Archive for the ‘திலிப் ஜோசப்’ Category

ஜோசப், பிலிப் ஜோசப், திலிப் ஜோசப் என்ற பெயர்களில் நான்கு பெண்களை திருமணம் செய்து கொண்டு ஏமாற்றியவன் (2)

ஓகஸ்ட்17, 2013

ஜோசப், பிலிப் ஜோசப், திலிப் ஜோசப் என்ற பெயர்களில் நான்கு பெண்களை திருமணம் செய்து கொண்டு ஏமாற்றியவன் (2)

Mary-Joseph-Usha-involved

குடும்பமேசேர்ந்துஏமாற்றிவந்தது: செய்தித் தாள்களில் பொதுவான விஷயங்கள் இப்படி வந்துள்ளன. பிலிப்பை “கல்யாண மன்னன்” என்றெல்லாம் வர்ணித்துள்ளன – விவாகரத்து செய்த இவர், புஷ்பலதா, 25, ரம்யா, 24, பிரேமா, 33, ஆகியோரை, அடுத்தடுத்து, யாருக்கும் தெரியாமல், திருமணம் செய்து கொண்டார்[1]. இவர்களிடம், ராணுவத்தில் பெரிய அதிகாரியாக பணியாற்றுவதாகக் கூறி ஏமாற்றி, வாழ்க்கை நடத்தினார். இத்தகவல், மூன்றாவது மனைவி பிரேமாவுக்கு தெரிந்ததும், போலீசில் புகார் கொடுத்தார்.  இதில் அவரது தாயார் மேரி, சகோதரி உஷாவுக்குத் தொடர்புள்ளது. அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியிருந்தார்[2].

Joseph with Prema complaining

கைதுசெய்யப்பட்டு, விடிவிக்கப்பட்டாமாமியார்மகள்: மூன்று மனைவிகளும், தங்களின் கைக்குழந்தைகளுடன் பிலிப் ஜோசப்பை கைது செய்யக் கோரி, மே 27ல், உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி, கலெக்டரிடம் மனு அளித்தனர். தங்களை ஏமாற்றி திருமணம் செய்த பிலிப் ஜோசப், அவரது தாய் மேரி, சகோதரர் ஸ்டீபன், சகோதரி உஷா, அவரது கணவர் சந்திரன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, முதல்வரின் தனிப்பிரிவுக்கு மனு அளித்தனர். உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, முதல்வரின் தனிப் பிரிவிலிருந்து உத்தரவிடப்பட்டது. இது குறித்து பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த கோவை அனைத்து மகளிர் கிழக்கு போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையில் புஷ்பலதா, ரம்யா ஆகியோர் பிலிப் ஜோசப் மீது திருமண மோசடி புகார் அளித்தனர்[3]. அவர்களது புகார்கள் ஏற்கனவே பிலிப் ஜோசப் மீது போடப்பட்ட முதல் தகவல் அறிக்கையின் கீழ் சேர்க்கப்பட்டன. பிறகு சில நாள்களுக்கு முன் கைது செய்யப்பட்ட பிலிப் ஜோசப்பின் தாயார் மேரி, சகோதரி உஷா ஆகியோர் உடனடியாக ஜாமீனில் விடப்பட்டனர்.  இதனால் அதிருப்தியடைந்த பாதிக்கப்பட்ட பெண்கள் மூவரும் தங்கள் கைக்குழந்தைகளுடன் சென்னை சென்று முதல்வரின் தனிப்பிரிவில் புகார் அளித்தனர்[4].

Pushpalatha, Ramya and Prema - dharna

டில்லியில்கைதுசெய்யப்பட்டபிலிப்: இதையடுத்து, அவர், டில்லியில் இருப்பதாக தகவல் கிடைத்ததும், டில்லி சென்ற கோவை போலீசார், ராணுவ உயர் அதிகாரிகளிடம், பிலிப் ஜோசப் குறித்த மோசடி புகார்களை தெரிவித்தனர். விசாரித்த ராணுவ அதிகாரிகள், பிலிப் ஜோசப்பை, நீலகிரி மாவட்டம், வெலிங்டனில் உள்ள ராணுவ முகாமிற்கு, இட மாற்றம் செய்தனர். அதன் பின், பிலிப் ஜோசப்பை, ராணுவ விதிமுறைகளின்படி, தனிப்படை போலீசாரிடம் ஒப்படைத்ததை தொடர்ந்து, பிலிப் ஜோசப்பை போலீசார் கைது செய்தனர்.

Pushpalatha, Ramya and Prema - dharna demanding justice

நான்குகணவர்களைக்கொண்டஉஷா: முதல் கணவனிடம் ரூ.5 லட்சம் வாங்கிக் கொண்டு விவாக ரத்துப் பெற்றுக் கொண்டாள். இரண்டாவது கணவன் இறந்து விட்டான் என்று சொல்லப்படுகிறது. மூன்றாவது கணவன் காணவில்லையாம். இப்பொழுதுள்ள சுந்தர் தான் நான்காவது கணவனாம். இவன் கூட, தன்னைக் கற்பழித்துவிட்டான், என்பதனால், வலுக்கட்டாயமாக இவளுக்கு திருமணம் செய்து வைத்தார்களாம். இவளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனவாம். ஒரு பெண் இப்படி நான்கு ஆண்களை திருமணம் செய்து கொள்வாளா, கணவர்களுடன் வாழ்வாளா என்றெல்லாம் கேட்டால், நமது சமூக-ஆர்வலர்கள், குடும்பநல-பண்டிதர்கள், தமிழ்ப் பண்பாடு வித்தகர்கள், திராவிடப் புரோகிதர்கள் உடனே இந்த நடிகை இப்படித்தான் இருக்கிறாள் என்று உதாரணம் கொடுப்பார்கள்.

Pushpalatha, Ramya and Prema - police complaingt

ஆரோக்யதாஸ்என்றதந்தை: ஆரோக்ய தாஸ் என்பவர், பிலிப்பின் தந்தை. பிரேமாவிடம் தனது தந்தை இறந்து விட்டதாகக் கூறியுள்ளான். புஷ்பலதா மற்றும் ரம்யாவிடம் காணவில்லை என்று சொல்லியிருக்கிறான். ஆனால், விசாரித்துப் பார்த்ததில், அவரும் ஒரு ரானுவத்திலிருந்து ஓடு வந்தவர். மேரியின் தொல்லை மற்றும் அவளது தொடர்புகளை சகியாமல், பெங்களூருக்குச் சென்று, அங்கு வேறொரு பெண்ணுடன் வாழ்ந்து வருகிறார்.  அவருக்கு மூன்று மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

Pushpalatha, Ramya and Prema, three wives of Philip Joseph arriving at the Coimbatore Collectorate

மேரிஎன்றதாயார்: பிலிப்பின் தாயார் மேரி. குன்னூரில் மிலிடெரி பகுதிகளில் சுத்தம் செய்யும் தொழிலை செய்து வந்தாள். சிறுவயதிலிருந்தே ஒழுங்காக இருக்கவில்லை. அந்நேரத்தில் தான் தனது இரண்டு மகன்களுக்கும் எப்படியோ ராணுவத்தில் வேலை வாங்கிக் கொடுத்தாள். கணவனைப் பிரிந்து வாழ்ந்ததால், மகனை வைத்துக் கொண்டு ஏமாற்றி வாழலாம் என்று தீர்மானித்தாள் போலும். அதற்கு கிடைத்தது தான், இந்த போலி திருமணங்கள், மறுமகள் கொடுமைகள் இத்யாதி.

Joseph-Prema marriage at Church

சர்ச், பாஸ்டர்முதலியோர்மறைப்பதுஎன்ன, ஏன்?: விசாரணையில், மேட்டுப்பாளையத்தில் உள்ள ஒரு சர்ச்சின் பாஸ்டர், அவன் ஏற்கெனவே திருமணம் ஆனவன் மற்றும் அவன் மகனுக்கு அங்குதான் சடங்கு நடந்தது என்ற விவரங்களைச் சொன்னார். பிலிப்புதான் அங்கு கூட்டிவந்தான் என்ற விவரங்களை கூறினார். ஆனால், இவற்றையெல்லாம் சாட்சியாக சொல்ல ஏதோ காரணங்களுக்காக மறுத்து விட்டார். அது ஏன் என்று பிரேமாவுக்குப் புரியவில்லை[5]. இந்த விவரங்களினின்று அது ரம்யாதான் என்று தெரிகிறது. பிலிப் நான்கு பெண்களையும் சர்ச்சுகளில் தான் திருமணம் செய்து கொண்டிருக்கிறான். சர்ச் ஆவணங்களில் திருமணம், குழந்தை பிறப்பு, பாப்டிஸம் முதலியவை பதிவு செய்யப்படுகின்றன. மூன்று திருமணங்கள் கோயம்புத்தூரிலேயே நடந்துள்ளன. ஆகவே, சர்ச்சுகளுக்குத் தெரியாமல் இத்தகைய திருமணங்கள் நடந்திருக்க முடியாது. 10வது பாஸ், டிகிரி சர்டிபிகேட் போல, இந்த ஆவணங்களையும், பிலிப் போலியாக பெற்றுக் கொண்டிருப்பான் என்று சொன்னால், அத்தகைய போலி ஆவணங்களை யார் உருவாக்கினார்கள், எவ்வாறு உருவாக்கப்பட்டது என்ற கேள்விகள் எழுகின்றன.

Philip Joseph - Dilip Joseph - D. Joseph

மனைவிகளின்போராட்டங்கள்: இவ்விஷயத்தில் ஏமாற்றப் பட்ட மனைவியர் வெளியே வந்து போராட்டத்தில் இறங்கியுள்ளனர். பிரேமா என்பவர் தன்னைப் போல மற்ற பெண்கள் ஏமாறக்கூடாது என்று தனது அனுபவத்தை, புகைப்படங்களுடன், இணைதளத்தில் வெளியிட்டுள்ளார்[6]. தங்களைப் போல மற்ற பெண்கள் ஏமாறக் கூடாது என்று விவரங்களை வெளியிட்டுள்ளார். இளமையில் ஆசை, மோகம், வசதி, சுகவாழ்வு, என்று கனவு கண்டு ஆண்களிடம் மோசம் போகக் கூடாது என்று புரிந்து கொள்ளும் வகையில் உள்ளது. பெற்றோரும், தங்களது பெண்ணை திருமணம் செய்து கொடுக்கு போது, இக்காலத்தில் எவ்வளவு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றும் தெரியப்படுத்துகிறது. இவர்களைப் பாராட்ட வேண்டும்.

Joseph married four women anf cheated

கற்றுக்கொள்ளவேண்டியபாடம், படிப்பினைஎன்ன?: ஏமாறுவோர்கள் இருக்கும் வரை, ஏமாற்றுவோர் ஏமாற்றிக் கொண்டே இருப்பர் என்று சொல்வதைவிட, நியாயப் படுத்துவதை விட, அவ்வாறு ஏமாந்துவிடக் கூடாது, மற்றும் ஆண்கள்-பெண்கள் கூட்டாகவும், தனித்தனியாகவும் இல்லறம் போன்ற விஷயங்களில் கூட இவ்வாறு செய்வார்கள் என்பதனை அறிந்து கொள்ள வேண்டும். நிச்சயமாக சினிமா-டிவி சீரியல்கள் போன்றவை, இக்கால இளம்பெண்களின் மனங்களை பாதித்துள்ளன, கலைத்துள்ளன, சஞ்சலப்பட வைத்துள்ளன என்று தெரிகிறது. இந்நிலையில் சமூகத்தை நல்வழிப்படுத்த வேண்டிய பொறுப்பை அனைவரும் ஏற்கவேண்டியதுள்ளது. கெட்டது இப்படி ஏற்பட்டுள்ளது என்று விவரிக்கும் அதே நேரத்தில், இனிமேல் நடக்கக் கூடாது என்று நல்லதையும் எடுத்துக் காட்ட வேண்டும். பணம், பணம் என்று அலையும் நிலையில் தான், இத்தகைய சமூக சீரழிவுகள் ஏற்படுகின்றன. ஆனால், பெண்கள் பாதிக்கப் படுவதை, எந்த சமூகமுன் ஏற்ருக் கொள்ள முடியாது. அத்தகைய சீரழிவிற்குக் காரணமான எந்த காரணி இருந்தாலும், அது கண்டறியப் பட வேண்டும், அது மாற்றப் படவேண்டும். இத்தகைய சமூக ஊழல்கள், மனிதத்தன்மையற்ற உழிங்கீன ஊழல்கள் மிகக் கொடுமையானது. அவற்றை எதிர்த்து போராட வேண்டும்.

 

வேதபிரகாஷ்

© 17-08-2013


[5] The family traced a misunderstanding between Philip and the pastor of a church in Mettupalayam. The Pastor told them that the man had been married before and had even brought his son for dedication to the church. (This pastor, for reasons unknown refused to confirm these incidents as a witness.) – http://bridaltears.blogspot.in/

ஜோசப், பிலிப் ஜோசப், திலிப் ஜோசப் என்ற பெயர்களில் நான்கு பெண்களை திருமணம் செய்து கொண்டு ஏமாற்றியவன் (1)

ஓகஸ்ட்17, 2013

ஜோசப், பிலிப் ஜோசப், திலிப் ஜோசப் என்ற பெயர்களில் நான்கு பெண்களை திருமணம் செய்து கொண்டு ஏமாற்றியவன் (1)

Philip Joseph - Dilip Joseph - D. Joseph- army

ராணுவ சமையல்காரன்,  அதிகாரி என்று சொல்லி ஏமாற்றி திருமணம்: மூன்று திருமணம் செய்து, பெண்களை ஏமாற்றிய ராணுவ சமையல்காரனை, போலீசார் கைது செய்தனர். கோவை, பெரியநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர், ஜோசப் / பிலிப் ஜோசப் / திலிப் ஜோசப் வயது 33, ராணுவத்தில் சமையல்காரராக பணியாற்றுகிறான்[1]. ஆனால், தான் அதிகாரியாக இருக்கிறேன் என்று சொல்லி கன்னியாகுமரியைச் சேர்ந்த திவ்யா என்பவரை திருமணம் செய்து கொண்டான். ஆனால், அவனது நடவடிக்கை, பொய் பேசும் விதம் முதலியவற்றை கவனித்து, திவ்யா ராணுவ நீதிமன்றம் மூலம் விவாக ரத்து பெற்றுக் கொண்டாள்[2]. இதற்கு மேல் இவரைப் பற்றிய விவரங்கள் தெரியவில்லை.

Philip Joseph - Pushpalatha

புஷ்பலதா  –  இரண்டாவது மனைவி கொடுமைப் படுத்தப் பட்டது (2006-07): தனக்கு 16 வயது இருக்கும் போது, 26 வயதான பிலிப் ஜோசப்பைத் திருமணம் 17-01-2006 அன்று கோயம்புத்தூர், மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த புஷ்பலதா செய்து கொண்டாள். அப்பொழுது தனது பெயர் டி. ஜோசப் என்று கொடுத்திருந்தான். தனது கணவனுடன் தான் எல்லா இடங்களுக்கும் சென்று வந்தாள். ஒருமுறை, ஒரு ஐஸ்கிரீம் பார்லருக்கு சென்றபோது, இளைஞர்கள், புஷ்பலதாவையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவன், பிலிப் என்ன உனது தந்தையா என்று கேட்டுவிட்டான். என்னை விட வயதில் அதிகமாக இருந்ததாலும், அவ்வாறே தோற்றமளித்ததாலும் அவ்வாறு கேட்டான். இதை கேட்டு கோபம் அடைந்த ஜோசப், ஐஸ்கிரீமை, எல்லோருக்கும் எதிரில் என்னுடைய முகத்தில் எரிந்தான். அது மட்டுமல்லாது, அவனுடைய தாய் மற்றும் சகோதரி தன்னை கொடுமைப் படுத்தியதையும் விளக்கினாள். “அவர்கள் என்னை அடித்தார்கள். நான் கர்ப்பமாக இருந்தபோது கூட விடவில்லை. அடித்துத் துன்புறுத்தினார்கள். மொட்டை மாடியில் வெயிலில் நிற்க வைத்தார்கள். நீ அழகாக இருக்கிறாய், கலராக இருக்கிறாய் என்று தானே பெருமைப் பட்டுக் கொள்கிறாய்? வெயிலிலேயே கிட, அப்பொழுது தான் நீ கருப்பாவாய். அப்பொழுது யாரும் உன்னைப் பார்க்க மாட்டார்கள்”, என்றெல்லாம் திட்டினார்கள் இதனால், தனது அத்தை வீட்டிற்கு செல்ல முயன்ற போது, மாமியார் மிரட்டினாள். பிறகு ஒரு நாள் இரவு வீட்டை விட்டே விரட்டி அடித்தாள்.

Joseph with Pushpalata and children

ரம்யா  –  மூன்றாவது மனைவி கொடுமைப் படுத்தப் பட்டது –  2010: கோயம்புத்தூர், கணபதியைச் சேர்ந்த, ரம்யா 30 வயதான டி. பிலிப் என்ற ஜோசப் பிலிப்பை 18-10-2010 அன்று திருமணம் செய்து கொண்டாள். ரம்யாவிற்கு முதல் குழந்தை பிறந்தது. அதற்கு பால் கொடுப்பதற்கே, மாமியார் தடுத்து வந்தாள். முதல் குழந்தை வளர்வதற்கு முன்னமே, பிலிப் உறவு கொண்டதால், இரண்டாவது குழந்தை பிறந்தது. இரண்டு குழந்தைகளுக்கும் கொடுக்க போதிய தாய்பால் இல்லை. வீட்டிலோ சத்தான உணவும் கொடுப்பதில்லை. குழந்தைகளுக்கு பாலும் கொடுப்பதில்லை. இதனால். குழந்தைகளுக்கு சத்து மாவை வாங்கிக் கறைத்து கொடுக்க ஆரம்பித்தாள். ஆனால், குழந்தைகள் அதை ஜீரணிக்க முடியவில்லை. ஒருமாதம் தான் வாழ்ந்தாள்.

Philpi Joseph - Ramya with child

பிரேமா  –  நான்காவது மனைவி  (2013): பிரேமா என்ற பட்டதாரி பெண்ணை 08-02-2013 அன்று, டிரினிடி சர்ச்சில், டி. ஜோசப்பைத் திருமணம் செய்து கொண்டாள். அப்பொழுது இருவருக்குமே 33 வயது. பிரேமாவிற்கு ஏற்கெனவே 33 வயதாகி விட்டதால், ராணுவத்தில் அதிகாரி, கட்டப்பட்டு வரும் நிலையில் வீடு, இந்தியா முழுவதும் சுற்றிவரலாம் போன்ற விஷயங்களால் ஈர்க்கப்பட்டு, பிரேமாவை திருமணம் செய்து வைத்தனர். பிலிப், பிரேமாவை பல்லடத்தில் இந்திரா காலனியில், ஒரு வாடகை வீட்டில் தங்க வைத்து தில்லிக்குச் சென்று விட்டான். பிலிப் போனதும், மேரி பிரேமாவை திட்டித் துன்புறுத்த ஆரம்பித்து விட்டாள். பிலிப்பிடம் சொன்னபோது, அனுசரித்துச் செல் என்று அறிவுரை சொன்னான். ஆனால், மாமியார் வீடு கட்ட கற்களைக் கூட சுமக்கச் சொன்னாளாம். தான் கர்ப்பமாக இருக்கிறேன் என்று சொன்னாலும் விடவில்லை. வரதட்சணை கேட்பது, சகோதர்களிடம் மரியாதை இல்லாமல் பேசுவது என்று ஆரம்பித்தாளாம். இதனால், பிரேமா விலகிச் செல்ல தீர்மானித்தாள்.

Joseph with Prema during their sham marriage

பிலிப்பின் ஏமாற்று முறை: பெண்களின் குடும்பத்தை தான் தில்லியில் வேலை செய்து வரும் ஒரு ராணுவ அதிகாரி என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, பெண்ணை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகச் சொல்வான். பெண்ணிற்கு ராணுவத்தில் வேலை வாங்கித் தருவேன் என்றும் வாக்குக் கொடுப்பான். தில்லியிலிருந்து எப்பொழுது வேண்டுமானால், மிலிடெரி கோட்டாவில் வேலை கிடைக்கும், அதற்காக “அபிடேவிட்” போன்றவை தாக்குதல் செய்யவேண்டும் என்று வெற்று பத்திரங்களில் கையெழுத்து வாங்கி வைத்துக் கொள்வான். திருமணம் ஆனவுடன், தான் தில்லிக்கு செல்லவேண்டும் என்று சென்று விடுவான். வீட்டில் இருக்கும் மனைவியை அவனது தாய் மேரி மற்றும் சகோதரி உஷா மெதுவாக பணம் ஏதாவது கிடைக்குமா என்று பார்ப்பார்கள். பணம் கிடைக்காது என்றால், கொடுமைப் படுத்தி, அங்கிருந்து போனால் போதும் என்ற நிலைக்குக் கொண்டு வந்து விடுவார்கள். மனைவியும் கொடுமைகள் தாங்காமல் ஓடிவிடுவார்கள், அதாவது, தாய் வீட்டிற்கு சென்று விடுவார்கள். தில்லியிலிருந்து வரும் பிலிப் இன்னொரு பெண்ணுக்கு வலை விரிப்பான். இப்படித்தான், இக்குடும்பம் பெண்களின் வாழ்க்கையினை சீரழித்து வாழ்ந்து வருகின்றது.

Mary aka Rajammal - mother of Joseph

வெற்று பத்திரங்கள் எப்படி உபயோகப் படுத்தப் பட்டன?: தில்லியிலிருந்து எப்பொழுது வேண்டுமானால், மிலிடெரி கோட்டாவில் வேலை கிடைக்கும், அதற்காக “அபிடேவிட்” போன்றவை தாக்குதல் செய்யவேண்டும் என்று வெற்று பத்திரங்களில் கையெழுத்து வாங்கி வைத்துக் கொள்வான் என்று மேலே குறிப்பிடப்பட்டது. ஆனால், அவை பெண்களை மிரட்டத்தான் உபயோகப் படுத்தப் பட்டன. புஷ்பலதா விஷயத்தில் அவளது தந்தை தன்னிடத்தில் ஆட்டோ வாங்குவதற்காக ரூ.1.5 லட்சம் பணம் வாங்கியுள்ளதாகவும், ஆனால், இதுவரை கொடுக்கவில்லை என்று பத்திரத்தைக் காட்டி மிரட்டுவான். ரம்யா விஷயத்தில், அவளது அத்தை ரூ. 2 லட்சம் கடன் வாங்கிக் கொண்டாள் என்று பத்திரத்தைக் காட்டினான். அது மட்டுமல்லாது, அதில் பிலிப் ஏற்கெனவே திருமணம் ஆனவன் என்றும், இப்பெணனிவ்விஷயத்தைத் தெரிந்து கொண்டுதான், விரும்பித்தான் திருமணம் செய்து கொள்கிறாள் என்றும் எழுதி வாங்கிக் கொண்டதைப் போல இருந்தது[3].

Usha - sister of Joseph

தாங்கள் பக்தியுள்ள கிருத்துவர்கள் என்று சொல்லிக் கொண்டு உண்மைகளை மறைத்தது: தாங்கள் சிரத்தையுள்ள, பக்தியுள்ள கிருத்துவர்கள் என்று சொல்லிக் கொண்டு, திருமணத்திற்குக் கூட தாங்கள் செலவு மாட்டோம் என்றார்களா. பெண்ணின் தரப்பில் கூட அதிகமானவர்கள் திருமணத்திற்கு வரவேண்டாம் என்பார்கள். திருமணத்தைக் கூட படோபடமாக நடத்த வேண்டாம், ஊருக்கு வெளியில் உள்ள கல்யாண மண்டபத்தில் நடத்தினால் போதும்,  எந்தவித விளம்பரமும் வேண்டாம், திருமண அழைப்பிதழில் கூட பிலிப்பின் பட்டங்களைப் போடவேண்டாம், என்றெல்லாம் சொல்லி ஏதோ மிகவும் எளிமையானவர்கள் போல நடித்தனராம். ஆனால், பிலிப் உண்மையில் ஒன்பதாவது பெயில்! இருப்பினும் அவனிடத்தில் பத்தாவது பாஸ் மற்றும் டிகிரி சர்டிபிகேட் போன்ற போலியான சான்றிதழ்கள் இருந்தன! இவ்வாறு உண்மைகளை மறைத்து, பெண்களை ஏமாற்றி வந்தனர்.

Winesses to Philip marriage

குடிப்பது,  தகாத உறவுகளைக் கொள்வது போன்ற செயல்களில் ஈடுபட்டிருந்தது: தாய் மேரி, சகோதரி உஷா, மகன் பிலிப் முதலியோர் அதிகமாகக் குடிப்பார்களாம். அதுமட்டுமல்லாது, விதவிதமான மாமிச உணவுகளை அளவுக்கு அதிகமாகத் தின்பார்களாம். இப்படி குடித்து, தின்ற பிறகு கும்மாளம் அடிப்பார்களாம். தகாத செயல்களிலும் ஈடுபடுவார்களாம்[4]. இதையெல்லாம் யார் சொல்லிக் கொடுத்தது என்று கவனிக்க வேண்டும். குடும்பம் நடத்தும் இந்திய பெண்கள் இவ்வாறு இருப்பார்களா என்றும் யோசிக்க வேண்டும். பாரதியப் பெண்மணிகள் இவ்வாறு நடந்து கொண்டு மற்ற பெண்களின் வாழ்க்கையினையும் சீரழிப்பார்களா என்று ஆய்ந்து பார்க்க வேண்டும். தாங்கள் தங்களது தனிப்பட்ட வாழ்க்கையில் ஒழுங்கில்லாமல் இருந்தது எப்படி மற்றவர்களை மிக்கக் கொடுமையாக பாதித்துள்ளது என்பதனை கவனிக்க வேண்டியுள்ளது. இந்திய பெண்மை எப்படி அயல்நாட்டுக் காரணிக்ளால் சீரழிகிறது என்பதற்கு இது இன்னொரு உதாரணம் ஆகும். மேலும், 60-80 வருடங்களாக நாத்திகத்தை வளர்த்து, மக்களைக் கெடுத்த சித்தாந்திகளும் இதற்கு பதில் சொல்லியாக வேண்டும்.

வேதபிரகாஷ்

© 17-08-2013


[1] தினமலர், மூன்றுதிருமணம்செய்துபெண்களைஏமாற்றியராணுவசமையல்காரர்கைது, பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 16,2013,20:20 IST; மாற்றம் செய்த நாள் : ஆகஸ்ட் 16,2013,20:42 IST.

[3] He even took the signatures of the girls on a blank bond paper, stating that he would be able to get a job for them through the military quota and that the document had to be submitted urgently. This document would then be used to defraud the girls further. In the case of Pushpalatha, Philip used the signed bond paper to state that her father had borrowed Rs. 1.5 lakhs from him to purchase an auto rickshaw and has not returned the money to him yet. In Ramya’s case, Rs. 2 lakhs was said to be borrowed by her aunt. The bond paper also states that the girls had married Philip of their own accord in spite of knowing about his previous marriages. – http://bridaltears.blogspot.in/

[4] The family followed a pattern of hedonistic and riotous living. They included excessive meat in their diets, but asked the young wives to preserve ¼ litre of milk for 4 days at a stretch. All Philip’s victims have reported that they saw the family drink liquor together, consume vast quantities of meat licentiously, and then practice immoral relations with each other.- http://bridaltears.blogspot.in/