Posts Tagged ‘சமூகக் குரூரம்’

80 வீட்டில் தனியாக இருந்த பெண்களைக் கற்பழித்த குரூர கொக்கோகக் கற்பழிப்பாளி: 2017ல் கைதாகி ஜாமீனில் வெளியே வந்தவன் மறுபடியும் கைது!  – இத்தகைய சமூக குற்றங்கள் தடுக்கப்படவேண்டும் (4)

திசெம்பர்19, 2018

80 வீட்டில் தனியாக இருந்த பெண்களைக் கற்பழித்த குரூர கொக்கோகக் கற்பழிப்பாளி: 2017ல் கைதாகி ஜாமீனில் வெளியே வந்தவன் மறுபடியும் கைது!  – இத்தகைய சமூக குற்றங்கள் தடுக்கப்படவேண்டும் (4)

Arivazagan rape case- Thinathanthi

2017ல் கைதானவன் மார்ச் 2018ல் ஜாமீனில் வெளியே வந்தது:  இந்த வழக்கு நடந்து கொண்டிருக்கும் போதே அறிவழகன் ஜாமீனில் கடந்த மார்ச் மாதம் 2018ல் சிறையில் இருந்து வந்துள்ளான். பின்னர் அம்பத்தூர், பாடி, கொரட்டூர், ஜெ.ஜெ நகர், ஆவடி உள்ளிட்ட பகுதிகளில் மீண்டும் 30க்கும் மேற்பட்ட பெண்களை ஸ்குரூ டிரைவரால் குத்தி கொன்றுவிடுவாதாக மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். மேலும், சில வீடுகளில் கணவர் இருக்கும்போது கூட பெண்களை பலாத்காரம் செய்து உள்ளதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஓராண்டுக்குள் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 80க்கும் மேற்பட்ட பெண்களிடம் பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். தற்போது அவனை கைது செய்து அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்துள்ளோம் என்று போலீசார் தெரிவித்தனர்.  சென்னை, புறநகரில் வீடு புகுந்து பெண்களை பலாத்காரம் செய்த கொடூரனை பிடித்த தனிப்படை போலீசாரை கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் பாராட்டினார்.

Arivazagan rape case- vikatan

அந்தவீடியோக்கள் பறிமுதல்: போலீசார் அறிவழகனை கைது செய்து அவன் வசித்த வீட்டிற்கு அழைத்து சென்று சோதனை நடத்தினர். வீட்டில் இருந்து 80க்கும் மேற்பட்ட பலாத்கார வீடியோக்கள், 25சவரன் நகைகள், பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். ரகசியம் காப்போம்பாதிக்கப்பட்ட பெண்கள் தைரியமாக அறிவழகன் மீது புகார் கொடுக்கலாம். புகார் கொடுக்கும் பெண்களின் விவரங்கள் அனைத்தும் ரகசியமாக வைக்கப்படும். திருட்டு வழக்கு என்றால் அவன் சில மாதங்களில் வெளியே வந்துவிடுவான். எனவே, பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் கொடுத்தால் அவனை பல வருடங்கள் சிறையில் தள்ள முடியும் என்று போலீசார் தெரிவித்தனர். ஆனால், அத்தகைய குற்றப் பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப் பட்டதா என்ற செய்தி வளிவரவில்லை. பெங்களூரு கம்பெனியில் தகாத முறையில் நடந்து கொண்டதால், வேலையிலிருந்து அகற்றப் பட்டிருப்பதால், அங்கும் விசாரித்து அவனது விவரங்களை அறிந்து கொள்ளலாம். மற்ற விசயங்களுக்கு, ஊடகக் காரர்கள், ஏதோ துப்பறிவது போல ஆர்பாட்டம் செய்பவர்கள், இவ்விசயத்தில் அடக்கி வாசிப்பது ஏன் என்று தெரியவில்லை.

Indian films depicting rape-3-Raima Sen injured in Rape Scene

வழக்கறிஞர்களுக்கு பணம், நகை பங்கு: அறிவழகன் போலீசார் பிடியில் சிக்கும்போது, இரண்டு  வழக்கறிஞர்கள் போலீசாரிடம் பேசி, அவரை தனது நெருங்கிய நண்பர் என கூறி தப்பிக்க வைத்து உள்ளனர். ஒட்டு மொத்தமாக, வக்கீல்களைப் பற்றி குறை சொல்லக் கூடாது என்றாலும், இத்தகைய சமூக சீரப்பழிப்பாளிகளுக்கு துணை போகும், வக்கீல்களும் மிக மோசமானவர்களாக மாறியுள்ளனர். பெண்களின் உரிமைகளை விட, குற்றவளிகளுக்கு துணை போவது தெரிகிறது. அந்த இரு வழக்கறிஞர்களுக்கும் அறிவழகன் கொள்ளை அடித்த நகைகளில் பங்கு கொடுத்து உள்ளான். எனவே, அந்த வழக்கறிஞர்களிடம் போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். கொள்ளையடித்த பணத்தை கொண்டு வாரத்துக்கு ஒருமுறை துணை நடிகைகள், அழகிகளிடம் செல்வாராம். அப்போது அந்த பெண்களுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை அப்படியே கட்டிலில் பரப்பி வைத்து அதில் அறிவழகனும் அந்த பெண்ணும் படுத்து ஜாலியாக இருப்பார்களாம். வாரத்தில் குறைந்தபட்சம் இரண்டு  நாள் மசாஜ் சென்டருக்கும், பாலியல் விடுதிக்கும் போகாவிட்டால் தூக்கமே வராது என்று போலீசாரிடம் தெரிவித்துள்ளான். பிறகு சென்னையில் அத்தகைய பாலியல் குற்றங்களும் நடந்து கொண்டிருக்கின்றன என்பது தெரிகிறது. அப்படியென்றால், இளைஞர்களின் கதி பற்றி பெற்றோர் தான் கவலைப்பட வேண்டியுள்ளது.

Women t home subjected to rape-3

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: பிடிபட்டவர் கிருஷ்ணகிரி அருகே உள்ள மாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த அறிவழகன். திருமுல்லைவாயலில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி இருந்துள்ளார். பெங்களூருவில் உள்ள ஐ.டி நிறுவனம் ஒன்றில் பணி செய்து வந்துள்ளார். அங்குள்ள பெண்களிடம் தவறாக நடக்க முயன்றதால் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அதன் பின் னர் சென்னை வந்தவர், பூட்டியிருக்கும் வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையடித்து வந்துள்ளார். நகைத் திருட்டின்போது சம்பந்தப் பட்ட வீட்டில் பெண்கள் தனியாக இருந்தால் அந்த பெண்களை கொலை செய்து விடுவதாக மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார். கடந்த ஆண்டு வேளச்சேரி, குமரன் நகர், கிண்டி உள்ளிட்ட பகுதிகளிலும் இதேபோல் கைவரிசை காட்டிபோது கைது செய்யப்பட்டு மூன்று மாதங்களுக்கு முன்னர் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். அதன் பிறகும் பழைய படி நகை திருட்டு, பலாத்காரம் போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார். இதுவரை சுமார் 70க்கும் மேற்பட்ட பெண்களை பலாத்காரம் செய்திருக்கலாம் என்று கருதப்படு கிறது. பலாத்கார காட்சிகளை செல்போனில் படம்பிடித்தும் வைத்துள்ளார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது[1].

Indian films depicting rape-1

இவ்விசயத்தில் எழும் பிரச்சினைகள், கேள்விகள் முதலியன: இத்தகைய குற்றங்களை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.

  1. பட்டம் படித்து, ஐ.டி கம்பெனியில் வேலைப் பார்த்தாலும், பெண்களிடம் தவறாக நடந்து கொண்டிருக்கிறான். அதனால், பெங்களூரு கம்பெனியிலிருந்து அவன் விலக்கப் பட்டிருக்கிறான்.
  2. கிண்டு, வேளச்சேரி பகுதிகளில் பாலியல் குற்றங்கள் செய்த போது 2017ல் மாட்டிக் கொண்டிருக்கிறான். அப்பொழுதும் இவ்விவகாரம் தெரிந்துள்ளது.
  3. ஆனால், ஏதோ காரணங்களுக்காக, சாதாரணமாக, திருட்டுக் குற்றத்திற்காக கைது செய்யப் பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறான்.
  4. மார்ச் 2018ல், இரு வழக்கறிஞர் மூலம் ஜாமீனில் வெளியில் வந்திருக்கிறான். அப்படியென்றால், அவனுக்கு உதவ வெளியில் ஆட்கள் இருக்கிறார்கள். உதவுகிறார்கள்.
  5. 50 இப்பொழுது 80 ஆகியிருக்கிறது என்றால், ஒரு பெண்ணிற்குக் கூட வெளியே அவனது குற்றத்தை சொல்லவில்லை என்பது திகைப்பாக இருக்கிறது.
  6. “மீ டூ” போன்றவை பிரபலங்களுக்கு, விளம்பரங்களுக்கு, செய்திகளுக்கு மட்டும் தான் போலிருக்கிறது.
  7. இங்கு ரகசியம் காக்கப் ப்டும் என்ற ரீதியில் விசாரணை மேற்கொண்டிருந்தால், நிச்சயமாக ஒரு பெண்ணாவது, புகார் கொடுத்திருப்பாள்.
  8. அந்த வீடியோக்கள் சிக்கியுள்ளன என்றால், அவற்றைப் பார்த்து யார் நடவடிக்கை எடுப்பார்கள்? அத்தகையை யோக்கியமான போலீஸார் இருக்கிறார்களா?
  9. ஜாமீனில் வந்த பிறகு அம்பத்தூர் பகுதியில் வேலையைக் காட்டியுள்ளான் என்றால், மாடஸ் ஆபரென்டை மூலம், போலீஸார் அவனை சுலபமாக அடையாளம் கண்டிருக்கலாம். அந்நிலையில் ஜாமீனில் விட்டதே தவறாகிறது.
  10. இத்தகைய சமூக குற்றங்கங்களை, ஏதோ சாதாரணமாக, பொழுது போக்கு செய்தி போல பிரசுரித்து, மறந்து விடும் விசயமல்ல. மறுபடியும் இக்குற்றங்கள் நடக்காமல் தடுக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் இருக்கிறது.

வேதபிரகாஷ்

19-12-2018.

Indian films depicting rape-2

[1] The Hindu, Serial rapist nabbed in Ambattur, SPECIAL CORRESPONDENT, CHENNAI, DECEMBER 16, 2018 00:24 IST; UPDATED: DECEMBER 16, 2018 00:24 IST.

https://www.thehindu.com/news/cities/chennai/serial-rapist-nabbed-in-ambattur/article25754571.ece

The Ambattur Estate police on Saturday arrested M. Arivazhagan, a native of Mathur in Krishnagiri district, for allegedly raping several women when he went on a burglary spree in the western parts of the city. He was arrested last year when he was operating in the southern suburbs. After he came out on bail he resumed his criminal activities, said the police. 25 burglaries: “He has committed at least 25 burglaries since March. When we were trying to nab him near a bridge, he ran, fell down and broke his hand,” a senior police official told The Hindu. Last year, he was nabbed by the Velachery police for stealing a mobile phone from a software engineer. To the shock of his investigators, the 29-year-old man, an engineering graduate, told them that he had also raped several women at knife-point. The police said he moved to Thirumullaivoyal. “He revealed that at night, he randomly broke into houses in Ambattur, Ambattur Estate, Korattur and Mogappair and raped women before burgling the place,” a senior police officer said.

80 வீட்டில் தனியாக இருந்த பெண்களைக் கற்பழித்த குரூர கொக்கோகக் கற்பழிப்பாளி: ஊடகங்கள் கொடுக்கும் மாறுபட்ட செய்திகள்- 2017ல் கைதாகி ஜாமீனில் வெளியே வந்தவன் மறுபடியும் கைது! (3)

திசெம்பர்19, 2018

80 வீட்டில் தனியாக இருந்த பெண்களைக் கற்பழித்த குரூர கொக்கோகக் கற்பழிப்பாளி: ஊடகங்கள் கொடுக்கும் மாறுபட்ட செய்திகள்– 2017ல் கைதாகி ஜாமீனில் வெளியே வந்தவன் மறுபடியும் கைது!  (3)

Serial rapist arrested 15-12-2018

2017 குற்றவாளி பற்றி 2018ல் புராணம் பாடுவது: அறிவழகனின் குரூரத் தன்மை பற்றிய விவரங்கள் சென்ற ஆண்டிலேயே செய்திகள் வெளிவந்தன. அதைப் பற்றி அலசி முன்னமே பதிவு செய்தேன்[1]. ஆனால், இப்பொழுது, மறுபடியும் அவன் கதையை இவ்வாறு விவரிப்பது, திகைப்பாக இருக்கிறது, “திருமணமாகாத இந்த இளைஞர் பெங்களூரில் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றியுள்ளார். அங்கே தனியாக இருக்கும் வீடுகளில் பெண்களை மிரட்டி, மயக்கமடைய வைத்து பாலியல் வல்லுறவில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்படும் இந்த இளைஞர் காவல்துறை தன்னை தேடுவதை அறிந்து சென்னைக்கு வந்திருக்கிறார்[2]. இரட்டை கதவுகளை கொண்ட வீடுகளில் திருப்புளி மூலம் எளிதில் பூட்டுகளை திறந்துவிடும் வல்லமை பொருந்திய இந்நபர் காலை நேரத்தில் வீடுகளை தேர்வு செய்து இரவில் நுழைந்து பெண்களை மிரட்டி வல்லுறவு செய்து நகைகளையம் பணத்தையும் கொள்ளை அடித்துவிட்டு சென்றுள்ளார்[3]. ஒரு படு கேவலமான குற்றவாளியை, சமூக விரோதியை இவ்வாறு மரியாதையாக நிருபர்கள் செய்தி வெளியிடுவதே அதை விட கேவலமாக இருக்கிறது. பெண்மை பற்றி எல்லாம் மேடை பேச்சுகளில் வீரம் காட்டும், இத்தகையோர், உண்மையில் பெண்களின் பிரச்சினைகள் பற்றி கவலைப் படுவதாக தெரியவில்லை[4].

Serial rapist arrested 15-12-2018- The Hindu

15-12-2018 அன்று சனிக்கிழமை இரவு கைது: சென்னை மற்றும் புறநகர் பகுதி களில் தொடர் கொள்ளைகளில் ஈடுபட்டு வந்த பிரபல கொள்ளையன் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் 70-க்கும் மேற்பட்ட பெண்களை பலாத்காரம் செய்துள்ளதாக வும் தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் அம்பத்தூர், பட்டரைவாக்கம், முகப்பேர், கொரட்டூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர் கொள்ளைகள் நடைபெற்றன. மேலும், திருட்டு நடந்த வீட்டில் இருந்த பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதில் சம்பந்தப்பட்ட குற்ற வாளியை பிடிக்க, அம்பத்தூர் காவல் மாவட்ட துணை ஆணையர் ஐ. ஈஸ்வரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது[5]. இந்நிலையில், அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீஸார் 15-12-2018 அன்று சனிக்கிழமை இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப் போது, பைக்கில் வந்த இளைஞரை பிடித்து விசாரித்தனர்[6]. அவர் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த அறிவழகன் (29) என்பது தெரியவந்தது. அவரை போலீஸார் கைது செய்து நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைத்தனர்.

Arivazhagan case- DM-18_11_2017_017_005.small

பணத்தை கட்டிலில் கொட்டி பெண்களுடன் ஜாலியாக இருப்பது தனி சுகம்:  இதுவரை 80 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக விசாரணையில் போலீசாரிடம் ஒப்புக்கொண்டுள்ளான்[7]. கொள்ளையடித்த பணத்தை கட்டிலில் கொட்டி பெண்களுடன் ஜாலியாக இருப்பது தனி சுகம் என்றும் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளான்[8]. ஆனால் பலரும் நகை திருட்டு பற்றி மட்டுமே புகார் கொடுத்தனர். குடும்ப கவுரவம் கருதி பாலியல் பலாத்காரத்தை மறைத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், கடந்த மாதம் நவம்பர் 2018, ஆவடி காமராஜர் நகரில் உள்ள ஒரு வீட்டில் வாலிபர் ஒருவர் நள்ளிரவில் நுழைந்து ஒரு பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றார். அப்போது அந்த பெண் சத்தம் போட்டதால் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடினார்.

Techie-burglar raped many women-Dinamalar- 18-11-2017

கேமரா பதிவு வைத்து சோதனை: இந்த புகாரை போலீசார் துருப்பு சீட்டாக வைத்து விசாரணையை வேறு கோணத்தில் நடத்த துவங்கினர். பெண் பித்தன் ஒருவன்தான் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறான் என்ற முடிவுக்கு வந்தனர். எனவே, கொள்ளையர்களில் பெண் பித்தர்களின் பட்டியலை தயாரித்தனர். மேலும், பாலியல் பலாத்கார முயற்சி தொடர்பான புகார் கொடுத்ததன் அடிப்படையில் சம்பவம் நடந்த பகுதியில் கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அதில் கொள்ளையனின் உருவம் பதிவாகி இருந்தது. இதனையடுத்து அந்த உருவத்தை வைத்து வாலிபரை தீவிரமாக தேடி வந்தனர்.இந்நிலையில், அம்பத்தூர் அடுத்த பட்டரைவாக்கம் பகுதியில் பைக்கில் வேகமாக வந்த ஒரு வாலிபரை ரோந்து போலீசார் பிடித்தனர். அவர் வைத்திருந்த பைக்கிற்கு எந்த ஆவணமும் இல்லை. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையம் கொண்டு வந்து தீவிரமாக விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் ஆவடி அடுத்த திருமுல்லைவாயல், லலிதாம்பாள் நகர், 17வது தெருவைச் சார்ந்த அறிவழகன் (29) என்பது தெரியவந்தது.

techie-burglar-raped-many-women-toi-18-11-2017

எம்பிஏ படித்து காமக்கொடூரனான மிருகம்: இவனிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தது. குற்றவாளி சொல்ல சொல்ல போலீசாரின் தலையே சுற்ற ஆரம்பித்தது. விசாரணையில் கிடைத்ததாக போலீசார் தெரிவித்த தகவல்கள்: அறிவழகனின் சொந்த ஊர் கிருஷ்ணகிரி மாவட்டம், மாத்தூர் கிராமம். திருமணம் ஆகவில்லை. எம்பிஏ படித்து விட்டு பெங்களூரில் உள்ள ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றி உள்ளார். அப்போது, அந்த பகுதிகளில் தனியாக இருக்கும் வீடுகளில் உள்ள பெண்களை மிரட்டியும், மயக்கமடைய செய்தும் பாலியல் பலாத்காரம் செய்து உள்ளான். இது குறித்து போலீசாருக்கு பல புகார்கள் வந்துள்ளன. போலீசார் தேடுவதை அறிந்து அங்கிருந்து தப்பி சென்னைக்கு வந்துள்ளான். இவன் இரட்டை கதவுகளை கொண்ட ஸ்குரூக்களை சத்தமில்லாமல் எடுப்பத்தில் வல்லவன்[9]. இதற்காக ஸ்குரூ டிரைவர் எப்போதும் வைத்து இருப்பான். காலை நேரங்களில் இரட்டை கதவு மற்றும் தனியாக உள்ள வீடுகளை தேர்வு செய்வான் பிறகு நள்ளிரவில் அந்த வீடுகளின் இரட்டை கதவுகளை ஸ்குரூ டிரைவர் கொண்டு திறந்து வீட்டிற்குள் செல்வான்[10]. பெண்களின் வாயை பொத்தி தனியாக இருக்கும் அறைக்கு இழுத்து செல்வான். பெண்கள் திமிறினால் உன் குழந்தை, கணவரை கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டுவான். அப்படியும் பணியாவிட்டால் மயக்க மருந்தை சுவாசிக்க செய்து அவர்களை தனி அறையில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு, அவர்களிடம் உள்ள நகைகளை திருடிக் கொண்டு சென்றுவிடுவான்.

techie-burglar-raped-many-women-indian-express-18-11-2017

சோரம் போன பெண்கள் வெளியில் விசயத்தை சொல்லாதது: பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளான பெண்களும் தங்கள் குடும்ப எதிர்கால வாழ்க்கையை கருதி நகை திருடுபோனதாக மட்டும் குடும்பத்தினரிடம் தெரிவித்து வந்துள்ளனர். வேளச்சேரி கிண்டி, குமரன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் பெண்களை பலாத்காரம் செய்தும், நகைகளை திருடியும் உள்ளான். சில பெண்கள் பயத்தில் சம்மதித்த உடன், அவர்களை பலாத்காரம் செய்து  தனது செல்போனில் வீடியோ எடுத்து, இதனை இணையதளத்தில் வெளியிட்டால் உங்கள் மானம் போகும் எனக்கூறி பெண்களிடம் நகை, பணத்தையும் கொள்ளை அடித்துள்ளான். இது குறித்து பல பெண்கள் போலீசாருக்கு புகார் கொடுக்க பயந்து உள்ளனர். இதில் துணிச்சலான ஒரு பெண் வேளச்சேரி காவல் நிலையத்திற்கு வந்து புகார் அளித்துள்ளார். அதன்படி, போலீசார் கடந்த 2017ம் ஆண்டு இறுதியில் அறிவழகனை கைது செய்துள்ளனர். பின்னர் அவனை விசாரணை செய்தபோது மேற்கண்ட பகுதியில் 50க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து நகைகளை கொள்ளையடித்து இருப்பதை ஒப்புக் கொண்டுள்ளான். இதனையடுத்து, போலீசார் அவனிடம் இருந்து 50 சவரன் நகைகளை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் அவனை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்துள்ளனர்.

வேதபிரகாஷ்

19-12-2018.

Arivazagan rape case- vikatan

[1] https://womanissues.wordpress.com/2017/11/20/conflicting-reports-about-serial-rapist-by-media-and-police/

[2] பிபிசி, சென்னையில் 80 பெண்களை பாலியல் வல்லுறவு செய்ததாக .டி. இளைஞர் கைது, 17-12-2018.

[3] https://www.bbc.com/tamil/india-46588385

[4] https://womanissues.wordpress.com/2017/11/20/techie-rape-more-than-50-proves-vulnerability-of-women-living-alone-at-homes/

[5] தி.இந்து, சென்னை, புறநகரில் கைவரிசை காட்டிய பிரபல கொள்ளையன் கைது: பல பெண்களை பலாத்காரம் செய்ததாக தகவல், Published :  17 Dec 2018  09:44 IST

Updated :  17 Dec 2018  10:12 IST.

[6] https://tamil.thehindu.com/tamilnadu/article25761785.ece

[7] தமிழ்.வெப்.துனியா, 80 பெண்களை மிரட்டி கற்பழிப்பு: சென்னையில் ஐடி வாலிபர் கைது, Last Modified திங்கள், 17 டிசம்பர் 2018 (09:25 IST).

[8] https://tamil.webdunia.com/article/regional-tamil-news/a-it-employee-in-chennai-arrested-for-abusing-80-girls-118121700015_1.html

[9] தினகரன், ஸ்குரூ டிரைவர் மூலம் கதவை திறந்து குழந்தை, கணவரை கொன்றுவிடுவதாக மிரட்டி 80 பெண்கள் பலாத்காரம், 2018-12-17@ 00:16:24</p>

[10] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=458797

சத்தியராஜ் கனகவல்லியைத் தாக்கிக் கொலை செய்தது பொருளாதாரக்குற்றமா, சமூகக்குரூரமா, மனிதபயங்கரவாதமா?

ஜூலை26, 2010

சத்தியராஜ் கனகவல்லியைத் தாக்கிக் கொலை செய்தது பொருளாதாரக்குற்றமா, சமூகக்குரூரமா, மனித பயங்கரவாதமா?

வழக்கம் போல, ஊடகங்களில் தரப்படும் விவரங்களில் சில வேறுபாடுகள் காணப்படுகிண்றன. அவை சரி பார்க்கவேண்டியுள்ளது.

Murder-at-Jeer-Mutt-2010

Murder-at-Jeer-Mutt-2010

சேலையூர் அருகே பரபரப்பு[1]

மாலைச்சுடர், Sunday, 25 July, 2010   02:48 PM

சென்னை, ஜூலை 25:சென்னையை அடுத்த சேலையூரில் அகோபிலமடத்தில் திருட வந்த திருடன் ஒருவன், அங்கிருந்த மூதாட்டியை கிணற்றில் தள்ளி கொலை செய்தான்.தண்ணீரில் மூழ்கியதால் அவனும் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தா‌ம்பர‌த்தை அடு‌த்த சேலையூ‌‌ர் பிருந்தாவன் தெருவில் புக‌ழ்பெ‌ற்ற அகோபிலமடம் உ‌ள்ளது. இது 600 ஆ‌ண்டு பழையானது. மு‌ன்னா‌ள் ‌பிரதம‌ர் தேவகவுடா உ‌ள்‌ளி‌ட்ட மு‌க்‌கிய ‌‌பிரமுக‌ர்க‌ள் இ‌ந்த ம‌ட‌த்திற்கு வருவது‌ண்டு.  இந்த மடத்தினை 44வது ஜீயர் நிர்வகித்து வருகிறார். இங்கு பாடசாலை, கல்யாண மண்டபம், தியான மடம் ஆகியன உள்ளது. இந்த மடத்தின் 44வது அழகிய சிங்கர் ஜீயரின் பிறந்த நாள் விழா நடைபெற்று வருகிறது.

இந்த மடத்தின் 44வது அழகிய சிங்கர் ஜீயரின் பிறந்த நாள் விழா நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் கலந்து கொள்வதற்காக சின்ன காஞ்சிபுரத்தைச் சேர்ந்த கனகவள்ளி (வயது 60) மடத்தில் தங்கி இருந்தார். இவரது கணவர் வாசுதேவன் இங்குள்ள பாடசாலையில் வார்டனாக வேலைபார்த்து வருகிறார். இன்று அதிகாலை (25-07-2010) நான்கு மணி அளவில் கனகவள்ளி எழுந்து மடத்தின் முற்றத்தை சுத்தம் செய்து கொண்டிருந்துள்ளார். அப்போது, மர்ம வாலிபர்   ஒருவன் மடத்தின் காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்துள்ளார்.  இதை கண்டதும் கனகவள்ளி திருடன், திருடன் என கூச்சலிட்டுள்ளார்.

உடனே, அந்த மர்ம நபர் கனகவள்ளியை மிரட்டி தூக்கிச் சென்று அருகில் இருந்த கிணற்றுக்குள் வீசியுள்ளார். பின்னர் அந்த வாலிபரும் கிணற்றுக்குள் குதித்து அப்பெண்ணை கத்தியால் குத்தி தண்ணீருக்குள் மூழ்கடித்து கொலை செய்துள்ளார்.இப்பெண்ணின் அலறல் சத்தத்தைக் கேட்டு மடத்தில் தங்கியிருந்தவர்கள் ஓடிச் சென்று கிணற்றுக்குள் எட்டிப்பார்த்துள்ளனர்.

கிணற்றுக்குள் அந்த வாலிபர்  வெளியேற முடியாமல் தண்ணீருக்குள் சிக்கி தவித்துக் கொண்டிருந்தார்.இதை பார்த்தவர்கள் கிணற்றுக்குள் இறங்கி அந்த நபரை மீட்டுள்ளனர். அப்போது கிணற்றுக்குள் கனகவள்ளி  இறந்த நிலையில் பிணமாக கிடந்துள்ளார்.

மர்ம நபரை மீட்ட பொதுமக்கள் அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் செல்லும் வழியிலேயே அந்த நபர் உயிரிழந்துள்ளார்.இது குறித்து சேலையூர் போலீசுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைவில் வந்து இறந்த கனகவள்ளியின் உடலை பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்த வாலிபரின் பெயர் சத்தியராஜ் (வயது 35) என தெரிய வந்துள்ளது. இவர் எதற்காக மடத்திற்குள் ஏறி குதித்தார்? என்பது குறித்து சேலையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இறந்த வாலிபருடன் மேலும் ஒரு நபர் வந்ததாக கூறப்படுகிறது. அவரை பற்றியும் போலீசார் விசாரித்து வருகின்றனர்

ஆனா‌ல் மட‌த்‌தி‌ன் அருகே உ‌ள்ள குடி‌யிரு‌ப்புவா‌சிக‌ள் கூறு‌ம்போது, மட‌த்த‌ி‌ல் ஏராளமான நகை, பண‌‌ம் உ‌ள்ளது. இதனை கொ‌ள்ளையடி‌க்கு‌ம் நோ‌க்‌கி‌ல் ஐ‌ந்‌தி‌ற்கு‌ம் மே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ள் வ‌ந்தாக கூ‌றின‌ர். ஆனா‌ல் இதனை காவ‌ல்துறை‌யின‌ர் உறு‌தி செ‌ய்ய‌வி‌ல்லை[2].

சமீபத்தில் இந்த மடத்திற்கு பக்தர் ஒருவர் தங்கத்தேர் ஒன்றை காணிக்கையாக அளித்துள்ளார். மேலும் மடத்தில் ஏராளமான ஆபரணங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.  ஜீயரின் பிறந்தநாள் விழாவின் போது, இந்த ஆபரணங்கள் வெளியே எடுத்து பூஜைக்கு பயன்படுத்தப்படும் என கூறப்படுகிறது. இதனை கொள்ளையடிக்கும் நோக்கதிலேயே அந்த மர்ம நபர் மடத்திற்குள் ஏறி குதித்து வந்திருக்க வேண்டும் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

சென்னையில் பயங்கரம்-அகோபில மட ஊழியை படுகொலை-கொள்ளையனை அடித்துக் கொன்ற ஊழியர்கள்[3]

Mutt-well-where-the-body-found

Mutt-well-where-the-body-found

ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 25, 2010, சென்னைக்கு அருகே சேலையூரில், அகோபில மடத்திற்குள் புகுந்த கொள்ளையர்கள், அங்கிருந்த பெண் ஊழியர் கனகவல்லியை கத்தியால் குத்திக் கொலை செய்து கிணற்றுக்குள் வீசினர். இதனால் ஆத்திரமடைந்த மட ஊழியர்கள் ஒன்று சேர்ந்து கொள்ளையன் ஒருவனைப் பிடித்து சரமாரியாக தாக்கியதில் அவனும் உயிரிழந்தான்.

சேலையூரில் அகோபில மடம் உள்ளது. பிரபலமான இந்த மடத்தில் 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தங்கியுள்ளனர். இவர்கள் அதிகாலை 3 மணிக்கெல்லாம் எழுந்து தங்களது பணிகளைப் பார்க்க ஆரம்பிப்பார்கள்.

இன்று காலையும் ஊழியர்கள் வழக்கம் போல எழுந்து தத்தமது வேலைகளில் மூழ்கியிருந்தனர். அப்போது கனகவல்லி என்ற ஊழியை, மடத்திற்குப் பின்புறம் கோலம் போட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு திடீரென ஐந்துக்கும் மேற்பட்ட கொள்ளையர்கள் புகுந்தனர்.

இதைப் பார்த்த கனகவல்லி திருடன் திருடன் என கத்தியுள்ளார். இதைப் பார்த்த கொள்ளையர்கள் கனகவல்லியை சூழ்ந்து கத்தியால் சரமாரியாக குத்தினர். இதில் அவர் படுகாயமடைந்தார். பின்னர் கனகவல்லியை தூக்கி அங்கிருந்த கிணற்றில் வீசினர்.

அப்போதும் வெறி அடங்காத கொள்ளையர்களில் சத்தியராஜ் என்பவன் உள்ளே குதித்து கனகவல்லியை நீரில் மூழ்கடித்துக் கொடூரமாக கொன்றான். இந்த சமயத்தில், கனகவல்லி போட்ட சப்தம் கேட்டு மட ஊழியர்கள் ஓடி வந்தனர்.

இதைப் பார்த்த கொள்ளையர்கள் அங்கிருந்து ஓடினர். ஆனால் கிணற்றுக்குள் குதித்த சத்யராஜ் மட்டும் தப்ப முடியாமல் மட ஊழியர்களிடம் மாட்டிக் கொண்டான். கனகவல்லி கொலை செய்யப்பட்டதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள், ஆவேசத்துடன் சத்தியராஜை கடுமையாக தாக்கினர். இதில் அவன் படுகாயமடைந்தான்.

பின்னர் போலீஸாருக்குத் தகவல் தெரியவரவே அவர்கள் விரைந்து வந்து சத்தியராஜை மீட்டு குரோம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சத்தியராஜ் உயிரிழந்தான்.

இந்த சம்பவத்தால் சேலையூரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அகோபில மடத்தில் உள்ள பல கோடி மதிப்புள்ள தங்கம், பணம் உள்ளிட்டவற்றை கொள்ளையடிக்கும் நோக்கில் அங்கு கொள்ளையர்கள் புகுந்துள்ளனர்.

கொள்ளைக் கும்பலில் ஐந்து பேர் இருந்ததாக தெரிகிறது. தப்பி ஓடிய கும்பலைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

தேவெ கெளடா வரவிருந்த சமயத்தில் அசம்பாவிதம்

இன்று காலை 7 மணிக்கு இந்த மடத்திற்கு முன்னாள் பிரதமர் தேவெ கெளடா வருவதாக இருந்தது. பிற்பகல் 12 மணியளவில் திரும்பிச் செல்ல அவர் திட்டமிட்டிருந்தார். ஆனால் இந்த அசம்பாவிதம் நடந்து விட்டதால் அவரது பயணம் ரத்து செய்யப்பட்டது.

Mutt-well-where-body-found-NIE

Mutt-well-where-body-found-NIE

சென்னை மடத்தில் பெண் கொலை

சென்னை : சென்னை அருகே உள்ள சேலையூரில் உள்ள அகோபில மடத்தில் பணிபெண் ஒருவர் கொள்ளையர்களால் கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது[4]. அகோபில மடத்தில் இன்று அதிகாலை மர்ம நபர்கள் சிலர் கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளனர். அப்போது மடத்தில் பணியாற்றும் கனகவள்ளி என்ற பெண்ணிடம் கொள்ளையர்களில் ஒருவன் நகையை பறிக்க முயற்சி செய்துள்ளான். கனகவள்ளி சத்தமிட்டதால், அவரை கொலை செய்து அருகில் இருந்த கிணற்றில் வீசி உள்ளான். கொள்ளை கும்பலைச் சேர்ந்த சத்தியராஜ் என்பவனை மட்டும் பொதுமக்கள் விரட்டிப் பிடித்துள்ளனர்.பொதுமக்கள் தாக்கியதில் சத்தியராஜ் .யிரிழந்துள்ளான். இந்த கொள்ளை மற்றும் கொலை சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது. இதனால் அகோபில மடத்திற்கு இன்று வருவதாக இருந்த முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Jeer-mutt-murder-for-gain-NIE

Jeer-mutt-murder-for-gain-NIE


[1] http://www.maalaisudar.com/newsindex.php?id=34982%20&%20section=1

[2] http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/1007/25/1100725025_1.htm

[3] http://thatstamil.oneindia.in/news/2010/07/25/chennai-salaiyur-ahobilam-mutt-burglary-murder.html

[4] தினமலர், சென்னை மடத்தில் பெண் கொலை, ஜூலை 25,2010,

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=46991