Archive for the ‘ஷீபா’ Category

ஐந்து பெண்களை ஏமாற்றி மணந்த பட்டியலில் சேரும் இன்னொரு ஆண் மற்றும் பரிதவிக்கும் அந்த ஐந்து பெண்கள்!

நவம்பர்11, 2013

ஐந்து பெண்களை ஏமாற்றி மணந்த பட்டியலில் சேரும் இன்னொரு ஆண் மற்றும் பரிதவிக்கும் அந்த ஐந்து பெண்கள்!

Director-Ravi-Thambi-arrested-for-marrying-5-women

5 பெண்களை  திருமணம்  செய்து  ஏமாற்றியதாக  சினிமா  இயக்குனர்  கைது!   மனைவிகளே  பிடித்து  போலீசில்  ஒப்படைத்தனர்!: இப்படி மறுபடியும் செய்திகள் வந்துள்ளன. ஆனால், இத்தடவை, ஒரு சினிமா டைரக்டர் / இயக்குனர் சிக்கியுள்ளார். 5 பெண்களை திருமணம் செய்து ஏமாற்றியதாக சினிமா இயக்குனர் ஜஸ்டின் ரவி என்கின்ற ரவி தம்பி என்பவர் கைது செய்யப்பட்டார் அவரை மனைவிகளே சேர்ந்து பொறிவைத்து பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்[1]. குமரி மாவட்டம் திங்கள்சந்தை அருகே உள்ள நெய்யூர் பகுதியை சேர்ந்தவர் ஜஸ்டின் ரவி (வயது 43). இவர் ‘வாச்சாத்தி[2]’, ‘பனிமலர்கள்’ போன்ற தமிழ் திரைப்படங்களை இயக்கி உள்ளார்[3], என்று ஊடகங்கள் கதை ஆரம்பிக்கின்றன. ஆனால், ஜஸ்டின் ரவி என்கின்ற ரவி தம்பி என்ற பெயரை விதவிதமாக குறிப்பிட்டுள்ளது ஆச்சரியமாக உள்ளது.

Justin Ravi marrying five women 11-2013

அனிதாபால்நேசம் (1999) இரண்டாவது  மனைவி[4]:  இவர் கடந்த 1999ல் சுசீந்திரம் அருகே முகிலன்விளையை சேர்ந்த அனிதா பால்நேசம் (36) என்பவரை வேர்கிளம்பி பத்திரப்பதிவு அலுவலகத்தில் வைத்து பதிவு திருமணம் செய்து கொண்டார்[5]. இவர் தக்கலை அருகே உள்ள சித்திரங்கோட்டை சேர்ந்த அனிதா பால்நேசம் என்ற பெண்ணுடன் குடும்பம் நடத்தி வந்தார். திருமணத்தின் போது அனிதா பால்நேசத்தின் பெற்றோர், 25 பவுன் நகை மற்றும் ஒன்றரை லட்சம் ரொக்கம், சீர் வரிசை பொருட்களை கொடுத்துள்ளனர். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது[6].  நாளடைவில் கணவர் ஜஸ்டஸ் ரவியின் போக்கில் மாற்றங்கள் ஏற்பட்டன. அடிக்கடி வீட்டுக்கு வருவதில்லை. மேலும் அடிக்கடி நகை, பணம் கேட்டு மனைவியை துன்புறுத்தியுள்ளார். இதனால் அவரது நடவடிக்கையில் அனிதா பால்நேசத்துக்கு சந்தேகம் ஏற்பட்டது.

Justin Ravi marrying five women and cheating 2013

இவர் நேற்று (09-11-2013) குமரி மாவட்ட எஸ்.பி அலுவலகத்துக்கு புகார் மனு அளிக்க வந்திருந்தார். அந்த புகார் மனு காப்பியை நிருபர்களிடமும் அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது: “எனக்கும், திரைப்பட இயக்குனர் ரவி தம்பி என்ற ஜெஸ்டன் ரவி(55) என்பவருக்கும் 1999 ஜனவரி 21ம் தேதி குமரி மாவட்டம் வேர்கிளம்பி சார்பதிவாளர் அலுவலகத்தில் வைத்து பதிவுத் திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்கு பிறகு எனக்கு பெண் குழந்தை பிறந்தது. தற்போது எங்கள் குழந்தை சங்கீதா (12) 7ம் வகுப்பு படிக்கிறாள். என்னை திருமணம் செய்வதற்கு முன்பாககுமரி மாவட்டம் ஊத்துக்குளி கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை ஏற்கனவே ரவி தம்பி திருமணம் செய்து இருக்கிறார். இந்த திருமணத்தை மறைத்தே என்னை 2, வதாக திருமணம் செய்து மோசடி செய்து விட்டார். தற்போது 6 வதாக சென்னை மேல்மருவத்தூர் பகுதியை சேர்ந்த 18 வயது இளம்பெண் ஒருவருடன் குடும்பம் நடத்தி வருகிறார். இது மட்டுமின்றி எனது கணவர் மீது இளைஞர்களை வெளிநாட்டுக்கு அனுப்புவதாக மோசடி செய்து விட்டார் என்ற வழக்கும் தக்கலை காவல் நிலையத்தில் உள்ளது. எனது கணவர் ரவி தம்பி பனியில் பூத்த பூக்கள், ரிக்ஷா தம்பி மற்றும் சமீபத்தில் வெளியான வாச்சாத்தி உள்ளிட்ட படங்களை இயக்கி உள்ளார். தற்போது மாமன் மனசிலே என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். திருமணம் என்ற பெயரில் என்னை ஏமாற்றி மோசடி செய்த இயக்குனர் ரவி தம்பி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் திருமணத்தின் போது நாங்கள் கொடுத்த நகை, பணத்தை திரும்ப பெற்றுத் தர வேண்டும்”, இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில்,  எஸ்.பியை சந்தித்து எனது கணவர் மீது புகார் மனு அளிக்க வந்தேன். எஸ்.பி. இல்லாததால், தபால் மூலம் புகாரை அனுப்புவேன் என்றார்.

Person marrying five women and cheating 2013

பணத்துக்காக  பொய்  புகார்  –  கூறுவது  ஜஸ்டின்  ரவி: இந்த புகார் குறித்து வாச்சாத்தி பட இயக்குனர் ரவி தம்பியிடம் கேட்ட போது அவர் கூறியதாவது: “அனிதா பால்நேசன் எனது உறவினர் மகள். நாங்கள் இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டோம். ஒரு மகள் இருக்கிறாள். குடும்பத்தின் மீது நான் பாசமாக தான் உள்ளேன். கணவன், மனைவிக்கு இடையே சாதாரணமாக ஏற்படக்கூடிய பிரச்னையை பெரிதாக்கி விட்டனர். அனிதாவின் சில நடவடிக்கைகள் எனக்கு பிடிக்கவில்லைகுறிப்பாக அவர் எனக்கு தெரியாமல் வெளிநாடு சென்று வந்தார். நான் இதை கண்டித்தேன். 5 வருடங்கள் வரை வெளிநாட்டில் இருந்தார். திரும்பி வந்ததும் பண கஷ்டம் என்றார். அவர் நடத்தி வரும் டெய்லர் கடைக்கு நான்தான் ஏற்பாடு செய்தேன். எனது மகள் சங்கீதாவுக்கு செய்ய வேண்டியதை கண்டிப்பாக நான் செய்வேன். எனக்கு வேறு எந்த பெண்ணுடனும் தொடர்பு கிடையாது. என்னிடம் இருந்து பணம் பறிக்க வேண்டும் என்பதற்காகவே இப்போது புகார் அளிக்கிறார்கள். இந்த விவகாரத்தை சட்டப்படி சந்திப்பேன்”, இவ்வாறு அவர் கூறினார்[7].

vachathi-film-director arrested - 2013

ஷீபா  என்ற  செல்வகுமாரி (2010)[8]: இவருக்கும், வேர்கிளம்பி பகுதியைச் சேர்ந்த ஷிபா என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு ஜஸ்டின் ரவி சென்னை சென்று விட்டார். மேலும் ஷிபாவிடமிருந்து நகை, பணத்தை வாங்கி சென்றதாகவும், அதன் பிறகு அவர், ஷிபாவின் குடும்பத் தேவைகளுக்கு பணம் கொடுக்கவில்லை என்றும் கூறப்பட்டது. இது தொடர்பாக ஷிபா ஜஸ்டின் ரவியிடம் கேட்ட போது, அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. எனவே ஷிபா ஜஸ்டின் ரவியின் பின்னணி குறித்து விசாரித்தார்.இதையடுத்து அவர் விசாரித்ததில் பூதப்பாண்டி அருகே உள்ள கீரிப்பாறை சுருளக்கோட்டைச் சேர்ந்த ஷீபா என்ற செல்வகுமாரியை கடந்த 2010ல் மணந்தது தெரிய வந்து அதிர்ச்சி அடைந்தார்.  அவரது பெற்றோரிடம் இருந்து வரதட்சணையாக 40 பவுன் நகை, பணம் ஆகியவற்றை வாங்கியுள்ளார். இவர்களுக்கு 6 மாதத்தில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது. இதையடுத்து அனிதாவும், ஷீபாவும் சேர்ந்து ரவியின் லீலைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வர முடிவு செய்தனர்.

vachathi-film-director arrested - Anita Pal nesan 2013

அனிதா  மற்றும் ஷீபா  வரவேற்று   வழியில்  களியக்காவிளையில்  வைத்து  ரவியை  மார்த்தாண்டம்  மகளிர்  போலீசார்  கைது: ஷீபா இந்த நிலையில் ஜஸ்டஸ் ரவியின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்படத்தொடங்கியது. அவர் சென்னைக்கு செல்வதாக கூறிவிட்டு அடிக்கடி வீட்டுக்கு வராமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த அனிதா பால்நேசம் இது பற்றி விசாரிக்கத் தொடங்கினார்[9].  ரவியின் லீலைகள் குறித்து அவர்கள் மார்த்தாண்டம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அவர்களின் புகாரின்பேரில் போலீசார் விசாரணையை துவங்கினர். சென்னையில் இருந்த ரவியை வரவழைக்க அவருடன் அனிதாவின் குழந்தையை பேச வைத்தனர். குழந்தையின் பேச்சை கேட்டு ரவி திருவனந்தபுரத்திற்கு விமானத்தில் வருவதாக தெரிவித்தார். இதையடுத்து நேற்று காலை திருவனந்தபுரத்தில் உள்ள விமான நிலயைத்தில் வந்திறங்கிய ரவியை அனிதா மற்றும் ஷீபா ஆகியோர் கூட்டாக வரவேற்று காரில் குமரி மாவட்டத்திற்கு அழைத்து வந்தனர். வரும் வழியில் களியக்காவிளையில் வைத்து ரவியை மார்த்தாண்டம் மகளிர் போலீசார் கைது செய்தனர். அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்த போது அவர் பல திடுக்கிடும் தகவல்களை அளித்துள்ளார்.

சைலஜா (1993): ரவி முதலில் பனச்சமூடு பகுதி, மார்த்தாண்டத்தைச் சேர்ந்த சைலஜாவை சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர் மணந்துள்ளார். 18 வயது மகன் உள்ளான்[10].

பிந்துமூன்றாம்மனைவி (): அதன் பிறகு கேரள மாநிலம் மூன்றாவதாக திருவனந்தபுரம் கொட்டாரக்கரையைச் சேர்ந்த பிந்துவையும் மணந்துள்ளார்.

கவிதாநான்காம்மனைவி (): நான்காவதாக திருவனந்தபுரம் புஜபுரையைச் சேர்ந்த கவிதா என்ற பெண்ணை திருமணம் செய்து இருக்கிறார்.

பட்டியல் தொடர்கிறது: பின்னர் சித்திரங்கோட்டையைச் சேர்ந்த அனிதாவையும், கேரள மாநிலம் திருமலையைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரையும் திருமணம் செய்துள்ளார். இத்தனை திருமணம் செய்த அவர் 5வதாக சுருளக்கோடு பகுதியைச் சேர்ந்த ஷீபாவையும் மணந்துள்ளார். இது தவிர தற்போது அவர் மேல்மருவத்தூரில் வசிக்கும் பூஜா என்ற இளம் பெண்ணுடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார். ஜாலியாக பேசி பெண்களை மயக்குவதில் ரவி வல்லவர். அவ்வாறு தன் பேச்சில் மயங்கிய பெண்களை திருமணம் செய்து அவர்களிடம் இருந்து நகை, பணத்தை பறித்துள்ளார். இப்போது மீண்டும் ஒரு புதிய சினிமா கம்பெனி தொடங்கி சினிமாவில் நடிக்க புதுமுக பெண்கள் தேவை என்று விளம்பரம் செய்துள்ளார். அவரிடம் பெண்கள் ஏமாந்து விடாமல் இருக்க அவரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது[11].

vachathi-film-release-CD

மணந்து கொண்ட பெண்கள் அமைதியாக இருப்பது: தமிழகத்தில் இப்படி, ஒரு ஆண் தொடர்ந்து பல பெண்களை திருமணம் செய்து கொள்வது என்பது வழக்கமாகி விட்டது போலிருக்கிறது.

  • ·         நான்காவதாக கல்யாணம் செய்ய  முயன்ற வில்வின் ரெஜிஸ் கைது![12]
  • மூன்று மனைவிகளை ஏமாற்றி நான்காவது திருமணம் – கின்னஸ் சாதனைப் படைக்கப் போவதாக கணவன் சவால், மிரட்டல் – முதல் மனைவி புகார்![13]
  • ஜோசப், பிலிப் ஜோசப், திலிப் ஜோசப் என்ற பெயர்களில் நான்கு பெண்களை திருமணம் செய்து கொண்டு ஏமாற்றியவன் (2)[14]
  • ஜோசப், பிலிப் ஜோசப், திலிப் ஜோசப் என்ற பெயர்களில் நான்கு பெண்களை திருமணம் செய்து கொண்டு ஏமாற்றியவன் (1)[15]

பெண்கள் எப்படி, அவ்வளவு சுலபமாக ஆண்களின் வலையில் விழுகிறார்கள் என்றுதான் ஆராய வேண்டியுள்ளது. இங்கும் சம்பந்தப்பட்டுள்ளவர்கள் கிருத்துவர்கள் என்பதனால், எப்படி திருமணம் ஆன ஆணுக்கு மறுபடி-மறுபடி திருமணம் செய்வித்து[16], அதனை சட்டமுறையாக்குகிறார்கள் என்றும் புரியவில்லை.

© வேதபிரகாஷ்

11-11-2013