சத்தியராஜ் கனகவல்லியைத் தாக்கிக் கொலை செய்தது பொருளாதாரக்குற்றமா, சமூகக்குரூரமா, மனித பயங்கரவாதமா?
வழக்கம் போல, ஊடகங்களில் தரப்படும் விவரங்களில் சில வேறுபாடுகள் காணப்படுகிண்றன. அவை சரி பார்க்கவேண்டியுள்ளது.
சேலையூர் அருகே பரபரப்பு[1]
மாலைச்சுடர், Sunday, 25 July, 2010 02:48 PM
சென்னை, ஜூலை 25:சென்னையை அடுத்த சேலையூரில் அகோபிலமடத்தில் திருட வந்த திருடன் ஒருவன், அங்கிருந்த மூதாட்டியை கிணற்றில் தள்ளி கொலை செய்தான்.தண்ணீரில் மூழ்கியதால் அவனும் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தாம்பரத்தை அடுத்த சேலையூர் பிருந்தாவன் தெருவில் புகழ்பெற்ற அகோபிலமடம் உள்ளது. இது 600 ஆண்டு பழையானது. முன்னாள் பிரதமர் தேவகவுடா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் இந்த மடத்திற்கு வருவதுண்டு. இந்த மடத்தினை 44வது ஜீயர் நிர்வகித்து வருகிறார். இங்கு பாடசாலை, கல்யாண மண்டபம், தியான மடம் ஆகியன உள்ளது. இந்த மடத்தின் 44வது அழகிய சிங்கர் ஜீயரின் பிறந்த நாள் விழா நடைபெற்று வருகிறது.
இந்த மடத்தின் 44வது அழகிய சிங்கர் ஜீயரின் பிறந்த நாள் விழா நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் கலந்து கொள்வதற்காக சின்ன காஞ்சிபுரத்தைச் சேர்ந்த கனகவள்ளி (வயது 60) மடத்தில் தங்கி இருந்தார். இவரது கணவர் வாசுதேவன் இங்குள்ள பாடசாலையில் வார்டனாக வேலைபார்த்து வருகிறார். இன்று அதிகாலை (25-07-2010) நான்கு மணி அளவில் கனகவள்ளி எழுந்து மடத்தின் முற்றத்தை சுத்தம் செய்து கொண்டிருந்துள்ளார். அப்போது, மர்ம வாலிபர் ஒருவன் மடத்தின் காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்துள்ளார். இதை கண்டதும் கனகவள்ளி திருடன், திருடன் என கூச்சலிட்டுள்ளார்.
உடனே, அந்த மர்ம நபர் கனகவள்ளியை மிரட்டி தூக்கிச் சென்று அருகில் இருந்த கிணற்றுக்குள் வீசியுள்ளார். பின்னர் அந்த வாலிபரும் கிணற்றுக்குள் குதித்து அப்பெண்ணை கத்தியால் குத்தி தண்ணீருக்குள் மூழ்கடித்து கொலை செய்துள்ளார்.இப்பெண்ணின் அலறல் சத்தத்தைக் கேட்டு மடத்தில் தங்கியிருந்தவர்கள் ஓடிச் சென்று கிணற்றுக்குள் எட்டிப்பார்த்துள்ளனர்.
கிணற்றுக்குள் அந்த வாலிபர் வெளியேற முடியாமல் தண்ணீருக்குள் சிக்கி தவித்துக் கொண்டிருந்தார்.இதை பார்த்தவர்கள் கிணற்றுக்குள் இறங்கி அந்த நபரை மீட்டுள்ளனர். அப்போது கிணற்றுக்குள் கனகவள்ளி இறந்த நிலையில் பிணமாக கிடந்துள்ளார்.
மர்ம நபரை மீட்ட பொதுமக்கள் அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் செல்லும் வழியிலேயே அந்த நபர் உயிரிழந்துள்ளார்.இது குறித்து சேலையூர் போலீசுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைவில் வந்து இறந்த கனகவள்ளியின் உடலை பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவத்தில் உயிரிழந்த வாலிபரின் பெயர் சத்தியராஜ் (வயது 35) என தெரிய வந்துள்ளது. இவர் எதற்காக மடத்திற்குள் ஏறி குதித்தார்? என்பது குறித்து சேலையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இறந்த வாலிபருடன் மேலும் ஒரு நபர் வந்ததாக கூறப்படுகிறது. அவரை பற்றியும் போலீசார் விசாரித்து வருகின்றனர்
ஆனால் மடத்தின் அருகே உள்ள குடியிருப்புவாசிகள் கூறும்போது, மடத்தில் ஏராளமான நகை, பணம் உள்ளது. இதனை கொள்ளையடிக்கும் நோக்கில் ஐந்திற்கும் மேற்பட்டவர்கள் வந்தாக கூறினர். ஆனால் இதனை காவல்துறையினர் உறுதி செய்யவில்லை[2].
சமீபத்தில் இந்த மடத்திற்கு பக்தர் ஒருவர் தங்கத்தேர் ஒன்றை காணிக்கையாக அளித்துள்ளார். மேலும் மடத்தில் ஏராளமான ஆபரணங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஜீயரின் பிறந்தநாள் விழாவின் போது, இந்த ஆபரணங்கள் வெளியே எடுத்து பூஜைக்கு பயன்படுத்தப்படும் என கூறப்படுகிறது. இதனை கொள்ளையடிக்கும் நோக்கதிலேயே அந்த மர்ம நபர் மடத்திற்குள் ஏறி குதித்து வந்திருக்க வேண்டும் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
சென்னையில் பயங்கரம்-அகோபில மட ஊழியை படுகொலை-கொள்ளையனை அடித்துக் கொன்ற ஊழியர்கள்[3]
ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 25, 2010, சென்னைக்கு அருகே சேலையூரில், அகோபில மடத்திற்குள் புகுந்த கொள்ளையர்கள், அங்கிருந்த பெண் ஊழியர் கனகவல்லியை கத்தியால் குத்திக் கொலை செய்து கிணற்றுக்குள் வீசினர். இதனால் ஆத்திரமடைந்த மட ஊழியர்கள் ஒன்று சேர்ந்து கொள்ளையன் ஒருவனைப் பிடித்து சரமாரியாக தாக்கியதில் அவனும் உயிரிழந்தான்.
சேலையூரில் அகோபில மடம் உள்ளது. பிரபலமான இந்த மடத்தில் 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தங்கியுள்ளனர். இவர்கள் அதிகாலை 3 மணிக்கெல்லாம் எழுந்து தங்களது பணிகளைப் பார்க்க ஆரம்பிப்பார்கள்.
இன்று காலையும் ஊழியர்கள் வழக்கம் போல எழுந்து தத்தமது வேலைகளில் மூழ்கியிருந்தனர். அப்போது கனகவல்லி என்ற ஊழியை, மடத்திற்குப் பின்புறம் கோலம் போட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு திடீரென ஐந்துக்கும் மேற்பட்ட கொள்ளையர்கள் புகுந்தனர்.
இதைப் பார்த்த கனகவல்லி திருடன் திருடன் என கத்தியுள்ளார். இதைப் பார்த்த கொள்ளையர்கள் கனகவல்லியை சூழ்ந்து கத்தியால் சரமாரியாக குத்தினர். இதில் அவர் படுகாயமடைந்தார். பின்னர் கனகவல்லியை தூக்கி அங்கிருந்த கிணற்றில் வீசினர்.
அப்போதும் வெறி அடங்காத கொள்ளையர்களில் சத்தியராஜ் என்பவன் உள்ளே குதித்து கனகவல்லியை நீரில் மூழ்கடித்துக் கொடூரமாக கொன்றான். இந்த சமயத்தில், கனகவல்லி போட்ட சப்தம் கேட்டு மட ஊழியர்கள் ஓடி வந்தனர்.
இதைப் பார்த்த கொள்ளையர்கள் அங்கிருந்து ஓடினர். ஆனால் கிணற்றுக்குள் குதித்த சத்யராஜ் மட்டும் தப்ப முடியாமல் மட ஊழியர்களிடம் மாட்டிக் கொண்டான். கனகவல்லி கொலை செய்யப்பட்டதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள், ஆவேசத்துடன் சத்தியராஜை கடுமையாக தாக்கினர். இதில் அவன் படுகாயமடைந்தான்.
பின்னர் போலீஸாருக்குத் தகவல் தெரியவரவே அவர்கள் விரைந்து வந்து சத்தியராஜை மீட்டு குரோம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சத்தியராஜ் உயிரிழந்தான்.
இந்த சம்பவத்தால் சேலையூரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அகோபில மடத்தில் உள்ள பல கோடி மதிப்புள்ள தங்கம், பணம் உள்ளிட்டவற்றை கொள்ளையடிக்கும் நோக்கில் அங்கு கொள்ளையர்கள் புகுந்துள்ளனர்.
கொள்ளைக் கும்பலில் ஐந்து பேர் இருந்ததாக தெரிகிறது. தப்பி ஓடிய கும்பலைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
தேவெ கெளடா வரவிருந்த சமயத்தில் அசம்பாவிதம்
இன்று காலை 7 மணிக்கு இந்த மடத்திற்கு முன்னாள் பிரதமர் தேவெ கெளடா வருவதாக இருந்தது. பிற்பகல் 12 மணியளவில் திரும்பிச் செல்ல அவர் திட்டமிட்டிருந்தார். ஆனால் இந்த அசம்பாவிதம் நடந்து விட்டதால் அவரது பயணம் ரத்து செய்யப்பட்டது.
சென்னை மடத்தில் பெண் கொலை
சென்னை : சென்னை அருகே உள்ள சேலையூரில் உள்ள அகோபில மடத்தில் பணிபெண் ஒருவர் கொள்ளையர்களால் கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது[4]. அகோபில மடத்தில் இன்று அதிகாலை மர்ம நபர்கள் சிலர் கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளனர். அப்போது மடத்தில் பணியாற்றும் கனகவள்ளி என்ற பெண்ணிடம் கொள்ளையர்களில் ஒருவன் நகையை பறிக்க முயற்சி செய்துள்ளான். கனகவள்ளி சத்தமிட்டதால், அவரை கொலை செய்து அருகில் இருந்த கிணற்றில் வீசி உள்ளான். கொள்ளை கும்பலைச் சேர்ந்த சத்தியராஜ் என்பவனை மட்டும் பொதுமக்கள் விரட்டிப் பிடித்துள்ளனர்.பொதுமக்கள் தாக்கியதில் சத்தியராஜ் .யிரிழந்துள்ளான். இந்த கொள்ளை மற்றும் கொலை சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது. இதனால் அகோபில மடத்திற்கு இன்று வருவதாக இருந்த முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
[1] http://www.maalaisudar.com/newsindex.php?id=34982%20&%20section=1
[2] http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/1007/25/1100725025_1.htm
[3] http://thatstamil.oneindia.in/news/2010/07/25/chennai-salaiyur-ahobilam-mutt-burglary-murder.html
[4] தினமலர், சென்னை மடத்தில் பெண் கொலை, ஜூலை 25,2010,