தெரிந்த அனிதாவும், தெரியாத அனிதாக்களும்: திராவிட சித்தாந்திகள் எவ்வாறு பிரச்சினைகளை அணுகுகின்றனர், எதிர்க்கின்றனர் மற்றும் மறுக்கின்றனர்! (1)
தமிழகம் பெண்மையைப் போற்றுகிறதா, இல்லையா?: தமிழகத்தில் பெண்மை பலவழிகளில் சீரழிக்கப் பட்டு வருகின்றது. திராவிடத்துவ கோணத்தில் பார்க்கும் போது, 1960களிலிலிருந்து, ஆட்சியாளர்களுள் பெரும்பாலோர், பலதார திருமணம், மணமுறிவு, சேர்ந்து வாழ்தல் போன்ற நிலைகளில் இருந்து வந்துள்ளதால், அதைப் பற்றி அலசுவதே தர்மசங்கடமான நிலை ஏற்படுகிறது. மேலும் உள்ள, மற்றா விவகாரங்களை அலவும் முடியாத நிலை உள்ளது. பெண்ணியப் போராளிகள், சமூகப் போராளிகள், சாமானியர்கள் போன்றோர் எல்லாம், தீடீரென்று தோன்றி, சில குறிப்பிட்ட விசயங்களுக்கு ஆர்பாட்டம் செய்து மறைந்து விடுகின்றனர். தற்கொலை என்றால் கூட, ஏதோ ஒருவிதத்தில் பாரபட்சத்துடன் தான் அணுகி செய்தியாக்குகின்றனர் அல்லது மறந்து விடுகின்றனர். அனிதா தற்கொலை என்பதற்கு எல்லோரும் குதித்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், அதே நேரத்தில் நடந்துள்ள மற்ற தற்கொலைகள் பற்றி கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர். சென்னையைச் சேர்ந்த மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டு, பலருக்கு இரையாக்கப்பட்ட செய்தி, ஏதோ சாதாரணமாக பாவிக்கப் பட்டு, அமைதியாக கவனிக்கின்றனர் அல்லது மறைக்க முயல்கின்றனர். கடந்த ஒரு வாரமாக 01-09-2017 அன்று தற்கொலை செய்து கொண்ட அனிதா பிரச்சினை விவாதத்தில் உள்ளது[1]. பட்டியல் இனத்தை சேர்ந்த பெண் என்பதால், அதில் பொதுவாக மத்திய-மாநில அரசுகளைக் குற்றஞ்சாட்டி பேச்சுகள்இருக்கின்றன[2]. பிரச்சினை படிப்பை விட்டு, அரசியலாக்கப்பட்டு, சித்தாந்த குழப்பங்களில் சேர்த்துள்ளனர்[3]. அதே நேரத்தில், மற்ற தற்கொலைகளை கண்டுகொள்ளவில்லை.
மருத்துவப் படிப்பு, பொது நுழைவு தேர்வு, ஊழல் அற்ற தீர்வுகள்: தமிழகத்தைப் பொறுத்த வரையில், தனியார் மயமாக்கப் பட்டப் பிறகு, மருத்துவம், பொறியியல் படிப்புகள் லட்சங்களுக்கு விற்கப்படுகின்றன என்பது தெரிந்த விசயமாக இருக்கிறது. மருத்துவம், பொறியியல் கல்லூரிகள், மருத்துவ மனைகள் எல்லாமே வியாபார ரீதியில் நடத்தப் பட்டு வருவதால், அரசியல்வாதிகள், அவர்களது பினாமிகள், மற்றவர் தங்களது கருப்புப் பணத்தைக் கொட்டி, வெள்ளையாக்கும் தளமாக மாற்றிக் கொண்டு விட்டனர். அதனால், பணக்காரர்களைப் பொறுத்த வரையில், சீட் வாங்குவதில் எந்த பிரச்சினையும் இல்லை. நல்ல மதிப்பெண் இருந்தாலும், கட்டணம் கட்ட வழியில்லை என்று சேராத மாணவ-மாணவியரும் இருக்கத்தான் செய்கின்றனர். அந்நிலையில் மத்தியதர-ஏழைமாணவ-மாணவியருக்கு, இது கனவாகவே மாறிவிட்டது. மருத்துவப் படிப்பிற்கு நுழைவு தேர்வு வைப்பது அல்லது 10+2 மதிப்பெண் வைத்து, தேர்வு செய்வது என்ற நிலை தமிழகத்தில் இருந்து வந்துள்ளது. அந்நிலையில், நீட் வந்தபோது, தங்களது வியாபாரம் பாதிப்பதால், பிரச்சினையை ஏற்படுத்துகின்றனர். மருத்துவ கண்காட்சி என்று நடத்தும் போது, அவர்கள் எப்படி மாணவ-மாணவியருக்கு வலைவீசுகிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளலாம். அந்நிலையில் தான், தங்கள் சீட்டுகளை விற்கமுடியாதே என்று சம்பந்தப் பட்டவர்கள், நீட் வருவதை எதிர்க்கின்றனர், பிரச்சினையைஉக் குழப்புகின்றனர். இனி அதே நேரத்தில், எவ்வாறு ஒரு மாணவி சீரழிக்கப்பட்டாள் என்பதை பார்ப்போம். அதில் ஒரு மருத்துவரும் உள்ளார் என்பது, கேவலம்.
காணாமல் போன மாணவி, சீரழிந்து திரும்பி வந்த பரிதாபம்: சென்னை கோயம்பேடு பகுதியை சேர்ந்த 14 / 16 வயது சிறுமி, அங்குள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இவருடைய தாய், சென்னை மாநகராட்சியில் துப்புரவு வேலை செய்கிறார் என்கிறது மாலைமலர். வங்கியில் துப்புரவு பணியாளராக உள்ளார், என்கிறது தினகரன். இதெல்லாம் ஊடகங்களுக்கே கைவந்த கலை. இவர்களுக்கு 2 மகள்கள். ராணியின் கணவர் சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இந்த நிலையில், கடந்த ஒரு மாதம் முன்பு (ஆகஸ்ட் 2017) அந்த மாணவி, வீட்டில் இருந்து திடீரென மாயமானார்[4]. அவரது தாய் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தார். மாணவியை கண்டு பிடிக்க முடியவில்லை. இதையடுத்து, கோயம்பேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிந்து மாணவியை தேடி வந்தனர்[5]. இந்த நிலையில், மாயமான மாணவி ஓரிரு நாட்களுக்கு முன்பு வீடு திரும்பினார். குடும்பத்துக்கு தெரிந்த நபர் ஒருவர் / சித்ராவின் சகோதரர் குமார் மீட்டு, சிறுமியை கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டிற்கு அழைத்து வந்து ராணியிடம் ஒப்படைத்துள்ளார். சுரேஷ், சிறுமியை பலாத்காரம் ெசய்துள்ளார். மேலும் அவரை பல இடங்களுக்கு அழைத்து சென்று சுரேஷ் தனது நண்பர்களுடன் நெருக்கமாக இருக்க வைத்துள்ளார்[6]. அதேபோல், ஆரணி அரசு மருத்துவமனை டாக்டர் ஜெயபிரகாசம் என்பவரும், சிறுமிக்கு மயக்க ஊசி போட்டு பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், இதுகுறித்து வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகவும் இந்த சம்பவத்துக்கு மருத்துவ உதவியாளர் பாண்டியன் உதவியாக இருந்ததாகவும் சிறுமி கூறினார்[7].
மருத்துவ பரிசோதனையில் மாணவி சீரழிக்கப்பட்டது தெரிய வந்தது: மாணவியின் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தது. வயிறு வலியால் துடி துடித்தார். தாய், அவரை ஆஸ்பத்திரிக்கு கூட்டி சென்றார்[8]. மருத்துவ பரிசோதனையில், மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. தாய் அதிர்ந்து போனார்[9]. விசாரணையில், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பையூர் எம்.ஜி.ஆர். நகரில் மாணவியின் தாய்க்கு உறவினரான சித்ரா என்கிற பெண் வசித்து வருகிறார். மாயமான போது, ஆரணியில் உள்ள உறவினர் சித்ராவுக்கு மாணவி போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அவர், வேறு எங்கும் செல்ல வேண்டாம். ஆரணி வா… ஜவுளிக்கடையில் வேலை வாங்கி தருகிறேன். என் வீட்டிலேயே தங்கி வேலை செய் என்று ஆசை வார்த்தை கூறி அழைத்தார். இதை நம்பி, மாணவியும் ஆரணிக்கு சென்றார். மாணவியை, சித்ரா தனது வீட்டில் தங்க வைத்தார். சித்ராவிற்கும், ஆரணி அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்படும் உடல்களை, வாடகைக்கு தனியார் வாகனம் மூலம் கொண்டு சென்று உறவினர்களிடம் ஒப்படைக்கும் வேலை செய்யும் சுரேஷூக்கும் தொடர்புள்ளது. சித்ரா, சுரேஷ் உதவியுடன், மாணவியை கட்டாயப்படுத்தி விபசாரத்தில் தள்ளினார். மாணவியை வெளியே தப்பித்து செல்ல விடாமல் வீட்டிலேயே அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்து வந்தனர்.
© வேதபிரகாஷ்
11-09-2017
[1] http://www.business-standard.com/article/current-affairs/tamil-nadu-topper-anita-who-fought-against-neet-commits-suicide-117090100836_1.html
[2] http://indiatoday.intoday.in/story/anitha-suicide-neet-tamil-nadu-pa-ranjith-ariyalur/1/1039442.html
[3] http://www.firstpost.com/india/tamil-nadu-dalith-girl-anitha-who-spearheaded-fight-against-neet-in-supreme-court-commits-suicide-3998591.html
[4] மாலைமலர், சென்னை மாணவி கற்பழிப்பு: ஆரணி அரசு ஆஸ்பத்திரி டாக்டர் – உதவியாளர் கைது, பதிவு: செப்டம்பர் 09, 2017 10:24.
[5] http://www.maalaimalar.com/News/TopNews/2017/09/09102458/1107087/Chennai-student-molested-arani-government-hospital.vpf
[6] ஜெய-டிவி-செய்திகள், மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக்கூறி ஆரணி அரசு மருத்துவமனை மருத்துவர் ஜெயபிரகாஷ் உள்ளிட்ட 2 பேரை சென்னை காவல்துறையினர் கைது செய்தனர், Sep 9 2017 8:54PM
[7] http://www.jayanewslive.com/tamilnadu/tamilnadu_74269.html
[8] தமிழ்.முரசு, ஆரணியில் மயக்க ஊசி போட்டு சிறுமி பலாத்காரம் அரசு டாக்டர் கைது: மருத்துவ உதவியாளர் சிக்கினார், 09090-2017. 3.54.29 PM.
[9] http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=109682