பாலியல் தொல்லைகளுக்கு உட்பட்ட பள்ளி–கல்லூரி மாணவிகள் தற்கொலை முயற்சி செய்வது, தற்கொலை செய்து கொள்வது முதலியன – பலாத்காரங்களின் உருவங்கள் (2)
ஏப்ரல்.30 2017 – பி.டி.மாஸ்டரின் செக்ஸ் டார்ச்சர் தாங்காமல் மாணவி தற்கொலை முயற்சி: வத்தலகுண்டுவை சேர்ந்த மாணவி நிலக்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்துள்ளார். இவரிடம், அப்பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் கார்த்தி என்பவர் மாணவியின் செல்லிடபேசிக்கு ஆபாசமாகப் பேசியும், ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பியும் பாலியல் தொந்தரவு கொடுத்தாராம்[1]. இதனால், பாதிப்புக்குள்ளான மாணவி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை உறவினர்கள் மீட்டு வத்தலகுண்டு காந்திநகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இத்தகவலை அறிந்த விடுதலை சிறுத்தை கட்சியினர் மாணவியை தற்கொலைக்கு தூண்டிய உடற்கல்வி ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வத்தலகுண்டு காளியம்மன்கோவில் அருகே கட்சியின் மாநில துணை செயலர் சக்தி தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்[2]. மறியலில் ஈடுபட்டவர்களிடம் வத்தலகுண்டு காவல் துறையினர் பேச்சு வார்த்தை நடத்தியதை தொடர்ந்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. பின்னர், மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
தார்மீகம், ஒழுக்கம், கட்டுப்பாடு…..போன்றவை இல்லாமல் இருக்கும் போது, எதைப் பற்றியும் கவலைப் படாமல், இரையைத் தேடும் விலங்குகளாக மாறுகிறார்கள்: பி.டி.மாஸ்டர், உடற்பயிற்சி ஆசிரியர், ஸ்போர்ட்ஸ் மாஸ்டர், என்.சி.சி. மாஸ்டர், என்.எ.ஸ்.எஸ்.மாஸ்டர், என்றெல்லாம் இருப்பவர்கள், இக்காலத்தில் வரம்பு மீறி மாணவிகளிடம் நடந்து கொள்கிறார்கள். தட்டிக் கொடுப்பது என்று ஆரம்பித்து தொட்டுப் பேசுவது என்று விளையாடுகிறார்கள். ஃபீல்டு விசிட் பெயரில் அதிகமாகவே மாணவிகளை சதாய்க்கிறார்கள். இதெல்லாம் தான் இவர்களுக்கு பாலியல் ரீதியில் சதாய்ப்பதற்கு உதவி அளிக்கின்றன. தார்மீகம், ஒழுக்கம், கட்டுப்பாடு…..போன்றவை இல்லாமல் இருக்கும் போது, எதைப் பற்றியும் கவலைப் படாமல், இரையைத் தேடும் விலங்கு மாதிரி அலைந்து, வலைவீசி சிக்க வைத்து, பலிகடா ஆக்குகிறார்கள். மானமிழந்த, கற்பிழந்த மாணவிகள் பெற்றோர்களுக்கு சமூகத்திற்கு அஞ்சி தற்கொலை புரிய துணிகிறார்கள். முயற்சி செய்கிறார்கள். உயிரையும் விடுகிறார்கள். எனவே, இத்தகைய, பாலியல் வன்மங்களை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது.
மார்ச்.31 2017 – பள்ளி தாளாளர் ஆபாசபடம் எடுத்து மிரட்டியது: ஆபாச படம் எடுத்து மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்ததால் பத்தாம் வகுப்பு மாணவி சென்னையில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலைக்கு முன்பாக மாணவி எழுதிய கடிதத்தின் அடிப்படையில் பள்ளி தாளாளரை கோயம்பேடு போலீசார் கைது செய்து உள்ளனர்[3]. தற்கொலை செய்து கொண்ட மாணவியின் பெயர் மணிமாலா. 15வயதாகும் மணிமாலா பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார். இவர் சென்னை கோயம்பேடு சேமாத்தம்மன் நகர் 2-வது செக்டர் பகுதியை சேர்ந்தவர் பழனிவேலு. இவரது மனைவி மகேஸ்வரி ஆகியோரின் மகளாவார். தேர்வு விடுமுறையில் வீட்டில் இருந்த மணிமாலா புதன்கிழமையன்று திடீரென தனது உடலில் தீவைத்துக்கொண்டார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்[4].
மயக்க மருந்து கொடுத்து, கெடுத்து பள்ளி தாளாளர் ஆபாசபடம் எடுத்தது மற்றும் மிரட்டியது: இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது[5]: கைது செய்யப்பட்டுள்ள சரவணன் தனியார் தொடக்கப் பள்ளி நடத்திவருகிறார். அதன் தாளாளராகவும் உள்ளார். அவருக்கு மனைவி, 12 வயதில் பெண் குழந்தை உள்ளனர். இந்த நிலையில், 10-ம் வகுப்பு தேர்வு சம்பந்தமாக மாணவிக்கு சில ஆலோசனைகள் கூறவேண்டி இருப்பதால், தன் வீட்டுக்கு அனுப்பிவைக்குமாறு, மாணவியின் பெற்றோரிடம் சரவணன் சில மாதங்களுக்கு முன்பு கூறியுள்ளார். இதை நம்பிய பெற்றோர், மாணவியை அவரது வீட்டுக்கு அனுப்பிவைத்தனர். வீட்டில் தனியாக இருந்த சரவணன், மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை மாணவிக்கு கொடுத்துள்ளார். மாணவி மயங்கியதும் அவரை பலாத்காரம் செய்துள்ளார். இதை செல்போனிலும் படம் பிடித்துள்ளார். மயக்கம் தெளிந்து எழுந்த மாணவி, நடந்ததை ஊகித்து சரவணனிடம் கேட்டுள்ளார். இங்கு நடந்த அனைத்தையும் செல்போனில் படம்பிடித்து வைத்துள்ளதாக கூறிய சரவணன், இதை யாரிடமாவது சொன்னால் இணையதளத்தில் வெளியிடுவேன் என்று கூறி மிரட்டியுள்ளார். பயந்துபோன மாணவி இதுபற்றி யாரிடமும் சொல்லவில்லை.

பாதிக்கப்படும் பெண்கள்
வீடியோவைக் காட்டி–மிரட்டி, மறுபடி–மறுபடி செக்ஸ்: வீடியோவை காட்டி மிரட்டியே மாணவியிடம் சரவணன் தொடர்ந்து தகாத முறையில் நடந்துள்ளார். இந்த வன்கொடுமை தொடர்ந்ததில், மாணவியின் உடல்நலம் பாதிக்கப்பட்டது. மருத்துவமனைக்குச் சென்று காண்பித்ததில், மாணவி கர்ப்பமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதை அறிந்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர், இதுபற்றி மகளிடம் கேட்டுள்ளனர். மாணவியும் அழுது கொண்டே, நடந்த சம்பவங்களை தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து, ‘என் மகள் வாழ்க்கையை பாழாக்கி விட்டாயே’ என்று சரவணனிடம் சென்று பெற்றோர் கதறியுள்ளனர். ‘தவறு செய்துவிட்டேன். மன்னித்து விடுங்கள்’ என்று சரவணன் கூறியுள்ளார். இதுபற்றி வெளியில் சொன்னாலோ, போலீஸுக்கு சென்றாலோ அவமானம் என்று கருதி, பெற்றோர் அதோடு விட்டுவிட்டனர். ஆனால், இதையும் தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட சரவணன், அதற்குப் பிறகும் வீடியோவைக் காட்டி மிரட்டி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதில் விரக்தி அடைந்த மாணவி, தன் சாவுக்கு சரவணன்தான் காரணம் என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு தீக்குளித்துள்ளார். பெற்றோர் அதன் பிறகுதான் போலீஸில் புகார் கொடுத்தனர். இதையடுத்து, சரவணன் கைது செய்யப்பட்டார். சம்பவம் குறித்து தெரிந்ததுமே போலீஸில் தெரிவித்திருந்தால், மாணவி தற்கொலையை தடுத்திருக்கலாம். இவ்வாறு போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது[6].
கெட்டவர்களை தடுக்க வேண்டும், வேலைக்கு வருபவர்கள் கண்காணிக்கப் பட வேண்டும்: இப்படி ஆசிரியர், தலைமை ஆசிரியர், தாளாளர், ……என்று பள்ளிகள்-பள்ளிகளில் இருக்கும் பாலியல் குற்றவாளிகளை, கேடுகெட்ட மிருகங்களை, காம அரக்கர்களை ஏன் சமூக ஆர்வலர்கள், பெண்ணியப் போராளிகள், மனித உரிமை சூராதி சூரர்கள், என்றிருக்கும் யாரும் எதிர்க்கவில்லை, கண்டிக்கவில்லை, போராட்டம் நடத்தவில்லை, பொங்கியெழவில்லை……என்று தெரியவில்லை. நிர்பயா, ஸ்வாதி போன்ற குரூரக் கொலைகளுக்கு வீரிட்டெழுந்தவர்கள், இப்பொழுது ஏன் அடங்கிக் கிடக்கிறார்கள் என்றும் புரியவில்லை. தொடர்ந்து மாதம்-மாதம் நடந்து கொண்டிருப்பது, சாதாரணமான விசயம் அல்ல. நமது பெண்களை அவ்வாறு விட்டுவிட முடியாது. உடனடியாக யாதாவது செய்தே ஆகவேண்டும். அத்தகையவர்கள் நியமிக்கப் படும்போது, யோக்கியமானவர்களா என்று சரிபார்க்க வேண்டும். ஏனெனில், மிருகங்களை பள்ளி-கல்லூரி-ஹாஸ்டல்களின் வைக்க முடியாது.
© வேதபிரகாஷ்
03-08-2017
[1] தினமணி, பாலியல் தொல்லை; மாணவி தற்கொலை முயற்சி: நிலக்கோட்டை பள்ளி ஆசிரியர் மீது நடவடிக்கை கோரி மறியல், Published on ஏப்ரல்.30, 2017. 04:11 AM.IST
[2] http://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2017/apr/30/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-2693579.html
[3] தமிழ்.ஒன்.இந்தியா, 10ஆம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை – பலாத்காரம் செய்து மிரட்டிய பள்ளி தாளாளர் கைது, Posted By: Mayura Akilan, Published: Friday, March 31, 2017, 11:15 [IST].
[4] http://tamil.oneindia.com/news/tamilnadu/chennai-sslc-student-raped-driven-suicide-278413.html
[5] தமிழ்.இந்து, 10-ம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை: பாலியல் வன்கொடுமை செய்த பள்ளி தாளாளர் கைது, Published : 01 Apr 2017 09:26 IST;, Updated : 16 Jun 2017 14:11 IST.
[6] http://tamil.thehindu.com/tamilnadu/10%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81/article9611119.ece