திவாரி திருமணம், திக்விஜய் கூடாதஉறவு, சிங்வி செக்ஸ், கேரளகாங்கிரசாரின் செக்ஸ் லீலைகள் – இப்படி சிக்கியுள்ள சோனியா காங்கிரஸ்!
காங்கிரஸ், செக்ஸ், பாரம்பரியம்: ஆரம்பத்திலிருந்தே காங்கிரசுக்கும் செக்ஸுக்கும் தேவையில்லாத தொடர்புகள் இருந்து தான் வந்தன. நேரு மாமா அதில் அதிகமாக மாட்டிக் கொண்டுள்ளார். காங்கிரஸ்காரர்கள் இதில் ஏன் அதிகமாக மாட்டிக் கொள்கிறார்கள் என்று 2009லேயே அலசப்பட்டது[1]. பதவி, பணம், வசதி முதலியவையெல்லாம் இருந்தால், ராஜா மட்டுமல்ல, இக்கால அரசியல்வாதிகளும், ஜாஜபோகம் அனுபவிக்க ஆசைப்படத்தான் செய்வார்கள். 2004-2014 பத்தாண்டு சோனியா ஆட்சி ஊழல் ஆட்சிக்கு மட்டுமல்ல, செக்ஸ் ஊழலுக்கும் பெயர் போனது, பலருக்குத் தெரியாது. ஏப்ரல் 2012ல் சோனியா விசுவாசியான அபிஷேக்சிங்வியின் செக்ஸ் வீடியோ வெளிவந்தது[2].
காங்கிரஸின் செய்தி தொடர்பாளர் என்ற அந்தஸ்த்தில் இவர் ஏஹோ காந்தியின் மறுவுருவம் போன்று பேசி வருவார். ஆனால், இவரது சேம்பர் செக்ஸ் இவரது முகமூடியைக் கிழித்து விட்டது. ஏப்ரல் 16, 2013 அன்று ராகுல் கேரளாவிற்குச் சென்றபோது, அவருக்குமுன்னாலேயேதொண்டர்கள்அடித்துக்கொண்டதுடன், தலைவர்களின் செக்ஸ் விவகாரங்களை வெளிப்படுத்தினர்[3].
கேரள காங்கிரஸ்காரகளின் செக்ஸ் லீலைகள் எல்லைகளைக் கடந்தன: சோனியா காங்கிரஸ் செக்யூலரிஸம் பேசினாலும், கேரளாவில் கம்யூனலிஸம் தான், அது முஸ்லிம் கட்சி, கிருத்துவக்கட்சி எதுவானாலும் சரி. கிருத்துவக்கட்சியின் தலைவர் பி.சி.ஜார்ஜ் சாதாரணமாக அசிங்கமாக, ஆபாசமாக, பாலியல் பாஷைப் பேசிவருபவர்[4] என்று பல செய்திகள் வந்தன[5]. வயலார் ரவி என்ற அமைச்சரும் இதில் சளைத்தர் அல்ல[6]. இதற்கான வீடியோ ஆதாரங்கள் “யூ டியூப்”பில் உள்ளன. கேரள அரசியல்வாதிகள் செக்ஸ் விஷயத்தில் மாட்டிக்கொள்வதும் சகஜமானதுதான்[7]. “ஐஸ்கிரீம் பார்லர் செக்ஸ்” என்ற வழக்கு மிகவும் பிரசித்தம்[8], ஏனெனில், இதில் பல கேரள புள்ளிகள் சிக்கினர். டிசம்பர் 11, 2011ல்கூட, பி.கே. குன்னாஜக்குட்டி என்ற IUML அமைச்சர் போலீஸாரால் விசாரிக்கப் பட்டுள்ளார்[9]. இப்பொழுது 2013ல், அச்சுதானந்தன், “ஐஸ்கிரீம் பார்லர் செக்ஸ்” விஷத்தைப் பற்றிய ஒரு டைரி கிடைத்துள்ளது என்றும், அதில் குட்டி எவ்வாறு சம்பந்தப்பட்டுள்ளார் என்ற ஆதாரங்கள் உள்ளதாக கூறியுள்ளார்[10]. ஆகஸ்ட் 2013ல் ராகுலுக்கு திருமணம் ஆயிற்றா, இல்லையா என்றெல்லாம் செய்திகள்வந்தன[11]. வழக்கம்போல பெண்களுடன் தொடர்பு என்று செய்திகளும், புகைப்படங்களும் வெளிவந்தன[12]. நவம்பர் 2013ல் பீதாம்பர் குரூப் ஸ்வேதாமேனனிடம் மாட்டிக் கொண்டார்[13].
ஜனவரி 2014ல் சசி தரூர் விவகாரம், அவரது மணவாழ்க்கை மீறிய பந்தங்களை எடுத்துக் காட்டியது. அவர் மறுத்தாலும், மனைவி சுனந்தா புஷ்கரே எடுத்துக் காட்டி, பொறுக்கமுடியாமல் “தற்கொலை” செய்து கொண்டாள்[14].மார்ச் 20914ல் கேரள உமன் சாண்டியின் சூரிவொளி மின்சாரம் ஊழலும் பற்பல செக்ஸ் தொடர்புகளை எடுத்துக் காட்டின[15]. இனி சமீபத்தைய திவாரியின் செக்ஸுக்கு வருவோம்.
நீதிமன்றம் மூலம் மாட்டிக் கொண்ட என்.டி. திவாரி (ஏப்ரல் 2014): காங்கிரஸ் கட்சியின் மூத்ததலைவரும், ஆந்திர முன்னாள் கவர்னருமான என்.டி. திவாரி தான் தன் தந்தை என்று ரோகித்சேகர் (வயது 34) என்பவர் கடந்த 2008ம் ஆண்டு பரபரப்பான குற்றச்சாட்டை கூறினார்[16]. தனது தாயாரான உஜ்வலா மற்றும் திவாரிக்கும் பிறந்த மகன் என்று குறிப்பிட்டார் மகன். ஆனால், உஜ்வாலாவுக்கும் தனக்கும் எந்த தொடர்பும் கிடையாது என்றும், ரோகித் தனது மகன் இல்லை என்றும் பல ஆண்டுகளாக திவாரி கூறிவந்தார். இதையடுத்து, தன்னை திவாரியின் மகன் என்று அறிவிக்கக் கோரி டெல்லி உயர்நீதி மன்றத்தில் ரோகித் 2007ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார்[17]. இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம், என்.டி.திவாரியிடம் மரபணுசோதனை நடத்த உத்தரவிட்டது. இதற்கும் திவாரி முதலில் மறுத்தார், பிறகு “சேம்பில்” எடுக்கப்பட்டது. மரபணுசோதனையில் ரோகித் சேகருக்கு தந்தை திவாரி தான் என தெரிய வந்தது[18]. வழக்கை விசாரித்த நீதிமன்றம், திவாரி தான் ரோஹித் சேகரின் தந்தை என்று கடந்த மாதம் 22ஆம் தேதி தீர்ப்பளித்தது. இந்த பரிசோதனை முடிவை ஏற்க மறுத்த திவாரி, தன் மீது அவதூறாக பழிபோடுவதாக ரோகித் சேகரை குற்றம் சாட்டினார். பின்னர் வழக்கு தொடுத்த ரோகித் சேகருடன் கோர்ட்டுக்கு வெளியே சமரசம் செய்து கொள்ள விரும்பினார். 6 வருட சட்ட போராட்டத்திற்குப் பிறகு ரோகித் சேகரை தன் மகனாக ஏற்றுக் கொண்டதையடுத்து உறவுப் பிரச்சினை முடிவுக்கு வந்தது[19].
திருமணம் செய்து கொண்ட திவாரி (மே 2014): உத்தரபிரதேசத்தில் 3 முறை முதல்வராக இருந்தவர் என்.டி. திவாரி. ஜார்கண்ட் மாநில முதல்வராகவும் ஒருமுறை இருந்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் விசுவாசமான தலைவர். 2007 – 2009ம் ஆண்டுகளில் ஆந்திர மாநில ஆளுநராக இருந்தபோது, இளம்பெண்களுடன் நிர்வாணமாக இருந்த வீடியோ காட்சிகள் வெளியானதால் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அவருக்கு வயது 89. இவருக்கும் உஜ்வாலா சர்மா என்ற பெண்ணுக்கும் இளமைகாலத்தில் இருந்த நெருங்கிய உறவுகாரணமாக, . ரோகித் சேகர் என்ற மகன் பிறந்தார்[20]. 89 வயதான திவாரி, லக்னெள நகரில் உள்ள தனது இல்லத்தில் உஜ்வலாவை புதன்கிழமை (14-05-2014) திருமணம் செய்துகொண்டார்[21]. 88வது வயதில் திவாரி இரண்டாவது திருமணம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது[22].
மகிழ்ச்சியில் உஜ்வலா– மனைவி: இந்நிலையில், திவாரியின் வீடு முன்பாக இம்மாத தொடக்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட உஜ்வலா, பின்னர் வீட்டுக்குள் அனுமதிக்கப் பட்டார். அதன் பிறகு, அந்த வீட்டிலேயே தங்கியிருந்த உஜ்வலாவுக்கும் திவாரிக்கும் புதன்கிழமை திருமணம் நடைபெற்றது. “எங்கள் உறவுக்கு சமூக அந்தஸ்து கொடுக்க அவர் விரும்பினார். அதனால், என்னை திருமணம் செய்துகொண்டார். இதனால், நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். சட்ட நடைமுறைகளை முடித்த பின்னர் அனைவரையும் அழைப்போம்” என்று நிருபர்களிடம் தெரிவித்தார் சர்மா.திருமணம் குறித்து செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை (15-05-2014) உஜ்வலா கூறுகையில், “பாரம்பரிய முறைப்படி எங்கள் திருமணம் நடைபெற்றது. எங்கள் உறவுக்கு சமூகமதிப்பு கொடுக்க வேண்டும் என்று திவாரி விரும்பினார். இன்னும் சில சட்ட நடைமுறைகள் உள்ளன. அவை முடிந்த பிறகு அனைவரையும் விருந்துக்கு அழைப்போம்’ என்றார்.
உபியின் தலைவர்கள் புறக்கணித்தனர்: திவாரிக்கு நெருங்கிய தலைவர்கள் பலர் உள்ளனர். சமீபத்தில் தேர்தலின் போதுகூட, ரீடா பகுகுணா போன்ற காங்கிரஸ்காரர்கள் அவரிடம் சென்று ஆசிபெற்றனர். ஆனால், திருமணத்திற்கு அவர்கள் வரவில்லை. முல்லாயம் சிங் யாதவ் மற்றும் இப்பொழுதைய முதன்மந்திரி அகிலேஷ் யாதவ் முதலியோரும் கண்டுகொள்ளவில்லை[23]. இவ்விழா அவரது வீட்டு விழா போன்றே அமைந்து விட்டது[24]. இருப்பினும் பீஹார் பிஜேபி தலைவரான சுசில்குமார் மோடி, இப்பொழுது திவாரி அடுத்தது திக் என்று டுவிட்டரில் கிண்டலடித்துள்ளார்[25].
[1] Sushil Kumar Modi ✔ @SushilModi |
ND Tiwary in nupital knot at the age of 88.Next is Digvijay Singh.Many more Congmen to follow.
Quite cool of N.D. Tiwari to get married at an age where ones only commitment is to kidney failure.
தனது 88 வயதில் திவாரி இரண்டாவது முறையாக திருமணம் செய்து கொண்டுள்ளார். இனி அடுத்தது திக் விஜய் சிங்; அதற்குப் பிறகு மற்றும் பல காங்கிரஸ்காரர்கள் அவர்களை பின்பற்றுவார்கள், என்று நாஜுக்காக சொல்லியிருக்கிறார். சில பொது மக்கள் வேறுமாதிரி கிண்டலடித்துள்ளனர். “ஆஹா, நல்ல விசயம்தான். இந்த வயதில் திவாரி திருமணம் செய்து கொண்டுள்ளார், ஆனால், பிரச்சினை என்னவென்றால் கிட்னி வேலை செய்யாமல் இருக்கும் நிலைதான்”, என்று கம்பா என்பவர் நக்கலடித்துள்ளார்[26].
காங்கிரஸ்காரர்கள் இப்படி நாறும் வேளையில் தான், காங்கிரஸ் பெண்மணிகள் சேர்ந்து கொண்டு, மோடியை தாக்கினர்! தூஷித்தனர்!!
தமது கட்சியில் மேலிருந்து, கீழுள்ள தலைவர்கள் எல்லாம் இப்படி வெளிப்படையாக சிக்கியுள்ள நிலையில், அவர்களுக்கு புத்தி சொல்லாமல், ஒழுங்காக நடந்து கொள்ள அறிவுரை சொல்லாமல், இந்த பெண்மணிகள் ஊடகங்களுக்கு பேட்டியையும் கொடுத்தார்கள். ஆனால், காங்கிரஸ் செக்ஸ் விவகாரங்களைப் பற்றி, ஊடக விற்பன்னர்களும் கேட்கவில்லை!
© வேதபிரகாஷ்
20-05-2014
[2]வேதபிரகாஷ், நித்யானந்தாவும், அபிஷேக்சிங்வியும்: செக்ஸ்வீடியோகுற்றங்கள், பரிசோதனைகள், நீதிமன்றங்கள் (1), http://secularsim.wordpress.com/2012/04/24/alleged-sex-cds-judicial-action-differs-in-nityananda-and-singvi/
[3] http://secularsim.wordpress.com/2013/04/17/738-rahul-kerala-sexist-ministers-secularism-discourse/
[4] http://www.youtube.com/watch?v=spJwbHBfvAc
[5] George’s most recent outburst was against T V Thomas, late husband of veteran communist leader K R Gouri. Local newspapers edited out some of his abusive words when they published his comments to the media. This was after his attack on Ganesh but before the minister’s resignation this week.
[6] There was an outrage in Kerala after Union Minister Vayalar Ravi was caught on video making a personal swipe at a female reporter who wanted his reaction on PJ Kurien’s alleged involvement in the 1996 Suryanelli gangrape case. In the video, Ravi is seen asking the reporter if she has had a personal problem with Kurien. Women journalists in Kerala have expressed outrage over the incident and staged protests.http://www.youtube.com/watch?v=cd7DpiQiwaY
[8] http://secularsim.wordpress.com/2011/03/04/ice-cream-parlour-sex-scandal-kerala/
[9] Kerala Industries Minister P K Kunhalikutty has been been questioned by a police team re-investigating the “ice cream parlour” sex scandal case in connection with allegations made against him by a relative. The team led by ADGP Vinson M Paul questioned the Minister at his residence here on Thursday night, police sources said on Friday. Kunhalikiutty, a senior Indian Union Muslim League (IUML) leader, was learnt to have denied the allegations and told the police that ‘unfounded’ accusations were made against him with the motive of destroying his political career.
http://zeenews.india.com/news/kerala/kerala-minister-grilled-by-police-in-sex-scam-case_746175.html
[10] Reportedly the opposition leader VS Achuthanandan has gotten hold of the case diary of the sensational “ice-cream parlour case” in which Kunhalikutty was allegedly involved. Also, the case diary apparently shows that the minister had paid off the victims to exclude himself from being investigated.
[16]ஒன்இந்தியா,88 வயதில் 2வதுதிருமணம்செய்தகாங்கிரஸ்தலைவர்என்.டி. திவாரி, Posted by: Siva Updated: Thursday, May 15, 2014, 16:48 [IST]
[17]தினகரன், தனதுமனைவிஇல்லைஎன்றுகூறிவந்த 67 வயதுபெண்ணைமணந்தார்திவாரி, May 15, 2014.
[18] http://www.maalaimalar.com/2014/05/15170219/89-year-old-Tiwari-marries-mot.html
[19] மாலைமலர், ரோகித்சேகரின்தாயாரைதிருமணம்செய்தார்என்.டி.திவாரி, பதிவுசெய்தநாள் : வியாழக்கிழமை, மே 15, 5:02 PM IST
[20] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=92011
[21] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=92011
[22] http://tamil.oneindia.in/news/india/veteran-leader-nd-tiwari-marries-ujjwala-sharma-201009.html
[23] http://www.prabhatkhabar.com/news/114896-Narayan-Dutt-Tiwari-was-married.html
[24]यहीवजहहैकिएनडीतिवारीकेशादीकरनेकीखबरफैलनेकेबादभीमुलायमसिंहयादवसेलेकरमुख्यमंत्रीअखिलेशयादवतकनेउन्हेंशादीकीबधाईनहींदी. जबकिमुलायमसिंहयादवतिवारीजीकोअपनेपरिवारकासदस्यमनानेहैं.