குஷ்பு–நக்மா–விஜயதாரிணி சண்டைக்குப் பிறகு, ஹஸினா–ஜான்சி–கௌரி சண்டை ராகுலிடம் சென்றுள்ளது – காங்கிரசீன் கவர்ச்சி அரசியல்! (1)
காங்கிரஸ் தலைவர்கள், ஆண்கள் சண்டை பெண்கள் சண்டை: தமிழ் நாட்டில் காங்கிரஸ் கட்சி என்று இருக்கிறது. அது, ஈ வி கே எஸ் இளங்கோவன், தங்கபாலு, சிதம்பரம், திருநாவுக்கரசர் என பல அணிகளாக பிரிந்து கிடக்கிறது என்பது தெரியும்[1]. அதேபோல், மகிளா காங்கிரசில், நக்மா மற்றும் விஜயதரணி கோஷ்டியினர், தொடர்ந்து குஷ்புவை வறுத்தெடுத்து வருவதும் அறிந்ததே[2]. காங்கிரஸும் கோஷ்ட்டி சண்டையும் பிரிக்க முடியாத ஒன்றாகிவிட்டது என்றாலும், இன்று சென்னையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகமாக சத்தியமூர்த்தி பவனில், தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவர்கள் போட்ட குடிமிடிபிடி சண்டை குழாய் அடி சண்டையை மிஞ்சிவிட்டது. தமிழக மாநில மகளிர் காங்கிரஸ் தலைவியாக விஜயதாரணி இருந்த வரை கலகலப்புக்கு பஞ்சமிருக்காது. அப்போது தலைவராக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கும் விஜயதாரணிக்கும் இடையே ஏழாம் பொருத்தம்தான். இந்த நிலையில்தான் விஜயதாரணியை மகளிர் காங்கிரஸ் அணி தலைவி பதவியில் இருந்து நீக்கி விட்டு முன்னாள் எம்எல்ஏ பொன்னம்மாளின் பேத்தி ஜான்சி ராணி கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நியமனம் செய்யப்பட்டார்[3]. இதற்கிடையே, மாநில மகளிர் காங்கிரஸ் அணி தலைவி பதவியைக் கைப்பற்ற சிலர் முயற்சி செய்கின்றனர். அதில் நக்மாவின் ஆதரவாளர் ஹசீனாவும் ஒருவர்[4].
காங்கிரஸ் தலைவர்கள், அவர்களின் மனைவிகள்: காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி சண்டை நடந்தது, அதில், பெண்கள் – பெண் தலைவிகள் ஒரொருவரையொருவர் திட்டி-அடித்துக் கொண்டனர் என்று செய்திகளை “குழாயடி சண்டை” போல சுருக்கி விட முடியாது. பெண் அரசியல்வாதிகள் இந்த அளவுக்கு, “ரௌடியிஸம்” செய்யும் அளவுக்கு முன்னேறியுள்ளார்கள் என்று தெரிகிறது. பெண்கள் “தாதா” ஆகி வருகிறார்கள் என்று தெரிகிறது. அதிகாரம், பணம் முதலிய பெண்ணிடத்தில் சேர்ந்தாலும், முடிவு அவ்வாறாகத்தான் இருக்கும் என்றாகிறது. 33% சதவீதம் பென்களுக்கு இடவொதிக்கீடு என்பதைப் பற்றி, இந்த கட்சிகளே மறந்து விட்டாலும், இவ்விசயத்தில் கொடுக்கிறார்கள் போலும். பொதுவாக, இத்தகைய விசயங்களில் கணவன்மார்களின் அழுத்தம், மறைமுகமாக இருக்கும். தங்களது மனைவிகளை வைத்து அரசியல் செய்வதும் காங்கிரஸ்காரர்களுக்கு கலையாக இருந்து வருகிறது. காங்கிரஸைப் பொறுத்தவரையில், சமீப காலத்தில் பெண்-தலைவர்கள் சண்டைப் போட்டுக் கொள்வது, கவனிக்கப் பட்டு வருகிறது. ஏனெனில், இவ்விசயம், நேரிடையாக ராகுலுக்கு எடுத்துச்ச் செல்லப்படுகிறது. இருப்பினும் பெண்கள் என்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது, எப்படி பாடுபட வேண்டியிருக்கிறது என்று ஆண்கள் உணர வேண்டும். ஆனால், பணம், அதிகாரம் என்றால், எல்லாம் மறந்து, பரந்து போகின்றன. அசமரசம், அனுசரனை, ஒத்துபோதல் போன்றவையும் வந்து விடுகின்றன.
ஹசீனா சையத் கெளரி கோபால் சண்டை வெளிப்படுத்தியது: சமீபத்தில், சென்னை வந்திருந்த ராகுலை வரவேற்க, சத்தியமூர்த்தி பவன் முன், மகளிர் காங்கிரசார் வரவேற்பு பேனர்களை வைத்திருந்தனர்[5]. திருவள்ளூர் தெற்கு மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவர், கவுரி கோபால் ஏற்பாட்டில் வைக்கப்பட்டிருந்த பேனரில், அகில இந்திய மகளிர் காங்., செயலர் ஹசீனா சையது படம் இல்லை[6]. இதனால் கெளரி கோபாலை திருவள்ளூர் மாவட்ட மகிளா காங்கிரஸ் செயலாளர் பொறுப்பில் இருந்து ஹசீனா சையத் நீக்கியதாக கூறப்படுகிறது[7]. அதாவது, அசீனாவுக்கு அந்த அளவுக்கு காங்கிரஸில் செல்வாக்கு உள்ளது என்றாகிறது. இந்நிலையில் இன்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ஹசீனா சையத், தன்னை பகைத்துக் கொண்டால் என்ன நிகழும் என்று தற்போது கௌரி கோபாலுக்கு புரிந்திருக்கும் என்று கூறியுள்ளார்[8]. இதனால் ஆத்திரம் அடைந்த கௌரி கோபால், மகிளா காங்கிரசின் அகில இந்திய செயலாளர் ஹசீனாவிடம் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
ஹசீனா சையத் கெளரி கோபால் வாய் சண்டை கை–சண்டையனது: மகிளா காங்கிரஸ் தேசிய செயலாளர் அசினா சையத், முன்னாள் மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவி கவுரியை பார்த்து என்னை பகைத்துக் கொண்டால் உன்னுடைய பதவி பறிபோனது என்றும் கூறினார்[9]. ஆத்திரம் அடைந்த கவுரி, அசினா கன்னத்தில் அறைந்து விட்டு அழுதுக் கொண்டே திருநாவுக்கரசர் அறைக்கு சென்றார்[10]. கன்னத்தில் அடி வாங்கிய அசினா, கணவருக்கு தகவல் தெரிவித்தார்[11]. தகவல் கிடைத்த ஐந்து நிமிடத்தில், அசினா கணவர் உமர் பவனுக்குள் நுழைந்து கவுரியை கன்னத்தில் அறைந்து எட்டி உதைத்தார்[12]. “ ஏய் என்னடி”, என்று கேட்டுக்கொண்டே ஆபாச வார்த்தையில் ஜான்சிராணியை திட்டிக்கொண்டே தாக்கினார்[13]. அதற்கு ஜான்சிராணியோ, “ஏய் எங்க வந்து யாரு கிட்ட… செருப்பு பிஞ்சிரும்”, என்று கத்திக்கொண்டே ஹசீனாவின் கணவரை விரட்டினார்[14]. மொத்தத்தில் சத்தியமூர்த்தி பவன் சண்டைபவனானது. அதை தடுக்க வந்த மாநில தலைவி ஜான்சி ராணிக்கும் அடி விழுந்தது[15]. ஒரு பெண்ணை கண்மூடித்தனமாக தாக்கிய நபரை அங்குள்ள பத்திரிகையாளர்கள் கண்டித்தனர்[16]. காங்கிரஸ் குடுமி பிடி சண்டை பவனை போர்க்களமாக்கியது[17]. ஆனால், அங்கு இருந்த கதர் சட்டைக்காரர்கள் பலர் வேடிக்கை பார்த்துக் கொண்டு சிரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது[18].
© வேதபிரகாஷ்
09-06-2017
[1] NewsFast, Congress fighting in sathyamoorthy bhavan,arrested, 6/7/2017 2:59:37 PM
[2] http://www.newsfast.in/news/congress-fighting-in-sathyamoorthy-bhavanarrested
[3] சென்னை.ஆன்.லைன், தலை முடியை பிடித்து அடித்துக் கொண்ட காங்கிரஸ் பெண் தலைவர்கள், June 07, 2017, Chennai
[4] https://chennaionline.com/article/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
[5] தினமலர், மகளிர் காங்கிரசார் குடுமிப்பிடி சண்டை தடுக்க முடியாமல் திருநாவுக்கரசர் தவிப்பு, பதிவு செய்த நாள் : ஜூன் 07,2017,22:45 IS
[6] http://www.dinamalar.com/news_detail.asp?id=1785855
[7] தமிழ்.ஒன்.இந்தியா, ஹசீனாவின் தலைமுடியை கொத்தோடு பிடித்து இழுத்து அடித்த காங்கிரசார்!, By: Mayura Akilan, Updated: Wednesday, June 7, 2017, 18:41 [IST]
[8] http://tamil.oneindia.com/news/tamilnadu/when-haseena-was-attacked-the-congress-guys-285227.html
[9] பாலிமர்.செய்தி, சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் மகளிர் அணியினர் கைகலப்பு, 07-ஜூன்-2017 15:38
[10]https://www.polimernews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B5/
[11] தினமலர், சத்தியமூர்த்தி பவனில் மகளிர் காங்., ‛கும்மாங்குத்து‘, பதிவு செய்த நாள். ஜூன்.07, 2017. 15.09.
[12] http://www.dinamalar.com/news_detail.asp?id=1785732
[13] தமிழ்.ஒன்.இந்தியா, எங்க வந்து யாரு கிட்ட… செருப்பு பிஞ்சிரும் – சத்தியமூர்த்தி பவனில் ஆபாச சண்டை,By: Mayura Akilan, Updated: Wednesday, June 7, 2017, 18:26 [IST]
[14] http://tamil.oneindia.com/news/tamilnadu/hassena-s-husband-attacks-jhansi-rani-285237.html
[15] ஈநாடு.தமிழ், சத்தியமூர்த்தி பவனில் காங். தொண்டர்கள் கைகலப்பு, Published 07-Jun-2017 19:50 IST | Updated 19:51 IST
[16] http://tamil.eenaduindia.com/State/Chennai/2017/06/07195035/cadres-clash-in-chennai-congress-headquarters.vpf
[17] விகடன், மகளிரணியினர் குடுமிபிடிச் சண்டை! போர்க்களமானது சத்தியமூர்த்தி பவன், Posted Date : 16:18 (07/06/2017); Last updated : 16:18 (07/06/2017).
[18] http://www.vikatan.com/news/tamilnadu/91602-clash-between-congress-women-representatives-at-sathyamoorthi-bhavan.html