சுனந்தா மர்ம மரணத்தில் தொடரும் மர்மங்கள் – பலதார திருமணம், சாவில் முடிந்தது ஏன் – இஸ்லாமிய தீவிரவாதிகளல் துரத்தியடிக்கப் பட்ட ஒரு இந்து பெண்ணின் சோகமான கதை (5)
பாதிக்கப்பட ஒரு இந்து பெண்ணின் நிலை அலசப்படுகிறது: சசிதரூர்-சுனந்தா மூன்றவது திருமண பந்தத்தில், ஏற்கெனவே திருமணமாகி விவாக ரத்து பெற்ற முஸ்லிம் பெண் மெஹர் தரார் எப்படி தலையிட்டார் என்பது முன்னர் விளக்கப்பட்டது[1]. சுனந்தா-மெஹர் டுவிட்டர் உரையாடல் அவர்களுக்கு இடையே இருந்த கசப்பை வெளிப்படுத்தி காட்டியுள்ளது[2]. வரம்பிற்கு மீறி மெஹர் தலையிட்டுள்ளது, சசி அதனை ஊக்குவித்தது, இதனை சுனந்தா கண்டித்த பிறகு, சசி மெஹரை நிறுத்திக் கொள் என்றது, ஆனால், தொடர்ந்து இ-மெயில், போனில் பேசிக் கொண்டிருந்தது, இதனால் துபாயில் சுனந்தா வெளிப்படையாத் தட்டிக் கேட்டது முத்லியனவும் விளக்கப்பட்டன[3]. காஷ்மீரத்தில் வாழ்ந்து வந்த சுனந்தா மற்றும் அவரது குடும்பம் ஜிஹாதி தீவிரவாதத்தால் சிதறுண்டது. பயங்கரவாதத்தினால் பிளவுண்டது. குடும்பத்தினர் பிரிய, இவர் துபாய்-கனடா-துபாய் என்று அலைய வேண்டியதாயிற்று. இப்படி இரண்டு கணவர்கள் இறந்த பிறகு, மூன்றாவதாக சசி தரூரை திருமணம் செய்து கொண்ட பிறகு, ஆரம்பித்தது தான் அந்த பாகிஸ்தானிய பெண்மணி, முஸ்லிம் மெஹர் தராரின் தலையீடு[4].
சசி தரூர் ராஜினாமா செய்யமாட்டார்: சசிதரூரின் மனைவி இறப்பு கேரளாவில், காங்கிரஸின் வெற்றிவாக்கு பாதிக்கப்படும் என்ற கருத்து உருவாகியிருக்கும் நேரத்தில், தேசியவாத காங்கிரஸ் கட்சி, சுனந்தா மரண வழக்கு முடியும் வரை, அவரது அமைச்சுத்துறை வேலைகளை செய்யலாகாது என்று அறிவித்துள்ளது. ஆனால், காங்கிரஸோ, ஊடகபேச்சாளர்களுள் ஒருவராக, தேர்தல் பிரச்சாரத்திற்கு நியமித்துள்ளது. அதுமட்டுமல்லாது, அவர் ராஜினாமா செய்ய வேண்டிய அவசியமும் இல்லை என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளது[5]. சசிதரூர் மீது எந்த புகாரும் கொடுக்கப்படவில்லை, வழக்கும் பதிவு செய்யப்படவில்லை, போலீஸ் விசாரணைக்கு முழு ஒத்துழைப்புக் கொடுத்து வந்துள்ளார். அந்நிலையில் ராஜினாமா செய்ய வேண்டிய அவசியமும் இல்லை என்று செய்தி-தொடர்பாளர் விளக்கம் கொடுத்துள்ளார். இப்பொழுது, திடீரென்று வெளியாகியுள்ள நீதிமன்ற தீர்ப்பு, சிபிஎம்ம்மிற்கு செக் வைக்கும் நிலையிலுள்ளது.
சிபிஐயின் பரிசோதனைக் கூடத்திற்கு அனுப்பப்பட்டுள்ள சுனந்தாவின் பிரேதப் பகுதிகள்: இதற்குள், சுனந்தாவின் வயிற்றுபாகத்தை சிபிஐயின் பரிசோதனைக் கூடத்திற்கு அனுப்பியுள்ளதாகவும், அச்சோதனையின் முடிவு வெளிவர ஒன்பது மாதங்கள் ஆகும் என்று அலோக் சர்மா, மாஜிஸ்ட்ரேட் கூறியுள்ளார்[6]. விஞ்ஞானம் முன்னேறியுள்ள காலத்தில் எப்படி ஒன்பது மாதங்கள் ஆகுமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இதனால், மாஜிஸ்ட்ரேட், போலீசாரை தொடர்ந்து விசாரிக்கும் படி உத்தரவிட்டுள்ளார். பிரேத பரிசோதனை, உடலின் மேற்பகுதிகளில் டஜனுக்கும் மேற்பட்ட காயங்கள் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடுகிறது. ஒரு கை, கையின் மேற்பகுதி, கன்னம், மற்றும் கழுத்துப் பகுதி இவற்றில் அக்காயங்கள் ஏற்பட்டுள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது[7].
மருந்துகளின் கலவை விஷமாகி இருக்கக் கூடும்: முதலில் அவர் அளவிற்கு அதிகமாக மருந்துகளை உட்கொண்டதால் தான் இறப்பு ஏற்பட்டது என்று ஊடகங்களில் செய்திகள் வந்தன. இதனால், சசி தரூருக்கு “கிளீன் சிட்” கொடுத்தாகி விட்டன என்றும் கூறின. இருப்பினும் அல்பிராக்ஸ் [Alprax, an anti-depressant] மட்டும் இறப்பை ஏற்படுத்தாது என்று மனோதத்துவ நிபுணர்கள் கருத்தை வெளியிட்டுள்ளனர்[8]. இந்த மாத்திரைகளை அதிகமாக உட்கொண்டால், தூக்கம் தான் உண்டாகும், இறப்பு ஏற்படாது என்று எடுத்துக் காட்டியுள்ளனர். அப்படியன்றால், அதனுடன் மற்ற மருந்துகள் சேரும் போது விஷமாகும் என்றால், அவை யாவை என்ற கேள்வி எழுந்துள்ளது[9]. மேலும் அவ்வாறு உண்டாகும் கலவை இறப்பை ஏற்படுத்தும் என்று அறிந்து அவருக்குப் பரிந்துரைத்தது யார் என்ற கேள்வியும் எழுகின்றது. அல்பிராக்ஸ் [Alprax, an anti-depressant] என்ற மனநிலையைக் கட்டுப்படுத்தும் மருந்தைத் தவிர, எக்ஸிடிரின் [Excedrin, prescribed commonly for migraine conditions] என்ற மைக்ரைன் பிரச்சினைகளுக்கு உபயோகப் படுத்தப் படும் மருந்தின் எச்சமும் காணப்பட்டது. இவற்றைத் தவிர ஒரு மூன்றாவது மருந்தின் எச்சம் பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது. அது என்ன என்று தெரியாததால், பரிசோதனைக்குட்படுத்தப் பட்டுள்ளது[10].
பலமான மனநிலைக் கொண்டவர் தற்கொலை செய்து கொண்டிருக்க முடியாது: நளினி சிங் என்ற பத்திரிக்கையாளர் கொடுத்துள்ள அறிக்கையில், சுனந்தா தன்னுடன் 17-01-2014 அன்று பேசும்போது மிகவும் கவலைப் பட்டவராகவும், அழுது கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்[11]. சுனந்தாவின் மகன் சிவ் மேனன் கூறும்பொது, தனது தாய் மிகவும் மனவலிமைக் கொண்டவர் என்றும் தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு இல்லை என்றும் கூறினார். இவர் சுனந்தாவின் இரண்டாவது கணவர் சுஜித் மேனனுக்குப் பிறந்தவர். சாகும் முன்பு, சுனந்தா உயில் எழுதி வைத்திருப்பதும் வியப்பை ஏற்படுத்துகிறது. தனது தாய் “மிகவும் மனவலிமைக் கொண்டவர் என்றும் தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு இல்லை” என்றால், கொலை செய்யப் பட்டிருக்கலாம் என்று சந்தேகப் படுகிறாரா என்று தெரியவில்லை.
மெஹர் தராரின் மனசாட்சி உறுத்துகின்றது போலும்: பிரச்சினைக்குக் காரணமான மெஹர் தரார் மிகவு பாதிக்கப் பட்டிருக்கிறார் போலும், “சுனந்தாவின் இறப்பு என்னுடைய நினைவுகளில் நெடுங்காலம் பதிந்திருக்கும்……….அவர் என்னை அடுத்த பத்தாண்டுகள் வரை என்னைத் திட்டிக் கொண்டிருந்தாலும், அவருக்கு பாதிப்பு ஏற்படவேண்டும் என்று நினைக்க மாட்டேன்…..”, என்று தெரிவித்துள்ளார்[12]. டுவிட்டரில் உமிழ்ந்துள்ள வெற்ப்பு, காழ்ப்பு முதலியவற்றைப் பார்த்த பிறகு, இந்த பேச்சு வியப்பாக இருக்கிறது. தான் சசி தரூரை (ஷாருக் கான் போலிருக்கிறார் என்றெல்லாம்) புகழ்ந்ததினால், ஒருவேளை சுனந்தா கோபம் கொண்டிருப்பார் என்றும் கூறியுள்ளார்[13]. தனக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லை என்று சொல்லிவிட்டப் பிறகு, இவ்வாரு கவலைப் படுவது ஏனென்று தெரியவில்லை. மேலும், போலீசார், இவரையும் விசாரிக்க வேண்டியுள்ளது என்று அறிவித்துள்ளனர்.
வேதபிரகாஷ்
© 23-01-2014
[1] https://womanissues.wordpress.com/2014/01/20/mehr-tarar-explanation-about-denial-points-to-love-jihad/
[2] https://womanissues.wordpress.com/2014/01/19/twitter-brawl-between-ladies-ended-in-suicide-or-compelled-suicide/
[3] https://womanissues.wordpress.com/2014/01/18/sunanda-pushkar-mysterious-death-and-tragedy-of-a-hindu-woman/
[4] https://womanissues.wordpress.com/2014/01/18/sunanda-pushkar-sasi-tarur-polygamy-ended-with-death-the-story-of-a-hindu-woman-who-was-driven-away-by-the-islamic-terrorists/
[5] http://timesofindia.indiatimes.com/india/Congress-says-Shashi-Tharoor-inseparable-will-not-quit-Sunanda-Pushkars-son-says-she-was-too-strong-to-kill-self/articleshow/29213030.cms
[6] According to Sub-Divisional Magistrate Alok Sharma, Sunanda’s viscera samples have been sent for examination to CBI’s Central Forensic Science Laboratory. Normally, it takes about nine months for the report.
http://www.deccanherald.com/content/382233/sunanda-death-9-months-find.html
[7] According to police sources, the post-mortem report submitted to the Sub-Divisional Magistrate on Monday said Pushkar died due to drug overdose. The autopsy also found over a dozen injury marks in the upper extremity of her upper body – on one arm, hand, chin, and neck regions – and interpreted these as “scuffle marks”, sources said.
http://zeenews.india.com/news/nation/sunanda-pushkar-died-of-poisoning-sdm-report_905707.html
[9] http://articles.timesofindia.indiatimes.com/2014-01-21/india/46409784_1_sunanda-pushkar-mortem-post-mortem
[10] The autopsy report of Sunanda Pushkar indicates that a poisonous reaction from a drug cocktail may have caused her death, police sources said on Wednesday. Apart from Alprax, an anti-depressant, traces of another medicine prescribed commonly for migraine conditions (Excedrin) have been found in her body, sources said, hinting at the possibility of a third medicine without naming it.
http://timesofindia.indiatimes.com/city/delhi/Drug-cocktail-killed-Sunanda/articleshow/29225518.cms
[11] Veteran journalist Nalini Singh has also given a two-page written statement claiming that Sunanda was ‘distraught’ and ‘crying’ over phone when she spoke with her early on January 17.
http://www.deccanherald.com/content/382233/sunanda-death-9-months-find.html