Archive for the ‘மதம் மாற்றுவது’ Category

இந்துவாக அங்கீகரிக்கக்கோரி மலேசிய கோர்ட்டில் பெண் மனு!

திசெம்பர்25, 2009
இந்துவாக அங்கீகரிக்கக்கோரி மலேசிய கோர்ட்டில் பெண் மனு
டிசம்பர் 25,2009,00:00  IST

http://www.dinamalar.com/world_detail.asp?news_id=4473

கோலாலம்பூர்:மலேசியாவில் வசிக்கும் இந்திய வம்சாவழி பெண், தன்னை இந்துவாக அங்கீகரிக்க கோரி, கோர்ட்டில் மனு செய்தார்.மலேசியாவை சேர்ந்தவர் சொக்கலிங்கம். இவரது மனைவி சித்தி ஹாஸ்னா(27).இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். மலேசிய கோர்ட்டில் ஹாஸ்னா ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், “நான் ஐந்து வயது சிறுமியாக இருந்த போது தெருவில் சுற்றித் திரிந்தேன்.

பங்காரம்மா என்ற பெயர் கொண்ட என்னை தத்தெடுத்த, சமூகத் தொண்டு அமைப்பினர், சில சடங்குகளை செய்து, என்னை முஸ்லிமாக அறிவித்தனர். சிறுவயதில் புரியாத மொழியில் அவர்கள் சொன்ன வாக்குறுதியை என்னால் பின்பற்ற இயலவில்லை. தற்போது, நான் இந்து மத முறைப்படி வாழ்ந்து வருகிறேன். எனவே, என்னை இந்துவாக அறிவிக்க வேண்டும். முஸ்லிம் மதத்திலிருந்து என்னை விடுவிக்க வேண்டும்’ என ஹாஸ்னா கூறிள்ளார். இந்த மனு குறித்து, இரண்டு வார காலத்திற்குள் பதில் அளிக்கும் படி முஸ்லிம் நல வாரியத்திற்கு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

———————————————————————————————————————————–இந்நிலையில் அந்நாட்டு மாஜி பிரதம மந்திரி இவ்வாறு கூரியிருப்பதும் நோக்கத்தக்கது!

———————————————————————————————————————————–

‘சொந்த நாட்டின் தொடர்பை விடுங்கள்’: மாஜி பிரதமர் வித்தியாசமான அட்வைஸ்
டிசம்பர் 25,2009,00:00  IST

http://www.dinamalar.com/world_detail.asp?news_id=4471

Top global news updateகோலாலம்பூர்: மலேசியாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முஸ்லிம்கள், தங்களின் சொந்த நாட்டுடனான தொடர்பை விட்டுவிட வேண்டும் என, அந்நாட்டின் முன்னாள் பிரதமர் மகாதிர் முகமது கூறியுள்ளார்.மலேசியாவில் 22 ஆண்டுகளாக பிரதமராக இருந்தவர் மகாதிர் முகமது. இவரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரே. இந்நிலையில், அவர் கூறியுள்ளதாவது:

மலேசியாவில் முஸ்லிமாக மதம் மாறிய பலர், சமூகத்தில் பல பிரச்னைகளைச் சந்திக்கின்றனர். அதற்கு காரணம் அவர்கள் மலாய் மொழி பேச மறுப்பதே. மலேசியாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முஸ்லிம்கள் எல்லாம் தங்களின் தாய் மொழியான தமிழ்தான் பேசுகின்றனர். தமிழ் பேசுவதால், மலேசியாவில் உள்ள முஸ்லிம்கள் அவர்களை பாரபட்சமாக நடத்துகின்றனர்.

மேலும், மலேசியாவில் வசிக்கும் இந்திய முஸ்லிம்கள் முழுமையாக மலேசிய கலாசாரத்தை பின்பற்ற மறுக்கின்றனர். முழுமையாக மலாய் மொழி பேசவும் தயங்குகின்றனர். தாய் மொழியான தமிழ் பேசுவதிலேயே ஆர்வம் காட்டுகின்றனர். தமிழ் கலாசாரத்தையே பின்பற்றுகின்றனர். அதனால், இந்தியாவுடனான தங்களின் தொடர்பை மலேசியாவில் வசிக்கும் முஸ்லிம்கள் விட்டுவிட வேண்டும். அப்படிச் செய்வது அவர்களுக்கு நல்லது. இருப்பினும், இதைச் செய்ய வேண்டியது அவர்களே.இவ்வாறு மகாதிர் முகமது கூறினார்.

மதமாற்றத்தை ரத்துச் செய்ய பங்காரம்மா நடவடிக்கை

December 15, 2009, 6:25 pm மலேசியாஇன்று பிரிவு: செய்தி

http://www.malaysiaindru.com/?p=29347

குடும்ப மாதான எஸ் பங்காரம்மா, தாம் சமூக நல இல்லத்தில் இருந்த போது ஏழு வயதில் இஸ்லாத்துக்கு மதமாற்றம் செய்யப்பட்டதை ரத்துச் செய்யுமாறு நீதிமன்ற ஆணையைக் கோரும் விண்ணப்பம் ஒன்றை அடுத்த வாரம் சமர்பிக்கவிருக்கிறார்.

“அந்த நடவடிக்கை, கூட்டரசு அரசியலமைப்பின் 12.4 வது பிரிவு, 1993ம் ஆண்டுக்கான பினாங்கி இஸ்லாமிய விவகார சட்டத்தின் 80 வது பிரிவு ஆகியவற்றின் அடிப்படையில் அமைவதாக அவரது வழக்குரைஞர் கூய் சியாவ் லியூங் கூறினார்.

பெற்றோர்கள் அல்லது பாதுகாவலரின் ஒப்புதல் இல்லாமல் இளம் வயதினரை (மைனர்) எந்த மதத்திற்கும் மாற்றுவதை அரசியலமைப்பு தடை செய்கிறது”, என்று அவர் இன்று மலேசியாகினியிடம் கூறினார்.

“பெற்றோரின் இணக்கம் இல்லாமல் 18 வயதுக்கு உட்பட்ட யாரையும் இஸ்லாத்திற்கு மதமாற்றம் செய்யப்படக் கூடாது என்று பினாங்கு இஸ்லாமியச் சட்டங்கள் கூறுகின்றன.”

சித்தி ஹஸ்னா வங்காரம்மா அப்துல்லா என்னும் முஸ்லிம் பெயரைக் கொண்ட பங்காரம்மா, பேரா, தஞ்சோங் பியாண்டாங்கில் மீனவரான தமது கணவர் எஸ் சொக்கலிங்கம், எட்டு வயதான கனகராஜ், இரண்டு வயதான ஹிஸியாந்தினி ஆகிய இரண்டு பிள்ளைகளுடனும் வாழ்ந்து வருகிறார்.

ஆனால் இந்து முறைப்படி நடைபெற்ற தமது திருமணத்தை பதிவு செய்ய முடியாமல் அவர் தடுமாறுகிறார்.

பினாங்கு சமூக நலத் துறை, தமக்குத் தெரியாமல் 1989ம் ஆண்டு டிசம்பர் மாதம் 28 ம் தேதி மதமாற்றம் செய்து விட்டதாக கடந்த மாதம் அவர் கூறியிருந்தார்.

எனினும் 1983ம் ஆண்டு நவம்பர் மாதம் 30ம் தேதி பெற்றோரின் ஒப்புதலுடன் பங்காரம்மா மதமாற்றம் செய்யப்பட்டதாக சமூக நலத் துறை தலைமை இயக்குநர் மெமே ஜைனல் ரஷீட் அதற்கு பதில் அளித்திருந்தார். அப்போது பங்காரம்மாவுக்கு வயது ஒன்று ஆகும்.

அந்தக் கூற்றுக்கு பத்திரப் பூர்வமான ஆதாரத்தையும் கெப்பாளா பத்தாஸில் உள்ள தாமான் பக்தி குழந்தைகள் நல இல்லத்தில் அவரை சேர்ப்பதற்கு 1947ம் ஆண்டு இளம் குற்றவாளிகள் நீதிமன்றச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட நீதிமன்ற உத்தரவுக்கான ஆதாரத்தையும் கோரி கூய் அந்தத் துறைக்குக் கடிதம் எழுதினார்.

மெமே கூறிய நிகழ்வுகளை நிராகரித்த 27 வயதான பங்காரம்மா, தமது பெற்றோர்களான தோட்டத் தொழிலாளர் பி சுப்ரமணியமும் லட்சுமி ராமடுவும் -இருவரும் இந்துக்கள்- தம்மை இஸ்லாத்திற்கு மாற்றவில்லை என்று வலியுறுத்தினார்.

ஆனால் மெமே கூறுவதை ஆதரித்த பினாங்கு இஸ்லாமிய சமய மன்றத் தலைவர் ஷாபுடின் யாஹாயா, அந்த மன்றம் மேற்கொண்ட சோதனைகள் அதனை உறுதி செய்வதாகவும் சமூக நல இல்லத்தில் நடைபெற்ற மதமாற்றம் “பங்காரம்மாவின் மதமாற்றத்தை மறு உறுதி செய்வதற்காகும்” என்று தெரிவித்திருந்தார்.

‘பத்திரங்களில் குளறுபடிகள்’

அண்மையில் அந்தத் துறை தனது கூற்றுக்கு ஆதாரமாக பல பத்திரங்களை இணைத்து பதில் எழுதியிருப்பதாக கூய் கூறினார்.

“ஆனால் அந்தப் பத்திரங்களை அணுக்கமாக ஆராய்ந்த போது பல சட்டப் பிரச்னைகள் மீது குளறுபடிகளும் முரண்பாடுகளும் இருப்பது தெரிய வந்துள்ளது”, என்று அவர் மேல் விவரங்களை தராமல் குறிப்பிட்டார்.

அரசியலமைப்புக்கு முரணாக சட்ட விரோதமாக இளம் வயது நபர் ஒருவருவருடைய மதமாற்றம் சம்பந்தப்பட்டிருப்பதால் பங்காரம்மா விவகாரம் ஒரு சிவில் விஷயம் என்றும் கூய் சொன்னார்.

“இஸ்லாத்திற்கு ஒரு நபர் சுய விருப்பம் இல்லாமல், தெரியாமல்  மாற்றப்பட்ட விஷயம் இதுவாகும். இஸ்லாத்தை கைவிடுவதற்கு நீதிமன்ற ஆணையைக் கோரும் சுயவிருப்பத்தின் பேரில் மதம் மாறிய விவகாரம் அல்ல இது,” என்று அவர் குறிப்பிட்டார்.

நன்றி: “மலேசியா இன்று” தேதி 15-12-2009