முன்பு பதிவு செய்யாமல் விடுபட்டது |
Archive for the ‘பெண்கள் குடிப்பது’ Category
செக்ஸ் வலையில் வீழ்ந்த வின்சென்ட்!
ஜூலை17, 2010சானியா விஷயத்தில் பெண்ணிய வீராங்கனைகள் மௌனம் சாதிப்பது ஏன்?
ஏப்ரல்5, 2010சானியா விஷயத்தில் பெண்ணிய வீராங்கனைகள் மௌனம் சாதிப்பது ஏன்?
மற்ற விஷயங்களுக்கு எல்லாம், பெண்கள் உரிமைகள், பெண்ணியம், ……………..இந்தியாவில் பெண்கள் கொடுமைப் படுத்தப் படுகிறார்கள் என்றெல்லாம் –
- அலரும் ஜனநாயக மாதர்கள், …………………………………
- பெண்ணிய வீராங்கனைகள், ………………………………
- பெரிய பொட்டு வைத்த முகங்கள், ……………………….
- தாலி-அறுத்த வகைப்போல பொட்டு வைக்காத பெண் புலிகள், சிங்கங்கள்…………….
- பெண்ணுரிமை பேசும் தேன்மொழிகள், கனிமொழிகள்…………………….
- இளம்-பெண்கள் குடித்தால் என்ன, யாருடன் ஆடினால் என்ன………என்றெல்லாம் கேட்டு புல்லரிக்க வைத்த அம்மணிகள்
இவர்கள் எல்லாம் எங்கே இருக்கிறார்கள், என்ன செய்து கொண்டிருக்கிறர்கள் என்று சொல்ல முடியுமா?
நடிகர் சங்கம், விபச்சாரம், தமிழ்-கலாச்சாரம்.
ஒக்ரோபர்6, 2009தென்னிந்திய நடிகர் சங்கம், அரசியல் ஆதரவுடன், பலமாக இயங்கி வரும் சங்கமாகும்.
சென்னை, அக். 5: நடிகைகள் குறித்து நாளிதழ் (சில தளங்கள், தினமலர் என்று குறிப்பிடுகின்றன) ஒன்றில் வெளியான செய்தி தொடர்பாக மாநகர போலீஸ் கமிஷனரை திங்கள்கிழமை நேரில் சந்தித்து தென்னிந்திய நடிகர் சங்கத்தினர் புகார் மனு அளித்தனர். பாலியல் தொழில் தடுப்புப் போலீஸôரால் அண்மையில் கைது செய்யப்பட்ட டி.வி. நடிகை ஒருவர் கூறியதாக சில நடிகைகள் குறித்த செய்தி நாளிதழ் ஒன்றில் வெளியானது. இது தங்களை இழிவுப்படுத்தும் விதமாக இருப்பதால், இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தென்னிந்திய நடிகர் சங்கத்தினர் மாநகர போலீஸ் கமிஷனர் டி.ராஜேந்திரனை நேரில் சந்தித்து வலியுறுத்தினர்.
நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், துணைத் தலைவர் விஜயகுமார், செயலாளர் ராதாரவி ஆகியோர் தலைமையில் சட்டப் பேரவை உறுப்பினரும், நடிகருமான எஸ்.வி.சேகர், நடிகைகள் ஸ்ரீபிரியா, நளினி, சீதா, அஞ்சு, மஞ்சுளா, குயிலி, பாத்திமா பாபு, நடிகர்கள் சின்னி ஜெயந்த், முரளி உள்ளிட்ட ஏராளமான நடிகர், நடிகைகள் புகார் அளிக்க வந்திருந்தனர்.
கமிஷனர் டி.ராஜேந்திரனை சந்தித்தப் பின் நிருபர்களிடம் சரத்குமார் கூறியதாவது: இந்தப் பிரச்னையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கமிஷனரிடம் மனு அளித்தோம். மேலும், இது தொடர்பாக வரும் 7-ம் தேதி நடிகர் சங்க வளாகத்தில் கண்டனக் கூட்டம் நடைபெறும் என்றார்.
உண்மையிலேயே, நடிகர் சங்கம் சமூகத்தின் மீது அக்கரை உள்ளதாக இருந்தால், இனிமேல், தமிழ் படங்களில் ஆபாசம், அசிங்கம், பாலியல் ரீதியிலான காட்சிகள், நடிப்பு, உரையாடல்கள், “ஜோக்ஸ்”, நடன காட்சிகள் முதலியன இடம் பெறாமல் இருக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். செய்வார்களா?
நாகரிகமும், கட்டுப்பாடும், பெண்களும்
செப்ரெம்பர்18, 2009கடந்த ஆண்டு, இளம்பெண்கள் மங்களூர், இந்தியாவில் ஒரு “பப்” – மது அருந்து கூடத்திற்கு சென்றபோது, ஸ்ரீராம சேனை என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் அதட்டிக் கேட்டனர். “எங்களுடைய பணம், நாங்கள் வாங்குகிறோம், குடிக்கிறோம். நீங்கள் யார் எங்களைக் கேட்பதற்கு?” என்று கேட்டபோது, அடித்தனர். அவர்களை அங்கிருந்து விரட்டி அடித்தனர்.
உடனே, எல்லொரும் ராம்சேனையை எதிர்த்து, குறிப்பாக இந்துக்கள் எல்லாம் ஏதோ “தாலிபான்களை”ப் போன்று சித்தரித்துக் காட்டப் பட்டனர். டிவி-செனல்கள் அப்பாட்டையே பல நாட்கள் பாடின.
ரேணுகா சௌத்ரி, என்ற அம்மையார் (மத்திய அமைச்சர்) இளம்பெண்கள் அவ்வாறு குடிப்பதற்கு சென்றதை ஆதரித்ததுடன், “பப் பரோ அந்தோலன்” ஆரம்பிக்கவும் ஆணையிட்டார். அதாவது இளம்பெண்கள் அத்தகைய மதுபான விடுதிகளை நிரப்பி போராட்டம் செய்ய விழைத்தார்.
பல பெண்கள் “பிங்க்” நிற ஜெட்டிகள் / உள்ளாடைகள் வாங்கி ராம்சேனை தலைவருக்கு குரியர் மூலம் அனுப்பிவைத்தனர்.
அந்நிலையில், கீழ்காணும் இன்றைய தினமலர் செய்தி, வியப்பாக இருந்தது:
பீர் குடித்த பெண்ணுக்கு பிரம்படி தண்டனையை நிறைவேற்ற தீவிரம்
http://www.dinamalar.com/new/world_detail.asp?news_id=3804
செப்டம்பர் 18,2009,00:00 IST
கோலாலம்பூர்: “ஓட்டலில் பீர் குடித்த பெண் ணுக்கு விதிக்கப்பட்ட பிரம்படி தண்டனையை, விரைவில் நிறைவேற்ற வேண்டும்’ என, மலேசியாவில் வசிக்கும் பெரும்பான்மை மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மலேசியாவைச் சேர்ந்தவர் கார்த்திகா சாரி தேவி சுகர்னோ என்ற மலேசிய பெண். ஓட்டல் ஒன்றில் பீர் குடித்ததாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. மலேசிய கோர்ட்டில் நடந்த விசாரணையின் முடிவில், பீர் குடித்ததற்காக இவருக்கு ஆறு பிரம்படிகள் கொடுக்கும்படி தீர்ப்பு வழங்கப்பட்டது.மலேசியாவில் முதல் முறையாக பெண் ஒருவருக்கு பிரம்படி தண்டனை வழங்கும்படி தீர்ப்பு அளிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சர்வதேச மனித உரிமை அமைப்புகள் இதற்கு கண்டனம் தெரிவித்தன. ரம்ஜான் புனித மாதம் துவங்கியதை ஒட்டி, கார்த்திகாவுக்கு தண்டனை வழங்கப்படுவது ஒத்தி வைக்கப்பட்டது.இந்த வழக்கு தற்போது மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இன்னும் சில தினங்களில் ரம்ஜான் மாதம் முடிவுக்கு வரவுள்ளதை அடுத்து, கார்த்திகாவுக்கு பிரம்படி வழங்க வேண்டும் என, மலேசியாவில் வசிக்கும் பழமைவாத கொள்கை யை பின்பற்றுவோர் வலியுறுத்தி வருகின்றனர்.
குறிப்பாக, கெலந்தன் மாகாணத்தில் வசிக்கும் பெரும்பாலானோர் இதை வரவேற்றுள்ளனர். அப்துல் ஹமீத் என்பவர் கூறுகையில், “கார்த்திகாவுக்கு வழங்கப்பட்ட தண்டனை மிக கடுமையானது அல்ல. பாடம் கற்பிக்க வேண்டும் என்ற காரணத்துக்காகவே இந்த தண்டனை விதிக்கப்பட் டுள்ளது. ரம்ஜான் மாதம் முடிந்ததும், அவருக்கான தண்டனை நிறைவேற்ற வேண்டும்’ என்றார்.