Posts Tagged ‘தலித்’

தெரிந்த அனிதாவும், தெரியாத அனிதாக்களும்: திராவிட சித்தாந்திகள் எவ்வாறு பிரச்சினைகளை அணுகுகின்றனர், எதிர்க்கின்றனர் மற்றும் மறுக்கின்றனர்! (2)

செப்ரெம்பர்12, 2017

தெரிந்த அனிதாவும், தெரியாத அனிதாக்களும்: திராவிட சித்தாந்திகள் எவ்வாறு பிரச்சினைகளை அணுகுகின்றனர், எதிர்க்கின்றனர் மற்றும் மறுக்கின்றனர்! (2)

Girl raped- Arni doctor-Dinakaran

மருத்துவரும் தனது தொழில் தர்மத்தை மீறி கற்பழித்தது: இந்த நிலையில், ஆரணி அரசு ஆஸ்பத்திரியில் மயக்க மருந்து நிபுணராக இருக்கும் டாக்டர் ஜெயபிரகாஷ் மற்றும் வார்டு உதவியாளர் பாண்டியன் ஆகிய 2 பேரும், சுரேஷ் மூலம் சித்ராவின் வீட்டிற்கு வந்து மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தனர்[1]. ஆசை இணங்க மறுத்த மாணவிக்கு, போதை மருந்து ஊசி மூலம் செலுத்தப்பட்டு கற்பழித்துள்ளனர். இதைத் தொடர்ந்து தான், அந்த கொடூர கும்பலிடம் இருந்து மாணவி தப்பித்து மீண்டும் கோயம்பேட்டில் உள்ள தனது வீட்டிற்கு சென்றது தெரியவந்தது. இதுகுறித்து, மாணவியின் தாய், சென்னை கமி‌ஷனர் அலுவலகத்தில் 07-09-2017 அன்று புகார் அளித்தார். புகாரின் பேரில், கோயம்பேட்டு போலீசார், நள்ளிரவு ஆரணிக்கு வந்து, டாக்டர் ஜெயபிரகாஷ் மற்றும் உதவியாளர் பாண்டியனை கைது செய்து சென்னைக்கு அழைத்துச் சென்றனர்[2].  மருத்துவ படிப்பிற்கு சீட் கிடைக்கவில்லை என்ற பிரச்சினையில் ஆர்பாட்டம் நடத்துகிறார்கள், ஆனால், மனிதத்தன்மையே இல்லாமல், ஒரு மாணவியை, இவ்வாறு சீரழித்த செய்தி, அதே நேரத்தில் வந்தாலும், உருத்தவில்லை.

Girl raped- Arni doctor-Tamil Hindu

மருத்துவமனையில் சோதனை, விசாரணை: இதற்கிடையில், மாவட்ட மருத்துவ சுகாதார பணிகள் இணை இயக்குநர் நவநீதம் 08-09-2017 அன்று ஆரணி அரசு மருத்துவமனைக்கு சென்று அங்கு பணிபுரியும் டாக்டர்கள், நர்ஸ் உள்ளிட்டவர்களிடம் விசாரணை மேற்கொண்டார்[3]. இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அவர்கள் மீது குற்றம் உறுதிப்படுத்தப்பட்டால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்[4]. போலீஸ் வருவதையறிந்து மாணவியை விபசாரத்தில் ஈடுபடுத்திய அவரது உறவினர் சித்ரா மற்றும் சுரேஷ் ஆகிய 2 பேரும் தலைமறைவாகிவிட்டனர்[5]. அவர்களை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள். அவர்கள் பிடிபட்டால், சென்னை மாணவியை போலவே, வேறு யாராவது சிறுமிகள் விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனரா? என்கிற அதிர்ச்சிகரமான தகவல் வெளிவரக்கூடும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது[6].

Arni doctor arrested for raping Koyambedu girl-09-09-2017

தமிழகத்தில் ஊழலை ஒழிப்பேன் ஆர்பாட்டம், இல்லையே ஏன்?: போராட்டம் இப்படி பிரச்சினைகளை அலசி பார்க்கும் போது, உள்ளே இருப்பது ஊழல் தான் என்று தெரியவரும். 1960களிலிருந்து, தமிழகத்தைப் பொறுத்த வரையிலும், ஊழல் என்பது சாதாரணமான விசயமாகி விட்டது. சென்னை கார்பரேஷன், தாலுகா ஆபீஸ், என்று எலா துறைகளிலும், செய்ய வேண்டிய வேலைக்கே காசு கொடுத்தால் தான் வேலை நடக்கும் என்ற நிலை உள்ளது. அரிசி ஊழல், கோதுமை ஊழல் என்றதெல்லாம் கருணாநிதி ஆட்சியில் நாறியது, நீதிமன்றங்களிலும் தீர்ப்புகள் வந்தன. சர்க்காரியா கமிஷன், திமுக ஊழலை விஞ்ஞான ரீதியில், பக்குவமாக செய்ய வல்லது என்று எடுத்துக் காட்டியது. மற்ற எல்லாவற்றிற்கும் கொடி பிடித்து, பதாகை ஏந்தி, சாலை மறியல் செய்து ஆர்பாட்டம், போராட்டம் செய்யும் கூட்டங்கள் ஊழல் என்று வரும்போது அமைதியாக இருக்கின்றன. இப்பொழுது கூட, அதிமுக ஊழல் என்று பேசுவதோடு சரி. ஆனால், தமிழகத்தில் ஊழலை ஒழிப்பேன் என்று எவனும் போராட்டம் நடத்த மாட்டேன் என்கிறானே ஏன்? கருணாநிதியில் கோதுமை ஊழல் பயமுருத்துகிறதா? விஞ்ஞான முறையில் ஊழல் செய்த வித்தகர்கள் “டாக்டர்” என்ற பெயரில் அலைகிறார்கள். ஆனால், எம்.பி.பி.எஸ்-டாக்டர் மட்டும் ஓசியில் வருமா?

three-medical-students-commit-suicide

ஊழல் பணத்தை முதலீடு செய்தாலும், லாபத்தை எதிர்பார்ப்பார்களே?: கல்வித்துறையில் அரசியல்வாதிகள், பாவகாரியங்களில் சம்பாதித்தப் பணத்தை முதலீடு செய்து நுழைந்த போதிலேயே அதன் தரம் குறைந்து விட்டது. கல்வியை வியாபாரமாக்கி, ஊழலாக்கி, சூதாட்டமாக்கி பணம் கொழிக்கும் களமாக மாற்றியப்பிறகு அதன் தன்மையே கெட்டு சீரழிந்து விட்டது. அரசியல்வாதிகள் மட்டுமல்லாது, கள்ளப்பணம் / கருப்புப் பணம் வைத்திருப்பவர்கள், கடத்தல்காரர்கள், கிரிமினல்கள் என்று எல்லோருமே முதலீடு செய்து, ஒவ்வொரு கல்லூரிக்கு, நிகர்நிலை பல்கலைக்கழகத்திற்கு சொந்தக்காரர், தலைவர், சேர்மேன் என்றாகி விட்டனர். 70 வருடங்களாக சென்னையில் வாழ்ந்து கொண்டிருக்கும் பலருக்கு இவர்களின் பின்னணி, யோக்கியதை எல்லாமே தெரிந்திருக்கிறது. மருத்துவக் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் கொடுப்பதிலேயே ஊழல் ஆரம்பிக்கிறது. 2010ல் கேதன் தேசாய் கைது செய்யப்பட்டபோதே பல விவரங்கள் வெளிவந்தன[7]. இந்திய மருத்துவக் கவுன்சிலின் தலைவராக கேதன் தேசாய் பதவிக்காலத்தில், 40க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் 2,000 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாக தகவல் வெளியாகியது[8].

mbbs-medical-college-money-spinning-industry

பணம் இருந்தால் டாக்டராகலாம்: 80-90% மார்க்குகள் வாங்கினால் மருத்துவக் கல்லூரியில், ஏன் இஞ்சினியரிங் கல்லுரியில் கூட சீட் கிடைக்காது. அதாவது 4-7 மற்றும் 40-70 லட்சங்கள் முறையே கொடுக்காமல் கிடைக்காது. ஆனால், படிக்கக் கூடிய மாணவர்கள், மருத்துவராக வேண்டும் என்று ஆர்வம், சேவை செய்ய வேண்டும் என்ற கொள்கைக் கொண்டவர்களுக்கு சீட் கிடையாது. ஒருவேளை 99% வாங்கி சேர்ந்தால் கற்பழித்து கொலை கூட செய்யப்படலாம். அப்படி ஒரு திரைப்படத்தையே எடுத்து விட்டார்கள்[9]. ஆகவே, பணமுள்ளவர்கள் லட்சங்கள் கொடுத்து டாக்டராகி மக்களைக் கொடுமைப் படுத்துதுவர். ஈவு-இரக்கமில்லாமல் பணத்தை உறிஞ்சுவர். பிணங்களையும் வைத்துக் கொண்டு வியாபாரம் செய்வர். இப்படித்தான் மருத்துவர்கள் / டாக்டர்கள் உருவாகிக் கொண்டிருக்கிறார்கள். பணம் இருப்பதனால், கோடிகளைக் கொட்டி மருத்துவமனைகளை திறந்து வைக்கிறார்கள். அதில் மற்ற மருத்துவம் படித்தவர்களை வஏலைக்கு அமர்த்திக் கொண்டு வியாபாரம் செய்து வருகின்றனர். மருத்துவர்கள் மருத்துவ வேலை செய்யாமல், வியாபார ரீதியில் என்ன செய்ய வேண்டும், சட்டப்படி எப்படி தப்பித்துக் கொள்ள வேண்டும் என்று பாடம் சொல்லிக் கொடுக்கப்பட்டபிறகு வேலைக்கு அமர்த்தப்படுகிறார்கள். இவர்களிடம் மருத்துவன் என்ன கிடைக்கும்?

mbbs-in-tamilnadu-rate-fixed-in-colleges

குழப்ப அரசியலில் உழப்பப் பார்க்கும் சந்தர்ப்பவாதிகள்: ஜெயலலிதா இறந்த பிறகு, அதிமுகவில் பிரிவுகள் ஏற்பட்டு, ஆட்சி, அதிகாரம், பணம்…முதலியவற்றிற்காக, சசிகலா மற்றவர் போட்டி போடும் நிலையில், திமுக தனது பண பலத்தினால், குழப்பத்தை உண்டாக்க முயன்று வருகிறது. டி.டி.வி.தினகரனுடன் கூட்டு சேர்ந்து, ஆட்சி அமைக்கவும் ஆசை இருக்கிறது. அதே நேரத்தில், நான்கு ஆண்டு ஆட்சியை யாரும் விட்டுத் தரவும் முடியாத நிலையுள்ளது. ஆக, ஆட்சியைக் களைத்தால், செலவு எல்லோருக்கும் தான். அந்நிலையில் எல்லோருமே ஒழுங்கு மாதிரி, கிடைக்கும் எல்லாவற்றையும் பிரச்சினையாக்கி, குளிர்காய பார்க்கின்றனர். அனிதாக்கள் இறந்து கொண்டுதான் இருக்கின்றனர். ஆனால், உண்மையாக யாரும் அத்தகையவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் இல்லை. சீட்டை விற்று, லட்சங்களை, கோடிகளை அள்ள வேண்டும் என்ற பேராசை தான் உள்ளது. இப்பொழுது சினிமா நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் முதலியோர் எல்லாம், இப்பிரச்சினைகளில் நுழைந்து, குழப்பத்தை அதிகரித்து வருகிறார்கள். கருப்புப் பணத்தின் பிறப்பிடங்களில் முக்கியமாக இருப்பதும் தெரிந்த விசயமே. திராவிட அரசியலைப் பொறுத்த வரையில், அரசியல்-சினிமா சேர்ந்திருந்தாலும், இப்பொழுதையவர் திடீரென்று தங்களது ஆர்வத்தைக் காட்டி வருவதால், மக்கள் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

© வேதபிரகாஷ்

11-09-2017

mbbs-medical-courses-fees-rate-fixed-in-colleges

[1] மின்முரசு, மயக்க ஊசிபோட்டு சிறுமியை சீரழித்த ஆரணி அரசு டாக்டர், உதவியாளர் அதிரடி கைது!, செப்டம்பர்.9, 2017.

[2]https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/108155/%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%8A%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88/

[2] http://www.dinamalar.com/news_detail.asp?id=1851244

[3] தினகரன், ஆரணியில் மயக்க ஊசி போட்டு கொடுமை சென்னை சிறுமி பலாத்காரம் அரசு டாக்டர், உதவியாளர் கைது, 2017-09-10@ 00:13:38

[4]  http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=334338

 

[5] தினமலர், சிறுமியை சீரழித்த காமுகர்கள் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு, பதிவு செய்த நாள். செப்டம்பர்.8, 2017. 22.44.

[6] http://www.dinamalar.com/news_detail.asp?id=1851244

[7] https://academicdegradation.wordpress.com/2010/04/24/%E0%AE%B0%E0%AF%82-2-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B2%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%95/

தினமலர்,  கேதன் தேசாய் மீது ரூ.2,000 கோடி ஊழல் புகார், ஏப்ரல் 25,2010,00:00  IST.

[8] http://www.dinamalar.com/fpnnewsdetail.asp?news_id=7320

[9] அதில் ஒரு பிராமணப் பெண் அதிகமான மதிப்பெண்கள் எடுத்து மருத்துவ படிப்பில் சேர்ந்ததாகவும், மறுத்ததால் கற்பழித்துக் கொலை செய்யப்படுவதாகவும் காண்பிக்கப் படுகிறது.

உபி கற்பழிப்புகள், சுரணையற்ற அரசியல்வாதிகள், குரூரக் குற்றவாளி ஆட்சியாளர்கள், சட்டமீறல்கள், நியாய அவமதிப்புகள், தொடரும் மனிதத்தன்மையற்ற செயல்கள் (1)

ஜூன்4, 2014

உபி கற்பழிப்புகள், சுரணையற்ற அரசியல்வாதிகள், குரூரக் குற்றவாளி ஆட்சியாளர்கள், சட்டமீறல்கள், நியாய அவமதிப்புகள், தொடரும் மனிதத் தன்மையற்ற செயல்கள் (1)

Girls raped hanged in UP

Girls raped hanged in UP

27-05-2014 செவ்வாய்க் கிழமை: உத்திரபிரதேசத்தில் இளம்பெண்களை கிண்டல் செய்வது, கற்பழிப்பு, சண்டை, கொலை, கலவரம் என்பதெல்லாம் புதிதயல்ல. முசபர் நகர் விவகாரங்களே அதற்கு சமீபத்தைய சாட்சிகளாக இருக்கின்றன. இருப்பினும், ஆளுகின்ற “யாதவ் அரசு” அதன் கொடுமையை, குரூரத்தை, எல்லா விதங்களிலும் நடந்துள்ள சட்டமீறல்கள் முதலியவற்றை அறிந்தும், அறியாதது போல இருக்கிறது.  கத்ரா கிராமத்தில் எஸ்.சி சமூகத்தைச் சேர்ந்த 14 மற்றும் 15 வயது உடைய இரண்டு சிறுமிகள், வீட்டில் கழிப்பறை வசதி இல்லாததால்  27-05-2014 செவ்வாய்க் கிழமை இரவு 9 மணியளவில் திறந்தவெளிக்குச் சென்றனர்.  இவர்கள் இருவரும் உறவுமுறையில் சகோதரிகள் ஆவர். நீண்டநேரம் ஆகியும் இருவரும் வீடு திரும்பாததால், சிறுமிகளின் பெற்றோர்களும் உறவினர்களும் தீவிரமாகத் தேடத் தொடங்கினர். எங்கு தேடியும் விவரம் கிடைக்காததால், காணாமல் போன சிறுமிகளை கண்டுபிடித்து தரும்படி, போசாரிடம் அவர்கள் புகார் அளித்தனர்.  ஆனால், முதலில் போலீஸ் தரப்பு அலட்சியம் காட்டியதாக கூறப்படுகிறது.

 

Women look at with sorrow

Women look at with sorrow

28-05-2014 புதன்கிழமை: அடுத்தநாள் இதன் தொடர்ச்சியாக, எல்லோரும் தேடியபோது,  மாந்தோட்டத்தில் இவ்விரு சிறுமிகளின் உடல்கள் மரத்தில்கழுத்தில் கட்டப்பட்டு தொங்கிய நிலையில் பெற்றோர்களால் கண்டறியப் பட்டனர். இதைக் கண்டு ஊர் மக்களும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.  இந்தச் சம்பவம் தொடர்பாக காவல் கத்ரா பகுதி காவல் நிலையத்தில் புகார் அளித்தும்,  அவர்கள் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டியதால் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். உடல்களை மரங்களினின்று இறக்கவும் அவர்கள் மறுத்தனர்[1].  சிறுமிகளின் சடலத்தை வைத்து கிராம மக்கள் போராடியதை அடுத்து,  உள்ளூர் அரசியல்வாதிகள் அவர்களை சமாதானம் செய்த பிறகு போலீசார், சிறுமிகளின்  உடல்களை பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

Rape victims brother showing the photos of the victims

Rape victims brother showing the photos of the victims

29-05-2014 வியாழக்கிழமை: சிறுமிகள் இருவரும் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு, பின்னர், தூக்கிலிடப்பட்டதால் இறந்தது பிரேதபரிசோதனை அறிக்கை மூலம் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து,  வழக்குப் பதிவு செய்த காவல்துறை கண்காணிப்பாளரான மான்சிங் சவுகான்,  குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுப்பதாக கிராம மக்களிடம் உறுதி அளித்தார். அதே வேளையில்,  இந்தவிவகாரத்தில் உத்தரப் பிரதேச மாநில அரசுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் நெருக்குதல் கொடுக்கப்பட்டது.  அதன் விளைவாக,  இந்தவழக்கில் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டிய இரண்டு போலீசார் உள்பட ஏழு பேர் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப் பட்டது.  உடனடியாக போலீசார் இருவரும் சஸ்பெண்ட் செய்யப் பட்டனர். இந்தவழக்கின் முதற் கட்ட விசாரணையில்,  இக்கொடூரச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களில் முக்கியமானவர்கள் யாதவ சமூகத்தைச் சேர்ந்த உர்வேஷ் யாதவ்,  பப்பு யாதவ் மற்றும் அவதேஷ் யாதவ் ஆகிய    மூன்று சகோதரர்கள் என்பது தெரிய வந்தது[2].  இந்தச் சம்பவத்தில் மேலும் நால்வருக்கு தொடர்பு இருப்பதை போலீஸ் உறுதி செய்தது[3]. இதன் தொடர்ச்சியாக, சர்வேஷ் யாதவ்,  பப்பு யாதவ் மற்றும் அவதேஷ் யாதவ் ஆகிய மூவரை இதுவரை போலீசார் கைது செய்தனர்.  இவர்களில் சர்வேஷ் யாதவ் என்பவர் காவல்துறையைச் சேர்ந்தவர் என்பது கவனிக்கத் தக்கது. மேலும், நால்வரைத் தேடும் பணி தீவிரப் படுத்தப் பட்டுள்ளது.  போலீஸ் துறையில் யாதவர்களின்  ஆதிக்கம் இருப்பதால்[4] தான் சட்ட அமூல் காரியங்கள் தாமதப் படுத்தப் படுகின்றன என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 

29-05-2014 வெள்ளிக்கிழமை: பல்வேறு  அமைப்புகளும்,  எதிர்க்கட்சிகளும் கடும் நெருக்குதலைக் கொடுத்து வரும் நிலையில், இந்த விவகாரத்தை உத்தரப்பிரதேச அரசு கவனத்துடன் கையாண்டு வருகிறது.  இவ்வழக்கில் அலட்சியம் காட்டிய  மூன்று போலீசார்  உடனடியாக (வெள்ளிக்கிழமை  அன்று) பணியிடை  நீக்கம் செய்யப் பட்டதை[5], முதல்வர் அகிலேஷ் யாதவ் குறிப்பிட்டுள்ளார் . விரைவு நீதிமன்றம் மூலம் இவ்வழக்கை முடிக்க அறிவித்தார்[6]. ரூ.5 லட்சம் பாதிக்கப் பட்ட குடும்பங்களுக்கு அறிவித்தார். இந்த நிலையில்,  எஸ்.சி சமூகத்தைச் ச கோதரிகள் பாலியல் பலாத்காரத்துக்கு உட்பட்டு கொல்லப் பட்ட வழக்கில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு வருகிறது என்றும்,  குற்றவாளிகள் விரைவில் தண்டிக்கப் படுவர் என்றும் மத்திய உள்துறை அமைச்சகத்திடம் உத்தரப்பிரதேச அரசு விளக்கமும் அளித்துள்ளது[7]. இதற்குள், அரசியல்கட்சிகள் வழக்கம் போல இவ்விசயத்தை அரசியல் ஆக்கிவிட்டன.

 

30-05-2014 சனிக்கிழமை: ராகுல் கற்பழிக்கப் பட்ட பெண்களின் குடும்பத்தாரை சந்தித்தார்[8].  வழக்கமான பாணியில் பேசிவிட்டு, சிபிஐ விசாரணை தேவை என்று கருத்துத் தெரிவித்தார்[9].  இவ்வாறாக ராகுலும் தனது விளம்பர  விஜயத்தை முடித்துக் கொண்டுச் சென்றுள்ளார். அவரது விஜயம் காங்கிரஸ்காரர்கள் ஒருதமாஷாகவே செய்து வருகின்றனர்.  இதற்குள் ஊடகங்கள் பெண்கள் மரத்திலிருந்து தொங்கும் காட்சிகளைபோட, சமூகவலை தளங்களில்அவைஉலகம்முழுவதும்பரவிவிட்டன. வழக்கம்போல, இந்தியாவிற்கு எதிரான பிரச்சாரம் ஆரம்பித்து விட்டது. இந்தியாவில் தினமும் பெண்கள் கற்பழிக்கப் படுகின்றனர்; பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, மேல் ஜாதி இந்துக்கள் எஸ்.சிக்களைக் கொடுமைப் படுத்துகிறார்கள் என்று அதிரடி பிரச்சாரம் ஆரம்பித்தது. “தலித்” போர்வையில், சித்தாந்ந்தரீதியில் அது பரவியது. 

 

31-05-2014 ஞாயிற்றுக்கிழமை: இதற்கிடையே பாலியல்  பலாத்காரம் செய்து கொலை செய்யப் பட்டத லித் சகோதரிகளின் சொந்த கிராமமான காட்ராவுக்கு பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதிசென்று இறந்த சகோதரிகளின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினார்.  அவர்களது பெற்றோருக்கு பகுஜன் சமாஜ் கட்சி நிதியிலிருந்து ரூ. 10 லட்சம் வழங்கப்படும் என்றும் மாயாவதி தெரிவித்தார்.  லக்னோவில் நிருபர்களிடம் மாயாவதி கூறியதாவது: அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்வதும், சஸ்பென்ட் செய்வதும் இந்த விவகாரத்தில் எந்தவகையிலும் உதவாது. மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை.  சட்டம்- ஒழுங்கை பாதுகாக்க முடியாவி்ட்டால் ஆட்சியிலிருந்து விலக வேண்டும்.  மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை பிரகடனம் செய்யவேண்டும்.  இந்த விவகாரத்தில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இல்லை யென்றால் மாநில அரசையும் மத்திய அரசையும் உத்தரபிரதேச மாநில மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.  இது போன்ற சம்பவங்களுக்கு நான் முக்கியத்துவம் கொடுத்ததில்லை ஆனால், பதயூன் கிராமத்துக்கு செல்வதென்று நான் முடிவு செய்ததால் தான் மாநில அரசு சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைத்தது.  இந்தசம்பவம் குறித்து விரைவாக விசாரணை நடத்தி குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும் என்றார்[10].

 

01-06-2014 திங்கட்கிழமை: இரண்டு எஸ்.சி[11] சமூகத்தைச் சேர்ந்த இளம்பெண்கள்,  யாதவ் ஜாதி ஆண்களில் கற்பழிக்கப் பட்டு, கொலை செய்யப் பட்டிருக்கிறார்கள்.  அப்பெண்களில் உடல்கள் மரங்களிலிருந்து தொங்குவதைப் போன்று மற்றும் மக்கள் சுற்றிலும் நின்று கொண்டு பார்ப்பது போன்ற புகைப்படம் வெளியாகி,  மக்களை அதிர வைத்துள்ளது[12]. சிலர் அதனை உள்நோக்கத்துடன் பரப்புவதை கண்டனம் செய்துள்ளனர்.  கற்பழிப்பு என்பதே குரூரம், கொடூரம்,  அந்நிலையில் அப்பெண்களைத் தூக்கில் தொங்கும் புகைப்படங்கள் அதைவிடக் குரூரமானவை, கொடூரமானவை [. On one hand it’s been blasted as the “pornography of rape”. On the other hand, it’s been described as a jolt to wake up a blasé society where rape, especially out in the badlands of UP, is commonplace enough that it does not make front page news anymore[13].]. அதுமட்டுமல்லாது, கற்பழிப்பு-கொலைக் குற்றங்களில் சம்பந்தப்பட்டவர்கள், பாதிக்கப்பட்ட பெற்றோர்களை மிரட்டியுள்ளனர்.  ஒரு பெண்ணின் தாய் தாக்கப் பட்டிருக்கிறார்.

 

02-06-2014 செவ்வாய் கிழமை:  பிஜேபி வரவில்லையே என்று பார்த்தால், அவர்களும், 02-06-2014  அன்று போராட்டம் நடத்தி விட்டார்கள்.  அகிலேஷ் வேண்டுமென்றே தேவையில்லாமல் அரசு முதன்மை செயலாளர் அனில்குமார் குப்தாவை இடம் மாற்றம் செய்தது பிஜேபிக்காரர்களைத் தூண்டியது மாதிரி ஆகிற்று[14]  ஊடகங்கள் தார்மீக ரீதியில் பொறுப்பேற்று    க்கொண்டு அகிலேஷ் பதவி விலக வேண்டும் என்று ஊத ஆரம்பித்துள்ளன. போதாகுறைக்கு ஐக்கிய நாடுகள் சங்கம்                 வேறு, இக்கற்பழிப்பு-கொலைகளை கண்டித்துள்ளது[15]. ஆக, இக்கற்பழிப்பு-கொலை ஒரு அனைத்துலக செய்தியாக, விசயமாக மாற்றியாக்கி விட்டது[16]. நாளைக்கு “மோடிஆட்சியில்கற்பழிப்பு” என்று திரித்தும் எழுதப்படலாம். மத்திய அரசு, வழக்கம் போல கவர்னரிடமிருந்து அறிக்கை வந்தால் நடவடிக்கை எடுப்போம் என்று கூறியாகி விட்டது.

 

© வேதபிரகாஷ்

03-06-2014

[1] Only when irate villagers gathered and sought action against the killers and the police chowki staff did the policemen reach the spot. The villagers, however, did not allow the policemen to lower the hanging bodies, but relented after local politicians BSP MLA from Jalalabad Neeraj Maurya, Bhagwan Singh Shakya of the Maurya Samaj and Brijpal Shakya of the Congress pacified them.

http://www.thehindu.com/news/national/other-states/outrage-over-gang-rape-murder-of-cousins-in-up-village/article6063348.ece?ref=relatedNews

[2] Of the seven wanted in the case, three (policeman Sarvesh Yadav and brothers Pappu and Awadhesh Yadav) have been arrested so far, he said. Sarvesh and Pappu were arrested on Thursday.

http://www.thehindu.com/news/national/other-states/gangrape-case-two-constables-sacked-accused-arrested/article6065298.ece?ref=relatedNews

[3] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=94524

[4] http://timesofindia.indiatimes.com/Home/Opinion/Edit-Page/Badaun-gang-rape-and-murder-is-a-wake-up-call-for-Akhilesh-and-SP/articleshow/35961723.cms

[5] http://www.thehindu.com/news/national/govt-to-set-up-rape-crisis-cell-maneka/article6065925.ece?ref=relatedNews

[6] http://www.thehindu.com/news/national/dalit-sisters-rape-akhilesh-for-fasttrack-court-to-punish-accused/article6065800.ece?ref=relatedNews

[7]http://tamil.thehindu.com/india/%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/article6065640.ece

[8] http://www.dnaindia.com/india/report-latest-rahul-gandhi-in-badaun-to-meet-family-members-all-5-accused-arrested-in-badaun-gang-rape-1992376

[9] http://www.thehindu.com/news/national/rahul-meets-family-of-gangrape-victims-demands-cbi-probe/article6069686.ece?ref=relatedNews

[10] http://www.thehindu.com/news/national/other-states/mayawati-seeks-presidents-rule-in-up/article6072560.ece?ref=relatedNews

[11]வழக்கம்போல “தலித்” பிரயோகம்இதில்உள்ளது. சட்டரீதியாகஅதுதவறுஎன்பதால், இங்குதவிர்க்கப்பட்டுள்ளது.

The National Commission for Scheduled Castes has asked the state governments not to use the word ‘Dalit’ in official documents, saying the term was “unconstitutional”. The Commission has stated that sometimes the word ‘Dalit’ is used as a substitute for Scheduled Caste in official documents, sources in State Tribal Department said on Friday. After consultation with the legal department, the Commission said that the word is neither constitutional nor the word has been mentioned in the current laws. Rather ‘Scheduled Caste’ is the appropriate and notified word as per the Article 341 of the Constitution, it said in a letter sent to all states. Acting upon the order, the Chhattisgarh government has directed District Collectors and its departments not to use ‘Dalit’ word in their documents, they said.

http://timesofindia.indiatimes.com/india/Dalit-word-is-unconstitutional-Scheduled-Caste-Commission/articleshow/2710993.cms

[12] http://www.firstpost.com/india/two-girls-in-a-tree-badaun-gangrape-photos-are-inexcusable-1550321.html

[13] http://www.firstpost.com/india/two-girls-in-a-tree-badaun-gangrape-photos-are-inexcusable-1550321.html

[14] http://www.dnaindia.com/india/report-badaun-rape-case-uttar-pradesh-home-official-shifted-1993104

[15] http://www.thehindu.com/news/national/un-condemns-badaun-rape/article6075898.ece

[16] http://www.thehindu.com/news/national/other-states/un-condemns-badaun-rapemurder/article6074540.ece

திவ்யாவின் மறுப்பு, இளவரசன் இறப்பு – காதல் தோல்வியா, கலப்புமண முறிவா, திராவிடத்தின் குழப்பமா?

ஜூலை5, 2013

திவ்யாவின் மறுப்பு, இளவரசன் இறப்பு – காதல் தோல்வியா, கலப்புமண முறிவா, திராவிடத்தின் குழப்பமா?

கலப்புத் திருமணம், சுயமரியாதை திருமணங்கள் தோல்வியடைந்தது ஏன்?: திராவிட இயக்கத்தின் தாக்கத்தில் 1930கள் தொடங்கி 1960கள் வரை கலப்புத் திருமணம், சுயமரியாதை திருமணங்கள் செய்வது ஊக்குவிக்கப்பட்டாலும் ஜாதியம் தமிழகத்தில் மறையவில்லை[1], ஜாதிகள் பெருகிக் கொண்டே வருகின்றன. தாலிக்கட்டியத் திருமணங்கள் முறிந்தபோது, திராவிடத்துவ சித்தாந்திகள் திருமண முறிவு விழா நடத்தி, பெண்களை தாலிகளைக் கழட்டி, கட்டிய ஆண்களின் கைகளில் கொடுக்க வைத்து திருமணத்தை “திரு”வெடுத்து, அவமானத்தை உண்டாக்கினர். இத்தகைய “தாலி கழட்டும்”, “கழட்டிக் கொடுக்கும்”, “முறிவு” சட்டப்படி “விவாக ரத்து” ஆனதா அல்லது தனியாக பிறகு அவ்வாறு சட்டப்பட்டி[2] “விவாக ரத்து” பெற்றுக் கொண்டார்களா? அப்பொழுது “சுயமரியாதை” பார்க்கப்பட்டதா அல்லது தாலி போல கழட்டி வைக்க்க்கப் பட்டதா என்று அவர்கள் தாம் சுயவிளக்கம் கொடுக்க வேண்டும். அவர்கள் மறுபடியும் மறுமணம் செய்து கொண்டனரா, அப்படி செய்து கொண்டால் அதே ஜாதியில் செய்து கொண்டனரா, இரண்டாம் முறை திருமணம் செய்து கொண்ட ஆண்களின் நிலை, இரண்டாவது முறையாக இன்னொரு ஆணுக்கு வாழ்க்கைப் பட்ட பெண்களின் நிலைப் பற்றியும் ஒன்றும் பேசப்படவில்லை, விவாதிக்கப்படவில்லை.

  • பிற்பட்ட ஜாதியினர், மிகவும் பிற்பட்ட ஜாதியினர், என்று நீண்டு,
  • தாழ்த்தப்பட்டவர், மிகவும் தாழ்த்தப்பட்டவர்,
  • ஒடுக்கப்பட்டவர், மிகவும் ஒடுக்கப்பட்டவர்,
  • ஒதுக்கப்பட்டவர், மிகவும் ஒதுக்கப்பட்டவர்,
  • சமூகத்தின் விளிம்பில் தள்ளப்பட்டவர், சமூகத்தின் விளிம்பில் மிகவும் அதிகமாக தள்ளப்பட்டவர்,
  • நொறுக்கப்பட்டவர், மிகவும் நொறுக்கப்பட்டவர்,

என்றெல்லாம் விளக்கங்கள், விவரணங்கள், வர்ணனைகள் நீண்டன. எஸ்.சிக்களுக்குண்டான இடவொதுக்கீட்டில், உள்-ஓதுக்கீடு செய்கிறோம் என்று 3.5%த்தை ஜாதியேயில்லை என்று பறைச்சாற்றிக் கொள்ளும் முஸ்லிம்களுக்கும் கொடுக்கப்பட்டது[3]. கிருத்துவர்களும் ஜாதியில்லை என்று சொல்லிக் கொண்டுதான், ஜாதி ரீதியில் இடவொதுக்கீடு கேட்கின்றனர்[4]. ஆக “தலித் என்ற போவையில் இப்படி “உயர்ந்த” மதங்களும் போட்டிப் போடுவது வியப்பானது தான்!

காதல், ஜாதி மற்றும் அரசியல்: 2014 தேர்தல் வருகின்ற நேரத்தில், இதனை அரசியல் ஆக்க கட்சிகள் தயாராக இருப்பதை அரசியல் ஆராய்ச்சியாளர்கள் எடுத்துக் காட்டுகின்றனர்[5]. 2011ல் அதிமுக வென்ற பிறகு அல்லது திமுக கூட்டணி தோற்றப் பிறகு, பாமக திமுக கூட்டணியிலிருந்து விலகிச் சென்றது. ஆகையால் ஜாதிய ஓட்டு எதிர்பார்க்கும் அதிகாரத்தை விரும்பும் கட்சிகள் இதன் தயவை எதிர்பார்க்கும் நிலையுள்ளது என்று கருதப்படுகிறது[6]. எல்லா அரசியல் கட்சிகளும் இப்பிரச்சினையில் நுழைந்துள்ளனர்[7]. தங்களது அரசியல் இறப்பைத் தவிர்த்து உயிர்வாழ சிலக்கட்சிகள் இந்த இறப்பைப் பயன்படுத்திக் கொள்ளப் பார்க்கிறது. வியப்பாக ஆங்கில ஊடகங்களும் இதைப்பற்றி அதிகமாகவே அலசியுள்ளன. 05-07-2013 அன்று இரவில் “ஹெட்லைன்ஸ் டுடே” செனலில் இதைபற்றிய விவாதமும் நடந்தது. கீழ்கண்டவர்கள் விவாதத்தில் பங்கு கொண்டனர்:

  1. டாக்டர் செந்தில், பாமக.
  2. டி. எஸ். சுதிர், “ஹெட்லைன்ஸ் டுடே”, ஆசிரியர்
  3. பேராசியர் சுரிந்தர் சிங் ஜோத்கா, சமூக அறிவியல், ஜே.என்.யு

எப்படி பாமக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் இதனை அரசியலாக்கின என்ற விவரங்கள் அலசப்பட்டன. காதலிப்பது, ஓடிப்போவது முதலியன நடந்து கொண்டே இருந்தாலும், ஜாதிகள் மறையாமல் தான் இருக்கின்றன என்று பேராசியர் சுரிந்தர் சிங் ஜோத்கா, சமூக அறிவியல், ஜே.என்.யு எடுத்துக் காட்டினார். அதனால் எந்த சித்தாந்தம் தோற்றது என்று அவர் விளக்கவில்லை.

துரதிருஷ்டமான இறப்பு: திவ்யா திரும்ப வருவதற்கு மறுத்ததால்[8], தற்கொலை செய்து கொண்ட இளவரசனின் உடல் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், பிரேத பரிசோதனை நடந்தது. காதல் கலப்பு திருமணம் செய்து கொண்ட இளவரசன், 04-07-2013 அன்று ரயில் முன் பாய்ந்து, தற்கொலை செய்து கொண்டார். இவரை மர்ம நபர்கள் கொலை செய்திருப்பதாக, அவரது உறவினர்கள் தொடர்ந்து கூறி வந்தனர். இந்நிலையில் திவ்யா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு உரிய பாதுகாப்பு அளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது[9]. காலை, 7 மணிக்கு தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி, மருத்துவமனையில் இளவரசனின் உடல் பிரேத பரிசோதனை செய்ய ஏற்பாடு நடந்தது. இதையொட்டி, கோவை ஐ.ஜி., டேவிட்சன் ஆசிர்வாதம் தலைமையில், மருத்துவமனை வளாகத்திலும், இரு நுழைவு வாயில் பகுதியிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இளவரசனின் உறவினர்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பிரேத பரிசோதனைக்கு சில நிபந்தனைகளை முன் வைத்தனர். சேலம், கோவை உள்ளிட்ட மருத்துவமனைகளில் இளவரசனின் உடல் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்றனர். இதை போலீஸார் மற்றும் மருத்துவத்துறையினர் ஏற்க மறுத்ததோடு, சட்ட ரீதியான முறையில் பிரேத பரிசோதனை செய்ய ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என கேட்டு கொண்டனர். தங்கள் கோரிக்கை ஏற்கும் வரை, பிரேத பரிசோதனை செய்ய அனுமதிக்க மாட்டோம் என, இளவரசன் உறவினர்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

விடுதலை சிறுத்தைகளின் தலையீடு: இது தொடர்பாக போலீஸ் மற்றும் பொது மக்களிடம், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில பொது செயலாளர் சிந்தனைசெல்வன் பேச்சு வார்த்தை நடத்தினார். காலை, 9.30 மணிக்கு விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த இரண்டு நிர்வாகிகள் மற்றும் ஒரு வக்கீல் முன்னிலையில் பிரேத பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்கான ஏற்பாடு நடந்த நிலையில், திடீரென மீண்டும் விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள், தாங்கள் கூறும் இரண்டு டாக்டர்கள் முன்னிலையில் மட்டுமே பிரேத பரிசோதனை நடத்த வேண்டும் என, வலிறுத்தினர். மீண்டும் பிரேத பரிசோதனை நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தங்கள் கோரிக்கை குறித்து போலீஸாரிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். காலை, 11 மணிக்கு கோவை ஐ.ஜி., டேவிட்சன் ஆசிர்வாதம், அரசு மருத்துவமனைக்கு விரைந்து வந்து, பிரேத பரிசோதனை நடவடிக்கை குறித்து, டி.ஐ.ஜி., சஞ்சய்குமாரிடம் ஆலோனை நடத்தினார். பின்னர் இளவரசனின் உறவினர்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளிடம், ஐ.ஜி., டேவிட்சன் ஆசிர்வாதம், இளவரசன் உடல் பிரேத பரிசோதனை செய்து முடிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

இறப்பை அரசியலாக்கும் விடுதலை சிறுத்தை கட்சி: “எங்களுக்கு கொடுத்த வாக்குறுதியை மீறி விட்டீர்கள், பேச்சை வார்த்தை நடக்கும் போது, எப்படி பிரேத பரிசோதனை செய்தீர்கள்’ என விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். “இளவரசன் கொலையில், ரயிலில் அடிபட்டால், இன்ஜின் டிரைவர் ஏன் புகார் தெரிவிக்கவில்லை. வி.ஏ.ஓ., மூலம் புகார் தெரிவிக்க வேண்டிய அவசியம் என்ன? மாவட்டம் முழுவதும், 144 தடை உத்தரவை விலக்கி கொள்ள வேண்டும். இளவரசன் இரங்கல் கூட்டத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சி திருமாவளவன் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும். நாங்கள் கூறும் இரு டாக்டர்கள் முன்னிலையில், மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும். அப்போது தான் இளவரசன் உடலை எடுத்து செல்வோம்’ என, கூறி இளவரசன் உடலை வாங்க உறவினர்கள் மறுத்தனர். காலை, 7 மணி முதல், 11 மணி வரை, நான்கு மணி நேரம் இளவரசன் உடல் பிரேத பரிசோதனை செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. நேற்று மதியம், 1 மணிக்கு மேலும் இளவரசன் உடலை வாங்க மறுத்ததால், அரசு மருத்துவமனை முன் பெரும் பதட்டமும், பரபரப்பும் இருந்தது.

புதிய தமிழக கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி இளவரசனின் மரணம் குறித்து சி.பி..  விசாரணை நடத்த வேண்டும் என்கிறார்: இளவரசன் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்று விடுதலைக்கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்[10]. புதுச்சேரியில் செய்தியானர்களிடம் பேசிய அவர் இளவரசனின் மரணத்தில் மர்மம் உள்ளதாக தெரிவித்துள்ளார். திவ்யா, அவரது தாயார் தேன்மொழி மற்றும் இளவரசனின் குடும்பத்திற்கு மிரட்டல்கள் வருவதாக கூறிய திருமாவளவன் அவர்களுக்கு தமிழக அரசு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய புதிய தமிழக கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி இளவரசனின் மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். கௌரவ கொலைகளை தடுக்க தனிச்சட்டம் கொண்டுவர வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். இதனிடையே இளவரசனின் மரணம் குறித்து நீதிமன்றம் விசாரணை நடத்த கோரி கும்பகோணத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தை கட்சிகள் 75 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக அவர்களை போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரேத பரிசோதனை முழுவதும் வீடியோவில் பதிவு: தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், இளவரசனின் உடலை டாக்டர்கள் தண்டர் ஷிப், சதீஸ்குமார், பிரவின்குமார் ஆகியோர் கொண்ட குழுவினர் பிரேத பரிசோதனை செய்தனர். பிரேத பரிசோதனை முழுவதும் வீடியோ மூலம் பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையில் சென்னை ஐகோர்ட்டில் திவ்யாவுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கோரிய வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், திவ்யாவை கோர்ட்டுக்கு அழைத்து வரமுடியுமா? இது சாத்தியமா என்று கேட்டனர். பாதுகாப்பு பிரச்னை ஏற்படும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து வரும் திங்கட்கிழமைக்கு வழக்கை நீதிபதிகள் ஒத்திவைத்தனர், இது வரை திவ்யா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும்[11], மேலும் திவ்யா மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளாரா, அவருக்கு கவுன்சிலிங் எதுவும் நடத்த வேண்டுமா என்றும் திங்கட்கிழமை கோர்ட்டில் தெரிவிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். கணவரை இழந்த மனைவி, காதலன்-தந்தை இருவரையும் இழந்த மகள் ஏன்ன்றிருக்கும் இருவரின் நிலை பரிதாபகரமானது ஆகும்.

கௌரவ கொலைகளை தடுக்க தனிச் சட்டம் கொண்டு வர வேண்டும்: தமிழக கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கௌரவ கொலைகளை தடுக்க தனிச்சட்டம் கொண்டுவர வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளது வியப்பாக உள்ளது. “கௌரவ கொலை” என்பது உயர்ந்த சாதி பெண், தாழ்ந்த ஜாதி ஆணை காதலித்தால், ஓடிப்போனால், ஓடிப்போய் திருமணம் செய்து கொண்டால், அப்பெண்ணின் உறவினர்கள் தங்களது  குலகௌரவத்தைக் காத்துக் கொள்ள  அப்பெண்ணைக் கொன்று விடுவர்[12]. ஆனால், அம்மாதிரி தமிழகத்தில் நடப்பதாக தெரியவில்லை. மாறாக காதலிக்கும் ஆண் அவதிக்குள்ளாகிறான். இந்த விஷயத்தில் அவ்வாறு தான் நடந்துள்ளது. சங்கத்தமிழ் நாகரிகத்தின், கலாச்சாரத்தின் படி காதலன் மடலேறி இறந்தானா, அல்லது கோழையாக தற்கொலை செய்து கொண்டானா என்றெல்லாம் விவாதிப்பது சரியாக இருக்காது.

வேதபிரகாஷ்

© 05-07-2013


[2] சுயமரியாதை திருமணங்கள் சட்டப்படி செல்லாது என்ற நிலை வந்தபோது, இந்து திருமணச் சட்டத்தில் திருத்தம் செய்து கொண்டு, பகுத்தறிவுவாதிகள் “இந்துக்களாகி” மரியாதையைப் பெற்றனர். அதேப்போல, விவாக ரத்துப் பெற்று, விடுதலை அடைந்தனர் போலும்.

[3] இதே நேரத்தில் தான் தமிழகம் முழுவதும் தமுமுக முஸ்லிம்களின் இடவொதிக்கீட்டை 3.5%லிருந்து உயர்ந்தப்பட வேண்டும் என்று போஸ்டர்கள் ஒட்டியுள்ளது. இது “காக்காய் உட்கார பனம்பழம் விழுந்த கதையா” அல்லது தீர்மானமாக ஏற்பட்டுள்ள சேர்வினையா என்று தெரியவில்லை.

[4] கிருத்துவர்கள், முஸ்லிம்கள் தங்களை தலித்-கிருத்துவர்கள், தலித்-முஸ்லிம்கள் என்று சொல்லிக் கொண்டு ஏமாற்ரி வருவது, அம்பேத்கரையே ஏமாற்றுவதற்கு ஒப்பாகும். அதைவிட கேவலம் என்னவென்றால் அவர்களது கடவுளர்களையும் ஏமாற்றி வருவதுதான்.

[5] The reason for the tension in the area stems from politics. The PMK is quite a mercurial party, it was with the DMK-led coalition in the state until walking out from the tie-up after the AIADMK swept elections in 2011. With the 2014 Lok Sabha polls ahead, the party will be back in sought-after category. Therefore, the upper Hand may rest with the Vanniyars. Read more at: http://indiatoday.intoday.in/story/love-and-caste-in-the-time-of-coalitions-in-tamil-nadu/1/287045.html

[7]  CPI(M) Party’s state unit secretary G Ramakrishnan said the girl’s decision to part ways with her husband should be seen as having been taken based on the “casteist/social compulsions” and that the death had posed many questions. MDMK leader Vaiko also expressed shock over Ilavarasan’s death and said that his wife Divya’s decision to end her relationship with him was prompted by the strains caused between two communities following their marriage. He demanded a judicial probe into the death and steps to protect the girl. BJP state unit president Pon.Radhakrishnan said that government should convene a meeting of heads of various communities to ensure social harmony and sought a probe into Ilavarasan’s death.

http://www.indianexpress.com/news/parties-express-grief-and-demand-probe-into-dalit-boys-death/1138084/

[12] இது வடவிந்தியாவில் அதிகமாக நடந்து வருகின்றன. ஹரியானா போன்ற மாநிலங்களில் அரசியல் தலைவர்களே இதனை ஆதரித்து வெளிப்படையாக கருத்துக்களைச் சொல்லியுள்ளனர். ஓட்டுவங்கி அரசியலுக்காக காங்கிரஸும் இதனை ஆதரித்து வருகிறது.