Archive for the ‘தெஹல்கா’ Category

லிப்டில் கட்டிப் பிடித்தார், …….., முத்தமிட்டார், சில்மிஷம் செய்தார்…………, ஜட்டியை கழட்டினார், உள்ளே விரலை விட்டார்…………, “ஓரல் செக்ஸ்” முயன்றார்….. இப்படி புகார் செய்யும் பெண்செய்தியாளர் – புகாரில் சிக்கியுள்ளவர் அதிரடி புலனாய்வு தெஹல்கா ஆசிரியர், அருண் தேஜ்பால் (3)

நவம்பர்22, 2013

லிப்டில் கட்டிப் பிடித்தார், …….., முத்தமிட்டார், சில்மிஷம் செய்தார்…………, ஜட்டியை கழட்டினார், உள்ளே விரலை விட்டார்…………, “ஓரல் செக்ஸ்” முயன்றார்….. இப்படி புகார் செய்யும் பெண்செய்தியாளர் – புகாரில் சிக்கியுள்ளவர் அதிரடி புலனாய்வு தெஹல்கா ஆசிரியர், அருண் தேஜ்பால் (3)

Tarunpal elevator sex11111

தேஜ்பாலின் மீது செக்ஸ் / கற்பழிப்பு முயற்சி விசயம் குறித்து முதல் பகுதி பதிவை இங்கே பார்க்கவும்[1]. பாதிக்கப்பட்ட பெண்ணின் இ-மெயில் கொடுக்கப்பட்டுள்ள விவகாரங்களைத் தெரிந்து கொள்ள இங்கே படிக்கவும்[2]. கற்பழிப்புக்கு / கற்பழிப்பு முயற்சிக்கபட்டதாகக் கூறப்படும் பெண் போலீசாரிடம் புகார் கொடுக்காமல், சோமாவிடம் புகார் கொடுத்ததே வேடிக்கையாக இருக்கிறது. அப்படி அப்பெண் பணிக்கப்பட்டிருக்கிறாளா அல்லது பயமுறுத்தப் பட்டிருக்கிறார்களா என்று தெரியவில்லை. அப்பெண்ணின் இ-மெயிலைப் படிக்கும் போது அவளை தருண் தேஜ்பால் நன்றகவே மிரட்டியிருக்கிறார் என்று தெரிகிறது.

Tarunpal elevator sex123

சோமா சௌத்ரி மற்றும் தருண் தேஜ்பால் உறவுகள்: சோமா சௌத்ரி என்ற இப்பொழுதைய ஆசிரியை, நிச்சயமாக தேஜ்பாலை – தன்னுடைய “தெய்வீகத் தந்தையை” காப்பாற்ற நினைக்கிறார் என்பது தெரிகிறது[3]. ஆனால், “பத்திரிகையின் நிர்வாக ஆசிரியர், பாதிக்கப்பட்டதாக கூறப்படும் பெண், தருண் தேஜ்பால் மன்னிப்பு கேட்க வேண்டும் என மட்டும் தான் கோரியுள்ளார். தருணும் மன்னிப்பு கேட்டுள்ளார். எனவே, இதில் வேறு பிரச்னைக்கு தேவையில்லை என கூறியுள்ளார். ஆனால், இது சட்டப்பூர்வமான வழக்கு அல்ல. இப்பிரச்சனையை அலுவலக மட்டத்தில் தீர்த்துகொள்ள முடிவெடுத்தோம்; இந்த வழக்கை அந்த பெண் தொடர்ந்திருக்கவில்லை”, என்றும் செய்தி ஆசிரியர் சோமா சௌத்ரி கூறியுள்ளார்[4]. அதற்கும், பல தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்[5].  மேலும் சோமாவிற்கு இவ்விசயம் தெரிந்திருந்தும், வேண்டுமென்றே காலந்தாழ்த்தினார் என்றும் கூறப்படுகிறது. அப்பெண்ணின் நண்பர்களில் ஒருவர் இ-மெயில்களை ஊடகங்களுக்கு அனுப்பியப் பிறகு, வேறு வழியில்லாமல், டெஹல்கா-குழிவினர் பேசி, தீர்மானித்து, ஏதோ நடவடிக்கை எடுப்பதைப் போன்ற தோற்றத்தை உருவாக்கியிருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு வலுவடைந்துள்ளது. இருப்பினும் சோமா இவற்றை மறுக்கிறார்[6].

Shoma choudhury and Tarun Tejpal

“நம்மிடையே உள்ள காமவிலங்கு: கற்பழிக்கப்பட்டப் பெண்கள் தங்களது கதைகளைக் கூறுகிறார்கள்”: இதைவிட வேடிக்கை என்னவென்றல் பிப்ரவரி 1, 2013 அன்று கோவாவில் சோமா சௌத்ரி, சுஸ்ஸெட் ஜோர்டென் மற்றும் ஹரீஸ் ஐயர் போன்ற அறிவுஜீவுகள், “நம்மிடையே உள்ள காமவிலங்கு: கற்பழிக்கப்பட்டப் பெண்கள் தங்களது கதைகளைக் கூறுகிறார்கள்”, என்பதைப் பற்றி விவாதித்துள்ளனர்[7]. இப்பொழுது இந்த தெஹல்கா பெண்ணையும் அதேபோல அவளது கதையைச் சொல்ல வைப்பார்களா என்று தெரியவில்லை. சுஸ்ஸெட் ஜோர்டென் இப்பொழுது சொல்கிறார்[8], “போலீசார் பெரிதாக செய்து விடுவார்கள் என்று நினைக்கவில்லை. நாங்கள் இதே மாதிரி இன்னொரு விவாதத்தில் கலந்து கொண்டு, இதே பிரச்சினையைப் பற்றி பேசுவோம், அவ்வளவே தான்”! ஆனால், சோமா கண்டுகொள்ளவில்லை!

Tarun Tejpal and Urvasi Bhutalia

நண்பர், வேண்டியவர், நன்கு தெரிந்தவர் விசாரிக்கப் போகிறாராம்: ஊர்வசி பூடாலியா என்ற பெண் எழுத்தாளர் தலைமையில் இவர் விசாரிக்கப் படுவார் என்று சோமா சௌத்ரி அறிவித்திருப்பதே வேடிக்கையாக இருக்கிறது. ஏனெனில், இவர்கள் எல்லோருமே ஒருவருக்கொருவர் மிகவும் நெருக்கமானவர்கள். தெஹல்காவில் எழுதி வருபவர்கள்[9], இலக்கிய விழாக்களில் ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் ஜாலியாக, சொகுசாக உட்கார்ந்து கொண்டு பேசி மகிழ்பவர்கள். இருவர் மற்றொருவரை அழைத்து உபசரிப்பார். பதிலுக்கு அடுத்தவர், அதேமுறையை பரிமாற்றமாக செய்து காட்டுவார். விருதுகளும், பட்டங்களும் அவ்வாறே பரிமாற்றத்தில் கொடுக்கப் படும். ஆனால், தேஜ்பால், விசாரணைக்கு முன்பாகவே, ஆறு மாத தண்டனை கொடுத்து மறைவாகி விட்டாராம். சட்டரீதியில் இப்படி வேண்டியவர்கள் விசாரணையில் இருக்கக் கூடாது என்றுள்ளது. முன்பு ஶ்ரீனிவாசன் விசயத்தில் குதித்த ஊடகங்கள் இப்பொழுது அமைதி காப்பதைக் கவனிக்கலாம்.

Shoma choudhury and Urvasi Bhutalia

தேஜ்பால் இந்தியாவில் தான் இருக்கிறார், ஓடிவிடவில்லை: இந்தியாவை விட்டே சென்று விட்டார். என்றும் சில செய்திகள் கூறுகின்றன. ஆனால், சோமா நாங்கள் ஒன்றும் ஓடிப்போகின்ற ஆட்கள் இல்லை என்று அடித்துக் கூறுகின்றார்[10], தேஜ்பால் இந்தியாவில்தான் இருக்கிறார் என்கிறார்[11]. பெரும்பாலும், இவர்கள் வெளிநாடுகளில் தான் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். எப்பொழுதாவது தான் இந்தியாவிற்கு வருகிறார்கள். வந்தாலும் ஐந்து நட்சத்திர சொகுசு வாழ்க்கை வாழ்ந்து சென்று விடுகிறார்கள். பிறகு எப்படி இவர்களுக்கு இந்தியாவின் தன்மைகள் தெரியவரும், புரியவரும் என்பது புதிராகத்தான் உள்ளது.

Award for excellence 2010 Tarun-moily

காங்கிரஸும், இவ்விவகாரமும்: நிச்சயமாக தேஜ்பால் காங்கிரஸுக்கு வேண்டியவர் என்று தெரிகிறது. 2004ல் காங்கிரஸ் பதவிக்கு வந்தவுடன், தம்மீதுள்ள வழக்குகளிலிருந்து விடுவிக்க பிரதம மந்திரியிடம் கேட்டுள்ளதாகத் தெரிகிறது. உடனே, அவர் சோனியா காந்திக்கு எழுதியுள்ள கடிதம் அதனை உறுதிப் படுத்துகிறது. அவ்வழக்குகளில் கூட, இவரது கூட்டாளி அநிருத்த பஹல் [Anirudh Bahal and Mathew Samuel] கைது செய்யப்பட்டால் கூட, பிறகு விடுவிக்கப் படுகிறார். அதுமட்டுமல்லாது, தேஜ்பால் அவ்வழக்கை தில்லுக்கு மாற்ற முறையிடுகிறார். அவ்வாறே மாற்றப் படுகிறது. பிறகு, என்னவாயிற்று என்று ஊடகங்களில் விசயங்கள் வரவில்லை. ஆனால், மற்ற ஊடகக்காரர்கள் வியக்கும் வண்ணம் தேஜ்பால் உயர்ந்து கொண்டே போனார். எப்பொழுதும் அயல்நாட்டவர்களின் கூட்டம், தூதரகங்களுடம் நெருக்கம், பார்ட்டிகள் என்று பெரிய ஆட்களுடன் தான் சேர்ந்து பழகி வந்தார். இதெல்லாம், காங்கிரஸுடனான மிகவும் நெருங்கியுள்ள நிலையைக் காட்டுகிறது. கோவாவில் IFFI மணீஸ் திவாரி பேசும்போது, “இது மிகவும் முக்கியமான விசயம், ஜாக்கிரதையாக செயல்பட வேண்டியுள்ளது. இதற்கு நாங்கள் சொல்ல்வேண்டியது யாதாவது இருப்பின், உரியநேரத்தில், தேவைப்பட்டால் சொல்லப்படும்”, என்றார்[12]. இதே குஜராத் டேப் விசயத்தில் படுநக்கல் அடித்து, “சாஹப்ஜாதா” என்று கமென்ட் அடித்து பேசினார்.

© வேதபிரகாஷ்

22-11-2013


[3] Rohit Bansal, Soma Choudhury messes up for Tehelka by batting for godfather Tarumn Tejpal, http://www.dnaindia.com/analysis/standpoint-shoma-chaudhury-messes-up-for-tehelka-by-batting-for-godfather-tarun-tejpal-1923092 (The columnist is CEO & Co-Founder, India Strategy Group, Hammurabi & Solomon Consulting)

[7] Goa, Day 1 of Think Fest 2013 organised by the magazine. The setting: a panel discussion on ‘The Beast In Our Midst: Rape Survivors Speak Their Stories’. Chaudhury, as moderator, began sombrely, stating how 98 per cent of the rapes that take place are by perpetrators known to the victim. “We never look at how deeply misogynistic and prejudiced our own society is,” she said as she turned the spotlight “on our own silences and to deepen our understanding of how complicit we are about the beast in our midst.”

http://www.indianexpress.com/news/day-after-the–crime–the-same-shoma-reflected-on-the–beast-in-our-midst-/1198153/0

[8] The Goa police may have stated their intent to probe the young journalist’s allegations against Tejpal but Jordan is sceptical if it will yield any results. “I don’t really have any expectation regarding the police,” she says. Will she go to another ThiNK Fest and talk about sexual abuse and rape again? “I will, because now there will be even more to say.”

http://www.indianexpress.com/news/day-after-the–crime–the-same-shoma-reflected-on-the–beast-in-our-midst-/1198153/0

லிப்டில் கட்டிப் பிடித்தார், …….., முத்தமிட்டார், சில்மிஷம் செய்தார்…………, இப்படி புகார் செய்யும் பெண்செய்தியாளர் – புகாரில் சிக்கியுள்ளவர் அதிரடி புலனாய்வு தெஹல்கா ஆசிரியர், அருண் தேஜ்பால் (1)

நவம்பர்22, 2013

லிப்டில் கட்டிப் பிடித்தார், …….., முத்தமிட்டார், சில்மிஷம் செய்தார்…………, இப்படி புகார் செய்யும் பெண்செய்தியாளர் – புகாரில் சிக்கியுள்ளவர் அதிரடி புலனாய்வு தெஹல்கா ஆசிரியர், அருண் தேஜ்பால் (1)

Tarun Tejpal attending Rara Avis party in Delhi-Sashi Taroor also attended

மேனாட்டு நாகரிகத்தில் திளைக்கும் தருண் தேஜ்பால்: புலனாய்வு வார பத்திரிகையான, தெஹல்கா ஆசிரியர், அருண் தேஜ்பால், பெண் பத்திரிகையாளர் ஒருவரிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படும் விவகாரம், பூதாகாரமாக உருவெடுத்துள்ளது. ஒரு ராணுவகுடும்பத்தில் 1963ல் பிறந்த தேக்பால், மேனாட்டு நாகரிகத்தில் ஊறிய மனிதர். 2000 வருடத்தில் தஹல்காவை ஆரம்பித்து, 2001லேயே ஆசியாவின் 50 தலைவர்களில் ஒருவர் என்ற புகழ் பெற்றாறாம்! 2009லேயோ மிகவும் சக்தி கொண்ட மனிதர் என்ற நிலையை அடைந்தாராம்!! கீதன் பாத்ரா என்பரை மணந்து கொண்டார். ஆனால், இவர் மற்ற பெண்களுடனும் நெருக்கமாக இருப்பது போல் புகைப்படங்கள் காட்டுகின்றன. ரீடா பீமானி என்பருடன் ஒரு பார்ட்டியில் எடுத்துக் கொண்ட புகைப்படம் உதாரணத்திற்குக் கொடுக்கப்படுகிறது[1] [Author Tarun Tejpal with Rita Bhimani]. தனிமனிதருடைய வாழ்க்கையில் மூக்கை நுழைக்கக் கூடாது, ஏனெனில் அவருடைய உரிமைகளில் தலையிடக் கூடாது என்றெல்லாம் இப்பொழுது வாதிக்கப்படுகிறது, அறிவுருத்தப் படுகிறது. ஆனால், இவர்களுக்கு அந்த யோக்கியதை இருக்கிறதா என்று பொது மக்களும் விவாதிக்க உரிமையுள்ளது. அவருடைய புத்தக வெளியீட்டு விழாக்கள் எல்லாமே குடி-கூத்து-கொண்ட்டாடம் என்றுதான் இருக்கும்[2].

Tarun Tejpal of Tehelka being interviewed by Shoma Chowdhury.3

பாஜகாவின் தர்மசங்கடமான நிலை: ஸ்னூப்பிங், ஸ்டாக்கிங் விசயங்களில் கவலையுடன் இருக்கும் பாஜகவிற்கு சிறிது தெம்பு வந்து விட்டது எனலாம். ஒரு பெண்ணிற்கு, அவளது தந்தையின் வேண்டுகோளுக்கு இணங்க நாங்கள் கண்காணித்ததையே பெண்ணின் உரிமைகளை மீறிய செயல், மோடி பதவி விலக வேண்டும், தேர்தலிலொ நிற்கக் கூடாது என்றெல்லாம் கலாட்டா செய்த காங்கிரஸ் அமைதியாகி விட்டது. அந்த அதிரடி பெண்மணிகள் மறுபடியும் கூட்டம் கூட்டுவார்களா என்று தெரியவில்லை. அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பா.ஜ., வலியுறுத்தியுள்ளது. பா.ஜ., தலைவராக, 2001ல், பங்காரு லட்சுமண் இருந்த போது, ரகசிய, வீடியோ நடவடிக்கையில், அவர் பணம் பெற்றதை, தெஹல்கா டாட் காம் என்ற, இணையதளம் அம்பலப்படுத்தியது. இதையடுத்து, அவரின் பதவி பறிக்கப்பட்டது. இது போல், பல விவகாரங்களில், இந்த ஊடகம், ரகசிய வீடியோ நடவடிக்கைகளை மேற்கொண்டு, பலரின் பதவிகளையும், அதிகாரங்களையும் பறிக்கச் செய்துள்ளது.

Tarun Tejpal with Rita Bhimani

லிப்டில் கட்டிப் பிடித்தார், …….., முத்தமிட்டார், சில்மிஷம் செய்தார்…………, இப்படி புகார் செய்யும் பெண்செய்தியாளர்: முதலில் இணையதளமாக வெளிவந்த அந்த ஊடகம், இப்போது, வார பத்திரிகையாக வெளிவருகிறது. அந்தப் பத்திரிகையின் ஆசிரியராக இருக்கும், தருண் தேஜ்பால், தன்னுடன் பணியாற்றும் பெண் பத்திரிகையாளர் ஒருவரிடம், அநாகரிகமாக நடந்து கொண்டார் என, அந்த பெண் பத்திரிகையாளர், நிறுவனத்தின் நிர்வாக ஆசிரியருக்கு, இமெயில் மூலம், இரண்டு நாட்களுக்கு முன் புகார் அனுப்பினார். பத்து நாட்களுக்கு முன், கோவா நட்சத்திர ஓட்டலில், லிப்டில் ஏறும் போது, தன்னை பலவந்தமாக இழுத்து, தன் பக்கம் அணைத்துக் கொண்டார் என, அந்தப் பெண் கூறியுள்ளார்; இதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார். இப்படி இரண்டு முறை என்னிடம் தகாத முறையில் நடந்துகொண்டார் என்று பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் குற்றம் சாற்றினார்[3].  இமெயிலில் உள்ளவற்றை அப்படியே போடாமல், ஊடகங்கள் அமுக்கி வாசித்துள்ளன.

Tehelka Soma discusses about rape etc at Goa session 2013

ஆறுமாதம் வனவாசம் என்றால் போன மானம் / கற்பு திருப்பி வந்துவிடுமா?: கற்பழிப்புக்கு / கற்பழிப்பு முயற்சிக்கூபட்டதாகக் கூறப்படும் பெண் போலீசாரிடம் புகார் கொடுக்காமல், சோமாவிடம் புகார் கொடுத்ததே வேடிக்கையாக இருக்கிறது. அதையடுத்து, செவ்வாய்க்கிழமை தாமாக முன்வந்து, பத்திரிகை ஆசிரியர் பொறுப்பிலிருந்து, ஆறு மாதம் விலகிக் கொள்வதாக, தருண் தேஜ்பால் அறிவித்தார்.  இது வெவேக் ஜோக் மாதிரி இருக்கிறது. ஒரு குஞ்சுமோனன் கற்பழித்து ரூ.5,000/- அபராதம் கட்டிவிட்டு, அடுத்த பெண்ணைக் கற்பழிக்க அட்வான்ஸ் கொடுத்த கதையாகி விட்டது! மேலும், “கற்பழிப்பு” என்றல் என்ன என்றும் புரியாமல் போய்விட்டது. மானபங்கம், பெண்டாலல், கட்டிப்பிடித்தல், முத்தம் கொடுத்தல், மார்பகங்களைப் பிடித்தல் / அமுக்குதல், இடுப்பில் கைவைத்தல், இப்படி செய்வதில் எது எந்த அளவில் என்ரு தெரியவில்லை. கைபிடித்தால் கூட மானபங்கம் செய்துவிட்டதாகக் கருதப்படுவதால், இப்பொழுதைய கற்பு / கற்பழிப்புக் கொள்கைகள் விவாதங்கள் நவீனப்படுத்தப் பட்டதாகத் தெரிகிறது.

Women are far,far more interestimng than men-Tarun Tejpal-2

தேசிய மகளி ஆணையம், போலீசார் நடவடிக்கை எடுப்பார்களா?: இந்த விவகாரம், புதன்கிழமையன்று பத்திரிகைகளில் வெளியானதை அடுத்து, தெஹல்கா ஊடகத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் கட்சிகள், தருண் தேஜ்பால் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வலியுறுத்தி வருகின்றனர். தெஹல்காவின் இப்பொழுதைய ஆசிரியை சோமா மழுப்பலாக பதி அளித்து சமாளித்து வருகிறார். இது ஏதோ அவர்களது வீட்டுப் பிரச்சினை போல பேசி வருகிறார்[4]. வேடிக்கை என்னவென்றால், தேசிய மகளிர் ஆணையம் காங்கிரஸ் சார்பாக செயல்பட்டு வருகிறார். அவருடைய பெயர் ராஜஸ்தான் தொகுதியில் வேட்பாளராகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தேஜ்பாலோ “பிரச்சார் பாரதி” குழுவின் உறுப்பினராக பரிந்துரைக்கப் பட்டுள்ளார். இப்படி காங்கிரஸ் ஆதரவுன் இருக்கும் இவர்மீது நடவடிக்கை எடுப்பது சந்தேகமே என்ற கருத்து பலமாக இருக்கிறது.

Women are far,far more interestimng than men-Tarun Tejpal-3

கோவா முதலமைச்சர் தயங்குவது ஏன்?: பாஜக ஆட்சி நடக்கும் கோவாவில், அதன் முதலமைச்சர் முதலில் இவ்விவகாரம் குறித்து தயங்கியதாகத் தெரிகிறது. ஏனெனில், கோவாவில் இத்தகைய செக்ஸ் விவகாரங்கள் சாதாரமாக இருக்கின்றன. அயல்நாட்டுக்காரர்கள் அனுபவித்து வரும் நிலையில் அவர்கள் புகார் செய்வதில்லை. ஆனால், இந்தியர்கள் அயல்நாட்டவரைத் தொட்டுவிட்டால், புகார் எழுகின்றது. மேலும், பாஜகவின் மீதே ஸ்னூப்பிங் / ஸ்டாக்கிங் புகார் உள்ளதா நடவடிக்கை எடுக்கலாமா-லூடாதா என்று தயங்கியிருப்பார் போலும்! எடுத்தால் பாஜக ஆட்சி என்பார்கள் எடுக்காவிட்டால், அவர்களே மாட்டிக் கொண்டிருப்பதால் சமாளிக்கிறார்கள் என்பார்கள். இருப்பினும், சம்பவம் நடந்ததாக கூறப்படும், கோவா மாநிலத்தின், பா.ஜ., முதல்வர், மனோகர் பாரிக்கர், தருண் தேஜ்பாலை கைது செய்து விசாரணை நடத்த வேண்டும், என, கூறியுள்ளார். தேசிய மகளிர் ஆணையம், தருண் தேஜ்பாலால் பாதிக்கப்பட்ட பெண், போலீசில் புகார் அளித்து, வழக்கு தொடர வேண்டும் என தெரிவித்துள்ளது[5]. அந்த பெண்ணும் உச்சநீதி மன்றத்தில் விஷாகா தீர்ப்பில் கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை பின்பற்றி தேஜ்பாலின் மீது நடவடிக்கை எடுக்க்க வேண்டும் என்று கோரியுள்ளாள்[6].

Women are far,far more interestimng than men-Tarun Tejpal-4

சோமாவின் ஆதரிக்கும், சமாளிக்கும் போக்கு: சோமா சௌத்ரி என்ற இப்பொழுதைய ஆசிரியை, நிச்சயமாக தேஜ்பாலை காப்பாற்ற நினைக்கிறார் என்பது தெரிகிறது. ஆனால், “பத்திரிகையின் நிர்வாக ஆசிரியர், பாதிக்கப்பட்டதாக கூறப்படும் பெண், தருண் தேஜ்பால் மன்னிப்பு கேட்க வேண்டும் என மட்டும் தான் கோரியுள்ளார். தருணும் மன்னிப்பு கேட்டுள்ளார். எனவே, இதில் வேறு பிரச்னைக்கு தேவையில்லை என கூறியுள்ளார். ஆனால், இது சட்டப்பூர்வமான வழக்கு அல்ல. இப்பிரச்சனையை அலுவலக மட்டத்தில் தீர்த்துகொள்ள முடிவெடுத்தோம்; இந்த வழக்கை அந்த பெண் தொடர்ந்திருக்கவில்லை”, என்றும் செய்தி ஆசிரியர் சோமா சவுத்ரி கூறியுள்ளார்[7]. அதற்கும், பல தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

© வேதபிரகாஷ்

22-11-2013


[2] Veteran journalist and author Tarun Tejpal celebrated the launch of his second bookThe Story of My Assassins at The Park on Saturday with cocktails at Roxy followed by dinner at Zen. The party was attended by t2 columnist Rita Bhimani and husband Kishore, director Anindita Sarbadhicari, percussionist Bickram Ghosh, actor Arjun Chakraborty and his jewellery-designer wife Nilanjana, artist Suvaprasanna, Ruchir Joshi and representatives from foreign consulates. http://www.telegraphindia.com/1090223/jsp/entertainment/story_10577099.jsp