Archive for the ‘மானாமதுரை மல்லி’ Category

எய்ட்ஸ் பாதிக்கப்பட்ட நடிகையின் சோகக்கதை, பெண்மை பாதிக்கப் பட்ட குரூரம் – சினிமாவின் சீரழிவுகள்!

திசெம்பர்6, 2014

எய்ட்ஸ் பாதிக்கப்பட்ட நடிகையின் சோகக்கதை, பெண்மை பாதிக்கப் பட்ட குரூரம் – சினிமாவின் சீரழிவுகள்!

நூர் நிஷா நடிகை விவகாரம்

நூர் நிஷா நடிகை விவகாரம்

நூர் நிஷா என்ற நடிகையைப் பற்றி இப்பொழுது வந்துள்ள செய்திகள் (2014): நாகப்பட்டினம் மாவட்டம், நாகூர் தர்கா அருகே ஈ, எறும்புகள் மொய்க்க சுமார் ஆறு நாட்கள் ஒரு பெண் அனாதையாகக் கிடந்தார். அடையாளம் தெரிந்த சிலருக்கு மட்டும் அந்தப் பெண் ஒரு முன்னாள் தமிழ் சினிமா நடிகை என்பது தெரிய வந்தது. எய்ட்ஸ் நோய் அவரது இளமையை உருக்குலைத்துவிட்ட நிலையில், கேட்க ஆளின்றிக் கிடந்த அந்தப் பெண், சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் சினிமாக்களில் கதாநாயகியாக வலம் வந்த நடிகை நிஷா என்ற நூர் நிஷா என்கின்ற நூருன்னிசா[1]. ‘கல்யாண அகதிகள்’ (1986), ‘டிக்..டிக்..டிக்..’ (1981), ஐயர் தி கிரேட் (1990),  ‘ராகவேந்திரா’, ‘இளமை இதோ இதோ’, ‘முயலுக்கு மூணுகால்,’ ‘மானாமதுரை மல்லி’, ‘எனக்காகக் காத்திரு’ போன்ற சில படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். “ஐயர் தி கிரேட்” படத்தின் தயாரிப்பாளரான ஆர். மோஹன் [ R.Mohan] இவரை விபச்சாரத்தில் ஈடுபடுத்தினார். பிறகு, சினிமாத் தொழிலை விட்டு விலகிய இவர் காணாமல் போய்விட்டார்[2] என்று விகிபீடியா கூறுகிறது. ஆனால், யார் இந்த ஆர். மோஹன் என்பது பற்றிய விவரங்கள் இணைதளங்களில் தேடித்தேடிப் பார்த்தாலும் கிடைக்கவில்லை.

ல்யாண அகதிகள் நிஷா.- பாலசந்தர்

ல்யாண அகதிகள் நிஷா.- பாலசந்தர்

 நாகூரில் குடும்பத்தாரால் நிர்கதியாக விடப்பட்ட நூர் நிஷா: நிஷாவின் பிறந்த ஊரே நாகூர்தான் என்பது இன்னொரு அதிர்ச்சிச் செய்தி[3] என்கிறது தமிழ்முரசு என்ற இணைதளம். அதில் என்ன அதிர்ச்சி இருக்கிறது என்று அவர்களுக்குத் தான் தெரிந்திருக்க வேண்டும். அவரது அப்பா, பெரியப்பா, அத்தை என ஓர் உறவினர் பட்டாளமே அந்த ஊரில் வசதியுடன் வாழ்ந்து வருவது, அதைவிட அதிர்ச்சியான செய்தி. மேலும் ‘ஐயர் தி கிரேட்’ என்ற படத்தை தயாரித்தார். “ஐயர் தி கிரேட்” படத்தின் தயாரிப்பாளரான ஆர். மோஹன் [ R.Mohan] இவரை விபச்சாரத்தில் ஈடுபடுத்தினார் என்று இன்னொரு தளம் கூருகின்றது. பின்னர், முஸ்லீம் முன்னேற்ற கழகத்தில் இணைந்ததாக தகவல் வந்தது[4]. அதாவது 1990க்குப் பிறகு இவரது வாழ்க்கையில் பலவிசயங்கள் நடந்துள்ளன என்றாகிறது. தெருவில் கிடந்த இவரை முஸ்லீம் முன்னேற்ற கழகத்தினர் தாம்பரத்தில் உள்ள மருத்துவமனையில் சேர்ப்பித்தனர். அப்பொழுதுதான், அவருக்கு எய்ட்ஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது[5]. பிறகு முமுக அவரை ஏன் விட்டுவிட்டனர் அல்லது தாம்பரத்திலிருந்து, இவர் எப்படி நாகூருக்குச் சென்றார் போன்ற விசயங்களும் மர்மமாக உள்ளன.

aids affected actress

aids affected actress

சமூக வலைத்தளங்களில் பரவிய செய்திகள்: இவரைப் பற்றிய செய்திகள் சில தினங்களுக்கு முன்னர் சமூக வலைத்தளங்களில் பரவின. நாகை மாவட்டத்தை சேர்ந்த சில உள்ளூர் செய்திகளிலும் இந்த சோகக் கதை ஒளிபரப்பாகியது. மற்ற மொழி நாளிதழ்களிலும் வெளியாகின[6]. இந்நிலையில், இந்த செய்தி பற்றி அறிந்த தேசிய மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினரான நீதிபதி முருகேசன் இந்த பிரச்சனையை தேசிய மனித உரிமை ஆணையத்தின் ‘சுவோ மோட்டோ’வாக (தாமாக முன்வந்து தீர்த்து வைக்க நினைக்கும் பிரச்சனை) கையில் எடுத்துள்ளார்[7]. ‘அந்த நடிகைக்கு தேவையான சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை என்னென்ன? என்று நான்கு வாரத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்’ என்று நாகை மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். ‘போக்கிடம் இல்லாத, யாருடைய உதவியும் கிடைக்காத ஒரு பெண் போதிய கவனிப்பின்றி பொது வீதியில் உயிருக்கு மோசமான நிலையில் கிடக்கிறார். அவருக்கு உதவி செய்ய யாருமே இல்லை என்ற தகவல் அவருடைய வாழ்வுரிமையை மீறுவதாகவும், வேதனை அளிப்பதாகவும் உள்ளது’ என நீதிபதி முருகேசன் குறிப்பிட்டுள்ளார்[8].

Nisha Malayalam news

Nisha Malayalam news

வளைத்தளங்களில் பரவல்காக கிடைக்கும் விசயங்கள்: கீழ்குறிப்பிட்டுள்ள விசயங்கள் அப்படியே ஒன்றிற்க்கும் மேற்பட்ட வலைதளங்களில் காணப்படுகின்றன. “அப்பா பேர் அப்துல் ஜப்பார். அவரது முதல் மனைவி பேபிக்குப் பிறந்த பெண்தான் நான். குழந்தையாக நான் இருந்த போது அப்பாகிட்டே கோவிச்சுக்கிட்டு அம்மா என்னைத் தூக்கிட்டு சென்னைக்கு வந்திட்டாங்க. என்னை வளர்த்து, சினிமாவில் நடிக்க வச்சாங்க. பல படங்களில் ஹீரோயினா நடித்தேன். அம்மா இறந்த பிறகு அந்த துக்கத்தில் சரியாகச் சாப்பிடாமல் மெலிந்து விட்டேன். நடிக்கிறதையும் விட்டுட்டேன். பேங்கில் சேமிச்சு வைச்ச பணமெல்லாம் கரைஞ்சு போச்சி. நிறைய பேர் சான்ஸ் தரேன்னு எமாத்தினாங்க, எனக்கு சென்னையில் உறவுன்னு சொல்லிக்கொள்ள ஒருத்தரும் இல்லை. அனாதையாக இருந்த எனக்கு உதவி செய்யவும் ஆளில்லை. நடிகர் சங்கத் தலைவராக இருந்த விஜயகாந்திடம் ஒருமுறை உதவி கேட்டுப் போனேன். ‘உனக்கு சினிமாவில் சான்ஸ் கிடைக்கலேன்னா, டி.வி.யில் நடிக்க வேண்டியது தானே’ன்னு சொல்லி, என்னை வெறும் கையோட திருப்பியனுப்பி விட்டார். நடிகர் சுமன், சந்திரசேகர், நடிகை ராதிகா எல்லோருமே என் மேல் ரொம்பப் பாசமா இருப்பாங்க. நான் இப்படி படுத்த படுக்கையாகக் கிடப்பது அவங்களுக்குத் தெரியுமோ என்னவோ!” என்றார் கண்ணீருடன்[9].

கல்யாண அகதிகள் நிஷா

கல்யாண அகதிகள் நிஷா

தந்தை மற்ற உறவினர்கள் ஏற்றுக் கொள்ளதது ஏன்?: ‘உங்கள் அப்பா மற்றும் உறவுகள் உங்களை ஏன் ஏற்க மறுக்கிறார்கள்?’ என்று கேட்டோம். அதைக் கேட்டதும் சற்று கோபப்பட்ட நிஷா, ”நான் வசதியாக இருந்த காலத்தில் என்னிடம் நிறைய வாங்கிக்கொண்ட அவர்கள், இப்போது என்னைக் கண்டு கொள்ள மாட்டேன் என்கிறார்கள். சொந்த ஊரில், பெற்ற தந்தையின் கண்முன்னே ரோட்டில் ஈ, எறும்பு மொய்க்க அனாதையாகக் கிடந்த நிலைமை என்னைத் தவிர, வேறு யாருக்கும் வராது’ என்றவர் குரல் உடைந்து போய் அழத் தொடங்கினார். அதன் பிறகு, ”சார் தப்பா நினைக்காதீங்க. கையில் சுத்தமாக காசே இல்லை. ஒரு முட்டை புரோட்டா சாப்பிடணும் போல ஆசையாக இருக்கு! ஒண்னு வாங்கிக் கொடுத்துட்டுப் போங்களேன், ப்ளீஸ்!” என்று கெஞ்சினார். எதோ உள்ளுக்குள் உடைந்து போனது. நடிகை நிஷா தன்னை எய்ட்ஸ் நோய் தாக்கியிருக்கிறது என்பது கூடத் தெரியாமல் இன்னும் இருக்கிறார் என்ற தகவல் நம்மை உலுக்கியது.

நூர் நிஷா டிக் டிக் டிக்

நூர் நிஷா டிக் டிக் டிக்

தந்தையின் வாதமும், போலித்தனமும்: நிஷாவின் தந்தை அப்துல் ஜப்பாரை சந்தித்து பேசியபோது, நிஷா எனக்குப் பிறந்தவள்தான். அவளோட அம்மா பேபியை நான் லவ் பண்ணினேன். சின்ன சண்டைல குழந்தையைத் தூக்கிக்கிட்டு ராவோட ராவா பேபி சென்னைக்கு ஓடிப் போயிட்டா. சென்னையில் பேபிக்கு பலபேரோட தவறான தொடர்பிருந்தது. நிஷாவை சினிமாவில் நடிக்க வைத்ததால் பணம் வர ஆரம்பித்தது. தேடிப் போன என்னை விரட்டி விட்டுட்டா. பிறகு நிஷாவும் நடிகை ஆகி எங்களை மறந்துட்டா, இப்ப நோய் வந்து, சொந்தம் கொண்டாட வந்தா அவளை யார் ஏற்பார்? நானே என் தங்கச்சி வீட்டில் ஓசிச் சாப்பாடு சாப்பிடறேன். இதில் அவளையும் வச்சி எப்படிக் காப்பாத்த முடியும்? என்றார். சென்னையில் பல பேர் அவளை ஆண்டு அனுபவிச்சிட்டு, இப்போ அவங்க பாட்டுக்கு இங்கே விட்டுட்டுப் போயிட்டாங்க. இதுல நாங்க எதுவும் செய்ய முடியாது’ என்றார். அவ தைரியமான பொண்னு. ஃபிலிம் நியூஸ் ஆனந்தன், “ஒருமுறை இன்கம்டாக்ஸ் ஆபீஸர்னு சொல்லி போலி ரெய்டுக்கு வந்து பிளாக்மெயில் செய்ய முயன்ற ஒரு படத் தயாரிப்பாளரை, அவளே போலீசுக்கு போன் பண்ணிப் பிடித்துக்கொடுத்தாள்”, அப்படிப்பட்டவளுக்கா இப்படி ஒரு நிலைமை என்றார்[10].

நூர் நிஷா 2007ல் இறந்தார்

நூர் நிஷா 2007ல் இறந்தார்

2007ல் இறந்தது இந்த நடிகையா, பிறகு ஏன் இப்பொழுது செய்தி வருகின்றது?: இச்செய்தி சென்ற வருடம் 2013 ஜூலையிலேயே வந்திருக்கிறது[11], பிறகு ஒன்றரை வருடம் கழித்து இப்பொழுது ஏன் செய்திகள் வருகின்றன என்று தெரியவில்லை. நூர் நிஸா [Noor Nisha] என்ற இந்த நடிகை தமிழ் மற்றும் மலையாளப்படங்களில் நடித்த பிரபலமான நடிகைகளில் ஒருவர். ஆக ஒன்றரை வருட காலமாக அவர் நோயினால் பாதிக்கப் பட்டு, போராடி வந்திருக்கிறார் என்று தெரிகிறது. பிறகு, “அவ்வளவுதான்” என்ற நிலையில், அதுவரை கவனித்து வந்தவர்கள் அல்லது வீட்டில் வைத்து கொண்டிருந்தவர்கள் விட்டுவிட்டிருக்க வேண்டும். 2007லேயே இந்த நடிகை இறந்து விட்டார் என்றும் சில செய்திகள் கூறுகின்றன. அந்நடிகை இறந்து விட்டாரா அல்லது உயிரோடுள்ளாரா என்பது பிரச்சினை அல்ல, ஆனால், அவள் எப்படி ஆண்களால் சீரழிக்கப்பட்டிருக்கிறாள் என்பது தான் கவலைக்குரியது. பெண்மையினை மதிக்க தவறி வரும் இந்தியர்கலின் நிலைக் கண்டும் கலக்கமாகத்தான் இருக்கிறது. நாளுக்கு நாள் பென்கள் மீதான குற்றங்கள், கொடூரங்கள், குரூரங்கள், நடப்பதைப் பார்க்கும்போது, இடைக்காலத்தைய நிலையைத்தான் காட்டுகிறது. இந்தியர்கள் இந்தியர்களே ஆண்டு கொண்டிருக்கும் போது, இத்தகைய பாலியல் குற்றங்கள் நடப்பது சரியில்லை.

© வேதபிரகாஷ்

06-12-2014


 

[1] http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=133564

[2] She was used by R.Mohan, producer of Iyer the Great, into prostitution. After she left the industry unnoticed. http://en.wikipedia.org/wiki/Nisha_Noor

[3] http://www.tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=66909

[4] http://tamil.webdunia.com/article/regional-tamil-news/former-tamil-heroine-helpless-and-unattended-for-aids-victims-lying-114120400002_1.html

[5]  http://www.qatarliving.com/forum/qatar-living-lounge/posts/pathetic-situation-human-being

[6] http://www.sakshi.com/news/national/old-tamil-actress-nisha-affected-by-aids-disease-192076

[7] http://tamil.chennaionline.com/cinema/news/newsitem.aspx?NEWSID=8c476c01-ab19-4ac0-817f-dc9903a72add&CATEGORYNAME=TFILM

[8] நக்கீரன், , எறும்புகள் மொய்க்க  தெருவில் கிடக்கிறார் எய்ட்ஸ் பாதித்த பிரபல தமிழ் நடிகை!, புதன்கிழமை, 3, டிசம்பர் 2014 (22:36 IST)

[9] http://namathu.blogspot.in/2013/07/blog-post_8397.html

[10] http://namathu.blogspot.in/2013/07/blog-post_8397.html

[11] http://www.kollywoodtoday.net/tag/old-tamil-actress-nisha-affected-by-aids-disease/