Posts Tagged ‘சட்டம்’

உபி கற்பழிப்புகள், சுரணையற்ற அரசியல்வாதிகள், குரூரக் குற்றவாளி ஆட்சியாளர்கள், சட்டமீறல்கள், நியாய அவமதிப்புகள், தொடரும் மனிதத்தன்மையற்ற செயல்கள் (1)

ஜூன்4, 2014

உபி கற்பழிப்புகள், சுரணையற்ற அரசியல்வாதிகள், குரூரக் குற்றவாளி ஆட்சியாளர்கள், சட்டமீறல்கள், நியாய அவமதிப்புகள், தொடரும் மனிதத் தன்மையற்ற செயல்கள் (1)

Girls raped hanged in UP

Girls raped hanged in UP

27-05-2014 செவ்வாய்க் கிழமை: உத்திரபிரதேசத்தில் இளம்பெண்களை கிண்டல் செய்வது, கற்பழிப்பு, சண்டை, கொலை, கலவரம் என்பதெல்லாம் புதிதயல்ல. முசபர் நகர் விவகாரங்களே அதற்கு சமீபத்தைய சாட்சிகளாக இருக்கின்றன. இருப்பினும், ஆளுகின்ற “யாதவ் அரசு” அதன் கொடுமையை, குரூரத்தை, எல்லா விதங்களிலும் நடந்துள்ள சட்டமீறல்கள் முதலியவற்றை அறிந்தும், அறியாதது போல இருக்கிறது.  கத்ரா கிராமத்தில் எஸ்.சி சமூகத்தைச் சேர்ந்த 14 மற்றும் 15 வயது உடைய இரண்டு சிறுமிகள், வீட்டில் கழிப்பறை வசதி இல்லாததால்  27-05-2014 செவ்வாய்க் கிழமை இரவு 9 மணியளவில் திறந்தவெளிக்குச் சென்றனர்.  இவர்கள் இருவரும் உறவுமுறையில் சகோதரிகள் ஆவர். நீண்டநேரம் ஆகியும் இருவரும் வீடு திரும்பாததால், சிறுமிகளின் பெற்றோர்களும் உறவினர்களும் தீவிரமாகத் தேடத் தொடங்கினர். எங்கு தேடியும் விவரம் கிடைக்காததால், காணாமல் போன சிறுமிகளை கண்டுபிடித்து தரும்படி, போசாரிடம் அவர்கள் புகார் அளித்தனர்.  ஆனால், முதலில் போலீஸ் தரப்பு அலட்சியம் காட்டியதாக கூறப்படுகிறது.

 

Women look at with sorrow

Women look at with sorrow

28-05-2014 புதன்கிழமை: அடுத்தநாள் இதன் தொடர்ச்சியாக, எல்லோரும் தேடியபோது,  மாந்தோட்டத்தில் இவ்விரு சிறுமிகளின் உடல்கள் மரத்தில்கழுத்தில் கட்டப்பட்டு தொங்கிய நிலையில் பெற்றோர்களால் கண்டறியப் பட்டனர். இதைக் கண்டு ஊர் மக்களும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.  இந்தச் சம்பவம் தொடர்பாக காவல் கத்ரா பகுதி காவல் நிலையத்தில் புகார் அளித்தும்,  அவர்கள் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டியதால் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். உடல்களை மரங்களினின்று இறக்கவும் அவர்கள் மறுத்தனர்[1].  சிறுமிகளின் சடலத்தை வைத்து கிராம மக்கள் போராடியதை அடுத்து,  உள்ளூர் அரசியல்வாதிகள் அவர்களை சமாதானம் செய்த பிறகு போலீசார், சிறுமிகளின்  உடல்களை பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

Rape victims brother showing the photos of the victims

Rape victims brother showing the photos of the victims

29-05-2014 வியாழக்கிழமை: சிறுமிகள் இருவரும் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு, பின்னர், தூக்கிலிடப்பட்டதால் இறந்தது பிரேதபரிசோதனை அறிக்கை மூலம் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து,  வழக்குப் பதிவு செய்த காவல்துறை கண்காணிப்பாளரான மான்சிங் சவுகான்,  குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுப்பதாக கிராம மக்களிடம் உறுதி அளித்தார். அதே வேளையில்,  இந்தவிவகாரத்தில் உத்தரப் பிரதேச மாநில அரசுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் நெருக்குதல் கொடுக்கப்பட்டது.  அதன் விளைவாக,  இந்தவழக்கில் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டிய இரண்டு போலீசார் உள்பட ஏழு பேர் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப் பட்டது.  உடனடியாக போலீசார் இருவரும் சஸ்பெண்ட் செய்யப் பட்டனர். இந்தவழக்கின் முதற் கட்ட விசாரணையில்,  இக்கொடூரச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களில் முக்கியமானவர்கள் யாதவ சமூகத்தைச் சேர்ந்த உர்வேஷ் யாதவ்,  பப்பு யாதவ் மற்றும் அவதேஷ் யாதவ் ஆகிய    மூன்று சகோதரர்கள் என்பது தெரிய வந்தது[2].  இந்தச் சம்பவத்தில் மேலும் நால்வருக்கு தொடர்பு இருப்பதை போலீஸ் உறுதி செய்தது[3]. இதன் தொடர்ச்சியாக, சர்வேஷ் யாதவ்,  பப்பு யாதவ் மற்றும் அவதேஷ் யாதவ் ஆகிய மூவரை இதுவரை போலீசார் கைது செய்தனர்.  இவர்களில் சர்வேஷ் யாதவ் என்பவர் காவல்துறையைச் சேர்ந்தவர் என்பது கவனிக்கத் தக்கது. மேலும், நால்வரைத் தேடும் பணி தீவிரப் படுத்தப் பட்டுள்ளது.  போலீஸ் துறையில் யாதவர்களின்  ஆதிக்கம் இருப்பதால்[4] தான் சட்ட அமூல் காரியங்கள் தாமதப் படுத்தப் படுகின்றன என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 

29-05-2014 வெள்ளிக்கிழமை: பல்வேறு  அமைப்புகளும்,  எதிர்க்கட்சிகளும் கடும் நெருக்குதலைக் கொடுத்து வரும் நிலையில், இந்த விவகாரத்தை உத்தரப்பிரதேச அரசு கவனத்துடன் கையாண்டு வருகிறது.  இவ்வழக்கில் அலட்சியம் காட்டிய  மூன்று போலீசார்  உடனடியாக (வெள்ளிக்கிழமை  அன்று) பணியிடை  நீக்கம் செய்யப் பட்டதை[5], முதல்வர் அகிலேஷ் யாதவ் குறிப்பிட்டுள்ளார் . விரைவு நீதிமன்றம் மூலம் இவ்வழக்கை முடிக்க அறிவித்தார்[6]. ரூ.5 லட்சம் பாதிக்கப் பட்ட குடும்பங்களுக்கு அறிவித்தார். இந்த நிலையில்,  எஸ்.சி சமூகத்தைச் ச கோதரிகள் பாலியல் பலாத்காரத்துக்கு உட்பட்டு கொல்லப் பட்ட வழக்கில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு வருகிறது என்றும்,  குற்றவாளிகள் விரைவில் தண்டிக்கப் படுவர் என்றும் மத்திய உள்துறை அமைச்சகத்திடம் உத்தரப்பிரதேச அரசு விளக்கமும் அளித்துள்ளது[7]. இதற்குள், அரசியல்கட்சிகள் வழக்கம் போல இவ்விசயத்தை அரசியல் ஆக்கிவிட்டன.

 

30-05-2014 சனிக்கிழமை: ராகுல் கற்பழிக்கப் பட்ட பெண்களின் குடும்பத்தாரை சந்தித்தார்[8].  வழக்கமான பாணியில் பேசிவிட்டு, சிபிஐ விசாரணை தேவை என்று கருத்துத் தெரிவித்தார்[9].  இவ்வாறாக ராகுலும் தனது விளம்பர  விஜயத்தை முடித்துக் கொண்டுச் சென்றுள்ளார். அவரது விஜயம் காங்கிரஸ்காரர்கள் ஒருதமாஷாகவே செய்து வருகின்றனர்.  இதற்குள் ஊடகங்கள் பெண்கள் மரத்திலிருந்து தொங்கும் காட்சிகளைபோட, சமூகவலை தளங்களில்அவைஉலகம்முழுவதும்பரவிவிட்டன. வழக்கம்போல, இந்தியாவிற்கு எதிரான பிரச்சாரம் ஆரம்பித்து விட்டது. இந்தியாவில் தினமும் பெண்கள் கற்பழிக்கப் படுகின்றனர்; பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, மேல் ஜாதி இந்துக்கள் எஸ்.சிக்களைக் கொடுமைப் படுத்துகிறார்கள் என்று அதிரடி பிரச்சாரம் ஆரம்பித்தது. “தலித்” போர்வையில், சித்தாந்ந்தரீதியில் அது பரவியது. 

 

31-05-2014 ஞாயிற்றுக்கிழமை: இதற்கிடையே பாலியல்  பலாத்காரம் செய்து கொலை செய்யப் பட்டத லித் சகோதரிகளின் சொந்த கிராமமான காட்ராவுக்கு பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதிசென்று இறந்த சகோதரிகளின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினார்.  அவர்களது பெற்றோருக்கு பகுஜன் சமாஜ் கட்சி நிதியிலிருந்து ரூ. 10 லட்சம் வழங்கப்படும் என்றும் மாயாவதி தெரிவித்தார்.  லக்னோவில் நிருபர்களிடம் மாயாவதி கூறியதாவது: அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்வதும், சஸ்பென்ட் செய்வதும் இந்த விவகாரத்தில் எந்தவகையிலும் உதவாது. மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை.  சட்டம்- ஒழுங்கை பாதுகாக்க முடியாவி்ட்டால் ஆட்சியிலிருந்து விலக வேண்டும்.  மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை பிரகடனம் செய்யவேண்டும்.  இந்த விவகாரத்தில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இல்லை யென்றால் மாநில அரசையும் மத்திய அரசையும் உத்தரபிரதேச மாநில மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.  இது போன்ற சம்பவங்களுக்கு நான் முக்கியத்துவம் கொடுத்ததில்லை ஆனால், பதயூன் கிராமத்துக்கு செல்வதென்று நான் முடிவு செய்ததால் தான் மாநில அரசு சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைத்தது.  இந்தசம்பவம் குறித்து விரைவாக விசாரணை நடத்தி குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும் என்றார்[10].

 

01-06-2014 திங்கட்கிழமை: இரண்டு எஸ்.சி[11] சமூகத்தைச் சேர்ந்த இளம்பெண்கள்,  யாதவ் ஜாதி ஆண்களில் கற்பழிக்கப் பட்டு, கொலை செய்யப் பட்டிருக்கிறார்கள்.  அப்பெண்களில் உடல்கள் மரங்களிலிருந்து தொங்குவதைப் போன்று மற்றும் மக்கள் சுற்றிலும் நின்று கொண்டு பார்ப்பது போன்ற புகைப்படம் வெளியாகி,  மக்களை அதிர வைத்துள்ளது[12]. சிலர் அதனை உள்நோக்கத்துடன் பரப்புவதை கண்டனம் செய்துள்ளனர்.  கற்பழிப்பு என்பதே குரூரம், கொடூரம்,  அந்நிலையில் அப்பெண்களைத் தூக்கில் தொங்கும் புகைப்படங்கள் அதைவிடக் குரூரமானவை, கொடூரமானவை [. On one hand it’s been blasted as the “pornography of rape”. On the other hand, it’s been described as a jolt to wake up a blasé society where rape, especially out in the badlands of UP, is commonplace enough that it does not make front page news anymore[13].]. அதுமட்டுமல்லாது, கற்பழிப்பு-கொலைக் குற்றங்களில் சம்பந்தப்பட்டவர்கள், பாதிக்கப்பட்ட பெற்றோர்களை மிரட்டியுள்ளனர்.  ஒரு பெண்ணின் தாய் தாக்கப் பட்டிருக்கிறார்.

 

02-06-2014 செவ்வாய் கிழமை:  பிஜேபி வரவில்லையே என்று பார்த்தால், அவர்களும், 02-06-2014  அன்று போராட்டம் நடத்தி விட்டார்கள்.  அகிலேஷ் வேண்டுமென்றே தேவையில்லாமல் அரசு முதன்மை செயலாளர் அனில்குமார் குப்தாவை இடம் மாற்றம் செய்தது பிஜேபிக்காரர்களைத் தூண்டியது மாதிரி ஆகிற்று[14]  ஊடகங்கள் தார்மீக ரீதியில் பொறுப்பேற்று    க்கொண்டு அகிலேஷ் பதவி விலக வேண்டும் என்று ஊத ஆரம்பித்துள்ளன. போதாகுறைக்கு ஐக்கிய நாடுகள் சங்கம்                 வேறு, இக்கற்பழிப்பு-கொலைகளை கண்டித்துள்ளது[15]. ஆக, இக்கற்பழிப்பு-கொலை ஒரு அனைத்துலக செய்தியாக, விசயமாக மாற்றியாக்கி விட்டது[16]. நாளைக்கு “மோடிஆட்சியில்கற்பழிப்பு” என்று திரித்தும் எழுதப்படலாம். மத்திய அரசு, வழக்கம் போல கவர்னரிடமிருந்து அறிக்கை வந்தால் நடவடிக்கை எடுப்போம் என்று கூறியாகி விட்டது.

 

© வேதபிரகாஷ்

03-06-2014

[1] Only when irate villagers gathered and sought action against the killers and the police chowki staff did the policemen reach the spot. The villagers, however, did not allow the policemen to lower the hanging bodies, but relented after local politicians BSP MLA from Jalalabad Neeraj Maurya, Bhagwan Singh Shakya of the Maurya Samaj and Brijpal Shakya of the Congress pacified them.

http://www.thehindu.com/news/national/other-states/outrage-over-gang-rape-murder-of-cousins-in-up-village/article6063348.ece?ref=relatedNews

[2] Of the seven wanted in the case, three (policeman Sarvesh Yadav and brothers Pappu and Awadhesh Yadav) have been arrested so far, he said. Sarvesh and Pappu were arrested on Thursday.

http://www.thehindu.com/news/national/other-states/gangrape-case-two-constables-sacked-accused-arrested/article6065298.ece?ref=relatedNews

[3] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=94524

[4] http://timesofindia.indiatimes.com/Home/Opinion/Edit-Page/Badaun-gang-rape-and-murder-is-a-wake-up-call-for-Akhilesh-and-SP/articleshow/35961723.cms

[5] http://www.thehindu.com/news/national/govt-to-set-up-rape-crisis-cell-maneka/article6065925.ece?ref=relatedNews

[6] http://www.thehindu.com/news/national/dalit-sisters-rape-akhilesh-for-fasttrack-court-to-punish-accused/article6065800.ece?ref=relatedNews

[7]http://tamil.thehindu.com/india/%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/article6065640.ece

[8] http://www.dnaindia.com/india/report-latest-rahul-gandhi-in-badaun-to-meet-family-members-all-5-accused-arrested-in-badaun-gang-rape-1992376

[9] http://www.thehindu.com/news/national/rahul-meets-family-of-gangrape-victims-demands-cbi-probe/article6069686.ece?ref=relatedNews

[10] http://www.thehindu.com/news/national/other-states/mayawati-seeks-presidents-rule-in-up/article6072560.ece?ref=relatedNews

[11]வழக்கம்போல “தலித்” பிரயோகம்இதில்உள்ளது. சட்டரீதியாகஅதுதவறுஎன்பதால், இங்குதவிர்க்கப்பட்டுள்ளது.

The National Commission for Scheduled Castes has asked the state governments not to use the word ‘Dalit’ in official documents, saying the term was “unconstitutional”. The Commission has stated that sometimes the word ‘Dalit’ is used as a substitute for Scheduled Caste in official documents, sources in State Tribal Department said on Friday. After consultation with the legal department, the Commission said that the word is neither constitutional nor the word has been mentioned in the current laws. Rather ‘Scheduled Caste’ is the appropriate and notified word as per the Article 341 of the Constitution, it said in a letter sent to all states. Acting upon the order, the Chhattisgarh government has directed District Collectors and its departments not to use ‘Dalit’ word in their documents, they said.

http://timesofindia.indiatimes.com/india/Dalit-word-is-unconstitutional-Scheduled-Caste-Commission/articleshow/2710993.cms

[12] http://www.firstpost.com/india/two-girls-in-a-tree-badaun-gangrape-photos-are-inexcusable-1550321.html

[13] http://www.firstpost.com/india/two-girls-in-a-tree-badaun-gangrape-photos-are-inexcusable-1550321.html

[14] http://www.dnaindia.com/india/report-badaun-rape-case-uttar-pradesh-home-official-shifted-1993104

[15] http://www.thehindu.com/news/national/un-condemns-badaun-rape/article6075898.ece

[16] http://www.thehindu.com/news/national/other-states/un-condemns-badaun-rapemurder/article6074540.ece

அஷ்ரம் பாபு ஆசிரமத்தில் போலீஸ் விசாரணை – சாமியார் மறுப்பு, பெண் பேய் பிடித்திருப்பதாக பெற்றோரிடத்தில் ஒப்படைப்பு, ஆதரவாளர்கள் எதிர்ப்பு!

ஓகஸ்ட்23, 2013

அஷ்ரம் பாபு ஆசிரமத்தில் போலீஸ் விசாரணை –  சாமியார் மறுப்பு, பெண் பேய் பிடித்திருப்பதாக பெற்றோரிடத்தில் ஒப்படைப்பு, ஆதரவாளர்கள் எதிர்ப்பு

Asharam babu issue- Two boys killed

பல மாநிலங்களில் புகார்: சாமியார் அஸ்ராம் பாபு மீது செக்ஸ் குற்றச்சாட்டு… போலீஸ் வழக்கு பதிவு[1], மைனர் பெண் மானபங்க புகார்- சாமியார் அசரம் பாபு மீது பாலியல் குற்ற வழக்கு பதிவு[2], என்று செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. குஜராத்தின் ஆமதாபாத் அருகே, ஆசிரமம் நடத்தி வரும் ஆசாராம் பாபு, லட்சக்கணக்கில் சீடர்கள் கொண்டவர். அஷ்ரம் பாபு வட இந்தியாவில் இருக்கும் பல மதகுருக்களில் ஒருவர்[3]. இருப்பினும் சமீபத்தில் இவர் பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளார்:

 1. நில அபகரிப்பு புகார்.
 2. கொலை செய்து விட்டதாக புகார்.
 3. பாலியல் பலாத்காரம்.

இப்படி பாலியல் பலாத்காரம், மர்மக் கொலைகள் போன்ற பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளவர். அசரம் பாபு மீது குஜராத் போலீசார் – அதாவது மோடி அரசாங்க போலீஸார் என்ற் சொல்வதில்லை – ஏற்கனவே கொலை முயற்சி வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர் மீது குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் நில அபகரிப்பு குற்றச்சாட்டும் உள்ளது. இப்படி பல மாவட்டங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டதால், வழக்குகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால், ஒவ்வொரு மாநிலத்திலும் காங்கிரஸ், காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ், பிஜேபி என்று ஆட்சியில் கட்சிகள் உள்ளதால், நிச்சயமாக அரசியல் நோக்கம் இதில் உள்ளது தெரிகிறது. முதலில் ராஜஸ்தான் அரசாங்கம் தாமதப்படுத்துகிறது என்று குற்றஞ்சாட்டினர்.

Asharam babu issue-IT photo

சாமியார்ஆசாராம்பாபுமீதுபாலியல்பலாத்காரபுகார்: சர்ச்சைக்குரிய ஆசாராம் பாபு, 72, சாமியார் மீது, இளம் பெண் ஒருவர், பாலியல் பலாத்கார வழக்கு தொடர்ந்துள்ளார்[4]. இவரின் ஆசிரமத்திற்கு, நாட்டின் பல பகுதிகளில் கிளைகள் உள்ளன. மத்திய டில்லியில் உள்ள, கமலா மார்க்கெட் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்ற, பெயர் குறிப்பிடப்படாத இளம்பெண் ஒருவர், சாமியார் ஆசாராம் பாபு, தன்னை பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக, புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரில், பலாத்கார சம்பவம், ராஜஸ்தானின் ஜோத்பூர் நகரில் உள்ள, ஆசாராம் ஆசிரமத்தில் நடந்ததாக அப்பெண் கூறியதால், வழக்கு பதிவு செய்த போலீசார், விசாரிக்குமாறு, ராஜஸ்தான் போலீசாரை கேட்டுக் கொண்டுள்ளனர். புகாரையும் அங்கு அனுப்பி விட்டனர்.

Asaram-bapu - quick police action

பள்ளியில் இருந்து ஆசிரமம் சென்றது ஏன்?: இந்த மாதம் – ஆகஸ்ட் 2013 – ஆரம்பத்தில், அப்பெண் படிக்கும் பள்ளியிலிருந்து, அவள் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும், அவசரமாக ஆபரேஷன் செய்யவேண்டும் என்றும் மத்தியபிரதேசத்தில் உள்ள சிந்த்வாராவில் உள்ள குருகுலத்தில் இருந்து செய்தி வந்ததாகவும், உடனே பெற்றோர் அங்கு சென்று பார்த்தபோது, நன்றாக இருந்ததாகவும் போலீஸார் சொல்கின்றனர். சாமியார் சொல்லிகொடுத்த மந்திரம் ஜெபித்ததால், நலமடைந்ததாகவும், இருப்பினும் கெட்ட ஆவிகளளவளைப் பிடித்திருப்பதால் அவற்றை விரட்ட ஜோத்பூருக்குச் செல்லவேண்டும் என்றனர்.  இவ்வாறு என்று ஹாஸ்டலில் உள்ளவர்கள் சொன்னதாக போலீஸார் சொல்கின்றனர்[5] பிறகு, உத்தரப் பிரதேசம் ஷாஜகான்பூரை சேர்ந்த அவர், சாமியார் அசரம் பாபுவிடம் ஆசி பெறுவதற்காக,  தனது 15 வயது மகளுடன் 13-08-2013 அன்று ஜோத்பூர் சென்றுள்ளார். தனது மகளுக்கு பேய் பிடித்திருப்பதாக சொல்லி அவரிடம் சென்று முறையிட்டுள்ளார். 15-08-2013 அன்று அதற்கான சடங்குகளை செய்கிறேன் என்று ஆசாராம் பாபு சொல்லியிருந்தார். கிரியைகள் செய்யும் போது, நீங்கள் இருக்கவேண்டிய அவசியம் இல்லை என்று சொன்னாலும், அந்த பெண்ணின் குடும்பம் அங்கேயே தங்கி இருந்தது.

Asaram comments on Delhi rape

சடங்குகள் முடிந்து பெண்ணுடன் பெற்றோர் திரும்பிச் சென்றது, புகார் கொடுத்தது: 17-08-2-13 அன்று ஊருக்குத் திரும்பிய பிறகு, அப்பெண், அசரம் தன்னை பாபு மானபங்கம் செய்ததாக மைனர் பெண், தனது தந்தையிடம் கூறியுள்ளார். இது குறித்து மைனர் பெண் 22-08-2013 மாலை புகார் அளித்தார். இவ்வாறு ஏன் தாமதமாக கொடுக்க வேண்டும் என்று ஆசிரமம் தரப்பினர் கேட்கின்றனர். அசரம் பாபு மீது டெல்லியில் வழக்கு பதிவு செய்யப்பட்டு ஜோத்பூருக்கு மாற்றப்பட்டுள்ளதாக டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர். ஜோத்பூரிலும், அவர் மீது புகார் பதிவு செய்யப்பட்டது என்பது முன்னரே குறிப்பிடப்பட்டது. “ஜுரிடிக்ஸன்” – போலீஸ் கட்டுப்பாட்டில் வரும் இடம் – என்ற பிரச்சினை இதிலும் வரும் போலிருக்கிறது.

Asaram-bapu blames foreign media

போலீஸார் விசாரணை செய்தது: பிறகு போலீஸார், அசிரமத்திற்குச் சென்று அங்குள்ளவர்களிடம் விசாரித்துள்ளனர். ஆஸ்ரம் பாபுவைப் பொறுத்த வரையிலும், இதனை மறுத்துள்ளார்[6]. அவரது சீடர்களும் இது வேண்டுமென்றே, அவர் மீது அபவாதத்தை ஏற்படுத்த கொடுக்கப்பட்ட புகார் என்று கூறி ஆர்பாட்டம் செய்துள்ளனர். இந்த புகார் வேண்டுமென்றே கொடுக்கப்பட்டிருக்கிறது என்று கூறியுள்ளார்[7]. மேலும் குறிப்பிட்ட நாளன்று அவர் இங்கிருந்தாரா இல்லையா என்பதில், முரண்பட்ட பதில்கள் வந்துள்ளன[8]. பிஜு ஜார்ஜ் ஜோசப் என்ற போலீஸ் கமிஷனர் நேரில் சென்று விசாரித்துள்ளார்[9]. மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் குறிபிட்டார். இதற்குள் தில்லியில் உள்ள கமலா மார்க்கெட் போலீஸ் ஸ்டேஷன் எதிரில் சுமார் 500 ஆதரவாளர்கள், புகாரை வாபஸ் வாங்கவேண்டும் என்று ஆர்பாட்டம் செய்தனர்[10]. பிறகு அவர்கள் ஜந்தர்-மந்தர் நோக்கி சென்றனர்[11]. இவர்கள் இப்படி ஆர்பாட்டம் செய்வது வினோதமாக இருந்தது. புகார் ஜோத்பூருக்குச் சென்ற பிறகு, தில்லியில் எதற்கு ஆர்பாட்டம்?

சமீபத்தையசர்ச்சை: டெல்லி மாணவி பலாத்கார சம்பவம் பற்றி கருத்து தெரிவித்த அசரம் பாபு, ‘‘பலாத்காரம் செய்ய வந்தவர்களை சகோதரன் என அழைத்திருந்தால், மாணவி தப்பியிருக்கலாம்’’ என்றார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது  குறிப்பிடத்தக்கது. பிப்ரவரி 14ம் தேதியை, பெற்றோர்களை மதிக்கும் மத்ரி புத்ரி பூஜன் திவஸ் ஆக கொண்டாட வேண்டும் என உ.பி., அரசுக்கு சர்ச்சை சாமியார் ஆஷாராம் பாபு வேண்டுகோள் விடுத்துள்ளார்[12]. டில்லி பாலியல் பலாத்கார சம்பவத்தில், பாதிக்கப்பட்ட பெண்ணின் மீது குற்றம் சாட்டி சர்ச்சையை ஏற்படுத்தியவர் ஆஷாராம் பாபு. இந்நிலையில், நிருபர்களிடம் பேசிய ஆஷாராம், மேற்கத்திய கலாச்சாரத்தின் காரணமாக பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்கு பதிலாக, அந்த நாளை பெற்றோர்களை மதிக்கவும், அவர்களுக்கு சேவை செய்யும் தினமாக (மத்ரி புத்ரி பூஜன் திவஸ்) அறிவிக்க வேண்டும் என உ.பி., முதல்வர் அகிலேஷை கேட்டுக்கொண்டுள்ளார். கடந்த 2012ம் ஆண்டு முதல் பிப்ரவரி 14ம் தேதி மத்ரி புத்ரி பூஜன் திவஸ் ஆக கொண்டாடப்படும் என சட்டீஸ்கர் அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதெல்லாம் சரி, புகார் வரும்படி, நடந்து கொள்வது, சாமியாருக்கு அழகல்லவே?

© வேதபிரகாஷ்

23-08–2013


[5] The daughter of a transporter from Uttar Pradesh, the victim is presently pursuing her Class XII from Bapu’s Chhindwara gurukul in Madhya Pradesh. According to the police, earlier this month the school managers called up her parents claiming that she was critical and that she had to urgently undergo an operation. Aghast, the parents rushed to Chhindwara where they found their daughter in a healthy condition. The hostel officials told the parents that her health improved after their guru gave her a mantra to chant, but since she had been possessed by evil spirits, she could be cured only through a ritual by Asaram Bapu at his Jodhpur ashram.

http://www.thehindu.com/news/national/other-states/asaram-bapu-booked-for-sexual-assault/article5044911.ece

செக்ஸ் வைத்துக் கொள்ள சரியான வயது 16 தான் இருப்பினும் 18 என்று முடிவு செய்யப்பட்டது – சொல்வது ஷிண்டே

மார்ச்30, 2013

செக்ஸ் வைத்துக் கொள்ள சரியான வயது 16 தான் இருப்பினும் 18 என்று முடிவு செய்யப்பட்டது – சொல்வது ஷிண்டே

“எய்ட்ஸ்  தடுப்பு”  பிரச்சாரத்திற்குப்  பிறகு செக்ஸ்  பற்றி  வெளிப்படையாக  பேசுவது,   விவாதிப்பது: சம்மதத்துடன் செக்ஸ், இணக்கத்துடன் செக்ஸ், ஒப்புதலுடன் செக்ஸ், மனம் விரும்பி செக்ஸ் என்றேல்லாம் நாடெல்லாம் வெலிப்படையாக பேசி விவாதங்களும் நடத்தப் பட்டு வருகின்றன. முன்பு, “எய்ட்ஸ் தடுப்பு” பிரச்சாரப் போர்வையில் எப்படி ஜாக்கிரதையான, பாதுகாப்பான, “எய்ட்ஸ்” வராமல் செக்ஸ் வைத்துக் கொள்ள என்னென்ன செய்யவேண்டும் என்று அதிகமாகவே பிரச்சாரம் செய்யப்பட்டது. கோடிகள் செலவழிக்கப்பட்டு, பள்ளிகள், கல்லூரிகள், அலுவலங்கள் என்று பல பொது இடங்களில் “எய்ட்ஸ் தடுப்பு” பிரச்சார பண்டிதர்கள் வந்து கொடுத்து, விவரித்து செயல்முறை விளக்கங்களையும் செய்து காண்பித்தார்கள். இப்பொழுதும் அதே முறையிலான போக்கைக் காணும் போது, ஏதோ அதிகமாக செயல்படுகிறாற்களா என்பது போலத் தெரிகிறது.

நேரிய,  ஒழுக்கமான,  சரியான ஆலோசனைகள்,  விளக்கங்கள்  கொடுக்கப்படாமல்,  எதிர்மறையான விளக்கங்கள் கொடுத்து,  செய்யக்கூடாததை,  எப்படி செய்ய வேண்டும் என்று ஊக்குவிப்பது:

 • மனைவியைத் தவிர மற்ற பெண்களுடன், விபச்சாரிகளுடன் உடலுறவுக் கொள்ளக்கூடாது,
 • அவ்வாறு செய்வது பெண்களுக்கு இழக்கப்படும் அநீதி, அதர்மம் ஆகும்.
 • தாம்பத்திய உறவை புனிதமாகக் கருத வேண்டும்,
 • மனைவிக்கு துரோகம் செய்யக் கூடாது,
 • பெண்களை விபச்சாரத்தில் தள்ளக்கூடாது
 • விபச்சாரத்தை ஊக்குவிக்கக்கூடாது.
 • நீ மற்ற பெண்களுடன் அவ்வாறான செயலில் ஈடுமட்டால், மற்றவர்களும், உன் பெண்களுடன் அவ்வாறான செயல்களில் ஈடுபடலாம்.
 • பெண்மையைப் போற்று
 • தாய்மையைப் போற்று.

என்பது போன்ற நேரிய, ஒழுக்கமான, சரியான ஆலோசனைகள், விளக்கங்கள் கொடுக்கப்படாமல், எதிர்மறையான விளக்கங்கள் கொடுத்து, செய்யக் கூடாததை, எப்படி செய்யவேண்டும் என்பதை தெரியாதவர்கள் கூட தெரிந்து கொள்ளும் வகையில் அசிங்கமான கூத்து நடந்தேறியது. அதேபோல இப்பொழுதும் நடந்து வருவது நோக்கத்தக்கது.

கற்பழிப்பில் சிறுவர்களைச் சிக்க வைப்பது எப்படி: தில்லி கற்பழிப்பிற்கு பிறகு, சிறுவம் கற்பழித்தால் அது குற்றமா இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில் அதில் அகப்பட்ட ஒருவன் 18 வயதிற்கும் கீழாக இருந்தான். அப்பொழுது ஒரு ஆணை அக்குற்றத்தில் சிக்கவைக்க வேண்டுமானால், செக்ஸ் வைத்துக் கொள்ள உகந்த வயது என்ன என்ற விவாதம் வந்தது, உடனே சிறுவர்களையும் சட்டத்தின் பிடியில் சிக்கவேண்டுனமானால், வயது வரம்பைக் குறைத்துதான் ஆக வேண்டும் என்ற நிலையில் 16-18 என்று பரிந்துரைக்க ஆரம்பித்தார்கள்.

செக்ஸ் வயது  16ஆ அல்லது  18: ஜே. எஸ். வர்மா அறிக்கையில் வயது 16 என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஷிண்டே 18 என்று கூறியிருந்தார். அதன்படியே 16 வயது என்று பேசப்பட்டாலும், வரப்போகின்ற சட்டத்தில் 18 என்றுதான் உள்ளது. ஆனால் சுஷில்குமார் ஷிண்டே வயது 16 என்று வாதிட்டார்[1]. இக்கருத்தை போலீஸ்துறை சீரமைப்புப் பற்றிய மாநாட்டில் தெரிவித்தார்[2]. உடனே அதற்கு அவரது பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் கிருஷ்ணா தீத் என்பவரே எதிர்ப்புத் தெரிவித்தார்[3]. அப்பொழுது, செக்ஸ் வைத்துக் கொள்ள சரியான வயது 16 தான் – சொல்வது ஷிண்டே என்று கூறியது மட்டுமல்லாது அதற்கான ஆதாரம் 1860ல் உண்டாக்கிய இந்திய குற்றவியல் சட்டத்திலேயே இருப்பயதாக எடுத்துக் காட்டினார்[4].

அனைத்துக் கட்சி கூட்டத்தின் விவாதம்: அனைத்துக் கட்சிக் கூட்டம் தோல்வி இதற்கிடையே, பாலியல் வன்கொடுமைத் தடுப்புச் சட்ட மசோதா குறித்து விவாதிக்க இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தின்போது 18 வயதிலிருந்து 16 வயதாக குறைப்பதற்கு பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் கடுமையாக எதிர்த்தன. அரசுத் தரப்பிலோ மசோதாவை நிறைவேற்றுவதில் உறுதியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் முரண்பாடுகளும், முட்டல் மோதல்களும் ஏற்பட்டன.

முல்லாயம் சிங் யாதவ் எதிர்ப்பு: சமாஜ்வாடிக் கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் கருத்து தெரிவிக்கையில், வயதைக் குறைப்பதால் ஆபாசமும், அவமானங்களும்தான் அதிகரிக்கும். குற்றச் செயல்கள் பலமடங்கு அதிகரிக்கும். இதை தவறாக பயன்படுத்தும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றார். மேலும் ஆண்களுக்கு எதிராக சட்டத்தைத் தவறாக பயன்படுத்தும் வாய்ப்புகளும் அதிகரிக்கும் என்றார். இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்குப் பின்னர் மீண்டும் ஒரு கூட்டம் நடத்தபப்ட்டது. அதில் சில திருத்தங்களுக்கு மத்திய அரசு உடன்பட்டது[5].

கம்யூனிஸ்டு கட்சி எதிர்ப்பு: இணக்கத்துடன் கூடிய செக்ஸ் உறவு வயதை, 18லிருந்து, 16 ஆக குறைக்கும், புதிய சட்ட திருத்தத்திற்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது[6]. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு நிறைவு நாள் கூட்டம், டில்லியில் நேற்று நடைபெற்றது. இதில், பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்திற்கு பிறகு, கட்சியின் பொது செயலர் சுதாகர் ரெட்டி, நிருபர்களிடம் கூறியதாவது: “இணக்கத்துடன் கூடிய உடலுறவுக்கான வயதை, 18லிருந்து, 16 ஆக குறைத்ததில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. இதனால், ஏற்படும் பிற விளைவுகளை எண்ணிப் பார்க்க வேண்டும். இதனால், குழந்தை திருமணம் போன்ற விரும்பத் தகாத விபரீதங்கள் ஏற்படும், “ இவ்வாறு சுதாகர் ரெட்டி கூறினார். இதில் வேடிக்கை என்னவென்றால், கம்யூனிஸ்டுகளைப் பொறுத்தவரைக்கும் சித்தாந்ந்த ரீதியில் அவர்கள் இப்படி சொல்வதே போலித்தனமாகும். ஏனெனில் அவர்களுக்கு கற்பைப் பற்றிய அவசியமே இல்லை.

சத்தீஸ்கர் முதல்வர் ராமன் சிங் பிரதமருக்கு எழுதிய கடிதம்: இதற்கிடையே, சத்தீஸ்கர் முதல்வர் ராமன் சிங், இந்த விவகாரம் தொடர்பாக, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: “மத்திய அரசின் இந்த முடிவு, மேற்கத்திய கலாசாரத்தை இளைஞர்கள் மத்தியில் ஏற்படுத்தும். கிராமப் பகுதிகளில் வசிக்கும் சிறுமியர் இதனால் பாதிக்கப்படுவர். அத்துடன், கற்பழிப்பு மற்றும் தேவையற்ற கர்ப்பங்கள், கருக்கலைப்புகள் ஆகியவை அதிகரிக்கும் அபாயம் உள்ளது. தவறான பாலியல் குற்றங்களைத் தடுக்க, பள்ளிகளில் செக்ஸ் கல்வியை அறிமுகப்படுத்துவது தான் சிறந்தது”,  இவ்வாறு அவர், தெரிவித்துள்ளார்[7].

சில உதாரணங்கள்: நான் பல இடுகைகளை இப்பிரச்சினைப் பற்றி கீழ்கண்ட இடுககளில் அலசியுள்ளேன்:

 • சினிமாவின் ஆபாசத்தால் தூண்டுதலால் பள்ளிப் பெண்களே காமத்தில் சீரழியும் போக்கு உண்டாகியுள்ளது[8].
 • பள்ளிகளில் ஆசிரியர்களே மாணவிகளை கற்பழிப்பதை பார்த்துக் கொண்டு இருக்கமுடியாது[9].
 • சகமாணவன் மாணவியை ஆபாசவீடியோ எடுக்கும் அளவிற்கு தமிழகம் உள்ளது[10].
 • உயிருக்கு உயிரான தோழியை கற்பழித்த தோழர்கள்[11].
 • சிறுமிகளிடம் ஆபாசப்படம் காட்டி சில்மிஷம்[12].
 • நான்கு வயது பெண்ணையும் கற்பழிக்கும் கயவர்கள் தமிழகத்திலேயே இருக்கிறார்கள்[13].
 • சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த் கிழவருக்கே தண்டனை கொடுத்துள்ளபோது, சிறுவனுக்கு ஏன் தண்டனை கொடுக்க முடியாது[14].
 • இந்தியக்கற்பழிப்பில் வாடிகன் அக்கறைக் கொள்வதும் ஏமாற்றுவேலையாக இருக்கிறது[15]. ஏனெனில், போப்பே இவ்விஷயத்தில் ஒன்றும் செய்யமுடியாமல் இருக்கும் போழுது, நமக்கு அறிவுரை கூற அவருக்கு, அந்த கூட்டத்தாருக்கு அருகதையில்லை.

என்ன செய்ய வேண்டும்: இதையெல்லாம் பெண்ணைப் பெற்றவர்கள் பார்த்துக் கொண்டு சும்மாயிருக்க முடியாது. வயது வந்துவிட்டதால் அவர்கள் சட்டப்படி என்னவேண்டுமானாலும் செய்யலாம் என்று பெற்றோரோ சமூதாயமோ ஊக்குவிக்க முடியாது. கடந்த 60-100 ஆண்டுகளில் திராவிட சித்தாந்தத்தால், சமூகத்தில் ஏற்பட்டுள்ள சீரழவுகளை பாரபட்சமின்று ஆராய்ந்து, அதனால் விளைந்துள்ள தீமைகளை களைய வேண்டியுள்ளது.

 • தாலியறுப்பு விழா கொண்டாடி பெண்மையை உயர்த்த முடியாது.
 • ஆபாசத் தமிழில் பாட்டெழுதி கற்ப்பைக் காப்பாற்ற முடியாது.
 • குஷ்பு போன்றோர் அறிவுரை கொடுத்து தமிழ் பெண்கள் மேன்மை அடைய முடியாது.

ஆகவே நற்பண்புகளை, ஒழுக்கத்தை, நன்னடத்தையை, பெற்றோர்களை மதிக்கும் குணத்தை, பெரியவர்களுக்கு மரியாதை கொடுக்கும் முறையை போதிக்க வேண்டும். இதுதான் மாற்று மருந்தே ஒழிய வெற்று விவாதங்களும், ஊடகப் பிரச்சாரங்களும் வீண்தான். பொழுது போக்க உபயோகமாக இருக்கும்.

© வேதபிரகாஷ்

30-03-2013


[3] She had claimed that lowering the age of consent was contrary to the Protection of Children from Sexual Offences (POCSO) Act, which made sex with those under 18 a criminal offence. The POCSO Act was cleared by Parliament in May 2012, marking the age of consent for sex to 18 years. The anti-rape ordinance also included the same provisions despite the Justice JS Verma Committee’s recommendation to keep the age of consent at 16 years.

[4] Days after Parliament cleared the Criminal Law (Amendment) Bill, 2013, Union Home Minister Sushilkumar Shinde on Tuesday defended his initial proposal to peg the age of consent for sex at 16 years, citing the 153-year-old Indian Penal Code.“The consent age of 16 years was incorporated in the IPC in 1860. No one had looked into it but when my ordinance came for correcting this…whole Parliament was against it. But I brought it to the notice (that) this law was in existence but we have not realised that it was in existence,” Shinde said.

http://newindianexpress.com/nation/article1518718.ece

காமக்குரூரர்களா அமெரிக்காவை விஞ்சுகின்றவர்களா – சமூக சீரழிவின் விளிம்பில் தமிழகம், இந்தியா

பிப்ரவரி19, 2012

காமக்குரூரர்களா அமெரிக்காவை விஞ்சுகின்றவர்களா – சமூக சீரழிவின் விளிம்பில் தமிழகம், இந்தியா

பாலியல்பலாத்காரம்செய்து 4 வயதுபெண்குழந்தைகொலை[1]: திருச்சி, சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட் அருகே, தனியார் இடத்தில் இறந்து கிடந்த நான்கு வயது பெண் குழந்தை, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது[2]. திருச்சி, சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட் பின்புறம், ரோஷன் திருமண மண்டபம் அருகே, பி.எல்.ஏ., நிறுவனத்துக்குச் சொந்தமான காலி நிலம் உள்ளது. இந்த இடம் பயன்படுத்தப்படாமல், பாழடைந்த நிலையில் உள்ளது. கடந்த மாதம் 31ம் தேதி, காலை எட்டு மணிக்கு, அந்த இடத்தில், நான்கு வயது மதிக்கத்தக்க பெண் குழந்தை, இறந்த நிலையில் படுக்க வைக்கப்பட்டிருப்பதை, அப்பகுதி மக்கள் கண்டனர். இது குறித்து, பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில், சம்பவ இடத்துக்கு கண்டோன்மென்ட் எஸ்.ஐ.,க்கள் பால்ராஜ், ராஜ்குமார் உள்ளிட்ட போலீசார் வந்து, குழந்தையின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.  இறந்து கிடந்த குழந்தையை காணோம் என்று யாரும் வராததால்[3], நான்கு நாட்கள் கழித்து, போலீசார் குழந்தையின் உடலை பிரேத பரிசோதனை செய்து, புதைத்து விட்டனர்.

பிரேதபரிசோதனையில்பகீர்தகவல்[4]: பிரேத பரிசோதனையில், அந்த நான்கு வயது பெண் குழந்தை, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதும், அதன் விலா எலும்புகள் நொறுங்கியிருந்ததும் தெரிய வந்துள்ளது. முதலில், “அனாதை குழந்தை” என்று மெத்தனமாக இருந்த கண்டோன்மென்ட் போலீசார், கொடூரமான கொலை என்றதும், பெண் குழந்தை யார் என்பதை அறிய, போட்டோவுடன், பள்ளிகளிலும், ரோட்டோரத்தில் தங்கியிருக்கும் குடும்பங்களிடமும், விசாரணை நடத்தி வருகின்றனர் ஆகவே இதில் கூட அத்தகைய மனப்பாங்கு, பாரபட்சம் முதலியவை இருப்பது தெரிகிறது.

சங்கத்தமிழர்களின் திரிபா, மேனாட்டு சீரழிவின் விபரீதமா? சில தமிழ்  விரும்பிகள் சங்க காலத்தில் பிணத்தைத் தழுவும் பழக்கம் இருந்தது என்று மேடைகளில் பெருமையாகப் பேசுவார்கள். ஆனால், திருவள்ளுவர் அதனை எதிர்மறை உதாரணமாகத்தான் உபயோகப் படுத்தி எடுத்துக் காட்டினார்.

பொருட் பெண்டிர் பொய்மை முயக்கம இருட்டறையில்

ஏதில் பிணந்தழீ இயற்று (913)

அதாவது காசு கொடுத்து முன்பின் தெரியாத ஒரு விபச்சாரியின் / விலைமாதின் / பொது மகளிரின் உடலை தழுவுவது, அதனால் இன்பம் காண்பது முதலியன, இருட்டறையில் ஒரு பிணத்தைத் தழுவுவதற்கு ஒப்பாகும் என்று சாடியுள்ளார். போதாகுறைக்கு, மலைநாட்டில் நம்பூதிரிகளிடம் அத்தகைய வழக்கம் இருந்தது என்றும் எடுத்துக் காட்டுகிறார்கள். அதாவது, ஏதாவது ஒரு கன்னிப்பெண் இறந்து விட்டால், அந்த பிணத்தின் மிது சந்தனத்தை பூசி, இருட்டறையில் வைத்து, ஒரு இளைஞனை உள்ளே அனுப்பி அதனை தழுவ / புணர சொல்வார்களாம். அவ்வாறு அவன் செய்தானா இல்லையா என்பதனை அவன் உடலில் சந்தனம் ஒட்டியிருக்கிறாதா[5] என்று சோதித்தறிவார்களாம்! ஆக அவ்வாறான ஈனச்செயலில் ஈடுபட்டார்களா அல்லது மேனாட்டு காமக்குரூரத்தில் ஈடுபட்டு அந்த பச்சிளம் குழந்தையை பலாத்காரம் செய்து கொன்றார்களா? எப்படி இருப்பினும் அத்தகைய காமக்குரூரர்களை விட்டு வைக்கக் கூடாது. கண்டு பிடித்து கழுவேற்ற வேண்டும். அதாவது இக்கால முறைப்படி தூக்கில் போட வேண்டும்.

வழக்கம்போல பெண்ணியப்புலிகள், வேங்கைகள், சிறுத்தைகள் ஒளிந்து கொண்டு விட்டன: தமிழ் பெண்ணியம், தமிழ் பெண்களின் ஐங்குணங்கள், பென் உரிமைகள் என்றெல்லாம் பேசும் வழக்கம்போல பெண்ணியப்புலிகள், வேங்கைகள், சிறுத்தைகள் எல்லாம் எங்கே உள்ளன என்று தெரியவில்லை. ரஞ்சிதாவிற்காக போராடுவோம் என்று அப்பொழுது குரல் கொடுத்த கம்யூனிஸ பெண்மணியைக்கூட இப்பொழுது காணோம். எல்லாமே ஒளிந்து கொண்டு விட்டன போலும்! முதலில் பெண்கள் சினிமாவில் கேவலமாக வரும் ஆபாசத்தைத் தடுக்க வேண்டும்; அத்தகைய ஆபாசத்தை “வாய் விபச்சாரமாக்கி” தொழில் நடத்தும் விவேக் போன்ற கூத்தாடிகளையும் கண்டிக்க வேண்டும், ஒதுக்க வேண்டும், அத்தகைய ஆபாச நடிகைகள், சினிமா தயாரிப்பாளர்கள், ஊடகக் காரர்களையும் பொது மக்கள் கண்டிக்க வேண்டும், ஏன் தண்டிக்கவும் வேண்டும், இல்லையென்றால், அவர்கள் மாறமாட்டார்கள்.

வேதபிரகாஷ்

19-02-2012


[1] தினமலர், பாலியல்பலாத்காரம்செய்து 4 வயதுபெண்குழந்தைகொலை : பிரேதபரிசோதனையில்பகீர்தகவல், http://www.dinamalar.com/News_Detail.asp?Id=404671

[2] சமீம காலத்தில் திருச்சியில் விபச்சாரம், பாலியல் பலாத்காரம், கற்ப்பழிப்பு முதலியன அதிகரித்துள்ளதையும் கவனிக்க வேண்டும்.

[3] எத்தகையப் பெற்றோர் அவர்கள் என்று தெரியவில்லை. இன்றைய நிலையில், குழந்தைகளையே விற்கின்றனர் என்று செய்திகள் வருகின்றன. பொருட்களை விற்பது போல, குழந்தைகளைத் திருடி விற்கின்றனர். பிறகு, இக்குழந்தையின் நிலை என்ன என்று அதிகாரிகள் தான் கண்டு பிடிக்க வேண்டும்.

[4] தினமலர், பாலியல்பலாத்காரம்செய்து 4 வயதுபெண்குழந்தைகொலை : பிரேதபரிசோதனையில்பகீர்தகவல், http://www.dinamalar.com/News_Detail.asp?Id=404671

[5] தேவநேயப்பாவாணர் இதை மிகைப்படுத்தி விவரமாகவே எழுதியுள்ளார். அத்தகைய இளைஞனை “வெங்கப்பயல்” என்றும் குறிப்பிடுகிறார். அவர் கிறுத்துவர் என்பதனால், இந்தியப் பழக்கங்களை இழிவு படுத்தி எழுத வேண்டும் என்ற நோக்கத்தில் அவ்வாறு இழிவுபடுத்தி எழுதியுள்ளார். எல்.டி. சுவாமிக்கண்ணுப் பிள்ளை என்ற மதமாறி கிருத்துவரும் அவ்வாறே இந்திய சரித்திரத்தைக் குறைப்படுத்தி எழுதியுள்ளார்.