌யின‌ர், அ‌ந்த குழ‌ந்தைக‌ள் செ‌ன்னை சைதா‌ப்ப‌ே‌ட்டையை சே‌ர்‌ந்த சகோத‌ரிக‌ள‌் எ‌‌ன தெ‌ரியவ‌ந்தது. இ‌‌ந்த ‌சிறும‌ி‌களை ஈரோடு தொ‌ழில‌திப‌ர் ‌‌சிவசலப‌தி‌க்கு 3 ‌ல‌‌ட்ச‌ம் ரூபா‌ய்‌க்கு ‌‌வி‌ற்பனை செ‌ய்தது ‌விசாரணை‌யி‌ல் க‌ண்டு‌பிடி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது1. தலைமறைவாக உ‌ள்ளோரை தேடி வரு‌‌ம் காவ‌ல்துறை‌யின‌‌ர், மேலு‌ம் குழ‌ந்தைக‌ள் கட‌த்த‌ப்ப‌ட்டனரா எ‌ன்று‌ம் ‌விசாரணை மே‌ற்கொ‌ண்டு வரு‌கி‌‌ன்றன‌ர். சென்னை சைதாப்பேட்டை சாரதி நகர் முரஹரி சாலையைச் சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி செந்தமிழ் செல்வி. இவர்களுக்கு 3 வயதில் அஸ்வினி என்ற மகளும், 1 1/2 வயதில் மணிராஜ் என்ற மகனும் உள்ளனர்.   கடந்த 16ந் தேதி அஸ்வினி, மணிராஜ் இருவரும் வீட்டு முன்பு விளையாடிக் கொண்டிருந்தனர். திடீரென மணி ராஜ் காணாமல் போய் விட்டான். இது குறித்து முருகன் சைதாப்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் தீவிர விசாரணை நடத்திய போது போரூர் மந்தவளி தெரு, பகுதியைச் சேர்ந்த சத்திய மூர்த்தி என்பவர் வீட்டில் மணிராஜ் இருப்பது தெரியவந்தது.

ராஜஸ்தான் டிரஸ்ட்ஈடுபடும் விதம்: சத்தியமூர்த்தி ஆட்டோ டிரைவராவார். அவரிடம் இருந்து குழந்தையை மீட்ட போலீசார், சத்தியமூர்த்தியிடம் விசாரணை நடத்திய போது, குழந்தை கடத்தலின் பின்னணியில் ஒரு கும்பல் செயல்படுவது தெரிய வந்தது2. அந்த கும்பலை கூண்டோடு பிடிக்க தென் சென்னை போலீஸ் இணைக் கமிஷனர் சண்முக ராஜேஸ்வரன் உத்தரவின் பேரில் உதவி கமிஷனர் தெய்வசிகாமணி மேற்பார் வையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீசார், ஆட்டோ டிரைவர் சத்திய மூர்த்தியிடம் விசாரித்த போது, “ராஜஸ்தான் டிரஸ்ட்எனும் அமைப்பில் உள்ள இந்திரா என்பவர் ரூ.10 ஆயிரம் கொடுத்து குழந்தை மணிராஜை கவனித்துக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டதாக கூறினார்.

குழந்தை இல்லாதர்கள் குழந்தைகளை தத்தெடுப்பது: இதையடுத்து போலீசாரின் பார்வை இந்திரா மீது திரும்பியது. அவரிடம் விசாரணை நடத்திய போது தான், குழந்தை மணிராஜ் கடத்தலின் பின்னணியில் உள்ள முழு விவரம் தெரிய வந்தது. அது வருமாறு:   ஈரோட்டை சேர்ந்தவர் சிவசலாபதி. இவரது மனைவி சாந்தி. இவர்களுக்கு திருமணம் நடந்து நீண்ட நாட்கள் ஆகியும் குழந்தை பிறக்கவில்லை. எனவே அவர்கள் 1 வயது முதல் 2 வயதுக்குட்பட்ட ஆண் குழந்தை ஒன்றை தத்து எடுக்க முடிவு செய்தனர். இதற்காக அவர்கள் சென்னை வந்து ஆதரவற்ற குழந்தைகள் வளர்க்கப்படும் பல்வேறு டிரஸ்டுகளில் தங்களது பெயரை பதிவு செய்து வைத்திருந்தனர்.

லாரன்ஸ் சாரிடபுள் டிரஸ் டி: அசோக் நகரில் உள்ள லாரன்ஸ் சாரிடபுள் டிரஸ் டில் வேலை பார்த்து வரும் ரோஸ்மேரியையும் சிவசலாபதி அணுகினார். அவர் தங்கள் டிரஸ்டில் குழந்தை இல்லை என்று சொல்லி, ராஜஸ்தான் டிரஸ்ட்டில் வேலை பார்த்து வரும் இந்திராவை அறிமுகம் செய்து வைத்துள்ளார். இதனால் சிவசலாபதிக்கும் இந்திராவுக்கும் பழக்கம் அதிகரித்தது. அதன் பேரில் சிவசலாபதி, இந்திராவிடம் எனக்கு உடனே குழந்தை வேண்டும் என்று வற்புறுத்தி உள்ளார். அதற்கு இந்திரா, “ஆதரவற்ற இல்லம், டிரஸ்ட் மூலம் குழந்தையை தத்து எடுக்க வேண்டுமானால் சட்ட நடவடிக்கைகளுக்காக சிறிது காலம் பொறுத்திருக்க வேண்டும். உடனே குழந்தை வேண்டும் என்றால், எங்கிருந்தாவது எடுத்து வந்து தான் தர வேண்டும்” என்று கூறியுள்ளார்.

விவரமான கதை: சிவசலாபதி அதற்கு சம்மதித்தார். எங்கிருந்தாவது எனக்கு குழந்தை கிடைத்தால் போதும் என்றார்3. அவரது அவசரத்தை புரிந்து கொண்ட இந்திரா, குழந்தையை கடத்தி வந்து ஒப்படைக்க 3 லட்சம் ரூபாய் வேண்டும் என்று நிபந்தனை விதித்தார். நீண்ட பேரத்துக்குப் பிறகு 2 1/2 லட்சம் ரூபாய் கொடுக்க சிவசலாபதி சம்மதித்தார். இதையடுத்து இந்திரா குழந்தை கடத்தும் திட்டத்துக்கு வியூகம் வகுத்தார். ராஜஸ்தான் டிரஸ்ட் மூலம் வங்கி கடன், ஆட்டோ வாங்கிக் கொடுத்து உதவி செய்த வகையில் பலரை இந்திராவுக்கு தெரியும். தன்னிடம் உதவி பெற்ற மேற்கு மாம்பலம் புதுத் தெருவைச் சேர்ந்த நாகம்மாள் என்பவரை இந்திரா நாடி, விஷயத்தை கூறினார். இதையடுத்து குழந்தை கடத்தலுக்கான திட்டத்தை இந்திரா, நாகம்மாள், அவரது கணவர் நாராயணன், மகன் வெங்கடேசன், இந்திராவின் தோழிகள் சுமதி, கலா, இலக்கியா ஆகியோர் வகுத்தனர். கடத்தல் சைதாப்பேட்டை நெருப்பு மேடு பகுதியில் வசித்து வந்த சுமதிக்கு, பக்கத்தில் சாரதி நகரில் முருகன் செந்தமிழ்செல்விக்கு 1 1/2 வயதில் ஆண் குழந்தை இருப்பது தெரியும். அந்த குழந்தையை கடத்தலாம் என்று முடிவு செய்தனர். இதற்காக சிவசலாபதியிடம் அவர்கள் 60 ஆயிரம் ரூபாய் முன்பணம் பெற்றனர். திட்டமிட்டப்படி கடந்த 16ந் தேதி வீட்டின் முன் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த மணிராஜை, கலாவும், இலக்கியாவும் சேர்ந்து சாமர்த்தியமாக கடத்தினார்கள். பிறகு மணிராஜை அவர்கள் இந்திராவிடம் ஒப்படைத்தனர். இந்திரா, குழந்தை மணிராஜை, சிவசலாபதியிடம் காட்டினார் அந்த குழந்தையை வளர்க்க சம்மதித்த சிவசலாபதி குழந்தையை இங்கேயே இருக்கட்டும் ஈரோட்டுக்கு போய் விட்டு வந்து விடுகிறேன்” என்று கூறி சென்றார். மீட்பு குழந்தையை தனது வீட்டில் வைத்துக் கொள்ள விரும்பாத இந்திரா, போரூர், மந்தவளி தெருவில் வசிக்கும் ஆட்டோ டிரைவர் சத்திய மூர்த்தியிடம் கொடுத்து வைத்திருக்க கூறினார்.

இந்த நிலையில் தனிப்படை போலீசார் திறமையாக துப்பு துலக்கி போரூரில் சத்தியமூர்த்தி வீட்டில் இருந்த குழந்தை மணிராஜை மீட்டனர். குழந்தை கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது. அதன் பிறகு குழந்தை கடத்தலில் தொடர்புடையவர்கள் வேட்டையாடப்பட்டனர். 3 பெண்கள் கைது குழந்தை கடத்தலுக்கு வியூகம் வகுத்து கொடுத்த இந்திரா, அதை செயல்படுத்திய நாகம்மாள், மற்றும் சுமதி ஆகிய 3 பேரும் போலீசாரிடம் பிடிபட்டனர். குழந்தை மணிராஜ் அணிந்திருந்த நகைகள் மற்றும் உடைகள் நாகம்மாளிடம் இருந்து மீட்கப்பட்டன. இன்று குழந்தை மணி ராஜை, பெற்றோர் முருகன், செந்தமிழ்செல்வியிடம் போலீசார் ஒப்படைத்தனர். குழந்தையை மீட்ட தனிப்படை போலீசாரை சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் திரிபாதி பாராட்டினார்4.

தொடரும் விசாரணை: பிறகு கமிஷனர் திரிபாதி நிருபர்களிடம் கூறுகையில், “குழந்தை மணிராஜ் கடத்தப்பட்டதும் அவனது புகைப்படத்துடன் கூடிய விளம்பர நோட்டீஸ் ஏராளமாக ஒட்டினோம். அதை பார்த்த ஒருவர் அந்த நோட்டீசில் இருந்த நம்பருக்கு தகவல் கொடுத்தார். இதன் மூலம் குழந்தை மணிராஜை மீட்க முடிந்தது என்றார். அப்போது கூடுதல் கமிஷனர் தாமரை கண்ணன் இணை கமிஷனர்கள் சண்முக ராஜேஸ்வரன், சங்கர், செந்தாமரை கண்ணன், உளவுப் பிரிவு இணைக் கமிஷனர் நல்லசிவம் ஆகியோர் உடன் இருந்தனர். குழந்தை கடத்தலில் தொடர்புடைய மற்றவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளது. இந்த கடத்தல் கும்பல் சென்னையில் வேறு எங்காவது குழந்தைகளை கடத்தினார்களா என்று விசாரணை நடந்து வருகிறது5.

“நரபலி சிறுவனின்’ தாய்க்கு அடுத்தடுத்து சோகம்: பெண்கள் படும்பாடு

ஜூலை29, 2010

“நரபலி சிறுவனின்’ தாய்க்கு அடுத்தடுத்து சோகம்: பெண்கள் படும்பாடு
பதிவு செய்த நாள் : ஜூலை 28,2010,23:19 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=49427

ஒரு பெண் படும் துக்கங்களுக்கு அளவேயில்லை: மதுரை :இரண்டு வயதில் மாயமான தந்தை; திருமணமான இரண்டு ஆண்டில் விபத்தில் கணவர் மரணம்; “தாயின் கண்ணீர் துடைப்பான்,’ என நினைத்த மகனும் “நரபலி’ கொடூரத்திற்கு பலி. இப்படியொரு துயர சம்பவம் அபலை பெண்ணிற்கு அடுத்தடுத்து நேர்ந்துள்ளது.

15 சவரன், 40 ஆயிரம் ரூபாய் மற்றும் பொருட்கள் கொடுத்து நடத்திய திருமணம்: மதுரை முனிச்சாலை பத்தாவது தெருவை சேர்ந்த சமையல் மாஸ்டர் மாபுபாட்ஷா. இவரது மனைவி சுல்தான் பீவி. இவர்களுக்கு செரின் பாத்திமா (24) என்ற மகளும், அசன் (22) என்ற மகனும் உள்ளனர். செரின் பாத்திமாவிற்கு இரண்டு வயது இருக்கும்போது, தந்தை மாபுபாட்ஷா மாயமானார். அவரை பல இடங்களில் தேடியும் பயனில்லை. பிழைப்புக்கு வழியின்றி தவித்த சுல்தான்பீவிக்கு, அவரது தம்பி அக்பர்அலி ஆதரவு தந்தார். செரின் பாத்திமா, ஐந்தாம் வகுப்பு வரை படித்தார். பின், தாய்க்கு உதவியாக இருந்தார்.செரின் பாத்திமாவிற்கும், எஸ்.குலமங்கலத்தை சேர்ந்த கொத்தனார் கவுகர்பாட்ஷாவிற்கும் இரண்டரை ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. பெண்ணிற்கு 15 சவரன், 40 ஆயிரம் ரூபாய் மற்றும் பொருட்கள் வழங்கப்பட்டன. தாய்மாமன் கடமையை முடித்த திருப்தியில் அக்பர்அலி இருந்தார். இரண்டு வயதில் தவிக்கவிட்டு விட்டு தந்தை பிரிந்து சென்றதால், சிறு வயதில் மனதில் ஏற்பட்ட காயத்திற்கு கணவரின் அன்பு ஆறுதலாக இருந்தது.

நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக குழந்தையுடன் வந்த தாயிற்கு எமன் காத்திருந்தான் போலும்: செரின்பாத்திமாவிற்கு ஆண் குழந்தை பிறந்ததால் குடும்பத்தில் இரட்டிப்பு மகிழ்ச்சி. குழந்தைக்கு காதர்யூசப் என பெயர் சூட்டினர்.மூன்று மாதத்திற்கு முன் நடந்த விபத்தில் கணவரும் பலியானார். ஆதரவற்ற நிலையில் மீண்டும் தாய் மாமன் வீட்டில் குழந்தையுடன் தஞ்சம் புகுந்தார் செரின்பாத்திமா. காதர்யூசப்பிற்கு ஒரு வயதானது. அவனுக்கு கோரிப்பாளையம் பள்ளிவாசல் தர்காவில் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக கடந்த 1ம் தேதி குழந்தையுடன், செரின்பாத்திமா வந்தார். அவருக்கு துணையாக தாயார் சுல்தான்பீவியும் வந்தார். அங்கு காதர்யூசப் கடத்தப்பட்டு “நரபலி’ கொடூரன் அப்துல்கபூரால் கொலை செய்யப்பட்டான்.

கருணை அடிப்படையில் அரசு தரப்பில் உதவிகள் மேற்கொள்ள வேண்டும்: நிச்சயமாக, அரசு இந்த பொறுப்பிலிருந்து தப்பிக்கமுடியாது. பெண்கள் இவ்வாறு அவதில் பட்டால், அது வீட்டிற்கும், நாட்டிற்கும், ஏன் உலகத்திற்கே நல்லதல்ல. இரண்டு வயதில் மாயமான தந்தை; திருமணமான இரண்டு ஆண்டில் விபத்தில் கணவர் மரணம்; மகனும் “நரபலி’ கொடூரத்திற்கு பலி. இப்படியொரு துயர சம்பவம் செரின் பாத்திமாவிற்கு அடுத்தடுத்து நேர்ந்துள்ளது. திக்குத்தெரியாமல் தவிக்கும் செரின் பாத்திமாவின் துயரம் துடைக்க, கருணை அடிப்படையில் அரசு தரப்பில் உதவிகள் மேற்கொள்ள வேண்டும்.