Archive for the ‘பலதாரம்’ Category

சாமியார் வேடம் போட்டு, பில்லி சூன்யம் எடுக்கும் போர்வையில் பல பெண்களை கற்பழித்தது, போலீஸ் வேடம் போட்டு, டோல்கேட் வரி கட்டாமல் இருந்தது! பலே பலே திராவிட சாமியார்!

மே29, 2019

சாமியார் வேடம் போட்டு, பில்லி சூன்யம் எடுக்கும் போர்வையில் பல பெண்களை கற்பழித்தது, போலீஸ் வேடம் போட்டு, டோல்கேட் வரி கட்டாமல் இருந்தது! பலே பலே திராவிட சாமியார்!

Ongur fake wizard and sami-1

பெரியார் மண்ணில் பில்லிசூனயம் எடுக்கும் சாமியார்: வழக்கம்போல மறுபடியும் சாமியார் என்ற போர்வையில் ஒரு ஏமாற்று பேர்வழி பல பெண்களை ஏமாற்றியுள்ளது திகைப்பாக உள்ளது. இது பெரியார் மண், கடவுள் இல்லை என்றெல்லாம் பிரச்சாரம் செய்து, கோவில்களில் உள்ள சிலைகளை திருடி அது போன்ற காரியங்கள் எய்து வந்தாலும், இது போலமக்கள் ஏமாந்து போன கதையை மறுபடியும் படிக்கும்போது புதிராகத்தான் உள்ளது. திராவிட திருநாட்டில் ஒரு பக்கம் நாத்திகம் பேசி கொண்டும், “பெரியார் மண்” என்று தம்பட்டம் அடித்துக் கொண்டும், பகுத்தறிவு ரீதியில் பிரச்சாரம் செய்து கொண்டு இருந்தாலும், மறுபக்கம் திராவிட மணி போன்றவர்கள், மக்களை ஏமாற்றி வந்தது கவனிக்கத் தக்கது. பகுத்தறிவு வேலை செய்யவில்லையா, பில்லி-சூனியம் வேலை செய்ததா, மக்கள் அதனை நம்புகின்றனர் என்பதை கவனிக்க வேண்டும். எப்படியாவது பணத்தை சம்பாதித்து விடவேண்டும் என்ற போக்கு காணப்படுகிறது. லஞ்சம் கொடுப்பதற்கு லஞ்சம் வாங்கு என்ற தத்துவத்தை உருவாக்கி வைத்திருப்பது போல, இத்தகைய ஏமாற்று வேலைகளுக்கு ஒரு புதிய தத்துவத்தை உருவாக்க வேண்டும் போலிருக்கிறது.

Ongur fake wizard and sami-7

பில்லிசூன்னியம் நீக்குவேன் என்று பெண்களை வசப்படுத்தினானாம்!: காஞ்சிபுரம் சூணாம்பேடு கிராமத்தை சேர்ந்த மணி என்கிற செல்வமணி / பெருமாள் மணி [35 வயது], விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஓங்கூரில் மாந்​திரீகம் செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்தாரன் என்று கதையினை ஊடகங்கள் ஆரம்பிக்கின்றன. மனைவியை பிரிந்த செல்வமணி, தான் ஒரு சாமியார் என்றும், மாந்திரீகம் செய்து, பில்லி-சூனியம் போன்றவைகளை நீக்கி தருவதாகவும் கூறி வந்துள்ளார்[1]. இதற்காக நீண்ட தாடி, ஜடா முடியுடன் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பாதிரி, ராயநல்லூர், காட்ராம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வலம் வந்தார். மேலும் மக்களை கவரும் வகையில் ஆன்மிகம் குறித்தும் பேசி வந்துள்ளார். இதனால் அவரை நம்பிய பல பெண்கள் பில்லி-சூனியத்தை நீக்கி தருமாறு சாமியாரை நாடி சென்றனர்[2]. அந்த சமயத்தில் அவர்களை பற்றி முழுவதும் அறிந்து கொள்ளும் மணி, பில்லி-சூனியத்தை நீக்குவதாக கூறி அவர்களது வீடுகளுக்கு சென்று வந்தார். இதில் பல பெண்களை கவர்ந்து, அவர்களை கணவரிடம் இருந்து பிரித்து சென்று தன்வசமாக்கி குடும்பம் நடத்தி வந்ததாகவும், சிறிது நாட்களுக்கு பிறகு அந்த பெண்களை ஏமாற்றி விட்டு, வேறு பெண்களை தேடி சென்றுவிடுவார் என்றும் கூறப்படுகிறது. தற்போது மதுரையை சேர்ந்த ஹேமா (40) என்ற பெண்ணுடன் சேர்ந்து வாழ்ந்து வருகிறான்[3].

Ongur fake wizard and sami-5

பல பெண்களை தன்னோடு தங்க வைத்துள்ளான்: பாதிரி, ராயநல்லூர், காட்ராம்பாக்கம் பகுதிகளில் பில்லி, சூனியம் செய்து, நல்ல வருமானம் ஈட்டியுள்ளார்[4]. தம்மிடம் மாந்திரீகம் செய்ய வரும் இளம் பெண்களையும் குடும்ப பெண்களையும் தம்மோடு மாதக் கணக்கில் தங்க வைத்துள்ளார்[5]. தனது விருப்பத்துக்கு இணங்க வைத்த மணி, எதிர்ப்பு தெரிவிக்கும் பெண்களையும் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.  அம்பலமாகியுள்ளது[6]. மாந்திரீகம் என்ற பெயரில் பெண்களை வாழ்வை சூறையாடும் செல்வமணியின் வாழ்க்கை தொடர்​ந்து கொண்டிருந்தது. என்பதெல்லாம், எப்படி சாத்தியம் என்று புரியவில்லை. பெண்கள் என்ன அந்த அளவிற்கு முட்டாள்களா, ஒருவன் கூட படுத்து, இவ்வாறு சோரம் போவதற்கு என்பது புதிராக உள்ளது. இல்லை, அவர்களும், இவனோடு சேர்ந்து, விபச்சாரம் செய்தார்களா என்று தெரியவில்லை. இதைப் போன்ற செய்திகள் அதிகமாக வந்து கொண்டே இருக்கின்றன. கைதுகள் நடக்கின்றன. ஆனால், மறுபடியும் அதே குற்றங்கள் தொடர்கின்றன.

Ongur fake wizard and sami-3

மகளை தனியாக அனுப்பி மாந்திரீகம் செய்ய ஒப்புக் கொண்ட தந்தை: காஞ்சிபுரம் மாவட்டம் வடமணிப்பாக்கம் பகுதியை சேர்ந்த ஒருவர், தனது மகளுக்கு ஏற்பட்ட பிரச்சினையை தீர்க்க மாந்திரீகம் செய்யுமாறு செல்வமணியை நாடியுள்ளார். அப்போது, அந்த இளம்பெண்ணை தம்மோடு தங்க வைத்து மாந்திரீகம் செய்ய வேண்டி இருப்பதாக செல்வமணி கூறியுள்ளார். மகளை செல்வமணியுடன் அனுப்பி ஓராண்டாகியும் திரும்ப அனுப்பாததால் திரும்ப அனுப்புமாறு, அந்த பெண்ணின் தந்தை கேட்டுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மாந்திரீக செல்வமணி, அந்த பெண்ணை தமக்கு திருமணம் செய்து வைக்குமாறு, பெண்ணின் தந்தையை மிரட்டியுள்ளார். இதனிடையே, அந்தப் பெண்ணை மாந்திரீக செல்வமணி, பாலியல் பலாத்காரம் செய்ததும் தெரியவந்தது. இதனால், அதிர்ச்சி அடைந்த இளம்பெண்ணின் தந்தை, போலீஸில் புகாரளித்தார். உடனடியாக களமிறங்கிய போலீசார் மாந்திரீக செல்வமணி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த ஹேமா ஆகியோரை கைது செய்தனர். மாந்திரீகம் செய்வதாக, பெண்களின் வாழ்க்கையை சூறையாடிய சம்பவம் அறிந்து அப்பகுதியினர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Ongur fake wizard and sami-4

போலி சாமியார், பல வேடங்களில் பலரை ஏமாற்றி வந்திருக்கிறானாம்: பின்னர் சாமியாரிடம் நடத்திய விசாரணையில் அவர் போலி சாமியார் என்பதும், ஹேமாவை அவரது கணவரிடம் இருந்து பிரித்து வந்து தன்வசப்படுத்திக்கொண்டதும் தெரியவந்தது[7]. டிப் டாப் மனிதராக இருக்கும் மணி ஒட்டு தாடியுடன், சாமியார் உடை அணிந்து கையில் வேப்பிலையுடன் வலம் வந்துள்ளாரன்[8]. சாமியார் என்ற போர்வையில் பல பெண்களின் வாழ்க்கையை அவர் சீரழித்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது[9]. எனவே தொடர்ந்து அவரிடம் தீவிர விசாரணை நடத்த இருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  ஒரு ஊரில் ஏமாற்றியதும், ‘கெட் அப்’பையும் மாற்றிக் கொள்வான். பொதுமக்களிடம் பல இடங்களில் அடி, உதை வாங்கியும் தப்பி வந்துள்ளான். போலீஸ் வேடம் போட்டு, டோல்கேட்டுகளில் காசு கொடுக்காமல் சென்றதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது[10].  இவன் மூன்று முறைகல்யாணம் செய்து கொண்டிருக்கிறான். இரண்டுகுழந்தைகளும் இருக்கின்றன[11]. சில வருடங்களுக்கு முன்னர், அவர்கள் பிரிந்து சென்று விட்டனர். மற்ற பெண்களை பாலியல் ரீதியில் பலாத்காரம் செய்ததற்கு ஆதாரம் இல்லை என்று போலீஸார் சொல்கின்றனர்[12]. அதாவது, பாதிக்கப் பட்ட பெண்கள் புகார் கொடுக்கவில்லை என்றால், ஆதாரங்கள் இல்லை என்று தான் ஆகும்.

© வேதபிரகாஷ்

27-05-2019

Ongur fake wizard and sami-6

[1] மாலைமலர், திண்டிவனம் அருகே இளம்பெண்ணை கற்பழித்த போலி சாமியார் கைது, பதிவு: மே 28, 2019 04:53

[2] https://www.maalaimalar.com/News/District/2019/05/28045348/1243648/young-girl-molestation-Fake-priest-arrested-in-tindivanam.vpf

[3] தினத்தந்தி, இளம்பெண்களை பலாத்காரம் செய்ததாக போலி சாமியார் கைது..., பதிவு : மே 28, 2019, 12:37 PM

[4] https://www.thanthitv.com/News/TamilNadu/2019/05/28123757/1036832/Fake-Manthrikan-Selvamani-heldSexual-Harassment.vpf

[5] தினமணி, பாலியல் வன்கொடுமை: போலி சாமியார் கைது, By DIN | Published on : 28th May 2019 08:55 AM.

[6] https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2019/may/28/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-3159989.html

[7] தினமலர், பெண்கள் வாழ்க்கையில் விளையாடிய போலி சாமியார் கைது, Added : மே 28, 2019 03:36.

[8] https://www.dinamalar.com/news_detail.asp?id=2285470

[9] தமிழ்.ஏசியா.நெட், நியூஸ், பில்லிசூனியம் எடுப்பதாக கூறி இந்த சாமியார் செஞ்ச வேலையப் பாருங்க !!, Published 28, May 2019, 7:33 AM IST.

[10] https://tamil.asianetnews.com/crime/pillisoonoyam-goddman-rape-a-girl-and-arrest-ps6z1x

[11] Indian Express, Villupuram: Man sexually abuses girl on pretext of black magic, Allegedly kept her in his custody for over six months, arrested, Published: 29th May 2019 03:40 AM | Last Updated: 29th May 2019 03:40 AM

[12] “Villagers allege that Selvamani had been targeting women from helpless families and blackmailed them saying that they must have sexual relations with him to make the rituals work,” the police said. The accused had been married and has two children. His wife and children left him a few years ago. However, the police said there were no evidence for his affair with other women.

http://www.newindianexpress.com/states/tamil-nadu/2019/may/29/villupuram-man-sexually-abuses-girl-on-pretext-of-black-magic-1983025.html

இந்தியாவில் விவாகரத்து அதிகமாவதேன் – குழந்தைகள் தவிப்பது, குடும்பங்கள் உடைவது, சமூகம் சீரழிவது அதிர்ச்சியடைவதாக உள்ளது!

ஜூன்23, 2016

இந்தியாவில் விவாகரத்து அதிகமாவதேன் – குழந்தைகள் தவிப்பது, குடும்பங்கள் உடைவது, சமூகம் சீரழிவது அதிர்ச்சியடைவதாக உள்ளது!

Grounds for divorce in Indian laws

விவாகரத்து பெறும் முன்பு மறுதிருமணம் செய்ய முடியுமா? [1]: இந்திய குடும்பவியல் நடைமுறைச் சட்டத்தின் படி நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தொடர குறைந்த பட்சம் திருமணம் ஆகி ஒரு வருட காலம் ஆகி இருக்க வேண்டும். தற்போதைய குடும்பவியல் நடைமுறை சட்டத் திருத்தத்தின்படி கணவர் மற்றும் மனைவி ஆகிய இருவரின் சம்மதத்தின் பேரில் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்தால் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்த ஒரு சில தினங்கள் கழித்து நீதிமன்றத்தில் மறுதிருமணம் பற்றி மனு தாக்கல் செய்து விட்டு விவாகரத்து கிடைக்கும் முன் வேறு ஒருவரை மறுதிருமணம் செய்து கொள்ளலாம் என்று சட்டத்தில் கூறப்படுகிறது[2]. இதனால், மறுமணங்கள் அதிகரிக்கின்றன. ஆனால், அதற்கேற்றப்படி, அத்தகைய மறுமணங்களும் பிளவுபடுகின்றன. மனோதத்துவரீதியில், மறுமணம் செய்து கொள்ளும் தம்பதியர் அதிககாலம் சேர்ந்து வாழ்வதில்லை. மனத்திற்குள், இவள் – இவன் ஏற்கெனவே திருமணம் ஆனவள் – ஆனவன், இன்னொருவனுடன் – இன்னொருத்தியுடன் உடலுறவு கொண்டவள் – கொண்டவன் என்ற எண்ணம் உருத்திக் கொண்டே இருக்கும். குழந்தைகள் இருந்தால், பிரசினை சீக்கிரம் வரும். மறுமணம் ஆகிய பிறகு குழந்தைகள் பிறந்தால், அப்பிரச்சினைகள் இன்னும் வளரும்.

Divorce rate Madurai figuresவிவாகரத்திற்கு காரணம் குடும்ப வாழ்க்கை முறை சிதைந்தது தான்[3]: குடும்பநல கோர்ட்டுகளில் இப்போது விவாகரத்து வழக்குகள் நிரம்பி வழிகின்றன. ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான விவாகரத்து வழக்குகள் கோர்ட்டுகளில் பதிவானபடி உள்ளன. இது சம்மந்தமாக சுப்ரீம் கோர்ட்டு பல வழிகாட்டுதல்களை தெரிவித்து உள்ளது. தம்பதிகளிடம் ஆலோசனை கூறி விவாகரத்துக்களை தவிர்க்கும்படி கோர்ட்டு கூறி இருக்கிறது. ஆனாலும் விவாகரத்து வழக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது. இதற்கு முக்கியமான காரணம் குடும்ப வாழ்க்கை முறை சிதைந்தது தான் என்று ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு கூறி இருக்கிறது. தனிக்குடித்தனம், மன அழுத்தங்கள், காலதாமதமான திருமணம், நிதி பிரச்சினை போன்றவையும் விவாகரத்து வழக்கு வருவதற்கு முக்கிய காரணங்களாக உள்ளன. இங்கும், “குடும்ப வாழ்க்கை முறை சிதைந்தது” என்பதை ஆராய வேண்டும். முதலில் “குடும்பம்” மற்றும் “குடும்ப வாழ்க்கை முறை” என்பது என்ன என்பதனை ஒரு வரையறைக்குள் விவரிக்கப் பட்டால் தான் நிலைமை தெளிவாகும். இந்தியாவைப் பொறுத்த வரையில், பாரம்பரிய குடும்பமுறை போற்றப்படுகிறது. பொதுவாக, மாறி வரும் இக்காலத்திலும் கணவன்-மனைவி மட்டுமல்லாது, அவர்களது பெற்றோர் என்ற நிலையுள்ளது. இது கூட்டுக்குடும்பம் அக்காவிட்டாலும், பேரன்-பேத்திகளைப் பார்த்துக் கொள்ளும் நிர்பந்தங்களில் இருக்கின்றது. மணமகள் ஒப்புக்கொண்டு, பொறுத்துக் கொண்டு, அனுசரித்துக் கொண்டு இருக்கும் வரை நீடிக்கிறது. இல்லை, அதுவே விவாக ரத்திற்கான ஒரு காரணாமாக அமையும் நிலையும் ஏற்படுகிறது.

No of divorced in India 2011 census படித்த தம்பதிகள் மத்தியில் விவாகரத்து அதிகரிப்பு: சுப்ரீம் கோர்ட்டு கவலை[4]: இந்த நிலையில் டெல்லியில் விவாகரத்து வழக்கு ஒன்றை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் சப்ரே, அசோக்பூஷண் ஆகியோர் விசாரித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது: “நாட்டில் விவாகரத்து வழக்குகள் அதிகமாகி வருவது கவலை அளிக்கிறது. அதுவும் படித்தவர்கள் மத்தியில் தான் அதிக பிரச்சினை வருகிறது. சின்ன பிரச்சினைகளுக்கும் படித்தவர்கள் ஏன் அடித்துக் கொள்கிறார்கள். உங்களுடைய பிரச்சினைகளை நீங்கள் உட்கார்ந்து பேச வேண்டும். விவாகரத்து வழக்குகளை கொண்டு வரும் வக்கீல்கள் சம்மந்தப்பட்ட தம்பதிகளை ஒன்று சேர்ப்பதற்காக முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் அந்த தம்பதிகள் ஒன்று சேர்ந்து வாழ்ந்தால் நாங்கள் மகிழ்ச்சி அடைவோம். இது சம்மந்தமாக முறையான விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும்”, இவ்வாறு அவர்கள் கூறினார்கள். படித்தவர்கள் என்பதை விட, படித்து வேலையில் உள்ள தம்பதியினர், அதிலும், ஐடி போன்ற கம்பெனிகளில் அதிகமான சம்பளத்தைப் பெற்று, வசதியாக வாழ்ந்து, ஜாலியாக வேழ்க்கையினை அனுபவித்து வரும் ஆண்-பெண்களிடம் தான் இப்போக்கு அதிகமாக இருக்கிறது.

Divorce - affected childrenடி.வி. சீரியல்களால் தமிழகத்தில் விவாகரத்து வழக்குகள் அதிகரித்துள்ளது (2009)[5]: டி.வி. சீரியல்களால் தமிழகத்தில் விவாகரத்து வழக்குகள் அதிகரித்துள்ளதாக மாநில சமூக நலத் துறை ஆணையர் என்.பி.நிர்மலா தெரிவித்தார். குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த தமிழ்நாடு சமூக நலத் துறை சார்பில் சென்னையில் பயிலரங்கு நடைபெற்றது.   அதில் அவர் பேசியதாவது: “தொலைக்காட்சியில் நாள் முழுவதும் ஒளிபரப்பப்படும் தொடர்களில், சிறியப் பிரச்னைகள் ஊதிப் பெரிதாக காட்டப்படுகின்றன. இதன் காரணமாக, சிறியப் பிரச்னைகளும் பெரிதாக்கப்பட்டு, தற்போது விவாகரத்து கோரப்படுகிறது.   மொத்தம் 2,376 வழக்குகள்: குடும்ப வன்முறைச் சட்டம் 28.10.06-ம் தேதி அமல்படுத்தப்பட்டது. இந்த சட்டத்தின் கீழ் தமிழகத்தில் இதுவரை 2,376 வழக்குகள் சமூக நலத் துறையின் விசாரணைக்கு வந்துள்ளன. இதில் 139 வழக்குகளில் இருதரப்பினருக்கும் சமரசம் செய்யப்பட்டுள்ளது. 920 வழக்குகள் தீர்க்கப்பட்டுள்ளன”, என்றார் அவர்.   இவர் 2009ல் இப்படி சொன்னாலும், 2016ல் நிலைமை ஒன்றும் மாறிவிடவில்லை, மோசமாகத்தான் போயுள்ளது. விவாகம் பற்றிய நல்லதையே போதிக்கும் முறையில் டிவி, சினிமா மற்ற ஊடகங்கள் இல்லை. திருமணத்திற்கு புறம்பான செக்ஸ் போன்றவற்றைத்தான் ஊக்குவிக்கும் வகையில் விவரங்களைக் கொடுத்து வருகிறார்கள்.

Times of India illustration -misuse of Section 498A of the Indian Penal Code by womenபெண்கள் இதைக் கேடயமாகப் பயன்படுத்த வேண்டும். ஆயுதமாகப் பயன்படுத்தக் கூடாது (2009) – உயர் நீதிமன்ற நீதிபதி கே.என்.பாஷா: “குடும்ப வன்முறை சட்டம் நமது சமூகத்துக்கு மிகவும் தேவையான சட்டம். நமது நாட்டில் திருமணமான பெண்கள் 40 சதவீதம் பேர் கணவர்களால் துன்புறுத்தப்படுகின்றனர்.   மனைவி, தாய், சகோதரி அனைவரும் குடும்பப் பிரச்னைகளால் வன்முறைக்கு ஆளாகின்றனர். குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அளிக்கவும், அவர்களைப் பாதுகாக்கவும் இந்த சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.   இந்த சட்டத்தின்படி, தண்டனை முக்கியமல்ல. நிவாரணம்தான் முக்கியம்.   பெண்கள் இதைக் கேடயமாகப் பயன்படுத்த வேண்டும். ஆயுதமாகப் பயன்படுத்தக் கூடாது”, என்றார் நீதிபதி கே.என்.பாஷா[6].   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு சமூக நல வாரியத் தலைவர் சல்மா, பெண் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் சாந்தகுமாரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். சட்டத்தை துஷ்பிரயோகம் செய்வது, ஒரு பெண் பலரை மணப்பதும், ஒரு ஆண் பல பெண்களை திருமணம் செய்து கொள்வதிலிருந்தே தெரிகிறது.

Times of India illustration 498-Aகற்ப்பைப் பற்றி மோசமான, கீழ்த்தரமான எண்ணத்தை உருவாக்கி வைத்துள்ளது:  சமீபகாலத்தில், நடிக-நடிகர்கள், சமூகப் பிரச்சினைகளைப் பற்றி, தங்களது, அதிகப்பிரசிங்கத்தனமான கருத்துகள், ஆலோசனைகள் முதலியவற்றை ஊடகங்களின் மூலம் சொல்லி வருவதால், அவை, எளிதில் மக்களுக்குச் சென்றடைகிறது. மேலும், இப்பொழுதைய ஊடக விளம்பரங்கள், சினிமாக்கள் பெண்களை கேவலமாகச் சித்த்ரிக்கின்றன. சென்ட்-டூத் பேஸ்ட்டிற்காகவே படுக்க வந்து விடுவாள் போன்று சித்தரிக்கப்படுகிறது. இது குடும்பத்தோடு பார்த்து ரசிக்கப்படுகிறது. பொதாகுறைக்கு, ஒரு தாயே, மகன் “டேடிங் / பொரோபசலுக்கு” செல்லும் போது, அத்தகைய சென்டை பரிந்துரைக்கிறாள். பலதார கமல்ஹஸன் குடும்ப உறவுகளைப் பற்றி பேசுவது மோசமாக உள்ளது. போதாகுறைக்கு “சேர்ந்து வாழும்” முறை ஆதரித்து பரப்பி வருவது, விபச்சாரத்தை ஆதரிப்பது போல உள்ளது. அதேபோல, முன்னர் குஷ்பு கற்ப்பைப் பற்றி சொன்னதும் படுகேவலமானது. அதாவது, எந்த ஒழுக்கத்தையும் கடைப்பிடிக்காமல் இருக்கும் இவர்கள், தாம்பத்தியம், குடும்பம், குடும்ப வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை முறை முதலியவற்றைப் பற்றி பேசுவதற்கு அருகதை உள்ளதா என்று யோசிக்க வேண்டியுள்ளது.

© வேதபிரகாஷ்

23-06-2016

[1] தமிழ்.வெப்துனியா, விவாகரத்து பெறும் முன்பு மறுதிருமணம் செய்ய முடியுமா?

ஞாயிறு, 19 ஜூன் 2016 (07:30 IST)

[2] http://tamil.webdunia.com/article/regional-tamil-news/can-you-remarriage-116061900003_1.html

[3] மாலைமலர், படித்த தம்பதிகள் மத்தியில் விவாகரத்து அதிகரிப்பு: சுப்ரீம் கோர்ட்டு கவலை, பதிவு: மே 21, 2016 10:16.

[4] http://www.maalaimalar.com/News/TopNews/2016/05/21101620/1013213/increasing-divorce-cases-SC-says-couples-must-sort.vpf

[5] தினமணி, டி.வி. சீரியல்களால் விவாகரத்து அதிகரிப்பு, By First Published : 12 July 2009 03:36 AM IST.

[6] http://www.dinamani.com/edition_chennai/chennai/article1048604.ece

இனி இதுபோல யாரையும் ஏமாற்றி திருமணம் செய்ய மாட்டேன் – மோசடி பெண் உறுதி – ஆறு கணவன்மார்கள் புகார் செய்யவில்லை – அதனால் விடுதலை!

ஜூன்15, 2016

இனி இதுபோல யாரையும் ஏமாற்றி திருமணம் செய்ய மாட்டேன் – மோசடி பெண் உறுதி – ஆறு கணவன்மார்கள் புகார் செய்யவில்லை – அதனால் விடுதலை!

Selvakumar marrying Mariammal - Pavithra

இனி இதுபோல யாரையும் ஏமாற்றி திருமணம் செய்ய மாட்டேன் – மோசடி பெண் உறுதி: பிரச்சினை பெரியதாவது உணர்ந்த பவித்ரா விசயத்தை கமுக்கமாக முடித்துக் கொள்ள முயன்றாள். மற்ற ஆறு கணவர்கள் வெளிப்படையாக வராமல் இருப்பதும் நோக்கத்தக்கது. ஒரு வேளை, போலீசாரும் அத்தகைய ஐடியாவைக் கொடுத்திருக்கலாம். அதனால், பவித்ரா உடனடியாக 15 பவுன் நகையை செல்வகுமாரிடம் கொடுத்தார். இதையடுத்து, செல்வகுமார் நகையை வாங்கி கொண்டு பவித்ரா மீது கொடுத்த புகாரை திரும்ப பெற்று கொண்டு சென்றுவிட்டார். அத்துடன் அக்டோபர் 2015 முதல் மே 2016 வரை நடந்த தாம்பத்திய உறவு முடிந்து விட்டது போலும்! முறையான விவாக ரத்துப் பற்றி கூட கவலைப்படவில்லை என்றால், முறாஇயா அத்திருமணம் பதிவு செய்யப்பட்டதா, இல்லையா என்ற கேள்வியும் எழுகின்றது. பவித்ராவின் மற்ற கணவர்கள் பற்றிய விவரம் தெரியவில்லை. அவர்கள் யாரும் புகார் அளிக்காததால் பவித்ராவிடமும், முதல் கணவர் கர்ணனிடமும் போலீசார் எழுதி வாங்கி கொண்டனர். ஆனால், முறையாக விவாகரத்து நடந்ததா, செய்த திருமணங்கள் செல்லுமா, இது குற்றமாகுமா என்றெல்லாம் போலீசார் ஆராய்ச்சி செய்யவில்லை என்பது பெரிய வேடிக்கைதான். பின்னர், போலீஸ் விசாரணைக்கு அழைத்தால் தான் எப்போது வேண்டுமானாலும் வரத் தயார் என்றும், இனி இதுபோல யாரையும் ஏமாற்றி திருமணம் செய்ய மாட்டேன் என்றும் உறுதி மொழி அளித்த பின் பவித்ரா என்ற மாரியம்மாள் விடுவிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்[1].

Selvakumar marrying Mariammal - Pavithra-seveth marriageஆறு கணவர்கள் புகார் கொடுக்கவில்லை – அதனால் வழக்கில்லை, பெண் விடுதலை: “இனி இதுபோல யாரையும் ஏமாற்றி திருமணம் செய்ய மாட்டேன்” என்பதும் ஆச்சரியம் தான். அதாவது, இதுவரை செய்தது மோசடி, போலி திருமணம், சட்டத்திற்குப் புறம்பானது என்று தெரிகிறாது. பிறகு போலீசார் எப்படி விடுவிக்கலாம். கல்யாண ராணியிடம் ஏமாந்த விஷயத்தில் புகார் தர அவரது மாஜி கணவர்கள் யாரும் முன் வராத காரணத்தால் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்படவில்லை[2]. அதாவது, அவர்கள் திருமணம் செய்து கொண்டதே சந்தேகத்தில் உள்ளது. மேலும் அவர்கள் தங்களது விவரங்கள் வெளியே வர விரும்பவில்லை என்றும் தெரியவில்லை. அப்படியே விவகாரங்களை அமுக்கவே அவர்கள் முயல்கிறாற்கள், தீர்மானமாக இருக்கிறாற்கள் என்று தெரிகிறது. செல்வகுமாரிடம் வாங்கிய நகைகளைத் திரும்ப கொடுத்தது போல, அவர்களிடம் ஏன் நகைகளைத் திரும்ப கொடுக்கவில்லை என்பதும் கேள்விக்குறியாக உள்ளது. இந்த திருமண மோசடிக்கு தாராபுரம், உடுமலை, பழனி, திருப்பூர் பகுதிகளைச் சேர்ந்த திருமண புரோக்கர்கள் 9 பேர் உதவி செய்துள்ளனர்[3]. இவர்களது விவரம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர், என்று செய்தி முடிகிறது[4]. குற்றம் செய்த பெண்ணையே விடுவித்த பிறகு, கல்யாண தரகர்களை என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை.

Selvakumar marrying Mariammal - with many witnessesபோலித் திருமணமா, குறுகிய கால தாம்பத்தியமா, விபச்சாரமா: ஒரு பெண் ஏழு பேரைத் திருமணம் செய்து கொண்டு உறவு வைத்துக் கொள்கிறாள் என்றால், சட்டப்படி அவள் ஆறுமுறை விவாகரத்து செய்து கொண்டு, ஏழாவது திருமணத்திற்கு தயாராகி இருந்திருக்க வேண்டும். இந்த உறவுகளை என்னென்பது, ஏதென்பது. கற்பைத் துச்சமாக மதித்து ஏழு கணவர்களுடன் முதலிறவு நடத்தியுள்ளாள் என்றால், அவளை மனைவி என்பதா, தருமப் பத்தினி என்பதா, திராவிட வழக்கில் துணைவி என்பதா என்று புரியவில்லை. மனம்-உடல் இரண்டுமே ஒத்துப் போனால் தான் ஒரு பெண் அவ்வாறு செய்ய முடியும். ஓரளவிற்கு விபச்சாரி போன்ற மனநிலையை அடைந்திருக்க வேண்டும். கணவன், இவற்றிற்கெல்லாம் ஒப்புக்கொள்கிறான் என்றால், அவனும் ஒரு புரோக்கராகி விட்டான் என்றே ஆகிறது! பிறகு இவர்கள் மற்றவர்களின் திருமண பந்தத்தைப் பற்றி என்ன கவலைப் பட போகிறார்கள்? ஆகவே, பணம், நகை கிடைக்கும் என்றாலும், இப்பெண் தனது உடலை வைத்து வியாபாரத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளாள் என்று தெரிகிறது. மனைவியாக இருந்து, சல்லாபித்து, நம்பிக்கையைப் பெற்ற பிறகு தான், எந்த பெண்ணும் கணவனிடமிருந்து, நகை, பணம் முதலியவற்றைப் பெறா முடியும். அந்நிலையின் கணவனது தாய்-தந்தையர், குடும்பத்திற்கும் விவரங்கள் தெரிய வரும்.

Selvakumar marrying Mariammal - with many witnesses-TVஒழுக்கமற்ற, குடும்பங்களை, சமுதாயத்தை சீரழிக்கும் குற்றம்: தாராபுரம், உடுமலை, பழனி, திருப்பூர் பகுதிகளில் அப்படியொன்றும் மக்களை ஏமாற்றிவிட முடியாது. எனவே, இதில் சம்பந்தப்பட்ட கணவர்களுக்கும் சபலம் இருந்ததா, அவ்வாறு ஜாலியாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில், புரோக்கர்கள் மூலம் ஒப்புக் கொண்டு நடந்து கொண்டனரா, அல்லது புரோக்கர்கள் மூலம் ஏமாற்றப்பட்டனரா என்று விசாரிக்க வேண்டும். குறிப்பிட்ட காலத்தில் ஏழு ஆண்களுடன் திருமணம், முதலிறவு, குறுகிய காலத்தில் தொடர்ந்த உறவு என்றேல்லாம் இருப்பது, எந்தவிதத்திலும் ஏற்புடையதல்ல. அப்பெண் துணிந்து விட்டதாலும், முதல் கணவனே அவ்வாறு ஒப்புக் கொண்டு செய்வதாலும், இது மிகவும் அசிங்கமாகி விட்டிருக்கிறது. மோசடி செய்து சம்பாதிக்க இது ஒரு வழியாக்க முடியாது. பணம் உள்ளவர்கள், மோகத்திற்குக் கூட உபயோகித்துக் கொண்டிருக்கலாம். ஆனால், அதுவும் ஒழுக்கமாகாது. குடும்பங்களை சீரழிக்கும், பிளவுகளை ஏற்படுத்தும், உடைக்கும்,  என்ற நிலைகளும் உள்ளன. அதனால் தான், ஆறு பேர் அமைதியாக இருக்கிறார்கள் போலும். இது சமுதாயத்தை சீரழிக்கும் வேலை என்பதால் குற்றமாகத்தான் கருத வேண்டும்.

போலி மோசடி திருமணங்கள்பெண்மைப் பிரச்சினைகள் பெண்கள் ஏன் முறையாக அணுகுவதில்லை: பெண்ணியத்தவர், பெண்ணிய சித்தாந்திகள், பெண்ணிய வீராங்கனைகள், “தமிழச்சி” என்று சொல்லி மார்தட்டிக் கொண்டு உலாவரும் நவநகரிக பெண்டிர் முதலியோர் இத்தகைய சமூக சீரழிவுகளை ஏன் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. திராவிடத்துவவாதிகள் இப்படி தமிழ் பெண்கள் பாழாகின்றனரே, சோரம் போகின்றனரே என்று வருத்தப் படுவதாக அறியப்படவில்லை. இந்துத்துவவாதிகள் கூட இத்தகைய, முக்கியமான பிரச்சினைகளை எடுத்துக் கொள்வதில்லை. ஊடகங்களோ, “கல்யாண ராணி” என்று தலைப்புப் போட்டு, செய்திகள் வெளியிட்டு, விட்டுவிடுன்றன. ஆனால், பாதிக்கப் பட்ட பெண்மை மற்ற பெண்களையும் பாதிக்காதா, சமூகத்தை தாக்காதா, இதனால் ஏற்படும் விளைவுகளை யார் சந்திப்பது என்று யோசிக்க வேண்டும். பெண்மை பற்றி நடத்தும் சஞ்சிகைகளும், சமையல், புடவை, அலங்காரம், கோலப்போட்டி போன்றவற்றைத் தவிர இத்தகைய பிரச்சினைகளை வாதிப்பது, விவாதிப்பது, அலசுவது இல்லை.

போலி திருமணங்கள்© வேதபிரகாஷ்

15-06-2016

 

[1] தினகரன், புகார் கொடுக்க யாரும் முன்வராததால் 7 பேரை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண ராணி விடுவிப்பு, Date: 2016-06-15@ 00:57:42

[2] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=224157

[3] தமிழ்முரசு, 8வது திருமணத்துக்கு ரெடி 7 பேரை மணந்த கல்யாண ராணிகைது, 06/14/2016 2:20:23 PM

[4] http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=94067

 

இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜா முஸ்லிமாக மாறினார் – பிரச்சினை தனிமையா, தாம்பத்ய தோல்வியா, பலதார திருமணமா – பெண்கள் படும் பாடு.

பிப்ரவரி10, 2014

இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜா முஸ்லிமாக மாறினார் – பிரச்சினை தனிமையா, தாம்பத்ய தோல்வியா, பலதார திருமணமா – பெண்கள் படும் பாடு.

 

Women are the sufferers

Women are the sufferers

பெண்கள் படும் பாடு: எந்த மதப் பெண்ணாக இருந்தாலும், ஒரு ஆணை மணந்து கொண்டு வாழ விரும்புகிறாள் என்பது இயற்கையான நியதி, உண்மையும் ஆகிறது. அந்நிலையில் விவாக ரத்து என்பது அவளுக்கு நினைக்க முடியாத அளவுக்கு இருக்கிறது. ஒருவேளை ஆண் பிரிந்து சென்று விட்டால், இன்னொருவளுடன் சேர்ந்திருந்தால், அப்பெண் முதலில் தனித்திருக்கத்தான் விரும்புகிறாள். இன்னொருவனுடன் உறவு கொள்வதை மனதாலும் மறுக்கிறாள். அது கற்பு என்றும் போற்றப்படுகிறது. ஆனால், ஆண் ஒரு பெண்ணிற்கு மேல் உறவு கொள்ளும் போது, சட்டப்படி திருமணம் செய்து கொள்ளும் போது, பெண் ஏன் அதுமாதிரி செய்யக்கூடாது என்று எண்ணம் வரலாம். நவீனகாலத்தில் விவாகரத்து மூலம் அது சட்டமாக்கப் பட்டுவிட்டது. ஆனால், பிறக்கும் குழந்தைகள் தங்களது தாய்-தந்தை என்று ஒருவர்-ஒருவர் அதாவது அம்மா-அப்பா என்று இருவரை மட்டும் தான் நினைக்க முடிகிறது. ஆனால், இப்பொழுது அம்மா ஒருவர், அப்பா ஒருவர் அதாவது வேறு வேறான நபர்கள் என்று தெரியும் போது, குழந்தைகள் தவிக்கத்தான் செய்யும். “உன் அம்மா ஒருத்தி, ஆனால், நீ வேறு அப்பாவுக்குப் பிறந்தவன்” எனும்போது மகன் எவ்வாறு உணர்வான், சமரசம் செய்து கொள்வான். பெண்ணின் நிலையும் அவ்வாறே கேள்வியாகிறது.

 

முஸ்லிமாக மாறி ஒன்றிற்கு மேலாக மனைவியை வைத்துக் கொள்ள சினிமாக்காரர்கள் பயன் படுத்தி வருகிறார்கள்: இந்தியா ஒரு செக்யூலரிஸ நாடு, ஒருவர் எந்த மதத்தையும் பின்பற்றலாம். அதனால், மதம் பற்றிப் பிரச்சினை இல்லை. அதிலும் சினிமாக்காரர்கள் மதம் மாறுவதிலும் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. அது அவர்களுக்கு ஒரு சட்டையைக் கழட்டி, இன்னொரு சட்டையை மாட்டிக் கொள்வது போலத்தான். ஆனால், சினிமாக்காரர்கள் மதம் மாறுவது எப்பொழுதுமே பலதார திருமண விசயமாகத்தான் இருந்து வந்துள்ளது. அதிலும் முஸ்லிமாக மாறி ஒன்றிற்கு மேலாக மனைவியை வைத்துக் கொள்ள அது பயன் படுத்தப் பட்டு வருகின்றது. இதை கிஷோர் குமார், தர்மேந்திரா போன்ற பிரபல நடிகர்கள் கூட பின்பற்றினார்கள். கிஷோர் குமாருக்கு நான்கு மனைவிகள் – ரூமா குஹா தாகுர்தா, மதுபாலா (முஸ்லிம்), யோகிதா பாலி, லீனா சந்தவர்கர். தர்மேந்திராவுக்கு பிரகாஷ் கௌர், ஹேமாமாலினி முதலியோர்.   இந்து திருமணச் சட்டத்தின்படி இரண்டு மனைவிகளை வைத்துக் கொள்ள முடியாது அல்லது முதல் மனைவி இருக்கும் போது இரண்டாவது திருமணம் செய்து கொள்ள முடியாது என்பதால் தான், இந்தியாவில் நடிகர்கள் மட்டுமல்ல மற்றவர்களும் இஸ்லாத்திற்கு மாறுவது குறுக்குவழி போல பின்பற்றி வருகிறார்கள்[1].

 

சாதீய திரிபுவாதம் கொடுக்கப்பட வேண்டிய அவசியம்: உண்மை அவ்வாறாக இருக்கும் போது, சில தமிழ் ஊடகங்கள், வேறுமுறையில் திரிபுவாதம் கொடுத்துள்ளது கவழத்தை ஈர்த்துள்ளது. வழக்கம் போல “இனியொரு.டாட்.காம்”, “தமிழ் நாட்டில் ஒடுக்கப்பட்ட தலித் சமூகத்திலிருந்து இசைத் துறைக்கு வந்து மில்லியன்கள் புரளும் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளரானவர் இளையராஜா. இளையாராஜா தன்னைத் தலித் என்று அழைத்துக்கொள்வதை எப்போதும் விரும்பியதில்லை. இந்துத்துவ தத்துவத்தின் சினிமா இசைக்காவலனைப் போன்று தன்னை வெளிப்படுத்திக்கொண்ட இளையராஜா ஆதிக்க சாதியோடு தன்னை அடையாளப்படுத்திக்கொண்டார்”, என்று ஆரம்பித்து[2], யுவன் சங்கர் ராஜாவின் பிரச்சினைக் குறிப்பிட்டு, “புதிய மதத்திலும் சாதி ஒடுக்குமுறையைச் சந்திக்கின்றனர். இந்துத்துவாவின் வேர்கள் அனைத்து மதங்களிலும் படர்ந்துள்ளன”, என்று முடித்துள்ளது[3]. “இந்துத்துவ தத்துவத்தின் சினிமா இசைக்காவலனைப் போன்று தன்னை வெளிப்படுத்திக்கொண்ட இளையராஜா” எனும்போது, ரஹ்மான் கூட அவ்வ்வாறு இஸ்லாத்திற்கு முக்கியத்துவம் அளித்து வரும் போது, அவரை அவ்வாறு குறிப்பிடுவதில்லையே, அது ஏன் என்று தெரியவில்லை. அதனால், இதன் நோக்கத்தையும், பின்னணியையும் ஆராய வேண்டியுள்ளது.

 

வந்துள்ள செய்தி, வதந்தி, விளக்கம்: இசைஞானி இளையராஜாவின் மகனும் இசையமைப்பாளருமான யுவன்சங்கர் ராஜா இஸ்லாம் மதத்திற்கு மாறிவிட்டதாக  தகவல்கள் வெளியாயின[4]. மேலும் யுவன் 3வதாக ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாகவும் தகவல்கள் பரவின. இதுகுறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள யுவன் சங்கர் ராஜா தான் இஸ்லாத்தை பின்பற்றுவதாகவும், அதற்காக பெருமைப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்[5].. மேலும் மூன்றாவதாக யாரையும் திருமணம் செய்யவில்லை என்று மறுப்பு தெரிவித்துள்ள அவர். குடும்பத்தினர்  அனைவரும் தனது முடிவை ஏற்றுக்கொண்டதாகவும் கூறியுள்ளார்[6]. சினிமா இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா, முஸ்லிம் மதத்துக்கு மாறினார். அவர் இப்போது தினமும் 5 வேளை தொழுகை நடத்துகிறார், என்று சுருக்கமாக செய்திகளைக் கொடுத்துள்ளனர்.

 

இளையராஜாவின் மகன் யுவன்சங்கர்ராஜா: பிரபல சினிமா இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு, கார்த்திக் ராஜா, யுவன்சங்கர் ராஜா என்ற 2 மகன்களும், பவதாரிணி என்ற மகளும் இருக்கிறார்கள். மூன்று பேருமே சினிமா படங்களுக்கு இசையமைத்து வருகிறார்கள். குடும்பமே சேர்ந்து ஒரு தொழிலை செய்வது, வியாபாரம் செய்வது என்பதெல்லாம் ஒன்றும் ஆச்சரியப் படுவதற்கு ஒன்றும் இல்லை. இளையராஜா ஆன்மீகம், பக்தி என்று ஊறித்திளைக்கும் நேரத்தில் தன் மகன் இப்படி மாறுகிறார் என்றால் அது ஆன்மீக தேடலும் இல்லை, பக்தியும் இல்லை ஆனால், அதற்கு மேலாக வேறொன்றுள்ளது என்று தெரிகிறது.

 

1–வதுதிருமணம் (2005): இளையராஜாவின் மகன் யுவன்சங்கர் ராஜா சினிமா இசையமைப்பாளராகிப் பிரபலமானார். பல திரைப்படங்களுக்குப் பின்னணி இசையமைத்தவர். பிரித்தானியாவில் வசித்த சுஜயா சந்திரன் என்ற ஈழத் தமிழ்ப் பெண்ணை 2002லிருந்து காதலித்து வந்தார். சி. ஆர். வேலாயுதம் மற்றும் சரோஜினி சந்திரன் மகளான இவரை லண்டனில் 2003ல் பதிவு திருமணம் செய்து கொண்டு, மார்ச்.21, 2005ல் பெற்றோர் சம்பதத்துடன் முறைப்படி திருமணம் செய்து கொண்டார். ஆனால்,ஆகஸ்ட் 2007ல் விவாகரத்து மனு போட்டு பிப்ரவரி 2008ல் விவாகரத்து பெற்றனர்[7]. யுவன்சங்கர் ராஜா, சுஜயா மனுவில் கூறியிருந்த காரணம், “தீர்த்துக் கொள்ளமுடியாத வேறுபாடுகள்” [irreconcilable differences[8]] என்று குறிப்பிட்டிருந்தனர்! பிரிந்த பிறகு, சுஜயா, வெளிநாடு போய்விட்டார்[9]. ஆக முதல் திருமணம் தோல்வி என்றாகி விட்டது. என்னத்தான் இசை அமைத்தாலும், மனைவியுடன் இயைந்து வாழ்க்கை நடத்தமுடியவில்லை என்றாகிறது.

 

2–வதுதிருமணம் (2011): அதன்பிறகு யுவன்சங்கர் ராஜா ஷில்பா என்ற பெண்ணை இரண்டாவது திருமணம் 01-09-2011 அன்று செய்துகொண்டார். இவர்கள் திருமணம் திருப்பதி கோவிலில், பெற்றோர்கள் சம்மதத்துடன் நடைபெற்றது. முதல் திருமணம் டைவர்ஸில் முடிந்ததால், இது ரகசியமாக நடத்தப் பட்டது[10]. குடும்பத்தினர் மற்றும் சில நெருங்கிய நண்பர்கள் [மைத்துனர் வெங்கட் பிரபு, பிரேம்ஜி, மாமா கங்கை அமரன், விஷ்ணு வர்தன், அவரது மனைவி அனு, சுப்பு பஞ்சு, மிர்சி சிவா போன்றோர்] மட்டுமே கலந்து கொண்டனர்[11]. கடந்த சில மாதங்களுக்கு முன்பு யுவன்சங்கர் ராஜாவுக்கும், ஷில்பாவுக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது. இரண்டுபேரும் பிரிந்து வாழ்வதாக கூறப்படுகிறது. ஆக, இரண்டாவது திருமணத்தையும் திருப்திகரமாக இல்லை அல்லது இரண்டாவது மனைவியை திருப்திகரமாக வைத்துக்கொள்ள முடியவில்லை, தாம்பத்தியம் ஒழுங்காக நடத்தமுடியவில்லை என்றாகிறது.

 

முஸ்லிமாகமாறினார்[12] (2014): இந்தநிலையில், யுவன்சங்கர் ராஜா, முஸ்லிம் மதத்துக்கு மாறியிருக்கிறார். அவர் இப்போது தினமும் 5 வேளை தொழுகை நடத்துகிறார். குரான் படிக்கிறார். தாடியும் வளர்த்துவருகிறார், என்று செய்திகள் வர ஆரம்பித்துள்ளன. யுவன்சங்கர் ராஜா முஸ்லிம் மதத்துக்கு மாறியதை தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் அவர் நேற்று வெளியிட்டார். அதில், ‘‘நான் இஸ்லாம் மதத்துக்கு மாறிவிட்டேன். ஆனால், மூன்றாவது திருமணம் செய்து கொள்ளவில்லை’’ என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார். இதற்கிடையில், யுவன்சங்கர் ராஜா, மூன்றாவதாக முஸ்லிம் பெண் ஒருவரை காதல் திருமணம் செய்துகொண்டதாக சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது. அதாவது இஸ்லாத்தையும், திருமணத்தையும் அவரே இணைத்துப் பேசுவதிலிருந்து அதற்கு சம்பந்தம் உள்ளது என்றாகிறது.

 

ஏ. ஆர். ரஹ்மான் போல மாறவில்லை என்கிறார்கள்: தன்னுடைய தாயார் 31-10-2011 இறந்ததிலிருந்து[13] அன்று அவர் தனிமையை உணருவதாகக் கூறப்படுகிறது. ஒரு ஆன்மீகக் குருவை சந்தித்து இருப்பதாகவும் தெரிகிறது. இருப்பினும் இஸ்லாமுக்கு சென்றது ஏன் என்று தெளிவாகத் தெரியவில்லை. ஏ. ஆர். ரஹ்மான் போல மாறவில்லை என்கிறார்கள்[14]. கடந்த ஒரு வருடமாக இஸ்லாத்தைப் பின்பற்றி வருகிறார். ஸ்டூடியோவில் இருந்தாலும், வேலையில் இருந்தாலும் தவறாமல் ஐந்துமுறை தொழுகை செய்து வருகிறார். இன்னும் பெயரை மாற்றிக் கொள்ளவேண்டுமா என்பதைப் பற்றொ யோசித்து வருவதாகத் தெரிகிறது. இது அவருடைய தனிப்பட்ட விவகாரம் என்பதினால் அவரது குடும்பத்தினரும் தலையிடவில்லையாம்[15]. ஏ. ஆர். ரஹ்மான் போல முஸ்லிமாக மாறவில்லை என்றால், வேறு எவர் போல முஸ்லிமாக மாற துணிந்தார் என்று அவர்தான் விளக்க வேண்டும். இஸ்லாத்தை இவ்வாறு உபயோகப் படுத்துகிறார்கள், இஸ்லாம் அவ்வாறு உபயோகப்படுகிறது என்றால், இஸ்லாம் அதனை ஏன் ஊக்குவிக்கிறது, அனுமதிக்கிறது, பதிவு செய்கிறது? 1995ல் சரளா முதுகல் தீர்ப்பில் உச்சநீதி மன்ற, இஸ்லாத்துக்கு மாறினால் கூட இரண்டாவது திருமணம் செல்லாது என்று குறிப்பிட்டது[16].

 

வேதபிரகாஷ்

© 10-02-2014


[2] இனியொரு.டாட்.காம்,  http://inioru.com/?p=39133

[4] தினமணி, நான்இஸ்லாத்தைபின்பற்றுவதற்காகபெருமைப்படுகிறேன்: யுவன்சங்கர்ராஜா, பிப்ரவரி.10 2014. By Web Dinamani, சென்னை, First Published : 09 February 2014 02:58 PM IST

 

[10] Yuvan has kept the marriage as a closely guarded secret since it is his second marriage. However, the event was publicized and eventually everyone came to know about it before the Yuvan’s wedding. Remember, Yuvan’s first marriage with Sujaya ended in divorce in 2008 and the promising music director now found Shilpa as his life partnerhttp://www.teluguone.com/tmdb/news/Music-Director-Yuvan-Shankar-Raja-Marriage-en-6135c1.html

[12] தினத்தந்தி, சினிமாஇசையமைப்பாளர்யுவன்சங்கர்ராஜாமுஸ்லிம்மதத்துக்குமாறினார், பதிவு செய்த நாள் : Feb 10 | 02:15 am

[14] While we tried to reach Yuvan regarding this, a source close to the music director revealed, “Yuvan was very attached to his mother and soon after she passed away, he started missing her a lot. He also met a spiritual guru, but we cannot say what exactly made him follow Islam,” and maintained that, he was definitely not inspired by fellow composer AR Rahman (who had converted to Islam) in his decision.

http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news-interviews/Yuvan-Shankar-Raja-embraces-Islam/articleshow/30113638.cms

[15] Yuvan, the source said, has been practicing Islam for almost a year now. “He has been doing namaz five times a day all these months. He is not missing his prayers even when he is at work and ensures that he allots time for it at his studio as well,” said the source. The source added that Yuvan is now in the process of converting to Islam. “Currently, he is planning to convert to Islam and is also thinking of going for a change of name. But, he is yet to decide on these. Since it is his personal decision, his family members respect it.”

http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news-interviews/Yuvan-Shankar-Raja-embraces-Islam/articleshow/30113638.cms

[16] In 1995, the Supreme Court ruled in the Sarla Mudgal case that under the Hindu Marriage Act 1955, a Hindu husband cannot marry a second time simply by embracing Islam without lawfully dissolving the first marriage. He would be guilty of bigamy, the Court ruled.

முதலில் பாகிஸ்தான் ராணுவத்தை அனுப்பியது. இப்பொழுது இந்த பெண் பத்திரிக்கையாளரை அனுப்புகிறது. அவள் என்னுடன் சண்டை போட ஆரம்பித்துள்ளார் – சுனந்தா புஷ்கர்-சசிதரூர் – பலதார திருமணம், சாவில் முடிந்தது ஏன் – இஸ்லாமிய தீவிரவாதிகளால் துரத்தியடிக்கப் பட்ட ஒரு இந்து பெண்ணின் சோகமான கதை (4)

ஜனவரி20, 2014

முதலில் பாகிஸ்தான் ராணுவத்தை அனுப்பியது. இப்பொழுது இந்த பெண் பத்திரிக்கையாளரை அனுப்புகிறது. அவள் என்னுடன் சண்டை போட ஆரம்பித்துள்ளார் – சுனந்தா புஷ்கர்-சசிதரூர் – பலதார திருமணம், சாவில் முடிந்தது ஏன் – இஸ்லாமிய தீவிரவாதிகளல் துரத்தியடிக்கப் பட்ட ஒரு இந்து பெண்ணின் சோகமான கதை (4)

முதலி

"லவ்-ஜிஹாத்" உருவமா, இஸ்லாமிய சதியா - அல்லாவுக்குத்தான் தெரியும்!

“லவ்-ஜிஹாத்” உருவமா, இஸ்லாமிய சதியா – அல்லாவுக்குத்தான் தெரியும்!

ல்பாகிஸ்தான்ராணுவத்தைஅனுப்பியது. இப்பொழுதுஇந்தபெண்பத்திரிக்கையாளரைஅனுப்புகிறது. அவள்என்னுடன்சண்டைபோடஆரம்பித்துள்ளார்: இப்படி சுனந்தா டுவிட் செய்துள்ளதாக, மெஹர் குறிப்பிட்டுள்ளது, மிக்க பொருள் பொதிந்துள்ளதாகத் தெரிகிறது. 1990ல் இஸ்லாமிய தீவிரவாதிகளின் பயங்கரமான தாக்குதல்கள், அச்சுருத்தல்கள் ககாரணமாகத்தான் இந்துக்கள் / பண்டிட்டுகள் பெரும்பாலாக தங்களது சொத்துக்கள் அனைத்தையும் விட்டுவிட்டு வெளியேற நேர்ந்தது. அதுமட்டுமல்லாத, அச்சொத்துக்களின் மீதும் சொந்தம் கொண்டாடக் கூடாது என்ற ரீதியில், எந்த காஷ்மீர பெண்ணாவது காஷ்மீர் மாநிலம் அல்லாத ஆணை மணந்து கொண்டால், அவளது சொத்துரிமை பரிபோய்விடும் என்ற ரீதியில் சட்டத்தை எடுத்து வந்தார் உமர் அப்துல்லா. அப்பொழுதும், சுனந்தா புஷ்கர், உமரை கிண்டலடித்து டுவிட்டரில் கருத்தைத் தெரிவித்திருந்தார். அதனால்தான், இந்த மெஹர் தரார், உமரைப் பேட்டி கண்டபோது, “எதற்காக எங்களது முதல்மந்திரி ஒரு பாகிஸ்தானிய பெண் பத்திரிக்கையாளர் பேசியிருக்க வேண்டும் என்று தெரியவில்லை. முதலில் பாகிஸ்தான் ராணுவத்தை அனுப்பியது. இப்பொழுது இந்த பெண் பத்திரிக்கையாளரை அனுப்புகிறது”, என்று டுவிட்டரில் கேட்டுவிட்டு, “அவள் என்னுடன் சண்டை போட ஆரம்பித்துள்ளார்”, என்று எடுத்துக் காட்டியுள்ளார். அப்படியென்றால், பாகிஸ்தானியர்கள் இந்துப் பெண்களை எல்லாவிதங்களிலும் தாக்கத் தயாராக உள்ளார்கள் என்றாகிறது.

Mehr Tarur with her friend

Mehr Tarur with her friend

குறுகுறுக்கும் பாகிஸ்தான் செய்திகளை அமுக்கி வாசித்த நிலை: பாகிஸ்தானிய பெண் பத்திரிக்கையாளர் மெஹர் தரார் சுனந்தா புஷ்கரின் மரணத்துடன் சம்பந்தப் படுத்தி ஊடகங்களில் செய்திகள் வந்து கொண்டிருந்தாலும், பாகிஸ்தானிய ஊடகங்கள் அதனை அமுக்கியே வாசித்துள்ளன. ஒன்று உள்பக்கங்களில் செய்தியை சிறியதாகப் போட்டிருக்கின்றன, அல்லது ஒரே வரியில் முடித்துள்ளன[1].  குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும் என்றதாலா அல்லது பெரிய அளவில் நடத்தியுள்ள “லவ்-ஜிஹாத்” வளிப்பட்டுவிட்டதாலா, என்று ஆராய வேண்டியுள்ளது. “லவ்-ஜிஹாத்” இல்லை, இல்லவேயில்லை என்று சாதித்தாலும், இவ்வாறு வெளிப்படுவதை இந்துக்கள் கவனிக்க வேண்டும். பெரிய அளவிலேயே, இவ்வாறு நடக்கிறது, ஒரு பெண்ணை தற்கொலைக்குத் தூண்டி சாகடிக்கிறார்கள் என்றால், சாதாரண பெண்களின் நிலை என்னாவது?

mehr-tarar-with her ex-husband

mehr-tarar-with her ex-husband

நான்போனிலேயோ, மெயிலிலேயோஅவருடன்பேசிக்கொண்டிருந்தால், இவருக்குஎன்னபிரச்சினைஎன்றுதெரியவில்லை: ஏன், முஸ்லிம்பெண்ணுடன், ஒரு இந்து ஆண்மகன் அவ்வாறு செய்தால், முஸ்லீம்கள் சும்மா இருப்பார்களா? அல்லது மணமான முஸ்லிம் பெண்ணுடன் அவ்வாறு போனிலேயோ, இ-மெயிலிலேயோ ஒரு இந்து ஆண்மகன் பேசிக் கொண்டிருந்தால், அப்பெண்ணின் கணவன் சும்மா இருப்பானா? “நான் அவருடன் பேசியவை சாதாரணமாக உலகில் உள்ள எவருடனும் பேசும் விசயங்கள் தாம்”, என்று அந்த இந்து ஆண்மகன் சாதித்தால், முஸ்லிம்கள் ஒப்புக் கொள்வார்களா? பிறகு அப்பெண் எப்படி, இப்படி சாதிக்கிறார், தான் ஒன்றும் காரணமில்லை என்று பெரிய விளக்கம் கொடுக்கிறாள்?

mehr-tarar-modernized muslim woman

மெஹர் தரார் பாகிஸ்தானியதொலக்காட்சிசெனலுக்குக்கொடுத்துள்ளபேட்டி: சுனந்தா புஷ்கர் முதன்முதலில் தான் உமர் அப்துல்லாவை பேட்டிகண்ட பிறகு தாக்க ஆரம்பித்தார் என்று மெஹர் தரார் எடுத்துக் காட்டுகிறார். அப்பொழுது, “எதற்காக எங்களது முதல்மந்திரி ஒரு பாகிஸ்தானிய பெண் பத்திரிக்கையாளர் பேசியிருக்க வேண்டும் என்று தெரியவில்லை. முதலில் பாகிஸ்தான் ராணுவத்தை அனுப்பியது. இப்பொழுது இந்த பெண் பத்திரிக்கையாளரை அனுப்புகிறது. அவள் என்னுடன் சண்டை போட ஆரம்பித்துள்ளார்”, என்று சுனந்தா டுவிட்டரில் கூறியுள்ளாதாக மெஹர் தரார், “ஜியோ டெஸ்” (லாஹூர்) என்ற பாகிஸ்தானிய தொலக்காட்சி செனலுக்குக் கொடுத்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்[2]. தரூரை இரண்டு முறை தான் சந்தித்துள்ளதாகவும் ஒப்புக் கொள்கிறார், முதலில் இந்தியாவில் ஏப்ரல் பாதத்திலும், பிறகு ஜூனில் துபாயிலும் சந்தித்துள்ளதாக கூறுகிறார். “அவள் (சுனந்தா) சரியாக சாப்பிடுவதில்லை. நிறைய புகைப் பிடித்துக் கொண்டிருந்தார்…….வயிற்றில் டி.பி இருந்தது. இதையெல்லாம் நான் சொல்லவில்லை, இந்திய ஊடகங்களில் வெளியாகியுள்ளன. தனது கணவனுடன் சண்டை போடுகிறார், பிறகு உடல்நலம் சரியில்லாமல் போகிறது என்றால், பிறகு என்னுடனான காதல் கதை எங்கிருந்து வருகிறது”, என்று மெஹர் தரார் நக்கலாகக் கூறியுள்ளார்[3]. “நான் போனிலேயோ, இ-மெயிலிலேயோ அவருடன் பேசிக் கொண்டிருந்தால், இவருக்கு என்ன பிரச்சினை என்று தெரியவில்லை. நான் அவருடன் பேசியவை சாதாரணமாக உலகில் உள்ள எவருடனும் பேசும் விசயங்கள் தாம்”, என்றும் கிண்டல் அடித்தார்[4].

mehr-tarar-with another boyfriend

சுனந்தாவின்சோகமானடுவிட்டர்பதிவுகள்[5]: சுனந்தா புஷ்கர் ஹெஹர் தராரை விமர்சித்து பதிவு செய்துள்ள டுவிட்டர்கள் விவரத்தை ஏற்கெனவே இங்கு பதிவு செய்துள்ளேன்[6]. சசி தரூருக்கும், மெஹர் தராருக்கும் இடையேயான காதல் மயக்கம் பற்றிய தகவல்கள், சுனந்தா தரூர் ‘டுவிட்டர்’ சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுத்தான் வெளியுலகுக்கு தெரிய வந்தது. அதை மெஹர் தரூர் மறுத்திருக்கிறார். தொடர்ந்து சம்மந்தப்பட்ட மூவர் இடையே ‘டுவிட்டர்’ வழியாக வார்த்தைப்போர் நடந்து வந்திருக்கிறது. இந்த நிலையில், தாங்கள் மகிழ்ச்சிகரமாக வாழ்ந்து வருவதாகவும், ‘டுவிட்டர்’ வலைத்தளத்தில் உருவான சர்ச்சை தகவல்களால் தாங்கள் மனவருத்தம் அடைந்திருப்பதாகவும் சசி தரூர்– சுனந்தா கூட்டாக அறிக்கை வெளியிட்டனர். ஆனால் சுனந்தாவிற்குள் ஆற்ற முடியாத மனவேதனை இருந்து இருக்கிறது. இதை கடந்த சில நாட்களில் அவர் ‘டுவிட்டர்’ சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவுகள் படம் பிடித்துக்காட்டுவதாக அமைந்துள்ளன. அதில் இருந்து ஒரு தொகுப்பு இது:–

* விதிப்படி எது நடக்க வேண்டுமோ, அது நடந்தே தீரும். நான் சிரித்துக்கொண்டே விடைபெறுகிறேன்.

* இது ஒரு அந்தரங்க விவகாரம் (மெஹர் தரர் விவகாரம்). இது ஏன் தலைப்புச்செய்தி ஆக்கப்படுகிறது? மெஹர் பொய் சொல்லிக்கொண்டிருக்கிறார். அவரது 5 நிமிட பிரபலத்தால் எனக்கு எல்லா பிரச்சினைகளும் வந்து சேர்ந்திருக்கின்றன.

* இதில் வருத்தப்படக்கூடிய விஷயம் ஆண் அல்ல. மனைவி சிகிச்சைக்கு வெளியே சென்றபோது, ஆணை வீழ்த்தியவர் பெண்தான். எவ்வளவு மோசம்!

* எனது கணவர் அவளுடன் இருக்க விரும்புகிறார். கடைசியாக நான் ஒருவள்தான் தடுத்து நிறுத்த வேண்டும்.

* மெஹர்[7] முழுப்பொய் சொல்கிறார். நான் பொய் சொல்ல மாட்டேன். தற்போது நான் உடல் நலக்குறைவால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன். ஆனால் ஒரு நாள் பேசுவேன். அது மெஹருக்கு வெறுப்பை ஏற்படுத்துவதாக அமையும்.

* ஒரு பெண்ணின் துடுக்குத்தனம், வெறித்தனமாக ஒரு இந்தியருடன் காதலை ஏற்படுத்துமா? சசி, தயவு செய்து என்னை வாதாட வைக்காதீர்கள். கெஞ்ச வைக்காதீர்கள். நான் உங்களை நேசிக்கிறேன் சசி. இவ்வாறு சுனந்தா கடைசி நாட்களில் ‘டுவிட்டர்’ வலைத்தளத்தில் எழுதி உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன[8].

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மத்திய மந்திரி சசி தரூர் மனைவி சுகந்தா புஷ்கரின் பிரேதப் பரிசோதனை முடிந்தது. சுனந்தா புஷ்கரின் உடல் பிரேதப் பரிசோதனையை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை 3 டாக்டர்கள் கொண்ட குழு நடத்தியது. பிரேத பரிசோதனை முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. பரிசோதனை முடிவில் சுனந்தா விஷம் அருந்தி இறந்ததற்கான எந்த  அடையாளமும் இல்லை என்றும் இயற்கைக்கு மாறாக திடீர் உயிரிழப்பு ஏற்பட்டு உள்ளது என்றும் தெரிவித்து உள்ளனர்[9]. வெள்ளிக்கிழமை சுனந்தா புஷ்கர் டெல்லியில் ஐந்து நட்சத்திர ஓட்டல் ஒன்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இதையடுத்து போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். சுனந்தா இறந்து கிடந்த ஓட்டல் அறைக்கு வேறு யாரும் வந்து சென்றார்களா என்பதை அறிய கண்காணிப்பு காமிராவில் பதிவான வீடியோ காட்சிகளை போட்டு பார்க்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இதை தொடர்ந்து அந்த ஓட்டலில் அன்று பதிவான அனைத்து வீடியோ காட்சிகளையும் போலீசார் கைபற்றி உள்ளனர். சுனந்தா புஷ்கரின் இறுதிச் சடங்குகள் சனிக்கிழமை மாலை நடைபெற்றது என்று செய்திகள் வெளியாகி உள்ளன.  ஓட்டல் அறையில் சுனந்தா பயன்படுத்திய அனைத்து பொருட்களையும் போலீசார் கைப்பற்றி சோதனை நடத்தினர்[10].

வேதபிரகாஷ்

© 20-01-2014


[2] She said Pushkar first attacked her after an interview she did with Jammu and Kashmir Chief Minister Omar Abdullah. “She (Pushkar) tweeted saying why has our CM spoken to a Pakistani journalist. First Pakistan sends Army and then sends journalist. She started fighting with me,” Tarar said.

http://www.financialexpress.com/news/shashi-tharoors-wife-sunanda-pushkar-first-attacked-me-after-an-interview-with-omar-abdullah-mehr-tarar/1219170

[3] “She was not eating. She was smoking too much… She also had stomach TB. This is not what I am saying but what has appeared in Indian media. If she fights with her husband and later her health gets affected, what is the connection of the love story about me,” Tarar said.

http://www.financialexpress.com/news/shashi-tharoors-wife-sunanda-pushkar-first-attacked-me-after-an-interview-with-omar-abdullah-mehr-tarar/1219170/2

[4] “I don’t know why she had a problem about me talking to her husband over phone or email. The talks I had with him is something that I can talk with anyone and anywhere in the world,” she said.

http://www.financialexpress.com/news/shashi-tharoors-wife-sunanda-pushkar-first-attacked-me-after-an-interview-with-omar-abdullah-mehr-tarar/1219170/0

[8] தினத்தந்தி, திங்கட்கிழமை, ஜனவரி 20, 2014

மூன்று மனைவிகளை ஏமாற்றி நான்காவது திருமணம் – கின்னஸ் சாதனைப் படைக்கப் போவதாக கணவன் சவால், மிரட்டல் – முதல் மனைவி புகார்!

ஓகஸ்ட்21, 2013

மூன்று மனைவிகளை ஏமாற்றி நான்காவது திருமணம் – கின்னஸ் சாதனைப் படைக்கப் போவதாக கணவன் சவால், மிரட்டல் – முதல் மனைவி புகார்!

Polygamy-chennai-fiest-wifw-complaint-2013சமயபேதம் இல்லாத  –  ஒழுக்கமில்லாத சமுதாய சீரழிவுகள்: கோயம்புத்தூரில் பிலிப் ஜோசப் என்றால், சென்னையில் ஒரு ஜெயசங்கர் அதேபோல, பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டது தெரிய வருகின்றது. இவ்வாறு “நான்கு திருமணம்” செய்திகள் வருவது அதிகமாகி வருகிறது. பொதுவாக முஸ்லிம்கள் “நான்கு திருமணம்” செய்து கொள்கிறார்கள், “நான்கு மனைவிகள்” வைத்துக் கொள்கிறார்கள் என்றெல்லாம் சொல்வதுண்டு, பேசுவது உண்டு. ஆனால், இப்பொழுது கிறிஸ்தவர்களும், இந்துக்களும் அம்முறையைப் பின்பற்றும் போது, மற்றவர்களைப் பற்றி பேசுவதற்கு தார்மீக உணர்வு கிடையாதே? முதலில் அடுத்தவர் மீது குறை சொல்பவர்கள் தாங்கள் ஒழுங்காக இருக்க வேண்டுமே?

Jeyasankar and Kalaimagal - the first wife who lodged complaint22  வயதோன மகனுடன்  43  வயதான பெண் வந்து கணவன் மீது புகார்: சேப்பாக்கம் சி.என்.கே சாலையை சேர்ந்தவர் கலைமகள் (43), எம்.ஏ படித்தப் பெண். இவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கணவர் மீது பரபரப்பு புகார் அளித்தார்[1]. அந்த பெண் தனது 22 வயது மகனுடன் போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்திருந்தார். புகார் கொடுத்தப் பின்னர், பின்னர், வெளியே வந்த கலைமகள் கூறியதாவது[2]:

1990ல் கலைமளை திருமணம் செய்து கொண்டது: “நான் பெரம்பூரை சேர்ந்தவர். தந்தை போலீசாக பணியாற்றியவர். முதுகலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். கல்லூரியில் 2ம் ஆண்டு படித்தபோது பெற்றோர் எனக்கு திருமணம் செய்து வைத்தனர். கணவர் ஜெயசங்கர் (48). 1990 செப்டம்பர் 9ல் திருமணம் நடந்தது. என்ஜினீயரிங் படித்துள்ள ஒரு மகனும்,  9–வது வகுப்பு படிக்கும் ஒரு மகளும் உள்ளனர். கணவர் பல மோசடி வேலைகளில் ஈடுபட்டு வந்தார். இதெல்லாம் நமக்கு வேண்டாம் என்றேன். அவர் கேட்கவில்லை.

 Jeyasankar married thrice and going for fourth

1996ல் ரமணவல்லியை இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டது: 1996ல் அவருக்கும் சேத்துப்பட்டை சேர்ந்த ரமண வள்ளி என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் பெரியமேடு சார்பதிவாள்ளர் அலுவலகத்தில் பதிவு திருமணம் செய்து கொண்டனர். அவரது பெயரில் ரேஷன் அட்டையும் உள்ளது. அவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

 மேகலா தேவியை மூன்றாவதாகத் திருமணம் செய்து கொண்டது: தொடர்ந்து காரணீஸ்வரர் பகோடா தெரு, மயிலாப்பூரை சேர்ந்த மேகலா தேவி என்பவருடன் கணவருக்கு பழக்கம் ஏற்பட்டது. இப்பொழுது இங்குதான் நிரந்தரமாகத் தங்கியுள்ளார்..

 ஒரே கணவன் மூன்று மனைவிகளோடு மூன்று குடும்ப ரேஷன் கார்டுகளைப் பெற்றது: என்னோடு சேர்த்து, 3 மனைவிகளுக்கும் தனித்தனி ரேஷன் கார்டும் உள்ளது. இதுபற்றி எனது கணவரிடம் கேட்டபோது, உனக்கு நான் எந்த குறையும் வைக்கவில்லை. நான் எத்தனை மனைவிகளுடனும் வாழ்வேன், நீ அதுபற்றி எதுவும் கேட்க கூடாது என்கிறார். அடித்துத் துன்புறுத்தியுள்ளார்[3].

 நான்காவதாக ஒரு மைனர் பெண்ணை கல்யாணம் செய்யப் போவது: மேலும், 17 வயது பெண்ணை திருமணம் செய்யப்போவதாக கணவர் கூறி வருகிறார்இதுவரை 2000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முறை பெண்களுடன் தவறான உறவு வைத்துள்ளேன்[4]. இன்னும் பல பெண்களை திருமணம் செய்வேன். தட்டிக்கேட்டால் உன்னை தீர்த்து கட்டிவிடுவேன்”, என்று மிரட்டுகிறார். இதுகுறித்து திருவல்லிக்கேணி, மயிலாப்பூர் மகளிர் காவல் நிலையங்களில் புகார் செய்தேன். நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, நான் கொடுத்த புகார் மீது போலீஸ் கமிஷனர் நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது குழந்தையை நான் காப்பாற்றுவேன். போலீஸ்காரர் மகளின் புகாருக்கே நடவடிக்கை இல்லை. இதனால் அவமானப்படுகிறேன்”, இவ்வாறு கலைமகள் வேதனையுடன் கூறினார்[5].

கின்னஸ் சாதனைப் படைக்கப் போவதாக கணவன் சவால்,  மிரட்டல்: ஜெயசங்கர் (43) பி.ஏ பட்டதாரி, இளைஞர்களுக்கு “பிட்னஸ் சர்டிபிடிகேட்” வாங்கித் தந்து, கமிஷன் பெற்று காலம் தள்ளிக் கொண்டிருக்கிறார். நிறைய கமிஷன் வந்ததால், பெண் பித்து பிடித்து, கல்யாணம் செய்து கொண்டே போகும் கணவன் புதிய சரித்திரம் படைக்க தயாராக இருக்கிறான் போலும். ஒரு நாளிதழ்,இதுவரை 2000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முறை பெண்களுடன் தவறான உறவு வைத்துள்ளேன்[6]. இன்னும் பல பெண்களை திருமணம் செய்வேன். தட்டிக்கேட்டால் உன்னை தீர்த்து கட்டிவிடுவேன்என்று ஜெயசங்கர் மிரட்டினார் என்றுள்ளது. தினகரன் 2000 என்கிறது, தினத்தந்தி 1000 என்கிறது. தினமலர் எண்ணிக்கையைச் சொல்லவில்லை. ஊடகங்களுக்கு படு குஷி போலிருக்கிறது.

Three ration cards issued to him with three wivesமூன்று குடும்ப அட்டைகள் எப்படி”  என்பது சரி,  இரண்டாவதாக,  மூன்றவதாகப் பதிவு திருமணம் செய்தது எப்படி என்று தெரியவில்லையே?: “மூன்று குடும்ப அட்டைகள் எப்படி” என்று தினமலர் கேள்வி கேட்டு கட்டம் போட்டு காட்டியுள்ளது. “திருமணம் முடிந்து புதிய அட்டை கேட்டால், பல் ஆவணங்களை கேட்டு, இழுத்தடிக்கும் சம்பந்தப்பட்ட துறை, ஜெயசங்கருக்கு அட்டை கொடுத்தது எப்படி”, என்று கேட்டுள்ளது. “மூன்று குடும்ப அட்டைகள் எப்படி” என்பது சரி, இரண்டாவதாக, மூன்றவதாக பதிவு திருமணம் செய்தது எப்படி என்று தெரியவில்லையே?

  • ஒன்று முதல் மனைவி எதிர்க்கவில்லை
  • அல்லது ஜெயசங்கர் உண்மையினை மறைத்து திருமணம் செய்து கொண்டார் என்றாகிறது.
  • எதேபோல, மூன்றாம் திருமணம் செய்து கொண்டபோது, ஒன்று முதல் மனைவி மற்றும் இரண்டாவது மனைவி எதிர்க்கவில்லை
  • அல்லது ஜெயசங்கர் மறுபடியும் உண்மையினை மறைத்து திருமணம் செய்து கொண்டார் என்றாகிறது.
  • எல்லாமே – இரண்டு-மூன்று பதிவு திருமணம் என்றால், அத்தகைய பதிவுகள் எவ்வாறு செய்யப்படுகின்றன என்றும் கேள்வி கேட வேண்டுமே?

கமலஹாசன் காட்டிய முறையை தமிழர்கள் பின்பற்ற ஆரம்பித்து விட்டார்கள் போலும். தமிழச்சிகளும் ராதிகாவின் திருமுண முறையை, குஷ்புவின் அறிவுரையைப் பின்பற்றுகிறார்கள் போலும்!

© வேதபிரகாஷ்

21-08–2013


[1] தினகரன், போலீஸ்காரர் மகள் குமுறல் கணவரின் 3வது திருமணத்தை தடுக்க வேண்டும் ,பதிவு செய்த நேரம்: 2013-08-20 10:33:52,

[2] தினகரன், போலீஸ்காரர் மகள் குமுறல் கணவரின் 3வது திருமணத்தை தடுக்க வேண்டும், http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=59563

[3] தினமலர், செவ்வாய், 20-08-2013, பக்கம்.6, சென்னைப் பதிப்பு.

[4] இதற்கிடையில், இந்த புகார் மனு கொடுத்துள்ள கலைமகள், நிருபர்களிடம் கூறும்போது, எனது கணவர் 4–வதாக 17 வயது நிரம்பிய மேஜர் ஆகாத சிறுமியை திருமணம் செய்யப்போவதாக என்னிடம் சவால் விட்டுள்ளார். மேலும், 1,000 பெண்களை மணந்து, கின்னஸ் சாதனை செய்யப்போவதாகவும், எனது கணவர் சொல்கிறார். அவரது 4–வது திருமணத்தை நடக்கவிடாமல் தடுக்க வேண்டும் என போலீசாரை கேட்டுக்கொள்வதாக, அழுது கொண்டே தெரிவித்தார். http://www.dailythanthi.com/stop%20husband’s%204th%20marriage%3A%20%20Graduate%20female%20files%20complaint%20to%20Police%20Commissioner

[6] இதற்கிடையில், இந்த புகார் மனு கொடுத்துள்ள கலைமகள், நிருபர்களிடம் கூறும்போது, எனது கணவர் 4–வதாக 17 வயது நிரம்பிய மேஜர் ஆகாத சிறுமியை திருமணம் செய்யப்போவதாக என்னிடம் சவால் விட்டுள்ளார். மேலும், 1,000 பெண்களை மணந்து, கின்னஸ் சாதனை செய்யப்போவதாகவும், எனது கணவர் சொல்கிறார். அவரது 4–வது திருமணத்தை நடக்கவிடாமல் தடுக்க வேண்டும் என போலீசாரை கேட்டுக்கொள்வதாக, அழுது கொண்டே தெரிவித்தார். http://www.dailythanthi.com/stop%20husband’s%204th%20marriage%3A%20%20Graduate%20female%20files%20complaint%20to%20Police%20Commissioner

ஜோசப், பிலிப் ஜோசப், திலிப் ஜோசப் என்ற பெயர்களில் நான்கு பெண்களை திருமணம் செய்து கொண்டு ஏமாற்றியவன் (1)

ஓகஸ்ட்17, 2013

ஜோசப், பிலிப் ஜோசப், திலிப் ஜோசப் என்ற பெயர்களில் நான்கு பெண்களை திருமணம் செய்து கொண்டு ஏமாற்றியவன் (1)

Philip Joseph - Dilip Joseph - D. Joseph- army

ராணுவ சமையல்காரன்,  அதிகாரி என்று சொல்லி ஏமாற்றி திருமணம்: மூன்று திருமணம் செய்து, பெண்களை ஏமாற்றிய ராணுவ சமையல்காரனை, போலீசார் கைது செய்தனர். கோவை, பெரியநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர், ஜோசப் / பிலிப் ஜோசப் / திலிப் ஜோசப் வயது 33, ராணுவத்தில் சமையல்காரராக பணியாற்றுகிறான்[1]. ஆனால், தான் அதிகாரியாக இருக்கிறேன் என்று சொல்லி கன்னியாகுமரியைச் சேர்ந்த திவ்யா என்பவரை திருமணம் செய்து கொண்டான். ஆனால், அவனது நடவடிக்கை, பொய் பேசும் விதம் முதலியவற்றை கவனித்து, திவ்யா ராணுவ நீதிமன்றம் மூலம் விவாக ரத்து பெற்றுக் கொண்டாள்[2]. இதற்கு மேல் இவரைப் பற்றிய விவரங்கள் தெரியவில்லை.

Philip Joseph - Pushpalatha

புஷ்பலதா  –  இரண்டாவது மனைவி கொடுமைப் படுத்தப் பட்டது (2006-07): தனக்கு 16 வயது இருக்கும் போது, 26 வயதான பிலிப் ஜோசப்பைத் திருமணம் 17-01-2006 அன்று கோயம்புத்தூர், மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த புஷ்பலதா செய்து கொண்டாள். அப்பொழுது தனது பெயர் டி. ஜோசப் என்று கொடுத்திருந்தான். தனது கணவனுடன் தான் எல்லா இடங்களுக்கும் சென்று வந்தாள். ஒருமுறை, ஒரு ஐஸ்கிரீம் பார்லருக்கு சென்றபோது, இளைஞர்கள், புஷ்பலதாவையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவன், பிலிப் என்ன உனது தந்தையா என்று கேட்டுவிட்டான். என்னை விட வயதில் அதிகமாக இருந்ததாலும், அவ்வாறே தோற்றமளித்ததாலும் அவ்வாறு கேட்டான். இதை கேட்டு கோபம் அடைந்த ஜோசப், ஐஸ்கிரீமை, எல்லோருக்கும் எதிரில் என்னுடைய முகத்தில் எரிந்தான். அது மட்டுமல்லாது, அவனுடைய தாய் மற்றும் சகோதரி தன்னை கொடுமைப் படுத்தியதையும் விளக்கினாள். “அவர்கள் என்னை அடித்தார்கள். நான் கர்ப்பமாக இருந்தபோது கூட விடவில்லை. அடித்துத் துன்புறுத்தினார்கள். மொட்டை மாடியில் வெயிலில் நிற்க வைத்தார்கள். நீ அழகாக இருக்கிறாய், கலராக இருக்கிறாய் என்று தானே பெருமைப் பட்டுக் கொள்கிறாய்? வெயிலிலேயே கிட, அப்பொழுது தான் நீ கருப்பாவாய். அப்பொழுது யாரும் உன்னைப் பார்க்க மாட்டார்கள்”, என்றெல்லாம் திட்டினார்கள் இதனால், தனது அத்தை வீட்டிற்கு செல்ல முயன்ற போது, மாமியார் மிரட்டினாள். பிறகு ஒரு நாள் இரவு வீட்டை விட்டே விரட்டி அடித்தாள்.

Joseph with Pushpalata and children

ரம்யா  –  மூன்றாவது மனைவி கொடுமைப் படுத்தப் பட்டது –  2010: கோயம்புத்தூர், கணபதியைச் சேர்ந்த, ரம்யா 30 வயதான டி. பிலிப் என்ற ஜோசப் பிலிப்பை 18-10-2010 அன்று திருமணம் செய்து கொண்டாள். ரம்யாவிற்கு முதல் குழந்தை பிறந்தது. அதற்கு பால் கொடுப்பதற்கே, மாமியார் தடுத்து வந்தாள். முதல் குழந்தை வளர்வதற்கு முன்னமே, பிலிப் உறவு கொண்டதால், இரண்டாவது குழந்தை பிறந்தது. இரண்டு குழந்தைகளுக்கும் கொடுக்க போதிய தாய்பால் இல்லை. வீட்டிலோ சத்தான உணவும் கொடுப்பதில்லை. குழந்தைகளுக்கு பாலும் கொடுப்பதில்லை. இதனால். குழந்தைகளுக்கு சத்து மாவை வாங்கிக் கறைத்து கொடுக்க ஆரம்பித்தாள். ஆனால், குழந்தைகள் அதை ஜீரணிக்க முடியவில்லை. ஒருமாதம் தான் வாழ்ந்தாள்.

Philpi Joseph - Ramya with child

பிரேமா  –  நான்காவது மனைவி  (2013): பிரேமா என்ற பட்டதாரி பெண்ணை 08-02-2013 அன்று, டிரினிடி சர்ச்சில், டி. ஜோசப்பைத் திருமணம் செய்து கொண்டாள். அப்பொழுது இருவருக்குமே 33 வயது. பிரேமாவிற்கு ஏற்கெனவே 33 வயதாகி விட்டதால், ராணுவத்தில் அதிகாரி, கட்டப்பட்டு வரும் நிலையில் வீடு, இந்தியா முழுவதும் சுற்றிவரலாம் போன்ற விஷயங்களால் ஈர்க்கப்பட்டு, பிரேமாவை திருமணம் செய்து வைத்தனர். பிலிப், பிரேமாவை பல்லடத்தில் இந்திரா காலனியில், ஒரு வாடகை வீட்டில் தங்க வைத்து தில்லிக்குச் சென்று விட்டான். பிலிப் போனதும், மேரி பிரேமாவை திட்டித் துன்புறுத்த ஆரம்பித்து விட்டாள். பிலிப்பிடம் சொன்னபோது, அனுசரித்துச் செல் என்று அறிவுரை சொன்னான். ஆனால், மாமியார் வீடு கட்ட கற்களைக் கூட சுமக்கச் சொன்னாளாம். தான் கர்ப்பமாக இருக்கிறேன் என்று சொன்னாலும் விடவில்லை. வரதட்சணை கேட்பது, சகோதர்களிடம் மரியாதை இல்லாமல் பேசுவது என்று ஆரம்பித்தாளாம். இதனால், பிரேமா விலகிச் செல்ல தீர்மானித்தாள்.

Joseph with Prema during their sham marriage

பிலிப்பின் ஏமாற்று முறை: பெண்களின் குடும்பத்தை தான் தில்லியில் வேலை செய்து வரும் ஒரு ராணுவ அதிகாரி என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, பெண்ணை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகச் சொல்வான். பெண்ணிற்கு ராணுவத்தில் வேலை வாங்கித் தருவேன் என்றும் வாக்குக் கொடுப்பான். தில்லியிலிருந்து எப்பொழுது வேண்டுமானால், மிலிடெரி கோட்டாவில் வேலை கிடைக்கும், அதற்காக “அபிடேவிட்” போன்றவை தாக்குதல் செய்யவேண்டும் என்று வெற்று பத்திரங்களில் கையெழுத்து வாங்கி வைத்துக் கொள்வான். திருமணம் ஆனவுடன், தான் தில்லிக்கு செல்லவேண்டும் என்று சென்று விடுவான். வீட்டில் இருக்கும் மனைவியை அவனது தாய் மேரி மற்றும் சகோதரி உஷா மெதுவாக பணம் ஏதாவது கிடைக்குமா என்று பார்ப்பார்கள். பணம் கிடைக்காது என்றால், கொடுமைப் படுத்தி, அங்கிருந்து போனால் போதும் என்ற நிலைக்குக் கொண்டு வந்து விடுவார்கள். மனைவியும் கொடுமைகள் தாங்காமல் ஓடிவிடுவார்கள், அதாவது, தாய் வீட்டிற்கு சென்று விடுவார்கள். தில்லியிலிருந்து வரும் பிலிப் இன்னொரு பெண்ணுக்கு வலை விரிப்பான். இப்படித்தான், இக்குடும்பம் பெண்களின் வாழ்க்கையினை சீரழித்து வாழ்ந்து வருகின்றது.

Mary aka Rajammal - mother of Joseph

வெற்று பத்திரங்கள் எப்படி உபயோகப் படுத்தப் பட்டன?: தில்லியிலிருந்து எப்பொழுது வேண்டுமானால், மிலிடெரி கோட்டாவில் வேலை கிடைக்கும், அதற்காக “அபிடேவிட்” போன்றவை தாக்குதல் செய்யவேண்டும் என்று வெற்று பத்திரங்களில் கையெழுத்து வாங்கி வைத்துக் கொள்வான் என்று மேலே குறிப்பிடப்பட்டது. ஆனால், அவை பெண்களை மிரட்டத்தான் உபயோகப் படுத்தப் பட்டன. புஷ்பலதா விஷயத்தில் அவளது தந்தை தன்னிடத்தில் ஆட்டோ வாங்குவதற்காக ரூ.1.5 லட்சம் பணம் வாங்கியுள்ளதாகவும், ஆனால், இதுவரை கொடுக்கவில்லை என்று பத்திரத்தைக் காட்டி மிரட்டுவான். ரம்யா விஷயத்தில், அவளது அத்தை ரூ. 2 லட்சம் கடன் வாங்கிக் கொண்டாள் என்று பத்திரத்தைக் காட்டினான். அது மட்டுமல்லாது, அதில் பிலிப் ஏற்கெனவே திருமணம் ஆனவன் என்றும், இப்பெணனிவ்விஷயத்தைத் தெரிந்து கொண்டுதான், விரும்பித்தான் திருமணம் செய்து கொள்கிறாள் என்றும் எழுதி வாங்கிக் கொண்டதைப் போல இருந்தது[3].

Usha - sister of Joseph

தாங்கள் பக்தியுள்ள கிருத்துவர்கள் என்று சொல்லிக் கொண்டு உண்மைகளை மறைத்தது: தாங்கள் சிரத்தையுள்ள, பக்தியுள்ள கிருத்துவர்கள் என்று சொல்லிக் கொண்டு, திருமணத்திற்குக் கூட தாங்கள் செலவு மாட்டோம் என்றார்களா. பெண்ணின் தரப்பில் கூட அதிகமானவர்கள் திருமணத்திற்கு வரவேண்டாம் என்பார்கள். திருமணத்தைக் கூட படோபடமாக நடத்த வேண்டாம், ஊருக்கு வெளியில் உள்ள கல்யாண மண்டபத்தில் நடத்தினால் போதும்,  எந்தவித விளம்பரமும் வேண்டாம், திருமண அழைப்பிதழில் கூட பிலிப்பின் பட்டங்களைப் போடவேண்டாம், என்றெல்லாம் சொல்லி ஏதோ மிகவும் எளிமையானவர்கள் போல நடித்தனராம். ஆனால், பிலிப் உண்மையில் ஒன்பதாவது பெயில்! இருப்பினும் அவனிடத்தில் பத்தாவது பாஸ் மற்றும் டிகிரி சர்டிபிகேட் போன்ற போலியான சான்றிதழ்கள் இருந்தன! இவ்வாறு உண்மைகளை மறைத்து, பெண்களை ஏமாற்றி வந்தனர்.

Winesses to Philip marriage

குடிப்பது,  தகாத உறவுகளைக் கொள்வது போன்ற செயல்களில் ஈடுபட்டிருந்தது: தாய் மேரி, சகோதரி உஷா, மகன் பிலிப் முதலியோர் அதிகமாகக் குடிப்பார்களாம். அதுமட்டுமல்லாது, விதவிதமான மாமிச உணவுகளை அளவுக்கு அதிகமாகத் தின்பார்களாம். இப்படி குடித்து, தின்ற பிறகு கும்மாளம் அடிப்பார்களாம். தகாத செயல்களிலும் ஈடுபடுவார்களாம்[4]. இதையெல்லாம் யார் சொல்லிக் கொடுத்தது என்று கவனிக்க வேண்டும். குடும்பம் நடத்தும் இந்திய பெண்கள் இவ்வாறு இருப்பார்களா என்றும் யோசிக்க வேண்டும். பாரதியப் பெண்மணிகள் இவ்வாறு நடந்து கொண்டு மற்ற பெண்களின் வாழ்க்கையினையும் சீரழிப்பார்களா என்று ஆய்ந்து பார்க்க வேண்டும். தாங்கள் தங்களது தனிப்பட்ட வாழ்க்கையில் ஒழுங்கில்லாமல் இருந்தது எப்படி மற்றவர்களை மிக்கக் கொடுமையாக பாதித்துள்ளது என்பதனை கவனிக்க வேண்டியுள்ளது. இந்திய பெண்மை எப்படி அயல்நாட்டுக் காரணிக்ளால் சீரழிகிறது என்பதற்கு இது இன்னொரு உதாரணம் ஆகும். மேலும், 60-80 வருடங்களாக நாத்திகத்தை வளர்த்து, மக்களைக் கெடுத்த சித்தாந்திகளும் இதற்கு பதில் சொல்லியாக வேண்டும்.

வேதபிரகாஷ்

© 17-08-2013


[1] தினமலர், மூன்றுதிருமணம்செய்துபெண்களைஏமாற்றியராணுவசமையல்காரர்கைது, பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 16,2013,20:20 IST; மாற்றம் செய்த நாள் : ஆகஸ்ட் 16,2013,20:42 IST.

[3] He even took the signatures of the girls on a blank bond paper, stating that he would be able to get a job for them through the military quota and that the document had to be submitted urgently. This document would then be used to defraud the girls further. In the case of Pushpalatha, Philip used the signed bond paper to state that her father had borrowed Rs. 1.5 lakhs from him to purchase an auto rickshaw and has not returned the money to him yet. In Ramya’s case, Rs. 2 lakhs was said to be borrowed by her aunt. The bond paper also states that the girls had married Philip of their own accord in spite of knowing about his previous marriages. – http://bridaltears.blogspot.in/

[4] The family followed a pattern of hedonistic and riotous living. They included excessive meat in their diets, but asked the young wives to preserve ¼ litre of milk for 4 days at a stretch. All Philip’s victims have reported that they saw the family drink liquor together, consume vast quantities of meat licentiously, and then practice immoral relations with each other.- http://bridaltears.blogspot.in/