Posts Tagged ‘ஜாக்கெட்’

ஜாக்கெட் கிழிந்ததாக அ.தி.மு.க., பெண் எம்.எல்.ஏ.,புகார் !

ஏப்ரல்27, 2010

ஜாக்கெட் கிழிந்ததாக அ.தி.மு.க., பெண் எம்.எல்.ஏ.,புகார்!

பெண் எம்.எல்.ஏ.,க்கள் புகார்: அ.தி.மு.க., பெண் எம்.எல்.ஏ., பதர் சயீது கூறும்போது, ”நாங்கள் வெளியேற வந்தபோது, வலுக்கட்டாயமாக இழுத்ததோடு, சபைக் காவலர்கள் என் வயிற்றில் குத்தினர். நான் வெளியில் போகவில்லை என்றால், தூக்கித்தான் செல்ல வேண்டும். அடிக்க இவர்களுக்கு யார் உரிமை கொடுத்தது’ என்றார்.

பெண் காவலர்கள் தங்களை மிகவும் துன்புறுத்தி இழுத்துச் சென்றதாக அதிமுக பெண் உறுப்பினர்கள் பேரவைக்கு வெளியே புகார் தெரிவித்தனர்.பெண் காவலர்களால் தாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டதாக பதர் சயீத், இளமதி சுப்பிரமணியன் ஆகிய அதிமுக பெண் எம்.எல்.ஏ.க்கள் குற்றஞ்சாட்டினர்.

இளமதி சுப்பிரமணியம் எம்.எல்.ஏ., கூறும்போது, ‘பெண் காவலர்கள் சேலையை பிடித்து இழுத்தனர். இதனால், எனது ஜாக்கெட் கிழிந்து விட்டது’ என்றார்.