Archive for the ‘மனம்’ Category

சினிமாவின் நிர்வாணம், மேற்கத்தைய கலாச்சாரத்தின் தாக்கம், திசைமாறிய இந்திய நாகரிகம் – முடிவு இளம்பெண்களின் சீரழிவு!

ஜனவரி13, 2014

சினிமாவின் நிர்வாணம், மேற்கத்தைய கலாச்சாரத்தின் தாக்கம், திசைமாறிய இந்திய நாகரிகம் – முடிவு இளம்பெண்களின் சீரழிவு!

Indian women.3

16 வயதாகும்இவளுக்கு 15 வயதுசிறுவனிடம்காதல்ஏற்பட்டததாம்!: வியாசர்பாடி முல்லை நகர் பஸ் நிலையம் அருகில் வசிக்கும் கூலி தொழிலாளி ரவி–அபிராமி தம்பதியின் மகள் செல்வி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 16 வயதாகும் இவளுக்கு அதே பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுவனுக்கும் காதல் ஏற்பட்டது[1]. இப்படி தன்னைவிட வயது குறைவாக உள்ள மாணவனுடன் ஏற்படுவது காதல் அல்ல ஆனால் காமம் தான். ஆனால், கட்டுக்கடங்காத இளம் வயதில் காமத்தினால் இவ்வாறு தள்ளப்பட்டு, கொக்கோகத்தில் ஈடுபட்டுள்ளனர். பெற்றோருக்கு தெரியாமல் சந்தித்து வந்தனர், என்று செய்திகள் கூறுவதால் ஒன்று பெற்றோர்களின் கவனிப்பு சரியில்லை அல்லது அந்த “காதலர்கள்” வீட்டில் பொய் சொல்லி சாதாரணமாக வெளியே சென்றுள்ளனர், உடலுறவு கொண்டுள்ளனர் என்று தெரிகிறது. கடந்த ஜனவரி 7–ந்தேதி இருவரையும் காணவில்லை. இதுபற்றி சிறுமியின் பெற்றோர் எம்.கே.பி. நகர் போலீசில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் நடராஜன் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தார்.

Indian women.2

தனிமை எவ்வாறு கிடைத்துள்ளது, உடலுறவு கொண்டு முதலிய புதிர்கள்: வந்துள்ளது போலீஸ் விசாரணையில் இருவரும் விழுப்புரத்தில் இருப்பது தெரிய வந்தது. உடனே எம்.கே.பி. நகர் போலீசார் விழுப்புரம் சென்று அவர்களை மீட்டனர். அப்போது சிறுமி 4 மாத கர்ப்பிணியாக இருப்பதைப் பார்த்து போலீசாரும், பெற்றோரும் அதிர்ச்சி அடைந்தனர்[2]. அதாவதுஇ அக்டோபர் 2013க்கு முன்னரே உடலுறவு கொண்டு வந்துள்ளனர். அந்த அளவிற்கு அவர்களுக்கு தனிமை எவ்வாறு கிடைத்துள்ளது என்பதும் நோக்கத்தக்கது. அவர்களை சென்னைக்கு அழைத்து வந்தனர். 12-01-2014 அன்று முதல் கோர்ட்டுக்கு தொடர்ந்து விடுமுறை என்பதால் 17–ந்தேதி கோர்ட்டில் ஆஜர்படுத்த முடிவு செய்துள்ளனர். அதுவரை சிறுமி கெல்லீசில் உள்ள மகளிர் காப்பகத்திலும், சிறுவன் ராயபுரம் சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும் ஒப்படைக்கப்பட்டனர்.

Indian women

கோக்கோகோலா, பிட்ஸா, கென்டக்கிசிக்கன், குடி, கூத்து, இனசுற்றுலா: இன்றைய பள்ளி-கல்லூரி மாணவ-மாணவிகளில் பார்பமுலாவே இப்படித்தான் இருக்கிறது. இதற்கு செல்போன், பேஸ்புக் முதலியவை இடையில் தூபம் போட்டுக் கொண்டிருக்கின்றன[3]. போதாகுறைக்கு, ஆபாசமான செக்ஸ் ஜோக்குகள், சினிமா தொகுப்புகள், வீடியோக்கள், சிடி-விற்பனை, புழக்கம் முதலியவை. பெற்றோர்கள் கஷ்டப்பட்டு, சம்பாதித்து, தங்களது மகள்-மகன்களை படிக்க வைத்தால், கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல், அவர்கள் இப்படி கெட்டு சீரழிகிறார்கள். பெரியவர்களுக்கு மதிப்பு, மரியாதை கொடுக்கக் கூடாது என்று ஊடகங்கள் மூலம், தொடர்ச்சியாக பிரச்சாரம் செய்யப்படுவது தான் இதற்கு காரணம். பெற்றோர்கள் கஷ்டப்பட்டு, சம்பாதித்து, படிக்க வைக்கின்றனர் என்றால், அது அவர்கள் கடமை, எங்களது லட்சியம் ஜாலியாக இருக்க வேண்டும், என்றுதான், சிலர் மற்றவர்களை கெடுக்கிறார்கள்.

 

  • கடந்த பிப்ரவரியில் கூட (2013), இதே மாதிரி, ராஜேஸ் என்பவன் தூத்துக்குடியைச் சேர்ந்த 15 வயது பெண்ணை ஜாலியாக இருக்க காரில் கன்னியாக்குமரிக்கு அழைத்து சென்றான். போகும் வழியில், அவனது நண்பர்கள் என்று இருவர் ஏறிக்கொண்டனர். பிறகு, கன்னியாக்குமரி லாட்ஜில் தூக்கமருந்து கொடுத்து, மூவரும் கற்பழித்துள்ளனர். பிறகு, கேரளாவில் கொத்தார்கரா என்ற இடத்தில் விட்டுவிட்டு மறைந்து விட்டனர்[4]. உதாரணத்திற்கு இது கொடுக்கப்படுகிறது.
  • பிரியானி சாப்பிட விட்டை விட்டு ஓடிய மாணவிகள்[5].
  • காதலிக்கிறேன் என்று சொல்லி நண்பர்களுடன் போதை மருந்து கொடுத்து கற்பழித்த மாணவர்கள்[6].
  • மாணவியை ஆபாச வீடியோ எடுத்த மாணவர்கள்[7].

இப்படி தொடற்கின்றன.

மற்ற சிலஉதாரணங்கள்: நான் பல இடுகைகளை இப்பிரச்சினைப் பற்றி கீழ்கண்ட இடுககளில் அலசியுள்ளேன்:

  • சினிமாவின் ஆபாசத்தால் தூண்டுதலால் பள்ளிப் பெண்களே காமத்தில் சீரழியும் போக்கு உண்டாகியுள்ளது[8].
  • பள்ளிகளில் ஆசிரியர்களே மாணவிகளை கற்பழிப்பதை பார்த்துக் கொண்டு இருக்கமுடியாது[9].
  • சகமாணவன் மாணவியை ஆபாசவீடியோ எடுக்கும் அளவிற்கு தமிழகம் உள்ளது[10].
  • உயிருக்கு உயிரான தோழியை கற்பழித்த தோழர்கள்[11].
  • சிறுமிகளிடம் ஆபாசப்படம் காட்டி சில்மிஷம்[12].
  • நான்கு வயது பெண்ணையும் கற்பழிக்கும் கயவர்கள் தமிழகத்திலேயே இருக்கிறார்கள்[13].

பெற்றோர்களின் கவனிப்பு, கண்காணிப்பு, அக்கறை முதலியவை அவசியம் தேவையாகிறது. சினிமாக்காரர்கள் தங்களது சீரழிப்புகளை தங்களோடு வைத்துக் கொள்ள வேண்டும். ஊடகங்களும் விளம்பர விபச்சாரத்தை செய்வது நிறுத்தப் பட வேண்டும். மேலாக சிறுவர்-சிறுமியர், மாணவ-மாணவியர் முதலியோர் நிச்சயமாக தாங்கள் சுத்தமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். இதைத்தான் முன்னர் “பிரமச்சரியம்” என்றார்கள். ஆனால், நாத்திகப் போர்வையில் அவையெல்லாம் கடந்த 60-100 ஆண்டுகளாக ஏளனம் செய்யப்பட்டதால் வெறித்தொதுக்கப் பட்டன. இப்பொழுது, அமெரிக்க சீரழிவுகள் நாகரிகத்தின் போர்வையில் நுழைந்து விட்டுள்ளமையால், கட்டுக் கடங்காத நிலை வந்துள்ளது. இந்தியர்கள் எதிர்த்துதான் ஆகவேண்டும். இந்த கலாச்சார ஊழலை அழிக்க வேண்டும்.

 

வேதபிரகாஷ்

© 13-01-2014


[2] மாலைமலர், 15 வயது சிறுவனுடன் சென்னை சிறுமி ஓட்டம்: 4 மாத கர்ப்பிணியாக விழுப்புரத்தில் மீட்பு , பதிவு செய்த நாள் : ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 3:08 PM IST

இந்தோனேசியா பள்ளி மாணவிகளுக்கு கன்னித்தன்மை பரிசோதனை: விளக்கம், எதிப்பு, முடிவு!

ஓகஸ்ட்22, 2013

இந்தோனேசியா பள்ளி மாணவிகளுக்கு கன்னித்தன்மை பரிசோதனை: விளக்கம், எதிப்பு, முடிவு!

மொஹம்மது ரஷீத் விளக்கம்

மொஹம்மது ரஷீத் விளக்கம்

பள்ளிமாணவிகளுக்குகன்னித்தன்மைபரிசோதனை: இந்தோனேசியா உலகத்திலேயே அதிக முஸ்லிம் ஜனத்தொகைக் கொண்ட நாடாகும் (சுமார் 220 மில்லியன்). நவீனமயமாக்கல் மற்றும் பொருளாதார ரீதியில் இந்நாட்டு மக்கள் வளர்ச்சி கண்டு வருகிறார்கள். இந்நிலையில் உயர்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு கன்னித்தன்மை பரிசோதனை செய்ய திட்டமிட்டுள்ளதாக கல்வி அதிகாரிகளின் அறிவிப்பிற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது[1]. இந்தோனேசியாவைப் பொறுத்த வரையில், இது ஒன்றும் புதிய சமாச்சாரம் இல்லை. 2010லேயே ஜாம்பி என்ற மாவட்டத்தில், இத்தகைய திட்டத்தை அமூல் படுத்தியது[2]. அப்பொழுது “அம்னெஸ்டி இன்டெர்நேஷனல்” போன்ற நிறுவனங்கள் எதிர்ப்புத் தெர்வித்தன[3].

இந்தோனேசிய பள்ளி மாணவிகள்

இந்தோனேசிய பள்ளி மாணவிகள்

2014 முதல்கன்னித்தன்மைபரிசோதனைநடத்ததிட்டம்: இந்தோனேசியாவின் உள்ள சுமத்ரா தீவில் அமைந்துள்ள பிரபுமுலிக் மாவட்டத்தில் உயர்நிலை பள்ளி மாணவிகளுக்கு அடுத்த ஆண்டு 2014 முதல் கன்னித்தன்மை பரிசோதனை நடத்த திட்டமிட்டுள்ளதாக அம்மாகாண கல்வி அதிகாரிகள் அறிவித்தனர்[4]. இந்த அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது[5]. இதுகுறித்து கல்வி அதிகாரி முகமது ரஷீத் கூறுகையில், திருமணத்திற்கு முன்பாக செக்ஸ் உறவை தடுப்பதற்கும், விபசாரத்தால் மாணவிகள் பாதிக்கப்படுவதை தடுப்பதற்காகவும் இது போன்ற திட்டம் ஒன்றை அடுத்த ஆண்டு முதல் செயல்படுத்த திட்டமிடப்பட்டிருந்தது என்று தெரிவித்தார்[6]. நல்லவேளை, குஷ்பு போன்றோர் அந்நாட்டில் இல்லை போலிருக்கிறது.

இந்தோனேசிய பள்ளிப் பெண்கள் - இன்னொரு வகை

இந்தோனேசிய பள்ளிப் பெண்கள் – இன்னொரு வகை

மனிதஉரிமைகளுக்குஎதிரானது: ஆனால் இது மனித உரிமைகளுக்கு எதிரானது என கடும் சர்ச்சை எழுந்துள்ளது. பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக இணையதளங்களிலும் ஏராளமானோர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து கருத்துகளை தெரிவித்திருந்தனர்[7]. இதனால் இந்த உத்தரவு சர்ச்சையை கிளப்பியுள்ளது. குழந்தைகள் மீது வன்முறையை திணிப்பதும், அவர்களை அச்சுறுத்துவதுமான இது போன்ற அறிவிப்புகளை வெளியிடக் கூடாது என்றும் எதிர்ப்பாளர்கள் தெரிவித்தனர்[8]. முதலில் இத்தகைய எண்ணம் எவ்வாறு ஏற்பட்டது என்று தெரியவில்லை. படிக்கும் பென்களுக்கும், இதற்கும் என்ன சம்பந்தம், அவ்வாறு அறிந்டு கொண்டு என்ன செய்யப் போகிறார்கள் என்றெல்லாம் மக்கள் யோசிக்க ஆரம்பித்துள்ளனர்.

இந்தோனேசிய பள்ளி மாணவிகள் - மற்றொருமொரு வகை

இந்தோனேசிய பள்ளி மாணவிகள் – மற்றொருமொரு வகை

ஆண்பிள்ளைகளுக்கும், அத்தகைய பரிசோதனைகளைச் செய்யவேண்டியதுதானே?: இதுகுறித்து மாகாண கல்வி அதிகாரி விடோடோ கூறுகையில், மாணவிகளுக்கு தேவையான எவ்வளவோ நல்ல திட்டங்கள் செயல்படுத்தப்படாமல் இருக்கும் போது, இது போன்ற பரிசோதனைகள் தேவையற்றது. மேலும் இதற்கு எதிர்ப்பு கிளம்பியதும் அந்த திட்டம் கைவிடப்பட்டுள்ளது என்றார். இதுகுறித்து தேசிய குழந்தைகள் உரிமை ஆணையர் ஏரிஸ் மெர்டகா, ஜகார்தாவில் அளித்த பேட்டியில், மாணவிகளுக்கு கன்னித்தன்மை இழப்பு என்பது செக்ஸ் நடவடிக்கைகளால் மட்டுமல்ல, விளையாட்டு, உடல் நலக் குறைவு போன்றவற்றால் கூட ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அதிகாரிகளின் இந்த திட்டம் கடுமையான கண்டனத்திற்குரியதாகும் என்று தெரிவித்துள்ளார்[9]. மேலும் ஆண்பிள்ளைகளுக்கும், அத்தகைய பரிசோதனைகளைச் செய்யவேண்டியதுதானே? அவர்களது ஆணுறுப்பை சோதித்து, அவர்கள் செக்ஸில் ஈடுப்பட்டிருக்கிறார்களா இல்லையா என்று கண்டுபிடிக்கலாமே என்று மனித உரிமை குழுக்கள் சார்பில் கேள்வியை எழுப்பியுள்ளனர்[10].

செய்ய வேண்டியது என்ன?: பிரம்மச்சரியம் என்று இந்தியாவில் சொல்வார்கள், அதாவது, ஒழுங்கு, கட்டுப்பாடு, முதலியன இருபாலருக்கும்பொறுந்தும். அதனால்தான் அத்தகைய முறையை பிரம்மச்சரியம்  என்றார்கள். இன்று சுதந்திரம் என்றா ரீதியில், பெண்கள், ஆண்களை ஏன் சோதிக்கக் கூடாது என்று கேட்கின்றனர். படிக்கின்ற வயதில் படிப்பில் சிரத்தையைச் செல்ல்லுத்தினால், இந்த பிரச்சினையே வந்திருக்காது. ஆனால், நாகரிகம், சுதந்திரம், பெண்ணுரிமை என்ற கோணங்களில், கற்பு முதலியவறைப் பற்றி, நீர்த்துப் போன்ற, ஒழுக்கமற்ற, கேவலமான கருத்துகள் வெளியிடப்படுகின்றன. அவ்வாறு வெளிப்படுத்துபவர்கள், தங்களது மகள்களின் நிலையைப் பற்றி யோசித்துப் பார்ப்பதில்லை. அதாவது, மற்றவர்களுக்கு சொல்லும், ஆதரிக்கும் சுதந்திரங்களைக் கொண்டு, அவர்களின் மகள்கள், அதே மாதிரி, சமூகத்தில் உலா வருவார்களா, அதற்கு சம்மதிப்பார்களா?

© வேதபிரகாஷ்

22-08–2013


[4] தினகரன், இந்தோனேசியாவில்பரபரப்பு : பள்ளிமாணவிகளுக்குகன்னித்தன்மைபரிசோதனை,

[10] இந்தோனேசியாவில் பரபரப்பு : பள்ளி மாணவிகளுக்கு கன்னித்தன்மை பரிசோதனை