Archive for the ‘வக்கிர செக்ஸ்காரன்’ Category

காமக்கொடூரன், பெண்மை சீரப்பாழி, வக்கிர செக்ஸ்காரன் – இலக்கு பெண்கள், தாம்பத்திய உறவுகள், குடும்பப் பிளவுகள், சமூதாய குளறுபடிகள்!

ஜூலை30, 2014

காமக்கொடூரன், பெண்மை சீரப்பாழி, வக்கிர செக்ஸ்காரன் – இலக்கு பெண்கள், தாம்பத்திய உறவுகள், குடும்பப் பிளவுகள், சமூதாய குளறுபடிகள்!

பலதார திருமணம் - கோவை பெயின்டர் ஜூலை 2014

பலதார திருமணம் – கோவை பெயின்டர் ஜூலை 2014

செக்ஸ் குற்றங்கள் பெருகுவது ஏன்?: மேனாட்டு ஆண்-பெண் சுதந்திரங்கள் இந்திய தாம்பத்தியத்தை கெடுத்து, சீரழித்து விபச்சாரமாக்கி வருகிறது. பெண்ணிய வீராங்கனைகள் ஆண்களின் வக்கிய செக்ஸ் மனமங்களை ஊக்குவிக்கும் போக்கைக் கண்டிக்கவில்லை, கட்டுப்படுத்தவில்லை, மாறாக, பலவிதங்களில் ஊக்குவித்து வருகிறார்கள். ஃபேஷன் ஷோக்கள், பப்-கலாச்சாரங்கள், இரவு ஹோட்டல் விருந்துகள், எம்.என்.சி கம்பெனிகளின் கேளிக்கைகள், சினிமா நடிகைகளின் ஆட்டங்கள் – கொண்டாட்டங்கள், துணைநடிகைகளின் சல்லாபங்கள், புரொனோகிராபி, என்று அவை விரிந்து வருகின்றன. இதனால், சாதாரண மக்களும் அதற்கு அடிமையாகிறார்கள். ஆயிரங்கள் கொடுத்துதான் அனுபவிக்க வேண்டும் என்பதில்லை, பத்து-நூறு கொடுத்து மனத்தால் அனுபவிக்கும் வக்கிர ஆண்கள் நிஜத்தில் அடைய திட்டம் போட்டே செயல்படுகினர். ஒருவேளை ஆணின் வக்கிரம், சம-உரிமைகள் என்ற நிலையில் பெண்களுக்கு வந்து விட்டதோ என்னமோ? அதனால், மறைமுகமாக அவர்களும் ஒத்துப் போகின்றனர் அல்லது நாஜுக்காக சம்மதித்து விடுகின்றனர். இதனால், முடிவில் சீரழிவது பெண்மை, பெண்ணைச் சார்ந்த குடும்பம், சமூகம் தான். நாகரிகம் என்ற பெயரில் பலர் தப்பித்து கொண்டு விடலாம், தொடர்ந்து ஈடுபட்டும் வரலாம், ஆனால், குறிப்பிட்ட மானஸ்த வர்க்கங்கள், தங்களது மேன்மையை, சீர்மையை, அந்தஸ்தத்தைக் காப்பாற்றிக் கொள்ளா வேண்டியுள்ளது. அந்நிலையில் இத்தகைய செக்ஸ்-குற்றங்கள் மறைக்கப்படலாம், மறக்கப்படலாம் ஆனால், மறுக்க முடியாது.

sex crime reasoning

sex crime reasoning

செக்ஸ் வக்கிரனிடத்தில் மாட்டிக் கொண்ட மனைவி: கோவை, ம.ந.க., வீதியை சேர்ந்தவர் சக்திவேல், 37; பெயிண்டர். இவரது மனைவி மகேஸ்வரி, 25. இவர் 27-07-2014 அன்று கோவை மாநகர அனைத்து மகளிர் மேற்கு போலீசில், தனது கணவர் குறித்து புகார் அளித்தார். அந்த புகார் மனுவில், ‘கடந்த 2013ம் ஆண்டு செப்., மாதம் எனக்கும், சக்திவேல் என்பவருக்கும் பேரூர் கோவிலில் திருமணம் நடந்தது. திருமணத்தின் போது எனது பெற்றோர் சீர்வரிசையாக 7 பவுன் தங்க நகை கொடுத்தனர். சக்திவேல் பெயின்டர் தொழில் செய்து வருகிறார். திருமணமான, சில மாதங்களில் சக்திவேலின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டது. அதிகளவு பாலியல் தொந்தரவு கொடுத்து, சித்ரவதை செய்தார். வீடியோ ஆபாச படங்களை காண்பித்து அதில் உள்ளது போல் என்னை தினமும் பாலியல் வைத்து கொள்ள வற்புறுத்துவார். அதுபோலவே என்னையும் செய்யுமாறு வற்புறுத்துவார். இதனால், எங்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு, இது குறித்து மகளிர் போலீசில் புகார் அளித்தேன். போலீசார் எங்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். ஆனால் தொடர்ந்து சக்தி வேலுவின் பாலியல் தொல்லை எல்லை மீறியது. இதனால் நான் அவரை பிரிந்து சில நாட்களுக்கு முன் எனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டேன்.

Coimbatore sex crime

Coimbatore sex crime

புகார் கொடுத்ததால் மாட்டிக் கொண்ட காமக்கொடூரன்: இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன், தனலட்சுமி என்ற பெண்ணை எனக்கு தெரியாமல் கணவர் திருமணம் செய்துள்ளார். நாங்கள் வசித்து வந்த வீட்டுக்கு அந்த பெண்ணை அழைத்து வந்து குடும்பம் நடத்தியது வீட்டு உரிமையாளர் மூலம் எனக்கு தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த நான் என் கணவரிடம் சென்று நியாயம் கேட்டேன். அதற்கு அவர் என்னை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்தார். ,’ என, குறிப்பிடப்பட்டிருந்தது[1]. ருசிக் கண்ட பூனை பல இடங்களுக்குச் சென்றுள்ளது, பிறகு, சூடான பாலில் வாயை வைத்தபோது, சுட்டுக் கொண்டது போலும்! இப்பெண் புகார் கொடுக்கவில்லை என்றால், அவன் மாட்டிடிக் கொண்டிருக்க மாட்டான்.

Coimbatore campaigning against crime against children

Coimbatore campaigning against crime against children

பெயின்டர் ஐந்து பெண்டாட்டிகளை வைத்துக் கொள்ள முடியுமா?: இந்த மனுவின் மீது உரிய நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் உத்தரவிட்டார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மாணிக்கம், சப்–இன்ஸ்பெக்டர் யோகாம் பாள் (பால்?) தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி சக்திவேலை கைது செய்தனர். விசாரணையில் சக்திவேல் “கல்யாண மன்னன்” எனத் தெரியவந்தது. ஊடகங்கள் இப்படி பட்டம் கொடுத்து விமர்சிப்பதே அருவருப்பாக இருக்கிறது. பலதார மணங்களை ஏமாற்ரி செய்பவர்களை இத்தகைய வர்ணனைகள் போற்ருவது போலிருக்கிறது. மகேஸ்வரியை திருமணம் செய்வதற்கு முன்பே 3 பெண்களை திருமணம் அவர் செய்ததும், அவரது பாலியல் தொல்லை தாங்காமல் அந்த பெண்கள் விட்டால் போதும் என ஓட்டம் பிடித்ததும் தெரிய வந்தது[2]. ஆபாச வீடியோக்களைக் காண்பித்தான் எனும்போது, அத்தகையவை கிடைக்கின்றன என்றாகிறது. அவற்றை விற்பவர்களும் இத்தகைய குற்றங்களைத் தூண்டும் கயவர்களாகின்றனர். போலீஸார் அவர்களையும் கைது செய்ய வேண்டும், தணிடிக்க வேண்டும். அதில் நடித்தவர்களோ அல்லது இருப்பவர்களோ இந்நாட்டுப் பெண்கள் என்றால் என்பது வருத்தப்பட வேண்டிய விசயம் மட்டுமல்லாது சீரழிவின் எல்லைகள் எங்கோ செல்கின்றன எனலாம்.

seducing cinemas

seducing cinemas

காமுகனின் வாக்குமூலத்தில் வெளிப்பட்ட செக்ஸ்வக்கிரம்: சக்திவேல் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது[3]:– நான் கடந்த 2002–ம் ஆண்டு கவிதா என்ற பெண்ணை முதன்முதலாக திருமணம் செய்து கொண்டேன். எனக்கு பாலியல் உறவில் ஆர்வம் அதிகம். எனவே என் விருப்பப்படி தினமும் பாலியல் உறவு வைத்துக் கொள்ள கவிதாவை வற்புறுத்தினேன். சில வருடங்கள் என்னுடன் வாழ்ந்த கவிதா எனது தொல்லை தாங்காமல் என்னை பிரிந்து சென்றுவிட்டார். அதன் பின்னர் காமாட்சி என்ற பெண்ணை திருமணம் செய்தேன். அவரும் தொந்தரவை பொறுக்க முடியாமல் என்னை பிரிந்து சென்றுவிட்டார். மூன்றாவதாக கஜலட்சுமி என்ற பெண்ணை திருமணம் செய்தேன். அவரும் கோபித்துக் கொண்டு பிரிந்து சென்றுவிட்டார். இந்த நிலையில் மகேஸ்வரியை திருமணம் செய்தேன். அவருடன் செல்போனில் செக்ஸ் படங்களை காண்பித்து அதில் வருவது போல் என்னுடன் உடலுறுவு வைத்துக் கொள்ளும்படி வற்புறுத்தினேன்.[4] இது குறித்து அவர் போலீசில் புகார் செய்தார். இதனால் அவரை துன்புறுத்த ஆரம்பித்தேன். அவர் தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

ஏமாற்றப் பட்ட பெண் திருமணமான வருடம்
1 கவிதா 2002
2 காமாட்சி 2005 (?)
3 கஜலட்சுமி 2010 (?)
4 மகேஸ்வரி 2013
5 பெயர் குறிப்பிடவில்லை 2014

தினமும் உடலுறவு போதை பழக்கமாக இருந்தது: தினமும் உடலுறவு கொள்வது எனக்கு ஒரு போதை பழக்கமாக இருந்தது. இதன் காரணமாக மீண்டும் தனலட்சுமியை 5–வதாக திருமணம் செய்து கொண்டேன். இதனால் மகேஸ்வரி போலீசில் புகார் கொடுத்துவிட்டார். எந்த மனைவியையும் முறைப்படி விவாகரத்து செய்யவில்லை[5]. என்னுடைய முந்தைய திரு மணங்களை மறைத்து மறுமணம் செய்தேன். இவ்வாறு அவர் கூறினார். சட்டத்தின் மீறல்களை அறிந்தே இவன் திருமணம் செய்திருக்கிறான். ஒருத்திக்குப் பிறகு இன்னொருத்தி என்று திருமணம் செய்து கொண்டு காரியத்தில் இறங்கிய போது, மனைவியர் ஏன் புகாரளிக்கவில்லை என்று தெரியவில்லை. தாங்க முடியாமல் ஓடிவிட்டார்கள் என்று அவ்வளவு எளிதாக சொல்லி தப்பித்துவிட முடியுமா என்று தெரியவில்லை.

முத்தக் கலாச்சாரம் அரங்கத்தில்

முத்தக் கலாச்சாரம் அரங்கத்தில்

சட்ட மீறல்களை அறிந்து செய்த குற்றம்: போலீஸ் விசாரணையில், மகேஸ்வரி, தனலட்சுமி மட்டுமின்றி, கடந்த 2002ம் ஆண்டு கோவையை சேர்ந்த கவிதா, இதற்குபின் காமாட்சி, கஜலட்சுமி, மகேஸ்வரி (2013) ஆகிய மூன்று பெண்களை சக்திவேல் திருமணம் செய்து, வீட்டை விட்டு விரட்டியது கண்டுபிடிக்கப்பட்டது. மோசடியாக ஐந்து பெண்களை திருமணம் செய்தது தெரியவந்தது[6]. அதிகளவு பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்ததால், பெண்கள் இவரை விட்டு சென்றதாக கூறப்படுகிறது. சக்திவேல் மீது திருமணங்களை மறைத்து பெண்களை ஏமாற்றியது, [Sections 494 (Marrying again during lifetime of husband or wife)], பெண்ணை குற்றம் செய்வதற்காக பலாத்காரமாக எடுத்துச் சென்றது [498 (enticing or taking away or detaining with criminal intent a married woman)], கொலை மிரட்டல் [506 (ii)(threat to cause death)] உள்ளிட்ட இந்திய குற்றவியல் சட்டப் பிரிவுகளின் கீழ், வழக்கு பதிவு செய்த போலீசார்[7], அவரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்[8]. 12 வருட காலமாக இத்தகைய செக்ஸ்-வக்கிரத்தில் ஈடுபட்டுள்ளான்.

 The Leather Bar, Nungambakkam High Road, Chennai

கோயம்புத்தூர் மற்றும் சுற்றுப்புற ஊர்களில் செக்ஸ் குற்றங்கள் பெருகுவதேன்?: கோயம்புத்தூர் தொழில் நகரமாக உள்ளதால், பலதரப்பட்ட இந்தியர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள், தங்கவும் செய்கிறார்கள். கடினமாக உழைப்பவர்கள், இக்காலத்தில் குடிப்பது போன்ற காரியங்களில் ஈடுபட்டு வருவது சகஜமான விசயங்களாக இருக்கின்றன. மாதுவைத் தேடிப் போகும் ஆட்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். மது சட்டப் படி அரசே விற்று வரும் நிலையில், மாது-தேடல் அல்லது விபச்சாரம் சட்டவிரோதமாக இருக்கிறது. மேலும், தமிழகத்தில் 60 வருடங்களாக நாத்திக-திராவிட சித்தந்த ஆட்சி நடந்து வருவதாலும், கம்யூனிஸ சித்தாந்த தாக்குதல்களினாலும், கிருத்துவ-முஸ்லிம் செக்ஸ் காரியங்களினாலும், இந்து சமூகமும் அதிக அளவில் பாதிக்கப் பட்டுள்ளது. தார்மீக உணர்வுகள் மதிக்கப்படாமல் இருக்கும் நிலையில், மேனாட்டு கலாச்சாரம் மற்றும் அதனை ஊக்குவிக்கும் வியாபாரங்கள் பெருகும் போது, அனுபவிக்க மக்கள் இருக்கத்தான் செய்வார்கள். கேரளாவிலிருந்து செக்ஸ்-சிடி/விசிடிகள் புழக்கத்திற்கு வருவதும் உள்ளது. அங்கு மாட்டிக் கொள்ளும் குற்றவாளிகள் இங்கு வந்து மறைந்து கொள்கிறார்கள், தலைமறைவாக வாழ்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு வேண்டியவை கிடைத்து வருகின்றன. இதை அறியும் உள்ளூர் சபலங்கள் அவற்றைத் தேடிப் போவதில் ஆச்சரியமில்லை.

© வேதபிரகாஷ்

30-07-2014

[1] தினமலர், ஐந்து பெண்களை ஏமாற்றி திருமணம்: மோசடிபெயிண்டர்கைது, கோவை, 30-07-2014

[2] http://www.dailythanthi.com/News/Districts/2014/07/29134048/Man-arrested-over-the-marriage.vpf

[3] தினத்தந்தி, 4–வது மனைவிக்கு தெரியாமல் 5–வது திருமணம் செய்த பெயிண்டர் கைது, மாற்றம் செய்த நாள்: செவ்வாய், ஜூலை 29,2014, 1:40 PM IST; பதிவு செய்த நாள்: செவ்வாய், ஜூலை 29,2014, 1:40 PM IST

[4] A painter who lured many women into marriage in the last 12 years,allegedly sexually tortured them and forced them to perform lewd acts was arrested here today, police said.  http://www.business-standard.com/article/pti-stories/much-married-painter-in-the-dock-after-4th-wife-s-complaint-114072901226_1.html

[5] தினகரன், 5 பெண்களை ஏமாற்றி திருமணம்பெயின்டர் கைது,

[6] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=102832

[7] http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/man-held-for-marrying-five-women/article6262050.ece

[8] http://www.dinamalar.com/news_detail.asp?id=1034034