Posts Tagged ‘திமுக’

பனிமலர் விவகாரங்கள், விவாதங்கள் மற்றும் விதண்டாவாதங்கள் – கற்பு, புனித போன்றவையெல்லாம் தேவையில்லை [2]

மார்ச்13, 2019

பனிமலர் விவகாரங்கள், விவாதங்கள் மற்றும் விதண்டாவாதங்கள்கற்பு, புனித போன்றவையெல்லாம் தேவையில்லை [2]

Panimalar, Thyagu

காதலை நம்பாதீர், எப்பொழுது வேண்டாலும் முறியலாம், 99%லும் முறியலாம்[1]: நவநாகரிக அனுபவம் கொண்ட பனிமலர், காதலை நம்பவேண்டாம், என்றது[2], “எந்தக் காதலையும் 100 விழுக்காடு நம்பிவிட வேண்டாம். அதிகபட்சமாக 99 விழுக்காட்டிலாவது காதலை நிறுத்திவைத்துக் கொண்டாடுவதுதான் நல்லது. மீதமிருக்கும் அந்த ஒரு விழுக்காடு என்பது `எந்த மாற்றமும் நிகழலாம்’ என்பதற்கான நிகழ்தகவுதான்.

முழுக்க முழுக்க காதலைக் கொண்டாடித் தீர்ப்போர்தான், பிரிவு ஏற்படும் சூழல்களில் அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவறான முடிவுகளுக்குப் போகிறார்கள். காதலுக்காகத் தற்கொலை என்பது மன்னிக்கவே முடியாத அடிமுட்டாள்தனம் என்றே சொல்வேன்.

காதல் தோல்விக்கு தற்கொலை, இப்பொழுதெல்லாம் யாரும் செய்வதில்லை, நவநாகரிக இளம்பெண்கள் அதைப் பற்றி கவலைப் படுவதில்லை. 1% பாரம்பரிய இளம்பெண்கள் வேண்டுமானால், அந்நிலைக்குத் தள்ளப் படலாம்.

`மாற்றம் ஒன்றே மாறாதது’ என்கிற தத்துவம் காதலுக்கும் பொருந்தும் என்ற எதார்த்தத்தைப் புரிந்துகொண்டவர்களுக்கு இந்தச் சிக்கல் இல்லை.

Panimalar DK controversy
உடல் பொருள் ஆவியை முழுக்க ஒப்புக்கொடுத்தாலும் கவலைப் படாதீர்கள்![3]: பெரிய தத்துவம் பேசும் பனிமலர்[4], “`வாழ்க்கையே இவளோடுதான்… அல்லது இவனோடுதான்’ என உடல் பொருள் ஆவியை முழுக்க ஒப்புக்கொடுத்து காதலிப்பவர்களாக நீங்கள் இருக்கலாம். அதே நேரம், எதிர்பாராத பிரிவு ஏற்படும்போது, அதற்காக முடங்கிப் போய்விடாமல் உடனடியாக அடுத்தடுத்த திட்டங்களில் உங்களைப் பிஸியாக்கிக் கொள்ளுங்கள். இதுதான் பிரிவு தரும் துயரிலிருந்து மீண்டு வருவதற்கான ஒரே வழி! காதலர்களுக்குள் பிரிவு என்பது சூழலைப்பொறுத்தது. இந்தப் புரிதல் இல்லாமல், தொடர்ந்து வெறுப்பை மட்டுமே சுமந்துகொண்டிருப்பது எந்த வகையில் நியாயம்?”

Panimalar, நித் ஃப்ரிஎன்ட்ச்
ப்ரேக் அப் காதலர்கள் திருமணமான பிறகும் நண்பர்களாக இருக்கலாம்[5]: புது பார்மலா சொல்லும் பனிமலர்[6], “ப்ரேக் அப் ஆன என் முன்னாள் காதலர்களுடன் இப்போதும் நான் பேசுவது உண்டு. அவர்களுக்குத் திருமணமாகி குடும்பம், குழந்தைகள் என்று ஆனபிறகும்கூட, நட்பு ரீதியாக அவர்களோடு பேசுவதில் எனக்கு எந்தவிதச் சிக்கலும் இதுவரை இருந்ததில்லை.

ஒருவருடைய உணர்வுகளை மற்றொருவர் மதிப்பதுதானே உண்மையான காதலாகவே இருக்கமுடியும்? மறுபடியும் இன்னொரு புதிய காதல் எனக்குள் வரும்… அது இதுவரை உணர்ந்திராத ஒரு பரவசத்தை ஏற்படுத்துவதாகவும் அமையும்… எனக்கு நம்பிக்கை இருக்கிறது!”

ஏற்கெனவே, நட்பு காதலாகி, காதல் வேலை செய்து, அது புனிதமே இல்லாமல் போனாலும், தொடர்ந்து, உடலுறவு வைத்துக் கொண்டு, பிரேக்-அப் ஆகி, பிறகு, நட்பு என்று எப்படி வரும்? அது நட்பா அல்லது வேறு பெயருண்டா? கவுன்சிலிங்கில் என்ன சொல்வார்கள்?

ப்ரியா வாரியர் ஸ்டைலில், இல்லாத ரிவால்வரை இழுத்துவிட்டுச் சிரிக்கிறார், பனிமலர் பன்னீர்செல்வம். – ரசித்த த.கதிரவன் – படம் : தி.குமரகுருபரன்

Panimalar, tweet - on her right to be with anybody

பனிமலர் வீடியோ சர்ச்சை[7]: தமிழகத்தின் ஊடகவியல் துறையிலும், பெயரியாரிய இயக்கங்களாலும் பிரபலமடைந்தவர் பனிமலர். இவர் பல்வேறு பொது இடங்களிலும் பேசி வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் இவர் குறித்த அந்தரங்க வீடியோக்கள் வெளியாகியுள்ளதாக சிலர் சமூகவலைதளங்கிளில் போலியான தகவல்களை பரப்பி வருகின்றனர்[8]. பலர்  பனிமலர் வீடியோ. குறித்த லிங்க் கேட்டு பல இடுகைகளில் கருத்திட்டு வருகின்றனர். வேறு சிலர் பனிமலர் டுவீட் செய்ததாக சில டுவீட்களையும் என சில ஸ்கிரின் ஷாட்களையும் பகிர்ந்து வருகின்றனர். சிலர் இந்த வீடியோ இணையத்தில் பரவி வருவதாக சில செய்தி நிறுவனங்கள் தகவல் வெளியிட்டதாக சில பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர். ஆனால் அவ்வாறான பதிவுகள் எல்லாம் போட்டோஷாப் செய்யப்பட்ட பதிவுகள் தான் அவ்வாறாக எந்த வீடியோவும் பகிரப்படவும் இல்லை. எந்த வீடியோவும் வெளியாகவும் இல்லை. நீங்கள் தவறாக இது குறித்த பதிவுகளை உண்மை அறியாமலும், உறுதிபடுத்தாலும் பகிராதீர்கள். போலி செய்திகளை பரவுவதற்கு நீங்களும் காரணமாகாதீர்கள்.

Panimalar- Me Too

பனி மலரின் மீ டூ அனுபவம்[9]: #metoo ஹேஷ்டேக் என்னமா வேலை செய்யுது பாருங்க… புற்றீசல் போல பிரபல நிருபரும், செய்தி வாசிப்பாளருமான பெண் ஒருவர் தனக்கு நேர்ந்த பாலியல் வன்புணர்வு பற்றி #metoo என பதிவிட்டு விவரத்தை வெளியிட, பாடகி சின்மயி சும்மா புகுந்து புகுந்து விளையாட வைர முத்துவின் பெயர் பட்டி தொட்டி எங்கும் கேட்க தொடங்கி விட்டது. சரி அவர் மட்டும் தானே என பெருமூச்சு விடும் தருணத்தில்….அவர் மட்டும் இல்லைங்க… இவரும் தான் என பெண் டிவி நிருபர் ஒருவர், தனது பேஸ்புக் பக்கத்தில், ஒரு தொலைக்காட்சி சிஇஒ பற்றி கிழி கிழி என  கிழித்து எடுத்து உள்ளார். புதிய தொலைக்காட்சியின் சிஇஒ ஆக இருந்தவர் தான் அவர்…[10]தன்னுடைய பல லீலைகளை அரங்கேற்றம் செய்த அவர், சமீபத்தில் நதியின் பெயர் கொண்ட ஒரு தொலைக்காட்சியில் சிஇஒ பொறுப்பில் இருந்து உள்ளார்.  தற்போது 18 ஆம் படி நிறுவனத்தில் முக்கிய பொறுப்பை ஏற்க உள்ளார். இத்தனைக்கும் அவர் சமீபத்தில் மிக கொடூரமான உடல்  பிரச்சனையிலிருந்து மீண்டு வந்தவராம். இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, பெண் நிருபர் தனது பேஸ்புக் பக்கத்தில் என்ன பதிவு செய்து உள்ளார்  என்பதை நீங்களே பாருங்கள்..#Metoo

Panimalar- Me To-2

ஜெபம் செய்யும் அதிகாரி கூப்பிட்டாராம்![11]: சம்பவம் நடந்து 6 ஆண்டுகள் இருக்கும் இப்போதும் இதை சொல்வதில் எனக்கு தயக்கம் இருக்கிறது. நான் ஒரு கம்ஃபர்ட் ஜோனில்தான் எப்போதும் பணியாற்றியிருக்கிறேன். ஆனால் இரண்டு நிகழ்வுகள் மிக மோசமானவை ஒன்று ஆணால் ஏற்பட்டது, இன்னொன்று பெண்ணால்!……என்னுடைய முந்தைய நிறுவனத்தின் உயர் அதிகாரி (CEO), பயங்கர பக்திமான்! பெண்கள் யாருக்கு பிரச்சனை என கேள்விப்பட்டாலும் அறைக்கு அழைத்து ஜபம் செய்து அனுப்புவார். அலைப்பேசி எண்ணை வாங்கிக் கொள்வார் ஆரம்பத்தில் சாதாரனமாகத்தான் பேசினார். நாமும் உயர் அதிகாரி என்ற அடிப்படையில் பேசித்தான் ஆக வேண்டும், ஒரு கட்டத்தில் ரொம்ப அக்கறை எடுத்துக் கொள்பவரைப்போல குறுஞ்செய்திகள் வர ஆரம்பித்தது. நான் உன் அப்பா போல என்று டயலாக் வேறு, ஒரு நாள் இரவு மறைமுகமாக ஆபாச செய்தி ஒன்றை அனுப்பினார். எனக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. உடனே டெலிட் செய்துவிட்டேன். என் காதலனிடம் சொன்னேன் ஏன் அழித்தாய் என கடிந்து கொண்டான். அசிங்கம் நம் மேல் பட்டுவிட்டால் அனிச்சை செயலாய் தட்டி விடுவோமே அதுபோலத்தான் பதற்றத்தில் அழித்துவிட்டேன். கொஞ்சமும் உயரதிகாரி என யோசிக்காமல் block செய்துவிட்டேன்.

RBU Shyam Kumar, Pastor- God morning TV-I can do all

அடுத்த நாள் அவர் அறைக்கு அழைத்தார், கொடுர பயமாகத்தான் இருந்தது. ஆனால் பிரச்சனையை சந்திக்க தயாராகத்தான் சென்றேன். உன் போனைக்கொடு எனக்கேட்டு அவர் அனுப்பிய மெசேஜ் இருக்கிறதா என பார்த்துவிட்டு, அந்த மெசேஜ் இல்லை என்றதும் சாதாரண மெசேஜயும் அழிக்கும்படி கூறினார் அவர் கண் முன்னாடியே அழித்துவிட்டேன். மீண்டும் சொன்னார் நான் உன் அப்பா மாதிரி உனக்காக நான் எப்போதும் பிராத்திப்பேன் என்று! நான் இது குறித்து யாரிடமும் சொல்லவில்லை, எனக்கும் என் காதலனுக்கும் மட்டுமே தெரியும். தொடர்ந்து அதே நிறுவனத்தில்தான் ஒன்றரை ஆண்டுகள் வேலை செய்தேன்[12]. ஏனென்றால் எனக்கு பணி முக்கியம், என் கெரியர் முக்கியம், தனித்து விடப்பட்டிருந்த எனக்கு பணம் மிக மிக முக்கியம், அதுவே என் பலமும் கூட.

RBU Shyam Kumar, Pastor- God morning TV-retreat

யார்  அந்த ஜெபம் செய்யும் சி.இ.ஓ?: அவர் இவ்விதமாக விவரிக்கப் பட்டிருக்கிறார்ள்:

  1. புதிய தொலைக்காட்சியின் சிஇஒ ஆக இருந்தவர் தான் அவர்…தன்னுடைய பல லீலைகளை அரங்கேற்றம் செய்த அவர்,
  2. சமீபத்தில் நதியின் பெயர் கொண்ட ஒரு தொலைக்காட்சியில் சிஇஒ பொறுப்பில் இருந்து உள்ளார்.
  3. தற்போது 18 ஆம் படி நிறுவனத்தில் முக்கிய பொறுப்பை ஏற்க உள்ளார்.
  4. இத்தனைக்கும் அவர் சமீபத்தில் மிக கொடூரமான உடல்  பிரச்சனையிலிருந்து மீண்டு வந்தவராம்.

அவ்விவரங்களை வைத்து சரிபார்த்தால்,  இவர் தான் வருகிறார்:

RBU Shyam Kumar, Win, Kaveri, Puthiathalaimurai, News-18

இவர் ஜெபம், ஊழியம், பைபிள் விளக்கம் கொடுப்பது  செய்வது போல,  பல வீடியோக்கள், இணைதளங்களில் இருக்கின்றன.

RBU Shyam Kumar, Pastor.TV evangelist

இப்படி கிறிஸ்தவ காரியங்களை செய்து கொண்டே, ஊடகங்களில் வேலை செய்யும் போது, பாதிப்பு இருக்காதா என்று தெரியவில்லை. இவரே ஒரு வீடியோவில் சொல்கின்ற படி, ஆவி அதிகம் பாதித்தால், என்னாகும் என்றும் யோசிக்க வேண்டிஉள்ளது.

© வேதபிரகாஷ்

13-03-2019

Panimalar- ready to marry EVR-free relation

[1] விகடன், மறுபடியும் புதிய மனுஷியாகப் பிறந்தேன்! – பனிமலர் பன்னீர்செல்வம்,

த.கதிரவன் குமரகுருபரன் , வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (30/10/2018)

[2] https://www.vikatan.com/avalvikatan/2018-nov-13/entertainment/145468-interview-with-news-reader-panimalar-panneerselvam.html

[3] விகடன், மறுபடியும் புதிய மனுஷியாகப் பிறந்தேன்! – பனிமலர் பன்னீர்செல்வம்,

த.கதிரவன் குமரகுருபரன் , வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (30/10/2018).

[4] https://www.vikatan.com/avalvikatan/2018-nov-13/entertainment/145468-interview-with-news-reader-panimalar-panneerselvam.html

[5] விகடன், மறுபடியும் புதிய மனுஷியாகப் பிறந்தேன்! – பனிமலர் பன்னீர்செல்வம்,

த.கதிரவன் குமரகுருபரன் , வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (30/10/2018).

[6] https://www.vikatan.com/avalvikatan/2018-nov-13/entertainment/145468-interview-with-news-reader-panimalar-panneerselvam.html

[7] Tamil Samayam,  Panimalar Paneerselvam video: வீடியோ லிங்க் கேட்கறீங்களே, உங்களுக்கு வெட்கமாயில்ல?, Updated:Mar 9, 2019, 06:01PM IST.

[8]https://tamil.samayam.com/viral-corner/trending/fake-post-are-sprading-around-social-media-about-jounalist-panimalar-panneerselvam-video/articleshow/68334333.cms

[9] தமிழ்.ஏசியா.நெட்.டிவி, பிரபல TV CEO – வின் லீலை..! பேஸ்புக்கில் கிழி கிழியென கிழித்த பெண் நிருபர்…! ஆதாரம் உள்ளே ..!, By Vinoth KumarFirst Published 11, Oct 2018, 8:02 PM IST.

[10] https://tamil.asianetnews.com/crime/pollachi-issue-harassment-case-po7bcx

[11] தமிழ்.ஏசியா.நெட்.டிவி, பிரபல TV CEO – வின் லீலை..! பேஸ்புக்கில் கிழி கிழியென கிழித்த பெண் நிருபர்…! ஆதாரம் உள்ளே ..!, By Vinoth KumarFirst Published 11, Oct 2018, 8:02 PM IST.

https://tamil.asianetnews.com/crime/pollachi-issue-harassment-case-po7bcx

[12] https://tamil.asianetnews.com/crime/pollachi-issue-harassment-case-po7bcx

RBU Shyam Kumar, Pastor- God morning TV

காதலர்களுடன் வீட்டை விட்டு வெளியேறி இன்ப சுற்றுலா போய் சீரழிந்து நிற்கும் நெல்லை மாணவிகள்!

மார்ச்14, 2013

காதலர்களுடன் வீட்டை விட்டு வெளியேறி இன்ப சுற்றுலா போய் சீரழிந்து நிற்கும் நெல்லை மாணவிகள்!

சைவம், ஒழுக்கம், கட்டுப்பாடு, பாரம்பரியம்எங்கே?: திருநெல்வேலி என்றாலே சைவம், ஒழுக்கம், கட்டுப்பாடு, பாரம்பரியம் என்றேல்லாம் தான் நினைவிற்கு வரும். ஆனால், இன்றோ, அனைத்தும் போய், ஏதோ அமெரிக்காவில் நடக்கும் நிகழ்சிகளைப் போல நடப்பது, என்னவென்று சொல்லக்கூட முடியவில்லை. ஆனால், கிருத்துவர் மிஷினரிகள் 150 ஆண்டுகளுக்கு முன்பு அங்கு வந்து கலாச்சாரத்தை சீரழிக்க ஆரம்பித்த பொழுதே[1], சீரழிவுகள் ஆரம்பித்து விட்டன என்றுதான் தோன்றுகிறது. கால்டுவெல் நடத்திய வாழ்க்கையே இதற்குச் சான்றாக உள்ளது[2].

கிருத்துவமிஷினரிகளின்ஒழுக்கமின்மையின்தாக்கம்[3]:  சாணார்கள் என்ற நாடார்களின் மீது குறிவைத்து, ராபர்ட் கால்டுவெல் பாதிரி, தனது விஷத்தைக் கக்கிவிட்டுச் சென்றான்[4]. சாணர்களை இழிவு படுத்தி புத்தகம் எழுதி பிரிவினை ஏற்படுத்தினான். முன்னர், கள்ளர்களை ராமநாதபுரம் சேதுபதி அரசர்களுக்கு எதிராக மாற கிருத்துவ மிஷினரிகள் சதி செய்தன. குடும்பங்களைப் பிரித்தன. இப்படி ஆரம்பித்த சீரழிவு, தென் மாவட்டங்களில் பலவிதமாக வெளிப்பட்டன. முன்பு ஐரோப்பிய கிருத்துவர்கள் என்றால், இப்பொழுது, அமெரிக்கக் கிருத்துவர்களும் சேர்ந்து கொண்டுள்ளார்கள்[5]. கற்பழிப்படு டீ குடிப்பது போன்றது என்ற கொள்கைக் கொண்ட கம்யூனிஸ்டுகள் வழும் கேரளா வேறு மிக அருகில் உள்ளது. போப்பே வெட்கப்பட்டாலும்[6], போக கற்பு திரும்ப வராது!

கோக்கோ கோலா, பிட்ஸா, கென்டக்கி சிக்கன், குடி, கூத்து, இன சுற்றுலா: இன்றைய பள்ளி-கல்லூரி மாணவ-மாணவிகளில் பார்புலாவே இப்படித்தான் இருக்கிறது. இதற்கு செல்போன், பேஸ்புக் முதலியவை இடையில் தூபம் போட்டுக் கொண்டிருக்கின்றன[7]. போதாகுறைக்கு, ஆபாசமான செக்ஸ் ஜோக்குகள், சினிமா தொகுப்புகள், வீடியோக்கள், சிடி-விற்பனை, புழக்கம் முதலியவை. பெற்றோர்கள் கஷ்டப்பட்டு, சம்பாதித்து, தங்களது மகள்-மகன்களை படிக்க வைத்தால், கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல், அவர்கள் இப்படி கெட்டு சீரழிகிறார்கள். பெரியவர்களுக்கு மதிப்பு, மரியாதை கொடுக்கக் கூடாது என்று ஊடகங்கள் மூலம், தொடர்ச்சியாக பிரச்சாரம் செய்யப்படுவது தான் இதற்கு காரணம். பெற்றோர்கள் கஷ்டப்பட்டு, சம்பாதித்து, படிக்க வைக்கின்றனர் என்றால், அது அவர்கள் கடமை, எங்களது லட்சியம் ஜாலியாக இருக்க வேண்டும், என்றுதான், சிலர் மற்றவர்களை கெடுக்கிறார்கள்.

திருநெல்வேலி மாவட்டத்தை சீரழிக்கும் கிருத்துவ மிஷினரிகள்: ஏற்கெனவே, கிருத்துவ மிஷினரிகள் அனாதை இல்லம், குழந்தைகள் காப்பகம் என்ற பெயரில், இளம் பெண்கள், சிறுமிகள் முதலியோரை வைத்து செக்ஸ்-டூரிஸம், விபச்சாரம் செய்து வந்தனர் என்று சிலர் சிக்கியுள்ளனர், பலர் சிக்காமல் இருக்கின்றனர். இவர்களுக்கும் கேரளாவில் உள்ளவர்களுக்கும் தொடர்புள்ளது. இந்நிலையில் தான் மாணவர்கள் ஆசை வார்த்தையில் மயங்கி மும்பை வரை சென்று 10 நாட்கள் கழித்து நெல்லை மாணவிகள் 4 பேரை போலீசார் பிடித்தனர். மாணவிகள் மும்பையில் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுத்தப்பட்டார்களா என்பது குறித்து போலீசார் இவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு மருத்துவ பரிசோதனையும் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அவர்கள் கற்பழிக்கப்பட்டுள்ளார்கள் என்ற செய்திகள் எல்லாம் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

 

படிக்கும் மாணவி எப்படி 50 பவுன்நகைகள்.டி.எம்.,கார்டு எடுத்துச் செல்கிறாள்?: படிக்கும் போது, படிப்பைத் தவிர்த்து எப்படி காதல், செக்ஸ் என்று அலைகின்றனர்? இதற்கு காரணம் என்ன? திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவி குஷ்பு 15. (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது தந்தை பாளை பெருமாள்புரம் அன்புநகரை சேர்ந்தவர் ஜெயமணி சென்னையில்  கிண்டியில் உள்ள சுகாதாரத்துறை அரசு பணிமனையில்  பணிபுரிந்து வருகிறார்[8].  நேற்று குஷ்புவை அவரது அண்ணன் பள்ளிக்கு பைக்கில் கூட்டிச் சென்று பள்ளியில் விட்டார்[9], பிறகு லலிதாவை காணவில்லை என்று தெரியவந்துள்ளது. பள்ளிக்கும் செல்லாமல், வீட்டிற்கும் திரும்பி வராமல்[10] என்று தெரியாமல் இருந்தது. தாய் வளர்ப்பில் உள்ள மாணவி, கடந்த மாதத்தில் ஒரு நாள் பள்ளியில் இருந்து வந்தவள், வீட்டின் பீரோவில் இருந்த 50 பவுன் நகைகள், பாங்க் ஏ.டி.எம்.கார்டு ஆகியவற்றை எடுத்துக்கொண்டு தலைமறைவாகி விட்டாள் என்று தெரியவந்துள்ளது. இரவோடு இரவாக அவளது தந்தை, நெல்லை வந்து, பெருமாள்புரம் போலீசில் புகார் செய்தார். ஏ.டி.எம்.கார்டை பயன்படுத்தி 25 ஆயிரம் ரூபாய் பணம் எடுக்கப்பட்டதை தெரிந்த பெற்றோர்கள் தமது மகள் விபரீதமாக எங்கோ சிக்கிக்கொண்டதை உணர்ந்தனர்.

மாணவர்கள்-மாணவிகளுக்கு காதல் செய்வது தான் வேலையா?: இன்று சினிமா தாக்கத்தினால், பள்ளி மாணவ-மாணவிகள் காதல் செய்வது, ஓட்டல்களுக்குச் செல்வது, சுற்றுலா போவர்து என்று ஆரம்பித்துள்ளனர். இதே மாதிரித்தான் இம்மாணவிகளும் செய்துள்ளனர். குஷ்பு பயிலும் அதே பள்ளியில் பத்தாம் வகுப்பு மற்றும் ஒன்பதாம் வகுப்பில் பயிலும் அக்காள், தங்கையையும் காணவில்லை என தெரியவந்தது. அதே பள்ளியில் 11ம் வகுப்பு பயிலும் ரம்யா 16, (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரையும் காணவில்லை என தெரியவந்தது. ஒரே பள்ளியில் பயிலும் நான்கு மாணவிகள், அதுவும் அனைவருமே 16 வயதுக்குட்பட்டவர்கள் காணாமல் போனதால் பள்ளி வட்டாரத்திலும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் ஒரு மாணவியின் தம்பியும், தனியார் டுட்டோரியலில் பிளஸ் டூ பயிலும் இரு மாணவர்களும் இந்த மாணவிகளுடன் வெளியூர் சென்றிருப்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

பல இடங்களுக்கு சென்றுள்ளது அவர்களின் வக்கிரபுத்தியைக் காட்டுகிறது: பணம்-நகைகளை எதுத்துக் கொண்டு, இஎத வயதிலேயே செக்ஸில் ஈடுபட வேண்டும் என்ற வக்கிரபுத்தியில் தன், இவர்கள் சென்றுள்னர் என்று தெரிகிறது. இல்லையென்றால், அவர்கள் “இந்த தூரத்திற்கு” சென்றிருக்க முடியாது. ஏ.டி.எம்.,கார்டு பயன்படுத்தப்பட்ட இடங்களை கொண்டு விசாரித்தபோது நான்கு மாணவிகள், மூன்று மாணவர்கள் மும்பையில் தங்கியிருப்பது தெரியவந்தது. பெருமாள்புரம் போலீஸ் தனிப்படையினர் மும்பை சென்றனர். அங்கு சென்று ஏழு பேரையும்  அடையாளம் கண்டுகொண்டு நெல்லைக்கு அழைத்துவந்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மாணவர்களின் தவறான வழிகாட்டுதலில் மாணவிகள் கடத்தப்பட்டிருந்தாலும் போலீசார் கடத்தல் வழக்கு பதிவு செய்யாமல் “காணாமல் போனதாக’ மிஸ்சிங் என வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.

பாலியல்ரீதியாகபழக்கம் ?: இருப்பினும் மாணவிகள் பாலியல் பலத்காரத்தில் ஈடுபடுத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டது. எனவே மாணவிகளுக்கு நெல்லை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. மாணவிகளை அழைத்துச்சென்ற மாணவர்கள், அவர்களுடன் பாலியல் ரீதியாக பழகியிருந்தால் அவர்கள் மீது கடத்தல், கற்பழிப்பு வழக்குகள் பதிவு செய்ய உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதனால் சம்பந்தப்பட்ட மாணவ, மாணவிகளை வழக்குச் சிக்கலில் இருந்து காப்பாற்ற சிலர் முயற்சிக்கின்றனர்[11].

தமிழ்நாளிதழ்களின்வர்ணனைகள்: நெல்லையில் மாயமான பள்ளி மாணவிகள் 4 பேர் திருவனந்தபுரம், மும்பையில் ரவுடி கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. நெல்லையை சேர்ந்த 4 மாணவிகள் அங்குள்ள பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ் 1 படித்து வந்தனர். அவர்கள் 4 பேரும் கடந்த 23ஆம் தேதி பள்ளியில் சிறப்பு வகுப்பு உள்ளதாக கூறிவிட்டு சென்றனர். ஆனால் அவர்கள் மாலையில் வீடு திரும்பவில்லை. உறவினர் வீடு மற்றும் பல இடங்களில் தேடியும் மாணவிகள் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதுகுறித்து பெருமாள்புரம் காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரித்து வந்த நிலையில் காணாமல் போன மாணவிகளுடன் பிளஸ்1 படிக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒரு மாணவன்  மற்றும் டூட்டோரியலில் படிக்கும் 2 மாணவர்களும் உடன் சென்றது தெரியவந்தது. இவர்களில் ஒரு மாணவி வீட்டில் இருந்த 25 பவுன் நகை மற்றும் 40 ஆயிரத்தை எடுத்து சென்றார். இவர்கள் அனைவரும் கன்னியாகுமரி, திருவனந்தபுரம் சென்று அங்கிருந்து ரயிலில் மும்பை சென்றுள்ளனர். பின்னர் புனே சென்றனர். தகவல் அறிந்து தனிப்படை போலீசார் புனே சென்று அவர்களை மீட்டு, நெல்லை குற்றவியல் முதலாம் எண் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட் ராமலிங்கம் மாணவ, மாணவிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய உத்தரவிட்டார். அதன்படி 4 மாணவிகள் மற்றும் மாணவர்களுக்கு நெல்லை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் பரிசோதனை நடந்தது. இதில் 4 மாணவிகளும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.

திருவனந்தபுரத்திலிருந்து மும்பைவரை – விவரமானவர்கள் தாம்!: திருவனந்தபுரத்திற்கு சென்ற மாணவ, மாணவிகள் அங்கு லாட்ஜ் எடுத்து தங்கியுள்ளனர். இதையறிந்த ரவுடி கும்பல் மாணவிகளை மிரட்டி அவர்களை பலாத்காரம் செய்துள்ளனர்[12]. பின்னர் அவர்கள் மும்பை சென்றபோது அங்கும் ஒரு கும்பல் அவர்களை பலாத்காரம் செய்துள்ளது[13]. இதற்கு அவர்களுடன் சென்ற மாணவர்கள் உடந்தையாக இருந்துள்ளனர்[14]. இதில் 2 மாணவிகள் தங்களுக்கு நடந்த கொடுமைகள் குறித்து பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் உடனடியாக லாட்ஜ் மேலாளரை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். இதையடுத்து அவர்கள் அனைவரும் புனேயில் உள்ள உறவினர் வீட்டுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. மாணவ, மாணவிகள் 7 பேரும் கோர்ட்டில் மீண்டும் ஆஜர்படுத்தப் படுகின்றனர். மாணவிகள் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிப்ரவரில் நடந்தது மார்ச்சிலும் நடக்கிறது: கடந்த மாதம் பிப்ரவரியில் கூட, இதே மாதிரி, ராஜேஸ் என்பவன் தூத்துக்க்குடியைச் சேர்ந்த 15 வயது பெண்ணை ஜாலியாக இருக்க காரில் கன்னியாக்குமரிக்கு அழைத்து சென்றான். போகும் வழியில், அவனது நண்பர்கள் என்று இருவர் ஏறிக்கொண்டனர். பிறகு, கன்னியாக்குமரி லாட்ஜில் தூக்கமருந்து கொடுத்து, மூவரும் கற்பழித்துள்ளனர். பிறகு, கேரளாவில் கொத்தார்கரா என்ற இடத்தில் விட்டுவிட்டு மறைந்து விட்டனர்[15]. உதாரணத்திற்கு இது கொடுக்கப்படுகிறது.

பிரியானி சாப்பிட விட்டை விட்டு ஓடிய மாணவிகள்[16].

காதலிக்கிறேன் என்று சொல்லி நண்பர்களுடன் போதை மருந்து கொடுத்து கற்பழித்த மாணவர்கள்[17].

மாணவியை ஆபாச வீடியோ எடுத்த மாணவர்கள்[18]. இப்படி தொடற்கின்றன.

வேதபிரகாஷ்

14-03-2013


[4] இதைப்பற்றிய விவரமாக இடுகைகளை இட்டுள்ளேன். அந்த ஆளை வைத்துக் கொண்டுதான், திமுக அரசியல் வியாபாரம் செய்து கொண்டுள்ளது.

http://dravidianatheism.wordpress.com/2010/01/30/house-of-caldwell-converted-to-memorial/