உலக பெண்கள் தினத்தன்று, சில சிந்தனைகள்: இந்திய பெண்கள் தங்களது உரிமைகளை இழந்து விட்டார்களா, ஏன், எவ்வாறு?
சரித்திர ரீதியில் “வேதகாலம்” என்று இருந்ததில்லை: “வேதகாலம்” என்று, இப்பொழுது குறிப்பிடுகின்ற, சரித்திர காலகட்டத்தில் இல்லை. ஐரோப்பியர் ஆராய்ச்சி செய்த போது, அவ்வாறான காலத்தைக் குறிப்பிட்டனர். வேதம் ஓதி, அவ்வழி பின்பற்றும் காலட்டத்தில், மற்ற நெறிகள் இல்லை என்பதில்லை. அதனை வேதங்களே எடுத்துக் காட்டுகின்றன. ஆனால், ஒரு காலகட்டத்தில், அவர்ர்கள் ப்பெரும்பான்மையினராக இருந்து, பிறகு சுருங்கி விட்டனர் என்பது, சரித்திரம் மூலம் தெரிகிறது. அதனால் தான், வேதங்கள் தோன்றியது எங்கு என்று ஆயும் போது, ஆர்க்டிக் பகுதி, மத்திய ஆசியா, மத்தியத் தரைக்கடல் பகுதி, என்றெல்லாம் கருதுகோள்கள் வைக்கப்பட்டன. C.1450 BCE காலத்து பகோஷ்காய் கல்வெட்டு, மெசமடோமியா பகுதி மக்கள் “இந்த்ரசீல், மித்ரசீல், வௌணசீல், நசாத்தியா” என்று வேதக் கடவுளர்களை நோக்கி விளித்தப் பிறகு, தமது மற்ற கடவுளகளையும் சாட்சியாக விளிப்பதாகக் குறிப்பிடுகிறது. ஆகவே, அவர்களின் தொகை குறைந்தபோது, அவர்களது கலாச்சாரம், பாரம்பரியம், பண்பாடு முதலியனவரும், மற்றவரிடம் மாற ஆரம்பித்தன. மாறினவர்கள் தங்களது சடங்கு, கிரியை, பண்டிகைகள், கொண்டாட்டங்கள் எல்லாவற்றையும் மாற்றிக் கொள்ள ஆரம்பித்தனர். இதனால் தான் முரண்பாடுகள் ஏற்பட்டன.
சரித்திரத்தில் “இந்தியா” என்று படிக்கும் போது, இப்பொழுதுள்ள 1947-இந்தியாவிற்குள் எல்லாவற்றையும் அடக்கும் விதமாக எழுதப் படுகிறது. ஆனால், குஷானர் போன்ற வம்சாவளியினர், ஆப்கானிஸ்தான், மத்திய ஆசிய பகுதிகளை ஆண்டு வந்தனர். ஜைனர்கள் [திகம்பரர் மற்றும் ஸ்வேதம்பரர்] மத்தியத் தரைக் கடல் நாடுகளில் ஆண்டு வந்தனர். இவர்கள் எல்லோருமே வேத நெறியிலிருந்து மாறுபட்டவர் மற்றும் எதிர்ப்பவர்கள். ஆக, அவர்களையும் மற்றவர்களையும் ஒப்பீடு செய்ய முடியாது. அந்நிலையில், அக்காலத்தைய வேதநெறி மக்கள் கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்தனர். குறிப்பாக கிரேக்கர், ஜைனர், பௌத்தர் போன்றோர் வேதங்களைப் படித்து, வேதங்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்வதால், அவர்களுக்கு தடை விதித்தனர். அப்பொழுதுதான், பாஷாண்டிகளான அவர்கள் வேதம் கற்கக் கூடாது போன்ற பிரிவுகள் சேர்க்கப் பட்டன.
ரிக்வேத சாகைகளை இயற்றியவர்கள் பெண்–ரிஷிக்கள்: வேத காலத்தில் பெண்களின் நிலை ஆண்களுக்கு சமமாக இருந்தது என்பது, பல ஆராய்ச்சியாளர்கள் எடுத்துக் காட்டியுள்ளனர். ரோமஸ, லோபமுத்ரா, அபல, கத்ரு, விஸ்வவர, கோஷ, வகம்பிர்னி, பௌலமி, யமி, இந்திரானி, சாவித்ரி, தேவஜமி – ரிக் வேத கால பெண் ரிஷிக்கள்! நோத, அக்ரஷ்தபாஷ, சிகதனிவவாரி, கௌபாயன முதலியோர் சாம வேத கால, பெண் ரிஷிக்கள்! இதில் இரண்டு காலகட்டங்கள் ரிக்-யஜுர் என்று அறியப் படுகின்றன. ரிக் வேத சுக்தங்கள் 10-134, 10-39,10-40, 10-91, 10-95,10-107,10-109,10 – 154,10-159,10-189, முதலிவவற்றை பாடியவர் பெண் ரிஷிக்கள் தாம்! இது இக்காலத்தைய பற்பல கட்டுக்கதைகளை உடைத்தெரிகிறது. இருப்பினும், இத்தகைய உண்மைகளை, இக்கால சித்தாந்திகள் மறைத்து வருகின்றனர்.
பெண் எந்தநிலையிலும் கல்வி கற்கலாம், பிரம்ம ஞானத்தையும் பெறலாம்: பிரம்ம ஞானத்தை கர்கி பிரமச்சாரியாக இருந்த போதும், சூடால கிரஸ்தியாக இருந்தபோதும் [திருமணனமான பின்னும்], பெற்றனர்! பிரம்ம ஞானத்தை மைத்ரேயி வனவாசத்தில் இருந்த போதும், சுலபயோகினி சந்நியாசியாக இருந்த போதும், பெற்றனர்! பெண் எந்த நிலையில் இருந்தாலும், வேதங்களைப் படிக்கலாம், பிரம்ம ஞானத்தைப் பெறலாம். எந்த தடையும் இல்லை என்பது தெரிகிறது! ஏனெனில், அவர்கள் வேதங்களில் உள்ள சில சாகைகளுக்கு ஆசிரியர்களாக உள்ளனர். பிரம்மவதினி [கல்யாணத்திற்கு முன்பு] மற்றும் சதயோவது [கல்யாணத்திற்குப் பின்பு] என்ற நிலைகளில் பெண்கள் சிறந்து விளங்கினர். பிரம்மவதினி யக்ஞோபவீதம் அணிந்து பிரம்மச்சாரியாக இருந்து வேதங்களைக் கற்பது. சதயோவது கல்யாணம் ஆனப் பிறகு, யக்ஞோபவீதம் அணிந்து வேதங்களைக் கற்பது.
பெண் கல்வியின் முக்கியத்துவம்: பெண்கள் குடும்பதினை நிர்வகிக்கும் ஆற்றலைக் கொண்டிருந்ததால் தான், அவர்களின் கல்வி ஆண்களுக்கு சமமாகக் கொடுக்கப் பட்டது. ஒரு பெண் படித்தால், குடும்பமே படித்த நிலை அடைகிறது என்பதை அன்றே உணர்ந்திருந்தனறர்; எங்கு பெண்கள் போற்றி-ஆராதிக்கப் படுகிறார்களோ, அங்கு கடவுட்தன்மை கொண்டவர்கள் மகிழ்கிறார்கள்! எங்கு அவ்வாறில்லையோ, எந்த சடங்கு-கிரியை செய்தாலும் பலனற்று போய் விடுகிறது.
यत्र नार्यस्तु पूज्यन्ते रमन्ते तत्र देवताः । यत्रैतास्तु न पूज्यन्ते सर्वास्तत्राफलाः क्रियाः ॥ ५६ ॥ |
Where women are honoured, there the gods rejoice; where, on the other hand, they are not honoured, there all rites are fruitless.—(56) |
ஆனால், கிரேக்கர், ஜைனர், பௌத்தர் போன்றோர் பெண்களை வேறு முறையில் நடத்திய போது, வேதநெறி விற்பன்னர்கள், விதிமுறைகளை மாற்றியமைத்தனர். கிரேக்க நிர்வாணக் கொள்கையுடையவர், ஜைனர் மற்றும் தாந்திரிக பௌத்தர்கள், பெண்களை துஷ்பிரயோகம் செய்தனர். காவர்கள் ஆதிக்கம் மத்தியத் தரைக்கடல் மற்றும் இன்றைய வடமேற்கு பகுதிகளில் அதிகமாக இருந்தபோது, தம் பெண்கள் அவர்களுடன் திருமணம் செய்து கொள்வது, வலுக்கட்டாயமாக எடுத்துச் சென்று திருமணம் செய்து கொள்வது, போன்றவை நடந்த போது, பெண்கள் வேதங்கள் கற்கக் கூடாது என்று வந்தது. ஏனெனில், அவர்கள் மூலம், எதிர்-பிரச்சாரக் காரர்களுக்கு, விசயங்கள் தெரியக் கூடாது என்ற விதத்தில், அத்தடை விதிக்கப் பட்டது. இக்காலத்தில் தொழிற்சாலைகள் மற்றும் வியாபார கம்பெனிகளில் ரகசியம் காப்பாற்றப் படும் யுக்திகள் போன்று, அவை செயல்பட வேண்டியதாயிற்று.
சைத்திய-கோவில் முறைகளில் பெண்கள் எவ்வாறு மந்திர–தந்திர–யந்திர முறைகளினால் சீரழிஉக்கப் பட்டனர்?: மாஹா வீரர் மற்றும் புத்தர் மடங்களில் பெண்-துறவிகளை ஏற்றுக் கொள்ளவில்லை. சேத்தால், ஒழுக்கம் கெட்டு விடும் என்று எச்சரித்தார்கள். ஆனால், வற்புருத்தல் பேரில், அவர்கள் சேர்த்துக் கொள்ளப் பட்டனர். புத்தர்-அனந்தன் உரையாடல் இதனை மெய்ப்பிக்கிறது. உருவ வழிபாடு இல்லை என்ற நிலையிலிருந்து, உருவ வழிபாடு அறிமுகப் படுத்தப் பட்ட நிலைகளில், வழிபடும் இடங்கள் உருவாக்கப் பட்டன. அவை நாளடைவில் கட்டிடங்களாக, குறிப்பிட்ட முறைகளில் சைத்தியங்கள், கோவில்கள் என்று மாறின. கிரேக்க நிர்வாணக் கொள்கையுடையவர், ஜைனர் மற்றும் தாந்திரிக பௌத்தர்கள், பெண்களை துஷ்பிரயோகம் செய்தது, அவர்களது சிற்பங்கள், மந்திர-தந்திர-யந்திர நூல்களே எடுத்துக் காட்டின. ஆனால், வேதநெறி பெண்கள் அவற்றில் பங்கு கொள்வது தடுக்கப் பட்டது. கஜுராஹோ போன்ற இடங்களில் இந்து-ஜைன-பௌத்தம் என்ற மூன்று வகை கோவில்களும் இருக்கின்றன என்ற இடைக்கால குழப்பத்திலிருந்தும் அதனை அறிந்து கொள்ளலாம்.
வேதகாலத்தில் கோவிலே இல்லை எனும்போது பூஜாரியும் இல்லை: வேதகால கடவுள் வழிபாட்டு முறையில் உருவம், விக்கிரகம் இல்லை எனும் போது, வழிபடும் இடம், கோவில் இல்லை என்றாகிறது. கோவில் இல்லை என்றால் பூஜாரியும் இல்லை. ஆனால், இக்காலத்தில், “வேதகாலத்தில் பெண்களுக்கு எல்லா உரிமைகளும் இருந்தன. ஆனால், இன்று பெண்கள் பூஜாரிகளாக முடிவதில்லை,” என்று வாதிடுவது முட்டாள்தனமாக இருக்கிறது. இங்கு தான் வேதநெறி பின்பற்றப் படும் முறை மற்றும் இதர முறைகள் வருகின்றன. கிரேக்க நிர்வாணக் கொள்கையுடையவர், ஜைனர் மற்றும் தாந்திரிக பௌத்தர்கள், தங்களது முறைகளை உருவாக்கிக் கொண்டர், சேர்த்துக் கொண்டனர். ஆகம நெறிகள் வளர்ந்த போது, அவற்றிற்கேற்றபடி, சடங்கு, கிரியை, பண்டிகைகள், கொண்டாட்டங்கள் உண்டாயின. ஆகவே, “வேதகாலத்தில் பெண்களுக்கு எல்லா உரிமைகளும் இருந்தன” போன்ற வாதங்களை வைத்து, வாத-விவாதங்கள் செய்வது முட்டாள்தனமானது, சரித்திர ரீதியில் பொய்யானது. மேலும் அத்தகைய உரிமைகளுடன் போராடி, ஆர்பாட்டமாக வரும் பெண்கள் ஒன்றும் வேதகால பெண்கள் போல வேத விற்பன்னர்களாகவோ, தேர்ச்சி பெற்றவர்களாகவோ இல்லை. ஆகமங்கள் பெண்களைக் கட்டுப் படுத்துகின்றன, தடுக்கின்றன என்றால், ஆகமங்களில் அத்தகைய கட்டுப் பாடுகள் ஏன் இருக்கின்றன என்று ஆராய வேண்டும். வேதங்களை குறை சொல்வதில் எந்த அர்த்தமும் இல்லை.
இக்காலத்தில் பெண்கள் செய்ய வேண்டியது என்ன?: இக்காலத்தில், எல்லோரும் வேதகாலத்து மக்கள் மாதிரி இருக்க முடியாது. வேத கொள்கைகளை பின்பற்றலாம். மற்றவர்களிடமும் அதைப் பற்றி எடுத்துச் சொல்லலாம். ஒழுக்கம், நேர்மை, தருமம், நியாயம் முதலியவற்றின் மீது ஆதாரமாக, விதிமுறைகள், கட்டுப்பாடுகள் இருப்பதை பின்பற்றலாம். பல செயல்களுக்கு இயந்திரம் மற்றும் மின்னணு சாதனங்கள் உபயோகப் படுத்தப் படும் நிலையில், எத்தனையோ சடங்குகள், கிரியைகள், சம்ஸ்காரங்கள் … செய்யப் படாமல் போகின்றன அல்லது சுருக்கப் படுகின்றன. ஆ கையால், தார்மீக அளவில் தான் ஒழுக்கத்தை எதிர்பார்க்க முடியும் நிலை வந்துள்ளது. ஆக, தனிமனித ஒழுக்கம் தான், அனைத்தையும் நிர்ணயிக்கும் நிலையுள்ளது. அந்நிலையில், பெண்களுக்கான பொறுப்புகள் அதிகமாகியுள்ளன.
© வேதபிரகாஷ்
08-03-2018