Archive for the ‘ரவீந்திரன்’ Category

கல்யாண மன்னன் ரவீந்திரன் – ஐந்து பெண்களுடன் திருமணம் – என்னை ஒன்றும் செய்யமுடியாது என்று மிரட்டல்!

செப்ரெம்பர்24, 2015

கல்யாண மன்னன் ரவீந்திரன் ஐந்து பெண்களுடன் திருமணம் என்னை ஒன்றும் செய்யமுடியாது என்று மிரட்டல்!

ரவீந்திரன் மீது சுதா புகார் - தினகரன் போட்டோ

ரவீந்திரன் மீது சுதா புகார் – தினகரன் போட்டோ

ரவீந்திரன் என்கின்ற சேலம் வார்ட் எண்.20 கவுன்சிலர் மற்றும் அ.தி.மு.க செயலாளர், பல பெண்களை மணந்துள்ளதாகவும், அவரது முதல் மனைவி போலீஸாரில் புகார் கொடுத்துள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளன. சுதா என்கின்ற முதல் மனைவி கொடுத்துள்ள புகாரின் படி, ரவீந்தரனுக்கு கீழ்கண்ட மனைவிகள் உள்ளனர்.

  1. சுதா – முதல் மனைவி.
  2. போடிநாயக்கன் பட்டியை சேர்ந்த ஆறுமுகம் மகள் புவனேஸ்வரி.
  3. பெரியார் நகரை சேர்ந்த இராமநாதன் என்பவரின் மகள் புவனேஸ்வரி.
  4. பழைய சூரமங்கலம் பாலு மனைவி சந்தியா
  5. அதே பகுதி சேர்ந்த பழைய சூரமங்கலம் வாசு மகள் சத்யா.

இது இந்து திருமணச் சட்டத்தின் படி குற்றமாகும். இருப்பினும், பெண்களை ஏமாற்றி, ஆண்கள் இவ்வாறு பலதார மணங்களை செய்து வருவது தெரிகிறது. பெண்களுடைய ஏழ்மை, தனிமை, விதவை, சபலம் போன்ற காரணங்களை அறிந்து ஆண்கள் அவர்களை ஏமாற்றி வருகின்றனர். பொதுவாக செய்திதாள்கள், இணைதள செய்திகள் இவர்களை “கல்யாண மன்னன்”  என்று கிண்டலடித்து செய்திகளைப் போட்டு மறந்து விடுகின்றன. ஆனால், பாதிக்கப்பட்ட பெண்களின் பட்டியல் ஆயிரக்கணக்காக தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. செய்திகள் மூலம் கிடைத்துள்ள விவரங்களை, கீழேமூன்று பத்திகளில் தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன [1, 2, 3]. பிறகு, அவை அலசப்படுகின்றன [4, 5, 6].

ரவீந்திரன் - அம்மா உணவகம் பெண்கள்

ரவீந்திரன் – அம்மா உணவகம் பெண்கள்

  1. அம்மா உணவக தொடர்பு, பலதார திருமணம்: சேலம் மாநகராட்சி பகுதியிலுள்ள 20 ஆவது வார்டு அ.தி.மு.க கவுன்சிலராக இருப்பவர் இரவீந்திரன். இவரின் முதல் மனைவி பெயர் சுதா. இவர் சேலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகார் மனுவில்[1], “எனக்கு திருமணமாகி 23 ஆண்டுகள் ஆகிறது. எனது கணவர் இரவீந்திரன், 20 ஆவது வார்டு கவுன்சிலராகவும், அ.தி.மு.க செயலாளராகவும் உள்ளார்[2]. என்னுடைய கணவர், எனக்கு தெரியாமலும், சட்ட விரோதமான வகையிலும் சில ஆண்டுகளுக்கு முன்னர் போடிநாயக்கன் பட்டியை சேர்ந்த ஆறுமுகம் மகள் புவனேஸ்வரி என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்தார்[3]. பிறகு, பெரியார் நகரை சேர்ந்த இராமநாதன் என்பவரின் மகள் புவனேஸ்வரியையும், பழைய சூரமங்கலம் பாலு மனைவி சந்தியா என்பவரையும். அதே பகுதியை சேர்ந்த வாசு மகள் சத்யா என என்னை தவிர நான்கு பெண்களை திருமணம் செய்துள்ளார்[4]. சந்தியா, சத்யா இருவரும் அம்மா உணவகத்தில் வேலை செய்த பொது அவர்களுடன் ஏற்பட்ட பழக்கத்தில் அவர்களை திருமணம் செய்துள்ளார்[5].
அம்மா உணவக பெண்கள்

அம்மா உணவக பெண்கள்

  1. விவாகரத்து செய், என்னை யாரும் ஒன்றும் செய்ய முடியாது: “ஏன் இப்படி செய்கிறாய்?” என கேட்டால் இந்த பதவியில் இருப்பவர்கள் இப்படித்தான் இருப்பார்கள். நீ விருப்பம் இருந்தால் இரு. இல்லையெனில் விவாகரத்து வாங்கி கொண்டு போ என்று சொல்கிறார்[6]. இந்த பிரச்னை குறித்து வழக்கு கோர்ட்டுக்கு சென்று விட்ட நிலையிலும், அவரை ஒன்றும் செய்ய முடியவில்லை[7]. நான் கவுன்சிலர். எனக்கு அமைச்சர், மாவட்டம், பகுதி என்று எல்லோரும் உதவி செய்வார்கள். உனக்கு யார் வருவார்? பதவி இருக்கும் வரை என்னை ஒன்றும் செய்ய முடியாது என்று கூறுகிறார்[8].
பாலியல் தொல்லை தருவதாக மண்டல குழு தலைவர் மீது அம்மா உணவக ஊழியர்கள் புகார்

பாலியல் தொல்லை தருவதாக மண்டல குழு தலைவர் மீது அம்மா உணவக ஊழியர்கள் புகார்

  1. முதல்வர் ஜெயலலிதாவை வேண்டும் முதல் மனைவி: எனக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். முதல்வர் ஜெயலலிதா, இந்த பிரச்னையில் தலையிட்டு கவுன்சிலர் பதவியையும், வார்டு செயலாளர் பதவியையும் நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்[9]. 2 ஆண்டுகளில் 4 பெண்களை திருமணம் செய்துள்ளார். ஒவ்வொரு பெண்களையும் திருமணம் செய்து கொண்டு, 3 மாதம் குடும்பம் நடத்துவார்[10]. ஐந்து பெண்களுடன் தொடர்பு என்று தினகரன் கூறுகிறது[11]. பின்னர், அவர்களது தாலியை கழற்றி விட்டு, வேறு பெண்களுடன் வாழ்வார்[12]. கொலை மிரட்டல் விடுப்பதாக மாநகராட்சி அதிமுக கவுன்சிலர் மீது மனைவி போலீசில் புகார் அளித்தார்[13].
Salem People Urges Government to Open Amma Unavagam Soon... - Thanthi TV

Salem People Urges Government to Open Amma Unavagam Soon… – Thanthi TV

  1. அம்மா உணவக தொடர்பு, பலதார திருமணம்விமர்சனம்: சேலம் வார்ட் எண்.20 கவுன்சிலர் மற்றும் அ.தி.மு.க செயலாளர் என்ற நிலையில், அம்மா உணவகம் தொடர்பும் கிடைத்துள்ளது. இதில் வேலை செய்யும் பென்கள் ஏழையாக இருக்கின்றனர். அதிமுக செயலர், வார்ட்.மெம்பர், கவுன்சிலர் என்றிருப்பவர்கள் ஏற்கெனவே, அம்மா உணவகத்தில் வேலை செய்யும் பெண்களை பாலியல் ரீதியில் துன்புறுத்துவது, புகார் அளித்துள்ளது, போராட்டம் நடத்தியது என்றெல்லாம் நடந்தேறியுள்ளன. உதாரணத்திற்கு சில கொடுக்கப்படுகின்றன. சென்னை மாநகராட்சி 155–வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் சேகர் 11–வது மண்டல குழு தலைவராகவும் உள்ளார். இந்த மண்டலத்திற்கு உட்பட்ட பகுதியில் ஆழ்வார் திருநகர், ராமாபுரம், காரப்பாக்கம் ஆகிய மூன்று இடங்களில் அம்மா உணவகம் அமைந்துள்ளது. இங்கு பணியாற்றும் பெண்களிடம் சேகர் பாலியல் தொல்லை கொடுப்பதாக பெண்கள் புகார் தெரிவித்தனர்[14]. புகார்கள் தெரிவிக்கப்பட்டும் சேகரின் நடவடிக்கைகள் மாறவில்லையாம். இதனால் ஆவேசம் அடைந்த அம்மா உணவகத்தில் பணியாற்றும் பெண்கள் சுமார் 30க்கும் மேற்பட்டோர் இன்று காலை சேகரை கண்டித்து வளசரவாக்கத்தில் உள்ள மண்டல குழு அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அம்மா உணவகம் பெண் ஊழியர் ஒருவர் கூறியபோது, தலைவர் சேகர் அம்மா உணவகத்தில் பணியாற்றும் பெண்களை அலுவலகத்திற்கு வர சொல்லியும், மோசமான வார்த்தைகளால் பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். அவரது எண்ணத்திற்கு உடன்பாடாத பெண்களை சரியாக வேலை செய்யவில்லை என்றும், வேலையிலிருந்து நீக்கி விடுவேன் என்றும் மிரட்டல் விடுத்தார். மேலும் யாரிடம் புகார் செய்தாலும் என்னை ஒன்றும் செய்யமுடியாது என்று மேலும் மிரட்ட தொடங்கினார். இதனால் நாங்கள் அவருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்று தெரிவித்தார்[15]. பெண்கள் சுய-உதவிக் குழுக்கள் மூலம் இப்பெண்கள் நியமிக்கப்படுவதால், அரசியல் நுழைந்துள்ளது என்று தெரிகிறது. சேகர் விசயம், ரவீந்திரனைப் போலவே உள்ளது. ஆனால், ரவீந்திரன் கல்யாணம் செய்து கொண்டதால், பிரச்சினையாக மாறவில்லை என்றாகிறது. இருப்பினும் சட்டத்தை மீறியுள்ளது கவனிக்கத்தக்கது.

    தினகரன் செய்தி - ரவீந்திரன் - அம்மா உணவகம் பெண்கள்

    தினகரன் செய்தி – ரவீந்திரன் – அம்மா உணவகம் பெண்கள்

  1. விவாகரத்து செய், என்னை யாரும் ஒன்றும் செய்ய முடியாதுவிமர்சனம்: முதல் மனைவி, “இந்த பிரச்னை குறித்து வழக்கு கோர்ட்டுக்கு சென்று விட்ட நிலையிலும், அவரை ஒன்றும் செய்ய முடியவில்லை”, என்று குறிப்பிட்டுள்ளது[16] திகைப்படைவதாக உள்ளது. அப்படியென்றால், ரவீந்திரன் சட்டத்தின் நிலையை அறிந்தே அவ்வாறு மீறியிருப்பதாகத் தெரிகிறது. மேலும், வழக்கு தொடர்ந்த அப்பொழுதே, அவர் மீது நடவடிக்கை எடுத்திருக்கலாம். தனது அரசியல் பலத்தை துஷ்பிரயோகம் செய்து அமுக்கியுள்ளார் என்று தெரிகிறது. இப்படி அரசியல், பணம், சட்டமீறல், போலீஸ் நடவடிக்கையின்மை அல்லது தாமதம் போன்றவற்றால், பெண்கள் தான் பாதிக்கப்படுகின்றனர். இப்பொழுதும், ரவீந்திரன் கைது செய்யப்பட்டு, சிறைத்தண்டனை கொடுத்தாலும், பெண்களின் பாதிப்பை யார் சரிசெய்வார்கள் என்று தெரியவில்லை. தார்மீக உணர்வுகள் முழுவதுமாக அழிந்து விட்டனவோ என்ற கவலை, விரக்தி தான் ஏற்படுகின்றது. கடந்த 60 ஆண்டுகளில் இவ்வாறு சமூகம் சீரழிந்ததற்கு யார்-எது காரணம் என்பதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். நாளைக்கு, பெண்களும் தமக்கு உரிமைகள் உள்ளன என்று 5-6 என்று பல ஆண்களை திருமணம் செய்து கொண்டால், குடும்பங்களின் நிலயென்ன, பிறக்கின்ற குழந்தைகளின் நிலையென்ன என்று யோசித்துப் பார்க்க வேண்டும்
  1. முதல்வர் ஜெயலலிதாவை வேண்டும் முதல் மனைவி: கீழ்கண்ட பிரச்சினைகள் மிகவும் முக்கியமானவை.
    1. எனக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.
    2. முதல்வர் ஜெயலலிதா, இந்த பிரச்னையில் தலையிட்டு கவுன்சிலர் பதவியையும், வார்டு செயலாளர் பதவியையும் நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்[17].
    3. 2 ஆண்டுகளில் 4 பெண்களை திருமணம் செய்துள்ளார். ஒவ்வொரு பெண்களையும் திருமணம் செய்து கொண்டு, 3 மாதம் குடும்பம் நடத்துவார்[18]. பின்னர், அவர்களது தாலியை கழற்றி விட்டு, வேறு பெண்களுடன் வாழ்வார்[19].
    4. கொலை மிரட்டல் விடுப்பதாக மாநகராட்சி அதிமுக கவுன்சிலர் மீது மனைவி போலீசில் புகார் அளித்தார்[20].

இவையெல்லாம், பெண்களை எந்த அளவுக்கு பாதிக்க வைக்கின்றன, எல்லா வழிகளிலும் சதாய்க்கப்படுகின்றனர், மனம்-உடல் ரீதிகளில் கொடுமைப் படுத்தப்படுகின்றனர் என்று நோக்கத்தக்கது. பெண்ணின் தூயமை அழிந்தால், சமூகம் நாசமாகி விடும், சமூகம் நாசமானால், நாடே அழிந்து விடும் என்று நீதி நூல்களில் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. இப்பொழுது, அதுதான் நடந்து கொண்டிருக்கின்றன. இது பழமைவாதம் என்று ஒதுக்கப்படலாம், ஆனால், பாதிப்புக்கள் அதிகமாகிக் கொண்டிருக்கின்றன, பெண்களின் மீதான குற்றங்கள் பெருகிக் கொண்டிருக்கின்றன, கற்பழிப்புகளும் அவற்றுடன் இணைந்தே அதிகமாகின்றன.

© வேதபிரகாஷ்

24-09-2015

[1] தினமலர், .தி.மு.., கவுன்சிலருக்கு 4 மனைவியர்: முதல் மனைவி போலீசில் பகீர் புகார், செப்டம்பர்.23, 2015.06.43.

[2] http://www.dinamalar.com/news_detail.asp?id=1348362

[3] ஒன்இந்தியா, தமிழகம் மனைவிக்கு தெரியாமல் 4 கல்யாணம்அலற வைக்கும் சேலம் அதிமுக கவுன்சிலர்!, Posted by: Vijayalakshmi Updated: Wednesday, September 23, 2015, 12:45 [IST].

[4] http://tamil.oneindia.com/news/tamilnadu/counselor-got-4-marriages-illegally-236275.html

[5] தமிழ்.வெப்.துனியா, மனைவிக்கு தெரியாமல் நான்கு பெண்களை திருமணம் செய்த அதிமுக கவுன்சிலர், புதன், 23 செப்டம்பர் 2015 (14:38 IST)

[6] http://tamil.webdunia.com/article/regional-tamil-news/admk-counselor-married-4-woman-illegally-wife-filed-case-against-him-115092300044_1.html

[7] http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=151657

[8] தினகரன், 2 ஆண்டில் 4 பெண்களை மணந்த அதிமுக கவுன்சிலர், புதன், 23 செப்டம்பர் 2015, 2015.09.23, 01.54.18.

[9] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=168682

[10] http://www.dinakaran.com/Latest_Detail.asp?Nid=168601

[11] தினகரன், 5 பெண்களுடன் தொடர்பு வைத்துள்ளதாக அதிமுக கவுன்சிலர் மீது மனைவி புகார், பதிவு செய்த நேரம்: 2015-09-22 20:43:23.

[12] http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=81799

[13] தமிழ் முரசு, 4 பெண்களை மணந்த அதிமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து நீக்க ஜெ.வுக்கு மனைவி கண்ணீர் கடிதம், செப்டம்பர்.23, 2015

[14] தினமணி, பாலியல் தொல்லை: மண்டல குழு தலைவரை கண்டித்து அம்மா உணவக பெண் ஊழியர்கள் போராட்டம், By dn, கோயம்பேடு, First Published : 02 December 2014 04:08 PM IST.

[15]http://www.dinamani.com/latest_news/2014/12/02/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B2/article2551750.ece

[16] http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=151657

[17] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=168682

[18] http://www.dinakaran.com/Latest_Detail.asp?Nid=168601

[19] http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=81799

[20] தமிழ் முரசு, 4 பெண்களை மணந்த அதிமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து நீக்க ஜெ.வுக்கு மனைவி கண்ணீர் கடிதம், செப்டம்பர்.23, 2015