Posts Tagged ‘கக்கூஸ்’

உபி கற்பழிப்புகள், சுரணையற்ற அரசியல்வாதிகள், குரூரக் குற்றவாளி ஆட்சியாளர்கள், சட்டமீறல்கள், நியாய அவமதிப்புகள், தொடரும் மனிதத்தன்மையற்ற செயல்கள் (2)

ஜூன்4, 2014

உபி கற்பழிப்புகள், சுரணையற்ற அரசியல்வாதிகள், குரூரக் குற்றவாளி ஆட்சியாளர்கள், சட்டமீறல்கள்,  நியாய அவமதிப்புகள், தொடரும் மனிதத்தன்மையற்ற செயல்கள் (2)

உபி எம்.எல்.ஏக்கள் குற்றப் பின்னணி

உபி எம்.எல்.ஏக்கள் குற்றப் பின்னணி

77%  எம்.எல்.ஏக்கள் கிரிமினல் வழக்குகளில் சிக்கியிருக்கும் போது, அவர்களின் ஆட்சியில் சட்டம்ஒழுங்கு முறை எப்படி இருக்கும்: இளம் முதல்வரான அகிலேஷ் யாதவ்,  செய்ய வேண்டியதையெல்லாம் நான் செய்து விட்டேன் என்று பேசிக் கொண்டிருக்கிறார். ரூ.5 லட்சம் பாதிக்கப் பட்ட குடும்பத்திற்கு கொடுக்க அறிவித்தார்,  ஆனால், குடும்பத்தவர்கள் ஒப்புக் கொள்ளவில்லை.  கற்பழித்தவர்கள் தண்டிக்கப் படவேண்டும் என்று உறுதியாக போராடி வருகிறார்கள். உபி சட்டசபையில் உள்ள 403 எம்.எல்.ஏக்களில் 189 பேர் கிரிமினல் குற்றங்களில் சிக்கியுள்ளவர்கள். சமஜ்வாடி கட்சியின் 224  எம்.எல்.ஏக்களில் 172 பேர், அதாவது 77% கிரிமினல் குற்றங்களில் சிக்கியுள்ளவர்கள்[1].  அத்தகையவர் கொண்ட ஆட்சியாளர்களை வைத்துக் கொண்டு எப்படி சட்டம்-ஒழுங்கு நிர்வகிக்க முடியும் என்பதை அறிந்து கொள்ளாலாம்[2].எம்.எல்.ஏக்கள் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, கடத்தல், திருட்டு, ஆட்களை சிறை பிடித்து வைத்தல், கலவரம் ஏற்படும் வகையில் தூண்டி விடுதல், என பலவகையான குற்றங்களில் ஈடுபட்டுள்ளனர். ஆனால்,  அவர்கள் ஜெயித்து ஆட்சிக்கு வந்து கொண்டு தான் இருக்கின்றனர். பிறகு, ஆட்சியில் எப்படி சட்டம் அமூல் படுத்த முடியும் என்று தெரியவில்லை!

உபி எம்.எல்.ஏக்கள் குற்றப் பின்னணி.மீறல்கள்

உபி எம்.எல்.ஏக்கள் குற்றப் பின்னணி.மீறல்கள்

கக்கூஸ் இல்லாததால் தான் கற்பழிப்பு ஏற்பட்டுள்ளதுஅதனால் நிறைய கக்கூஸுகள் கட்டவேண்டும்: கக்கூஸ் இல்லாததால் தான் கற்பழிப்பு ஏற்பட்டுள்ளது அதனால்,  இனி கக்கூஸ்கள் கட்டவேண்டும் என்றும் ஆரம்பித்து விட்டார்கள். ஐநா கண்டனத்திலும், இப்பாட்டு பாடப் பட்டுள்ளது[3].  புகுந்த வீட்டில் கக்கூஸ் இல்லை என்று மனைவி, கோபித்துக் கொண்டு தாய் வீட்டிற்கு திரும்பி விட்டார் என்ற கொசுரு செய்தி வேறு.  கிராமப் புறங்களில் ஆயிரக் கணக்கான வருடங்களாக, கக்கூஸ் இல்லை என்பது தெரிந்த விசயம்தான். ஆனால்,  இயற்கையில் யாருக்கும் எந்தவித தொந்தரவும் இல்லாமல்,  மாசுப் பிரச்சினைகள் இல்லாமல் மனித மலம் மக்கிப் போகும் முறையில், வீட்டின் பின்புறத்தில்,  வயல்வெளிக்கு வெளியே என்று காலைக் கடன் கழிக்கும் பழக்கம் இருந்து வருகிறது.  ஆகவே, இதில் சர்ச்சைக் கிளப்புவதற்கு ஒன்றுமே இல்லை. இங்கிலாந்திலேயே,  கக்கூஸுகள் 19-20ம் நூற்றாண்டுகளில் தான் கட்டப்பட்டன.  அதுவரை அவர்கள் கண்ட இடங்களில் தான் பேண்டு வந்தனர். இது லண்டனில் ஒரு பெரும் பிரச்சினையாகவே போயிற்று. ஆனால்,  மேனாட்டு ஊடகங்கள் இவற்றையெல்லாம் மறந்து, மறைத்து இந்தியாவை விமர்சிக்கின்றன.

ராகுல் விஜயம்

ராகுல் விஜயம்

உபி 1300 வருடங்களாக பலவித தாக்குதல்களுக்குட்பட்ட நிலையில் உள்ளது: உத்திர பிரதேசம் கடந்த 1300 வருடங்களாக, முகமதியர், ஐரோப்பியர் முதலியோரால் அதிக அளவில் பலவிதங்களில் பாதிக்கப் பட்டிருக்கின்றது. இப்பாதிப்பு மற்ற வடவிந்திய மாநிலங்களுக்கும் பொறுந்தும் என்றாலும், இங்கு குறிப்பாக நிலைப்பெற்றுள்ள, தொடர்ந்த பிரச்சினையாக இருந்து வருகிறது. லட்சக் கணக்கான இந்துக்கள் சமுதாயத்தில் பலவிதங்களில் முஸ்லிம்களால் பாதிக்கப் பட்டு வந்துள்ளார்கள். இந்துக்கள் மதம் மாற்றப்பட்டது, அதில் முக்கிய காரணாமாகும். மேலும், செய்கின்ற தொழிலை வைத்து ஜாதிநிலை புதியதாக இருகும் போது, மதமாற்றம், சில ஜாதிகளின் கட்டமைப்பை இருக்கியது. மாமிசம் உண்ணும் நிலை அது பெரிதாகவே பாதிக்கச் செய்தது. கால்நடைகளை கொல்வது, இறைச்சியாக மாற்றுவது, தோல் முதலியவற்றை பதனிடுவது, அதை வைத்து மற்ற தொழில்களை செய்வது முதலியவை இந்துக்கள் செய்து வந்தாலும், முஸ்லிம்களாக மாறிய பிறகு, அவை புதிய ஜாதிகட்டமைப்பாக மாறியது. அந்நிலையில், அத்தொழில் செய்யும் ஜாதியினரும் பாதிக்கப் பட்டனர். உயர்ஜாதியினரால் மற்றும் முஸ்லிம்களால் இவர்கல் பாதிக்கப் பட்டனர். அந்நிலையில் எஸ்.சி சமுதாயத்தினர் அதிகமாகவே பாதிக்கப் பட்டனர். அதனால், அச்சமூக பெண்கள் எளியதாக்குதல்களுக்கு உட்பட்டு வருகின்றனர். இப்போக்கும் மாறவேண்டும். அதாவது செய்யும் தொழில் ஜாதி மற்றும் மதத்துடன் பிணைத்துப் பார்க்கும் போக்கு மாறவேண்டும். அதற்கு தொழிற்முறைகள் நவீனப்படுத்தினால், நிலைமை மாறும்.

Women demonstrate in front of police as usual

Women demonstrate in front of police as usual

அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களில் பெண்மை, தாய்மை, கற்பு முதலியன ஏன் கேவலப் படுத்தப் படுகின்றன?:  கற்பழிப்பு மனிதத்தன்மைக்கே எதிரானது என்று போதிக்க வேண்டிய தருணத்தில்,  மிருகங்களை மனிதர்களாக்க வேண்டிய நிலையில், இவ்விதமாக,  ஒவ்வொன்றும் தங்களது வியாபாரத்தை ஊக்குவிக்கும் போக்கில் நடந்து கொள்கின்றனவே தவிர, உண்மையில் கற்பழிப்பு, அதற்கான காரணம்,  ஆண்களின் வக்கிரத் தன்மை, சமூகத்தில் ஏற்பட்டுள்ள பாலியல் ரீதியிலான மீறல்கள், நியாயம்-தர்மம் போன்ற விசயங்களை மதிக்காமல் இருப்பது போன்ற முக்கியமான விசயங்களை அலசுவதாகத் தெரியவில்லை. ஊடகங்களில்,  சினிமாக்களில், கதைகளில், கவிதைகளில் மற்ற பொழுது போக்கு துறைகளில் பெண்மை ஏன் வியாபாரப் பொருளாக, விளம்பரச் சின்னமாக,  வணிக விபச்சாரத்திற்கு உபயோகப் படுத்தப் படுகிறார்கள் என்பதையும் கவனிக்க வேண்டும்.  கற்பு என்பது ஒரு ஆண்-ஒரு பெண் உறவில் பாதுக்காக்கப் படுகிறது என்ற நியதியை மீறி விவாகரத்து, ஒரு ஆண் பல ஆண்கள் மற்றும் ஒரு பெண் பல ஆண்கள் தொடர்பு, உறவு, கலவி முதலியவற்றை நியாயப் படுத்தும் வகையில் அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களில் வந்து கொண்டிருக்கின்ற வேளையில் பெண்மை, தாய்மை, தூய்மை, கற்பு போன்ற குணங்களுக்கும் முக்கியத்துவம், மதிப்பு, மரியாதை முதலியன குறைந்து விட்டன. பெண்களுக்கு மதிப்பு, மரியாதை ஏன் கடவுளுக்கு சரியான அந்தஸ்து கொடுக்கும் பாரம்பரிய இந்திய சமுதாயத்தில், பெண்மையை மதிக்கத் தெரியாமல், காமுக மிருகங்களாக சில ஆண்கள் தயாராகி வருகிறார்கள் என்றால், ஏன் என்று ஆராயப் படவேண்டும்,  அவர்களை மாற்றியாக வேண்டும்.

Ragul came clean shaven

Ragul came clean shaven

கற்பழிப்பை ஒரு ஆயுதம் போன்று உபயோகப் படுத்தும் நிலை:  கம்யூனிஸத்தில் கற்புக்கு சித்தாந்த ரீதியில் முக்கியத்துவம் இல்லை. இஸ்லாம் போன்ற மதங்களிலும் பலதார இருவழி-மணமுறை முதலியவை இருப்பதால் அங்கு அது பிரச்சினை இல்லை. இக்கருத்து சித்தாந்த ரீதியில் வைக்கப் படுகிறது,  குறிப்பிட்ட சித்தாந்தத்தையோ, மதத்தையோ, பெண்களையோ தூஷிப்பதற்காக இல்லை.  இருப்பினும் பொதுவாக உலகம் முழுவதும் கற்பு போற்றப் படுகிறது. நாகரிகம் மற்றும் மாற்று-வேற்று கலாச்சாரம் முதலிய காரணிகளால் அத்தன்மை, போற்றப் படும் தன்மை,  பாதுகாக்கப் படவேண்டிய தன்மை முதலியவைக் குறைந்து வருகின்றது. அதேபோல, மதம்-ஜாதி முதலியவற்றை மனங்களில் வைத்துக் கொண்டு,  பெண்களைக் கற்பழிப்பது என்று இருந்தால், அத்தகைய வக்கிரமும் ஆராயப் படவேண்டும். ஏனெனில்,  இந்த இரண்டு வழிகளிலும் கற்பழிப்பு ஒரு கொடிய யுக்தியாகப் பயன்படுத்தப் படுகிறது.  கற்பழிப்பு என்பதனை ஒரு சமூகத்தற்கு, நாட்டிற்கு, கலாச்சாரத்திற்கு எதிராகப் பயன்படுத்தப் படும் ஆயுதம்,  குண்டு வெடிப்புப் போன்ற தீவிரவாதத் தனம் என்று அறியப் படாமல், அதனை, மரத்துப் போகும் நிலையில்,  சுரணையில்லாமல் அலசுவதில் எந்த பிரயோஜனமும் இல்லை. கற்பழிப்பு என்றாலே,  ஊடகங்களுக்கு ஏதோ நல்ல மசாலா போன்ற விசயமாகி அதை வைத்துக் கொண்டு, பத்து நாள்,  ஒரு மாதம் ஓட்டி விடலாம் என்ற போக்கு தான் காணப்படுகிறது. கண்டிக்கும் ஊர்வலங்கள், பதாகைகளை வைத்துக் கொண்டு போராட்டம்,  மெழுகுவர்த்தி இரவு ஜெபங்கள் போன்ற விளம்பர அதிரடிகாரியங்களும் தொடரும்.

© வேதபிரகாஷ்

03-06-2014

 

[1] Of the 403 MLAs elected to the UP assembly, a staggering 189 had declared criminal cases against them. But even in a state run by criminals, the SP’s own record is abysmally bad. Of the Samajwadi Party’s 224 MLA’s, 172 of them have serious criminal charges filed against them

[2] http://www.firstpost.com/politics/akhilesh-promises-clean-government-fails-to-deliver-357121.html

[3] “Around 65 per cent of rural population in India defecates in the open and women and girls are expected to go out at night. This does not only threaten their dignity, but their safety as well,” Louis-Georges Arsenault, UNICEF’s Representative to India, said in a statement.

http://www.thehindu.com/news/national/un-condemns-badaun-rape/article6075898.ece