Archive for the ‘ஜோஸப்ராஜ்’ Category

முஸ்தபாவும், ஜோஸப்ராஜும் தமது மனைவிகளை எரித்தது ஏன்?

ஒக்ரோபர்18, 2010

முஸ்தபாவும், ஜோஸப்ராஜும் தமது மனைவிகளை எரித்தது ஏன்?

சென்னையும் தூத்துக்குடியும்: அக்டோபரில் 11ம் தேதி சென்னையிலும் 16ம் தேதி தூத்துக் கொடியிலும் இருவர் தத்தமது மனைவியரை கொளூத்தியுள்ளனர். இருவருமே குடிகாரர்கள் என்பது தான் காரணம். குடி குடியைக் கெடுக்கும் என்று போதித்து என்ன பயன், அரசே அதை வளர்க்கிறது, விற்க்கிறது. இடைவிட கேவலம் என்னெவென்றால் படித்தவர்கள் லட்சங்களைக் கொடுத்து, மது கடையில் வேலை செய்ய வந்துள்ளார்கள். அவர்களிடம் ஈவு, இரக்கத்தை எதிர்பார்க்க முடியுமா? குடுத்தால் தான் அவர்களுக்கு சம்பளம், கமிஷன் எல்லாம். ஆக, இப்படி குடித்துக் கொண்டே இருந்தால்………………….

சென்னையில் தீக்குளிக்கபோவதாக மிரட்டிய மம்தா, தீவைத்த முஸ்தபா: கியாசை பற்றவைத்து, கணவர் உயிரோடு கொளுத்தினார்; உயிருக்கு போராடும் பெண் பரபரப்பு வாக்குமூலம்[1]. சென்னை ஐஸ்அவுஸ் யானைகுளம் பகுதியை சேர்ந்தவர் முஸ்தபா (வயது32), இவரது மனைவி மம்தா (26), இவர்களுக்கு தாரியா பாத்திமா(8) என்ற மகளும், சையது அகமது (3) என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மம்தா உடல் கருகிய நிலையில் வீட்டில் விழுந்து கிடந்தார். முஸ்தபாவின் கைகளில் தீக்காயங்கள் இருந்தன. இது குறித்து தகவல் கிடைத்ததும் அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து மம்தாவை ராயப்பேட்டை அரசு அஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனு மதிக்கப்பட்டுள்ள மம்தா உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார். ஜஸ்அவுஸ் போலீஸ் இன்ஸ்பெக்டர் இருதயம், சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்வராஜ், சேதுராமலிங்கம் ஆகியோர் விசாரணை நடத்தினர். மாஜிஸ்திரேட்டு முன்னி லையில் மம்தா மரண வாக்குமூலம் அளித்தார். அப்போது கணவர்முஸ்தபா மீது பரபரப்பு குற்றச்சாட்டுகளை அவர் தெரிவித்தார் அதன் விவரம் வருமாறு:

மம்தாவின் வாக்குமூலம்: “எனது கணவர் முஸ்தபா குடித்து விட்டு வீட்டுக்கு தாமதமாக வரத் தொடங்கினார். அவருக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு இருக்கும் என்று நான் சந்தேகப்பட்டேன். நேற்று முன்தினம் இரவும் இதுபோல தாமதமாக வந்ததால் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் மன வேதனையடைந்த நான் உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக் குளிக்கப்போவ தாக மிரட்டினேன். உடனே எனது கணவர் முஸ்தபா நீ என்ன தீக்குளிப் பது, நானே உன்னை கொளுத்தி விடுகிறேன் என கூறி, கியாசை பற்ற வைத்து பேப்பரில் தீ மூட்டி எனது உடலில் வீசினார். இதில் உடல் முழுவதும் தீப்பற்றிக் கொண்டது”,  இவ்வாறு மம்தா வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து முஸ்தபாவை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

ஜெயராணியைக் கொளுத்திய ஜோஸப்ராஜ்: தூத்துக்குடி யில் மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்த கணவர் கைது செய்யப்பட்டார். மற்றொரு சம்பவத்தில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்[2]. தூத்துக்குடி பெரியசாமி நகரைச் சேர்ந்தவர் ஜோசப்ராஜ். கூலித் தொழிலாளி. இவரது மனைவி ஜெயராணி. திருமணமாகி 9 ஆண்டு ஆகிறது. இவர்களுக்கு மார்க்கரெட், மான்சி என்னும் இரு மகள்கள் உள்ளனர். குடிப்பழக்கத்திற்கு ஆளான ஜோசப்ராஜ் அடிக்கடி குடித்துவிட்டு மனைவியை அடித்து சித்ரவதை செய்து வந்துள்ளார். இது தவிர குடிக்கப் பணம் கேட்டும் தொந்தரவு செய்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருந்த ஜெயராணி மீது ஜோசப்ராஜ் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்தார். உடல் கருகிய அவரை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இது குறித்து தென்பாகம் போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து ஜோசப்ராஜை கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


[1] http://www.dailythanthi.com/article.asp?NewsID=600140&disdate=10/12/2010&advt=2

[2] http://thatstamil.oneindia.in/news/2010/10/16/husband-burnt-wife.html