Archive for the ‘பத்வா’ Category

விவாகரத்து அதிகமாவதேன் – குழந்தைகள் தவிப்பது, குடும்பங்கள் உடைவது, சமூகம் சீரழிவது அதிர்ச்சியடைவதாக உள்ளது (கேரளாவின் கதை)!

ஜூன்23, 2016

விவாகரத்து அதிகமாவதேன் – குழந்தைகள் தவிப்பது, குடும்பங்கள் உடைவது, சமூகம் சீரழிவது அதிர்ச்சியடைவதாக உள்ளது (கேரளாவின் கதை)!

Kerala divorce rate- cine field

வருடத்திற்கு 50,000ற்கும் மேலாக விவாக ரத்து இந்தியாவில் நடக்கின்றன: அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிபர கணக்கின்படி, இந்தியாவில் 12க்கும் மேற்பட்ட மாநிலங்களில் விவாகரத்துகள் அதிகம் நடக்கிறது[1]. 2014 ம் ஆண்டின் கணக்கின் படி மிக அதிகபட்சமாக கேரளாவில் ஒரு மணிநேரத்திற்கு 5 விவகாரத்துகளும், நாள் ஒன்றிற்கு 130 விவாகரத்துகளும் வழங்கப்படுகின்றன[2]. மக்கட் தொகை அதிகமாக உள்ள இந்தியாவில் இத்தகைய புள்ளி விவரங்களை வைத்து விவரங்களைக் கொடுப்பது, அவற்றை செய்திகளாகப் போடுவது, அவற்றை வைத்து விளக்கம் கொடுப்பது போன்றவற்றில் ஓரளவிற்கே உண்மை நிலையை அறிய முடியும். குற்றங்கள், கொலைகள், விபத்துக்கள் ஆகியவற்றிற்கு எடுக்கப்படுவதை போல் நாடு முழுவதும் நடக்கும் விவகாரத்துக்கள் தொடர்பான புள்ளிவிபரங்கள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை என்று 2015ம் ஆண்டு மார்ச் மாதம் பாராளுமன்றத்தில் கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த மத்திய அரசு தெரிவித்துள்ளது. இருப்பினும் கோர்ட்டுகளில் நிலுவையில் உள்ள விவகாரத்து வழக்குகளின் அடிப்படையில் பட்டியல் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 10 ல் 6 ஆண்கள் தங்களின் மனைவியை அடிக்கும் வழக்கம் கொண்டவர்கள் என 2014ம் ஆண்டு நவம்பர் மாதம் ஐநா வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Muslim-Population-Kerala-Map

கேரளாவில் விவாக ரத்து அதிகம் ஏன்?: இதில் மற்ற மாநிலங்களை விட கேரளாவில் 2014ம் ஆண்டு மட்டும் 47,525 விவகாரத்து வழக்குகள் கையாளப்பட்டுள்ளது[3]. கேரளாவில் படித்த மக்கள் அதிகமாக இருக்கின்றனர். மக்கட்தொகை வைத்துப் பார்க்கும் போது, இந்து (55%), கிறிஸ்தவ (18%) மற்றும் முஸ்லிம்கள் (27%) கணிசமாக இருக்கின்றனர். இதில் முஸ்லிம்களைத் தவிர மற்ற மதத்தினர் திருமணம் என்பது ஒரு நிரந்தர பந்தம், உடையக் கூடாதது என்று தான் நம்புகின்றன. இருப்பினும், இவ்வாறு கேரளாவில் அதிகமாவது ஆராய்ச்சிக்குரியதே ஆகும். விவகாரத்துகள் அதிகம் நடக்கும் மாநிலங்களில் கேரளா முதலிடத்திலும், மகாராஷ்டிரா 2வது இடத்திலும், கர்நாடகா 3வது இடத்திலும், மத்திய பிரதேசம் 4வது இடத்திலும், அரியானா 5வது இடத்திலும் உள்ளன. விவகாரத்துகளுக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், கணவரால் துன்புறுத்தப்படுவதே அதிக விவாகரத்து வழங்கப்படுவதற்கான காரணமாக உள்ளது[4].  கேரளாவைப் பொறுத்தவரையில், இது ஒன்றும் புதிய விசயமல்ல. கடந்தாண்டுகளின் புள்ளிவிவரங்களும் ஏறுமுகமாகவே இருக்கின்றன.

 

மாவட்டம் இந்து முஸ்லிம் கிருத்துவர்
Kasaragod 7,05,234 4,13,063 84,891
Kannur 14,80,748 6,65,648 2,61,090
Kozhikode 16,69,161 10,78,759 1,27,468
Wayanad 3,92,141 2,09,758 1,75,495
Malappuram 10,57,418 24,84,576 1,75,495
Palakkad 18,02,766 7,03,596 1,09,249
Thrissur 17,61,842 4,88,697 7,20,152
Ernakulam 14,44,994 4,51,764 12,04,471
Idukki 5,66,744 81,222 4,80,108
Kottayam 9,63,497 1,16,686 8,71,371
Alappuzha 14,57,188 2,08,042 4,41,643
Pathanamthitta 6,94,560 56,457 4,81,602
Kollam 16,85,044 4,74,071 4,23,745
Thiruvananthapuram 22,02,112 4,31,512 5,95,563

 

கேரளாவில் விவாகரத்து அதிகம் என்பது 2009-2011 புள்ளிவிவரங்களும் தெரிவிக்கின்றன[5]: கேரளாவில் 2010ல் மட்டும் பல குடும்ப நல கோர்ட்டுகளில் தாக்கல் செய்யப்பட்டுள்ள விவாகரத்து தொடர்பான வழக்குகள் எண்ணிக்கை மட்டும், 10,926 ஆக அதிகரித்துள்ளது. மாநிலத்தில் விவாகரத்து கோருவோர் எண்ணிக்கை, ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. மாநிலத்தில் 1984ம் ஆண்டு சட்டப்படி, குடும்ப நல கோர்ட்டுகள் அமைக்கப்பட்டன. இவ்வாறு திருவனந்தபுரம், கொல்லம், கோழிக்கோடு, கண்ணூர் ஆகிய மாவட்டங்களில், தலா இரண்டு வீதம், இக்கோர்ட்டுகள் செயல்படுகின்றன. இதில் திருவனந்தபுரம் மாவட்டத்தில், மிக அதிக எண்ணிக்கையில் விவாகரத்து வழக்குகளும், வயநாடு மாவட்டத்தில் குறைந்தளவு வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு புள்ளி விவரங்களைக் கொடுத்து விட்டு காரணங்கள் கூறாமல் அல்லது பொதுவாக கூறுவதால் பிரச்சினையைத் தீர்க்க முடியாது.

Religious demography of Kerala 2001-11

கேராளாவில் அயல்நாடுகளில் வாழும் நிலை, தனியாக இருக்கும் நிலை – விவாகரத்தில் முடிகிறது: கேரளாவைப் பொறுத்த வரையில், ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலருமே அயல்நாடுகளில் சென்று வேலை செய்கின்றனர். இதனால், திருமணம் ஆன நிலையில், ஒருவேளை, ஆண் அல்லது பெண் வேலையில்லாமல் இருக்கும்போது, அல்லது குடும்பத்தை, சொத்தை, மற்ற விசயங்களுக்காக கேரளாவிலேயே இருக்க வேண்டியுள்ளது. ஒரு வருடத்திற்கு அல்லது அதற்கும் மேலான காலத்தில் வந்து செல்லும் கணவன் அல்லது மனைவி என்றிருக்கும் போது, தனியாக இருக்கும் மனைவி அல்லது கண்ணவன், தாம்பத்தையத்தை மீறிய உறவுகளில் சிக்குகிறார்கள் அல்லது ஈடுபடுகிறார்கள். அதேபோல, அயல்நாடுகளில் வேலை செய்யும் கணவன் அல்லது மனைவி நிலைப் பற்றியும் ஒன்றும் சொல்லமுடியாது. அவர்களும் அதேபோல மற்றவர்களுடன் உறவு வைத்துக் கொள்ளலாம். இந்நிலையில் தான், அத்தகைய தாம்பத்தைய உறவுகள் மீறிய விவகாரங்கள் தெரிய வரும் போது விவாகரத்தில் முடிகிறது. முஸ்லிம்களைப் பொறுத்த வரையில் எந்த பிரச்சினையும் இல்லை, ஏனென்றால், அவர்களது மதம் பலதார மணமுறையை சட்டப்படி ஆக்கியுள்ளது. ஆனால், மற்ற மதத்தவர்களிடையே, இது சட்டமீறாலாகி, விவாகரத்தில் முடிந்து, குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றன.

Divorce - affected children- talaq- islam

கேரள மாவட்டங்கள் ரீதியான விவாகரத்துகள் மூலம் அறியப்படுவன: கண்ணூர் பகுதியைச் சேர்ந்த வக்கீல் தாம்ஸ்ட்டின் கே. அகஸ்டின் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெற்ற விவரங்களின் அடிப்படையில் இத்தகவல்கள் வெளியாகி உள்ளது. இதன்படி, மாநிலத்தில் விவாகரத்து கோருபவர்களின் எண்ணிக்கை, தலைநகர் திருவனந்தபுரத்தில், கடந்தாண்டு மட்டும் 1,747 ஆக இருந்தது. குறைந்தளவாக வயநாடு மாவட்டத்தில், 198 வழக்குகள் மட்டுமே பதிவாகி இருந்தன.  இது தவிர, எர்ணாகுளம், திருச்சூர் மாவட்ட குடும்ப நல கோர்ட்டுகளில், 10 ஆண்டுகளில், அதிர்ச்சி தரும் அளவுக்கு, இவ்வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எர்ணாகுளம் மாவட்ட குடும்ப நல கோர்ட்டில், 1999ம் ஆண்டு விவாகரத்து வழக்குகளாக, 196 வழக்குகளும், அதுவே 2010ம் ஆண்டு, 1,100 வழக்குகளாக அதிகரித்து விட்டது.அதேபோல், திருச்சூர் மாவட்ட குடும்ப நல கோர்ட்டில், 1999ம் ஆண்டு, 335 வழக்குகளாக இருந்த நிலை மாறி, 2010ம் ஆண்டு மட்டும், 1,059 ஆக அதிகரித்துள்ளது. கண்ணூர் மாவட்டத்தில், 1999ம் ஆண்டு, 663 ஆக இருந்த வழக்குகள், 2010ம் ஆண்டு 716 ஆக மட்டுமே அதிகரித்துள்ளது[6]. இவ்வாறு மாவட்ட – நகர ரீதியில் உள்ள விவாகரத்துகள் ஏன் என்றா காரணங்கள் சொல்லப்படவில்லை.

© வேதபிரகாஷ்

23-06-2016


 

[1] தினமலர், அதிகரிக்கும் விவாகரத்துகள் : கேரளா முதலிடம், ஜூன்.20,2016, 15:24.

[2] http://www.dinamalar.com/news_detail.asp?id=1548539

[3] தினத்தந்தி, கேரளாவில் ஒரு மணி நேரத்திற்கு 5 விவாகரத்து நடக்கிறது அதிர்ச்சி தகவல், பதிவு செய்த நாள்: புதன், ஜூன் 22,2016, 2:51 PM IST; மாற்றம் செய்த நாள்: புதன், ஜூன் 22,2016, 2:51 PM IST.

[4] http://www.dailythanthi.com/News/India/2016/06/22145133/Kerala-has-a-really-high-divorce-rate-5-cases-adjudged.vpf

[5] தினமலர், கேரளாவில் விவாகரத்து அதிகரிப்பு:ஒரே ஆண்டில் 10,926 வழக்குகள், மே.7, 2011: 00.24.

[6] http://www.dinamalar.com/news_detail.asp?id=237017&Print=1

Advertisements

பாட்டுப்பாடி பேன்டு வாசித்த பெண்களை ஆபாசமாக பேஸ்புக்கில் திட்டியவர்களில் மூன்று பேர் கைது!

பிப்ரவரி8, 2013

பாட்டுப்பாடி பேன்டு வாசித்த பெண்களை ஆபாசமாக பேஸ்புக்கில் திட்டியவர்களில் மூன்று பேர் கைது!

பாட்டுப்பாடி பேன்டு வாசித்த காஷ்மீரப் பெண்கள்: காஷ்மீரில் அடிப்படைவாதம் போர்வையில், இந்திய-விரோத, இஸ்லாம் தீவிரவாதிகள் எதிர்ப்புத் தெரிவித்து பத்வாவும் போட்டிருக்கறார்கள். இந்தியாவில் பெண்களும் எல்லா துறைகளிலும் முன்னேறி வருகின்றார்கள். மருத்துவ-தொழிற்துறைகளில் பெண்களின் ஆதிக்கம் மற்றும் தாக்கம் அதிகமாகவே உள்ளது, இந்நிலையில் ஆண்களால் ‘பேண்ட்’ எனப்படும் இசைக்குழுக்கள் நடத்தப்பட்டு வந்த நிலையில், காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவிகள் ஒன்றிணைந்து ‘பிரகாஷ் பேண்ட்’ (Pragash) என்ற பெயரில் புதிய இசைக்குழு ஒன்றை உருவாக்கினார்கள். அதில், நோமா நசீர், ஃபாரா, அனீகா காலித் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இசைக்குழுவுக்கு ”பிரகாஷ்” (முதல் ஒளி) என்று பெயரிடப்பட்டனர். கடந்த டிசம்பரில் அவர்கள் முதல் போட்டியில் கலந்து கொண்டனர். முற்றிலும் பெண்களே இடம்பெற்ற இந்த இசைக்குழு, அரங்கேற்றத்தின் போதே, இசைக்குழுக்களுக்கிடையே நடந்த திறைமைப் போட்டியில் முதல்பரிசையும் வென்றுள்ளார்கள்[1].

பெண்கள் இசைக்கருவிகளை வாசிப்பது, பாடுவது இஸ்லாமிய வாழ்க்கை நெறிக்ககு எதிரானது: இந்நிலையில், இசைக்கருவிகளை வாசிப்பதும், பாடுவதும் இஸ்லாமிய வாழ்க்கைக்கு எதிரானது “ஹராம்” (இஸ்லாத்தில் விலக்கப்பட்டது, ஏற்றுக் கொள்ளமுடியாதது) என்று குற்றம் சாட்டிய பழமை வாதிகள், இந்த இசைக்குழுவை தடை செய்ய வேண்டும் என ‘பத்வா’ (இஸ்லாம் கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது விதிக்கப்படும் தடை ஆணை) வழங்கினார்கள். இந்த பத்வாவை மீறி பிரகாஷ் இசைக்குழுவின் பயணம் தொடர்ந்தால், எதிர்விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் அவர்கள் மிரட்டல் விடுத்திருந்தனர். ஜம்மு-காஷ்மீர் மாநிலம் 1980களினின்றே அடிப்படைவாதிகள், பழமைவாதிகள், தீவிரவாதிகள் கைகளில் சிக்கித் தவித்து வருகின்றது. இந்துக்கள் பெரும்பாலாக விரட்டியளிக்கப் பட்டுள்ள நிலையில், முஸ்லீம்களும் தீவிரமான இஸ்லாம் மயமாக்குதல் முறைக்குத் தள்லப்பட்டுள்ளனர். இதனால், முஸ்லீம் பெண்களும் பலவிதக கட்டுப்பாடுகளில் சிக்கித் தவித்து வருகின்றனர்.

இருவிதமாகப் பேசி மழுப்பிய உமர் அப்துல்லா: இந்த மிரட்டலுக்கு கண்டனம் தெரிவித்த ஜம்மு-காஷ்மீர் மாநில முதல் மந்திரி உமர் அப்துல்லா, பிரகாஷ் இசைக்குழுவினரை மிரட்டும் அதிகாரம் யாருக்கும் இல்லை. அந்த குழுவின் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும். இருப்பினும், இசை நிகழ்ச்சிகள் நடத்துவதை அவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று சொதப்பலாக கூறியிருந்தார். ஆங்கில செனல்களில் இருவிதமாகப் பேசியதிலிருந்தே அவரும் பழமைவாதிகளுக்கு துணைப் போவது தெரிந்தது. பொதுவாக ஆக்ரோஷமாகப் பேசி கொதிக்கும் திருமதி முப்தி முஜஹமது காணாமல் போனது வேடிக்கைதான். ஆகவே எதிர்பார்த்தப்படியே, இந்நிலையில், பிரகாஷ் இசைக்குழு இனிமேல் நிகழ்ச்சிகள் எதையும் நடத்துவதில்லை என முடிவெடுத்துள்ளதாக அந்த குழுவினருக்கு நெருக்கமான ஒருவர் கூறியதாக காஷ்மீர் ஊடகங்கள் நேற்று தெரிவித்துள்ளன. இதைத் தொடர்ந்து, இசைக்குழுவை கலைக்க 3 மாணவிகளும்முடிவு செய்தனர்[2]. இதற்குள், இணைத்தளத்தில் இப்பெண்களுக்கு எதிராக விவாதம் தொடங்கப் பெற்று, அவர்களைக் கடுமையாக விமர்சிக்கப்பட்டனர்.

பேஸ்புக்கில் ஆபாசமாக இடுகைகளையிட்ட முஸ்லீம்கள்: ஜம்மு-காஷ்மீரில் செயல்பட்டு வந்த, பெண்கள் இசை குழுவுக்கு, சமூக வலைத் தளங்கள் மூலமாக, மிரட்டல் விடுத்தவர்களுக்கு எதிராக, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்[3]. மிகவும் தரக்குறைவான வார்த்தைகள் உபயோகப்படுத்தி தாக்கியுள்ளனர். சுமார் 900 பேர் பேஸ்புக்கில் விமர்சனம் செய்துள்ளனர். அதில் 26 பேர் அத்தகைய வார்த்தைத்தீவிரவாதம் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளனர். “விரைவில், அவர்கள் கைது செய்யப்படுவர்’ என்றும், அறிவித்துள்ளனர். அத்துடன், காஷ்மீரிலுள்ள, இஸ்லாம் மத குருவான, பஷீருதீன் அகமது (Mufti Bashir-ud-din) என்பவரும், இந்த பெண்கள் இசை குழுவுக்கு எதிராக, தடையுத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து, இசை குழுவில் இடம் பெற்றிருந்த, மூன்று பெண்களுமே, “இனிமேல் இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்க போவது இல்லை’ என, அறிவித்தனர்.

மற்ற முஸ்லீம் பெண்களை விடுத்து எங்களை ஏன் எதிர்க்க வேண்டும்?: பல இஸ்லாமியப் பெண்கள் பாட்டுப் பாடி வருகிறார்கள், ஆனால், அவர்களை யாரும் எதிர்த்ததில்லை. எங்களை ஏன் எதிர்க்கிறார்கள் என்று தெரியவில்லை, இருப்பினும் நாங்கள் நிறுத்திக் கொள்கிறோம் என்று அறிவித்துள்ளனர். இதற்கிடையே, இவர்களுக்கு, சமூக வலைத் தளமான,”பேஸ்புக்’ மூலமாக, மிரட்டல் விடுத்தவர்களுக்கு எதிராக, காஷ்மீர் போலீசார், வழக்கு பதிவு செய்துள்ளனர். “தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ், சம்பந்தபட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து முழு வீச்சில் விசாரணை நடக்கிறது. மிரட்டல் விடுத்தவர்கள், விரைவில் கைது செய்யப்படுவர்’ என, காஷ்மீர் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், “மிரட்டல் விடுத்துள்ளவர்களில், ஆறு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மற்றவர்களையும், அடையாளம் காணும் பணி, நடக்கிறது. அடுத்த சில நாட்களில், கைது நடவடிக்கை துவங்கும்‘ என்றன.

தாராளமனப்பாங்குக் கொண்ட முஸ்லீம்கள் கேள்வி கேட்டது: இதற்கிடையே, காஷ்மீரில் செயல்பட்டு வரும், பிரிவினைவாத அமைப்புகளுக்கு இடையே, இந்த பெண்கள் இசைக் குழுவை எதிர்ப்பதில், கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. எம்.கே.எம்., என்ற அமைப்பைச் சேர்ந்த, ஜமருதா ஹபீப் கூறுகையில், “ஆண் பாடகர்களுக்கு எதிராக, தடையுத்தரவு பிறப்பிக்காதது ஏன்? அரசுப் பணிகளிலும், ராணுவ நடவடிக்கைகளிலும், ஏராளமான பெண்கள் பணியாற்றுகின்றனர்; அவர்களுக்கு தடையுத்தரவு பிறப்பிக்காதது ஏன்?,” என, கேள்வி எழுப்பியுள்ளார். வக்கம் போல அருந்ததி ராய் மாயமாகியுள்ளார் அல்லது அமைதியாக உள்ளது வேடிக்கையாக உள்ளது. பெண்கள் இப்படியெல்லாம் பாடக்கூடாது என்றால், நூர்ஜஹான்[4], ரூனா லைலா, நாஸியா ஹுஸைன் போன்றோர் பாடியிருக்க முடியாது; குறிப்பாக பாகிஸ்தானிய பாப் பாடகி நாஸியா ஹுஸைன் குர்பானி படத்தில் “ஆப் ஜைஸா கோயி மேரி ஜிந்தகி மே ஆயி” என்ற பாடலைப் பாடி அடியிருக்க முடியாது என்று முஸ்லீம் கலைஞர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தானிலேயே பாப் இசைக்குழுக்களில் பல பெண்கள் பாடி வருகின்றனர்[5].

ஆறில் மூன்று பேர் கைது: பேபுக்கில் அவ்வாறாக இடுகைகளையிட்டவர்களில் ஐ.பி.எண்களை வைத்துத் துப்புத்துலக்கித் தேடியதில் மூன்று பேர் சிக்கியுள்ளனர்[6]. பிஜ்பேஹராவில் தாரிக் கான் (தெற்கு காஷ்மீரில் ஒரு ஊர்), ரமீஜ் ஷா கந்தேர்பல் (மத்திய காஷ்மீர்) மற்றும் இர்ஷத் அஹமத் சாரா படமலூ (ஶ்ரீநகர்) என்ற இடங்களிலிருந்து கைது செய்துள்ளதாக போலீஸார் அறிவித்துள்ளனர்[7]. முதலமைச்சர் உமர் அப்துல்லா அவர்களை பாராட்டியுள்ளதை[8] வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேதபிரகாஷ்

08-02-2013


[4] 1940-60களில் ஹிந்தித் திரைப்பட பிரபலமான பாடகி. இவருக்குப் பின்னால்தான், லதா மங்கேஸ்கர் வந்தார்.

[8] Three persons have been arrested by the Jammu and Kashmir Police in connection with the alleged online abuses and threats to the all-girls rock band, Pragaash. Jammu and Kashmir Chief Minister Omar Abdullah tweeted, “I’m glad the police in Kashmir has identified and arrested people for the online threats made to the girls. I’m told more arrests are possible.”