Archive for the ‘குழந்தை கற்பழிப்பு’ Category

ஒரு பெண் பிடோபைல் – அதாவது பெண், குழந்தை-கற்பழிப்பாளி – விபரீதத்தில் முடியும் தகாத வக்கிர உறவுகள்!

மார்ச்24, 2019

ஒரு பெண் பிடோபைல் – அதாவது பெண், குழந்தை-கற்பழிப்பாளி – விபரீதத்தில் முடியும் தகாத வக்கிர உறவுகள்!

Female pedophile psyche

ஒரு பெண் பிடோபைல் – அதாவது பெண், குழந்தை-கற்பழிப்பாளி – விபரீதத்தில் முடியும் தகாத வக்கிர உறவுகள்!: குழந்தை கற்பழிப்பு என்பது கடந்த ஆண்டுகளில், அந்நிய சுற்றுலா பிரயாணிகள், குற்றவாளிகள், கிருத்துவ மிஷினர்கள் என்று பல வழக்குகள், விவகாரங்கள் என்று பார்த்து வருகின்ற நிலையில், ஈடுபட்டவர்கள் ஆண்களாக இருந்து வந்துள்ளனர். ஆனால், இப்பொழுது, ஒரு பெண் ஈடுபட்டுள்ளது, அதிலும் தமிழகத்தில் இருப்பது திகைப்பாக இருக்கிறது. இன்றைக்கு உச்சநீதி மன்ற தீர்ப்புகளே, பாலியல் வரைமுறைகளை மீறும் வகையில் இருப்பதாக உள்ளன. பலர் அவற்றாஇப் பற்றி குறை கூறி வருகின்றனர். ஏனெனில், அத்தகைய விபரீதமான தனிச்சை வக்கிரங்களை, உரிமை என்ற பெயரில் அனுமதிக்கப் பட்டால், கணவன் – மனைவி, தாம்பத்தியம், குடும்பம் போன்ற உறவுகளை எதிர்பார்க்க முடியாது. சமூகமும் பெரிதளவில் பாதிக்கப் படும். அந்நிலையில், ஒரு இளம் பெண், திருமணம் ஆனவள், இரண்டு குழந்தைகள்க்கு தாய் என்ற நிலையில், குழந்தை கற்பழிப்பாளியாக மாறியுள்ளது திகைப்பாக இருக்கிறது.

Female pedophile psyche- happens in India

மாணவர்களுடன் தகாத உறவு: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த பையூர் காலனி பகுதியை சேர்ந்தவர் உமேஷ்குமார் (வயது 45), ஆசிரியர். இவரது மனைவி நித்யா (30). இவர்களுக்கு ஒரு பெண், ஒரு ஆண் குழந்தை உள்ளனர். நித்யா ஆரணி அடுத்த மாமண்டூர் அரசு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். வேலூர் மாவட்டம் மாமண்டூர் அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வருகிறார். நித்யா கடந்த 2016-ம் ஆண்டு ஆரணி அடுத்த பையூரில் உள்ள அரசு பள்ளியில் பணிபுரிந்து வந்தார். அதே பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு ஆங்கில பாடம் டியூசன் எடுத்து வந்தார். அப்போது பள்ளி மாணவன் ஒருவருடன் நித்யாவுக்கு தொடர்பு ஏற்பட்டது, அந்த மாணவனுடன் நித்யா தகாத உறவில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது என்கிறது மாலைமலர். நித்யா, பையூர் பகுதியை சேர்ந்த ஐ.டி.ஐ. பயிலும் 17 வயது மாணவருடன் தகாத உறவில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. என்கிறது தினத்தந்தி[1]. இது தொடர்பாக உமேஷ்குமார், மனைவியை பலமுறை எச்சரித்துள்ளார்[2]. மேலும் நித்யா இதற்கு முன்பு செங்கம் புதுப்பாளையம் பகுதியில் பணிபுரியும் போது பள்ளி மாணவர்களிடமும் தகாத உறவில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதுகுறித்து உமேஷ்குமார் ஆரணி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

Perverted teacher Nithya and Umeshkumar

தாம்பத்திய குறைவா, பிறழ்சியா, முறையற்ற மிருகத்தனமா?: தம்பதியர் இருவருமே ஆசிரியர்கள் எனும்பொழுது அவர்களிடம் ஒழுக்கம் இருக்க வேண்டிய எதிர்பார்ப்பு ஏற்படுகிறது. பள்ளிகளில் பாடம் போதிக்கும் நிலையில் உள்ளவர்களுக்கு நிச்சயமாக, குறிப்பிட்ட நடத்தை இருக்க வேண்டிய அத்தியாவசியம் உள்ளது. குறிப்பாக இளம் வயதில் உள்ள இந்திய இது குழந்தைகளுக்கு தாயாக இருக்கும் நிலையில் பொறுப்புள்ள ஆசிரியருக்கு என்ற நிலையிலும் இவ்வாறான தகாத உறவில் ஈடுபட்டது திகைப்பாக இருக்கிறது. பெண்ணும் புருஷனிடம் செக்ஸ் கிடைப்பதை எதிர்பார்க்கிறாள். குழந்தைகள் உள்ளது அவர்களின் தாம்பத்தியத்தின் முழுமையினைஎடுத்துக் காட்டுகிறது. இருப்பினும், அப்பெண் எல்லைகளைத் தாண்டியுள்ளது, துரதிருஷ்டமாக, பாலியல் வக்கிரத்தையே காட்டுகிறது. ஆனால், அது இளம் மாணவர்களை பாதித்துள்ளது. சுவை கண்ட அப்பூனைகள் அப்படியே இருக்குமா அல்லது வேறேங்கேயாவது பால் கிடைத்தால் போய்விடுமா, போகுமா என்று யோசித்தால் பயமாக இருக்கிறது. விலங்களிடம் கூட ஒழுக்கம் இருக்கும் நிலையில் படித்த பெண்ணின் நிலை இவ்வாறிருப்பது அலங்கோலமே.

Perverted teacher Nithya -30-arrested-1

நித்தியாவின் கொக்கோக பலியல் உல்லாசம்: ஊடகங்கள் அவருடைய செக்ஸ் நடவடிக்கைகளைப் பற்றி, இவ்வாறான தகவல்களைக் கொடுக்கின்றன. மாணவர்களுடன் தனிமையில் இருந்த ஆபாச புகைப்படங்களை எடுத்து ரசித்து வந்துள்ளார்[3]. இரண்டு மாணவர்களையும் வெளியூர் அழைத்து சென்று ஓட்டலில் அறை எடுத்தும் தங்கி உள்ளார்[4]. இந்நிலையில் கடந்த ஆண்டு உமேஷ்குமாருக்கு தனது மனைவி நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது[5]. பள்ளி விடுமுறை நாட்களில் ஒருநாள் நித்யா வீட்டில் செல்போனை வைத்து விட்டு வீட்டு வேலை செய்து கொண்டிருந்தார்[6]. அப்போது உமேஷ்குமார் மனைவியின் செல்போனை எடுத்து பார்த்தபோது, அவர் இரண்டு மாணவர்களுடன் பல்வேறு பகுதிகளுக்கு சென்று தனிமையில் இருந்து வந்த வீடியோ மற்றும் படங்கள் இருந்தது தெரியவந்தது[7]. இவையெல்லாம் நிச்சயமாக அப்பெண்ணின் செக்ஸ்-வக்கிரத்தை எடுத்துக் காட்டுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த உமேஷ்குமார் தனது மனைவியை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்தார்[8].  இது நித்யாவின் நிலைக்கு சதகமாயிற்று எனலாம்.Perverted teacher Nithya -30-arrested

போலீஸாரிடம் புகார், விசாரணை, செக்ஸ் குற்றாம் உறுதியானது: இந்நிலையில் மாணவர்களுடன் தனது மனைவி தனிமையில் இருக்கும் வீடியோ மற்றும் புகைப்படங்களை சேகரித்த உமேஷ்குமார் திருவண்ணாமலை கலெக்டர் கந்தசாமியிடம் புகார் கொடுத்தார். கலெக்டர் உத்தரவின் பேரில் மாவட்ட சமூக நலத்துறை, குழந்தைகள் பாதுகாப்பு நன்னடத்தை அலுவலர் சித்ரா பிரியா அந்த மனுவை ஆரணி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு அனுப்பி வைத்தார். இன்ஸ்பெக்டர் மைதிலி, சப்-இன்ஸ்பெக்டர் உஷா ஆகியோர் ஆசிரியை நித்யாவை அழைத்து விசாரணை செய்தனர். மேலும் பள்ளி மாணவர்களிடம் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் விசாரித்தனர். அப்போது ஆசிரியை நித்யா மாணவர்களுடன் தகாத உறவில் இருந்தது உறுதியானது. கலெக்டர் உத்தரவின் பேரில் மாவட்ட சமூக நலத்துறை, குழந்தைகள் பாதுகாப்பு நன்னடத்தை அலுவலர் சித்ரா பிரியா அந்த மனுவை ஆரணி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு அனுப்பி வைத்தார். இன்ஸ்பெக்டர் மைதிலி, சப்-இன்ஸ்பெக்டர் உஷா ஆகியோர் ஆசிரியை நித்யாவை அழைத்து விசாரணை செய்தனர். மேலும் பள்ளி மாணவர்களிடம் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் விசாரித்தனர். அப்போது ஆசிரியை நித்யா மாணவர்களுடன் தகாத உறவில் இருந்தது உறுதியானது.

Perverted teacher Nithya -30-arrested-Dinamalar
போக்சோ சட்டத்தில் கைது: இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். அதன்பேரில் மாவட்ட நன்னடத்தை அலுவலரும், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலருமான சித்ரபிரியா விசாரணை நடத்தினார். அதில் சம்பவம் உண்மை என்பது தெரியவரவே ஆரணி மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது[9]. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் நித்யாவை நேற்று கைது செய்தார். பின்னர் அவரை ஆரணி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார். மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதியும், மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதியுமான (பொறுப்பு) எஸ்.தேவநாதன் வழக்கை விசரித்து, ஆசிரியை நித்யாவை ஏப்ரல் 4-ந் தேதிவரை வேலூர் மத்திய பெண்கள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து அவர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்[10]. இந்த நிலையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார், பள்ளி மாணவர்களுடன் தகாத உறவில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட ஆசிரியை நித்யாவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.Perverted teacher arrested

இத்தகைய தகாத உறவுகள், பாலியல் குற்றங்களைத் தடுப்பது எப்படி?: முன்னர் ஒரு கணித ஆசிரியை தன் வகுப்பில் படிக்கும், தன்னை விட பத்து வயது சிறியனவனான, மாணவனிடம் மோகம் கொண்டு தகாத உறவில் ஈடுபட்டு, போட்டி ஒன்று தனியாக தங்கி வாழ்ந்து திரும்பி வந்து திருமணம் செய்து கொண்டதாக செய்திகள் எல்லாம் வெளிவந்தன. ஆனால் இங்கோ இரண்டு குழந்தைகளுக்கு தாயாக இருக்கின்ற நிலையில், தகாத உறவு கொண்டு இருப்பது தெரியவருகிறது. ஆகவே, தாம்பத்தியத்தில் குறை என்று சொல்லமுடியாது. அதுமட்டுமல்லாது அவற்றை படங்கள் எடுத்து வைத்துக் கொண்டு பிறகு பார்த்து ரசிக்கும் ஒரு அசிங்கமான பாலியல் மனப்பாங்கும் இதில் வெளிப்படுகிறது. கணவன் எச்சரித்தும், அவள் அத்தகைய உறவைத் தொடர்ந்திருக்கிறாள். இது அவளின் கொக்கோக வக்கிரத்தை னெடுத்துக் காட்டுகிறது. ஆண்களில் சிலர் அவ்வாறு இருப்பது போல, பெண்களிலும் சிலர் இருப்பது தெரிய வருகிறது. இதனை, மனோதத்துவ முறையில் தடுக்கவேண்டும். ஆனால், உறவினர்களால் செய்ய வேண்டும். குறிப்பாக பேற்றோர், சகோதரிகள் போன்றவர் செய்ய வேண்டும்.

Female pedophile psyche- happens in India-2

இணைதள விசயங்களைத் தேடும் போது, சுயக் கட்டுப் பாடு தேவை: நிச்சயமாக இக்காலத்தில் இணையதளம், செல்போன், கம்ப்யூட்டர் போன்ற உபகரணங்கள் ஆண் பெண் உடலுறவு கொள்ளும், வீடியோக்கள், திரைப்படங்கள் முதலியவற்றை காண்கின்ற சந்தர்ப்பத்தை ஏற்படுகின்றது. சில நேரங்களில் அறிந்தோ அறியாமலோ தெரிந்தோ தெரியாமலோ சில இணையதளங்களில் மற்றவர்களை தேடும் பொழுது இடையில் இத்தகைய படங்களை வைத்து கவனத்தை ஈர்க்கின்றனர் மற்றும் திசை திருப்புகின்றனர். ஒருவேளை தேடுகின்றவர், இவற்றைக் கண்டுகொள்வது இல்லை, என்றாலும், பாலியல் ரீதியாக ஆண் பெண் எவருக்கும் அதில் ஒரு ஈர்ப்பு ஏற்படும் பொழுது சரி அதில் என்னதான் இருக்கிறது என்று பார்க்க கூடிய நிலையும் ஏற்படுகிறது. பார்த்துவிட்டு மறுபடியும் சாதாரணமாக தங்களது கடமைகளை செய்து கொண்டு இருந்தால் பிரச்சினையில்லை ஆனால். அது மனதில் ஒரு துண்டுதலை உண்டாக்கி, மறுபடியும் மறுபடியும் அதை பார்த்து ரசிக்க வேண்டும், பிறகு இதனை உண்மையாகவே அனுபவித்து ரசித்தால் எப்படி இருக்கும், என்ற ஒரு மனப்பாங்கு ஏற்படும்பொழுது, எல்லைகளைக் கடந்து சமூகக் கட்டுப்பாடுகளை மீறி இத்தகைய தகாத உடலுறவு கொள்ள சந்தர்ப்பங்கள் ஏற்படுகின்றன. ஆகவே, இவற்றைத் தவிர்ப்பது நல்லது.

வேதபிரகாஷ்

24-03-2019

Female pedophile psyche- happens in India-3

[1] தினத்தந்தி, பள்ளி மாணவர்களுடன் தகாத உறவு: ‘போக்சோசட்டத்தில் ஆசிரியை கைது, பதிவு: மார்ச் 22, 2019 03:15 AM

[2] https://www.dailythanthi.com/News/State/2019/03/22013757/The-teacher-arrested-in-the-Pokso-Act.vpf

[3] மாலைமலர், ஆரணியில் மாணவர்களுடன் தகாத உறவுஆசிரியை போக்சோவில் கைது, பதிவு: மார்ச் 21, 2019 10:34.

[4] https://www.maalaimalar.com/News/District/2019/03/21103411/1233315/Arani-near-school-teacher-arrested-for-pocso-act-law.vpf

[5]  சமயம், பல பள்ளி மாணவர்களுடன், பல இடங்களில் உல்லாசம்ஆசிரியை கைது!: சிக்கியது எப்படி?,Tamil Samayam | Updated:Mar 21, 2019, 05:44PM IST

[6] https://tamil.samayam.com/latest-news/crime/sexual-offences-against-children-lady-teacher-arrest-in-pocso-act/articleshow/68511408.cms

[7] தினமலர், மாணவர்களுடன் தகாத உறவு பள்ளி ஆசிரியைசஸ்பெண்ட், Updated : மார் 22, 2019 00:33 | Added : மார் 22, 2019 00:30.

[8] https://www.dinamalar.com/news_detail.asp?id=2238439

[9] ஏசியாநியூஸ், பள்ளி மாணவர்களுடன் உல்லாசம்கையும் களவுமாக பிடிபட்ட ஆசிரியை கைது..!, By Vinoth KumarFirst Published 21, Mar 2019, 3:16 PM IST.

[10] https://tamil.asianetnews.com/crime/sexual-abuse-school-teacher-arrest-popn57

தெரிந்த அனிதாவும், தெரியாத அனிதாக்களும்: திராவிட சித்தாந்திகள் எவ்வாறு பிரச்சினைகளை அணுகுகின்றனர், எதிர்க்கின்றனர் மற்றும் மறுக்கின்றனர்! (1)

செப்ரெம்பர்11, 2017

தெரிந்த அனிதாவும், தெரியாத அனிதாக்களும்: திராவிட சித்தாந்திகள் எவ்வாறு பிரச்சினைகளை அணுகுகின்றனர், எதிர்க்கின்றனர் மற்றும் மறுக்கின்றனர்! (1)

Anita suicide - NEET protest- politicized

தமிழகம்  பெண்மையைப் போற்றுகிறதா, இல்லையா?: தமிழகத்தில் பெண்மை பலவழிகளில் சீரழிக்கப் பட்டு வருகின்றது. திராவிடத்துவ கோணத்தில் பார்க்கும் போது, 1960களிலிலிருந்து, ஆட்சியாளர்களுள் பெரும்பாலோர், பலதார திருமணம், மணமுறிவு, சேர்ந்து வாழ்தல் போன்ற நிலைகளில் இருந்து வந்துள்ளதால், அதைப் பற்றி அலசுவதே தர்மசங்கடமான நிலை ஏற்படுகிறது. மேலும் உள்ள, மற்றா விவகாரங்களை அலவும் முடியாத நிலை உள்ளது. பெண்ணியப் போராளிகள், சமூகப் போராளிகள், சாமானியர்கள் போன்றோர் எல்லாம், தீடீரென்று தோன்றி, சில குறிப்பிட்ட விசயங்களுக்கு ஆர்பாட்டம் செய்து மறைந்து விடுகின்றனர். தற்கொலை என்றால் கூட, ஏதோ ஒருவிதத்தில் பாரபட்சத்துடன் தான் அணுகி செய்தியாக்குகின்றனர் அல்லது மறந்து விடுகின்றனர். அனிதா தற்கொலை என்பதற்கு எல்லோரும் குதித்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், அதே நேரத்தில் நடந்துள்ள மற்ற தற்கொலைகள் பற்றி  கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர். சென்னையைச் சேர்ந்த மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டு, பலருக்கு இரையாக்கப்பட்ட செய்தி, ஏதோ சாதாரணமாக பாவிக்கப் பட்டு, அமைதியாக கவனிக்கின்றனர் அல்லது மறைக்க முயல்கின்றனர். கடந்த ஒரு வாரமாக 01-09-2017 அன்று தற்கொலை செய்து கொண்ட அனிதா பிரச்சினை விவாதத்தில் உள்ளது[1]. பட்டியல் இனத்தை சேர்ந்த பெண் என்பதால், அதில் பொதுவாக மத்திய-மாநில அரசுகளைக் குற்றஞ்சாட்டி பேச்சுகள்இருக்கின்றன[2]. பிரச்சினை படிப்பை விட்டு, அரசியலாக்கப்பட்டு, சித்தாந்த குழப்பங்களில் சேர்த்துள்ளனர்[3]. அதே நேரத்தில், மற்ற தற்கொலைகளை கண்டுகொள்ளவில்லை.

Anita suicide - NEET protest- politicized-actors too

மருத்துவப் படிப்பு, பொது நுழைவு தேர்வு, ஊழல் அற்ற தீர்வுகள்: தமிழகத்தைப் பொறுத்த வரையில், தனியார் மயமாக்கப் பட்டப் பிறகு, மருத்துவம், பொறியியல் படிப்புகள் லட்சங்களுக்கு விற்கப்படுகின்றன என்பது தெரிந்த விசயமாக இருக்கிறது. மருத்துவம், பொறியியல் கல்லூரிகள், மருத்துவ மனைகள் எல்லாமே வியாபார ரீதியில் நடத்தப் பட்டு வருவதால், அரசியல்வாதிகள், அவர்களது பினாமிகள், மற்றவர் தங்களது கருப்புப் பணத்தைக் கொட்டி, வெள்ளையாக்கும் தளமாக மாற்றிக் கொண்டு விட்டனர். அதனால், பணக்காரர்களைப் பொறுத்த வரையில், சீட் வாங்குவதில் எந்த பிரச்சினையும் இல்லை. நல்ல மதிப்பெண் இருந்தாலும், கட்டணம் கட்ட வழியில்லை என்று சேராத மாணவ-மாணவியரும் இருக்கத்தான் செய்கின்றனர். அந்நிலையில் மத்தியதர-ஏழைமாணவ-மாணவியருக்கு, இது கனவாகவே மாறிவிட்டது. மருத்துவப் படிப்பிற்கு நுழைவு தேர்வு வைப்பது அல்லது 10+2 மதிப்பெண் வைத்து, தேர்வு செய்வது என்ற நிலை தமிழகத்தில் இருந்து வந்துள்ளது. அந்நிலையில், நீட் வந்தபோது, தங்களது வியாபாரம் பாதிப்பதால், பிரச்சினையை ஏற்படுத்துகின்றனர். மருத்துவ கண்காட்சி என்று நடத்தும் போது, அவர்கள் எப்படி மாணவ-மாணவியருக்கு வலைவீசுகிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளலாம். அந்நிலையில் தான், தங்கள் சீட்டுகளை விற்கமுடியாதே என்று சம்பந்தப் பட்டவர்கள், நீட் வருவதை எதிர்க்கின்றனர், பிரச்சினையைஉக் குழப்புகின்றனர். இனி அதே நேரத்தில், எவ்வாறு ஒரு மாணவி சீரழிக்கப்பட்டாள் என்பதை பார்ப்போம். அதில் ஒரு மருத்துவரும் உள்ளார் என்பது, கேவலம்.

Girl raped by many - 09_09_2017_013_007

காணாமல் போன மாணவி, சீரழிந்து திரும்பி வந்த பரிதாபம்: சென்னை கோயம்பேடு பகுதியை சேர்ந்த 14 / 16 வயது சிறுமி, அங்குள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இவருடைய தாய், சென்னை மாநகராட்சியில் துப்புரவு வேலை செய்கிறார் என்கிறது மாலைமலர். வங்கியில் துப்புரவு பணியாளராக உள்ளார், என்கிறது தினகரன். இதெல்லாம் ஊடகங்களுக்கே கைவந்த கலை. இவர்களுக்கு 2 மகள்கள். ராணியின் கணவர் சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இந்த நிலையில், கடந்த ஒரு மாதம் முன்பு (ஆகஸ்ட் 2017) அந்த மாணவி, வீட்டில் இருந்து திடீரென மாயமானார்[4]. அவரது தாய் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தார். மாணவியை கண்டு பிடிக்க முடியவில்லை. இதையடுத்து, கோயம்பேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிந்து மாணவியை தேடி வந்தனர்[5]. இந்த நிலையில், மாயமான மாணவி ஓரிரு நாட்களுக்கு முன்பு வீடு திரும்பினார். குடும்பத்துக்கு தெரிந்த நபர் ஒருவர் /  சித்ராவின் சகோதரர் குமார்  மீட்டு, சிறுமியை கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டிற்கு அழைத்து வந்து ராணியிடம் ஒப்படைத்துள்ளார். சுரேஷ், சிறுமியை பலாத்காரம் ெசய்துள்ளார். மேலும் அவரை பல இடங்களுக்கு அழைத்து சென்று சுரேஷ் தனது நண்பர்களுடன் நெருக்கமாக இருக்க வைத்துள்ளார்[6]. அதேபோல், ஆரணி அரசு மருத்துவமனை டாக்டர் ஜெயபிரகாசம் என்பவரும், சிறுமிக்கு மயக்க ஊசி போட்டு பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், இதுகுறித்து வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகவும் இந்த சம்பவத்துக்கு மருத்துவ உதவியாளர் பாண்டியன் உதவியாக இருந்ததாகவும் சிறுமி கூறினார்[7].

Arni doctor arrested and investigated

மருத்துவ பரிசோதனையில் மாணவி சீரழிக்கப்பட்டது தெரிய வந்தது: மாணவியின் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தது. வயிறு வலியால் துடி துடித்தார். தாய், அவரை ஆஸ்பத்திரிக்கு கூட்டி சென்றார்[8]. மருத்துவ பரிசோதனையில், மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. தாய் அதிர்ந்து போனார்[9]. விசாரணையில், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பையூர் எம்.ஜி.ஆர். நகரில் மாணவியின் தாய்க்கு உறவினரான சித்ரா என்கிற பெண் வசித்து வருகிறார். மாயமான போது, ஆரணியில் உள்ள உறவினர் சித்ராவுக்கு மாணவி போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அவர், வேறு எங்கும் செல்ல வேண்டாம். ஆரணி வா… ஜவுளிக்கடையில் வேலை வாங்கி தருகிறேன். என் வீட்டிலேயே தங்கி வேலை செய் என்று ஆசை வார்த்தை கூறி அழைத்தார். இதை நம்பி, மாணவியும் ஆரணிக்கு சென்றார். மாணவியை, சித்ரா தனது வீட்டில் தங்க வைத்தார். சித்ராவிற்கும், ஆரணி அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்படும் உடல்களை, வாடகைக்கு தனியார் வாகனம் மூலம் கொண்டு சென்று உறவினர்களிடம் ஒப்படைக்கும் வேலை செய்யும் சுரேஷூக்கும் தொடர்புள்ளது. சித்ரா, சுரேஷ் உதவியுடன், மாணவியை கட்டாயப்படுத்தி விபசாரத்தில் தள்ளினார். மாணவியை வெளியே தப்பித்து செல்ல விடாமல் வீட்டிலேயே அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்து வந்தனர்.

© வேதபிரகாஷ்

11-09-2017

Arni doctor arrested and investigated-NEET

[1] http://www.business-standard.com/article/current-affairs/tamil-nadu-topper-anita-who-fought-against-neet-commits-suicide-117090100836_1.html

[2] http://indiatoday.intoday.in/story/anitha-suicide-neet-tamil-nadu-pa-ranjith-ariyalur/1/1039442.html

[3] http://www.firstpost.com/india/tamil-nadu-dalith-girl-anitha-who-spearheaded-fight-against-neet-in-supreme-court-commits-suicide-3998591.html

[4] மாலைமலர், சென்னை மாணவி கற்பழிப்பு: ஆரணி அரசு ஆஸ்பத்திரி டாக்டர்உதவியாளர் கைது, பதிவு: செப்டம்பர் 09, 2017 10:24.

[5]  http://www.maalaimalar.com/News/TopNews/2017/09/09102458/1107087/Chennai-student-molested-arani-government-hospital.vpf

[6] ஜெய-டிவி-செய்திகள், மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக்கூறி ஆரணி அரசு மருத்துவமனை மருத்துவர் ஜெயபிரகாஷ் உள்ளிட்ட 2 பேரை சென்னை காவல்துறையினர் கைது செய்தனர், Sep 9 2017 8:54PM

[7] http://www.jayanewslive.com/tamilnadu/tamilnadu_74269.html

[8] தமிழ்.முரசு, ஆரணியில் மயக்க ஊசி போட்டு சிறுமி பலாத்காரம் அரசு டாக்டர் கைது: மருத்துவ உதவியாளர் சிக்கினார், 09090-2017. 3.54.29 PM.

[9] http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=109682

குழந்தை போர்வையில் பிடோபைல், செக்ஸ்-டூரிஸம், குழந்தை-போர்னோகிராபி, முதலியவை மறைக்கப்படுவது!

ஜூன்3, 2016

குழந்தை போர்வையில் பிடோபைல், செக்ஸ்-டூரிஸம், குழந்தை-போர்னோகிராபி, முதலியவை மறைக்கப்படுவது!

குழந்தைக் கற்பழிப்பாளிகளை விட்டு வைக்கக் கூடாது

மே மாதம் 25ம் தேதி – குழந்தைகளுக்கான சர்வதேச தினம்: இக்காலத்தில் எல்லாவற்றிற்கும் “சர்வ தேச தினம்மென்று கொண்டாடுவது வழக்கமாகி விட்டது. இதனால், விழிப்புணர்வு உண்டாகிறதோ இல்லையோ, பல அமைப்புகள், நிறுவனங்கள், என்.ஜி.ஓக்கள், வியாபாரக் கம்பெனிகளுக்க்கு நல்ல வாய்ப்பாக தங்களது வியாபாரத்தைப் பெருக்கிக் கொள்கின்றன. விளம்பரம், அச்சடிப்பு, பிரச்சாரம் போன்ற வேலைகளில் ஈடுபடுத்திக் கொண்டு கோடிகளை அள்லுகின்றன. ஆகவே, காணாமல் போகும் குழந்தைகளுக்கான சர்வதேச தினம் ஆண்டுதோறும் மே 25-ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், காணாமல் போகும் குழந்தைகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முயற்சிக்கும் வகையிலும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து மத்திய அரசு பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது என்பது ஒன்றும் புதிய விசயமாக இல்லை. இந்நாளில் சர்வதேச அளவில் பல நாடுகள் குழந்தை கடத்தல் அச்சுறுத்தல் பற்றி பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

IT_Act_does_not_cover_Chold_porn

குழந்தை என்றால் யார்?: சமீபத்தில் குழந்தை என்ற வார்த்தை உபயோகப்படுத்துவதில், பல நல்லது-கெட்டது விசயங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. நிர்பயா கற்பழிப்பில் குற்றவாளிகளில் ஒருவன் 18 வயதை விட கீழானவன். அதாவது, 18 வயது முடிந்தவர்களை பெரியவர் என்றும் 18 வயதிற்கு கீழுள்ளவரை சிறுவர்-சிறுமி, குழந்தை என்றும் சட்டரீதியில் குறிப்பிடப்படுகிறது. இதனால், 17 வயதுள்ள இளம்பெண் கூட குழந்தை என்று தான் குறிப்பிடப்படுகிறது. இதனால், பற்பல குற்றங்களில் அவர்கள் அவ்வாறே குறிப்பிடப்பட்டு, பல கொடுமையானம் குரூரமான பாலியல் குற்றங்கள், வன்புணர்ச்சிகள் மறைக்கப்படுகின்றன. பிடோபைல், செக்ஸ்-டூரிஸம் போன்ற நவீன செக்ஸ்-குற்றங்களில் பெரும்பாலும் கிருத்துவர்கள் மற்றும் அயல்நாட்டினர், அவர்களும் கிருத்துவர்களாகவே இருப்பதால், மதரீதியில் இக்குற்றங்கள் மறைக்கப்படுகின்றன. நீதிமன்றத்திற்கு வெளியிலும் சமரசம் செய்து கொண்டு, உண்மைகள் மறைக்கப்படுகின்றன, குற்றங்கள் மாற்றப்படுகின்றன. கோவா, கேரளா, தில்லி போன்ற இடங்களில் குழந்தை-விபச்சாரம் அதிகமாக இருக்கின்றது. இதில் அயல்நாட்டவர்கள் ஈடுபடுகின்றனர். இதனுடன், குழந்தை-போர்னோகிராபியும் சேர்ந்துள்ளது. அதிகமாக பணம் கிடைக்கிறது என்பதனால், இந்திய கூட்டாளிகள், கொஞ்சமும் ஈரமில்லாமல், அத்தகைய பாதக செயல்களில் ஈடுபட்டுள்ளார்கள்.

Abhayakendras-closed-down-Christian-sex-scam

Abhayakendras-closed-down-Christian-sex-scam

சைல்டு-லைன் மரியசூசையும், இந்து-சுவாமிநாதனும்: இந்தியாவில் மொத்த மக்கள் தொகையில் 40 சதவீதம் குழந்தைகளாக உள்ளனர். இதில் 8 நிமிடத்துக்கு ஒரு குழந்தை காணாமல் போகிறது. ஆண்டுக்கு சராசரியாக ஒரு லட்சம் குழந்தைகள் காணாமல் போகின்றனர். இதில் பெண் குழந்தைகள் 55 சதவீதமும், ஆண் குழந்தைகள் 45 சதவீதமும் காணாமல் போகிறார்கள்[1]. இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட சைல்டு லைன் இயக்குநர் மரியசூசை கூறும்போது, “குழந்தை கடத்தல், படிக்க விருப்பமின்மை உள்ளிட்ட பிரச்சினைகளால் வீட்டைவிட்டு வெளியேறுதல் ஆகிய காரணங்களால் குழந்தைகள் காணாமல் போகின்றனர். அவ்வாறு காணாமல் போகும் குழந்தைகள் சில நேரங்களில் கொல்லப்படுகிறார்கள். மேலும் சில நேரங்களில் கடத்தல் தொழில், பாலியல், கொத்தடிமைகள், பிச்சை எடுத்தல் போன்றவற்றுக்கு பயன்படுத்தப்படுகிறார்கள். எனவே, காணாமல்போகும் குழந்தைகள் பற்றிய விழிப்புணர்வு பொதுமக்களுக்கு இருக்கவேண்டும். சைல்டுலைன் பற்றியும் பொது மக்கள் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். ஆதரவு மற்றும் பாதுகாப்பு தேவைப்படும் குழந்தைகளுக்காக மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சேவை அமைப்பு இது. அதன் தேசிய அளவிலான 24 மணிநேர அவசர இலவச தொலைபேசி எண்- 1098. காணாமல் போன குழந்தைகளை விரைவாகவும் பத்திரமாகவும் மீட்கும் பணியில் சைல்டுலைன் அமைப்பு ஈடுபட்டுள்ளது. குழந்தைகளுக்கு அதிக மன உளைச்சலை ஏற்படுத்தாமல், அவர்களுக்கு தேவையான பாதுகாப்பை பெற்றோர்கள் கொடுக்க வேண்டும்,” என்றார் அவர்[2].

child-prostitute-poster

குற்றம் செய்து மரத்துப் போனவர்கள், திரும்ப குற்றம் செய்கிறார்கள்

கன்னியாகுமரியும், குழந்தை கடத்தலும், பிடோபைகளும், செய்தி மறைப்புகளும்: கன்னியாகுமரியில் இருந்து கொண்டு, கிருத்துவராக இருந்து, மேலும் இந்த காரியத்தில் ஈடுபட்டுள்ள இவர் “பாலியல்” என்று குறிப்பிட்டாலும், பிடோபைல், அனாதை ஆசிரமங்கள், குறிப்பாக கிருத்துவ நிறுவனங்கள் அதிகமாக ஈடுப்பட்டிருப்பதைப் பற்றி குறிப்பிடாமல் மறைத்திருப்பது நன்றாகவே தெரிகிறது. என்.சுவாமிநாதன் என்பவர் மரியசூசையிடம் பேட்டி கண்டபோது, அல்லது விவரங்களைக் கேட்டறிந்தபோது, அந்த விசயங்களை எல்லாம் கேட்டிருக்க வேண்டும். இல்லையென்றால், இதெல்லாம் ஏதோ செய்கின்ற வேலைக்கு செய்கிறோம் என்ற ரீதியில் தான் இருக்கும், வெளியாகும் செய்திகளும் அப்படியே இருக்கும்.

Child sold, child-prostitution etcமே மாதம் 25ம் தேதி – குழந்தைகளுக்கான சர்வதேச தினம் என்றால் அதே மாதத்தில் குழந்தை கடத்தல்: தண்டையார்பேட்டை, கொண்டித்தோப்பு அருகே வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை ஆட்டோவில் கடத்திய பெண்ணை பொதுமக்கள் மடக்கி பிடித்து, போலீசில் ஒப்படைத்தனர். பிடிபட்ட பெண் கடத்தல் கும்பலை சேர்ந்தவரா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்[3]. பட்டப்பகலில் நடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது சென்னையில் கடந்த 6 மாதங்களில் 10க்கும் மேற்பட்ட குழந்தைகள் மாயமாகி உள்ளனர். இதில், யானைக்கவுனி பகுதி மற்றும் பாரிமுனை ராஜா அண்ணாமலை மன்றம் அருகே நடைபாதையில் தூங்கிய 2 குழந்தைகளும் அடங்கும். இதுதொடர்பாக, பல சமூக ஆர்வலர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்தனர். அதில், ‘சென்னையில் குழந்தைகள் கடத்தப்படுவது தொடர்கதையாக உள்ளது. எனவே, இதுபோன்ற சம்பவங்களை தடுக்கவும், கடத்தப்பட்ட குழந்தைகளை மீட்கவும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என தெரிவித்து இருந்தனர். ஆனால், இதுவரை கடத்தப்பட்ட குழந்தைகள் மீட்கப்படவில்லை. இதுதொடர்பாக, யாரையும் போலீசார் கைது செய்யவும் இல்லை. தற்போது கூட ஆட்டோவில் குழந்தையை கடத்திய பெண்ணை பொதுமக்கள்தான் மடக்கி பிடித்துள்ளனர். எனவே, பிடிபட்ட பெண்ணிடம் தீவிர விசாரணை நடத்தி, இதன் பின்னணியில் உள்ளவர்களை கைது செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்[4].

Child prostitution a curse to society

© வேதபிரகாஷ்

03-06-2016

[1] தமிழ்.இந்து, இந்தியாவில் ஆண்டுக்கு 1 லட்சம் குழந்தைகள் மாயம், என்.சுவாமிநாதன், Published: May 25, 2016 15:46 ISTUpdated: May 25, 2016 16:00 IST

[2]http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-1-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/article8645218.ece

[3] தினகரன், வீட்டு வாசலில் விளையாடிய குழந்தையை ஆட்டோவில் கடத்திய பெண் சிக்கினார் கடத்தல் கும்பலை சேர்ந்தவரா போலீசார் தீவிர விசாரணை, பதிவு செய்த நேரம்:2016-05-21 11:54:39.

[4] http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=575243&cat=504

குழந்தைகள் கடத்தல் பற்றி, புகார் மற்றும் வழக்கு தொடுத்ததால், நீதிமன்றம் எழுப்பியுள்ள கேள்விகள்!

ஜூன்3, 2016

குழந்தைகள் கடத்தல் பற்றி, புகார் மற்றும் வழக்கு தொடுத்ததால், நீதிமன்றம் எழுப்பியுள்ள கேள்விகள்!

Chennai Children kidnapped - disappearedஇந்தியாவைப் பொறுத்த வரையில், ஏன் தமிழகத்தைப் பொறுத்த வரையிலும், குழந்தைகள் கடத்தல் என்பது புதிய விசயமே இல்லை. கடந்த காலங்களில் “குழந்தை கடத்தல்” ஒரு திட்டமிட்ட வியாபாரமாகி விட்டது. என்.ஜி.ஓக்கள் இதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. சினிமா மற்ற ஊடகங்களில் இதைப் பற்றி தாராளமாகவே விவரிக்கப்பட்டாலும், பல உண்மைகளை மறைத்தே வேலை செய்து வருகிறார்கள். பெரும்பாலும், கடத்தப் பட்ட குழந்தைகள் பிச்சை எடுப்பதற்கு உபயோகப் படுத்தப் படுகிறார்கள் என்றே கருத்தை உருவாக்க முயல்கிறார்கள். விடப்பட்ட பெண்குழந்தையை காப்பாற்றி வளர்ப்பது போன்ற நிலையிலும் சில நிறுவனங்கள் ஈடுபட்டு, பிறகு கடத்தல், தத்து, அயல்நாட்டவர்களுக்கு விற்பனை போன்ன்ற வேலைகளில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் கடத்தப்பட்ட குழந்தைகள் எத்தனை? என்றும், அதில் எத்தனை குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டுள்ளன? என்றும் தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது வேடிக்கையாக இருக்கிறது எனலாம்.

Parthiban filed petition - untraceable kids - India 2011-14குழந்தை கடத்தல் விசயமாக போலீஸாருக்கு புகார் செய்தது, ஆள்கொணர்வு மனு தாக்கல் செய்தது: கடந்த பல ஆண்டுகளாக இவ்வியாபாரம் நடந்து கொண்டிருக்கும் போது, சென்னையில் சாலையோரத்தில் பெற்றோருடன் தூங்கிக்கொண்டிருக்கும் பல குழந்தைகள் கடத்தப்படுவதாகவும், அந்த குழந்தைகளை மீட்க போலீசார் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், சென்னை போலீஸ் கமிஷனரிடம் தயா பவுண்டேஷன், நடிகர் பார்த்திபன், எக்ஸ்னோரா அமைப்பை சேர்ந்த எம்.பி.நிர்மல் ஆகியோர் கடந்த ஏப்ரல் மாதம் புகார் செய்தனர் என்பது, அதை விட வேடிக்கையான விசயமாக இருக்கிறது. அவர்கள் செய்த நல்ல காரியத்தை விமர்சிக்கவில்லை, ஆனால், இத்தனை ஆண்டுகள் சும்மாயிருந்து விட்டு, இப்பொழுது திடீரென்று, இந்த உணர்வு எப்படி ஏற்பட்டது என்று தெரியவில்லை. இந்த நிலையில், சென்னை ஐகோர்ட்டில் எக்ஸ்னோரா அமைப்பை சேர்ந்த எம்.பி.நிர்மல், ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார்[1] என்று செய்திகள் வந்துள்ளன.

untraceable kids - India 2011-14கடந்த மூன்று ஆண்டுகளுக்கான குழந்தை கடத்தல் புள்ளி விவரங்கள் கொடுக்கப்பட்டது: இதனிடையே, கடந்த 3 ஆண்டுகளில் இதுவரை 1000க்கும் மேற்பட்ட குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளதாக மனுதாரர் தரப்பில் புள்ளி விவரம் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் 2013க்கு முன்னால் என்ன நடந்தது, அதைப் பற்றி மனுதாரர்கள் ஏன் கவலைப்படவில்லை என்ற கேள்விகளும் எழுகின்றன.

  • 2014 ஆம் ஆண்டில் மொத்தமாக 441 குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளதாகவும், அதில் சென்னையில் மட்டும் 114 குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • 2015 ஆம் ஆண்டில் 656 குழந்தைகள் கடத்தப்பட்ட நிலையில், அதில் 305 பேர் பெண் குழந்தைகள் என்றும், சென்னையில் மட்டும் மொத்தமாக 149 குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
  • இதேபோன்று 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை 271 குழந்தைகள் காணாமல் போயுள்ளதாகவும், அதில் பெண் குழந்தைகள் 126 பேர் என்றும், சென்னையில் மட்டும் மொத்தம் 58 குழந்தைகள் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது[2].

missing children 2011-14- India Todayகாணாமல் போன குழந்தைகளை ஆஜர்படுத்த வேண்டும்: அந்த மனுவில், ‘சென்னை எஸ்பிளனேடு பகுதியில் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் பெற்றோருடன் தூங்கிக்கொண்டிருந்த 8 மாத குழந்தை விமல் / ராகேஷ் கடத்தப்பட்டான்[3]. சில நாட்களுக்கு பின்னர் பெற்றோருடன் தூங்கிக்கொண்டிருந்த மற்றொரு 9 மாத குழந்தை சரண்யா கடத்தப்பட்டாள். இந்த குழந்தைகளின் பெற்றோர்கள் வசதியில்லாதவர்கள். அவர்களால் குழந்தைகளை தேடி கண்டுபிடிப்பது மிகவும் கஷ்டமானது. போலீசாரும் கடத்தப்பட்ட குழந்தைகளை கண்டுபிடித்து மீட்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, இந்த இரு குழந்தைகளை மீட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீசாருக்கு உத்தரவிடவேண்டும்’ என்று கூறப்பட்டு இருந்தது[4]. “கடந்த ஆண்டு பிப்ரவரி 23 ஆம் தேதி வால்டெக்ஸ் சாலையில் 8 மாத ஆண் குழந்தையும், அதற்கு அடுத்த மாதம் 29 ஆம் தேதி அதே பகுதியில் சரண்யா என்ற பெண் குழந்தையும் காணாமல் போனதாக குறிப்பிட்டிருந்தார்”, என்று நியூஸ்.7.டிவி குறிப்பிடுகின்றது[5]. வழக்கபோல, ஊடகங்களின் மாறுபட்ட அறிவிப்பு-செய்திகளும் இப்படி உள்ளன.

Three-year-old Chikash missing at the Chennai Central reunited with his parents on 22-05-2015- Indian Expressபோலீஸார் கேட்ட கால அவகாசம்: இந்த வழக்கு கடந்த ஏப்ரல் மாதம் விசாரணைக்கு வந்தபோது, கடத்தப்பட்ட குழந்தைகளை ஜூன் 2–ந் தேதி ஆஜர்படுத்த வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் மற்றும் எஸ்பிளனேடு போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது[6]. சென்னையிலேயே “பிடோபைல்”, அனாதை இல்லங்கள், முதலிய விவகாரங்களில் ஏகப்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ளன. அனைத்துலக குழந்தைக் கற்பழிப்பாளிகளே இங்கு கைதாகியுள்ளனர். வில் ஹியூம் போன்றவர்கள் கைதாகி, தண்டனை பெற்று சிறையிலும் இருக்கின்றனர். “குழந்தை காணவில்ல”, “குழந்தை திருட்டு”, போன்ற செய்திகளும் ஆயிரக்கணக்கில் வந்துள்ளன. எனவே, இவ்விகாரங்கள் புதியது போல அறிவிப்பது, அணுகுவது, புகார் கொடுப்பது, வழக்குப் போடுவது முதலியவை திடீரென்று ஏன் வருகின்றன என்று புரியவில்லை. இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, வி.பாரதிதாசன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கடத்தப்பட்ட குழந்தைகளை மீட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்த கால அவகாசம் வேண்டும் என்று போலீஸ் தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், ‘குழந்தைகள் கடத்தல் என்பது சமுதாயத்தில் மிகப்பெரிய பிரச்சினை. இதை எளிதான விஷயமாக எடுத்துக் கொள்ள முடியாது’ என்று கருத்து தெரிவித்தனர்[7]. “குழந்தைகள் கடத்தல்” என்பது சமுதாயத்தில் மிகப்பெரிய பிரச்சினை எனும்போது, நீதிபதிகள் அதை அறியவில்லை என்றாகாது.

CCTV -woman kidnapping Sridhar from Central - The Hinduஎத்தனை வழக்குகள் என்று நீதிமன்ற கேள்விகள் கேட்டது?: பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது[8]: “இந்த வழக்கில் 3–வது எதிர்மனுதாரராக தமிழக உள்துறை செயலரை தாமாக முன்வந்து சேர்க்கின்றோம்.

  • தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் எத்தனை குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளன?
  • குழந்தை கடத்தல் தொடர்பாக எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன?
  • அந்த வழக்குகளில் எத்தனை குழந்தைகள் மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன?
  • எத்தனை வழக்குகளில் குழந்தைகள் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை?
  • எத்தனை வழக்குகள் புலன் விசாரணையில் உள்ளன?

இந்த கேள்விகளுக்கு எல்லாம் தமிழக உள்துறை செயலர் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்யவேண்டும்[9]. விசாரணையை வருகிற ஜூன் 16–ந் தேதிக்கு தள்ளிவைக்கிறோம்[10]. நீதிமன்றம் இவ்விசயத்தில் மிகவும் கவலையோடு இருக்கிறது”, இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்[11].

© வேதபிரகாஷ்

03-06-2016

[1] தினத்தந்தி, கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் கடத்தப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை எத்தனை? தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி, மாற்றம் செய்த நாள்: வெள்ளி, ஜூன் 03,2016, 3:30 AM IST, பதிவு செய்த நாள்: வெள்ளி, ஜூன் 03,2016, 2:37 AM IST

[2] http://ns7.tv/ta/children-go-missing-supreme-court-orders-report.html

[3] தினத்தந்தி விமல் என்றும், மாலைமலர் ராகேஷ் என்றும் குறிப்பிடுகின்றன.

[4] http://www.dailythanthi.com/News/State/2016/06/03023744/In-the-last-5-years-in-the-state–Abducted-childrenNumber.vpf

[5] நியூஸ்.7.டிவி, காணாமல் போகும் குழந்தைகள்அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு, June 02, 2016

[6] மாலைமலர், கடந்த 5 ஆண்டுகளில் கடத்தப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை எத்தனை?: பதிலளிக்க அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு, பதிவு: ஜூன் 02, 2016 13:11

[7] http://www.dinakaran.com/Latest_Detail.asp?Nid=221317

[8] http://www.maalaimalar.com/News/District/2016/06/02131129/1016077/last-5-years-number-of-children-abducted-High-Court.vpf

[9] தினமணி, 5 ஆண்டுகளில் காணாமல் போன குழந்தைகள் பற்றிய விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும்: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு, By  சென்னை, First Published : 03 June 2016 01:41 AM IST.

[10] http://www.dinamani.com/tamilnadu/2016/06/03/5-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8/article3463590.ece

[11] தினகரன், குழந்தைகள் கடத்தல் வழக்கு: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ், பதிவு செய்த நேரம்: 2016-06-02 12:33:49.

கேரள சிறுமியர்-சிறுமிகள் கடத்தல் ஒரு மனிதத்தன்மையற்ற வியாபாரமே – அவர்கள் வாங்கி விற்கப்படுவது, அனாதை இல்லங்களில் வைக்கப்படுவது பணத்தைப் பெறுவதற்காகவே, சேவை போர்வையில் நடக்கும் வியாபாரம் (4)

ஓகஸ்ட்3, 2014

கேரள சிறுமியர்-சிறுமிகள் கடத்தல் ஒரு மனிதத்தன்மையற்ற வியாபாரமே – அவர்கள் வாங்கி விற்கப்படுவது, அனாதை இல்லங்களில் வைக்கப்படுவது பணத்தைப் பெறுவதற்காகவே, சேவை போர்வையில் நடக்கும் வியாபாரம் (4)

 

Crime against women India and Kerala compared

Crime against women India and Kerala compared

பெண்களுக்கு இழைக்கப் படும் குற்றங்கள், கேரளாவில் அதிகமாகிக் கொடிண்ருக்கின்றன: இப்படி அடிக்கடி செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன[1].  ஆனால், படிப்பறிவு அதிகம் உள்ள மாநிலத்தில் எப்படி இவ்வாறு இருக்க முடியும் என்ற கேள்வியும் எழுகின்றது. பெண்களுக்கு எதிராக இழைக்கப் படும் குற்றங்கள், கேரளாவில் அதிகமாக இருக்கின்றன[2]. அதிகாரப்பூவமான புள்ளியல் விவரங்கள், கேரளாவின் பெண்களுக்கு எதிராக இழைக்கப் படும் குற்றங்கள் தேசிய அளவுகளையும் மின்சுவதாக எடுத்துக் காட்டுகின்றன:

 

  1. கற்பழிப்பு – இவ்விகிதம் தேசிய விகிதத்தை (2.1) விட ஒன்றரை மடங்கு அதிகமாக (2.9) இருக்கிறது.
  2. பெண்கள் பாலியல் ரீதியில் தாக்கப்படுவது, முதலியன: இவ்விகிதம் தேசிய விகிதத்தை (3.7) விட மூன்று மடங்கு அதிகமாக (10.7) இருக்கிறது.
  3. பெண்ணின் மானத்தை பாதிக்கும் அளவில் நடக்கும் குற்றங்கள் – இவ்விகிதம் தேசிய விகிதத்தை (0.8) விட சுமார் இரண்டு மடங்கு அதிகமாக (1.4) இருக்கிறது.
  4. வரதட்சணை இறப்புகள், குற்றங்கள்: இவ்விகிதம் தேசிய விகிதத்தை விட இரண்டு மடங்கு அதிகமாக இருக்கிறது.

2012-13 கேரள போலீஸ் அறிக்கையும் அதனை எடுத்துக் காட்டுகிறது[3].

 

crime_against_women_report Kerala 2012-1013.table

crime_against_women_report Kerala 2012-1013.table

கம்யூனிஸ ஆட்சிக்கும், இதற்கும் சம்பந்தம் உண்டா?: குறிப்பாக கேரளா மற்றும் மேற்கு வங்காளம் மாநிலங்களில் தான் இத்தகைய குற்றங்கள் அதிகமாக உள்ளன என்று எடுத்துக் காட்டுகின்றன. இதில் கவனிக்கப் படவேண்டியது என்னவென்றால், இரண்டு மாநிலங்களில் மார்க்ஸ்சீய கம்யூனிஸ்ட் கட்சியினால் 30-40 ஆண்டுகளாக ஆட்சி செய்யப்பட்டு வந்துள்ளன என்பதாகும். இதனால், கேரளா பெண்களுக்கு வேண்டிய, உகந்ததான, பாதுகாப்புள்ள மாநிலமாக இல்லை என்று மற்ற அறிக்கைகளும் கூறுகின்றன[4]. அப்படியென்றால், இக்குற்றங்கள் சித்தாந்த ரீதியில் நடக்கின்றனவா அல்லது சமூக பிறழ்சிகள் அல்லது வேறு காரணங்களுக்கு நடக்கின்றனவா என்ற கேள்விகள் எழுகின்றன. முன்பு “கற்பழிப்பது டீ குடிப்பது போன்றது” என்று இ.கே. நாயனார் நியாயப்படுத்திப் பேசியது நினைவிருக்கலாம். கேட்டபோது, அதெல்லாம் “கம்யூனிஸ்ட் மேனிபெஸ்டோ”விலேயே உள்ளது என்று எடுத்துக் காட்டினார். பிறகு கிருத்துவ-முஸ்லிம்களின் தொடர்பும் இதில் காணப்படுகின்றன. அதாவது, அவர்கள் ஈடுபடுவது அதிகமாகக் காணப்படுகின்றன. குறிப்பாக “அனாதை இல்லங்கள்” எப்படி செக்ஸ்-டூரிஸம் முதலியவற்றிற்கு உபயோகப் படுத்தப் படுகின்றன என்ற விவரங்கள் வெளியாகின.

 

Rape agewise Kerala

Rape agewise Kerala

கேரளாவில் நடந்துள்ள முக்கியமான பாலியல், கற்பழிப்பு வழக்குகள்: கடந்த 30-40 ஆண்டுகளில், ஏகப்பட்ட பாலியல், கற்பழிப்புகள் வழக்குகள் நடந்துள்ளன. அவற்றில் முக்கியமானவை, பிரபலமானவை கீழே உதாரணத்திற்காகக் கொடுக்கப் படுகின்றன:

 

  1. 1992 – கன்னியாஸ்திரி அபயா (19) கொலை வழக்கு இன்னும் நடந்து கொண்டிருக்கிறது.
  2. 1996 – சூரியநெல்லி (16) பலரால் கற்பழிக்கப் பட்டாள். பி. ஜே. குரியன் போன்றோர் சம்பந்தப்பட்டார் என்று செய்திகள் வந்தன. 2013ல் தான் தர்மராஜன் என்பவன் தண்டிக்கப்பட்டான்.
  3. 1997- ஐஸ் கிரீம் பார்லர் செக்ஸ் வழக்கு – கேரள அரசு அமைச்சர்கள் சம்பந்தப் பட்டதால், இழுத்தடிக்கப் பட்டது.
  4. 2003 – கில்ரூர் செக்ஸ் அசிங்கம் – சரி எஸ். நாயர் என்ற இளம்பெண் டிவி சீரியல்களில் நடிக்க வாய்ப்பு வாங்கித் தருகிறேன் என்று கூறி பலரிடம் எடுத்துச் செல்லப் பட்டு கற்பழிக்கப் பட்டிருக்கிறாள். இதிலும் பெரிய நபர்கள் சம்பந்தப் பட்டதால், இழுத்தடிக்கப் பட்டது.

 

கேரளாவில் பெண்கள் அதிகமாக இருப்பதால் குற்றங்கள் ஏற்படுகின்றனவா அல்லது வேறு காரணங்கள் உள்னவா?: இந்தியாவில் பெண்களின் ஜனத்தொகை, ஆண்களைவிட அதிகமாக இருக்கின்றது. பெண்களின் படிப்பறிவும் 87-88%மாக உள்ளது. வெளிநாடுகளுக்கு கன்னியாஸ்திரிக்கள், நர்சுகள், வேலையாட்கள் என பெண்கள் அதிகமாக ஏற்றுமதி செய்யப் படுகிறார்கள் என்றே சொல்லலாம். இவர்கள் இல்லாத நாடுகளே இல்லை என சொல்லலாம். வளைகுடா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் இவர்களது எண்ணிக்கை அதிகமாகவே உள்ளன. இன்றைக்கு இந்தியா முழுவதும் நடிகைகளையும் கேரள அனுப்பி வருகிறது எனலாம். அந்த அளவிற்கு பெண்கள் இருக்கும் போது, எப்படி அவர்களுக்கு எதிரான குற்றங்களும் அதிகமாக இருக்கின்றன என்பது விளக்கப்படவில்லை. இது முரண்பாடு மட்டுமல்லாது, ஏதோ உண்மையினை மறைக்கும் விதமாக உள்ளது. மாறாக புள்ளியல் விவரங்கள் கொடுக்கப்பட்டு, சாதாரணமாக விவரங்கள் அலசப்படுகின்றன, பொதுவான காரணங்கள் சொல்லப்படுகின்றன.

 

Kerala crime against women districtwise 2012

Kerala crime against women districtwise 2012

இஸ்லாம் மற்றும் கிருத்துவ மதத்தினரின் தாக்கம் என்ன: இங்கு இஸ்லாம் மற்றும் கிருத்துவ மதத்தினர் அதிகமாக மற்றும் எல்லாவிதங்களில் ஆதிக்கத்தில் இருப்பதால், அவர்களின் தாக்கம் என்ன என்பதும் அறிய வேண்டியுள்ளது. பொதுவாக இந்துமதம் தான் காரணம் என்று ஆராய்ச்சியாளர்கள் தங்களது முடிவுகளைப் பெறும் போக்கு, இங்குத் திணறத்தான் செய்கிறது. ஏனெனில், இஸ்லாம் மற்றும் கிருத்துவ மதங்கள் இவற்றிலுள்ள பங்கு என்ன என்பதை அவர்கள் எடுத்துக் காட்டுவதில்லை. செக்யூலரிஸ, கம்யூனிஸ மற்றும் அதிகாரத்துவ சித்தாந்தளில் உள்ள எழுத்தாளர்கள், அர்ராய்ச்சியாளர்கள் மற்றும் சமூகவியல் அறிவுஜீவுகளும், அவற்றின் இறையியல் தாக்கத்தை அறிந்தும், அறியாதவர்கள் போன்று நடித்துக் கொண்டிருக்கின்றனர். “இறைவனுடைய தேசத்திலேயே” பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று செய்திகள் வெளியிடும் போது, அவர்கள் உண்மைகளை வெளியிட்டு, அக்குற்றங்களை எப்படி குறைப்பது என்று தீர்வுகளைக் காண்பதற்கும் தயங்குகின்றனர். மாறாக குற்றங்களில் சம்பந்தப் பட்டுள்ளவர்கள், தங்களது அரசியல், பணம் மற்றும் அதிகாரக் காரணிகளைப் பயன்படுத்தித் தப்பித்துக் கொள்ளப் பார்க்கின்றனர்.

 

© வேதபிரகாஷ்

04-08-2014

[1] http://archives.deccanchronicle.com/130531/news-current-affairs/article/sexual-abuse-rise-kerala-report

[2] http://economictimes.indiatimes.com/opinion/swaminathan-s-a-aiyar/keralas-riches-rapes-one-of-indias-most-progressive-states-but-crime-data-shockingly-bad/articleshow/20657434.cms

[3] http://www.keralapolice.org/newsite/pdfs/study_report_women/crime_against_women_report.pdf

[4] http://southasia.oneworld.net/news/india-women-unsafe-in-gods-own-country#.U917xvmSwfM

கேரள சிறுமியர்-சிறுமிகள் கடத்தல் ஒரு மனிதத்தன்மையற்ற வியாபாரமே – அவர்கள் வாங்கி விற்கப்படுவது, அனாதை இல்லங்களில் வைக்கப்படுவது பணத்தைப் பெறுவதற்காகவே, சேவை போர்வையில் நடக்கும் வியாபாரம் (3)

ஓகஸ்ட்3, 2014

கேரள சிறுமியர்-சிறுமிகள் கடத்தல் ஒரு மனிதத்தன்மையற்ற வியாபாரமே – அவர்கள் வாங்கி விற்கப்படுவது, அனாதை இல்லங்களில் வைக்கப்படுவது பணத்தைப் பெறுவதற்காகவே, சேவை போர்வையில் நடக்கும் வியாபாரம் (3)

கேரளா செக்ஸ் லாட்டரி வியாபாரி 20 மாணவிகள் 2011

கேரளா செக்ஸ் லாட்டரி வியாபாரி 20 மாணவிகள் 2011

செக்ஸ்-டூரிஸம் கேரளாவில் அதிகமாக இருப்பது ஏன்?: ஆலப்புழாவில் படகுவீடுகளில் செக்ஸ்-டூரிஸம் கனஜோராக நடந்து கொண்டிருக்கிறது. இவ்விசயத்தில் ஆலப்புழா கோவாவையும் மிஞ்சி விட்டதாம்[1]. அந்நிய நாட்டு, வெளியூர் மற்றும் உள்ளூர் வாசிகள் புதியதாக தேடி வரும் இடமாக உள்ளது. வயது எவ்வளவு குறைவாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு பணம் அதிகமாகக் கிடைக்கிறது[2]. அதாவவது விற்பதற்கும், விபச்சாரத்திற்கு ஈடுபடுத்தப் படுவதற்கும் தோதுவாக உள்ளது. சிறிய வயது, புதியது என்றால் நோய் எல்லாம் வராது என்ற ஜாக்கிரதையான எண்ணமும் சேர்ந்துள்ளதாம். இது சிறுமியர்-சிறுவர்களின் தேவையை எடுத்துக் காட்டுகிறது. 2006லேயே இந்த கதி என்றால், 20124ல் எப்படியிருக்கிறது என்பதை கவனிக்கலாம். சில ஊடகங்கள் இவ்விசயத்தில் முதலில் “செக்ஸ்-மோசடி கண்டு பிடிக்கப்பட்டது” [Sex racket busted, 150 children rescuedfrom Kerala] என்றுதான் தலைப்பிட்டு செய்தி வெளியிட்டார்கள்[3]. அதுமட்டுமல்லாது, கேரளாவில் கடந்த 25 வருடங்களாக செக்ஸ் குற்றங்கள், விபச்சாரங்கள், சிறுமிகளை ஷேக்குகளுக்கு விற்பது, பிடோபைல் (pedophile)/ குழந்தை செக்ஸ் விவகாரங்கள், கற்பழிப்புகள் என்று பாலியல் வன்மங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன.

Sex tourism and Muslim orphanages

Sex tourism and Muslim orphanages

யதிம்கானா பெயரில் நடத்துப்படும் “முஸ்லிம் அனாதை இல்லங்கள்”: கேரளா வீடுகளே, சிறுமிகளுக்கு, இளம் பெண்களுக்கு ஆதரவாக இல்லை என்ற நிலை வெளிப்படையாகி விட்டது[4]. கேரளவில் உள்ள அனாதை இல்லங்களில் சிறுமிகள், இளம்பெண்கள் (16-19 வயது) பாலியல் வன்மங்களுக்கு உட்படுத்தப் பட்டுள்ளார்கள் என்று கேரள மனித உரிமைகள் கமிஷனே எடுத்துக் காட்டியுள்ளது[5]. ஆனால், பெரிய அரசியல்வாதிகள், மதத்தலைவர்கள், குறிப்பாக இஸ்லாம்-கிருத்துவர்கள் சம்பந்தப் பட்டிருக்கும் போது, எல்லாமே அமுக்கப் பட்டு விடுகின்றன. ஊடகங்களில் வந்த சிறு செய்திகளோடு நின்று விடுகின்றன. புகார்கள் கொடுத்தாலும், சுத்தப்படுத்தப் பட்டு விடுகின்றன. செப்டம்பர் 2012ல் பெரலசேரி யதீம்கானா [Peralassery Yatheemkhana (orphanage)] அதாவது அனாதை இல்லத்தில் சிறுமிகள் செக்ஸ் ரீதியில் பயன்படுத்தப் பட்டதால், இரண்டு பேர் – ஏ. பி. அஹமது காரியதரிசி மற்றும் குன்ஹாமீனா, வார்டன் – கைது செய்யப்பட்டனர்[6]. அடுத்த ஆண்டில், இதே மாதிரி முஸ்லிம் இல்லத்திலிருந்து, ஒரு சிறுமி அரேபிய ஷேக்கிற்கு விற்கப்பட்டாள்[7]. கேரளாவைப் பொறுத்த வரைக்கும், இப்பிரச்சினை இப்பொழுது அரசியலாக்கப் பட்டு விட்டது. முஸ்லிம் இயக்கங்கள், முஸ்லிஜ்ம் அனாதை இல்லங்களின் மீது எடுக்கப் படும் நடவடிக்கைகளுக்குப் பின், “ஹிந்துத்வா” அஜென்டா இருப்பதாகக் குற்றஞ்சாட்டியுள்ளனர்[8].

Kerala orphanage sex May.2014

Kerala orphanage sex May.2014

அரசியல் தொடர்புகளால் சீரழியும் கேரள சமூகம்: கோழிக்கோடில் உள்ள முக்கம் முஸ்லிம் அனாதை இல்லம் [Mukkam Muslim Orphanage in Kozhikode] டிரஸ்டில் கீழ் நிர்வகிக்கப் படுகிறது. அதன் சேர்மேன் சையது ஹைதர் அலி  தாங்கல் [Syed Hyederali Shihab Thangal] என்ற இந்திய முஸ்லிம் லீக்கின் தலைவர் ஆவார். அக்கட்சி ஆளும் காங்கிரஸ் கட்சி கூட்டணியில் உள்ளது. சபீக் சேய்க் என்பவன் முக்கம் முஸ்லிம் அனாதை இல்லத்தில் சமையல்சாரனாக வேலை செய்து வருகிறன். இவனும் இந்த கடத்தலில் சம்பந்தப் பட்டிருக்கிறான். ஆனால், இவ்விசயத்தில் இந்த அனாதை இல்லத்தைச் சேர்ந்த யாரும் கைது செய்யப் படவில்லை, இதைப் பற்றி யாரும் மூச்சுக்கூட விடவில்லை[9]. ஐ.யு.எம்.எல் இதைப் பற்றிய எல்லா விசாரணைகளையும் கைவிட வேண்டும் என்று வெளிப்படையாகக் கேட்டுக் கொண்டுள்ளது[10]. இ.டி.அஹமது என்ற அமைச்சர், அந்தந்த மாநில அதிகாரிகள், பெற்றோர்கள் மற்ற யாருமே இதைப் பற்றி புகார் கொடுக்கவில்லை, சட்டமீறல் என்று கேரள அரசுக்கு அறிவிக்கவில்லை, அதனால், இதை “குழந்தைக் கடத்தல்” என்றே குறிப்பிடக் கூடாது என்று வாதிட்டார்[11]. ஏற்கெனவே “ஐஸ் கிரீம் பார்லர் செக்ஸ்” வழக்கு போன்றவை எல்லாம் அரசியல்வாதிகளில் சம்பந்தத்தினாலும், அவர்களது அதிகாரங்களினாலும் அமுக்கப் பட்டன. இப்பொழுதும், சூரிய ஒளி பெனல் விவகாரத்தில் பல நடிகைகள், செக்ஸ், கொலை என்றெல்லாம் இருந்தாலும், ஆமை போலத்தாம் வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. இனி இவ்வழக்கும் முடிக்கப் பட்டுவிடும் என்றுதான் தெரிகிறது.

அரசை ஏமாற்றி நிதி பெற்றது - முஸ்லிம் அனாதை இல்லம்

அரசை ஏமாற்றி நிதி பெற்றது – முஸ்லிம் அனாதை இல்லம்

அந்நிய செலாவணி சட்ட சரத்துகளை மீறி பணம் பெற்றது: முஸ்லிம் அனாதை இல்லங்கள் ஆவணங்களில் பல விசயங்களை மறைத்து, அரசு நிதியுதவி பெற்றுள்ளன / பெற்று வருகின்றன[12]. அந்நிய செலாவணி சட்டப் பிரிவுகளையும் மீறி [ FC-6 return to the FCRA (Foreign Contribution Regulation Act) Wing of Foreigners Division under the Ministry of Home Affairs], ஏமாற்றி வெளிநாட்டுப் பணத்தையும் பெற்றுள்ளன[13]. அவ்வாறு பெற்ற பண விவரங்களையும் மறைத்துள்ளன[14]. மேலுன் வேடிக்கை என்னவென்றால், 2007 மற்றும் 2008 ஆண்டுகளுக்கான குழந்தைகள் நலத்துறை சார்பில் சிறந்த சாதனை படைத்தவர்களுக்கான விருதை இந்த அனாதை இல்லத்திற்குக் கொடுக்கப் பட்டுள்ளது தான். சோனியா மற்றும் ரேணுகா சௌத்ரி அம்மையார் இந்த விருதை “முக்கம் முஸ்லிம் அனாதை இல்லத்திற்கு” கொடுத்திருக்கிறார்கள். ரேணுகா சௌத்ரி பப் விவகாரத்தில் மிகவும் புரட்சிகரமான கருத்துகளைத் தெரிவித்துள்ளார் என்பதை நினைவு கூறவேண்டும். எனவே, இப்படி பட்ட குற்றங்களில் ஈடுபட்ட அனாதை இல்லங்களுக்கு பரிசு-பட்டங்கள் கொடுப்பது, அத்தகைய குற்றங்களை ஊக்குவிப்பதாகும் எனலாம். மேலும் அது செக்ஸ்-குற்றங்களை செய்த பாவத்தை மெழுகி சுத்தப்படுத்தும் செயலாகவும் ஆகிவியட்டது. அது மட்டுமல்லாது, இத்தகைய காரியங்கள் சட்டம் தனதிச்சையாக செயல்படும் போக்கையும் பாதிக்கும். ஆக எதிர்பார்த்த படியே, இவ்வழக்கும் சென்று கொண்டிருக்கிறது, கூடிய சிக்கிரத்தில் ஆதாரங்கள் இல்லை என்று வழக்கு முடிக்கப் படும். மக்களும் மறந்து விடுவர்.

கேரளா அனாதை இல்லத்திற்கு பரிசு-பாராட்டு

கேரளா அனாதை இல்லத்திற்கு பரிசு-பாராட்டு

33,000 சிறுவர்சிறுமியர் காணாமல் போனால் அவர்கள் என்னவாகி இருப்பர்?: ஆண்டு தோரும் சுமார் 33,000 சிறுவர்-சிறுமியர் காணாமல் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அப்படியென்றால், அவர்கள் நிலை என்ன? பத்து-பதினைந்து ஆண்டுகளில் அவர்கள் 25-30 என்ற வயதுகளில் இருப்பர். இளம் பெண்கள் என்னவாக இருப்பர் என்று யோசித்தால், உள்ளம் பதறுகிறது. ஆனால், வாலிபர்கள் தீவிரவாதிகளாக மாறியிருப்பர் என்று தெரிகிறது. ஏற்கெனவே, “இந்திய முஜாஹித்தீன்” இம்மண்ணில் தோற்றுவிக்கப் பட்ட தீவிரவாத கும்பல் (Home grown terrorist group) என்று அழைக்கப் படுகிறது. அதாவது நாமே அவர்களை சீராட்டி-பாராட்டி வளர்த்து விட்டிருக்கிறோம் என்ற ரீதியில் பேசப் படுகிறது. அதாவது மறைமுகமாக அத்தீவிரவாதம், ஜிஹாதித்தனம், குரூர குண்டு வெடிப்பு கோரக் காரியங்கள் எல்லாம் நியாயப் படுத்தப் படுகின்றன. ஆக, இவர்கள் எல்லோருமே, ஒருவருக்கொருவர் உபயோகமாக இருந்து கொண்டு[15], தங்களது சித்தாந்தகளுடன் செயல் பட்டால், இந்தியாவில் நிச்சயமாக பல குற்றங்கள் பெருகும், தீவிரவாத செயல்களும் நடக்கும்.

கேரளா கடத்தல் அனாதை இல்லத்திற்கு பரிசு-பாராட்டு.

கேரளா கடத்தல் அனாதை இல்லத்திற்கு பரிசு-பாராட்டு.

தேசவிரோதம், வன்முறை சித்தாந்தம், தீவிரவாதம் வளர்க்கப் படும் விதம்: மாவோயிஸ கும்பல்களில் இத்தகைய போக்கு காணப்படுகிறது. ஜிஹாத் தத்துவத்திலும் அத்தகைய நிலை காணப்படுகிறது. அதாவது, ஆண்-பெண் தீவிரவாதிகள் தங்களது மனம்-உடல் ரீதியிலாக உள்ள தேவைகளை அவர்களே சேர்ந்துத் தீர்த்துக் கொள்வர். வாழ்க்கையில் தாம் எல்லாவற்றையும் அனுபவித்தாகி விட்டது. இனி கொள்கைக்காக உயிரையும் தியாகம் செய்வதில் பேரானந்தம் ஏற்படும் என்றெல்லாம் நினைப்பு ஏற்படும் வகையில் அவர்கள் வளர்க்கப் படுவர். ஜூலை.28, 2014 அன்று ஜொனாதன் போல்ட் என்ற ஸ்விட்சர்லாந்து நாட்டு இளைஞன் ரகசியமாக ஒரு நக்சலைட் ககூட்டத்தில் பங்கு கொண்டுள்ள விசயம் வெளி வந்துள்ளது[16]. அரேபிய சேக்குகள் அடிக்கடி வந்து போவது, மசூதி கட்டுதல், துவக்க விழா போன்றவற்றில் பங்கு கொள்ளுதல், ஆனால், அதனுடன் மற்ற விவகாரங்களும் இருப்பது, தெரிந்த விசயமாக இருக்கிறது. தில்லி, மும்பை, பெங்களூரு முதலிய நகரங்களில் கற்பழிப்பு என்றால் தெருக்களில் வந்து கலாட்டா செய்கிறார்கள், 24×7 ரீதியில் டிவி-செனல்கள் அவற்றையே திரும்ப-திரும்ப காட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், கேரளா செக்ஸ் விசயங்கள் வரும் போது, அப்படியே அமுக்கப் படுகின்றன. இதன் பின்னணி என்ன என்று ஆராய வேண்டியுள்ளது.

© வேதபிரகாஷ்

03-08-2014

[1] A study titled ‘Trafficking in Women and Children in India’ was conducted in 2006 by the New Delhi based Institute of Social Sciences and sponsored by the National Human Rights Commission, revealed that Alappuzha reported the highest number of child sex incidents; so much so that it has toppled Goa.

[2]  As per trend, the youngest of the lot are sold at very high prices since they are considered to be ‘disease-free’.

http://news.oneindia.in/2013/06/28/kerala-setting-stage-for-sex-tourism-1247445.html

[3]http://www.ibnlive.in.com/news/sex-racket-busted-150-children-rescued-from-kerala/475617-3-233.html

[4] http://www.ndtv.com/article/south/kerala-s-unsafe-homes-increasing-rapes-of-minors-416611

[5] http://timesofindia.indiatimes.com/city/thiruvananthapuram/87-illegal-orphanages-in-Kerala-Report/articleshow/30105032.cms

[6] http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-kerala/sexual-abuse-of-girls-at-orphanage-two-arrested/article3937545.ece

[7] http://news.oneindia.in/2013/08/27/minor-girl-forced-to-marry-arab-sexually-abused-and-abandoned-1292734.html

[8] http://indianexpress.com/article/india/india-others/row-over-orphanages-turns-political-iuml-slams-chandy-govt/

[9] http://www.telegraphindia.com/1140608/jsp/frontpage/story_18490435.jsp#.U9uaR_mSwfM

[10] The last arrest, that of 30-year-old Shafeek Sheikh of Persia village in Godda, was carried out yesterday. Police say he was in the train with the children but had fled the scene on seeing them. He has been working in the Mukkam orphanage as a cook since the last three years and had helped bring at least a dozen children to Kerala in the past. His wife Rubic Hatoom is a cleaner in the orphanage. However, even the crime branch team is yet to take any of the orphanage officials into custody for questioning. The reasons are obvious. The IUML is upset at the manner in which the investigation was proceeding and wanted the state to drop the trafficking angle. Party MP E.T. Mohammed Basheer said neither the officials of the states to which the children belong, nor their parents, had complained to the Kerala government of any illegality and hence it could not be termed child trafficking.

[11] http Party MP E.T. Mohammed Basheer said neither the officials of the states to which the children belong, nor their parents, had complained to the Kerala government of any illegality and hence it could not be termed child trafficking. ://www.telegraphindia.com/1140608/jsp/frontpage/story_18490435.jsp#.U9uaR_mSwfM

[12] http://www.newindianexpress.com/states/kerala/Orphanages-Fudge-Data-to-Get-Govt-Grant/2014/06/11/article2274206.ece

[13] http://www.newindianexpress.com/states/kerala/Orphanages-Flout-Govts-Funding-Rules-to-Get-Grants/2014/06/11/article2273971.ece

[14] http://www.newindianexpress.com/states/kerala/Orphanages-in-Kerala-Hide-Data-on-Foreign-Aid-Obtain-Government-Grant/2014/06/11/article2273722.ece

[15] மாவோயிஸ கும்பல்களில் இத்தகைய போக்கு காணப்படுகிறது. ஜிஹாத் தத்துவத்திலும் அத்தகைய நிலை காணப்படுகிறது.

[16] Police said Jonathan Bold, who arrived in Kerala on a tourist visa, attended a meeting organised in memory of Sinoj, a Maoist activist from Kerala who was killed while making country bombs in Andhra-Karnataka border last month. The meeting was organised by a group having Maoists and Naxalite sympathies. http://news.oneindia.in/india/swiss-national-held-for-suspected-maoist-link-1492055.html

கேரள சிறுமியர்-சிறுமிகள் கடத்தல் ஒரு மனிதத்தன்மையற்ற வியாபாரமே – அவர்கள் வாங்கி விற்கப்படுவது, அனாதை இல்லங்களில் வைக்கப்படுவது பணத்தைப் பெறுவதற்காகவே, சேவை போர்வையில் நடக்கும் வியாபாரம் (1)

ஓகஸ்ட்3, 2014

கேரள சிறுமியர்-சிறுமிகள் கடத்தல் ஒரு மனிதத்தன்மையற்ற வியாபாரமே – அவர்கள் வாங்கி விற்கப்படுவது, அனாதை இல்லங்களில் வைக்கப்படுவது பணத்தைப் பெறுவதற்காகவே, சேவை போர்வையில் நடக்கும் வியாபாரம் (1)

கைது செய்யப் பட்ட 8 பேரும் முஸ்லிம்கள் மே 26.2014

கைது செய்யப் பட்ட 8 பேரும் முஸ்லிம்கள் மே 26.2014

மே.25-26, 2014- பாலக்காடுவெறும் சிறுவர்சிறுமியர் கொண்டுவரும் / கடத்தப் படும் செயல்தான்: கோஸ் முஹம்மது மற்றும் ஜஹீர் [Ghosh Muhammed and Jahir of West Bengal] என்ற இருவர் மீது 120 குழந்தைகளை மேற்கு வங்காளத்திலிருந்து, பாலக்காடு ரெயில் நிலையத்திற்கு கொண்டு வந்தபோது மே 24-25, 2014 தேதிகளில் கடத்தி வந்த குற்றத்திற்காக மற்ற அறுவரையும் சேர்த்து கைது செய்யப் பட்டனர்[1].

  1. அப்துல்கரி அன்சாரி (32) – பீஹார்
  2. முஹம்மது ஆலம்கீர் (24)- பீஹார்
  3. மௌலானா பௌஜுலுல்லா (26) – பீஹார்.
  4. முஹம்மது பிரிஷ் ஆலம் (31) – ஜார்கென்ட்
  5. கே. மன்சூர் (42) – மேற்கு வங்காளம்.
  6. வி. பி. ஜாஹிர் (56) – மேற்கு வங்காளம்.
  7. எம். பாக்கர் (49) – மேற்கு வங்காளம்.
  8. பெயர் குறிப்பிடப் படவில்லை.

கைது செய்யப் பட்டபோது, அவர்கள் கவலைப் பட்டதாகவே தெரியவில்லை. ஏதோ ஒரு சாதாரணமான தொழிலை செய்வது போல பேசிக் கொண்டிருந்தார்கள். போட்டோ எடுத்தபோதும் அப்படியே காட்டிக் கொண்டார்கள். மற்றவர்கள் நினைப்பது பொல எந்த உணர்வையும் காட்டவில்லை. மொத்தம் 600ற்கும் மேற்பட்ட சிறுவர்-சிறுமிகள் கடத்தப் பட்டு வந்திறங்கப் பட்டனர். கேரளாவில் உள்ள அனாதை ஆஸ்ரமங்களில் (orphanage) சேர்க்கப்படுவதற்கு கொண்டு வரப்பட்டதாகச் சொல்லப்பட்டது. இதற்குள் இதைப் பற்றிய செய்திகளும் குறைந்தன.

Child-trafficking-kerala

Child-trafficking-kerala

ஜூலை.4, 2014- ஜாமீனில் விடுவிக்கப் பட்ட குற்றவாளிகள்: ஜூலை 4, 2014 அன்று இவ்விருவர் – கோஸ் முஹம்மது மற்றும் ஜஹீர் – பெயிலில் வெளிவர கேரள உயர்நீதி மன்றம் அனுமதி அளித்தது[2]. இது வெறும் சிறுவர்-சிறுமியர் கொண்டுவரும் / கடத்தப் படும் செயல்தான் (human trafficking), வேறு விவகாரம் எதுவும் தென்படவில்லை என்றும் அறிவிக்கப் பட்டது. கேரளாவில் இத்தகைய விவகாரங்களில் ஏற்கெனவே முன்மாதிரியாக (precedance) பல சட்டமீறல்கள் ஏற்பட்டுள்ளன. அனாதை சிறுமிய பலவித பாலியல் வன்மங்களுக்கு உட்படுத்தப் பட்டுள்ளனர். ஆனால், நீதிமன்றம் அத்தகைய முன்மாதிரிகளை (established law), ஏற்படுத்தப் பட்டுள்ள சட்டநிலைகளை (precedence of law) மற்றும் பரவலாக நடக்கும் பாலியல் குற்றங்கள் (widespread sexual crimes) முதலியவற்றைக் கண்டுகொள்ளவில்லை என்ற ரீதியில் அவர்கள் பிணையில் விடுவிக்கப் பட்டனர். இருப்பினும், இவ்விசயத்தில் இவ்வாறான “நற்சாட்சி பத்திரம்” கொடுப்பது போல போலீஸார் அறிக்கைக் கொடுத்துள்ளது வியப்பாக இருக்கிறது. முதலில் கடுமையாக விமர்சனம் செய்து வந்த இயக்கங்கள், இதைப் பற்றி எதுவும் பேசவில்லை. ஒரே மாதத்தில் அவ்வாறான மாற்றம் எப்படி ஏற்பட்டது என்று தெரியவில்லை. குழந்தை கடத்தல் கேரளாவில் சாதாரண விசயம் போலாகி விட்டது.

Kerala child traffiking May 2014

Kerala child traffiking May 2014

டிக்கெட் இல்லாமல் கடத்திவரப்பட்ட சிறுமியர்சிறுமிகள்: பாட்னாவிலிருந்து எர்ணாகுளம் செல்லும் ரயிலில் சிறுவர், சிறுமிகள் கடத்திவரப்படுவதாக பாலக்காடு ரயில்வே பாதுகாப்புப் படை போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. வழக்கம் போல  சாதாரணமாக எடுத்துக் கொண்ட போலீஸ், ரயிலில்  சோதனை நடத்தியபோது அதிர்ச்சி அடைந்தனர். ஆடு, மாடுகளை போல 2 பெட்டிகளிலும் 450க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமிகள்.  அனைவரும் 15 வயதுக்கு உட்பட்டவர்கள்; மூன்று கோச்சுகளில் 466 பேர் இருந்தனர்[3]. முகத்தில் களைப்பு; பேச்சே இல்லை; மொழியும் புரியவில்லை. அவர்களை அழைத்து வந்த ஜார்கண்ட் மாநில நபர்கள்  2 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். சிறுவர், சிறுமிகளை ஜார்கண்ட். பீகார் மற்றும் மேற்கு வங்கத்திலிருந்து அழைத்து வருகிறோம்; அனாதைகளான அவர்களை கேரளாவில் மலப்புரம், கோழிக்கோடு ஆகிய இடங்களிலுள்ள அனாதை இல்லங்களுக்கு அழைத்துச் செல்வதாக கூறினர். ஆனால் குழந்தைகள் தொடர்பான எந்த ஆவணங்களும் அவர்களிடம் இல்லை. பெரும்பாலானோருக்கு டிக்கெட்டும் எடுக்கவில்லை. இதையடுத்து ரயில்வே போலீசார் அனைவரையும் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். பின்னர் இது குறித்து பாலக்காட்டிலுள்ள அரசு குழந்தைகள் நல அமைப்பினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

குழந்தை வியாபாரம் கேரளா

குழந்தை வியாபாரம் கேரளா

இது வெறும் மனித கடத்தல் அல்ல[4]:  அம்மாநில சிறுபான்மை நல கமிஷன் தலைவர் வீரான் குட்டி, ”இது, மனித கடத்தல் அல்ல; ஆதரவற்றோர் விடுதியில், தரமான உணவு, தங்குமிடம், நல்ல கல்வி போதிக்கப்படுகிறது,” எனக் கூறினார். ”இது, மனித கடத்தல் அல்ல” என்று சொல்லும் போது, ஏதோ சட்டமீறல்கள் என்றெல்லாம் சொல்லுவார் என்று பார்த்தால், அச்செயலைப் பாராட்டிப் பேசியுள்ளது வேடிக்கையாக இருந்தது.  இங்கு “நல்ல கல்வி” என்பது இஸ்லாமிய மதக்கல்வி என்று பொருள்படும். இச்சம்பவம், கேரள மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எப்படி தூரத்திலிருக்கும் வட மாநிலங்களிலிருந்து, தெற்குக் கோடியில் உள்ள கேரளாவுக்கு இப்படி வயதுக்கு வந்த 16-18 வயதுகளில் இருக்கும் இளம் பெண்கள் உட்பட கொண்டு வரப்படுவது சட்டமீறல் இல்லை என்று அவர் நினைத்துப் பார்த்ததாகத் தெரியவில்லை.

Mukkam Muslim Orphanage in Kozhikode where the children were being taken to

Mukkam Muslim Orphanage in Kozhikode where the children were being taken to

பொதுநல வழக்கும், நீதிமன்ற ஆணையும்: குழந்தைகள் கடத்தல் சம்பவம் தொடர்பாக, பொது அமைப்பு ஒன்று, கொச்சி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இதற்கு, கேரள அரசு, கோர்ட்டில் விளக்கம் அளித்தது. தலைமை நீதிபதி மஞ்சுளா செல்லூர், நீதிபதி ராமசந்திர மேனன் ஆகியோர், அம்மாநில அரசுக்கு சரமாரி கேள்வி எழுப்பியுள்ளனர். கேரள மாநிலத்தில், ஆதரவற்றோர் இல்லத்திற்கு குழந்தைகள் அழைத்து வந்ததாக கூறப்படும் நிலையில்,

  1. அக்குழந்தைகளுக்கு தாய், தந்தை உள்ள நிலையில், எப்படி ஆதரவற்றவர்களாக கூற முடியும்.
  2. படிக்க வைப்பதற்காக, எதற்காக, ஆதரவற்றோர் விடுதிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
  3. இக்குழந்தைகளை ரயிலில் அழைத்து வருவதற்கு டிக்கெட் தேவையில்லையா?
  4. விடுமுறையை கொண்டாட, சொந்த ஊருக்கு சென்ற குழந்தைகளுடன் சேர்ந்து, பிற குழந்தைகள் வந்திருப்பதாக, கேரள அரசு கூறும் கருத்தை ஏற்கமுடியாது.

இவ்வாறு, நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், பீகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் ஆகிய, மாநிலங்களைச் சேர்ந்த, ரயில்வே நிர்வாகம் மற்றும் அரசு அதிகாரிகள் வரும், 19ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும். மே 24.2014ல், குழந்தைகள் யாருடைய பாதுகாப்பில் இருந்தனர்; குழந்தைகள் நல பாதுகாப்பு அமைப்பினர் நடத்திய ஆய்வு அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என, தலைமை நீதிபதி மஞ்சுளா செல்லூர், நீதிபதி ராமசந்திரன் மேனன் ஆகியோர், உத்தரவிட்டுள்ளனர். ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து, கடத்தி வரப்பட்ட, 123 குழந்தைகளை, ஜூன் 9ம் தேதி, திருப்பி அனுப்ப, கேரள அரசு முடிவு செய்தது. எவ்வாறு அவர்கள் கொண்டு வரப்பட்டனர் என்பதும் ஆராயப்பட வேண்டும் என்றனர்[5].

Kerala child traffiking May 2014.Malappuram nexus

Kerala child traffiking May 2014.Malappuram nexus

மௌவ்லிகள், மதரஸாக்களின் பங்கு: தேசிய புலனாய்வு ஏஜென்சி (National Investigation Agency) ஜூலை 26, 2014 அன்று தனது விசாரணையை மேற்கொண்டது. 58 முஸ்லிம் குழந்தைகள் மால்டா என்ற இடத்திலிருந்து வேட்டத்தூர், மல்லப்புரத்தில் உள்ள அன்வர் ஹூடா அனதை இல்லத்திற்கு [Anwarul Huda Orphanage at Vettathur in Malappuram] கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிகிறது. முக்கம் முஸ்லிம் அனாதை இல்லம் [ Mukkam Muslim Orphanage] என்ற இன்னொன்றும் இதில் உள்ளது. ஏழைக் குழந்தைகளுக்கு படிப்பு சொல்லிக் கொடுக்கிறோம் என்றெல்லாம் சொல்லி மௌல்விகள் ஏமாற்றி அனுப்பி வைத்ததாக தெரிகிறது[6]. மால்டாவிலிருந்து இதை ஆயும் குழு வேட்டத்தூருக்கு பார்வையிட வந்தபோது, சிறுவர்கள் மட்டுமல்லாது, சிறுமியர்களும் இருந்தது கண்டு திகைத்தது[7]. ஆனால் அக்குழுவின் திகைப்பிற்கு காரணம் என்ன என்று கூறப்படவில்லை. இது தவிர பிஹார், ஜார்கென்ட் மற்றும் மேற்கு வங்காளப் பகுதிகளினின்று இவ்வாறு சிறுவர்-சிறுமிகள் கொண்டு வரப்படுவது தெரிகிறது. ஆக இதில் மௌல்விகள் மற்றும் மதரஸாக்களின் பங்கு வெளிப்படுகிறது. ஜார்கென்டில் கொட்டா என்ற இடத்திலிருந்து மலப்புரத்திற்கு கடத்தி வந்த சிறார்கள் நிச்சயமாக பெற்றோர்கள் அனுமதி இல்லாமல் வந்திருக்கின்றனர். சஞ்சய் மிஸ்ரா என்ற சிறுவர்களின் உடரிமை பாதுகாப்பு கமிஷனின் உறுப்பினர், “இது நிச்சயமாக சிறார் கடத்தல் தான். பெற்றோர்களே விரும்பினாலும், அவர்களது மகன்-மகள்களை இவ்வாறு பலவந்தப் படுத்த முடியாது”, என்று எடுத்துக் காட்டினார். பெற்றோர்கள் இருக்கும் போது, அவர்கள் “அனாதைகள்” ஆக மாட்டார்கள்!

ஜூலை.12-13, 2014 – கேரள அரசின் வித்தியாசமான போக்கு: ஜூலை 12-13 2014 தேதிகளில் கொச்சியில் “மனித கடத்தல் – உண்மையும், பொய்யும்” என்ற தலைப்பில். இந்திய தேசிய மனித உரிமைகள் ஆணையம் (National Human Rights Commission) சார்பில் நடைப் பெற்ற கருத்தரங்கத்தில், கேரளாவுக்கு கொண்டு வரப்படும் குழந்தைகளுக்கு அடையாளமாக போலி ஆதார் அட்டைகளை பயன்படுத்தப்பட்டதாக எடுத்துக் ஶ்ரீஜித் என்ற துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் காட்டினார்[8]. இந்தியாவில் ஒரு வருடத்திற்கு சுமார் 33,000 சிறுவர்-சிறுமியர் காணாமல் போவதாக அறிவிக்கப்பட்டது. அதாவது, இப்படி ஆயிரக் கணக்கில் சிறுவர்-சிறுமிகளைக் கொண்டு வந்து விற்பனை செய்வது, வெறும் போலி அட்டைகள் பயன்படுத்தப் பட்டது தான் என்று முடித்து விட முடியுமா என்று ஆச்சரியமாக உள்ளது[9]. பிறகு குழந்தைகள், சிறுவர்-சிறுமியர், வயதுக்கு வந்தவர்கள் என்ற வித்தியாசமும் எடுத்துக் காட்டப்படவில்லை. ஏனெனில், கடத்தி வரப்பட்டவர்களில் பெரும்பாலோர் வயதுக்கு வந்த பெண்கள் மற்றும் 16-18 வயதுகளில் இருந்தனர் என்று குறிப்பிடத் தக்கது. தலைப்பே “மனித கடத்தல் – உண்மையும், பொய்யும்” என்றிருக்கும் போது, “மனித கடத்தல்” பொய் என்ற ரீதியில் பேசியவர்கள் அதனை சட்டரீதியாக நியாயப்படுத்துவது போன்றிருந்தது. ஆக, தலைப்பே குற்றம் புரிந்தவர்களுக்கு சாதகமான கருத்தை உருவாக்க  வேண்டி வலிந்து வைத்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. மேலிம் முக்கிய குற்றாஞ்சாட்டப் பட்டவர்கள் ஜூலை 4ல் ஜாமீனில் விடுவிக்கப் பட்டு, ஒரே வாரத்தில் இக்கருத்தரங்கம் நடத்தப் படுவதும், அத்தகைய திட்டமிட்ட செயலோ என்று எண்ணத்தோன்றுகிறது.

© வேதபிரகாஷ்

01-08-2014

[1] The arrested were identified as Abdulhari Ansari, 32, Mohammed Alamgheer, 24, and Moulana Fojoululla, 26, from Bihar, Muhammed Brish Aalam, 31, from Jharkhand, and K. Manzoor, 42, V.B. Jahir, 56, and M. Backer, 49, from West Bengal.

http://www.thehindu.com/news/national/kerala/trafficking-of-children-8-arrested-in-kerala/article6051228.ece

[2] http://timesofindia.indiatimes.com/city/kochi/HC-grants-bail-to-two-accused-of-child-trafficking/articleshow/37820229.cms

[3] http://www.telegraphindia.com/1140526/jsp/nation/story_18382416.jsp#.U9uRf_mSwfM

[4] http://www.dinamalar.com/news_detail.asp?id=993279

[5] http://www.kerala9.com/news-category/news/kerala-news/child-trafficking-in-kerala-high-level-team-from-jharkhand-reaches-kerala

[6] http://www.newindianexpress.com/nation/NIA-Begins-Probe-in-Bengal-on-Child-Trafficking-to-Kerala/2014/07/27/article2350648.ece

[7] A district child protection team from West Bengal, which visited Anwarul Huda orphanage, wasshocked to find that not only boys, but also girls had been taken to the orphanage.

[8] http://www.thehindu.com/news/cities/Kochi/children-trafficked-to-kerala-being-furnished-with-fake-ids/article6206102.ece

[9] http://eastcoastdaily.com/new/component/k2/item/14580-editorilal-blind-violation-of-juvenile-acts

கேரளாவில் நடந்துவரும் விபரீத பாலியல் வன்மங்கள், செக்ஸ்-குற்றங்கள், மறைக்கப்படும் செயல்பாடுகள்

ஜூலை31, 2014

கேரளாவில் நடந்துவரும் விபரீத பாலியல் வன்மங்கள், செக்ஸ்-குற்றங்கள், மறைக்கப்படும் செயல்பாடுகள்

Christian priest involved in rape Josephu, Kerala

Christian priest involved in rape Josephu, Kerala

கடவுளது நாட்டில் செக்ஸ்-வக்கிரங்கள்: கேரளாவை கடவுளது சொந்த நாடு (God’s own country) என்றெல்லாம் பெருமையாக சொல்லிக் கொள்வார்கள். படிப்பறிவில் அதிகமான விழுக்காடு உள்ள மாநிலமும் கேரளா தான் என்ற சிறப்பைப் பெற்றுள்ளது. ஆனால், விபரீதமான செக்ஸ் குற்றங்களில் ஈடுபட்டு வருவதும் கேரளக்காரர்கள் தாம் என்று நோக்கு போது திகைப்படச் செய்ய வைக்கிறது. குறிப்பாக கிருத்துவ போதகர்கள், பாஸ்டர்கள் முதலியோர் தொடர்ந்து அத்தகைய கற்பழிப்புகளில் ஈடுபட்டு வருவது அதிர்ச்சியாக உள்ளது. தில்லி, மும்பை மற்றும் பெங்களூரு கற்பழிப்பு விசயமாக தினம் தினம் செய்தி வந்துக் கொண்டிருக்கின்றன. தெருக்களில் வந்து மக்கள் போராடுவதாக ஊடகங்களில் காட்டிக் கொண்டிருக்கின்றார்கள், ஆனால், கேரளாவில் எப்படி அமைதியாக இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

கேரளா கிருத்துவ பாலியல் ஜூலை 2014

கேரளா கிருத்துவ பாலியல் ஜூலை 2014

கற்பழிப்பது டீ குடிப்பது போன்றா?[1]: மகன் தாயைக் கற்பழித்தான்[2]; தந்தை மகளைக் கற்பழித்தான்[3], அண்ணன் தங்கையைக் கற்பழித்தான் என்றெல்லாம் கற்பனைக்கே எட்டாத அளவில் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. நாங்கள் படித்தவர்கள், எல்லாம் தெரிந்தவர்கள், கம்யூனிஸ சித்தாந்தங்களில் ஊறித் திளைத்தவர்கள், செக்யுலரிஸப் பழங்கள் என்று பொதுவாக கேரளாக்காரர்கள் மார் தட்டி பேசுவர்கள். உரிமைகள் எனும் போது, ஆகாசத்திற்கும், பூமிக்கும் கூட குதிப்பார்கள். ஆனால், இப்பொழுது இத்தகைய கற்பழிப்புகள் பற்றி மூச்சுக்கூட விடாமல் இருப்பது ஆச்சரியம் தான். கிருத்துவர்கள் தொடர்ந்து சம்பந்தப் பட்டிருப்பதால், கேரள ஊடகங்கள் அவர்கள் கைகளில் இருப்பதால் உண்மைகள் அமுக்கப் படுகின்றன போலும். அபயா வழக்கையே அமுக்கிவிட பார்த்தவர்களுக்கு, இதெல்லாம் சாதாரணமான விசயமாக இருக்கலாம். ஆனால், எப்படி அத்தகைய வக்கிர மனங்களைக் கொண்டு தயாராகி இக்ருக்கிறர்கள் என்பது தான் முக்கியமான கேள்வி. பைபிள் மற்றும் குரான் முதலியவற்றில் அத்தகைய செக்ஸ்-வக்கிரங்கள் அனுமதிக்கப் படுகின்றன என்றால், எப்படி அவற்றை இந்நாட்டில் ஏற்றுக் கொள்ள முடியும்?

ஜோமோன் கற்பழிப்பாளி தினமலர் போட்டோ

ஜோமோன் கற்பழிப்பாளி தினமலர் போட்டோ

கம்ப்யூட்டர் சொல்லித் தருகிறேன் என்று தொட்டுப் பழகிய பாதிரி: கேரள மாநிலம் இடுக்கியில் உள்ள கிறிஸ்தவ ஆலயம் ஒன்றில் ஜோமோன் (வயது 28) என்பவர் பாதிரியாராக பணியாற்றி வருகிறார். வழக்கம் போல ஆலயம் சார்பில் இலவச கம்ப்யூட்டர் பயிற்சி நிறுவனமும் நடத்தப்பட்டு வருகிறது. அங்கு ஏழை பெண்கள் இலவசமாக கம்ப்யூட்டர் பயிற்சி பெற்று வந்தனர். அப்பகுதியை சேர்ந்த 10–ம் வகுப்பு மாணவி ஒருவரும் அங்கு கம்ப்யூட்டர் பயிற்சி பெற்று வந்துள்ளார். ஜோமோன் பாதிரிக்கு அப்பெண்ணின் மீது கண் விழுந்தது. கம்ப்யூட்டர் சொல்லித் தருகிறேன் என்று நெருக்கமாக கைகளைப் பிடித்து சொல்லிக் கொடுத்திருக்கிறார். அந்த மாணவியிடம் பாதிரியார் இவ்விதமாக நெருக்கமாக பழகி உதவி செய்து வந்துள்ளார்[4]. பின்னர் சிறுமியை ஆசைவார்த்தைகளை கூறி, தனியாகக் கூட்டிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்[5]. அவளுக்கே தெரியாமல் அக்காட்சிகளை செல்போனில் பதிவு செய்தும் இருக்கிறார். நாளடைவில் அந்த பாதிரியாரின் தொந்தரவு அதிகமானது.

Pope with laptop

Pope with laptop

புருனோகிராபி பாதிரி மாட்டிக் கொண்டார்: செல்போனில் படம் பிடித்த காட்சிகளைக் காட்டி, இன்டர்நெட்டில் வெளியிட்டு விடுவதாக கூறி மாணவியை மிரட்டி மறுபடி-மறுபடிபாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். இத்தகைய செயல்பாடுகள், ஏற்கெனவே மாட்டிக் கொண்ட கிருத்துவ பாதிரிகளிடம் காணப்பட்டுள்ளன. இதனால், அம்மாணவி மனம்-உடல் ரீதியில் அதிகமாக பாதிக்கப்பட்டாள். வேறு வழியின்றி இந்நிலையில் பாதிக்கப்பட்ட மாணவி போலீசில் புகார் அழித்துள்ளார். மாணவி இடுக்கி போலீஸ் சூப்பிரண்டிடம் தனக்கு நேர்ந்த கொடுமைகள் எடுத்துக்கூறி கதறி அழுதார். மாணவியின் தாயார் புகார் கொடுத்தார் என்றும் உள்ளது[6]. அவரது உத்தரவின் பேரில் தனிப்பிரிவு போலீசார் இதுபற்றி விசாரணை நடத்தினர்.  மாணவிக்கு நடத்திய மருத்துவ பரிசோதனையில், அவர் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதியானது. மாணவி வாக்குமூலத்தின்படி, போலீசார், அந்த பாதிரியாரை கைது செய்தனர்[7]. அவரது செல்போனை பறிமுதல் செய்து சோதனை செய்த போது அதில் அந்த மாணவி மட்டுமல்லாமல் வேறு பல பெண்களின் ஆபாச படங்களும் பதிவு செய்யப்பட்டு இருந்தது தெரிய வந்தது. மேலும் அந்த பாதிரியாரின் கம்ப்யூட்டரிலும் ஏராளமான ஆபாச படங்களும் பதிவு செய்யப்பட்டு வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது[8]. இதனால் பாதிரியார் ஜோமோன் மேலும் பல பெண்களின் வாழ்க்கையும் சீரழித்து இருப்பது தெரிய வந்தது[9]. தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.  பாதிரியாருக்கு பெண்கள் அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அவருக்கு எதிராக போராட்டங்களிலும் இறங்கி உள்ளனர். இப்படி தமிழ் ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன.

ஹணி, பாலக்காடு, மனநலம் பெண் மே 2014

ஹணி, பாலக்காடு, மனநலம் பெண் மே 2014

மே 2014, பாலக்காடு[10]: கேரளவில் இத்தகைய கற்பழிப்புகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. உதாரணத்திற்கு இது கொடுக்கப்படுகிறது. பிரார்த்தனைக்கு வந்த, மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணை, பலாத்காரம் செய்ய முயன்ற, மதபோதகர் கைது செய்யப்பட்டார். கேரள மாநிலம், பாலக்காடு பறளி அருகே உள்ள, தியான மையத்தின் மதபோதகர் ஹணி, 35. இவர், திருச்சூர் மாவட்டம், மண்ணுத்தியைச் சேர்ந்தவர். கடந்த, பிப்., 3ம் தேதி, இவரிடம் பிரார்த்தனைக்கு வந்த, மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணை, பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். வெளியே சொன்னால், கொன்று விடுவதாகவும் மிரட்டியுள்ளார். இந்நிலையில், கடந்த வாரம், சமூக ஆர்வலர்களின் உதவியால், பாதிக்கப்பட்ட பெண், பாலக்காடு போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரின் அடிப் படையில், நேற்று, மதபோதகர் ஹணியை, போலீசார் கைது செய்தனர்[11].

church sex pedophile etc caricature

church sex pedophile etc caricature

விபரீத பாலியல் வன்மங்கள், செக்ஸ்-குற்றங்கள், மறைக்கப்படும் செயல்பாடுகள்: கிருத்துவத்திற்கும் செக்ஸ்-வன்மங்களுக்கு தொடர்பு உண்டா என்று பல பதிவுகளில் அலசப்பட்டுள்ளது[12]. அவற்றின் ஆராய்ச்சி தொகுப்பாக கீழ்காணும் விவரங்கள் கொடுக்கப் படுகின்றன:

  1. அனாதை ஆசிரமம் / சிறார் இல்லம் / பெண்கள் பாதுகாப்பு இல்லம் முதலியவற்றை நடத்துதல்.
  2. சிறுமிகள், இளம் பெண்கள், விதவைகள் முதலியோரை அவற்றில் சேர்த்துக் கொல்ளுதல்.
  3. அவர்களுக்கு தையல், கம்ப்யூட்டர், சொல்லிக் கொடுக்கிறேன் என்று நெருக்கம் ஏற்படுத்திக் கொள்ளுதல்.
  4. கிருத்துவ பாதிரி, பாஸ்டர், சாமி, ஐயர் போன்ற நிலையை உபயோகப் படுத்திக் கொண்டு மரியாதையைக் காப்பாற்றிக் கொள்ளுதல் – அதாவது பெண்களிடம் செக்ஸ் ரீதியில் ஏதாவது பேசி, நடந்து கொண்டு தப்பித்துக் கொள்ளுதல். பாதிரி / பாஸ்டர் தானே என்று அமைதியாக இருத்தல்.
  5. காமத்தைத் தீர்த்துக் கொள்ள உடன்பட தோதுவாக ஆசைகாட்டுதல், பணம்-உடைகள் கொடுப்பது, படிப்பதற்கு உதவி செய்வது, வேலை வாங்கிக் கொடுப்பது, போன்றவை செய்து அனுமதிக்க வைக்கும் அளவிற்கு தயார் செய்தல்.
  6. சமயம் பார்த்து, தனியாக அழைத்துச் சென்று காமத்தைப் பூர்த்தி செய்து கொள்ளல்.
  7. அப்பொழுதே செல்போன் மூலம் படங்கள் / வீடியோக்களை எடுத்து வைத்துக் கொள்வது.
  8. அடுத்த முறை அல்லது கொஞ்ச நாட்கள் கழித்து போட்டு காண்பித்து இச்சையைத் தூண்டுவது அல்லது மறுத்தால் மிரட்டிப் பார்ப்பது.
  9. அதை வைத்து மேன்மேலும் இச்சைக்கு உடன் பட வைத்தல்.
  10. ஒருவேளை தாய், தந்தை அல்லது மற்றவர்களுக்கு தெரிய வந்தாலோ அல்லது பெண்ணே எதிராக மாறினாலோ, மற்ரவர்களுக்குக் காட்டுவிடுவேன், இன்டெர்நெட்டில் போடுவேன் என்று மிரட்ட ஆரம்பித்தல்.
  11. அடங்கி போனால், அமுக்கி விடுவது, அமைதியாக இருப்பது, வைப்பது என்ற ரீதியில் சமரசம் செய்து கொள்ளுதல். பணம், பொருட்கள், உதவி செய்வது. கல்யாணம் செய்து கொள்கிறேன் என்றும் வாக்குக் கொடுத்தல், ஆனால், பிறகு கழட்டி விட்டு விடுதல்.
  12. இங்குதான், பிரச்சினை வெளிவரும் நிலை ஏற்படுகிறது.
Church, sex, pon, crimes

Church, sex, pon, crimes

இந்தியாவில் உள்ள கிருத்துவர்கள் இப்பிரச்சினையை தகுந்த முறையில் அணுகி, ஒழுக்கத்தை செயல்படுத்தி மாற்றிக் கொள்ள வேண்டும். மேன்மேலும் இத்தகைய வக்கிரங்கள் தொடர்ந்தால், அது பெரிய பிரச்சினையை உருவாக்கும். இஸ்லாமிய ஜிஹாதி தீவிரவாதத்திற்கும், கிருத்துவ சமூக சீர்ப்பழிப்பு காரியங்களுக்கும்வித்தியாசம் இல்லை. முன்னது உடனடியாக அழிவை, சாவை ஏற்படுத்துகிறது என்றால், பின்னது மெதுவாக, புற்றுநோய் போல தாக்கி அழித்து வருகிறது. இரண்டுமே அழிக்கப்பட வேண்டிவை தான்.

sex computer porn nuns

sex computer porn nuns

© வேதபிரகாஷ்

31-07-2014

[1] கம்யூனிஸ சித்தாந்தத்தில் கற்பழிப்பது என்பது டீ குடிப்பது போல என்று மேனிபெஸ்டோவில் சொல்லப்பட்டிருக்கிறது என்று ஒப்புக் கொள்கிறார்கள். இதைப் பற்ரிய எனது பதிவை பார்க்கவும்.

[2] http://indianexpress.com/article/india/crime/25-year-old-kerala-youth-held-for-raping-mother/

[3] http://m.ibnlive.com/news/kerala-13yearold-raped-by-father-brother-uncle/307489-8.html

[4] http://tamilnewsbbc.com/2014/07/28/10-%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4.html

[5] பிபிசி தமிழ் செய்தி, 10-ம் வகுப்பு மாணவியை கற்பழித்த பாதிரியார் கைது, பதிவு செய்த நாள்: 28 Jul 2014 3:29 pm; By : Narmadha Devi

[6] தினமலர், கிறிஸ்தவ மத போதகர் கைது, 29-07-2014

[7] http://www.dinamalar.com/news_detail.asp?id=1032845

[8] மாலை மலர், இடுக்கி அருகே 10-ம் வகுப்பு மாணவியை கற்பழித்த பாதிரியார் கைது, பதிவு செய்த நாள் : திங்கட்கிழமை, ஜூலை 28, 10:33 AM IST

[9] http://www.maalaimalar.com/2014/07/28103336/The-priest-who-raped-10th-grad.html

[10] தினமலர், பெண் பலாத்காரம்; மதபோதகர் கைது, மே.5, 2014.

[11] http://webmil.dinamalar.in/news_detail.asp?id=968573

[12] www.christianityindia.wordpress.com

கலிகால குரூர வக்கிர பெருசுகள் – சிறுமிகளை ஆபாசப்படம் போட்டு காட்டி பாலியல் பலாத்காரம் செய்த மூன்று கிழங்கள்!

ஓகஸ்ட்31, 2013

கலிகால குரூர வக்கிர பெருசுகள் – சிறுமிகளை ஆபாசப்படம் போட்டு காட்டி பாலியல் பலாத்காரம் செய்த மூன்று கிழங்கள்!

இவர்களுக்கு இந்த வேலை தேவையா?

இவர்களுக்கு இந்த வேலை தேவையா?

திடீரென கைகளில் பணத்துடன் வந்த மாணவிகள்: தூத்துக்குடி, தாளமுத்து நகரை சேர்ந்த 5 ஆம் வகுப்பு படிக்கும் ஆனந்தி மற்றும் அனுஷ்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஆகிய இரு மாணவிகள் திடீரென கைகளில் பணத்துடன் வந்துள்ளனர். சந்தேகப்பட்டு விசாரித்த போது, பக்கத்து தெருவில் சிமென்ட் கடையில் வேலை பார்க்கும் தாத்தா காசு கொடுத்ததாகவும், பின்னர் தன் தோழியையும் அழைத்து வந்தால் அதிக காசு தருவதாகவும் கூறினார். அதனால் போனோம், காசு கொடுத்தார் என்று கூறி இருக்கிறாள் சிறுமி.  மேலும் விசாரித்ததில் கிழங்கள் செய்த சில்மிஷங்களை அறிந்து கொண்டனர். அறியாத சிறுமிகளை அக்கிழங்கள் பலாத்காரம் செய்துள்ளது தெரிய வந்தது.

தங்களது பேத்திகளை இவர்கள் இவ்வாறு செய்வார்களா?

தங்களது பேத்திகளை இவர்கள் இவ்வாறு செய்வார்களா?

தூத்துக்குடியில் 2 சிறுமிகள் பாலியல் பலாத்காரம் 3 முதியவர்கள் கைது: இந்நிலையில், அந்த மூன்று முதியவர்கள் இரண்டு சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால், தூத்துக்குடி தாளமுத்துநகர் பகுதியில் சில முதியவர்கள் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த மூவர் மீது போலீஸாரில் புகார் கொடுக்கப்பட்டது. இதுகுறித்து சிறுமிகளின் பெற்றோர்களும் தாளமுத்துநகர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இதுகுறித்து விசாரணை நடத்திய போலீஸார் அதே பகுதியைச் சேர்ந்த மூக்கையா (65), பால்ராஜ் (66), சர்க்கரை (65) ஆகிய மூவரையும் வெள்ளிக்கிழமை பிடித்தனர். விசாரணையில் மூவரும் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது.

குற்றம் செய்து மரத்துப் போனவர்கள், திரும்ப குற்றம் செய்கிறார்கள்

குற்றம் செய்து மரத்துப் போனவர்கள், திரும்ப குற்றம் செய்கிறார்கள்

செல்போன் மற்றும் டி.வி.யில் ஆபாச படங்களை போட்டு காண்பித்து மாணவிகளை பாலியல் பலாத்காரம்: சமீர் நகரை சேர்ந்த சிமெண்ட் கடை ஊழியரான பால்ராஜ், வாட்ச்மேன் மூக்கையா, காமராஜ் நகரை சேர்ந்த மீனவர் சர்க்கரை ஆகிய 3 பேரை சமீர் நகர் போலீசார் விசாரித்துள்ளனர். அதில், தினமும் மாலையில் பள்ளி முடிந்து வரும் சிறுமிகளுக்கு மிட்டாய், திண் பண்டங்கள் கொடுத்து வீட்டிற்கு அழைத்து சென்று செல்போன் மற்றும் டி.வி.யில் ஆபாச படங்களை போட்டு காண்பித்து மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்ததை மூன்று முதியவர்களும் ஒப்புக் கொண்டனர். இத்தகைய வீடியோக்கள் தாராளமாக கிடைப்பதும், அவற்றை பிரதிகள் எடுத்து விற்பதையும் தடை செய்யாமல் இருந்தால், வக்கிர புத்தி கொண்டவர்களின் இத்தகைய ஈனத்தனமான செய்ல்கள் தொடரும். கலிகாலத்தின் விபரீதத்தால், கேடுகெட்ட பெருசுகளும், இத்தகைய முறைகளைப் பின்பற்றுவது கொண்டு திகிலாக இருக்கிறது.

வில்-ஹியூம்-heum-pedophile

வில்-ஹியூம்-heum-pedophile

மனைவி மற்றும் குழந்தைகளை கொலை செய்து சிறை சென்று வந்தவர்: இந்த 3 கொடூரர்களில் ஒருவரான மூக்கையா, 15 வருடங்களுக்கு முன்பு தன் மனைவி மற்றும் குழந்தைகளை கொலை செய்து சிறை சென்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது[1]. அதாவது, வழக்காமாக குற்றம் செய்து, மனம் இருகிபோன குரூரக் கொடுமைக்காரன் என்று தெரிகிறது. இதையெடுத்து, தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸாரிடம் இந்த வழக்கு ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் வழக்கப் பதிந்து குற்றம்சாட்டப்பட்ட மூவரையும் வெள்ளிக்கிழமை இரவு 30-08-2013 கைது செய்தனர்[2]. இத்தகைய கிழங்களை தூக்கில் போட்டலும் தப்பில்லை என்றுதான் தோன்றுகிறது. 60-65 வயதான இவர்களால், சமூகத்தில் இத்தகைய சீர்கேட்டை உண்டாக்கும் நிலையுள்ளது எனும் போது, அவர்கள் இல்லாமல் இருப்பதே நல்லது என்றுதான் தோன்றுகிறது.

குழந்தைக் கற்பழிப்பாளிகளை  விட்டு வைக்கக் கூடாதுஅறிவுரை யாருக்கு தேவை?: அப்பாவி சிறுமிகளை ஏமாற்றும் நிலையில் கிழங்கள் உள்ளன அல்லது அவர்களது குரூர சபலத்திற்கு சிறுமிகள் பலிகடா ஆனார்கள் என்பதும் கவலையாக இருக்கிறது. சிறுமிகளுக்கு பெற்றோர் தகுந்த முறையில் அறிவுரை சொல்லவேண்டிய அவசியமும் ஏற்படுகிறது. அவர்கள் நேராக பள்ளிக்குச் சென்றுத் திரும்பவேண்டும், அவ்வாறு செய்கிறார்களா என்று கண்காணிக்கப்பட வேண்டும் என்றும் நிலை ஏற்படுகிறது. மேலும், கிழங்களுக்கும் புத்தி சொல்லவேண்டியுள்ளது. தமிழகத்தில் பொதுவாக, நாத்திகம் முதலியவை போதித்து, கடவுள் நம்பிக்கை, பயம், நேர்மை போன்றவை மறைந்து விட்டதால், பெருசுகள் இவ்வாறு செய்யலாம் என்று துணிகின்றனர் எனலாம்.

© வேதபிரகாஷ்

31-08-2013