Posts Tagged ‘உடலுறவு’
மார்ச்13, 2019
பனிமலர் விவகாரங்கள், விவாதங்கள் மற்றும் விதண்டாவாதங்கள் – காதல் தோல்விகளும், தாம்பத்தியத்திற்கு புது விளக்கம் கொடுத்தது [1]

பனிமலர் என்ற பெண்ணியம், பெரியாரிஸ கற்ப்பியம், காதல் தோல்வி சித்தாந்தம் முதலியன: பனிமலர், பனிமலர் பன்னீர் செல்வம் என்ற பெண், டிவி செனல்களின் மூலம் பிரபலமாகி இருப்பது தெரிகிறது. திக-திமுக ஆதரவுகளால், அப்பிரபலம் சித்தாந்தத்துடன் சேர்ந்து சார்புடையாதாகி உள்ளது. சன் டிவி, பாலிமர் டிவி, புதிய தலைமுறை முதலிய டிவி செனல்களில் வேலை செய்ததாக உள்ளது. செய்தி வாசிப்பு, நிகழ்ச்சி தொகுப்பு முதலியவற்றால் பிரபலம். போதாகுறைக்கு, ஊடகத்தினரும் பரஸ்பர விலம்பரங்கள் கொடுத்துள்ளனர். இளம்பெண் என்பதனால், அந்த கவர்ச்சி உந்துதல் விளம்பரம் அதிகமாகவே உள்ளது. பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம்…………………..இப்படி சொல்லவே வேண்டாம், அதிகமாகவே உள்ளது[1]. இரண்டு முறை காதலித்து தோல்வியடைந்த விவகாரங்கள் வேறு, இதோ விகடன் விவரங்களைக் கொடுக்கிறது.

என் காதல் சொல்ல வந்தேன் – பனிமலர் சொல்லும் காதல் கதை[2]: பனிமலர் சொல்வது[3], ‘‘உலகில், யார் ஒருவரைப் போலவும் இன்னொருவர் இல்லை; எல்லோருமே தனித்துவம் மிக்கவர்கள்தாம். நிறைவேறாத பத்து காதல்களுக்குப் பிறகு, மற்று மொரு காதல் வந்தாலும்கூட அதுவும் புதிதாகவே இருக்கும்!’’ – வித்தியாசமாக ஆரம்பிக்கிறார் செய்தி வாசிப்பாளர் பனிமலர் . ‘‘பள்ளிப் பருவத்தில், எல்லோருக்குமே எதிர் பாலினத்தவர் மீது ஒருவிதமான ஈர்ப்பு ஏற்படத்தான் செய்யும். ஆனாலும், அடுத்தடுத்த காலகட்டங்களில் அந்த ஈர்ப்பின் வீரியம் குறைந்து மறைந்தேபோகும். 13 வயதில் நமக்குப் பிடித்த ஒருவர், 15 அல்லது 16 வயதாகும்போது பிடிக்காமல்கூட போகலாம்… மாற்றத்துக்கு உட்பட்ட உளவியல் உண்மை இது. உடல்ரீதியாக வளரிளம் பருவத்து மாற்றங்களைக் குழந்தைகளிடம் விளக்கிக் கூறுகிற நாம், அதே பொறுப்பு உணர்வுடன் மனரீதியிலான இந்த மாற்றங்களையும் எடுத்துச்சொல்லி வளர்க்க வேண்டும்”.

`இனக்கவர்ச்சி‘ எனும் மாயக் காதல் – முதல் காதல் தோல்வி: வளரிளம் பருவத்தில் வரக்கூடிய `இனக்கவர்ச்சி’ எனும் மாயக் காதல் எனக்கும் வந்ததுண்டு. இப்போது நினைத்துப்பார்த்தாலும் எனக்கே சிரிப்பை வரவழைக்கும் நிகழ்ச்சி அது. ஆனால், குறுகிய காலத்திலேயே அந்த உணர்வு மறைந்துபோனது ஆச்சர்யம். அதன்பிறகு, என் வாழ்க்கையில் ஏற்பட்ட இரண்டு காதல்களுமே மிக நீளமானவை. பணி நிமித்தமாக சொந்த ஊரைவிட்டு சென்னை வந்தபிறகு, நீண்ட நாள்களாக உடன் பயணித்த நண்பர் ஒருவரையே வாழ்க்கைத் துணையாக்கிக் கொள்ளலாம் என எண்ணினேன். ஆனால், அந்த உறவு ஒருநாள் முறிந்துபோனது. மனது உடைந்து, அழுது புலம்பி, அந்த மன அழுத்தத்தில் வாழ்க்கையின் அடுத்தடுத்த முடிவுகளைத் தப்புத்தப்பாக எடுத்து அனுபவப்பட்டிருக்கிறேன். ஆனாலும்கூட, ஒரு விஷயத்தில் மட்டும் எப்போதும் நான் உறுதியாக இருந்திருக்கிறேன். `காதலரோடுதான் பிரச்னையே தவிர, காதலில் ஒருபோதும் பிரச்னை இல்லை’ என்ற தெளிவுதான் அது. எனவே தான், முதல் காதல் தோல்வி. ஏற்படுத்தியிருந்த வலியிலிருந்து என்னை மறுபடியும் மீட்டெடுத்து வர உதவியதும் காதலாகவே அமைந்தது.

உலக ஜீவராசிகள் உற்பத்தியின் அடிப்படையே தாம்பத்தியம்தானே?[4]: பனிமலர் சொல்லும் காதல்-தாம்பத்தியம் லாஜிக்[5], `காதல் ஒருமுறைதான் மலரும். உதிர்ந்துவிட்டால் மீண்டும் மலராது’ என்றெல்லாம் இட்டுக்கட்டி, காதலைப் புனிதப்படுத்தும் முயற்சி இந்த டிஜிட்டல் யுகத்திலும் தொடர்ந்துகொண்டேயிருக்கிறது. இதுமட்டுமல்ல… `பார்க்காமலே காதல், பேசாமலே காதல்’ என்றெல்லாம் காதலை உயர்த்திப்பிடித்து தெய்விகக் காதல் வரிசையில் பட்டியலிடுவதன் பின்னணியில், `எங்கள் காதலில் செக்ஸ் இல்லை… இது புனிதமானது’ என்று கட்டமைக்கப் பார்க்கிறார்கள்.
உலக ஜீவராசிகள் உற்பத்தியின் அடிப்படையே தாம்பத்தியம்தானே? அமீபாவில் ஆரம்பித்து மனிதன் வரை அனைத்து உயிர்களுக்கும் பொதுவான இந்த இனவிருத்திக்கான தேடல்தானே காதல்? ஆக, காதல் என்பது பரிணாம வளர்ச்சியின் ஓர் அங்கம். இது, காதலில் இயல்பானது என்பதை உணரும்போதுதான், `என்னை ஏமாற்றிவிட்டார், அதற்காக பழி வாங்குகிறேன் ‘ என்று கிளம்ப மாட்டார்கள்”.
|
இங்கு நேரிடையாக, தனது முதல் காதலுடன் தாம்பத்தியம் வைத்துக் கொண்டது, மறைமுகமாக சொல்கிறார். அதனை நியாயப் படுத்த, பொதுவாக ஒரு வாதத்தை கேள்வியாகக் கேட்டுள்ளார். ஒருசெல் மற்றும் மிருகங்களின் தாம்பத்தியமும், மனித தாம்பத்தியமும் ஒன்றா என்பதை யோசித்டுப் பார்க்க வேண்டும். அமீபா ஒரு தன்-புணர்ச்சி ஜீவனாகும்.
|

ஐந்தாண்டுகளுக்குப் பிறகு இரண்டாவது காதல்[6]: பனிமலர், இரண்டாவது காதலை விவரித்தது[7], “இரண்டாவது முறை என்னை ஆட்கொண்ட காதலுக்கு ஆயுள் ஐந்து வருடங்கள். `எல்லாம் சரியாக நடக்கிறது’ என்ற மகிழ்ச்சியோடு திருமணம் என்ற அடுத்தகட்டத்துக்கு நகரவிருந்தபோது, அந்த இரண்டாவது காதலும் கைநழுவிப் போனது.
இம்முறை இன்னும் அதிகமாக காயப்பட்டேன். அதன் வடு இன்னமும் இருக்கத்தான் செய்கிறது. வெறுமையும் தனிமையும் ஒருசேர அழுத்தும் அந்தத் தருணத்தில், வெளியே போய்விட்டு வீட்டுக்குள் வந்தால்கூட பிரிவு பற்றிய எண்ணங்கள்தாம் ஞாபகத்துக்குள் வந்து அழுகையை வரவழைக்கும். செல்போனை எடுத்துப் பேசிவிடலாமா அல்லது ஒரு மெசேஜ் அனுப்பிப் பார்க்கலாமா என்றெல்லாம் பலவாறான சிந்தனைகள் மனதைச் சிதறடிக்கும்.
|
இரண்டாவது காதல் திருமணம் வரைச்சென்று நின்று விட்டது என்றால், காரணம் என்ன என்று வெளியிடப் படவில்லை. பிரபலங்களில் இதெல்லாம் சகஜம் என்றாலும், இங்கு மனநிலை பாதித்துள்ளதால், அதனை ஆராய வேண்டியுள்ளது. ஏனெனில், அது நவநாகரிகமான காதலாக உள்ளது. செல்போன், மெஸேஜ் என்றரீதியில் உள்ளது. ஆகவே, டேடிங், மேடிங் இருந்ததா-இல்லையா என்று தெரியவில்லை. முந்தைய வாதத்தை எடுத்துக் கொண்டால் இருக்கிறது எனலாம்!?
|

கவுன்சிலிங் பெற்று புது மனிஷியாகியது[8]: இரண்டு காதலன்களை விடுத்து, இரண்டு காலல்களை முறித்த பனிமலர், கவுன்சிலிங்கிற்கு சென்று விளக்கியது[9], “வெறுத்துப்போய் வேலைக்குக்கூட செல்லாமல் வீட்டிலேயே விட்டத்தைப் பார்த்து முடங்கிக்கிடந்தேன்.
தினம் ஒருவேளைதான் சாப்பிட்டேன். துக்கத்தில் தூக்கம் தொலைந்தேபோனது. ஒருகட்டத்தில், என்னுடைய மன அழுத்தத்தைக் கண்டு எனக்கே பயம் வந்துவிட்டது. தயங்காமல், உடனடியாக ஒரு மனநல மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெற்றேன். என் எதிர்மறைச் சூழலை மாற்றிக்கொள்ள, ரொம்பவே முயற்சி செய்தேன்.
|
இரண்டு ஆண்களுடன் பழக்கம், இரண்டு காதல்கள், இரண்டு காதல் ணை அதிகமாக பாதித்ததில்தோல்விகள்,….என்பன, இப்பெண் இயற்கையாகவே உள்ளது. ஆனால், இத்தகைய நவநாகரிகமான, பொதுவான ஆண்-பெண் உறவு முறைகளை மீறி விளக்கம் கொடுக்கும் பெண்ணால் தாங்க முடியவில்லை என்றால், அவ்வெல்லைகளை மீறியப் பிரச்சினையாகிறது.
|
ஜிம்மில் சேர்ந்து உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்தேன். புதுப்புது பயணங்களை மேற்கொண்டேன். வலியில் அழுந்திக்கிடந்த மனதுக்கு ஆறுதலாகவும் புத்துணர்ச்சி ஊட்டுவதாகவும் அமைந்த இந்த மாற்றங்கள்தாம் என்னை மறுபடியும் புதிய மனுஷியாகப் பிறப்பெடுக்க வைத்திருக்கின்றன.
© வேதபிரகாஷ்
13-03-2019

[1] இது கூட யார் பதிவிட்டது என்று தெரியவில்லை – http://panimalarpanneerselvam.blogspot.com/
[2] விகடன், மறுபடியும் புதிய மனுஷியாகப் பிறந்தேன்! – பனிமலர் பன்னீர்செல்வம்,
த.கதிரவன் குமரகுருபரன் , வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (30/10/2018)
[3] https://www.vikatan.com/avalvikatan/2018-nov-13/entertainment/145468-interview-with-news-reader-panimalar-panneerselvam.html
[4] விகடன், மறுபடியும் புதிய மனுஷியாகப் பிறந்தேன்! – பனிமலர் பன்னீர்செல்வம்,
த.கதிரவன் குமரகுருபரன் , வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (30/10/2018).
[5] https://www.vikatan.com/avalvikatan/2018-nov-13/entertainment/145468-interview-with-news-reader-panimalar-panneerselvam.html
[6] விகடன், மறுபடியும் புதிய மனுஷியாகப் பிறந்தேன்! – பனிமலர் பன்னீர்செல்வம்,
த.கதிரவன் குமரகுருபரன் , வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (30/10/2018).
[7] https://www.vikatan.com/avalvikatan/2018-nov-13/entertainment/145468-interview-with-news-reader-panimalar-panneerselvam.html
[8] விகடன், மறுபடியும் புதிய மனுஷியாகப் பிறந்தேன்! – பனிமலர் பன்னீர்செல்வம்,
த.கதிரவன் குமரகுருபரன் , வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (30/10/2018)
[9] https://www.vikatan.com/avalvikatan/2018-nov-13/entertainment/145468-interview-with-news-reader-panimalar-panneerselvam.html
குறிச்சொற்கள்:இன்ஸ்டாகிராம், உடலின்பம், உடலுறவு, கற்பழி, கற்பழிப்பது, கற்பு, காதல் தோல்வி, சன் - டிவி, டுவிட்டர், தமிழ் பெண்ணியம், பனிமலர், பனிமலர் பன்னீர் செல்வம், பன்னீர் செல்வம், பாலிமர், பாலிமர் டிவி, புதிய தலைமுறை, பெண்ணியம், பெரியார், பேஸ்புக்
அந்தப்புரம், அந்தரங்கம், அரசியல், அவதூறு, ஆபாச படம், இணக்கத்துடன் செக்ஸ், இன்பம், உடலின்பம், உடலுறவு, உடல், உல்லாசமாக இருப்பது, ஒப்புதலுடன் உடலுறவு, ஒப்புதலுடன் செக்ஸ், கன்னி, கன்னித்தன்மை, கற்பு, கற்பும், கலவி, களவு, கள்ளக்காதலி, காதலன், காதலி, காதல், காமக்கிழத்தி, காமத்தீ, கூடா உறவு, கூடா ஒழுக்கம், கொக்கோகம், சம்மதத்துடன் உலலுறவு, சம்மதத்துடன் செக்ஸ், சீரழிவு, செக்ஸி, செக்ஸ் கொடுமை, செக்ஸ் சில்மிஷம், செக்ஸ் டார்ச்சர், செக்ஸ் நிபுணர், தாம்பத்தியம், திராவிடப்பெண், திராவிடம், திருமணத்துக்கு முன் பெண்கள் பாலியல், திருமணத்துக்கு முன்னர் பெண்கள் பாலியல், பாலியல், பாலியல் உறவு வைத்துக் கொள்வது தவறில்லை, பாலியல் பலாத்காரங்கள், பெண்ணியம், பெரியாரிசம், பெரியாரிஸம், பெரியார், மனம் விரும்பி உடலுறவு இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
நவம்பர்20, 2017
50 பெண்களைக் கற்பழித்த குரூர கொக்கோகக் கற்பழிப்பாளி: வீட்டில் தனியாக இருந்த பெண்களை கற்பழித்தது – பெண்கள் எப்படி எச்சரிக்கையாக இருக்க வேண்டும்? (3)

கற்பழிப்பு, ஒழுக்கம் குடும்பம், சினிமா முதலியன: இந்திய சினிமாக்களில் கற்பழிப்பு காட்சிகள் “தத்ரூபமாகவே”, 10-15 நிமிடங்களுக்கு தாராளாமாகக் காட்டியுள்ளனர். அத்தகைய வக்கிர காட்சிகளுக்காகவே படங்கள் ஓடியகாலம் [1960-1990] உண்டு, இப்பொழுதும், அத்தகைய நிலை தொடர்கிறது. மலையாள படங்கள் அதற்காக பிரபலமாக இருந்தது. மலையாளப் படம் என்ற பெயரில், நடுவில் ஆபாசப் படம் காட்டும் முறையும் இருந்தது. முன்பெல்லாம் “அடல்ஸ்-ஒன்லி” என்று போஸ்டர் பார்த்து ஜனங்கள் போகும், இப்பொழுதோ, அத்தொல்லையே இல்லை, ஒவ்வொரு குத்தாட்டமே, கற்பழிப்பை விட மோசமான காட்சிகளாக இருக்கின்றன. பாடல்களைப் பற்றி கேட்கவே வேண்டாம், அந்த அளவுக்கு ஆபாசம், கொக்கோகம், நிர்வாணம் முதலியவற்றை எல்லாம் கடந்த நிலையில் இருக்கின்றன. முன்பெல்லாம், அத்தகைய கற்பழிப்புக் காட்சிகளில் “டூப்” போடுவதாகச் சொல்லப்படும். இப்பொழுதோ, அந்நடிகைகளே தாராளமாக நடித்துக் கொடுக்கின்றனர். கற்பழிப்புக் காட்சிகளில், உண்மையாகவே கற்பழித்த நிதர்சனங்களும் உண்டு. பிரபல நடிகைகளே அதில் உள்ளனர். இப்பொழுதும், ஒரு நடிகையைக் கற்பழிக்க, ஒரு நடிகனே கோடிகளில் பேரம் பேசி, ஆளை அனுப்பி, நிறைவேற்றியுள்ளான். ஆனால், அவனை குற்றத்திலிருந்து மீட்கவும் முயற்சிகள் நடந்து வருகின்றன.

கற்பழிப்பு, கொக்கோக விவரிப்பு முதலியவற்றை செய்யும் பொறுப்புள்ளவர்கள், ஆசிரியர்கள், தலைவர்கள்: அத்தகைய பாலியல் பாடல்களை எழுதியவர்கள் தாம், கவி, கவிக்கோ, பெருங்கவிக்கோ, கவிஞர், புலவர் போர்வையில் உலா வருகின்றனர். அத்தகைய ஆபாசமான, அரை-முக்கால் நிர்வாணமான காட்சிகளில் நடித்தவர்கள் தாம் மாதிரிகளாக, தலைவர்களாகச் சித்தரிக்கப் படுகின்றனர். அவர்களுக்கு பட்டம், பணம், பதவி எல்லாம் கொடுக்கப்படுகின்றன. மேலும் கேவலமான விசயம் என்னவென்றால், இவர்கள் பற்பல பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், பொது நிகழ்ச்சிகள் முத்லியவற்றில் வரவழைக்கப் பட்டு, பெண்ணியம், பெண்ணுரிமைகள், குடும்பம், போன்றவற்றைப் பற்றி பேசவும் வைக்கின்றனர். இவற்றால் மாணவ-மாணவியர் எதை கற்றுக் கொள்வர்? மிக-மிக மோசமான காட்சிகள் என்று ஊடகங்களே பட்டியல் இட்டுக் காட்டுகின்றன[1]. அதாவது, அத்தகையக் காட்சிகளைப் பார்த்தால், பார்த்தவர்களும் அவ்வாறே செய்யத் தூண்டப்படுவர் என்ற ரீதியில் சித்தரிக்கிறது[2]. ஆனால், அவையே அதிலும் முதலீடு செய்கின்றன. அதாவது, ஊடகக்காரர்களே, படத்தொழொலும் ஈடுபட்டுள்ளனர்.

பெண்மையை, தாய்மையை, கற்பை, ஒழுக்கத்தை, குடும்ப மேன்மயை, கணவன்–மனைவி உறவுமுறைகளை போற்றாமல் இருப்பது சமுதாயத்திற்கு நல்லதா?: பெண்மையை, தாய்மையை, கற்பை, ஒழுக்கத்தை, குடும்ப மேன்மயை, கணவன்-மனைவி உறவுமுறைகளை போற்றும், பாதுகாக்கும், கடைபிடிக்கும் சித்தாந்திகள், எழுத்தாளர்கள், நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், அரசியல்வாதிகள், தலைவர்கள் எத்தனை பேர் இருக்கின்றனர் என்று பார்த்தால், 1% கூட இல்லை என்றே புலப்படுகிறது. மனைவி-துணைவி-வைப்பாட்டி-காமக்கிழத்தி-கீப் என்ற ரீதியில் வாழும் இவர்கள் எப்படி சமுதாயத்திற்கு மாதிரிகளாக, அறிவுரைக் கூறும் மனிதர்களாக இருக்க முடியும்? பெண்மையை, தாய்மையை, கற்பை, ஒழுக்கத்தை, குடும்ப மேன்மயை, கணவன்-மனைவி உறவுமுறைகளை போற்றும், பாதுகாக்கும், கடைபிடிக்கும் பண்புகளை, குண்ங்களை, சிறப்புகளை பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் போதிக்கப் படுகின்றனவா? அதுவும் இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது. பெண்களின் உரிமைகள் என்று போதிக்கும் போது, கற்புன் மேன்மையினைப் பற்றி சொல்லிக் கொடுக்காமல், வேண்டும் என்றால் சேர்ந்து வாழலாம்-பிரிந்து போகலாம், பெண்கள் குழந்தைகளை உருவாக்கும் எந்திரங்கள் இல்லை, அதனால் அவர்கள் திருமணம் செய்து கொள்ளலாம், வேண்டாம் என்றால் திருமணம் செய்து கொள்ளலாமலே, வாழலாம், வாழ்க்கை நடத்தலாம், குடும்பமும் நடத்தலாம் பொன்றேல்லாம் போதிக்கப்படுகின்றன. பிரச்சார,ம் செய்யப் படுகின்றன. பிரபல நடிகர்களும் அவ்வாறே போதிக்கின்றனர். இதனால், கணவன்-மனைவி உறவுமுறைகள் என்றால் என்ன என்று கேட்கும் நிலை ஏற்படாதா?

வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விவரங்கள்:
- தனியாக இருக்கும் பெண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இத்தகைய முறைகளை [மேலே அவன் குறிப்பிட்ட சாத்திய கூறுகள் முதலியன] கையாளுவதை அறிந்து, அவற்றை முழுக்க தவிர்க்க வேண்டும்.
- பேஸ்புக்,வாட்ஸ்-அப் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.. செல்போன் எண்களை யாருக்கும் கொடுக்கக் கூடாது.
- கதவைத் திறக்காமல் பேசி அனுப்புவது சிறந்தது. உள்ளே வர வேண்டிய அவசியம் ஏற்படும் போது, உடன் ஆண் துணை இருப்பது அவசியம்.
- கேஸ் கொண்டு வருபவன், கேன் – வாட்டர் சப்ளை செய்பவன், பேப்பர் போடுபவன், முதலியவருடன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
- அதே போல வீட்டிற்கு வேலை செய்ய வரும், பழுது பார்க்க வரும், எலக்ட்ரீஷியன், பிளம்பர், போன்றவர்களுடனும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
- தெரியாத பெண்களை வீட்டிற்குள் விடக் கூடாது. தண்ணீர் கேட்டு வரும், குழந்தைகளுடன் வரும் பெண்களையும் விடக்கூடாது.
- அனாதை இல்லம், கோவில் போன்ற வசூலுக்கு வருபவர்களையும் ஊக்குவிக்கக் கூடாது.
- அடிக்கடி வரும், திரும்ப-திரும்ப ஆட்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், ஏனெனில், நாளாக-நாளாக, அவர்களது போக்குவரத்து, சந்தேகம் இல்லாமல் போகும் நிலையை உண்டாக்கும், அது அவர்கள் குற்றத்தை செய்ய தோதுவாகி விடும்.
- வேலைக்காரிகள், அவர்களது உறவினர்கள் மற்றும் அவர்களது பெயர்களைச்சொல்லிக் கொண்டு வரும் ஆண்கள், முதலியோருடன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
- தேவையில்லாத விற்பனை செய்வது போல வருவது, விசாரிக்க வருவது, அட்ரஸ் கேட்டு வருவது,….. போன்ற வகையறாக்களுடனும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
© வேதபிரகாஷ்
19-11-2017

[1] News18, 10 Ultra-Regressive Scenes From Bollywood Movies That Encourage Creep Behaviour, Pathikrit Sanyal, Updated:June 23, 2016, 2:10 PM IST.
[2] http://www.news18.com/news/buzz/10-ultra-regressive-scenes-from-bollywood-movies-that-encourages-you-to-be-a-creep-1027367.html
குறிச்சொற்கள்:அறிவழகன், உடலுறவு, கணவன்-மனைவி உறவு முறை, கற்பழி, கற்பழிப்பது, கற்பழிப்பாளி, கற்பழிப்பு, காமம், சீரழிவுகள், பண்பாடு, பலாத்காரம், பாலியல் பலாத்காரங்கள், பாலியல் பலாத்காரம், பாலுறவு, பெண்களின் உரிமைகள், பெண்களின் ஐங்குணங்கள், பெண்கள் கவனமாக இருக்கவேண்டிய அவசியம், பெண்மை, வீட்டில் தனியாக
அறிவழகன், இலக்கு, உடலின்பம், உணர்ச்சி, எளிதான இலக்கு, கணவன்-மனைவி உறவு முறை, கற்பழிப்பு, கற்பு, கலவி, காமக்கொடூரன், காமத்தீ, காமப் உணர்ச்சி, காமம், காமலீலைகள், காமவெறி பிடித்த காரியம், காமுகன், குரூரம், குற்றம், கைது, கொக்கோகம், சமூகக் குரூரம், சிற்றின்பம், சீரழிவு, சீரழிவுகள், செக்ஸ், செக்ஸ் குற்றம், செக்ஸ் கொடுமை, செக்ஸ் சில்மிஷம், செக்ஸ்-குற்றங்கள், தாம்பத்திய சந்தேகங்கள், தாய், தாய்மை இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
ஓகஸ்ட்3, 2017
பாலியல் தொல்லைகளுக்கு உட்பட்ட பள்ளி–கல்லூரி மாணவிகள் தற்கொலை முயற்சி செய்வது, தற்கொலை செய்து கொள்வதற்கான காரணங்கள், தடுக்கும் முறைகள் (3)

ஏப்ரல்.14 2017 – எம்.எஸ்.சி படிக்கும் மாணவி தற்கொலை ஏன்?: ராயபுரம் உசேன் மேஸ்திரி தெருவை சேர்ந்தவர் ஜெரோன். இவருக்கு 21 வயதில் ஷைனி சரண்பிரியா என்ற மகள் இருந்தார். ஷைனி சரண்பிரியா சைதாப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் எம்.எஸ்.சி படித்து வந்தார். கடந்த புதன்கிழமை ஷைனி சரண்பிரியா வழக்கம் காலையில் கல்லூரிக்கு சென்று மாலை வீட்டிற்கு திரும்பி வந்தார். வீட்டில் யாருடன் சரியாக பேசாமல் அமைதியாக இருந்ததாகக் கூறப்படுகிறது[1]. பின்னர் இரவு உணவு சாப்பிட்டுவிட்டு தனி அறையில் அவர் தூங்க சென்றுவிட்டார்[2]. மறுநாள் காலை விடிந்து நீண்ட நேரமாக அவர் வெளியே வரவில்லை. அசந்து மகள் தூங்கிக் கொண்டிருக்கிறாள் என்று நினைத்த பெற்றோர், கதவை தட்டி பார்த்துள்ளனர். அப்போது ஷைனி கதவைத் திறக்காததால் அதிர்ச்சியடைந்தனர். பயந்து போன அவர்கள், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றனர்[3]. அப்போது, ஷைனி சரண்பிரியா தனது துப்பட்டாவில் தூக்கு போட்டு தொங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்து பெற்றோர்கள் கதறி அழுதனர்[4]. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலைக்கான காரணத்தை போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இது முற்றிலும் மர்மமாக இருக்கிறது.

தற்கொலைக்குக் காரணங்கள் என்ன?: சமீபகாலத்தில் பள்ளி-கல்லூரி மாணவிகள் அதிகமாக தற்கொலை செய்யும் போக்கு காணப்படுகிறது. அவற்றில் காணப்படும் காரணங்கள் இவ்வாறு தொகுக்கப்படுகின்றன:
1. எழ்மை, மற்றவர்கள் போல ஆடை அணிய முடியவில்லை, தாழ்ந்த மனப்பான்மை.
2. சில பாடங்கள் புரியவில்லை, ஆங்கிலம் வரவில்லை.
3. அழகாக இல்லை, கருப்பாக இருக்கிறோம், உடலில் ஏதோ குறை / ஊனம் உள்ளது.
4. பரீட்சையில் அதிக மார்க்குகள் கிடைக்கவில்லை, பெயில் ஆகிவிட்டோம்.
5. ரேகிங் / சக மாணவிகள் கேலி / தொந்தரவு செய்தல்.
< style=”text-align: justify;”>6. வயது கோளாறு, மாணவர்களுடன் பேசுவது, நண்பர்களாக்கிக் கொள்வது, இனிமாவுக்கு போதல் போன்றவை.</>
7. காதல் தோல்வி,
8. காதலித்து ஏமாற்றிவிடுதல் [உடலுறவு கொள்ளாத நிலை].
9. காதலித்து ஏமாற்றிவிடுதல் [உடலுறவு கொண்ட நிலை, கர்ப்பம் உண்டாதல்].
10. காதலித்து ஏமாற்றிவிடுதல் [உடலுறவு கொண்ட நிலை, கர்ப்பம் உண்டாதல், கர்ப்பம் கலைத்தல், அத்துடன் விட்டுவிடுவது].
11. உடலுறவு கொண்டு, அனுபவித்து விட்டுவிடுவது என்ற நிலை.
12. உடலுறவு கொண்டு, அனுபவித்து, படம் / வீடியோ எடுத்து பயமுறுத்துதல், தொடர்ந்து கற்பழித்தல்.
13. உடலுறவு கொண்டு, அனுபவித்து, படம் / வீடியோ எடுத்து பயமுறுத்துதல்ல் அதை வைத்து மிரட்டி பணம் சம்பாதித்தல்.
மற்ற பல காரணங்களும் இருக்கின்றன. மனோதத்துவ ரீதியில் அவை ன்னும், பலவிதங்களில் வேலை செய்து, விளைவுகளை ஏற்படுத்தும் நிலையில் இருப்பதால், பொதுவாக அவற்றை பட்டியலிட முடியாது, அலச முடியாது.

பாலியல் கொடுமைகள் எவ்வாறு ஆரம்பிக்கின்றன, நடக்கின்றன: அதே போல, இவற்றையும் கீழ்கண்டவாறு தொகுக்கலாம்:
- ஆண்களின் வக்கிரம், தீய மனப்பாங்கு: தாய்க்குப் பிறந்த ஆண்மகண் தறிகெட்டது:
- ஆண்களுக்கு பெண், பெண்ணியத்தின் மீதான மதிப்பு குறைந்தது,
- சகோதரி மற்ற பெண்-உறவுகள் இருந்தும், பெண்மையினை மதிக்காமல் இருக்கும் நிலை.
- செக்ஸுக்கு பயன்படுத்திக் கொள்ள முடியும் என்ற கேவலமான மனப்பாங்கு,
- தனது அந்தஸ்த்தைக் காட்டி மிரட்டுவது,
- இளம் வயது கோளாறை பயன்படுத்திக் கொள்வது,
- பெண்களின் பலவீனம்: இன்றைய சினிமா, ஊடகங்களின் பாதிப்பினால், இளம் பெண்கள், சீக்கிரம் செக்ஸ் சிந்தனைகளை வளர்த்துக் கொள்கிறார்கள். சக-தோழிகளின் சகவாசம் அத்தைய போக்கினால், மற்ற பெண்ளும் பாதிக்கப்படுகிறார்கள்.
- பெற்றோரின் கவனக்குறைவு, பொறுப்பில்லாமை, முதலின: பெற்றோர் இருவரும் வேலை செய்பவர்களாக இருந்தால், மகள் என்ன செய்கிறாள் என்று அறியாமல் இருக்க நிலை ஏற்படும். இது அவள் காதல் போன்ற விவகாரங்களில் னாட்டிக் கொள்ள ஏதுவாகும்.
- பொருளாதார நிலை, ஏழ்மை முதலியன: நல்ல பண வசதி கொண்டவர்கள் மற்றும் ஏழ்மை என்ற இருநிலைகளில் உள்ளவர்களும், இத்தகைய பாலியல் இவ்வகாரங்களில் மாட்டிக் கொள்கின்றனர்.
- உடலுறவு கொள்வது, அனுபவித்தல் என்ற மாயையில் சிக்குவது: வயது கோளாறு மற்றும் சினிமா மாயைகளில் சிக்கிய சில தலைதறுகள் “வாழ்க்கை அனுபவப்பதற்கே” என்ற ரீதியில் செய்ல்படுவது:
- சினிமா போன்று “பாய் பெரின்டுகளை” வைத்துக் கொள்வது.
- சினிமாவுக்கு செல்வது.
- அங்கு தொட அனுமதிப்பது, காமத்தில் வீழ்வது.
- மானம் மோனது, கற்பிழந்தது, குடும்ப கௌரவம் முதலியவை: பொதுவாக பெண்ணின் விவகாரம் தெரிந்தால் எதிர்காலம் பாதிக்கும் என்ற நிலையிலேயே, பெரும்பாலான இத்தகைய விசயங்கள், வெளிவராமல் மறைக்கவே சம்பந்தப்பட்டவர்கள் விரும்புகிறார்கள். இது பாலியல் குற்றங்கள் புரிந்தவர்களுக்கு உதவுவதாக இருக்கின்றது. சில நேரங்களில் எல்லைகளை மீறும்போது, கசிந்து வெளியே தெரியும் போது, துணிந்து புகார் கொடுக்கும் போது, விசயங்கள் தெரியவருகின்றன.

பாலியல் தொந்தரவுகள், சதாய்ப்புகள், தடுப்பது எவ்வாறு?: இங்கு சில யுக்திகள் உதாரணத்திற்காக எடுத்துக் காட்டப் படுகிறது:
- பெண்கள் தாம் எல்லா நிலைகளிலும் நேரங்களிலும், சந்தர்ப்பங்களிலும், இடங்களிலும் எச்சரிக்கையாக, விழிப்புணர்வோடு இருக்கவேண்டும்.
- பெற்றொர், நிச்சயமாக, இக்காலத்திற்கு ஏற்ற முறையில், மகளுக்கு உரியவற்றை வெட்கப்படாமல், மழுப்பாமல் விவரங்களை தற்காப்பு நிலைகளை அறிவுருத்த வேண்டும், முறைகளை சொல்லிக் கொடுக்க வேண்டும்.
- வீடு-பள்ளி-கல்லூரி-வேலை செய்யும் இடம்………என்று எங்கும் பையன்களை, ஆண்களை குறிப்பிட்ட தூரத்தில் வைக்க வேண்டும்.
- உறவுகார-நண்பர்-புதியவர் என்ற எந்த பையன்களை, ஆண்களையும் தனியாக பேசுவது, சந்திப்பது, இருப்பது, கூட செல்வது, அருகில் உட்கார்ந்து கொள்வது போன்ற நிலைகளில் கட்டுப்பாடு இருக்க வேண்டும்.
- பெற்றோர், உற்றோர், மற்றோர் முதலியவர்களை மதிக்க வேண்டும். அவர்களுக்கு தெரியாமல் எதையும் செய்யக் கூடாது.
இன்னும் பலவுள்ளன, ஆனால், எல்லாவற்றையும் இங்கு விளக்கமுடியாது.
© வேதபிரகாஷ்
03-08-2017
[1] தமிழ்.ஒன்.இந்தியா, கல்லூரி மாணவி துப்பட்டாவில் தூக்கிட்டு தற்கொலை… மரணத்திற்கு காரணம் என்ன? போலீசார் தீவிர விசாரணை, Posted By: Amudhavalli, Published: Friday, April 14, 2017, 9:50 [IST]
[2] http://tamil.oneindia.com/news/tamilnadu/college-student-commits-suicide-hanging-279760.html
[3] தினகரன், கல்லூரி மாணவி தற்கொலை, 2017-04-14@ 00:17:48
[4] http://www.dinakaran.com/latest_Detail.asp?Nid=294739
குறிச்சொற்கள்:உடலின்பம், உடலுறவு, உடல், கற்பழி, கற்பழிப்பது, கற்பழிப்பாளி, கற்பழிப்பு, கற்பு, குழந்தைகள் பாலியல் பலாத்காரம், குழந்தைகள் பாலியல் வன்முறை, சிறுவர்-சிறுமியர் பாலியல், பாலியல், பாலியல் கொடுமை, பாலியல் தொந்தரவு, பாலியல் பலாத்காரம், பாலியல் வழக்கு, வன்புணர்வு பாலியல்
அசிங்கமான குரூரங்கள், ஆடையை களைந்து போட்டோ, ஆடையை களைந்து வீடியோ, ஆபாச படம், இளமை, உல்லாசமாக இருப்பது, ஊக்குவிப்பு, ஒப்புதலுடன் உடலுறவு, ஒப்புதலுடன் செக்ஸ், கரு, கருக்கலைப்பு, கர்ப்பம், கற்பழிப்பு, கற்பு, காமத்தீ, காமப் உணர்ச்சி, காமம், குறி, குறி வைப்பது, குழந்தைகள் பாலியல் வன்முறை, கூடா உறவு, கூடா ஒழுக்கம், கொடுமை, சிறுமி, சிறுமி கற்பழிப்பு, சிறுமியிடம் சில்மிஷம், சிற்றின்பம், சில்மிசம், சில்மிஷம், பகுக்கப்படாதது இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
நவம்பர்6, 2016
தகாத உறவால் கொலையுண்ட மெத்தப் படித்த பெண் வழக்கறிஞரும், பொறுப்பற்று தன்னை விட 23 வயது அதிகமான பெண்ணுடன் உறவுவைத்து கொலைசெய்த பாதகனும்!

மகன் தனியாக குடித்தனம் நடத்தும் நிலையில், கணவனைப் பிரிந்து, வாழ்ந்த மனைவி: மேற்கு மாம்பலம் குமரன் நகரில் வசித்து வந்த லட்சுமி சுதா (58) உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்தார்[1]. கடந்த 30 ஆண்டுகளாக கணவர் பிரகாகரனைப் பிரிந்து தனியே வசித்து வந்தார். கணவன்-மனைவி உறவுமுறை தோல்வி என்று தெரிகிறது. வழக்கறிஞர் என்பதால் எல்லாம் முறைப்படி செய்திருப்பார். லட்சுமிசுதாவின் மகன் திருமணம் ஆகி பெங்களூரில் வேலை செய்து வருகிறார். வேலை மற்றும் திருமணம் ஆனால், மகன் இவ்வாறு தனியாகச் செல்வதும் இயல்பாகி விட்டது. இதனால் மேற்கு மாம்பலத்தில் லட்சுமிசுதா மட்டும் தனியாக இருந்தார். கடந்த ஐந்து ஆண்டுகளாக வேலை செய்யாமல் வீட்டிலேயே வசித்து வருகிறார். இவர் வசித்து வந்த வீட்டின் கீழ் தளத்தில் அவரது சித்தப்பா சுந்தரம் குடியிருந்தார்[2]. இவரது தங்கை வித்யா அருளின் வீடு குமரன் நகரில் உள்ளது. இங்கிருந்துதான் லட்சுமி சுதாவுக்கு அடிக்கடி உணவு கொடுத்தனுப்பப்பட்டு வந்தது[3]. வேலைக்காரி விமலா வீட்டை சுத்தம் செய்து விட்டு செல்வது வழக்கம்[4]. வசதி இருந்ததால், இவர் இப்படி வாழ்ந்தார், இல்லையென்றால், அதற்கும் வழியில்லாமல் போயிருக்கும்.

தங்கை தொடர்பு கொண்டபோது பதில் இல்லாததால், நேரில் வந்து பார்த்த போது கொலௌண்ட நிலையில் கிடந்த அக்காள்: விமலா திங்கட்கிழமை 31-10-2016 அன்று வந்து வேலை செய்து விட்டுச் சென்றாள். மறுபடியும் 02-11-2016 உதன்கிழமை அன்று வேலைக்கு வந்த போது, கதவு சாத்தப்பட்டிருந்தது. இதனால், விமலா வித்யாவுக்கு அறிவித்தாள். லட்சுமி சுதாவை அவரது தங்கை செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. நேற்று காலை போன் செய்தபோதும் லட்சுமி சுதா போனை எடுக்க வில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது தங்கை, நேற்று மாலையில் லட்சுமி சுதாவின் வீட்டுக்கு நேரில் வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டப்படாமல் லேசாக சாத்தப்பட்டு இருந்தது. கதவை திறந்து உள்ளே சென்றபோது, ஹாலில் ரத்த வெள்ளத்தில் லட்சுமி சுதா இறந்து கிடந்தார். அவரது உடலில் 13 இடங்களில் கத்திக் குத்து இருந்தது. தங்கையின் அலறல் சத்தத்தை கேட்டு அருகே இருந்தவர்கள் கூடினர், என்று தமிழ்.இந்து விவரித்துள்ளது[5]. லட்சுமி சுதாவின் வீட்டில் பீரோவில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்துள்ளன. கொள்ளைக் காக இந்த கொலை நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணங்களுக்காக கொலை செய்யப்பட்டாரா என்பதை விசா ரிக்க 3 தனிப்படைகள் அமைக் கப்பட்டுள்ளன.

மற்ற நாளிதழ்கள் இதே கதையை வேறுவிதமாகக் கூறுவது: இந்நிலையில் 02-11-2016 அன்று காலை அவரது உறவினர், லட்சுமி சுதாவை காண வீட்டிற்கு வந்தபோது துர்நாற்றம் வீசியதால், காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்து இருக்கிறார்[6]. 2 நாட்களுக்கு முன்னரே அவர் கொலை செய்ய பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர். லட்சுமிசுதாவுக்கு நன்கு அறிமுகமான தெரிந்த நபரே அவரை கொலை செய்திருக்க வேண்டும் என்றும் போலீசார் கருதினர். இதுதொடர்பாக அக்கம் பக்கத்தில் விசாரித்தனர். லட்சுமிசுதாவின் வீட்டிற்கு தண்ணீர் கேன் சப்ளை செய்யும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. 2 நாட்களுக்கு முன்பு லட்சுமி சுதாவை பார்ப்பதற்காக பெண் ஒருவர் வந்து சென்றதும் தெரியவந்தது. அவரிடமும் போலீசார் விசாரித்தனர். அப்போது கடந்த 31-ந்தேதி லட்சுமிசுதாவுடன் வாலிபர் ஒருவர் வீட்டில் அமர்ந்து நீண்ட நேரமாக பேசியது தெரிய வந்தது. அவர் யார் என்பது பற்றி போலீசார் விசாரித்தனர்[7]. அப்போது அவரது பெயர் கார்த்திக் (35) என்பது தெரிய வந்தது. அவர்தான் கொலையாளி யாக இருக்க வேண்டும் என்கிற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டது[8]. இதில் துப்பு துலங்கியது. கடந்த 31-ந்தேதி அன்று லட்சுமிசுதாவின் வீட்டிற்கு வந்து சென்ற கார்த்திக் அவரை கொலை செய்து விட்டு தப்பி சென்றது தெரிய வந்தது. இது தொடர்பாக குமரன் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், வழக்கறிஞர் லட்சுமியின் காதலன் என கூறப்படும், கார்த்திக் நொளம்பூரில் அவர் மனைவி, குழந்தையு டன் வசித்து வந்தார். தேடி சென்ற போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்[9].

இன்சூரன்ஸ் நிறுவனத்தில் 23 வயது வித்தியாசம் பிறந்த தகாத காதல்: போலீஸ் விசாரணையில் வக்கீல் லட்சுமிசுதாவிற்கும் வாலிபர் கார்த்திக்குக்கும் கள்ளக்காதல் இருந்தது தெரியவந்தது[10]. தனியார் இன்சூரன்ஸ் நிறுவனம் ஒன்றில் கார்த்திக் பணி புரிந்து வந்தார். அதே நிறுவனத்தில் லட்சுமிசுதா சட்ட ஆலோசகராக இருந்தார். அப்போதுதான் இருவரும் நெருங்கி பழகி உள்ளனர். 23 வயது வித்தியாசம் என்பதையும் மறந்து இருவரும் காதலிக்க தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் கார்த்திக்கு திருமணம் நடைபெற்றது. தற்போது ஒரு குழந்தையும் உள்ளது. திருமணத்திற்கு பின்னர் கார்த்திக் வக்கீல் லட்சுமி சுதாவை சந்திப்பதை தவிர்த்து வந்துள்ளார். அவருடன் அதிகமாக பழகுவதையும் நிறுத்தி உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த லட்சுமி சுதா அடிக்கடி கார்த்திக்குடன் சண்டை போட்டுள்ளார்.

31-10-2016 அன்று நடந்த சண்டை கொலையில் முடிந்தது: இந்த தகராறு இருவருக்கும் இடையே சமீப காலமாக முற்றியது. கடந்த 31-ந்தேதி அன்று இதுதொடர்பாக பேசுவதற்காகவே கார்த்திக் லட்சுமிசுதா வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது இருவருக்குமிடையே இது தொடர்பாக கடும் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. திருமணத்திற்கு பின்னர் நீ விலகி செல்வதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்று லட்சுமிசுதா கூறி இருக்கிறார்[11]. இதுதொடர்பாக ஏற்பட்ட தகராறே கொலையில் முடிந்துள்ளது[12]. லட்சுமிசுதாவின் செயலால் ஆத்திரம் அடைந்த கார்த்திக் அவரை கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்து விட்டு தப்பி சென்றார். அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் துப்பு துலக்கி கார்த்திக்கை கைது செய்தனர். இதுதொடர்பாக கார்த்திக் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித் துள்ளார். அதில் திருமண மான பின்னரும் லட்சுமி சுதா எப்போதும் போல பழகுமாறு கூறினார். ஆனால் என்னால் முடிய வில்லை. இதுதொடர்பாக எங்களுக்குள் ஏற்பட்ட தகராறே கொலையில் முடிந்தது என்றும் கார்த்திக் கூறியுள்ளார்.
© வேதபிரகாஷ்
06-11-2016

[1] தினகரன், சென்னை மேற்கு மாம்பலத்தில் பெண் வழக்கறிஞர் வெட்டிக் கொலை, Date: 2016-11-02 19:44:08
[2] Indian Express, Home-alone lawyer found dead at Mambalam, By Express News Service | Published: 03rd November 2016 04:23 AM | Last Updated: 03rd November 2016 04:23 AM .
[3] தமிழ்.இந்து, சென்னை மேற்கு மாம்பலத்தில் தனியாக வசித்த பெண் வழக்கறிஞர் படுகொலை, Published: November 3, 2016 10:00 ISTUpdated: November 3, 2016 10:00 IST
[4] http://www.newindianexpress.com/cities/chennai/2016/nov/03/home-alone-lawyer-found-dead-at-mambalam-1534451.html
[5]http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88/article9298878.ece
[6] நியூஸ்7.தமிழ், மேற்கு மாம்பலம் பெண் வழக்கறிஞர் கொலை வழக்கில் அவரது காதலன் கைது!, November 04, 2016.
[7] http://www.dinakaran.com/Latest_Detail.asp?Nid=256100
[8] தமிழ்.ஒன்.இந்தியா, சென்னையில் பயங்கரம்.. வீட்டில் தனியாக இருந்த பெண் வக்கீல் வெட்டிக் கொலை, By: Karthikeyan, Updated: Wednesday, November 2, 2016, 21:14 [IST]
[9] http://ns7.tv/ta/lover-arrested-female-advocate-murder-case.html
[10] http://tamil.oneindia.com/news/tamilnadu/lawyor-murdered-chennai-266244.html
[11] தினத்தந்தி, 58 வயது பெண் வக்கீல் கொலையில் 35 வயது கள்ளக்காதலன் கைது, பதிவு செய்த நாள்: வெள்ளி, நவம்பர் 04,2016, 3:10 PM IST; மாற்றம் செய்த நாள்: வெள்ளி, நவம்பர் 04,2016, 3:10 PM IST.
[12] http://www.dailythanthi.com/News/State/2016/11/04151002/58year-old-women-Lawyer-murder–Arrested-35year-old.vpf
குறிச்சொற்கள்:இணைப்பு, உடலின்பம், உடலுறவு, கணவன், கள்ளக்காதலி, கள்ளக்காதல், கள்ளத்தொடர்பு, காதல், காமம், கூடா உறவு, கூடா ஒழுக்கம், கொக்கோகம், சமூகம், ஜாலி, பெண், பெண் வக்கீல், பெண் வழக்கறிஞர், மனைவி, லக்ஷ்மி சுதா, லட்சுமி சுதா, வக்கீல், வழக்கறிஞர், வீடு
அக்காள், அசிங்கம், அந்தரங்கம், ஆபாசம், உடலின்பம், உடலுறவு, உணர்ச்சி, உணர்ச்சியை தூண்டி, உறவு, உல்லாசமாக இருப்பது, உல்லாசம், ஒப்புதலுடன் உடலுறவு, ஒப்புதலுடன் செக்ஸ், கணவனை இழந்த மனைவி, கணவனை ஏமாற்றும் மனைவி, கண்டித்தும் திருந்தவில்லை, கன்னித்தன்மை, கல்யாணம், காமக்கிழத்தி, காமக்கொடூரன், காமத்தீ, காமப் உணர்ச்சி, காமம், காமலீலைகள், கூடா உறவு, சபலம், சிற்றின்பம், சீரழிவு, செக்ஸ், செக்ஸ் டார்ச்சர், செக்ஸ் தூண்டி, செக்ஸ் விளையாட்டு, செக்ஸ்-குற்றங்கள், தகாத உறவு, தாலி, பத்தினி, பாலியல், பெண், லக்ஷ்மி சுதா, லட்சுமி சுதா இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
செப்ரெம்பர்20, 2016
கோவையில் கூடா நட்பு, இன்னொரு ஒருதலை காதல், பள்ளி மாணவி தற்கொலையில் முடிந்துள்ளது!

மறுபடியும் கோவையில் பள்ளி–மாணவி காதல், கலாட்டா, கொலை: தன்னை காதலிக்காவிட்டால் குடும்பத்தையே கொலை செய்துவிடுவேன் என்று ஆட்டோ டிரைவர் மிரட்டியதால் 10ம் வகுப்பு மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஒருதலைக்காதல் பலி நீடிப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கோவை புதுசித்தாபுதூர் அருகேயுள்ள ஜவகர் நகரை சேர்ந்தவர் ஶ்ரீதர், ஒரு ஒர்க்ஷாப் தொழிலாளி. இவரது மகள் அட்சயா (15). இவர், கோவையில் சாய்பாபா காலனியில் உள்ள அளகேசன் சாலையில் உள்ள ஒரு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார்[1]. புது சித்தாபுதூரில் உள்ள அண்ணாநகரை சேர்ந்தவர் தேவராஜ் (வயது-55). இவருடைய மகன் பிரபு சாம்ராஜ் (வயது-22). இவர் அட்சயாவிடம் நட்பாக பழகியுள்ளார்[2]. அட்சயாவும் அவருடன் பேசியுள்ளதாக தெரிகிறது. பிறகு காதலித்தும் உள்ளது தெரிகிறது. பள்ளியில் படிக்கும் போதே, இத்தகைய காதல்-கத்தரிக்காய் தான் விபரீதத்தில் முடிகிறது.

திருமண ஆசை காட்டி அந்த மாணவியை கடத்திச்சென்றது (ஏப்ரல்.2016): இதற்கிடையே, கடந்த ஏப்ரல் மாதத்தில் அவர்கள் இருவரும் திடீரென்று மாயமானார்கள்[3]. இதுவே தவறான போக்கு மட்டுமல்ல, பிஞ்சியிலே பழுத்து, காதலுக்கும், காமத்திற்கும் இத்தியாசம் தெரியாமல் தறிகெட்ட நிலையும் தெரிகிறது. இதுகுறித்து அந்த மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் பந்தையச் சாலை காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி, அவர்கள் இருவரையும் பிடித்தனர்[4]. அப்போது பிரபு சாம்ராஜ் திருமண ஆசை காட்டி அந்த மாணவியை கடத்திச்சென்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, இருவருக்கும், உளவியல் நிபுணர்கள் மூலம் ஆலோசனைகள் வழங்கப்பட்டது[5]. பின்னர், இருதரப்பு பெற்றோரும் பேசி பிரச்சினையை தீர்த்துக்கொள்கிறோம் என்று கூறியதை தொடர்ந்து போலீசார் பிரபு சாம்ராஜை எச்சரிக்கை செய்து அனுப்பிவைத்தனர்[6]. அந்த மாணவியும், பிரபு சாம்ராஜை இனிமேல் காதலிக்கமாட்டேன் என்றும், படிப்புதான் முக்கியம் என்பதால் தொடர்ந்து படிக்க உள்ளதாகவும் தனது பெற்றோரிடம் தெரிவித்தார்.

மறுபடியும் காதல் தொல்லை, பேச்சு வார்த்தை, சமரசம்: ஆரம்பத்தில் கோட்டை விட்ட பெற்றோர் பிறகு, பின்னால் சென்று பெண்ணை பாதுகாத்துள்ளனர். அதைத் தொடர்ந்து அந்த மாணவி பள்ளிக்கு செல்லும்போதும், பள்ளி முடிந்து வீட்டுக்கு திரும்பும்போதும் மாணவியின் பெற்றோர் உடன் சென்று வந்தனர். எப்படி செய்வதை விட முன்னரே, பெண்ணுக்கு, எது நல்லது, எது கெட்டது என்று சொல்லிக் கொடுத்திருக்கலாம். இருந்தபோதிலும் அடிக்கடி பிரபு சாம்ராஜ், அந்த மாணவியிடம் சென்று தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவி தனது பெற்றோரிடம் கூறி அழுதார். இதையடுத்து இருதரப்பு பெற்றோரும் கூடி பேசினார்கள். அப்போது இனிமேல் எங்கள் மகன் உங்கள் மகளை தொந்தரவு செய்ய மாட்டார் என்று பிரபு சாம்ராஜின் பெற்றோர் உறுதியளித்ததை தொடர்ந்து மாணவியின் பெற்றோர் போலீசில் புகார் செய்யாமல் விட்டுவிட்டனர். அந்த மாணவியும் வழக்கம்போல பள்ளிக்கு சென்று படித்து வந்தார்.

மறுபடியும் காதல் தொல்லை, கொலை மிரட்டல்: இந்நிலையில், மறுபடியும் பிரபு அவரை காதலிப்பதாக கூறியுள்ளார். இதை அட்சயா ஏற்கவில்லை. “நான் படிக்கவேண்டும், காதலிக்க விருப்பமில்லை, இனி என்னுடன் பேசவேண்டாம், இனி நான் உங்களிடம் பேசமாட்டேன்,” எனக்கூறி விட்டார். ஆனால், பிரபு அவரை விடுவதாக இல்லை. அட்சயா பள்ளிக்கு செல்லும்போது அடிக்கடி பின்தொடர்ந்து சென்று, பேச்சு கொடுத்து தன்னை காதலிக்கும்படி வற்புறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அட்சயா தனது தெரிவித்துள்ளார். பெற்றோர், பிரபுவை அழைத்து கண்டித்துள்ளனர். ஆனால், பிரபு இதைப்பற்றி கவலைப்படாமல், 18-09-2016 ஞாயிறு அன்று மற்றும் முன்தினம் பள்ளிக்கு சென்ற அட்சயாவை வழி மறித்து, “என்னை காதலிக்காவிட்டால் நிம்மதியாக வாழவிடமாட்டேன், என்னை ஏமாற்றினால் உன்னையும், உன் குடும்பத்தினரையும் கொலைசெய்து விடுவேன், நான் யாருக்கும் பயப்படமாட்டேன்,” என மிரட்டியுள்ளார்[7]. இதெல்லாமே, ராம்குமார் பாணியில் செல்வது போலுள்ளது. ஊடகங்களில் செய்திகள் வந்தாலும், நல்வழியில் செல்வதற்கு விரும்பாத இளைஞர்கள் உருவாகியிருப்பது கவலையளிப்பதாக உள்ளது.

உடனடியாக தற்கொலை செய்து கொண்டதும் திகைப்பாக இருக்கிறது: “என்னை காதலிக்காவிட்டால் நிம்மதியாக வாழவிடமாட்டேன், என்னை ஏமாற்றினால் உன்னையும், உன் குடும்பத்தினரையும் கொலைசெய்து விடுவேன், நான் யாருக்கும் பயப்படமாட்டேன்,” என மிரட்டியதும்[8], மனம் உடைந்த அட்சயா, தனது வீட்டிற்கு சென்று, தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்[9] என்பதும் திகைப்பாக உள்ளது. கடைக்கு காய்கறி வாங்கச் சென்ற தங்கை, இறந்து கிடக்கும் அட்சயாவைப் பார்த்து கத்தியுள்ளாள்[10]. இதிலிருந்தே தந்தை-தாய் வீட்டில் இருப்பதில்லை என்பது தெரிகிறது. வந்து பார்த்த அண்டை வீட்டார், விசயம் அறிந்து போலீசாரிடம் புகார் கொடுத்தனர்[11]. இதையடுத்து தற்கொலைக்கு தூண்டியதாக ரேஸ்கோர்ஸ் போலீசார் இந்திய குற்றவியல் சட்டம் பிரிவு 306 – தற்கொலை செய்யத் தூண்டுதல் வழக்கு பதிந்து ஆட்டோ டிரைவர் பிரபுவை கைது செய்தனர்[12]. பின்னர் அவரை போலீசார் கோவை நான்காம் எண் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை நடுவன் சிறையில் அடைத்தனர். 19-09-2016, திங்கட்கிழமை கோயம்புத்தூர் மருத்துவமனை தடவியல் நிபுணர்கள் உடலை போஸ்ட்மார்ட்டம் செய்து சோதித்தனர். ஒருதலைக்காதல் பலி நீடிப்பது பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

girl-student-commit-suicide-18-09-2016-dt-vedaprakash
- பெண்ணின் பெற்றோர் இருவரும் வீட்டில் இல்லாத நிலை.
- மாணவி பள்ளிக்குச் சென்று வரும் வேளையில் வலைவீசிய ஆட்டோ டிரைவர்.
- மாட்டிக் கொண்ட வயது கோளாறு 15-வயது மாணவி.
- மிரட்டி சாதிக்க நினைக்கும் வக்கிர மனிதன்.
- அளவு மீறிய உறவு, சாவில் முடிந்துள்ள நிலை.
- பெற்றோர் கவனம் இல்லையெனில், மகள்கள் சீரழியும் நிலை.
- காத்துக் கிடக்கும் காமக்கொலை வெறியர்கள்.
- மாறுவார்களா, மாற்றப்படுவார்களா, யார் மாற்றப் போகிறார்கள்?
- நல்ல வேளை, இதில் ஜாதி-மதம் பிரச்சினை இல்லை போலும்!
- இருப்பினும், போன உயிர், திரும்பியா வரும்???
© வேதபிரகாஷ்
20-09-2016
[1] தினமலர், காதல் ‘டார்ச்சரில்‘ மாணவி தற்கொலை, பதிவு செய்த நாள். செப்டம்பர்.9, 2016.
[2] http://www.dinamalar.com/news_detail.asp?id=1610325
[3] பெற்ேறாரிடம் நக்கீரன், காதல் தொல்லை; 10–ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை; ஆட்டோ ஓட்டுனர் கைது, பதிவு செய்த நாள் : 20, செப்டம்பர் 2016 (10:27 IST);மாற்றம் செய்த நாள் :20, செப்டம்பர் 2016 (10:34 IST)
[4] http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=173575
[5] தினத்தந்தி, கோவையில் பரிதாபம்: காதலிக்க வற்புறுத்தியதால் பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை; ஆட்டோ டிரைவர் கைது, பதிவு செய்த நாள்: செவ்வாய், செப்டம்பர் 20,2016, 1:45 AM IST; மாற்றம் செய்த நாள்: செவ்வாய், செப்டம்பர் 20,2016, 1:45 AM IST
[6] http://www.dailythanthi.com/News/State/2016/09/20014557/Coimbatore-awful-love-tukkuppottu-school-student-forced.vpf
[7] தினகரன், ஒருதலைக்காதலுக்கு அடுத்த பலி காதலிக்கும்படி மிரட்டல் மாணவி தற்கொலை, Date: 2016-09-20@ 00:21:06
[8] தினகரன், ஒருதலைக்காதலுக்கு அடுத்த பலி காதலிக்கும்படி மிரட்டல் மாணவி தற்கொலை, Date: 2016-09-20@ 00:21:06
[9] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=246690
[10] The Times of India, Tortured by stalker, teenage girl hangs herself at home, TNN | Sep 20, 2016, 08.33 AM IST.
[11] http://timesofindia.indiatimes.com/city/coimbatore/Tortured-by-stalker-teenage-girl-hangs-herself-at-home/articleshow/54419079.cms
[12] After the preliminary investigation, police arrested Prabhu and booked him under Section 306 (abetment of suicide) of the Indian Penal Code (IPC). Later, Prabhu was remanded in to judicial custody. The forensic experts of the Coimbatore Medical College and Hospital (CMCH) conducted postmortem on Monday afternoon.
குறிச்சொற்கள்:அச்சம், உடலுறவு, ஐங்குணங்கள், கலாச்சாரம், காமம், கொலை, சமூகச் சீரழிவுகள், சீரழிவுகள், செக்ஸ், தமிழ் கலாச்சாரம், தமிழ் பண்பாடு, நாகரிகம், நாணம், பயிர்ப்பு, பெண்கள் கவனமாக இருக்கவேண்டிய அவசியம், பெண்மை, மாணவிகள்
18 வயது நிரம்பாத பெண், அச்சம், அடங்கி நடப்பது, இச்சை, இணக்கத்துடன் செக்ஸ், இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள், இன்பம், இருபாலர், இலக்கு, இளமை, உடலின்பம், உடல், ஒப்புதலுடன் செக்ஸ், ஒருதலை, ஒருதலை காதல், ஒருதலைகாதல், ஒழுக்கம், கன்னி, கன்னித்தன்மை, கலாச்சாரம், கல்யாணம், காதலன், காதலி, காதல், காமக்கொடூரன், காமத்தீ, காமப் உணர்ச்சி, காமம், காமலீலைகள், காமுகன், குறி வைப்பது, கூடா உறவு, கூடா ஒழுக்கம், கொக்கோகம், கொங்கை, கோளாறு, சபலம், சமரசம், சிறுமி, சிறுமியிடம் சில்மிஷம், சில்மிசம், சில்மிஷம், சீரழிவு, செக்ஸ், பகுக்கப்படாதது இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
ஓகஸ்ட்12, 2016
மறுபடியும் பேஸ்புக் காதல், ஜாலியாக சுற்றுதல், சினிமா பார்த்தல், தொட்டுக் கொள்வது, கட்டித்தழுவுதல் – கற்பழிப்பில் முடிந்த சோகக்கதை!
மோசடி காதலில் சீரழிந்தது கேத்தரின் மார்க்ரெட் சிம்சன் அல்லது திவ்யா?: தூத்துக்குடியில் பாலியல் பலாத்காரம் செய்து ஏமாற்றிய பேஸ்புக் காதலனை பிடிக்க தன்னை வாலிபர் காரில் கடத்தி பலாத்காரம் செய்ததாக நாடகமாடிய கல்லூரி மாணவியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பார்க் ரோட், ராமன்புதூரைச் சேர்ந்தவர் சார்லஸ் சிம்சன், இவரது மகள் கேத்தரின் மார்க்ரெட் சிம்சன் 21 வயது இளம்பெண் தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் கல்லூரி விடுதியில் தங்கியிருந்து பிஎஸ்சி 3ம் ஆண்டு நியூட்ரிஷியன் சயின்ஸ் பயின்று வருகிறார். நாகர்கோவில் ராஜாவூரை சேர்ந்த ஜோ (26), திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகேயுள்ள வி.வி., இன்ஜி., கல்லூரியில் டெக்னீஷயனாக பணியாற்றி வருகிறார். அப்பெண்ணின் பெயர் திவ்யா என்று “தமிழ்.ஒன்.இந்தியா” இணைதளம் குறிப்பிட்டுள்ளது[1]. ஆக, இது மோசடி-காதல் என்றாலும், கிருத்துவ-கிருத்துவ லவ்-லடாயா அல்லது கிருத்துவ-இந்து லவ்-குரூஸேடா என்று தெரியவில்லை. ஒருவேளை கற்பழிப்பில், பெண்ணின் பெயரைப் போடக் கூடாது என்பதால், இவ்வாறு குறிப்பிட்டிருக்கலாம்.
மூன்று மாத பேஸ்புக் காதல் ஒரு இளம்பெண்ணை தொடும் அளவிற்கு போயிருக்க முடியுமா?: பேஸ்புக்கில் மூன்று மாதத்திற்கு மே மாதத்தில் முன்பாக பழக்கம் ஏற்பட்டுள்ளது[2]. இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந் நிலையில் விடுமுறைக்காக வீடு சென்ற கேத்தரின் கடந்த 8 ம் தேதி தூத்துக்குடி கல்லூரிக்கு வருகை தந்தார். அப்போது அவருடன் பஸ்சில் ஜோவும் பயணம் செய்துள்ளார். தூத்துக்குடிக்கு வந்த இவர்கள் அங்குள்ள ராஜ் தியேட்டரில் பகல் ஷோ சினிமா பார்க்க சென்றனர். அங்கு பால்கனியில் வேறு யாரும் இல்லாததால் கேத்தரினும், ஜோவும் எல்லை மீறி உல்லாசம் அனுபவித்தனர். இதில் கேத்திரினுக்கு ரத்த போக்கு ஏற்பட்டது. காதலன் ஜோ அவரை திருமணம் செய்து கொள்வதாக தெரிவித்தார். ஆனால் வீட்டில் காரில் வந்த மர்ம நபர்கள் இருவர் கடத்தி சென்று கற்பழித்ததாக பொய் சொல்லும்படி தெரிவித்தார். இதன் படியே கேத்ரினும் வீட்டில் பொய் சொல்லியுள்ளார்[3]. இந் நிலையில் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் கேத்ரின் சேர்க்கப்பட்டார். இயல்பாக பெண்களுக்கு, ஆண்கள் தம்மிடம் கெட்ட எண்ணத்தோடு பழகுகிறார்கள் என்றால், உள்ளுணர்வு எச்சரிக்கும் என்பார்கள். அப்படியிருக்கும் போது, இப்பெண் எப்படி அந்த அளவிற்கு இடம் கொடுத்தாள், தொட அனுமதித்தாள் என்பது புரியவில்லை.
மயக்க ஸ்பிரே அடித்து ஒருவர் காரில் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து விட்டார் – என்று எந்த பெண்ணாவது கூறுவாரா?: கடந்த 8ம் தேதி காலை 5.15 மணிக்கு வீட்டில் இருந்து புறப்பட்டு தூத்துக்குடிக்கு வந்துள்ளார். மறுநாளே வீட்டுக்கு திரும்பிய அந்த மாணவி, காலை 7.15க்கு தூத்துக்குடியில் உள்ள கல்லூரி அருகே நான் நடந்து சென்ற போது, என் முகத்தில் மயக்க ஸ்பிரே அடித்து ஒருவர் காரில் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து விட்டார். மயக்கம் தெளிந்து நான் கதறியதும் என்னை மிரட்டி பழைய பஸ் நிலையத்தில் விட்டு சென்று விட்டார் என்று பெற்றோரிடம் கதறியபடி கூறினார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக அவரை நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பின்னர் தூத்துக்குடி போலீசாருக்கு போனில் தகவல் தெரிவித்துள்ளனர். “மயக்கம் தெளிந்து நான் கதறியதும் என்னை மிரட்டி பழைய பஸ் நிலையத்தில் விட்டு சென்று விட்டார்”, என்பது வியப்பாக உள்ளது. சோதனையில் அவள் கற்பழிக்கப்பட்டது தெரியவந்தது.
போலீஸ் விசாரணையில் பெண்ணின் நாடகம் வெளிப்பட்டது: 8ம் தேதி அதிகாலை 5.15 மணிக்கு நாகர்கோவிலிலிருந்து பஸ்சில் புறப்பட்ட அந்த மாணவி 7.15 மணிக்கு தூத்துக்குடி வந்து சேர்ந்து விட்டதாக கூறியதும், மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் இளம்பெண்ணை மயக்க ஸ்பிரே அடித்து காரில் கடத்தி செல்வது இயலாத காரியம் என்பதாலும் சந்தேகம் அடைந்த போலீசார் துரித விசாரணையில் இறங்கினர். தூத்துக்குடியில் இருந்து சென்ற ஒரு பெண் எஸ்ஐ, நாகர்கோவில் உள்ள ஒரு பெண் டிஎஸ்பி ஆகியோர் மருத்துவமனையில் இருந்த அந்த இளம்பெண்ணிடம் துருவித்துருவி விசாரணை நடத்தினர். இதில் அவர் கடத்தப்பட்டதாக சொன்ன சம்பவம் பொய் என தெரியவந்தது[4]. இருப்பினும், இவ்வாறு பொய் சொல்வது, அந்த காதலனைக் காப்பாற்றவா, அவனது அடையாளங்களை மறைக்கவா, தான் கற்பழிக்கப்பட்டிருந்தாலும், உண்மையினை மறைக்கவா என்று நினைக்கும் போது திகைப்பாக இருக்கிறது!
மாணவி கற்பழிக்கப்பட்டது எப்படி?: விசாரணையில், அந்த பெண்ணும் திசையன்விளையில் உள்ள தனியார் கல்லூரி ஊழியரான ராஜாவூரை சேர்ந்த ஜோ (26) என்பவரும் காதலித்துள்ளனர். கடந்த 8ம் தேதி வீட்டில் இருந்து புறப்பட்டு வந்த இளம்பெண்ணுடன் பாளையங்கோட்டையில் காத்திருந்த ஜோவும் சேர்ந்து தூத்துக்குடி வந்துள்ளார். அங்கு கல்லூரிக்கு செல்லாமல் இருவரும் ஓட்டல், ஷாப்பிங் மால் உள்ளிட்ட இடங்களுக்கு சென்றுள்ளனர். இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உறுதியளித்த ஜோ, தூத்துக்குடி டவுனில் உள்ள ஒரு தியேட்டருக்கு அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். “ஜோ, மாணவியை அழைத்துக் கொண்டு பால்கனிக்கு சென்றார். பால்கனியில் காதலர்களை தவிர வேறு யாரும் இல்லை. இதனால் மாணவியுடன் தனிமையில் அமர்ந்து சினிமா பார்த்துக் கொண்டிருந்த ஜோ ஒரு கட்டத்தில் எல்லை மீறினார். பின்னர் ஆசை வார்த்தை கூறி அந்த மாணவியை கற்பழித்ததாக தெரிகிறது”, என்று தினத்தந்தி விளக்குககிறது[5]. இதையடுத்து அந்த மாணவியை பழைய பஸ் நிலையத்தில் விட்டு விட்டு சற்று நேரத்தில் வருவதாக கூறிச் சென்ற ஜோ நீண்ட நேரமாகியும் வரவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த இளம்பெண், விட்டுச் சென்ற காதலனை பிடிப்பதற்காக தன்னை ஒருவர் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக பெற்றோரிடம் புகார் தெரிவித்துள்ளதும் தெரியவந்தது. இதனையடுத்து தூத்துக்குடி மத்தியபாகம் போலீசார் வழக்குபதிவு செய்து தலைமறைவான ஜோவை தேடி வருகின்றனர்[6].
2 / 3 மாதத்துக்கு முன் பேஸ்புக்கில் அறிமுகம் – காதல் கத்தரிக்காய், கற்பழிப்பு: பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவிக்கு, ஜோ கடந்த 2 / 3 மாதத்திற்கு முன்னர் தான் பேஸ்புக் மூலம் அறிமுகமாகியுள்ளார். அதன் பின்னர் இருவரும் செல்போன் எண்களை பரிமாறிக்கொண்டு தங்கள் காதலை வளர்த்துள்ளனர். குறைந்த நாட்களிலேயே பக்காவாக பிளான் செய்த ஜோ, அவரை வலையில் வீழ்த்தி விட்டு தூத்துக்குடி பழைய பஸ் நிலையத்தில் தவிக்க விட்டு கம்பி நீட்டியுள்ளார் என போலீசார் தெரிவித்தனர்[7]. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அம்மாணவி, காதலனை பிடிப்பதற்காக கடத்தல் நாடகம் ஆடியது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது[8]. பேஸ்புக்கில் பழக்கம், காதல் எனும்போது, பேஸ்புக்கில் பகிர்ந்து கொண்ட விசயங்கள், புகைப்படங்கள் முதலியவற்றிலிருந்தே அந்த ஜோவைப் பிடித்து விடலாம். ஆனால், ஒரு மாணவி இவ்வாறு சீரழிந்தது மிக்க வருத்தத்திற்குரிய விசயமாகும். 21 வயதாகியும் காதல்-காமம் என்ற விசயங்களில் ஒரு பெண்ணிற்கு வித்தியாசம் தெரியவில்லை, பெண்ணின் உணர்ச்சிகள் எச்சரிக்கவில்லை, அச்சம்-மனம்-நாணம்-பயிர்ப்பு முதலியவை எடுத்துக் காட்டவில்லை, இதனால், கற்பிழந்தாள் என்ற நம்ப முடியவில்லை. பெண்மைக்கு கற்பு தான் பெரிய அணிகலன், அதனை இழக்கக்கூடாது என்றெல்லாம் சொல்லவேண்டிய நிலைக்கு வந்து விட்டதா என்று நினைக்கும் போது திகைப்பாக இருக்கிறது. அந்த ஆணும் அவ்வாறு செய்திருக்கிறான் என்றால், அவனது வளர்ப்பு நிலை எப்படியுள்ளது என்பதும் கேள்விக்குரியதாக உள்ளது. அவனது பெற்றோர் வளர்ப்பு முறையும் சரியில்லை என்றாகிறது.

circa 1945: **NOT TO BE USED FOR POSTCARDS** Two lovers at the Palace Theatre kissing in the front row. Taken with infrared negative. (Photo by Weegee(Arthur Fellig)/International Center of Photography/Getty Images)
சினிமா மாடலில் கொச்சையான தலைப்புகள்-செய்திகள் – காட்டுவன யாது?: “பலாத்காரம் செய்து கழற்றி விட்ட காதலன்… கடத்தல் டிராமா போட்ட காதலி.. தூத்துக்குடி அருகே பரபரப்பு”, என்றும்[9], “பேஸ்புக்’ மூலம் அரும்பிய காதல்: தியேட்டர் பால்கனியில் வைத்து கல்லூரி மாணவியை கற்பழித்த வாலிபர் சினிமா பார்க்க வேறு ஆட்கள் இல்லாததால் எல்லை மீறினார்” போன்ற[10] தலைப்புகளில் வந்துள்ள செய்திகள், சமூக பிரஞையே இல்லாமல், வெளியிட்டுள்ளது தெரிகிறது. குஷ்பு போன்ற நடிகைகள் திருமணத்திற்கு முன்பாக பெண்களிடம் கற்பு இருப்பது என்பது எதிர்பார்க்க முடியாது என்றெல்லாம் பேசியிருப்பது கவனிக்கத் தக்கது. பல நடிகைகள் ஐந்து-ஆறு திருமணங்கள் செய்து கொண்டு, மகன் – மகள்களைப் பெற்றுக் கொண்டு, உறவுமுறைகள் தடுமாறும் அளவுக்கு சீரழித்துள்ள செய்திகளும் வெளிவந்துள்ளன. கமல்ஹஸன் போன்றவர்களோ, குடும்பம், மனைவி, மகள்கள் போன்ற உறவுகளையே கேவலப்படுத்தியிருப்பது தெரிந்த விசயமே. இவர்கள் எல்லோரும், சமூகப் பிரச்சினைகளுக்கு அறிவுரை கூறிக்கொண்டிருப்பதால், அவர்களது ஒழுக்கம், யோக்கியதை முதலியவற்றைப் பற்றி குறிப்பிட வேண்டியதாகிறது.
© வேதபிரகாஷ்
12-08-2016
[1] தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், திவ்யாவிடம் விசாரணை நடத்தினர். அப்போது திவ்யாவின் வாக்குமூலத்தில் அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
http://tamil.oneindia.com/news/tamilnadu/girl-files-complaint-against-lover-260042.html
[2] தினமலர், காதலன் ஏமாற்றி உல்லாசம்: பலாத்காரம் செய்ததாக கல்லூரி மாணவி புகார் * விசாரணையில் நாடகம் அம்பலம், ஆகஸ்ட்.11, 2016: 04.15.
[3] http://www.dinamalar.com/news_detail.asp?id=1583322
[4] தினகரன், தூத்துக்குடியில் பரபரப்பு ஏமாற்றிய பேஸ்புக் காதலனை பிடிக்க பலாத்கார நாடகமாடிய மாணவி, Date: 2016-08-11@ 00:56:23
[5] தினத்தந்தி, ‘பேஸ்புக்’ மூலம் அரும்பிய காதல்: தியேட்டர் பால்கனியில் வைத்து கல்லூரி மாணவியை கற்பழித்த வாலிபர் சினிமா பார்க்க வேறு ஆட்கள் இல்லாததால் எல்லை மீறினார், பதிவு செய்த நாள்: வியாழன் , ஆகஸ்ட் 11,2016, 7:45; PM IST மாற்றம் செய்த நாள்: வெள்ளி, ஆகஸ்ட் 12,2016, 1:30 AM IST;
[6] http://www.dinakaran.com/News_detail.asp?Nid=238015
[7] http://m.dailyhunt.in/news/india/tamil/dinakaran-epaper-karan/toothukkudiyil-barabarappu-aemarriya-besbuk-kathalanai-bidikka-balathkara-nadakamadiya-manavi-newsid-56573584
[8] http://tamil.oneindia.com/news/tamilnadu/girl-files-complaint-against-lover-260042.html
[9] தமிழ்.ஒன்.இந்தியா, பலாத்காரம் செய்து கழற்றி விட்ட காதலன்… கடத்தல் டிராமா போட்ட காதலி.. தூத்துக்குடி அருகே பரபரப்பு, By: Essaki, Published: Thursday, August 11, 2016, 16:00 [IST].
[10] http://www.dailythanthi.com/News/Districts/Thoothukudi/2016/08/11194517/Theater-with-balconyThe-young-men-who-raped-a-college.vpf
குறிச்சொற்கள்:அச்சம், இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள், உடலுறவு, ஐங்குணங்கள், கற்பழிப்பு, கற்பு, கலாச்சாரம், காமம், சமூகச் சீரழிவுகள், செக்ஸ், ஜோ, திருமணத்துக்கு முன்பாக பாலுறவு, தூத்துக்குடி, நாணம், பண்பாடு, பயிர்ப்பு, பாரம்பரியம், பார்க் ரோடு, பாலுறவு, பெண்களின் ஐங்குணங்கள், பெண்கள் கவனமாக இருக்கவேண்டிய அவசியம், மாணவிகள், ராமன் புதூர்
அசிங்கம், அச்சம், அடக்கம், அந்தரங்கம், ஆனந்தம், இச்சை, இணக்கத்துடன் செக்ஸ், உடலின்பம், உடலுறவு, உடல், உணர்ச்சி, உணர்ச்சியை தூண்டி, உல்லாசமாக இருப்பது, ஊக்குவிப்பு, ஐங்குணங்கள், ஒப்புதலுடன் உடலுறவு, கட்டிப்பிடி, கட்டுப்பாடு, கற்பழிப்பு, கற்பு, கலாச்சாரம், காதலன், காதலி, காதல், காமம், காமலீலைகள், காமவெறி பிடித்த காரியம், காமுகன், கூடா ஒழுக்கம், கூடா நட்பு, கொக்கோகம், கோளாறு, சம்மதத்துடன் உலலுறவு, சிற்றின்பம், சீரழிவு, சீர்கேடு, சோரம், ஜோ, தூத்துக்குடி, பகுக்கப்படாதது, பார்க் ரோடு, ராஜாவூர், ராமன் புதூர் இல் பதிவிடப்பட்டது | 2 Comments »
ஜூன்11, 2016
பாலியல் ரீதியிலான குற்றங்கள் 1960களிலிருந்து ஏன் பெருகுகின்றன – அவற்றைக் கட்டுப்படுத்த, குறைக்க என்ன செய்ய வேண்டும்?

“கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன்”: ஒரு ஆண், ஒரு பெண், பெற்றோர், உற்றோர் மற்றோர் ஒப்புதலுடன், திருமணம் என்ற சடங்கிற்குப் பிறகு உடலுறவு கொண்டு, வாழ்க்கை வாழ்வது, சமூகத்தில், உலகத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டு, நடந்து வந்துக் கொண்டிருக்கின்றன. “குடும்பச் சட்டங்கள்” அப்படித்தான் உருவாகின, இன்றும் தொடர்ந்து அமூலில் இருந்த் கொண்டிருக்கின்றன. “கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன்” என்று பெண்கள் வாழ வேண்டும் என்பது ஆணாதிக்க விதிகளால் ஏற்பட்டதல்ல. பெண்களுக்கு பாதுகாப்புக் கொடுக்கப்பட வேண்டும் என்றா நோக்கில் உருவாக்கப் பட்டது. பெண்ணை எல்லாவிதங்களில் கல்லாக இருந்து தாங்கிக் கொண்டு, புல்லாக இருந்து வளைந்து கொண்டு மனைவியை அனுசரித்துக் கொண்டு வாழ வேண்டும் என்ற அர்த்தத்தில் அது சொல்லப்பட்டது. அதாவது, பெண்மை எப்படியாகிலும் காக்கப்படவேண்டும் என்பது தான் கொள்கையாக இருந்தது. ஆனால், இக்காலத்து பெண்கள் நாங்கள் எங்கள் விருப்பப்படி, உரிமைகள் உள்ளபடி, நாங்கள் என்னவேண்டுமானாலும் செய்து கொண்டிருப்போம், தொழில் ரீதியில் அவையெல்லாம் அத்யாவசியமாகிறது, தேவையாகிறது என்றெல்லாம் கூட நியயப் படுத்தி செய்யும் போது, “கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன்” என்று தான் கணவன்மார்கள் தள்ளப்படுகிறார்கள்!

பெண்மையை போற்றிக் காக்க, பல்விதமான விதிமுறைகள், சட்டதிட்டங்கள் ஏற்படுத்தியது ஏன்?: மனித இனம் உருவாக்கம், பெருக்கம், வளர்ச்சி முதலியன மாற்றும் உலகவாழ்க்கையே பெண்ணினால் கட்டுப்படுத்தப் பட்டு வருகிறது. இதனால், தான் எல்லா சமூகங்களும் பெண்மையை போற்றிக் காக்க, பல்விதமான விதிமுறைகள், சட்டதிட்டங்கள் ஏற்படுத்தின. குறிப்பாக, அவளது கற்பு காக்கப்பட வேண்டும் என்பதற்காகத்தான் குடும்பம், சமூகம், நாடு என்று சிரத்தையோடு இருந்து செயல்பட்டன. கிரியைகள் மற்றும் சடங்குககளும் அவ்வாறே ஏற்படுத்தப் பட்டன. நவீனகாலத்தில் அவையெல்லாம், பெண்களை அடிமைப்படுத்த உருவாக்கப் பட்டன, என்று விளக்கம் அளிக்கப்படுகின்றன. ஆனால், பெண்மை சீரழிந்து கொண்டிருக்கிறது, அதனை எப்படி கட்டுப் படுத்துவது என்பது பற்றி அத்தகைய பெண்ணியப் பெண்டுகள் நினைப்பதாகத் தெரியவில்லை.

இந்திய பெண்கள் கற்புடன் இருப்பதை எதிர்பார்க்க முடியாது என்ற போது, பெண்களுக்கு ஏன் கோபம் வரவில்லை, போராடவில்லை?: கற்பழிப்புகள் அதிகமாகிக் கொண்டிருக்கும் நிலையில், பெண்கள் முறையாக ஆடை அணியவேண்டு எனும்போது, அதன், அர்த்தத்தைப் புரிந்தும், புரியாதது மாதிரிக் கொண்டு, நவீன பெண்கள், பெண்ணிய வீராங்கனைகள், மனித உரிமைகள் போராளிகள் போன்றோர் பொரிந்து தள்ளினர். ஆனால், பெண்கள் கற்புடன் இருக்க வேண்டும் என்று போராட வில்லை. இந்தியா டுடே, செக்ஸ்-சர்வே செய்து, இந்திய பெண்கள் கற்புடன் இருக்கவில்லை, திருமணத்திற்கு முன்பாகவே செக்ஸ் வைத்துக் கொள்கின்றனர், திருமணம் ஆனபின்பும், மற்ற ஆண்களுடன் செக்ஸ் வைத்துக் கொள்கின்றனர், நவீன பெண்கள் இவற்றையெல்லாம் தவறாகக் கொள்வதில்லை என்றெல்லாம், அட்டவனைப் போட்டுக் காட்டியபோதும், என்னடா அல்லது என்னடி பெண்மையை இப்படி கேவலப்படுத்துகிறார்களே என்று கவலைப்படவில்லை. மாறாக, குஷ்பு போன்ற பெண்ணிய பிருகஸ்பதிகள், திருமணத்திற்கு முன்பு செக்ஸ் வைத்துக் கொள்வதில் ஒன்றும் தவறில்லை என்று பேசியதை, தவறில்லை என்று உச்சநீதி மன்றமும், வழக்குகளைத் தள்ளுபடி செய்தது, கற்புக்கு வெற்றியா-தோல்வியா என்று சொல்ல முடியவில்லை.

சேர்ந்து வாழும் ஆண்–பெண் வாழ்க்கையும், விபரீத சந்ததியினரும்: பிறகு, திருமணம் போன்ற சடங்குகள்-பந்தங்கள்-பந்தங்கள்-கட்டுப்பாடுகள் இல்லாமல், சேர்ந்து வாழும் வாழ்க்கைக் கூட வாழலாம் என்று பேச ஆரம்பித்து விட்டனர். அவ்வாறே அவர்கள் வாழ்ந்து காட்டுகின்றனர். அதாவது, ஒரு ஆண், ஒரு பெண் என்ற நியதி இல்லை, ஒரு ஆண்-பல பெண்கள்; ஒரு பெண்-பல ஆண்கள் என்று சேர்ந்து வாழலாம், பிரியலாம் என்ற முறை “வாழ்ந்து-கெட்டவர்கள்” என்ற பிரிவினரால் அங்கீகரிக்கப்பட்டு, பரிந்துரைக்கப் படுகிறது. இப்பிரிவினரில் பெரும்பாலோனோர் வாழ்க்கையில், குறிபாக தாம்பத்தியத்தில் தோல்வியடைந்த நடிகர்-நடிகைகள், சமுதாய-உச்சத்தில் இருக்கும் அறிவிஜீவிகள் போன்றோர்தான் உள்ளனர். இத்தகைய உடலுறவுகளில் முன்னர் மற்றும் பின்னர் பிறந்த குழந்தைகளின் கதி என்ன என்பதனை அவர்கள் யோசிப்பதாகத் தெரியவில்லை. அவர்கள் பெரியவர்கள் ஆகும்போது, யார் தந்தை, யார் தாய் என்பதனை ஆவணங்களில் எப்படி குறிப்பிடுவார்கள், பிறப்பு முதல் இறப்பு வரை உள்ள நிகழ்வுகளில் எப்படி தம்மை அடையாளப் படுத்திக் கொள்வார்கள் என்று தெரியவில்லை. பணக்காரர்களுக்கு இதைப் பற்றி கவலையில்லை. ஆனால், நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் ஏழைகளின் நிலை என்னாகும் என்பது பற்றி அவர்கள் நினைத்துப் பார்ப்பதில்லை.

பாலியல் ரீதியிலான குற்றங்கள் 1960களிலிருந்து ஏன் பெருகுகின்றன: 1960கள் என்று ஏன் குறிப்பிடப்பது என்றால், அக்காலத்தில் திமுக என்ற திராவிட கட்சி பலமாகி, ஆட்சியில் அமர்ந்தது. ஆட்சிக்கு வந்ததும், இந்து திருமணச் சட்டத்தில் [The Hindu Marriage Act] திருத்தம் கொண்டு வந்து, செல்லுபடியாகாத “சுயமரியாதைத் திருமணம்” மரியாதைப் பெற்றது. இதனால், அவ்வாறு திருமணம் செய்து கொண்டவர்கள் மற்றும் அவர்களது மகன்கள், மகள்கள் முத்லியோரும் சமூகத்தில் மரியாதை பெற்றனர். 1960-70, 1970-80, 1980-90, 1990-2000, 2000-2010 என்று பார்த்தால், ஆண்-பெண் உறவுகள் எப்படி சீரழிந்தன என்பதை கண்டு கொள்ளலாம். மேனாட்டு கலாச்சாரம்-நாகரிகம் தாக்கம் என்பது மட்டுமல்லாது, பெண்கள் உரிமைகள் என்று பெண்கள், எல்லகளை மீறியதும் காரணமாக அமைந்தது. அதே காலத்தில், சினிமா, நாளிதழ்கள், பத்திரிக்கைகள் முதலியனவும் பெண்களை ஒரு அனுபவிக்கும் பொருளாக மாற்ற ஆரம்பித்தன. ஆனால், பாலியல் குற்றங்கள் நடந்தபோது, இதையே கருவியாகப் பயன்படுத்தி சமூகத்தை சாடின. பெண்களை பண்டங்களாக நினைத்து துர்பிரயோகம் செய்து வருகிறார்கள் என்று குற்றஞ்சாட்டினர்.

1980 வரை பெண்கள் ஓரளவிற்கு நாகரிகமாக சித்தரிக்கப் பட்டு வந்தனர். ஆனால், அதற்குப் பிறகு, பெண்கள் “சந்தப் பொருளாதார” [market economy] தேவைகளுக்காக மாற்றப்பட்டனர். சேலை-ரவிக்கைகளிலிருந்து விடுபட்டு, கையில்லா ரவிக்கை, ஸ்கர்ட், குட்டைப்பாவாடை, மார்பகங்கள், இடுப்பு முதலியவற்றை தாராளமாகக் காட்ட ஆரம்பித்தனர்[1]. “காட்டும் கலையில்” [exhibitionism] போட்டிப் போட்டுக் கொண்டு பெண்மையினை நவநாகரிகமாக்கினர். சினிமாதுறை வெளிப்பாடு பற்றி சொல்லத்தேவையில்லை. “போர்னோகிராபி” [pornography] நிலையை அடந்துள்ளது. இவ்வாறு பெண்கள் ஈடுபடுகின்றனரே என்று கவலைப்பட்டாலும், அக்கருத்துகள்,
- ஆணாதிக்கம் [patriarch, குலமுதலித்துவம் என்கிறார்கள் தமிழில்],
- இடைக்கால அடக்கியாளும் தன்மை,
- பிற்போக்குத்துவம்,
- குறுகிய மனங்கள்,
- பெண்மை-விரோத சக்திகள்
- மதவாதிகள்
என்றெல்லாம் சாடப்பட்டு அடக்கப்பட்டன. இதனால், 2010களில் அத்தகைய கருத்துகளை வெலியில் சொல்லவே பயப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். யாரும் கேட்பதற்கு இல்லை எனும்போது, ஆண்-பெண் உறவுகள் தாம்பத்திய எல்லைகளை மீறி, சோரம் போய் விபச்சாரமாவதில் ஆச்சரியம் இல்லை ஆனால், அது சமூகத்தைக் கெடுக்கும் பெரிய அபாயமாகி விட்டது.

என்ன செய்ய வேண்டும்?: இந்திய பெண்மை தாக்கப்படுகிறது, இந்திய பெண்கள் பலவித தாக்குதல்களுக்கு உடபட்டிருக்கிறாற்கள் எனும்போது, இந்திய சமூகம் சும்மா இருக்க முடியாது. கூட்டுக் குடும்பத்தை சிதைத்த நிலையில், கணவன் மனைவி மனங்கள் இணைந்து, அன்புடன் – பாசத்துடன், சந்தோசமாக வாழ இப்பிரச்சினையுள்ள நிலையில் ஆலோசனைகள் சொல்ல வேண்டிய அவசியம் உள்ளது.
- நமது இந்திய கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம், நாகரிகம் பற்றிய காரணிகளை மதிக்க வேண்டும் [இதை விமர்சித்தாலும் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை].
- பெற்றோர் மற்றும் பெரியவர்கள் மதிக்கப் பட வேண்டும் – பெயரன், பேத்தி [தாத்தா, பாட்டி பெயரை உடையவர்] என்பவற்றிற்கு அர்த்ததுடன் உறவுமுறைகள் இருக்க வேண்டும்.
- வேலை, பணம் சம்பாதிப்பது என்றிருந்தாலும், வார இறுதியில், குடும்பத்துடன் இருக்க வேண்டும் [கம்பெனியின் கவர்ச்சி பார்ட்டிகளில் மயங்கக் கூடாது].
- கணவன் மனைவியை, மனைவி கணவனை மதிக்க வேண்டும், பாராட்ட வேண்டும், அனுசரித்துப் போக வேண்டும், உதவ வேண்டும் [பெற்றோர் மற்றோர் இல்லாத நிலையில் இவை அவசியமாகின்றன].
- நவீனத்துவத்திலும், இந்தியத்துவம் இருக்க வேண்டும் [மாறாக இந்திய எதிர்ப்பு காரணிகள் இருக்கக் கூடாது].
- செக்யூலரிஸம் பெயரில் இந்திய மதங்கள் தாக்கப்படுவது, உரிமைகள் பெயரில் பெண்ணியம் குறைகூறப்படுவது, நவீனத்துவம் போர்வையில் சமூக தர்மங்கள் எதிர்க்கப்படுவது முதலியன தடுக்கப்பட வேண்டும் [குறிப்பாக இந்துமதத்தைத் தாக்குவது இந்திய காரணிகளை தூஷிப்பதில் வெளிப்படுகிறது].
- இந்திய சமூக சீர்திருத்தம், மாற்றம் மற்றும் முனேற்றம், பாரம்பரிய பெண்ணிய காரணிகளை எதிர்ப்பதால் உண்டாகாது [இந்திய பென்களை அப்படியே அமெரிக்கப் பென்களைப் போன்று மாற்றி விட்டால் என்னாகும்?].
- பெண்களின் வறுமையைப் போக்க வேலைவாய்ப்பைப் பெருக்க வேண்டும். இதில் பாரம்பரிய தொழில்கள் தான் உதவும் [அதிக அளவில் உற்பத்தி மற்றும் அதிக மக்களால் உற்பத்தி இரண்டிற்கும் வித்தியாசம் உள்ளது].

© வேதபிரகாஷ்
08-06-2016
[1] http://www.huffingtonpost.com/entry/axe-commercial-suggests-that-women-ruin-everything_n_3689409.html?section=india
குறிச்சொற்கள்:அச்சம், இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள், உடலுறவு, ஐங்குணங்கள், கணவன்-மனைவி உறவு முறை, கற்பழிப்பு, கற்பு, கலாச்சாரம், காமம், குழந்தை, சமூகச் சீரழிவுகள், தமிழ் பெண்ணியம், தாய், நாகரிகம், நாணம், நிர்வாணம், பண்பாடு, பயிர்ப்பு, பாலுறவு, பெண்களின் உரிமைகள், பெண்கள் கவனமாக இருக்கவேண்டிய அவசியம், பெண்மை, மாணவிகள்
அடக்கம், அழகு, ஆபாச படம், ஆபாசம், உடலுறவு, உடல், உடை, ஒருதாரம், ஒழுக்கம், கற்பழிப்பு, கற்பு, கலவி, கலாச்சாரம், கல்வி, கள்ளக்காதலி, கவர்ச்சி, காமம், குளியல், கூடல், கூடா உறவு, கூடா ஒழுக்கம், கூடா நட்பு, சட்டம், சபலம், சமரசம், சமூகச் சீரழிவுகள், சீரழிவு, சீர்கேடு, செக்ஸ், செக்ஸ் ஊடகம், பெண், பெண்களின் உரிமைகள், பெண்களின் ஐங்குணங்கள், பெண்கொடுமை, பெண்டாட்டி, பெண்ணின்பம், பெண்ணியம், பெண்மை, மகளிர் சுயஉதவி இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
செப்ரெம்பர்24, 2015
கல்யாண மன்னன் ரவீந்திரன் – ஐந்து பெண்களுடன் திருமணம் – என்னை ஒன்றும் செய்யமுடியாது என்று மிரட்டல்!

ரவீந்திரன் மீது சுதா புகார் – தினகரன் போட்டோ
ரவீந்திரன் என்கின்ற சேலம் வார்ட் எண்.20 கவுன்சிலர் மற்றும் அ.தி.மு.க செயலாளர், பல பெண்களை மணந்துள்ளதாகவும், அவரது முதல் மனைவி போலீஸாரில் புகார் கொடுத்துள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளன. சுதா என்கின்ற முதல் மனைவி கொடுத்துள்ள புகாரின் படி, ரவீந்தரனுக்கு கீழ்கண்ட மனைவிகள் உள்ளனர்.
- சுதா – முதல் மனைவி.
- போடிநாயக்கன் பட்டியை சேர்ந்த ஆறுமுகம் மகள் புவனேஸ்வரி.
- பெரியார் நகரை சேர்ந்த இராமநாதன் என்பவரின் மகள் புவனேஸ்வரி.
- பழைய சூரமங்கலம் பாலு மனைவி சந்தியா
- அதே பகுதி சேர்ந்த பழைய சூரமங்கலம் வாசு மகள் சத்யா.
இது இந்து திருமணச் சட்டத்தின் படி குற்றமாகும். இருப்பினும், பெண்களை ஏமாற்றி, ஆண்கள் இவ்வாறு பலதார மணங்களை செய்து வருவது தெரிகிறது. பெண்களுடைய ஏழ்மை, தனிமை, விதவை, சபலம் போன்ற காரணங்களை அறிந்து ஆண்கள் அவர்களை ஏமாற்றி வருகின்றனர். பொதுவாக செய்திதாள்கள், இணைதள செய்திகள் இவர்களை “கல்யாண மன்னன்” என்று கிண்டலடித்து செய்திகளைப் போட்டு மறந்து விடுகின்றன. ஆனால், பாதிக்கப்பட்ட பெண்களின் பட்டியல் ஆயிரக்கணக்காக தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. செய்திகள் மூலம் கிடைத்துள்ள விவரங்களை, கீழேமூன்று பத்திகளில் தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன [1, 2, 3]. பிறகு, அவை அலசப்படுகின்றன [4, 5, 6].

ரவீந்திரன் – அம்மா உணவகம் பெண்கள்
- அம்மா உணவக தொடர்பு, பலதார திருமணம்: சேலம் மாநகராட்சி பகுதியிலுள்ள 20 ஆவது வார்டு அ.தி.மு.க கவுன்சிலராக இருப்பவர் இரவீந்திரன். இவரின் முதல் மனைவி பெயர் சுதா. இவர் சேலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகார் மனுவில்[1], “எனக்கு திருமணமாகி 23 ஆண்டுகள் ஆகிறது. எனது கணவர் இரவீந்திரன், 20 ஆவது வார்டு கவுன்சிலராகவும், அ.தி.மு.க செயலாளராகவும் உள்ளார்[2]. என்னுடைய கணவர், எனக்கு தெரியாமலும், சட்ட விரோதமான வகையிலும் சில ஆண்டுகளுக்கு முன்னர் போடிநாயக்கன் பட்டியை சேர்ந்த ஆறுமுகம் மகள் புவனேஸ்வரி என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்தார்[3]. பிறகு, பெரியார் நகரை சேர்ந்த இராமநாதன் என்பவரின் மகள் புவனேஸ்வரியையும், பழைய சூரமங்கலம் பாலு மனைவி சந்தியா என்பவரையும். அதே பகுதியை சேர்ந்த வாசு மகள் சத்யா என என்னை தவிர நான்கு பெண்களை திருமணம் செய்துள்ளார்[4]. சந்தியா, சத்யா இருவரும் அம்மா உணவகத்தில் வேலை செய்த பொது அவர்களுடன் ஏற்பட்ட பழக்கத்தில் அவர்களை திருமணம் செய்துள்ளார்[5].

அம்மா உணவக பெண்கள்
- விவாகரத்து செய், என்னை யாரும் ஒன்றும் செய்ய முடியாது: “ஏன் இப்படி செய்கிறாய்?” என கேட்டால் இந்த பதவியில் இருப்பவர்கள் இப்படித்தான் இருப்பார்கள். நீ விருப்பம் இருந்தால் இரு. இல்லையெனில் விவாகரத்து வாங்கி கொண்டு போ என்று சொல்கிறார்[6]. இந்த பிரச்னை குறித்து வழக்கு கோர்ட்டுக்கு சென்று விட்ட நிலையிலும், அவரை ஒன்றும் செய்ய முடியவில்லை[7]. நான் கவுன்சிலர். எனக்கு அமைச்சர், மாவட்டம், பகுதி என்று எல்லோரும் உதவி செய்வார்கள். உனக்கு யார் வருவார்? பதவி இருக்கும் வரை என்னை ஒன்றும் செய்ய முடியாது என்று கூறுகிறார்[8].

பாலியல் தொல்லை தருவதாக மண்டல குழு தலைவர் மீது அம்மா உணவக ஊழியர்கள் புகார்
- முதல்வர் ஜெயலலிதாவை வேண்டும் முதல் மனைவி: எனக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். முதல்வர் ஜெயலலிதா, இந்த பிரச்னையில் தலையிட்டு கவுன்சிலர் பதவியையும், வார்டு செயலாளர் பதவியையும் நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்[9]. 2 ஆண்டுகளில் 4 பெண்களை திருமணம் செய்துள்ளார். ஒவ்வொரு பெண்களையும் திருமணம் செய்து கொண்டு, 3 மாதம் குடும்பம் நடத்துவார்[10]. ஐந்து பெண்களுடன் தொடர்பு என்று தினகரன் கூறுகிறது[11]. பின்னர், அவர்களது தாலியை கழற்றி விட்டு, வேறு பெண்களுடன் வாழ்வார்[12]. கொலை மிரட்டல் விடுப்பதாக மாநகராட்சி அதிமுக கவுன்சிலர் மீது மனைவி போலீசில் புகார் அளித்தார்[13].

Salem People Urges Government to Open Amma Unavagam Soon… – Thanthi TV
- அம்மா உணவக தொடர்பு, பலதார திருமணம் – விமர்சனம்: சேலம் வார்ட் எண்.20 கவுன்சிலர் மற்றும் அ.தி.மு.க செயலாளர் என்ற நிலையில், அம்மா உணவகம் தொடர்பும் கிடைத்துள்ளது. இதில் வேலை செய்யும் பென்கள் ஏழையாக இருக்கின்றனர். அதிமுக செயலர், வார்ட்.மெம்பர், கவுன்சிலர் என்றிருப்பவர்கள் ஏற்கெனவே, அம்மா உணவகத்தில் வேலை செய்யும் பெண்களை பாலியல் ரீதியில் துன்புறுத்துவது, புகார் அளித்துள்ளது, போராட்டம் நடத்தியது என்றெல்லாம் நடந்தேறியுள்ளன. உதாரணத்திற்கு சில கொடுக்கப்படுகின்றன. சென்னை மாநகராட்சி 155–வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் சேகர் 11–வது மண்டல குழு தலைவராகவும் உள்ளார். இந்த மண்டலத்திற்கு உட்பட்ட பகுதியில் ஆழ்வார் திருநகர், ராமாபுரம், காரப்பாக்கம் ஆகிய மூன்று இடங்களில் அம்மா உணவகம் அமைந்துள்ளது. இங்கு பணியாற்றும் பெண்களிடம் சேகர் பாலியல் தொல்லை கொடுப்பதாக பெண்கள் புகார் தெரிவித்தனர்[14]. புகார்கள் தெரிவிக்கப்பட்டும் சேகரின் நடவடிக்கைகள் மாறவில்லையாம். இதனால் ஆவேசம் அடைந்த அம்மா உணவகத்தில் பணியாற்றும் பெண்கள் சுமார் 30க்கும் மேற்பட்டோர் இன்று காலை சேகரை கண்டித்து வளசரவாக்கத்தில் உள்ள மண்டல குழு அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அம்மா உணவகம் பெண் ஊழியர் ஒருவர் கூறியபோது, தலைவர் சேகர் அம்மா உணவகத்தில் பணியாற்றும் பெண்களை அலுவலகத்திற்கு வர சொல்லியும், மோசமான வார்த்தைகளால் பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். அவரது எண்ணத்திற்கு உடன்பாடாத பெண்களை சரியாக வேலை செய்யவில்லை என்றும், வேலையிலிருந்து நீக்கி விடுவேன் என்றும் மிரட்டல் விடுத்தார். மேலும் யாரிடம் புகார் செய்தாலும் என்னை ஒன்றும் செய்யமுடியாது என்று மேலும் மிரட்ட தொடங்கினார். இதனால் நாங்கள் அவருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்று தெரிவித்தார்[15]. பெண்கள் சுய-உதவிக் குழுக்கள் மூலம் இப்பெண்கள் நியமிக்கப்படுவதால், அரசியல் நுழைந்துள்ளது என்று தெரிகிறது. சேகர் விசயம், ரவீந்திரனைப் போலவே உள்ளது. ஆனால், ரவீந்திரன் கல்யாணம் செய்து கொண்டதால், பிரச்சினையாக மாறவில்லை என்றாகிறது. இருப்பினும் சட்டத்தை மீறியுள்ளது கவனிக்கத்தக்கது.

தினகரன் செய்தி – ரவீந்திரன் – அம்மா உணவகம் பெண்கள்
- விவாகரத்து செய், என்னை யாரும் ஒன்றும் செய்ய முடியாது – விமர்சனம்: முதல் மனைவி, “இந்த பிரச்னை குறித்து வழக்கு கோர்ட்டுக்கு சென்று விட்ட நிலையிலும், அவரை ஒன்றும் செய்ய முடியவில்லை”, என்று குறிப்பிட்டுள்ளது[16] திகைப்படைவதாக உள்ளது. அப்படியென்றால், ரவீந்திரன் சட்டத்தின் நிலையை அறிந்தே அவ்வாறு மீறியிருப்பதாகத் தெரிகிறது. மேலும், வழக்கு தொடர்ந்த அப்பொழுதே, அவர் மீது நடவடிக்கை எடுத்திருக்கலாம். தனது அரசியல் பலத்தை துஷ்பிரயோகம் செய்து அமுக்கியுள்ளார் என்று தெரிகிறது. இப்படி அரசியல், பணம், சட்டமீறல், போலீஸ் நடவடிக்கையின்மை அல்லது தாமதம் போன்றவற்றால், பெண்கள் தான் பாதிக்கப்படுகின்றனர். இப்பொழுதும், ரவீந்திரன் கைது செய்யப்பட்டு, சிறைத்தண்டனை கொடுத்தாலும், பெண்களின் பாதிப்பை யார் சரிசெய்வார்கள் என்று தெரியவில்லை. தார்மீக உணர்வுகள் முழுவதுமாக அழிந்து விட்டனவோ என்ற கவலை, விரக்தி தான் ஏற்படுகின்றது. கடந்த 60 ஆண்டுகளில் இவ்வாறு சமூகம் சீரழிந்ததற்கு யார்-எது காரணம் என்பதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். நாளைக்கு, பெண்களும் தமக்கு உரிமைகள் உள்ளன என்று 5-6 என்று பல ஆண்களை திருமணம் செய்து கொண்டால், குடும்பங்களின் நிலயென்ன, பிறக்கின்ற குழந்தைகளின் நிலையென்ன என்று யோசித்துப் பார்க்க வேண்டும்
- முதல்வர் ஜெயலலிதாவை வேண்டும் முதல் மனைவி: கீழ்கண்ட பிரச்சினைகள் மிகவும் முக்கியமானவை.
- எனக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.
- முதல்வர் ஜெயலலிதா, இந்த பிரச்னையில் தலையிட்டு கவுன்சிலர் பதவியையும், வார்டு செயலாளர் பதவியையும் நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்[17].
- 2 ஆண்டுகளில் 4 பெண்களை திருமணம் செய்துள்ளார். ஒவ்வொரு பெண்களையும் திருமணம் செய்து கொண்டு, 3 மாதம் குடும்பம் நடத்துவார்[18]. பின்னர், அவர்களது தாலியை கழற்றி விட்டு, வேறு பெண்களுடன் வாழ்வார்[19].
- கொலை மிரட்டல் விடுப்பதாக மாநகராட்சி அதிமுக கவுன்சிலர் மீது மனைவி போலீசில் புகார் அளித்தார்[20].
இவையெல்லாம், பெண்களை எந்த அளவுக்கு பாதிக்க வைக்கின்றன, எல்லா வழிகளிலும் சதாய்க்கப்படுகின்றனர், மனம்-உடல் ரீதிகளில் கொடுமைப் படுத்தப்படுகின்றனர் என்று நோக்கத்தக்கது. பெண்ணின் தூயமை அழிந்தால், சமூகம் நாசமாகி விடும், சமூகம் நாசமானால், நாடே அழிந்து விடும் என்று நீதி நூல்களில் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. இப்பொழுது, அதுதான் நடந்து கொண்டிருக்கின்றன. இது பழமைவாதம் என்று ஒதுக்கப்படலாம், ஆனால், பாதிப்புக்கள் அதிகமாகிக் கொண்டிருக்கின்றன, பெண்களின் மீதான குற்றங்கள் பெருகிக் கொண்டிருக்கின்றன, கற்பழிப்புகளும் அவற்றுடன் இணைந்தே அதிகமாகின்றன.
© வேதபிரகாஷ்
24-09-2015
[1] தினமலர், அ.தி.மு.க., கவுன்சிலருக்கு 4 மனைவியர்: முதல் மனைவி போலீசில் பகீர் புகார், செப்டம்பர்.23, 2015.06.43.
[2] http://www.dinamalar.com/news_detail.asp?id=1348362
[3] ஒன்இந்தியா, தமிழகம் மனைவிக்கு தெரியாமல் 4 கல்யாணம் – அலற வைக்கும் சேலம் அதிமுக கவுன்சிலர்!, Posted by: Vijayalakshmi Updated: Wednesday, September 23, 2015, 12:45 [IST].
[4] http://tamil.oneindia.com/news/tamilnadu/counselor-got-4-marriages-illegally-236275.html
[5] தமிழ்.வெப்.துனியா, மனைவிக்கு தெரியாமல் நான்கு பெண்களை திருமணம் செய்த அதிமுக கவுன்சிலர், புதன், 23 செப்டம்பர் 2015 (14:38 IST)
[6] http://tamil.webdunia.com/article/regional-tamil-news/admk-counselor-married-4-woman-illegally-wife-filed-case-against-him-115092300044_1.html
[7] http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=151657
[8] தினகரன், 2 ஆண்டில் 4 பெண்களை மணந்த அதிமுக கவுன்சிலர், புதன், 23 செப்டம்பர் 2015, 2015.09.23, 01.54.18.
[9] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=168682
[10] http://www.dinakaran.com/Latest_Detail.asp?Nid=168601
[11] தினகரன், 5 பெண்களுடன் தொடர்பு வைத்துள்ளதாக அதிமுக கவுன்சிலர் மீது மனைவி புகார், பதிவு செய்த நேரம்: 2015-09-22 20:43:23.
[12] http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=81799
[13] தமிழ் முரசு, 4 பெண்களை மணந்த அதிமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து நீக்க ஜெ.வுக்கு மனைவி கண்ணீர் கடிதம், செப்டம்பர்.23, 2015
[14] தினமணி, பாலியல் தொல்லை: மண்டல குழு தலைவரை கண்டித்து அம்மா உணவக பெண் ஊழியர்கள் போராட்டம், By dn, கோயம்பேடு, First Published : 02 December 2014 04:08 PM IST.
[15]http://www.dinamani.com/latest_news/2014/12/02/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B2/article2551750.ece
[16] http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=151657
[17] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=168682
[18] http://www.dinakaran.com/Latest_Detail.asp?Nid=168601
[19] http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=81799
[20] தமிழ் முரசு, 4 பெண்களை மணந்த அதிமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து நீக்க ஜெ.வுக்கு மனைவி கண்ணீர் கடிதம், செப்டம்பர்.23, 2015
குறிச்சொற்கள்:அதிமுக செயலாளர், அம்மா உணவகம், உடலுறவு, ஒழுக்கம், கணவன்-மனைவி உறவு முறை, கலாச்சாரம், கல்யாண மன்னன், கவுன்சிலர், காமம், சத்யா, சந்தியா, சுதா, சேலம், தாலி, பாலியல் தொல்லை, புவனேஸ்வரி, வார்ட்.எண்.20
அசிங்கம், அம்மா உணவகம், அரசியல், இச்சை, இலக்கு, உடலின்பம், உடலுறவு, உடல், ஐங்குணங்கள், கணவன்-மனைவி உறவு முறை, கலாச்சாரம், கவுன்சிலர், காமக் கொடூரன், காமத்தீ, சத்யா, சந்தியா, சுதா, சேலம், புவனேஸ்வரி, ரவீந்திரன் இல் பதிவிடப்பட்டது | 1 Comment »
செப்ரெம்பர்21, 2015
இளம்பெண்களை காதலிப்பது போல ஏமாற்றி, கற்பழித்து, நண்பர்களுக்கும் இரையாக்கும் பாதககர்கள்!

துவை தவளகுப்பத்தை அடுத்த டி.என்.பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார்
இளம்பெண்களை, இளைஞர்கள் தொடர்ந்து ஏமாற்றி கற்பழித்து, கர்ப்பமாக்கி கைவிட்டு போவது, காதலிப்பது போல நடித்து, மற்ற நண்பர்களுக்கும் இரையாக்கி சீரழிப்பது போன்ற காரியங்கள் நடந்து வருகின்றன. இதற்கு, சினிமா, டிவி-சீரியல்கள் போன்றவை தூபம் போட்டு வருகின்றன. பள்ளிகளில் படிக்கும் போதே, மாணவிகள், மாணவர்களுடன் சேர்ந்து, சினிமாவுக்கு போதல், புராஜெக்ட் ஸ்டெடி, என்றெல்லாம் ஊர்களுக்கு போதல் என்று செல்ல ஆரம்பித்துள்ளனர். நாகரிகமான காலம், அதில் ஒன்றும் தவறில்லை, தாராளமாக போய் வரட்டும் என்றும் பெற்றோரும் சம்மதித்து அனுப்பி வைக்கின்றனர். ஆனால், வக்கிரம் பிடித்த சில மாணவர்கள் சக-மாணவிகளை தங்களது காம இச்சைக்கு பலிகடாவாக ஆக்கிக் கொள்கின்றனர். போதாகுறைக்கு, நண்பர்களுக்கும் இரையாக்குகின்றனர். இதனை “காதலியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய காதலன்” என்றெல்லாம் வேறு வர்ணிக்கின்றனர். உண்மையில் அத்தகைய வர்ணனையே எத்தகைய விகர்ப்பமாக, மோசமாக, அருவறுப்பாக இருக்கிறது என்று தெரியவில்லை போலும். மாணவர்களுக்கு சகோதரிகள் இருந்து, அவர்களை அதே போல மற்றவர்கள் செய்தால், அம்மாமாணவர்கள் என்ன செய்வார்கள் என்பது கவனிக்க வேண்டும். அத்தகைய எண்ணங்கள் இல்லாமலேயே அவர்கள் வளர்ந்திருந்தால், யார் காரணம் என்பதனையும் கவனிக்க வேண்டும்.

பாதிக்கப்படும் பெண்கள்
அனாதையாக வளர்ந்த பெண்ணை காதலிப்பதாக நடித்தது: புதுவை தவளகுப்பத்தை அடுத்த டி.என்.பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 21). புதுவையில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வந்தார். அதே பகுதியில் உள்ள ஜவுளிகடையில் 16 வயது சிறுமி வேலை செய்து வந்தார். தனது பெற்றோர் இறந்து விட்டதால், தனது சகோதரர் வீட்டில் வசித்து வந்தார். இவர்கள் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அருகே இருந்த சிமெண்ட் கடையில் பணிபுரிந்து வந்த ராஜ்குமார் என்பவருக்கும், அவருக்கும் இடையே ஓராண்டுக்கு முன்னர் பழக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது என்கிறது இன்னொரு இணைதளம்[1]. பின்னர் அது காதலாக மாறியது. இதையடுத்து சினிமா தியேட்டர், பீச், பூங்கா என்று பல்வேறு இடங்களில் இருவரும் உல்லாசமாக சுற்றித்திரிந்தனர்[2]. இதற்கிடையே அந்த சிறுமியிடம் திருமண ஆசை காட்டி நெருங்கிப் பழகியதாகக் கூறப்படுகிறது[3]. ஆதரவில்லை என்ற நிலையில் ஒரு இளம்பெண் எப்படி எளிதில் சிக்கிக் கொள்கிறாள் என்பது தெரிகிறது. இதனால், அத்தகைய இளம்பெண்களுக்கு அறிவுரை, பாதுகாப்பு முதலியவை கொடுக்கப்பட வேண்டிய நிலையும் ஏற்படுகிறது.

விதவையோ யாரோ
திட்டமிட்டு காதலன் அப்பெண்ணை அழைத்துச் சென்றது: இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு நோனாங்குப்பம் கடற்கரை பகுதிக்கு சிறுமியை ராஜ்குமார் அழைத்து சென்றார்[4]. அப்போது அவரது நண்பர்கள் 3 பேர் அங்கு வந்தனர். அனைவரும் கடலில் குளித்தார்கள். பின்னர் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அந்த சிறுமியை ராஜ்குமாரும், அவருடைய நண்பர்களும் அழைத்து சென்றனர். அங்கு அவர்கள் சிறுமியை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்தனர்[5]. பின்னர் இதை யாரிடமும் சொல்லக்கூடாது என்று மிரட்டி அனுப்பி விட்டனர். இதனால் அவர் யாரிடமும் இந்த சம்பவத்தை தெரிவிக்கவில்லை. இதெல்லாம், அவன் திட்டமிட்டே செய்திருப்பதைக் காட்டுகிறது. ஆதரவில்லாத அப்பெண் இவர்களிடம் சிக்கியதும் புலப்படுகிறது.

ஜெயபாண்டி நண்பர்கள்
எட்டு மாத கர்ப்பமாக இருந்த பெண்: பின்னர் சில நாள்கள் கழித்து சிறுமியை தொடர்பு கொண்ட ராஜ்குமார் நடந்ததைக் கூறியதுடன் மீண்டும் அந்த இடத்திற்கு வருமாறு கூறி மிரட்டியுள்ளார். இதைக் கேட்டு, அதிர்ச்சியடைந்த அந்த சிறுமி, வீட்டின் அருகே இருந்த டெய்லர் ஒருவரிடம் தனக்கு நேர்ந்த கொடுமையை தெரிவித்துள்ளார். அப்பொழுது தான் நிலைமை அவளுக்கு புரிந்தது போலும். அவர் இது குறித்து புதுச்சேரி குழந்தைகள் நலக் குழுமத்தில் புகார் செய்தார். இந்த நிலையில் ஜவுளிக்கடையில் வேலை செய்து கொண்டிருந்தபோது அவர் திடீரென மயங்கி விழுந்தார். அவரை புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார்கள். டாக்டர்கள் பரிசோதித்து பார்த்துவிட்டு சிறுமி 8 மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் ராஜ்குமாரிடம் சென்று அவரை திருமணம் செய்து கொள்ளும் படி வற்புறுத்தினார்கள். ஆனால் அவர் அதை ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டார்.

இன்னொரு வழக்கு
பாதிக்கப்பட்ட இளம்பெண் கூறியது: இது தொடர்பாக புதுவை குழந்தைநல பாதுகாப்பு அதிகாரி வித்யா ராம்குமாரிடம் உறவினர்கள் புகார் செய்தனர். அவர் அரியாங்குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதையொட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜ்குமாரை கைது செய்தனர். மேலும் அவரின் நண்பர்கள் 3 பேரை தேடி வருகிறார்கள்[6]. சைல்டுலைன் மூலம், குழந்தை நல குழும சேர்மன் டாக்டர் வித்யா ராம் குமாரிடம் புகார் அளிக்கப்பட்டது. சிறுமியிடம், குழந்தை நல குழும அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது, தனக்கு நடந்த கொடுமை குறித்து, சிறுமி கூறியதாவது[7]: “எனது பெற்றோர் இறந்து விட்டனர். சகோதரர் வீட்டில் தங்கி, ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தேன். பின், ஜவுளி கடையில் வேலை செய்தபோது, ராஜ்குமார், 26, அறிமுகம் ஆனார். நட்புரீதியாக பழகிய என்னை, காதலிப்பதாக கூறினார். ஒரு நாள் நோணாங்குப்பம் படகு குழாமிற்கு அழைத்துச் சென்று, அங்குள்ள தோப்பினை சுற்றிக்காட்டி, இளநீர் குடிக்க கொடுத்தார். அதை குடித்ததும் மயக்கமாகி விட்டேன். அப்போது, ராஜ்குமாரும், அவரது நண்பர்களும் என்னை பலாத்காரம் செய்து சீரழித்தனர். மயக்கம் தெளிந்து கதறி அழுத என்னிடம், ௧,௦௦௦ ரூபாயை திணித்து விட்டு சென்று விட்டனர். என் எதிர்காலமே சீரழிந்து விட்டது. ராஜ்குமார், அவர்களது நண்பர்களை சட்டப்படி தண்டிக்க வேண்டும்”, இவ்வாறு சிறுமி, கண்ணீர் மல்க கூறி உள்ளார்[8]. சிறுமியை சீரழித்த ராஜ்குமாரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
குற்றமும் தண்டனையும்: செய்தித்தாள்களிலேயோ, இத்தகைய விவலகாரங்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. உதாரணாத்திற்குதான், கீழ்கண்டவை கொடுக்கப்பட்டுள்ளன.
- மதுகுடித்து விட்டு காதலியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய காதலன் உள்பட 4 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்[9].
- லாட்ஜ் அறையில் அடைத்து வைத்து தனது காதலியை சனல் கற்பழித்தார். பிறகு தனது காதலியை நண்பர்கள் இருவருக்கும் விருந்தாக்கினார்[10].
- காதலியை துன்புறுத்தி 10 நண்பர்களுக்கு விருந்தாக்கிய காதலன் கைது[11].
- திருமணத்திற்கு வற்புறுத்திய கர்ப்பிணி பெண்ணை, நண்பர்களுக்கு விருந்தாக்கி, கொலை செய்து புதைத்த கொடூரனை போலீசார் கைது செய்துள்ளனர்[12].
- ………………………………..
- ………………….
இவற்றையெல்லாம் படித்தாலே, ஆண்களின் வக்கிரம் தான் வெளிப்படுகிறது. சினிமா, ஊடகங்கள் என்று பழியைப் போடமுடியாது, ஏனென்றால், தாய்-சகோதரி என்றுதான் அவர்கள் பிறந்திருக்கின்றனர், வளர்ந்துள்ளனர், வாழ்கின்றனர்……….அதனால், பெண்களை இவ்வாறு நடத்தி காலம் தள்ள முடியாது. சட்டம் அவர்களை தண்டிக்கும், இலை இயற்கை தண்டிக்கும், அதுவும் இல்லையென்றால் தெய்வம் நிச்சயமாக தண்டிக்கும், தப்ப முடியாது.
© வேதபிரகாஷ்
21-09-2015
[1] http://tamil.webdunia.com/article/regional-tamil-news/16-years-old-girl-gang-rape-in-puducherry-115092100017_1.html
[2] தினத்தந்தி, சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது நண்பர்களுக்கு போலீஸ் வலைவீச்சு, பதிவு செய்த நாள்: திங்கள், செப்டம்பர் 21,2015, 3:04 AM IST; மாற்றம் செய்த நாள்: திங்கள் , செப்டம்பர் 21,2015, 4:45 AM IST.
[3] வெப்துனியா, 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 4 பேர் கொண்ட கும்பல், Last Modified: திங்கள், 21 செப்டம்பர் 2015 (10:08 IST).
[4] மாலைமலர், புதுவையில் 3 நண்பர்களுடன் சேர்ந்து காதலியை கற்பழித்த வாலிபர், பதிவு செய்த நாள் : திங்கட்கிழமை, செப்டம்பர் 21, 10:56 AM IST.
[5] http://www.maalaimalar.com/2015/09/21105619/young-men-who-torture-her-love.html
[6] http://www.dailythanthi.com/News/Puducherry/2015/09/21030429/Police-Hunt-for-youth-arrest-karppamakkiya-girl-friends.vpf
[7] தினமலர், காதலியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய காதலன் கைது, செப்டம்பர்.21, 2015.03.33.
[8] http://www.dinamalar.com/news_detail.asp?id=1346657
[9] http://www.dailythanthi.com/News/Districts/2015/09/04230947/Noisy-away-from-alcohol-4-arrested-for-cruelty-beloved.vpf
[10] http://www.maalaimalar.com/2015/05/24123503/kerala-girl-molestation-4-arre.html
[11] http://www.njtamil.com/2012/11/10/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-10-%E0%AE%A8%E0%AE%A3/
[12] http://65.17.225.99/2012/news_detail.asp?id=918273&Print=1
குறிச்சொற்கள்:அனாதை, ஆதரவு, இன்பம், இளம்பெண், உடலுறவு, ஏமாற்றுதல், ஐங்குணங்கள், ஒழுக்கம், கற்பழிப்பு, கற்பு, காதல், காமம், குரூரம், குற்றம், பாசம், பாதகம், பெண்கள் கவனமாக இருக்கவேண்டிய அவசியம், பெண்டாளல், பெண்மை, மாணவி, வஞ்சகம்
அச்சம், இச்சை, இலக்கு, உடலின்பம், உடலுறவு, உடல், ஐங்குணங்கள், கர்ப்பம், கற்பழிப்பு, கற்பு, காதல், காமக் கொடூரன், காமத்தீ, காமம், காமவெறி பிடித்த காரியம், காமுகன், பாதகம், மோசடி, மோசம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
திசெம்பர்6, 2014
ஆண்-பெண் உறவுகளின் சீரழிவு: தாம்பத்திய எல்லைக்களைத் தாண்ட வைக்கும் பண ஆசை, உடலுறவுகளை மீறும் கொலைகள் (2)
இதன் முதல் பகுதியை இங்குப் படிக்கவும்[1].

Accomplice and complaintant – Murder Shruti
சிறைலிருக்கும் சந்திரலேகா ஜாமீன் மனு தாக்கல் செய்தது (டிசம்பர் 2014): சென்னை மதுரவாயலில் வசிந்து வந்தவர் ரொனால்டு பீட்டர் பிரின்சோ. பாளையங்கோட்டையை சேர்ந்த சினிமா தயாரிப்பாளரான இவர், கடந்த ஜனவரி 2014 மாதம் காணாமல் போனார். இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசார், வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு சென்னை மதுரவாயல் போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த போலீசார், ரொனால்டு பீட்டர் பிரின்சோ கொலை செய்யப்பட்டதை கண்டு பிடித்தனர்[2]. அவருடன் மனைவியாக வாழ்ந்து வந்த நடிகை சுருதி என்ற சந்தர்லேகா, உமாசந்திரன், ஜான் பிரின்சன் உட்பட பலர் சேர்ந்து கடந்த ஜனவரி 18–ந்தேதி 2014 இந்த கொலையை பரப்பாடி-இலங்குளம் பிரதான தெரு, மதுரவயல் வீட்டில் [Parappaadi-Ilankulam Main Road in Maduravoyal on January 18.2014] செய்துள்ளதாக வழக்குப்பதிவு செய்தனர்[3]. இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட சுருதி என்ற சந்தர்லேகாவை பல இடங்களில் போலீசார் தேடியும் கைது செய்ய முடிய வில்லை. கடந்த செப்டம்பர் மாதம் சுருதியை போலீசார் கைது செய்தனர்[4]. இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க கோரி சென்னை ஐகோர்ட்டில், சுருதி மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது[5]:

Shruti Chandralekha arrested in Bangalore
இளம்பெண்களை வைத்து ஆபாசப் படங்களை தயாரித்தார்கள்: “ரொனால்டு பீட்டர் பிரின்சோவுடன், திருமணம் செய்யாமல் மனைவியாக வாழ்ந்து வந்தேன். அவரை கொலை செய்த வழக்கில் 5–வது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட ஹானஸ்ட்ராஜ் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த வழக்கில் என் மீது போலீசார் குற்றம் சுமத்தியுள்ளனர். கொலை செய்யப்பட்ட ரொனால்டு பீட்டர் பிரின்சோ, உமா சந்திரன், ஜான்பிரிண்ஷன், ஹானஸ்ட்ராஜ் ஆகியோர் ‘ஆன்லைன்’ தொழிலில் என்னை மேலாளராக பணி செய்ய கட்டாயப்படுத்தினார்கள். இளம்பெண்களை வைத்து ஆபாசப் படங்களை தயாரித்தார்கள்[6]. அப்போது, என்னையும் ஆபாசப்படங்களில் நடிக்கவேண்டும் என்றும் பலருடன் ஒரே நேரத்தில் உறவு கொள்ள வேண்டும் என்றும் வற்புறுத்தினார்கள்[7]. இதற்கு நான் சம்மதிக்காததால், அவர்கள் எனக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். இந்த நிலையில், ரொனால்டு பீட்டர் பிரின்சோவிடம் இருந்து ஆன்லைன் தொழிலை அபகரிக்க, அவரை உமாசந்திரன், ஜான் பிரிண்சன் மற்றும் பலர் கொலை செய்த எனக்கு தெரியவந்தது. ஆனால், என்னையும் இந்த வழக்கில் போலீசார் கைது செய்துள்ளனர். நான் ஒரு அப்பாவி. இந்த கொலை வழக்கில் என்னையும் குற்றவாளியாக சேர்த்துள்ளனர். எனவே, எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும்”, இவ்வாறு அதில் கூறியிருந்தார்[8].

Shruti Chandralekha arrested in Bangalore for murder
செப்டம்பரில் கைது செய்தாலும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவில்லை: இந்த மனு நீதிபதி பி.என்.பிரகாஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் பி.ஆறுமுகம் ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: “மனுதாரர் கடந்த செப்டம்பர் 5–ந்தேதி கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை வழக்கை விசாரிக்கும் மதுரவாயல் போலீசார், இதுவரை வழக்கின் குற்றப் பத்திரிகையை கோர்ட்டில் தாக்கல் செய்யவில்லை. எனவே, மனுதாரருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்குகிறேன். அவர் தினமும் காலை 10 மணிக்கும், மாலை 6.30 மணிக்கும் மதுரவாயல் போலீஸ் இன்ஸ்பெக்டர் முன்பு ஆஜராகி 4 வாரத்துக்கு கையெழுத்திட வேண்டும். மனுதாரர் தலைமறைவாகக்கூடாது. சாட்சிகளையும் கலைக்கக் கூடாது”, இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்[9]. 05-09-2014 கைது செய்தும், டிசம்பர் 2014 வரை மூன்று மாதங்களாக ஏன் குற்றப்பத்திரிக்கைத் தாக்கல் செய்யப்படவில்லை என்று தெரியவில்லை. கைப்பற்றியுள்ள படங்களைப் பார்த்து மயங்கிவிட்டனரா அல்லது மேலும் ஆதாரங்களைத் தேடிக் கொண்டிருக்கிறார்களா என்று தெரியவில்லை.

நடிகை கைது, நடிகர் கொலை வழக்கு தினகரன் போட்டோ
ஆபாசப்படங்கள் எடுப்பது, உடலுறவு காட்சிகள் காட்டுவது: ஸ்ருதி சந்திரலேகா, “இளம்பெண்களை வைத்து ஆபாசப் படங்களை தயாரித்தார்கள்[10]. அப்போது, என்னையும் ஆபாசப்படங்களில் நடிக்கவேண்டும் என்றும் பலருடன் ஒரே நேரத்தில் உறவு கொள்ள வேண்டும் என்றும் வற்புறுத்தினார்கள்[11] என்று சொல்லியிருப்பது மிகவும் அபாயகரமான விசயமாகும்[12]. ஏற்கெனவே திரைப்படங்கள் கேடுகெட்ட பாதையில் சென்று கொண்டிருக்கின்றன. நிர்வாணக் காட்சிகள், உடலுறவு காட்சிகள் முதலியவற்றை கொஞ்சம்-கொஞ்சமாக காட்ட ஆரம்பித்துள்ளார்கள். நடிகைகளும் அதற்கு ஒத்துழைக்க ஆரம்பித்துள்னர் என்பது, அத்தகைய காட்சிகள் வந்துகொண்டிருப்பதிலிருந்தே உறுதியாகிறது. சென்சார் / தணிக்கைத்துறை இருந்தாலும், ஒருபக்கம் நவீனம், முன்னேற்றம், நிதர்சனம் என்ற வாதங்களில் ஏற்றுக் கொள்ளப்படுகிறது, எதிர்த்துப் பேசினால் தலிபான்கள் என்றும் முத்திரைக் குத்த ஆரம்பித்து விட்டனர். இந்திய சமூகத்தை சீரழிக்க இதுவும் முக்கியமான வெடுகுண்டு போன்ற தீங்கிழைக்கும் விவகாரம் ஆகும். இதில் ஆணின் வக்கிரம் மட்டுமல்லாது, ஒரு நிலையில் பெண்ணின் வக்கிரமும் சேர்ந்து சீரழிவு பாதைக்கு எடுத்துச் செல்லும் முறையில் ஏதுவாகும். போதைமருந்து போல சாப்பிடுபவர்கள், விற்பவர்கள், விநியோகிப்பவர்கள் எல்லோருரையும் இது கெடுத்துவிடும். பெண்கள் மட்டும் அப்பெண்களின் குடும்பங்கள், உறவினர்கள் அனைவரையும் பாதித்து விடும். மேன்மேலும் பாலியல் குற்றங்கள் செய்யவும் தூண்டுகோலாக இருக்கும். இத்தகைய முக்கியமான மற்றும் அபாயகரமான பிரச்சினைப் பற்றியும் பெண்ணிய வீராங்கனைகள் விவாதிப்பது கிடையாது[13]. இந்தியாவில் இத்தகைய குற்றவாளிகளை விட்டு வைக்கக் கூடாது..
© வேதபிரகாஷ்
06-12-2014
[1] https://womanissues.wordpress.com/2014/12/06/factors-spoiling-the-husband-wife-relationships-lust-for-money-porn-etc/
[2] மாலைமலர், சினிமா தயாரிப்பாளர் கொலையில் சிக்கிய நடிகை ஐகோர்ட்டில் மனு: நிபந்தனை ஜாமீனில் விடுவிக்க உத்தரவு, பதிவு செய்த நாள் : வெள்ளிக்கிழமை, டிசம்பர் 05, 4:05 PM IST
[3] http://www.newindianexpress.com/cities/chennai/Killer-Actress-Arrested-in-Bangalore/2014/09/06/article2417287.ece
[4] http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/Actress-Shruti-arrested-for-murder/articleshow/41855222.cms
[5] http://www.maalaimalar.com/2014/12/05160548/cinema-director-murder-actress.html
[6] http://www.dinamalar.com/news_detail.asp?id=1131303&Print=1
[7] தினமலர், ஆபாச படத்தில் நடிக்க வற்புறுத்தினர்: கொலை வழக்கில் நடிகை அதிர்ச்சி மனு, பக்கம்.2, சென்னை பதிப்பு, 06-12-2014.
[8] தினகரன், நடிகரை கொலை செய்த வழக்கு: நடிகைக்கு ஜாமீன், சனிக்கிழமை, 06-12-2014, 00.42.43
[9] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=121277
[10] http://www.dinamalar.com/news_detail.asp?id=1131303&Print=1
[11] தினமலர், ஆபாச படத்தில் நடிக்க வற்புறுத்தினர்: கொலை வழக்கில் நடிகை அதிர்ச்சி மனு, பக்கம்.2, சென்னை பதிப்பு, 06-12-2014.
[12] http://www.indiatvnews.com/entertainment/bollywood/tamil-actress-shruthi-chandralekha-kills-husband-who-forced-her-to-act-in-porn-films-view-pics–16885.html
[13] விபச்சாரிகள் உரிமைகள், அவர்களுக்கு தொழில் செய்ய இடம் ஒதுக்க வேண்டும் என்று சென்ன்னையிலேயே, ஒரு மாநாடு நடந்தபோது,சில வீராங்கனைகள் கலந்துகொண்டு, அவர்களுக்கு ஆதரவாகப் பேசியுள்ளனர்.
குறிச்சொற்கள்:ஆனஸ்ட்ராஜ், ஆபாசப்படம், உடலுறவு, உமா சந்திரன், சுருதி சந்திரலேகா, திருநெல்வெலி, புருனோ, போர்னோ, ரபீக் உஸ்மான், ரானால்டு பீட்டர், ரோனால்டு பீட்டர், ஹானஸ்ட்ராஜ்
ஆடை, ஆடையை களைந்து வீடியோ, ஆனஸ்ட்ராஜ், ஆன்லைன் வர்த்தகம், ஆபாச படம், ஆபாசம், உடலுறவு, உடல், உணர்ச்சியை தூண்டி, உமா சந்திரன், காமம், காமலீலைகள், கூடா உறவு, கூடா ஒழுக்கம், சமூகச் சீரழிவுகள், நிர்வாண படம், நிர்வாண வீடியோ, நிர்வாணமான பெண்கள், நிர்வாணம், பெண்ணியம், பெண்மை, பெண்மை சீரப்பாழி, ரபீக் உஸ்மான், ரெனால்டு பீட்டர் பிரின்ஸ் இல் பதிவிடப்பட்டது | 2 Comments »