Archive for the ‘தொல்லை’ Category

ஒருதலைகாதலில் ஈடுபட்டு சந்தியாவின் கழுத்தை எல்லோரும் பார்க்கும்படி அறுத்துக் கொன்ற குரூர, வக்கிர காமுகன்!

ஜூலை5, 2016

ஒருதலைகாதலில் ஈடுபட்டு சந்தியாவின் கழுத்தை எல்லோரும் பார்க்கும்படி அறுத்துக் கொன்ற குரூர, வக்கிர காமுகன்!

Sandhya was killed not of her faukt

ஏழ்மையில் பீடி சுற்றி சம்பாதித்து நடத்தும் குடும்பம்: சென்னையில் காதலை ஏற்க மறுத்த பெண் என்ஜினீயர் சுவாதி கொலை செய்யப்பட்டது போல தெலுங்கானாவில் மற்றொரு சம்பவம் நடைபெற்று உள்ளது[1]. பொதுவாக இத்தகைய ஒப்பீட்ட்டை ஆங்கில ஊடகங்களும் பிரயோகித்துள்ளன. ஆந்திராவில் இருந்து பிரிந்த தெலுங்கானாவில் காதலை ஏற்க மறுத்த இளம்பெண் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு உள்ளார்[2].  தெலுங்கானா மாநிலம் அதிபாபாத் மாவட்டம் பைன்பூர் கிராமத்தில் வசித்து வருபவர் சருபாய்[3]. இவரது மகள் டி. சந்தியா (வயது 18). தந்தையை இழந்த இவர் தாயுடன் சேர்ந்து பீடி சுற்றும் வேலை பார்த்து வந்தார்[4]. அதாவது, தந்தை இல்லாத நிலையில், ஒரு பெண் வேலைசெய்து, சம்பாதித்து பெண்னை வளர்க்கும் நிலை. இளம்பெண்ணும், அத்த்தொழிலில் ஈடுபட்டுள்ளது அவர்களது ஏழ்மை ஆனால், உழைத்து சம்பாதிக்க வேண்டும் என்ற நிலையைக் காட்டுகிறது.

Mahesh killer AP of Sandhyaஒருதலைகாதலில் ஈடுபட்ட மகேஷ்: இவர்களது பக்கத்து வீட்டில் வசிப்பவர் எம். மகேஷ் (வயது 22). தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் சந்தியாவை ஒருதலையாக காதலித்து வந்தார். படிக்கும் பையன்கள் இவ்வாறு படிப்பைத் தவிற மற்ற காரியங்களில், குறிப்பாக மாணவிகளில் பின்னால் சுற்றுவது, கலாட்டா செய்வது, காதல் என்பது, காதலிப்பது போன்றவைதான் சீரழிவுக்குக் கொண்டு செல்கிறது. தனது காதலை சந்தியாவிடம் தெரிவித்தார். அவர் காதலிக்க மறுத்து விட்டார் என்று ஊடகங்கள் வெளியிட்டாலும், அத்தகைய எண்ணாத்தில் பெண் இல்லை என்பது எடுத்துக் காட்ட வேண்டும். ஆனால் சந்தியாவை ஒரு ஆண்டாக / ஒன்றரை ஆண்டாக[5] தொடர்ந்து பின்தொடர்ந்து வந்து, காதலிக்குமாறு தொல்லை கொடுத்தார்[6]. அப்பொழுதே – சென்ற ஆண்டு 2015ல் போலீசாரிடம் புகார் கொடுக்கப்பட்டது[7]. ஆனால், சரிவர நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மாறாக இருவரிடையில் சமாதானம் செய்து அனுப்பி விட்டனர்[8]. பிரச்சினையே இங்குதான் ஆரம்பித்துள்ளது எனலாம். மேலும், மகேஷின் பெற்றோர் கண்டித்தாரா-இல்லையா போன்ற விவரங்களை ஊடகங்கள் கொடுக்கவில்லை. பொறுப்புள்ள பெற்றோர், தங்கள் மகன் இவ்வாறு காதல் என்று அடுத்த வீட்டு பெண்ணின் பின்னால் சுற்றிக் கொண்டிருப்பதை அவர்கள் எப்படி அணுகினார்கள், ஆதரித்தார்கள் அல்லது எதிர்த்தார்கள் என்று தெரியவில்லை.

Sandhya murdered in front of manyசந்தியாவின் நிச்சயதார்த்தத்தை நிறுத்திய கயவன்: இந்நிலையில், சந்தியாவிற்கு வீட்டில் வரன் பார்த்துள்ளனர். விரைவில் அவருக்கு திருமணம் நடத்த அவரது பெற்றோர் திட்டமிட்டு, ஜனவரியில் நிச்சயதார்த்தம் வைத்தனர் (தந்தை இல்லை எனாறாலும், தமிழ் ஊடகம் “பெற்றோர்” என்று பன்மையில் குறிப்பிடுவதை கவனியுங்கள். நமது நிருபர்கள் அந்த அளவில் இருக்கிறார்கள்). பக்கத்து வீடான மகேஷுக்கு இது குறித்து தெரிய வந்ததும் அதிர்ச்சி அடைந்துள்ளான்[9]. அதை தடுக்கவும் முயற்சித்தான். தானும், சந்தியாவும் இருப்பது போன்ற புகைப்படத்தை பெண் பார்க்கவந்தவர்களிடம் காட்டி, கலாட்டா செய்தான், இதனால், அந்த நிச்சயதார்த்தம் நின்றது[10]. புகைப்படம் உண்மையா அல்லது இக்கால பையன்கள் மார்பிங் செய்து எடுத்ததா என்று குறிப்பிடவில்லை. இன்று செல்போனில் மேமரா உள்ளது என்பதால், பையன்கள் போலும்-வரும் பெண்களை எல்லாம் போட்டோ எடுத்து வைத்துக் கொள்கிறார்கள். தெரியாமல், சம்மதம் இல்லாமல் இவ்வாறு புகைப்படம் எடுக்கும் நடவடிக்கைகளையும் தடுக்கவேண்டும்.

Sandhya murdered in front of many- AP Dunia representationகடைக்குச் சென்ற சந்தியாவின் பின்னால் வந்தவன் கழுத்தை அறுத்தான்: 02-07-2016 அன்று மதியம் சந்தியா காய்கறி வாங்குவதற்காக வீட்டு அருகே உள்ள கடைக்கு சென்றார், என்கிறது வெப்துனியா. “ஜன்டு பாம்” வாங்கச்சென்றாள்[11] என்கிறது “டெக்கான் குரோனிகல்”! அங்கு நின்று கொண்டிருந்த மகேஷ் அவரிடம் மீண்டும் காதலிக்கும்படி வற்புறுத்தினார்[12]. இதுவே அர்த்தமில்லாதது, ஏனெனில், காதல் என்பது இப்படித்தான் வரும் என்று யார் சொல்லிக் கொடுத்தது என்று தெரியவில்லை. அப்போது தனக்கு திருமண ஏற்பாடு நடக்கிறது. என் பின்னால் சுற்றாதே என்று சந்தியா கண்டித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த மகேஷ் மறைத்து வைத்திருந்த கத்தியால் சந்தியா பின்னால் சென்று அவரது கழுத்தை அறுத்து விட்டு தப்பி ஓடிவிட்டார்[13]. அதாவது, இந்த படுகொலை, பட்டப்பகலில், எல்லோரும் பார்த்துக் கொண்டிருந்த நிலையில் நடந்தது[14]. ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த சந்தியா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்[15]. மகள் கொலை செய்யப்பட்டதை அறிந்த தாய் சருபாய், அவரது உடலை பார்த்து கதறி துடித்தார்[16]. தனக்கு கிடைக்காத சந்தியா வேறுயாருக்கும் கிடைக்கக் கூடாது என்பதற்காக, மகேஷ் அவரை வெட்டிக் கொன்றுள்ளார்[17], என்கிறது “தி.இந்து”!

© வேதபிரகாஷ்

05-07-2016

[1] தினத்தந்தி, காதலிக்க மறுத்த இளம்பெண் பொதுமக்கள் மத்தியில் கழுத்தை அறுத்து கொலை: கல்லூரி மாணவர் கைது, பதிவு செய்த நாள்: ஞாயிறு, ஜூலை 03,2016, 12:34 PM IST; மாற்றம் செய்த நாள்: ஞாயிறு, ஜூலை 03,2016, 12:34 PM IST

[2] http://www.dailythanthi.com/News/India/2016/07/03123427/18-Year-Old-s-Throat-Slit-In-Public-In-Telangana-Attacker.vpf

[3] மாலைமலர், தெலுங்கானாவில் காதலிக்க மறுத்த இளம்பெண் கழுத்தை அறுத்து கொலை: கல்லூரி மாணவர் கைது, பதிவு: ஜூலை 03, 2016 09:55.

[4] http://www.maalaimalar.com/News/TopNews/2016/07/03095502/1023062/Telangana-girl-hacked-to-death-for-rejecting-marriage.vpf

[5] Sources said Mahesh had been harassing the girl since one-and-a-half years.

http://www.deccanchronicle.com/nation/crime/030716/hyderabad-stalker-slits-minor-girls-throat-in-public.html

[6] தினமலர், சென்னையை போல் மேலும் ஒரு சம்பவம் ;காதலை ஏற்க மறுத்த பெண் கொலை, பதிவு செய்த நாள்: ஜூலை3, 2016: 12.00.

[7]  Sandhya had complained of being harassed by him and her family had lodged a complaint with the police last year. Mahesh did not want her to get married to anyone else and had even tried to disrupt her engagement in January this year, police said. The police had earlier brokered peace between the two sides without taking any action against Mahesh.

http://www.ndtv.com/hyderabad-news/telangana-woman-killed-by-alleged-stalker-throat-slit-1427391

[8] http://www.ndtv.com/hyderabad-news/telangana-woman-killed-by-alleged-stalker-throat-slit-1427391

[9] தினபூமி, தெலுங்கானாவிலும் ஒருசுவாதி’ : ஒருதலை காதலால் கழுத்தை அறுத்துக் கொன்ற மாணவர், July 3, 2016.

[10] He created a scene during the engagement function of the girl with another man some time back by showing a photograph in which he was with Sandhya and the incident resulted in cancellation of the engagement.

http://www.deccanchronicle.com/nation/crime/030716/hyderabad-stalker-slits-minor-girls-throat-in-public.html

[11] Mahesh overpowered Sandhya and slit her throat with a small knife while she was coming home after purchasing Zandu Balm from a shop. He fled when a     neighbour raised an alarm on seeing the incident.

http://www.deccanchronicle.com/nation/crime/030716/hyderabad-stalker-slits-minor-girls-throat-in-public.html

[12] http://www.dinamalar.com/news_detail.asp?id=1556141

[13] விகடன், காதலிக்க மறுத்த இளம்பெண் கழுத்து அறுத்து கொலை! இது தெலங்கானாவில்!, Posted Date : 10:43 (03/07/2016)

[14] The Hindusthan Times, 21-year-old stalker slits throat of teen in full public view, Updated: Jul 04, 2016 11:27 IST.

[15] http://www.hindustantimes.com/nation-newspaper/21-year-old-stalker-slits-throat-of-teen-in-full-public-view/story-o9gVP8LET91FTdeEgYb68N.html

[16] http://www.vikatan.com/news/crime/65780-girl-kill-for-refused-love.art

[17] http://tamil.thehindu.com/india/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81/article8806429.ece

ஹஜ்ரீமா, சத்யராஜ் மீது கொடுத்த புகார் அடிப்படையில், பாலியல் தொந்தரவு கொடுத்த சத்தியராஜ் அடுத்த நாளே சஸ்பென்ட் செய்யப்பட்டார்!

ஒக்ரோபர்16, 2015

ஹஜ்ரீமா, சத்யராஜ் மீது கொடுத்த புகார் அடிப்படையில், பாலியல் தொந்தரவு கொடுத்த சத்தியராஜ் அடுத்த நாளே சஸ்பென்ட் செய்யப்பட்டார்!

Headmaster sexually harasses teacher

Headmaster sexually harasses teacher

பள்ளிக்கூடங்களில் கூட ஆசிரியர்கள், ஆசிரியைகளிடம் பாலியல் தொல்லைகள், தொந்தரவுகள், சில்மிஷங்கள், முதலியவற்றை வார்த்தைகள், சைகளை, செயல்கள் மூலம் கொடுத்து வருகிறார்கள்.  பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டிய இடத்தில் இவ்வாறு நடந்து கொள்வது வேலியே பயரை மேய்கிறது என்பதா, கலிகாலம் என்பதா, நாகரிக சீரழிவு என்பதா என்று தெரியவில்லை. குறிப்பாக தலைமை ஆசிரியர்கள், தொடர்ந்து தங்கள் கீழ் பணியாற்றும் ஆசிரியைகளிடம் அவ்வாறு நடந்து கொள்வது நோக்கத்தக்கது[1]. அதிகார துஷ்பிரயோகம் செய்யும் முறையில், செக்ஸும் இணைந்திருப்பது அபாயகரமாக உள்ளது. பள்ளிக்கூடங்களில் மட்டுமல்லாது, பல்கலைக் கழகங்களிலும் கூட மோசமான பாலியல் வக்கிரங்கள் நடந்து வருகின்றன. தில்லியில் என்று பரவலாகப் பேசப்பட்டது, இன்று தமிழகத்தில் பட்டிதொட்டிகளிலும், கிராமங்களிலும் கூட வழக்கமாக இருப்பது திகைப்பாக இருக்கிறது[2]. படித்தவர்களிடம் பக்குவம் வருவதற்கு பதிலாக, வக்கிரம், அதிலும் செக்ஸ்-வக்கிரம் வெளிப்படுவது, அவர்களது, கோரமான மனப்பாங்கினை எடுத்துக் காட்டுகிறது. இவர்களிடம் படிக்கும் மாணவர்களிடம், எத்தகைய ஒழுக்கத்தைக் காணமுடியும் என்ற கேள்வியும் எழத்தான் செய்கிறது. வாத்தியாரே அப்படித்தானே செய்கிறார் என்று அவர்கள் மனங்களில் பதிந்து விட்டால், நாட்டில் இத்தகைய செக்ஸ்-வக்கிரகங்கள் மேன்மேலும் அதிகமாகக் கூடும்.

Headmaster - teacher relationship

Headmaster – teacher relationship

ஹஜ்ரீமாவுக்கு பாலியல் தொந்தரவு: பெண் ஆசிரியருக்கு, பாலியல் தொல்லை கொடுத்ததாக, நல்லூர் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் 14-10-2015 புதன் கிழமை அன்று சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்[3] என்று செய்தி வந்துள்ளது. பிடிஐ செய்தியாகி விட்டபடியால், ஆங்கில நாளிதழ்களில் சுருக்கமாக வந்துள்ளது[4]. சேலம் மாவட்டம், ஏற்காடு வல்லக்கடை / வெள்ளக்கடை  பஞ்சாயத்துக்கு உட்பட்ட நல்லூரில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இதில், அப்பகுதியில் உள்ள, 90 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர்[5]. இதில், தலைமை ஆசிரியர் சத்யராஜ் மற்றும் மூன்று பெண் இடைநிலை ஆசிரியர் உள்பட, ஐந்து பேர் பணிபுரிந்து வருகின்றனர். இப்பள்ளியில் பணிபுரிந்து வரும் ஹஜ்ரீமா என்ற இடைநிலை ஆசிரியை, ஏற்காடு உதவி தொடக்கக்கல்வி அலுவலரிடம் 13-10-2015 அன்று புகார் அளித்தார்[6].

Headmaster harasses teacher

Headmaster harasses teacher

ஹஜ்ரீமா, சத்யராஜ் பற்றி புகார் கொடுத்தது (13-10-2015): ஹஜ்ரீமா அப்புகாரில், கூறியிருப்பதாவது: “பள்ளியின் தலைமை ஆசிரியர் சத்யராஜ், நான் வகுப்பு எடுக்கும் போது, வகுப்பறையில் அமர்ந்து கொண்டு கவனிப்பது மற்றும் பாலியல் சீண்டல் முயற்சிகளில் ஈடுபட்டும் வந்தார். அவருக்கு ஏற்கனவே திருமணமாகி, குழந்தைகள் இருந்த நிலையில், என்னை இரண்டாவது திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தி வந்தார். முதல் பருவ தேர்வு விடுமுறை முடிந்து, பள்ளிக்கு வரும் போது, திருமணத்துக்கு சம்மதம் தெரிவிக்காவிட்டால், தற்கொலை செய்து கொள்வேன் என, மிரட்டல் விடுத்தார்[7]. இதனால், கடும் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது”, இவ்வாறு அவர் புகாரில் கூறியுள்ளார்[8]. திருமணம் ஆகி, குழந்தைகள் உள்ளவர்கள் இவ்வாறு செக்ஸ்-சீண்டல்களில் ஈடுபடுவதும் நோக்கத்தக்கது. தனிப்பட்ட வாழ்க்கை சரியில்லை அல்லது இல்லற தோல்வி, குடும்பப் பிரச்சினை என்றெல்லாம் சாக்கு வைத்துக் கொண்டு அடுத்த பெண்களிடம் தொந்தரவு செய்வது அடுக்காது. மேலும், தமிழ் கலாச்சாரம், திராவிடம் என்றெல்லாம் பேசிக்கொண்டிருக்கும் காலத்தில், இவ்வாறு நடந்து கொள்வதற்கான காரணத்தையும் ஆராய வேண்டியுள்ளது.

விசாரணைக்குப் பிறகு சத்யராஜுக்கு சஸ்பென்ஷன் (14-10-2015): இப்புகாரின் அடிப்படையில், ஏற்காடு உதவி தொடக்கக்கல்வி அலுவலர் ஷேக்தாவூத், பள்ளியில் சக ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியரிடம் விசாரணை நடத்தி, அறிக்கையை மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலரிடம் சமர்பித்தார்.  இந்த அறிக்கை, இயக்குனரகத்துக்கு அனுப்பப்பட்டு, இயக்குனரின் வழிகாட்டுதலின் அடிப்படையில், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் தங்கராஜ், 14-10-2015 அன்று நல்லூர் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சத்யராஜை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்[9]. பாலியல் புகாரில் சிக்கி, தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் ஆன சம்பவம், ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது[10]. புகார் கொடுத்த ஒரே நாளில் விசாரித்து தண்டனை கொடுத்துள்ளதும் கவனிக்கத்தக்கது. உதவி தொடக்கக்கல்வி அலுவலர் ஷேக்தாவூத் மற்றும் புகார் கொடுத்தவர் ஹஜ்ரீமா என்றதால், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்ற கேள்வியும் எழத்தான் செய்கிறது. பெண்கள் பிரச்சினை பெண்கள் பிரச்சினையாக, பொதுவாக எடுத்துக் கொள்ளப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படுகிறதா, அல்லது பாரபட்சம் உள்ளதா என்றும் நோக்கத்தக்கது. ஏனெனில், மற்ற புகார்களில், வேறுவிதமாக நடந்து கொள்வதும் தெரிய வருகின்றன.

© வேதபிரகாஷ்

15-10-2015

[1] Firstpost, Tamil Nadu: Headmaster, two teachers suspended for sexual harassment, Jan 30, 2015 15:49 IST

Virudhunagar, Tamil Nadu: The headmaster and two teachers of a government higher secondary school in the district have been suspended for allegedly sexually harassing some women teachers in the institution. They were suspended after a departmental inquiry was conducted by the District Education Officer (DEO) on complaints by the teachers of sexual harassment by the trio, Chief Educational Officer Jayakumar said today. The teachers informed local people about the harassment they had to undergo over a period of time, following which they staged a demonstration here, demanding action against the three on November 26, last year.The people also gave a complaint to Education Department officials demanding action, following which an inquiry was conducted.The Director of School Education suspended headmaster Kumarasamy, teachers Udhayasuriyan and Manivannan of the school at Chinnakamanpatti after the report by the DEO, Jayakumar said.PTI

http://www.firstpost.com/india/tamil-nadu-headmaster-two-teachers-suspended-sexual-harassment-2072095.html

[2] The Hindu, Headmaster under fire for sexually harassing teacher, Updated: May 13, 2015 05:57 IST. A complaint against a headmaster of a panchayat union elementary school was submitted to the district police authorities here on Tuesday alleging that he had sexually harassed a woman teacher of the same school who ended her life by setting herself ablaze a few days ago.The family members of the victim and the people of south Rayapatti, where the school is situated, submitted the petition to the Superintendent of Police E.S. Uma seeking action against headmaster Mathivanan for allegedly torturing and sexually harassing the woman teacher. A mother of two, the teacher committed suicide by immolating herself on May 7 and a case was registered in Ganesh Nagar police station in this connection. The petitioners said the woman ended her life unable to tolerate the sexual harassment meted out to her by the headmaster and sought action against the latter. Ms. Uma said investigation would be carried out based on the complaint. A separate complaint was given to the Chief Educational Officer seeking action against the headmaster.

http://www.thehindu.com/news/national/tamil-nadu/headmaster-under-fire-for-sexually-harassing-teacher/article7199670.ece

[3]  தினமலர், ஆசிரியைக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு பள்ளி தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட், அக்டோபர்.15, 2015: 00.03.

[4] http://www.sakshipost.com/index.php/news/national/64965-school-headmaster-suspended-for-harassing-teacher.html?psource=Dontmiss

[5] http://www.dinamalar.com/news_detail.asp?id=1364537

[6]  தினமணி, பள்ளி ஆசிரியை பாலியல் புகார்:தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம், By ஏற்காடு, First Published : 16 October 2015 04:33 AM IST.

[7] Business Standard, School headmaster suspended for ‘harassing’ teacher, Press Trust of India , Salem (TN) October 15, 2015 Last Updated at 11:57 IST.

A headmaster has been suspended for allegedly harassing a woman teacher of his school under Nallurpanchayat in the district, officials said today.  The headmaster, Sathyaraj, allegedly used to tell her to marry him or otherwise he would commit suicide.  After the District Educational Officer (DEO) inquired into the matter, Chief Educational Officer Gnanagowri ordered that the headmaster be suspended, the officials said.  The suspension order was served on him through the DEO last evening, they added. http://www.business-standard.com/article/pti-stories/school-headmaster-suspended-for-harassing-teacher-115101500331_1.html

[8] தமிழ்முரசு, சேலம் அருகே பாலியல் புகாரில் சிக்கிய தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட், அக்டோபர்.15, 2015.

[9]http://www.dinamani.com/edition_dharmapuri/salem/2015/10/16/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0/article3082807.ece

[10] http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=82897