ஒரு பெண் பிடோபைல் – அதாவது பெண், குழந்தை-கற்பழிப்பாளி – விபரீதத்தில் முடியும் தகாத வக்கிர உறவுகள்!
ஒரு பெண் பிடோபைல் – அதாவது பெண், குழந்தை-கற்பழிப்பாளி – விபரீதத்தில் முடியும் தகாத வக்கிர உறவுகள்!: குழந்தை கற்பழிப்பு என்பது கடந்த ஆண்டுகளில், அந்நிய சுற்றுலா பிரயாணிகள், குற்றவாளிகள், கிருத்துவ மிஷினர்கள் என்று பல வழக்குகள், விவகாரங்கள் என்று பார்த்து வருகின்ற நிலையில், ஈடுபட்டவர்கள் ஆண்களாக இருந்து வந்துள்ளனர். ஆனால், இப்பொழுது, ஒரு பெண் ஈடுபட்டுள்ளது, அதிலும் தமிழகத்தில் இருப்பது திகைப்பாக இருக்கிறது. இன்றைக்கு உச்சநீதி மன்ற தீர்ப்புகளே, பாலியல் வரைமுறைகளை மீறும் வகையில் இருப்பதாக உள்ளன. பலர் அவற்றாஇப் பற்றி குறை கூறி வருகின்றனர். ஏனெனில், அத்தகைய விபரீதமான தனிச்சை வக்கிரங்களை, உரிமை என்ற பெயரில் அனுமதிக்கப் பட்டால், கணவன் – மனைவி, தாம்பத்தியம், குடும்பம் போன்ற உறவுகளை எதிர்பார்க்க முடியாது. சமூகமும் பெரிதளவில் பாதிக்கப் படும். அந்நிலையில், ஒரு இளம் பெண், திருமணம் ஆனவள், இரண்டு குழந்தைகள்க்கு தாய் என்ற நிலையில், குழந்தை கற்பழிப்பாளியாக மாறியுள்ளது திகைப்பாக இருக்கிறது.
மாணவர்களுடன் தகாத உறவு: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த பையூர் காலனி பகுதியை சேர்ந்தவர் உமேஷ்குமார் (வயது 45), ஆசிரியர். இவரது மனைவி நித்யா (30). இவர்களுக்கு ஒரு பெண், ஒரு ஆண் குழந்தை உள்ளனர். நித்யா ஆரணி அடுத்த மாமண்டூர் அரசு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். வேலூர் மாவட்டம் மாமண்டூர் அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வருகிறார். நித்யா கடந்த 2016-ம் ஆண்டு ஆரணி அடுத்த பையூரில் உள்ள அரசு பள்ளியில் பணிபுரிந்து வந்தார். அதே பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு ஆங்கில பாடம் டியூசன் எடுத்து வந்தார். அப்போது பள்ளி மாணவன் ஒருவருடன் நித்யாவுக்கு தொடர்பு ஏற்பட்டது, அந்த மாணவனுடன் நித்யா தகாத உறவில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது என்கிறது மாலைமலர். நித்யா, பையூர் பகுதியை சேர்ந்த ஐ.டி.ஐ. பயிலும் 17 வயது மாணவருடன் தகாத உறவில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. என்கிறது தினத்தந்தி[1]. இது தொடர்பாக உமேஷ்குமார், மனைவியை பலமுறை எச்சரித்துள்ளார்[2]. மேலும் நித்யா இதற்கு முன்பு செங்கம் புதுப்பாளையம் பகுதியில் பணிபுரியும் போது பள்ளி மாணவர்களிடமும் தகாத உறவில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதுகுறித்து உமேஷ்குமார் ஆரணி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தாம்பத்திய குறைவா, பிறழ்சியா, முறையற்ற மிருகத்தனமா?: தம்பதியர் இருவருமே ஆசிரியர்கள் எனும்பொழுது அவர்களிடம் ஒழுக்கம் இருக்க வேண்டிய எதிர்பார்ப்பு ஏற்படுகிறது. பள்ளிகளில் பாடம் போதிக்கும் நிலையில் உள்ளவர்களுக்கு நிச்சயமாக, குறிப்பிட்ட நடத்தை இருக்க வேண்டிய அத்தியாவசியம் உள்ளது. குறிப்பாக இளம் வயதில் உள்ள இந்திய இது குழந்தைகளுக்கு தாயாக இருக்கும் நிலையில் பொறுப்புள்ள ஆசிரியருக்கு என்ற நிலையிலும் இவ்வாறான தகாத உறவில் ஈடுபட்டது திகைப்பாக இருக்கிறது. பெண்ணும் புருஷனிடம் செக்ஸ் கிடைப்பதை எதிர்பார்க்கிறாள். குழந்தைகள் உள்ளது அவர்களின் தாம்பத்தியத்தின் முழுமையினைஎடுத்துக் காட்டுகிறது. இருப்பினும், அப்பெண் எல்லைகளைத் தாண்டியுள்ளது, துரதிருஷ்டமாக, பாலியல் வக்கிரத்தையே காட்டுகிறது. ஆனால், அது இளம் மாணவர்களை பாதித்துள்ளது. சுவை கண்ட அப்பூனைகள் அப்படியே இருக்குமா அல்லது வேறேங்கேயாவது பால் கிடைத்தால் போய்விடுமா, போகுமா என்று யோசித்தால் பயமாக இருக்கிறது. விலங்களிடம் கூட ஒழுக்கம் இருக்கும் நிலையில் படித்த பெண்ணின் நிலை இவ்வாறிருப்பது அலங்கோலமே.
நித்தியாவின் கொக்கோக பலியல் உல்லாசம்: ஊடகங்கள் அவருடைய செக்ஸ் நடவடிக்கைகளைப் பற்றி, இவ்வாறான தகவல்களைக் கொடுக்கின்றன. மாணவர்களுடன் தனிமையில் இருந்த ஆபாச புகைப்படங்களை எடுத்து ரசித்து வந்துள்ளார்[3]. இரண்டு மாணவர்களையும் வெளியூர் அழைத்து சென்று ஓட்டலில் அறை எடுத்தும் தங்கி உள்ளார்[4]. இந்நிலையில் கடந்த ஆண்டு உமேஷ்குமாருக்கு தனது மனைவி நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது[5]. பள்ளி விடுமுறை நாட்களில் ஒருநாள் நித்யா வீட்டில் செல்போனை வைத்து விட்டு வீட்டு வேலை செய்து கொண்டிருந்தார்[6]. அப்போது உமேஷ்குமார் மனைவியின் செல்போனை எடுத்து பார்த்தபோது, அவர் இரண்டு மாணவர்களுடன் பல்வேறு பகுதிகளுக்கு சென்று தனிமையில் இருந்து வந்த வீடியோ மற்றும் படங்கள் இருந்தது தெரியவந்தது[7]. இவையெல்லாம் நிச்சயமாக அப்பெண்ணின் செக்ஸ்-வக்கிரத்தை எடுத்துக் காட்டுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த உமேஷ்குமார் தனது மனைவியை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்தார்[8]. இது நித்யாவின் நிலைக்கு சதகமாயிற்று எனலாம்.
போலீஸாரிடம் புகார், விசாரணை, செக்ஸ் குற்றாம் உறுதியானது: இந்நிலையில் மாணவர்களுடன் தனது மனைவி தனிமையில் இருக்கும் வீடியோ மற்றும் புகைப்படங்களை சேகரித்த உமேஷ்குமார் திருவண்ணாமலை கலெக்டர் கந்தசாமியிடம் புகார் கொடுத்தார். கலெக்டர் உத்தரவின் பேரில் மாவட்ட சமூக நலத்துறை, குழந்தைகள் பாதுகாப்பு நன்னடத்தை அலுவலர் சித்ரா பிரியா அந்த மனுவை ஆரணி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு அனுப்பி வைத்தார். இன்ஸ்பெக்டர் மைதிலி, சப்-இன்ஸ்பெக்டர் உஷா ஆகியோர் ஆசிரியை நித்யாவை அழைத்து விசாரணை செய்தனர். மேலும் பள்ளி மாணவர்களிடம் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் விசாரித்தனர். அப்போது ஆசிரியை நித்யா மாணவர்களுடன் தகாத உறவில் இருந்தது உறுதியானது. கலெக்டர் உத்தரவின் பேரில் மாவட்ட சமூக நலத்துறை, குழந்தைகள் பாதுகாப்பு நன்னடத்தை அலுவலர் சித்ரா பிரியா அந்த மனுவை ஆரணி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு அனுப்பி வைத்தார். இன்ஸ்பெக்டர் மைதிலி, சப்-இன்ஸ்பெக்டர் உஷா ஆகியோர் ஆசிரியை நித்யாவை அழைத்து விசாரணை செய்தனர். மேலும் பள்ளி மாணவர்களிடம் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் விசாரித்தனர். அப்போது ஆசிரியை நித்யா மாணவர்களுடன் தகாத உறவில் இருந்தது உறுதியானது.
போக்சோ சட்டத்தில் கைது: இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். அதன்பேரில் மாவட்ட நன்னடத்தை அலுவலரும், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலருமான சித்ரபிரியா விசாரணை நடத்தினார். அதில் சம்பவம் உண்மை என்பது தெரியவரவே ஆரணி மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது[9]. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் நித்யாவை நேற்று கைது செய்தார். பின்னர் அவரை ஆரணி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார். மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதியும், மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதியுமான (பொறுப்பு) எஸ்.தேவநாதன் வழக்கை விசரித்து, ஆசிரியை நித்யாவை ஏப்ரல் 4-ந் தேதிவரை வேலூர் மத்திய பெண்கள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து அவர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்[10]. இந்த நிலையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார், பள்ளி மாணவர்களுடன் தகாத உறவில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட ஆசிரியை நித்யாவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
இத்தகைய தகாத உறவுகள், பாலியல் குற்றங்களைத் தடுப்பது எப்படி?: முன்னர் ஒரு கணித ஆசிரியை தன் வகுப்பில் படிக்கும், தன்னை விட பத்து வயது சிறியனவனான, மாணவனிடம் மோகம் கொண்டு தகாத உறவில் ஈடுபட்டு, போட்டி ஒன்று தனியாக தங்கி வாழ்ந்து திரும்பி வந்து திருமணம் செய்து கொண்டதாக செய்திகள் எல்லாம் வெளிவந்தன. ஆனால் இங்கோ இரண்டு குழந்தைகளுக்கு தாயாக இருக்கின்ற நிலையில், தகாத உறவு கொண்டு இருப்பது தெரியவருகிறது. ஆகவே, தாம்பத்தியத்தில் குறை என்று சொல்லமுடியாது. அதுமட்டுமல்லாது அவற்றை படங்கள் எடுத்து வைத்துக் கொண்டு பிறகு பார்த்து ரசிக்கும் ஒரு அசிங்கமான பாலியல் மனப்பாங்கும் இதில் வெளிப்படுகிறது. கணவன் எச்சரித்தும், அவள் அத்தகைய உறவைத் தொடர்ந்திருக்கிறாள். இது அவளின் கொக்கோக வக்கிரத்தை னெடுத்துக் காட்டுகிறது. ஆண்களில் சிலர் அவ்வாறு இருப்பது போல, பெண்களிலும் சிலர் இருப்பது தெரிய வருகிறது. இதனை, மனோதத்துவ முறையில் தடுக்கவேண்டும். ஆனால், உறவினர்களால் செய்ய வேண்டும். குறிப்பாக பேற்றோர், சகோதரிகள் போன்றவர் செய்ய வேண்டும்.
இணைதள விசயங்களைத் தேடும் போது, சுயக் கட்டுப் பாடு தேவை: நிச்சயமாக இக்காலத்தில் இணையதளம், செல்போன், கம்ப்யூட்டர் போன்ற உபகரணங்கள் ஆண் பெண் உடலுறவு கொள்ளும், வீடியோக்கள், திரைப்படங்கள் முதலியவற்றை காண்கின்ற சந்தர்ப்பத்தை ஏற்படுகின்றது. சில நேரங்களில் அறிந்தோ அறியாமலோ தெரிந்தோ தெரியாமலோ சில இணையதளங்களில் மற்றவர்களை தேடும் பொழுது இடையில் இத்தகைய படங்களை வைத்து கவனத்தை ஈர்க்கின்றனர் மற்றும் திசை திருப்புகின்றனர். ஒருவேளை தேடுகின்றவர், இவற்றைக் கண்டுகொள்வது இல்லை, என்றாலும், பாலியல் ரீதியாக ஆண் பெண் எவருக்கும் அதில் ஒரு ஈர்ப்பு ஏற்படும் பொழுது சரி அதில் என்னதான் இருக்கிறது என்று பார்க்க கூடிய நிலையும் ஏற்படுகிறது. பார்த்துவிட்டு மறுபடியும் சாதாரணமாக தங்களது கடமைகளை செய்து கொண்டு இருந்தால் பிரச்சினையில்லை ஆனால். அது மனதில் ஒரு துண்டுதலை உண்டாக்கி, மறுபடியும் மறுபடியும் அதை பார்த்து ரசிக்க வேண்டும், பிறகு இதனை உண்மையாகவே அனுபவித்து ரசித்தால் எப்படி இருக்கும், என்ற ஒரு மனப்பாங்கு ஏற்படும்பொழுது, எல்லைகளைக் கடந்து சமூகக் கட்டுப்பாடுகளை மீறி இத்தகைய தகாத உடலுறவு கொள்ள சந்தர்ப்பங்கள் ஏற்படுகின்றன. ஆகவே, இவற்றைத் தவிர்ப்பது நல்லது.
வேதபிரகாஷ்
24-03-2019
[1] தினத்தந்தி, பள்ளி மாணவர்களுடன் தகாத உறவு: ‘போக்சோ’ சட்டத்தில் ஆசிரியை கைது, பதிவு: மார்ச் 22, 2019 03:15 AM
[2] https://www.dailythanthi.com/News/State/2019/03/22013757/The-teacher-arrested-in-the-Pokso-Act.vpf
[3] மாலைமலர், ஆரணியில் மாணவர்களுடன் தகாத உறவு– ஆசிரியை போக்சோவில் கைது, பதிவு: மார்ச் 21, 2019 10:34.
[4] https://www.maalaimalar.com/News/District/2019/03/21103411/1233315/Arani-near-school-teacher-arrested-for-pocso-act-law.vpf
[5] சமயம், பல பள்ளி மாணவர்களுடன், பல இடங்களில் உல்லாசம் – ஆசிரியை கைது!: சிக்கியது எப்படி?,Tamil Samayam | Updated:Mar 21, 2019, 05:44PM IST
[6] https://tamil.samayam.com/latest-news/crime/sexual-offences-against-children-lady-teacher-arrest-in-pocso-act/articleshow/68511408.cms
[7] தினமலர், மாணவர்களுடன் தகாத உறவு பள்ளி ஆசிரியை ‘சஸ்பெண்ட்‘, Updated : மார் 22, 2019 00:33 | Added : மார் 22, 2019 00:30.
[8] https://www.dinamalar.com/news_detail.asp?id=2238439
[9] ஏசியாநியூஸ், பள்ளி மாணவர்களுடன் உல்லாசம்… கையும் களவுமாக பிடிபட்ட ஆசிரியை கைது..!, By Vinoth KumarFirst Published 21, Mar 2019, 3:16 PM IST.
[10] https://tamil.asianetnews.com/crime/sexual-abuse-school-teacher-arrest-popn57