Posts Tagged ‘ஜெயலலிதா-கருணாநிதி’

குழந்தை விபச்சாரம்: பாலியல் வன்முறைக் கொடுமைகள்

நவம்பர்13, 2009

குழந்தை விபச்சாரம்: பாலியல் வன்முறைக் கொடுமைகள்

மகாபலிபுரம் செக்ஸ் கூடாரமாகி வருகின்றது: சென்னையில் நடக்கிறது, ஆனால் அனைவரும் மௌனம் காக்கின்றனர். இதன் ரகசியம் என்னவென்று புரியவில்லை. இப்பொழுது “வில்ஹெல்ம்ஸ் வேய்ஜ்டெவல்டு” என்ற கிருத்துவர் (அவரே சொல்லிக் கொண்டது) 30 வருடமாக தமிழ்நாட்டில் இருந்து வந்திருக்கிறேன். பல நூறு குழந்தைகளுடன் அவ்வாறு செக்ஸ் விளையாடல்கள் கொண்டுள்ளான். மே 2002ல் அத்தகைய பாலியல் குற்றங்களுக்கு கைது செய்யப் பட்டான். ஆனால் பெயிலில் வெளிவந்தவன் மறைந்து விட்டானாம்! இருப்பினும் அண்ணாமலை படத்தில் ரஜினிகாந்த்துடன் நடித்து இருக்கிறானாம்!

“வில்லியம்ஸ்” கைது: இதோ, 08-11-2009 அன்று நெதர்லாந்த்தைச் சேர்ந்த வில்லியம்ஸ் என்பவர் குழந்தைகளின் நிர்வாண / ஆபாசப் படங்களை இணைதளத்தில் போட்டதாக கைது செய்யப் பட்டுள்ளார்.

* வேடிக்கை என்னவென்றால், இவர் மகாபலிபுரத்தில் பூஞ்சேரி என்ற “லிட்டில் ஹோம்” என்ற பெயரில் ஒரு “அனாதை இல்லத்தை” நடத்தி குழந்தைகளிடம் (எல்லாம் டீன் ஏஜ்தான்) பாலியல் வன்முறையில் ஈடுபட்டார் [விவரங்களுக்கு கீழே பார்க்கவும்].

* 30 வருடங்களாக “சுற்றுலா பயணி” என்ற விசாவிலேயேத் தங்கியிருந்துள்ளார்!

* 2002ல் குழந்தை “பலாத்காரம்”, பாஸ்போர்ட் சட்ட மீறல் என்று கைது செய்யப் பட்டுள்ளார்!!

* பிறகு எப்படி அவர் வெளியே வந்தார், மறுபடி-மறுபடி அத்தகைய குற்றங்களையே செய்து வருகின்றார் என்பதெல்லாம் ஏசுநாதருக்குத் தான் தெரியும் போல உள்ளது!!!

FRAMED? Dutch national Will Heum will be in police custody for three days.

ஆபாச சிடிக்கள்: வில் ஹியூம் ரேபிட்ஷேர்.காம் “ www.rapidshare.com” என்ற தளத்தில் சென்னையிலிருந்து குழந்தைகளின் செக்ஸ் விளயாட்டு நிர்வாணப் படங்களை போட்டிருப்பதாக ஜெர்மனியில் இருந்து சென்னை “ஸைபர் கிரைம்” (Cyber Crime Cell) பிரிவு போலீஸாருக்கு செய்தி அனுப்புகின்றனர்[1]. அவர்கள் சூளைமேட்டில் உள்ள அவனது வீட்டை சோதனை இடுகின்றனர். அங்கு குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் இருக்கும் ஆபாச படங்கள் அடங்கிய CDக்கள், இணைதளத்தில் அவற்றை ஏற்றுவதற்கான எலக்ட்ரானிக் கருவிகள் முதலியன இருப்பது கண்டு பறிமுதல் செய்தனர்[2]. பிறகு அவன் கைது செய்யப்படுகிறான்!

2001-2002: “அண்ணமலை” படத்தில் நடித்தது: தான் “அண்ணாமலை” படத்தில் நடித்ததாக ஒப்புக்கொள்கிறான். சுரேஸ் கிருஷ்ணா இயக்கத்தில் அப்படம் 27-06-2002ல் வெளியிடப் பட்டது[3]. மிகவும் பிரமாதமாக ஓடியதால், அதில் நடித்த அவன் சாதாரணமாக மக்களின் கண்களினின்று தப்பித்து இருக்க முடியாது! மே 2002ல் கைது செய்யப் பட்டிருக்கும்போதே, செய்தி பிரமாதமாக வந்திருக்கவேண்டுமே, ஆனால் இல்லை. ஜூனில் படம் வெளிவந்த பிறகாவது, அவன் அடையாளம் கொண்டிருக்கவேண்டும். அவ்வாறாகவும் தெரியவில்லை!

பதினைந்து வருடங்களுக்கு முன்பு துரத்தியடிக்கப்பட்ட ஆசாமி: 1994ல் குழந்தைகளிடம் தவறாக நடந்து கொள்கிறான் எனத் தெரிந்து அவன் விரட்டியடிக்கப் பட்டானம்! சூளைமேடு பொன்னுசாமி வாத்தியார் தெரு(வரதராஜர்பேட்டை)வைச் சேர்ந்தவர்கள் அவ்வாறு கூறுகிறார்கள், பிறகு அங்கேயே எப்படி 15 ஆண்டுகளாக யார் கண்ணிலும் படாமல் தனது தொழிலை செஉது வஎதான் எனத் தெரியவில்லை! காலை-மாலை அல்லது ஏதாவது ஒரு நேரம் வெளியில் வராமல் இருந்திருக்க முடியாது.

பூஞ்சேரியில்லிட்டில்ஹோம்என்றஅனாதைஇல்லம்: 1980தில் “சுற்றுலா பயணியாக” வந்த இவன் சென்னைதான் தனக்கு சரியான இடம் சென்று இன்கேயேத் தங்கி விட்டானாம்! அப்பொழுது வயது 27! 2002ல் மஹாபலிபுரத்தில் கைதென்றால், 22 வருடங்கள் என்ன செய்து கொண்டிருந்தான்? பாருங்களேன், “அனாதை இல்லத்தின்” பெயர் “லிட்டில் ஹோம்”  அதாவது தமிழில் சொல்வதானால் “சின்ன இல்லம்” / “சின்ன வீடு”! இதற்கு நமது திரை வல்லுனர்களான, பாக்கியராஜ், “பத்மஸ்ரீ” விவேக் முதலியோரிடம் விளக்கம் கேட்டால் சொல்வர்! முன்பு முங்கைக்காய் மாதிரி இப்பொழுது “பலாக்காய்” மகிமை சொன்னாலும் சொல்வார்!

2009: பாட்ரிக் மாத்யூஸ் ஆகஸ்டில் கைது[4]: கடந்த ஜூன் மாதம் 2009 பாட்ரிக் மாத்யூஸ் என்ற மிஷினரி செயின்ட் ஜியார்ஜ் ஆங்கிலோ இந்திய உயர்நிலைப் பள்ளியில் படித்த குறைந்தபட்சம் ஒன்பது குழந்தைகளுடன் (14 வயது வரையுள்ள) பாலியில் ரீதியிலாக தொடர்பு கொண்டிருந்தான். 2003 லிருந்து 2006 வரை ஊழியராகவேலைசெய்து வந்தார். பேடிமான் டிரஸ்ட்[5] என்ற கிருத்துவ அமைப்பு ஆங்கிலோ-இந்திய சிறுவர்-சிறுமியர் அன்னாதைகளுக்காக உருவாக்கப் பட்டது.

மகாபலிபுரத்தில் வீடு: இந்த ஊழியருக்கு மகாபலிபுரத்தில் ஒரு வீடு இருக்கிறது[6]. சென்னை போலிஸாரது பள்ளியில் மற்றும் மகாபலிபுரத்திலுள்ள மக்களிடம் விசாரணையின்போது விழயங்கள் தெரியவந்தன. புகார்கள் சென்ரதால், இங்கிலாந்திலிருந்து கௌஸர்ஷயர் கான்ஸ்டெபுலரி (Gloucestershire Constabulary) என்ற போலீஸார் பிரத்யேகமாக விசாரிக்க சென்னைக்கு வந்தது. இந்த “மகாபலிபுரம்” மர்மத்தையும் ஆராயவேண்டியுள்ளது.

மே-2002: சிறுமிகளிடம்செக்ஸ்: நெதர்லாந்துநாட்டவர்கைது[7] (பழைய கதை): சென்னை சனிக்கிழமை, மே 4, 2002  : சென்னை மகாபலிபுரம் அருகே ஆதரவற்றோர் இல்லத்தைச் சேர்ந்த சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக நெதர்லாந்துநாட்டைச் சேர்ந்தவர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். மகாபலிபுரம் அருகே உள்ளது பூஞ்சேரி கிராமம். இங்கு லிட்டில் ஹோம் என்ற பெயரில் ஒரு ஆதரவற்றோர் இல்லம் உள்ளது. இந்தஇல்லத்தை நிெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த வில் ஹியூம் என்பவர் நடத்தி வருகிறார். மகாபலிபுரத்திலிருந்து 3 கிலோ மீட்டர்தொலைவில் இந்த இல்லம் அமைந்துள்ளது. இந்த லிட்டில் ஹோம் இல்லத்தில் 10 முதல் 20 வயதுக்குட்பட்ட 19 சிறுமிகள், பெண்கள் உள்ளிட்ட 42 பேர் உள்ளனர்.அனைவரும் பள்ளியில் படித்து வருகின்றனர். இந்த இல்லத்திற்கு சமீபத்தில் கிருஷ்ணன் என்ற சிறுவன் வந்து சேர்ந்தான். இல்லத்தில் சேர்ந்த சில நாட்களிலேயே அங்குசிறுமிகள், பெண்கள் பாலியல் ரீதியாக பலாத்காரம் செய்யப்படுவதை உணர்ந்தான். இதையடுத்து இல்லத்திலிருந்து தப்பி வந்துமகாபலிபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தான்.

எங்கே ஹியூமின்மனைவி, தாயார், ராபர்ட்டைட்டன்? அவனது புகாரை ஏற்ற போலீஸார் விரைந்து சென்று இல்லத்தில் திடீர் சோதனை நடத்தினர். சிறுமிகளிடம் விசாரணை நடத்தினர்.அப்போது அவர்கள் மீது பாலியல் பலாத்காரம் நடந்தது உறுதியானது. இதையடுத்து ஹியூம், இல்ல மேலாளர் பெங்களூர் ராஜன், உதவியாளர் செல்வக்குமார், வாட்ச்மேன் பெருமாள் ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர். இந்த இல்லத்தில் ஹியூமின் மனைவி, தாயார், நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த ராபர்ட் டைட்டன் ஆகியோரும் வசித்துவருகிறார்கள். இந்த இல்லத்தை சமூக பாதுகாப்புத் துறையின் கீழ் கொண்டு வரவும், இல்லத்தில் இருப்பவர்களை அவர்களது பெற்றோரிடம்ஒப்படைக்கவும் போலீஸார் முயற்சிகள் மேற்கொண்டுள்ளனர்.

வில் ஹியூமைத் தொடர்ந்து மாத்யூஸ்-வக்கிரமான செக்ஸ்! கிருத்துவர்களுக்கு ஏன் தான் இப்படி, சிற்றர்களிடம் அதுவும் 19 வயதிலுள்ள பையன்கள், பெண்களிடம் அத்தகைய குரூரமாக செக்ஸ் விளையாடல்கள், புணர்ச்சிகள், மற்றும் அத்தகைய லீலைகளை படம் எடுப்பது, இணைதளத்தில் போடுவது போன்ற செயல்களை செய்கிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால், நிச்சயமாக, இதற்கு காரணம் இருக்கவே கூடும். ஆராய்ந்தபோது, கிருத்துவ பாதிரிகள் அவ்வாறு உலகம் முழுவது இருப்பது தெரியவருகிறது. சமீபத்தில் போப் கூட அத்தகைய செயல்களுக்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். மனோதத்துவ-உளவியல் அறிஞர்கள் ஆராயும்போது, சிறுவயதிலிருந்தே அத்தகையவற்றை படிப்பது, நினைப்பது முதலியன பார்க்க/ செய்யத் தூண்டும் என்கிறார்கள். மேனாட்டு சமுதாய சீரழைவுகள் தவிர, மதநூல்களும் காரணமாக இருக்கக் கூடும் என்கின்றனர். உதாரணத்திற்கு பைபிளிலேயே அத்தகைய நிகழ்ச்சிகள் விளக்கப் பட்டுள்ளன. அதைப் படித்து, நினைத்துப் பார்க்கும் சிறூவர்களின் நிலை, பெரியவர்களாக மாறும்போது, பாதிப்பு ஏற்படக்கூடும்

சிறார்களிடம் செக்ஸ் விளையாடல்கள்: மாத்யூஸ் அங்கிருக்கும்போது 1361 பேர் பள்ளியில் படுத்து வந்தனர். அதில் 122 பேர் தங்கி-படிக்கும் போர்டிங் பள்ளியில் இருந்தனர். அதில் 71 பையன்கள் மற்றும் 51 பெண்கள் இருந்தனர். அவர்களில் 10 முதல் 14 வரையிலுள்ள பையன்களிடம் செக்ஸ் விளையாடல்கள் கொண்டுள்ளதாக விசாரணையில் தெரிய வந்தது[8]. பாடம் சொல்லித் தருதல் மற்றும் கிரிக்கெட் கற்றுத்தருதல் என்றபோர்வையில் பையன்களை அறைக்கு வரச்சொல்லி அவ்வாறான செக்ஸ் விளையாடல்கள் செய்து வந்ததாக விசாரணையில் தெரிய வந்தது. உள்ளூர் போலிஸ் ஏப்ரல் 3, 2007ல் விசாரித்து உலகக் காவல்படை (CBI, the Indian arm of Interpol) என்ற “இன்டர்போல்” மூலம் அறிக்கை அனுப்பப்பட்டது. ஆகஸ்டு 1, 2009 அன்று அவர் கைது செய்யப்பட்டார்.

இந்நிகழ்ச்சிகளில் பல இல்லை பற்பல கேள்விகளுக்கு பதில் இல்லை.

 • 1980ல் வந்த ஹியூம், வில் ஹியூம், வில்லியம்ஸ், வில்ஹெல்ம்ஸ் வேய்ஜ்டெவல்டு எப்படி சென்னை மற்றும் மற்ற பகுதிகளில் இத்தகைய அடாத செயல்களை செய்து கொண்டு இருக்கமுடியும்?
 • 1980லிருந்து 2001 வரை என்ன செய்து கொண்டிருந்தான்?
 • சுமார் 20 ஆண்டுகள் சென்னயில் / தமிழகத்தில் அவன் எவ்வாறு தனது காலத்தைக் கழித்தான்?
 • எப்படி அவன் செலவுகளுக்கு பணம் கிடைத்து வந்தது?
 • இதே பொல நாம் நெதர்லாந்திற்குச் சென்றால், விசா காலத்தைத் தாண்டி தங்கியிருக்க முடியுமா? சுற்றித் திரிய முடியுமா? நிச்சயமாக முடியாது.
 • பிறகு எப்படி இவன் தங்கியுள்ளான்?
 • எப்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகள், ஊழியகள் முதலியோர் உதவி செய்தனர்?
 • பதிலுக்கு அவன் அவர்ஜ்=களுக்கு என்ன கொடுத்தான்?
 • அவ்வாறு கொடுப்பதற்கு பணம் எங்கிருந்து வந்தது?
 • மே 2002ல் கைது செய்யப்பட்டபோது, இவன் கூட இல்ல மேலாளர் பெங்களூர் ராஜன், உதவியாளர் செல்வக்குமார், வாட்ச்மேன் பெருமாள் ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர். அவர்கள் நிலை என்ன?
 • அந்த சின்னவீட்டில் ஹியூமின் மனைவி, தாயார், நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த ராபர்ட் டைட்டன் முதலியோர் வசித்து வந்தனர். அவர்கள் என்னானார்கள்?
 • இவர்கள் எப்படி இந்தியாவிற்கு வந்தார்கள்?
 • தனது கணவன் செய்யும் வேலை, மனைவிற்குத் தெரியும். பிறகு, அவள் எப்படி அமைதியாக இருந்தாள்? அவளது பங்கும் அதிலுள்ளது தெரிகின்றது.
 • “இந்த இல்லத்தை சமூக பாதுகாப்புத் துறையின் கீழ் கொண்டு வரவும், இல்லத்தில் இருப்பவர்களை அவர்களது பெற்றோரிடம்ஒப்படைக்கவும் போலீஸார் முயற்சிகள் மேற்கொண்டுள்ளனர்”, என்பது 2002ன் செய்தி. பிறகு என்னவாயிற்று?
 • 2001-02ல் அண்ணாமலையில் நடித்தது எப்படி?
 • யார் அறிமுகம் செய்தனர்?
 • எப்படி மஹாபலிபுரத்திலிருந்து ஸூட்டிங்கிற்கு சென்று வந்தான்?.
 • இந்த சினிமா-சம்பத்தில்தான் பல மர்மங்கள் இருப்பது தெரிகின்றது.
 • 2002ல் பிணையில் எப்படி வெளி வந்தான்?
 • யார் பிணைப்பத்திரம் கொடுத்தது?
 • வக்கீல் யார்?
 • அவர் காணாதபோது, ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை?
 • “அண்ணாமலை” படம் வந்தபோது, முழித்துக் கொள்ளவேண்டாமா?
 • 2002 முதல் 2009 வரை அவன் என்ன செய்து கொண்டிந்தான்?
 • 1994ல் குழந்தைகளிடம் தவறாக நடந்து கொள்கிறான் எனத் தெரிந்து அவன் விரட்டியடிக்கப் பட்டானம்! சூளைமேடு பொன்னுசாமி வாத்தியார் தெரு(வரதராஜர்பேட்டை)வைச் சேர்ந்தவர்கள் அவ்வாறு கூறுகிறார்கள்,
 • பிறகு அங்கேயே எப்படி 15 ஆண்டுகளாக யார் கண்ணிலும் படாமல் தனது தொழிலை செய்து வஎதான் எனத் தெரியவில்லை! காலை-மாலை அல்லது ஏதாவது ஒரு நேரம் வெளியில் வராமல் இருந்திருக்க முடியாது.
 • 1999ல் தனக்கு இந்தியகுடிமகன் நிலை வேண்டும்[9] என்று விண்ணப்பிக்கிறான்! அப்பொழுது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தூங்கிக் கொண்டிருந்தார்களா?
 • 2003ல் போலீஸ் அவனை நாடு கடத்த[10] முயற்ச்சித்தது!
 • 2009ல் எப்படி திடீரென்று அங்குதான் இருக்கிறான் என்று தெரியவந்தது?
 • ஆகவே 2003லிருந்து 2009வரை, நிச்சயமாக போலிஸுக்கு அவன் இருப்பது தெரிந்தேயிக்கிறது. இருப்பினும் அவன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதேமாதிரியான வினாக்கள் பாட்ரிக் மாத்யூஸ் விஷயத்திலும் எழுப்பலாம்!

ஊடகங்களின் மௌனமா அல்லது மறையடிப்பா? இதே மற்றவர்கள் விஷயத்தில் நடந்திருந்தால் ஊடகங்கள் பிளந்து தள்ளியிருக்கும். படுக்கை அறைவரை சென்று ஏதோ “இன்வஸ்டிகேடிவ் ஜேர்னலிஸத்தில் புலிகள்” மாதிரி மணிக்கு மணி, நாளுக்கு நாள் செய்திகள் வந்து கொண்டேயிருக்கும்! டிவி செனல்கள் போட்டிப்போட்டு காண்பித்துக் கொண்டிருக்கும்! ஏன், புவனேஸ்வரி விஷயத்தை எடுத்து கொள்ளுங்களேன். இன்று வரை விடவில்லையே! அவர் தினமும் கோவிலுக்குச் செல்கிறார், பக்தியில் மூழ்கி விட்டார், பர்தா போடாமலேயே வெளியே வருகிறார்  ..  ..  .. ..  ..  .. என்றெல்லாம் மோப்பம் பிடிக்கிறார்களே? ஆனால், இத்தகைய “விஷயத்தை” எப்படி விட்டு விட்டார்கள்? இவர்கள் எல்லாம் என்ன ஒன்றும் தெரியாத குழந்தைகளா? “அண்ணாமலை படத்தில் நடித்த நடிகர் கைது”, “அண்ணமலை பட நடிகர் ஆபாச படம் எடுத்ததால் கைது” என்றெல்லாம் செய்திகள் வரவில்லையே? “டைம்ஸ் ஆஃப் இந்தியா” மட்டும் ‘அனாதைக் குழந்தை நிறுவனர் கைது” என்ற தலைப்பில் செய்தி[11] வெளியிட்டது!

பண-பலமா, சினிமா-பலமா, ஊடகக்காரர்களின்–உதவியா, அரசியல்-பலமா? எந்த சக்தி இவனைக் காப்பாற்றி வந்துள்ளது? இது மர்மமாக இருக்கிறது! ஒரு அயல்நாட்டவன் இவ்வாறு தனியாக 30 ஆண்டுகளக இருந்து கொண்டு இவ்வாறெல்லாம் செய்து வந்துள்ளான் என்றால் நம்ப முடியவில்லை. எனவே, இவனுக்கு உதவுவது யார்? அல்லது பின்னணியில் இருப்பவர்கள் யார்? புழக்கத்தில் இருக்கும் ஆபாச சிடிக்களுக்கும் இவனுக்கும் சம்பந்தம் உண்டா? இவனால் எல்லொருக்கும் ஆதாயம் என்றதால்தான், இவனை விட்டு வைத்திருக்கின்றனர் போலத் தெரிகிறது. இப்பொழுதுகூட தான் ஒரு “சமூக சேவகன்” என்றுதான்[12] கூறிக்கொள்கிறான்! ஜூன் 16, 2003ல் ஒரு மாமல்லபுரம் இன்ஸ்பெக்டர் பாம்பேயிலுள்ள நெதர்லாந்து கான்ஸுலேட்டிற்குச் சென்று விசாரிக்கிறார். ஆனால், அது வெளித்துறை அமைச்சகத்திலிருந்து[13] ஏதோ “விஷயங்கள் தேவை”யன்று சொல்லியதாகத் தெரிகிறது! இப்பொழுதும் இணைதளத்தில் அவன் போட்டது ஜனவரி 2009ல்[14], ஆனால் கைது செய்வது நவம்பர் 2009ல்! இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸில் வந்துள்ள செய்தியின்படி[15] பார்த்தால் தமிழ்நாடு சமூகத்துறையும் இவ்விஷயத்தில் மெத்தனமாக நடந்து கொள்வதாக உள்ளது. அதேமாதியான செய்தி[16] டைம்ஸ் ஆஃப் இந்தியாவிலும் வெளிவந்துள்ளது.


[1] http://www.thehindu.com/2009/11/08/stories/2009110854840400.htm

[2] http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=13872

[3] http://www.rajinifans.com/movie_database/index.php

[4]Abuser of city school kids held in UK http://timesofindia.indiatimes.com/city/chennai/Abuser-of-city-school-kids-held-in-UK/articleshow/4843819.cms

[5] http://www.batemans.org.uk/

[6]http://www.expressbuzz.com/edition/story.aspx?Title=Mathews+sexually+abused+9+students&artid=NMIqdTdvmew=&SectionID=lifojHIWDUU=&MainSectionID=lifojHIWDUU=&SEO=St+George%E2%80%99s+Anglo+Indian+Higher+Secondary+School&SectionName=rSY|6QYp3kQ=

[7] http://www.rediff.com/news/2002/may/03tn.htm

[8] http://timesofindia.indiatimes.com/Chennai/More-complaints-against-child-abuse-suspect-in-school/articleshow/4664344.cms

[9] http://timesofindia.indiatimes.com/city/chennai/Dutch-child-abuser-found-India-suitable-wanted-citizenship/articleshow/5221039.cms

[10] http://timesofindia.indiatimes.com/city/chennai/Dutch-child-abuser-found-India-suitable-wanted-citizenship/articleshow/5221039.cms

[11] http://timesofindia.indiatimes.com/india/Orphanage-owner-held-for-uploading-child-porn/articleshow/5208213.cms

[12] http://www.deccanchronicle.com/chennai/dutch-man-held-child-porn-149

[13] http://timesofindia.indiatimes.com/city/chennai/Govt-slept-on-Dutch-child-abusers-deportation/articleshow/5217262.cms

[14] http://timesofindia.indiatimes.com/city/chennai/With-arrest-of-Dutchman-cops-keen-to-speed-up-case/articleshow/5224602.cms

[15] http://www.expressbuzz.com/edition/story.aspx?Title=When+innocence+gives+way+to+unending+fears&artid=wL7YhCFYQyk=&SectionID=lifojHIWDUU=&MainSectionID=fyV9T2jIa4A=&SectionName=rSY|6QYp3kQ=&SEO=Child%20Welfare%20Committee

[16] http://timesofindia.indiatimes.com/city/chennai/More-than-one-child-rescued-from-Chennai-streets-every-day/articleshow/5166233.cms

ஜெயலலிதாவும், கருணாநிதியும், தமிழகமும்!

ஒக்ரோபர்17, 2009

கருணாநிதி, ஜெயலலிதா இவர்கள் இருவரிடமும் தமிழ்நாடு படும் பாடு கொஞ்ச-நஞ்சம் இல்லை. வயதானாலும் பக்குவம் இல்லை.

விலைவாசி ஏற்றத்தைப் பற்றி இவர்களுக்குக் கவலை இல்லை;

காசுக்குத் தண்ணீர் விற்பது தெரியவில்லை;

மக்கள் சாவதும் தெரியவில்லை.

ஆனால், இவர்கள் இருவரும் பேசி-பேசியே தமிழர்களை வருத்தி / வறுத்து வருகிறார்கள்:

ஜெயலலிதாவும், மைசூர் மகாராஜா தந்த ஒட்டியாணமும்..கருணாநிதி

சென்னை: ஜெயலலிதா செய்த ‘தியாகங்கள்’ பற்றியும், அவர் எந்தத் துறையிலே ‘சிறந்து விளங்கினார்’ என்பதைப் பற்றியும் சட்டமன்ற நடவடிக்கை குறிப்புகளை புரட்டிப் பார்த்தாலே தெரிந்துவிடும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா விடுத்த அறிக்கையில் ராதாபுரம் பேருந்து நிலையத்திற்கு “முத்துவேலர், அஞ்சுகத்தம்மாள் பேருந்து நிலையம்” என்று பெயர் சூட்டவும், அதை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கவிருப்பதாகவும் தனக்கு செய்திகள் வந்திருப்பதாகவும், எழுதியிருக்கிறார்.

அவரது அவசரத்தனத்திற்கும் அறியாமைக்கும் எடுத்துக்காட்டாகத்தான் அந்த அறிக்கையும் எழுதப்பட்டுள்ளது. 13ம் தேதி துணை முதல்வர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியின் அழைப்பிதழை உடனடியாக எடுத்து வரச்செய்து பார்த்தேன். அந்த அழைப்பிதழில் எந்த இடத்திலும் முத்துவேலர்- அஞ்சுகத்தம்மாள் பேருந்து நிலையம் திறப்பு விழா என்று குறிப்பிடப்படவே இல்லை. ராதாபுரம் பேருந்து நிலையம் துவக்க விழா என்றுதான் அச்சிடப்பட்டுள்ளது.

ராதாபுரம் புதிய பேருந்து நிலையத்திற்கு பெயர் சூட்டுவது தொடர்பாக அரசின் சார்பில் இதுவரை எந்தவிதமான ஆணையும் பிறப்பிக்கப்படவில்லை.

நான் மாவட்ட ஆட்சித் தலைவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு என் பெற்றோர் பெயரை பேருந்து நிலையத்திற்கு எந்தக் காரணத்தைக் கொண்டும் சூட்ட வேண்டாமென்றும், அவர்களது சிலையைத் திறக்க வேண்டாமென்றும் உறுதியாகத் தெரிவித்து விட்டேன்.

ஆனால், ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில் முத்துவேலர்- அஞ்சுகத்தம்மாள் என்பவர்கள் யார்? அவர்கள் இந்த நாட்டிற்கு என்ன தியாகம் செய்தார்கள்? எந்தத் துறையில் சிறந்து விளங்கினார்கள்? என்பதை அறியும் பொருட்டு, வரலாற்றுப் புத்தகங்களை புரட்டிப் பார்த்தும் அவர்களைப் பற்றிய எந்தவிதமான தகவலையும் அறிந்துகொள்ள முடியவில்லை என்று எழுதியிருக்கிறார்.

எனது பெற்றோர்களான அவர்கள் இந்த நாட்டிற்காக, தமிழ் மக்களுக்காக அல்லும் பகலும் உழைக்க என்னை வழங்கியிருக்கிறார்களே, அதுவே அவர்கள் செய்த தியாகம்தான்!.

ஆனால், வரலாற்றுப் புத்தகங்களைப் புரட்டிப் பார்த்தால் அம்மையார் ஜெயலலிதா செய்த தியாகங்கள் பற்றியும், அவர் எந்தத் துறையிலே சிறந்து விளங்கினார் என்பதைப் பற்றியும் பக்கம் பக்கமாக காண முடியும். வரலாற்றுப் புத்தகங்கள் ஏன்? முதலில் சட்டமன்ற நடவடிக்கை [^] குறிப்புகளை புரட்டிப் பார்த்தாலே போதுமே; இதோ சில உதாரணங்கள்:

‘டாக்டர் புரட்சி தலைவி ஜெ போக்குவரத்து கழகம்’:

– தமிழ்நாட்டில் வெளி மாநிலங்களுக்குச் செல்லும் பேருந்துகளைக் கொண்டு “புரட்சித் தலைவி டாக்டர் ஜெ. ஜெயலலிதா போக்குவரத்துக் கழகம்” என்ற பெயரால் புதிய போக்குவரத்துக் கழகம் ஆரம்பிக்கப்படும் (6.4.1993)

– அம்பத்தூரில் சுமார் 29 ஏக்கர் நிலப்பரப்பில் அமையவிருக்கும் தொழில்நுட்பப் பயிலகத்திற்கு 6 கோடி மக்களால் ஆராதனை செய்யப்படும் தமிழக முதல்வர் டாக்டர் புரட்சித் தலைவி பெயரினையே சூட்டிட வாரியம் முடிவெடுத்துள்ளது. (8.4.1994)

– “ஜெ. ஜெ. ஹேண்ட்லூம் டவர்” (8.4.1994)

– “புரட்சித் தலைவி சீர்மிகு உயர் பள்ளி” (19.4.1994)

– ”புரட்சித் தலைவி” திருப்பெயரால் மகளிருக்கான டாக்டர் ”புரட்சித் தலைவி பொற்கோப்பை கால்பந்துப் போட்டி” நேரு விளையாட்டு அரங்கத்தில் நடத்தப்படவிருக்கிறது. (19.4.1994)

– “முதல்வர் டாக்டர் புரட்சித் தலைவி” பெயரில் தமிழகத்தில் திறந்த வெளிப் பல்கலைக்கழகம் (19.4.1994)

சமுதாய கூடங்களுக்கு புரட்சித் தலைவி பெயர்:

-சிறந்த விளையாட்டு [^] அணியினருக்கு முதல்வர் ”புரட்சித் தலைவி டாக்டர் ஜெ. ஜெயலலிதா” பெயரில் சிறந்த வேலைப் பாடுகள் அடங்கிய சுழற்கோப்பை (10.4.1994).

-அனைத்துச் சமுதாய நலக் கூடங்களுக்கு, புரட்சித் தலைவி பெயர் சூட்டப்படும். (26.4.1994)

– தமிழகத்திலே இருக்கிற அனைத்து நகராட்சிகளிலும், நவீன வசதிகள் கொண்ட திருமண மண்டபங்கள் ”இதய தெய்வம் டாக்டர் புரட்சித் தலைவி” பெயரிலே கட்டப்படும். (26.4.1994)

– ”புரட்சித்தலைவி டாக்டர் ஜெ. ஜெயலலிதா” என்ற பெயரில் அழகு உலா ரதங்கள் இரண்டு இந்த ஆண்டு விடப்படும். (27.4.1994)

– திராவிட இனத்தினுடைய தன்மானத் தலைவியாக இருக்கிற ”டாக்டர் புரட்சித் தலைவி திருப்பெயர்” வன உயிரின உய்விடத்திற்கு சூட்டப்படும். அதுபோன்று அங்கே அமைந்திருக்கின்ற தேசியப் பூங்கா, “டாக்டர் ஜெ. ஜெயலலிதா தேசியப் பூங்கா, முதுமலை” என்று இன்று முதல் அழைக்கப்படுகிறது. (26.4.1994)

– செங்கை- எம்.ஜி.ஆர். மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் புதிய கட்டிடத்திற்கு “புரட்சித் தலைவி டாக்டர் ஜெ. ஜெயலலிதா” என்கிற திருப்பெயரை சூட்ட முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. (30.4.1994)

“டாக்டர் புரட்சித் தலைவி ஜெ.ஜெ. மாளிகை”:

– 60 லட்சம் ரூபாய் செலவில் கோவையில் எழுப்பப்பட்டு முடிக்கப்பட்டுள்ள தொழிலாளர் நலத்துறை அலுவலகத்திற்கு “டாக்டர் புரட்சித் தலைவி ஜெ.ஜெ. மாளிகை” என்னும் திருப் பெயர் சூட்டப்படுகிறது. (30.4.1994)

– சென்னை திரைப்பட நகருக்கு திரை உலக வளர்ச்சிக்கு பெரிதும் பாடுபட்டவரான ”இதய தெய்வம் டாக்டர் புரட்சித் தலைவி பெயரால் ஜெயலலிதா திரைப்பட நகர்” என பெயர் சூட்டப்படும்.

– “ஜெ.ஜெ. 92” என்ற புதிய வகை வாசனை அரிசியை அறிமுகம் செய்திருக்கிறோம். விஞ்ஞான தொழில் நுட்பங்களை வழங்கும் விரிவாக்க அலுவலர்களுக்கு “டாக்டர் புரட்சித் தலைவி விருது” உருவாக்கியுள்ளோம்.

மேலும் “டாக்டர் புரட்சித் தலைவி தென்னை வளர்ச்சித் திட்டம்” அமலாக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டுள்ளது. (19.4.1995)

– ஆடு, கோழி, முயல் போன்றவைகள் வளர்க்கப்படும் “டாக்டர் புரட்சித் தலைவி மகளிர் கால்நடை கூட்டுறவுச் சங்கம்” துவக்குவதை இத்துறை பெரும் பேறாக நினைக்கிறது. (19.4.1995)

– முதல்அமைச்சர் ”இதய தெய்வம் டாக்டர் புரட்சித் தலைவி ஆன்மீகக் கல்வித் திட்டம்”.

– ”புரட்சித் தலைவி நல்லாசிரியர் விருது” வழங்கும் திட்டம்.

– “புரட்சித் தலைவி ஆய்வுப் பெருந்தகையாளர் ஊக்குவிப்புத் திட்டம்”

இப்படியெல்லாம் பெயர் சூட்டும் நிகழ்ச்சிகள் நடைபெற்றபோது- அந்த விமர்சனங்களையெல்லாம் கேட்டு புளகாங்கிதமடைந்து அமர்ந்திருந்த ஜெயலலிதா; தற்போது எனது பெற்றோர்களின் பெயர்களை ஒரு கிராம ஊராட்சிப் பேருந்து நிலையத்திற்கு- அதுவும் அந்தத் தொகுதியின் சட்டப் பேரவை உறுப்பினர் தனது சொந்தப் பொறுப்பில் கையிலிருந்து பணம் கொடுத்து வாங்கிக் கொடுத்துள்ள இடத்தில்- அவரது விருப்பத்தின் பெயரில்- என்னுடைய பெற்றோர்கள் பெயரை வைக்க விரும்பி- அதற்கான முயற்சிகளிலே ஈடுபட்டு, அதுவும் வெற்றி பெறாத நிலையில் யாருடைய பெயரையும் குறிப்பிடாமல் பேருந்து நிலையம் திறக்கப்படுகின்ற போது- என்னுடைய பெற்றோர்களைப் பற்றி வரலாற்றுப் புத்தகங்களிலே தேடிப் பார்த்ததாக கிண்டல் செய்து அறிக்கை விடுகிறார் என்றால், அவரைப் பற்றி தமிழ்நாட்டு மக்கள்தான் எடை போட்டுப் பார்த்துக்கொள்ள வேண்டும்.

அவர் இருந்த உலகம் வேறு:

ஜெயலலிதாவுக்கு என்னுடைய பெற்றோரை தெரிந்திருக்க நியாயமில்லைதான்! ஏனென்றால் அவர் இருந்த உலகம் வேறு. ஆனால் என் அன்னை மறைந்த நேரத்தில் பேரறிஞர் அண்ணா எழுதிய வாசகங்களில் ஒரு பகுதி இதோ:

“குறுநகை காட்டும் கண்கள்! பொக்கை வாயிலே ஓர் புன்னகை! மூதாட்டி அஞ்சுகம் அவர்கள், சருகு, தளிர் ஆவது போலாகி விடுவார்கள்- தமது மக்களின் மகிழ்ச்சி கண்டு அல்ல- மாடு மனை கண்டு அல்ல- உற்றார் உறவினர் கண்டு அல்ல- இயக்கச் செய்திகளை, வெற்றிகளைக் கேட்டதும்!.

கண்டவுடன், மேயர் நம்ம கட்சி தானே வரும்? அதைவிடக் கூடாது! புதுசா சட்டம் வருதாமே? பேப்பர்லே இன்னக்கி நம்ம கட்சி விஷயம் என்னென்ன வந்திருக்கிறது? நம்ம கட்சியைக் கேலி பண்ணிப் படம் போட்டாங்களாமே பேப்பர்லே, பாத்தீங்களா? என்ன செய்யப் போறீங்க? என்று இதுபோன்ற கேள்விகளைக் கேட்டு ஆர்வத்தைப் பொழிந்த ஒரு அன்னையை நான் கண்டதில்லை. தம்பி கருணாநிதிக்கு இப்படிப்பட்ட தாய்ச் செல்வம் பெற்றிருந்த காரணத்தால்தான் “நிதி” என்ற பெயரிட்டார்கள் போலும்!.

இப்படிப்பட்ட மகனுக்கு வேறு விதத்திலே மனப்பான்மை கொண்ட தாய் அமைந்திருந்தால்? பொது வாழ்வு புகைச்சல் நிரம்பியதாகிவிடும். கருணாநிதிக்கு வீட்டிலே கிடைத்த தாயின் புன்னகையும் அன்பும் பொது வாழ்க்கையில் புன்னகையுடன் ஈடுபட பெரிய வாய்ப்பினை அளித்தது என்பதை உணருகிறேன்.

குயில் பறந்துவிட்டது, நாதம் நிலைத்திருக்கிறது- மலர் உதிர்ந்து விட்டது, மணம் நிரம்பி இருக்கிறது- அஞ்சுகம் மறைந்து விட்டார்கள், அவர்கள் பற்றிய நினைவு நிலைத்திருக்கிறது.”

பேரறிஞர் அண்ணா மட்டுமல்ல, அந்த நூலில் எம்.ஜி.ஆர்., நாவலர், பேராசிரியர், நடிகர் திலகம் சிவாஜி, சி.பி. சிற்றரசு, என்.வி. நடராசன், ஏ. கோவிந்த சாமி, சத்திய வாணிமுத்து, எஸ்.எஸ். ஆர்., அலமேலு அப்பாதுரையார், பொற்செல்வி இளமுருகு மற்றும் பலர் என் அன்னையைப் பற்றி எழுதி அது ஒரு சிறு நூலாகவே வெளி வந்துள்ளது.

மகாராஜா வழங்கிய ஒட்டியாணம்..

ஆனால்; மைசூர் மகாராஜா வழங்கிய ஒட்டியாணத்தை ஜெயலலிதா புரட்டிப் புரட்டி பார்த்திருப்பாரே தவிர; நான் குறிப்பிடும் நூலைப் பார்க்கவோ படிக்கவோ அவருக்கு நேரம் ஏது?.

இவ்வாறு கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி.