ரஞ்சிதா பற்றி நித்யானந்தா
பதிவு செய்த நாள் 6/28/2010 12:27:21 AM
http://www.dinakaran.com/highdetail.aspx?id=9177&id1=13
ரஞ்சிதாவையும், நித்யாபந்தாவையும் யார் விட்டாலும், சன் குடும்பமும், நக்கீரன் குடும்பமும் விட்டு வைக்க மாட்டார்கள் போலிருக்கிறது. நக்கீரன் கோபால் நித்தமும் “நித்து” பைத்தியம் பிடித்துக் கொண்டு அலைகிறார் என்று தெரிகிறது. செம்மொழி மாநாட்டில் கூட, நித்து, நித்து என்று நித்து புராணம் பாடி, பிறகு ரஞ்சிதா என்று ஜொல்லு விட ஆரம்பித்து விட்டார்! |
// பெங்களூர் : பல கேள்விகளுக்கு பதில் அளித்த நித்யானந்தா நடிகை ரஞ்சிதா பற்றி மட்டும் வாய் திறக்க மறுத்துவிட்டார்.
இது தொடர்பாக செய்தி ஏஜென்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டி:
சமீபத்தில் நடந்த சம்பவங்களால் ஆன்மீக ரீதியில் எனக்கு எந்த மாற்றமும் ஏற்படவில்லை. ஏனென்றால், உண்மை எப்போதும் ஒரே மாதிரிதான் இருக்கும். சமூக ரீதியாக பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
யு டியூப்பில் என்னை குருவாக பார்த்தனர். இப்போது, செக்ஸ் ஊழலாக பார்க்கின்றனர். பெண்களை செக்ஸ் ரீதியாக நான் துஷ்பிரயோகம் செய்ததாக பத்திரிகைகள் கூறுகின்றன. எனது ஆசிரமத்தில் 8 வயது முதல் 80 வயது வரையிலான பெண்கள் இருக்கின்றனர். என் மீது செக்ஸ் புகார் கொடுக்கும்படி சி.ஐ.டி. போலீசார் தொடர்ந்து அழைப்பு விடுத்த போதும், ஒரு பெண் கூட என் மீது புகார் கொடுக்கவில்லை. என்னை தரிசிக்கவும், ஆசி பெறவும் ஆசிரமத்துக்கு தினமும் 300 பெண்கள் வந்து செல்கின்றனர்.
மூன்று மாதங்களுக்குப் பிறகு எனது பக்தர்களும், பொதுமக்களும் உண்மையை அறிய தொடங்கி உள்ளனர். அவர்களின் எல்லா கேள்விகளுக்கும் தானாகவே பதில் கிடைக்கும். என்னை பற்றி நானே சொல்லிக் கொள்ளத் தேவையில்லை. உண்மை அதனுடைய உண்மையான பலத்தின் மூலம் வெளியே வரும். என் மீது புகார்கள் சொல்லப்பட்டதும் சிலர் விலகினர். என்னிடம் உண்மை இருப்பது தெரிந்தவர்கள் இன்னும் பலமாக நின்றார்கள். சிலர் அதிர்ச்சி அடைந்தனர். புரளிகள் தெளிவாகத் தொடங்கியதும் அவர்கள் என்னிடம் திரும்பி வருகிறார்கள்.
அமைதியை நோக்கி செல்வோம். எல்லாரும் அமைதியாக வாழ்வதற்கான இடத்தை நோக்கி செல்வோம். வாழ்வோம்; வாழ வழி விடுவோம். சிறையில் இருப்பது உடல் ரீதியாக கடினமாக இருக்கலாம். ஆனால், மனதளவில் எப்போதும் சுதந்திரமாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தேன். ஆன்மீக வழிக்காட்டுதல் தேடி வரும் என்னுடைய பக்தர்கள், ஆசிரமவாசிகள் பற்றி அதிகம் கவலைப்படுகிறேன். வாய்மையே வெல்லும். இவ்வாறு நித்யானந்தா கூறினார்.
எனினும், ரஞ்சிதா பற்றி கேட்கப்பட்ட எந்த கேள்விகளுக்கும் பதில் அளிப்பதை நித்யானந்தா தவிர்த்துவிட்டார்.
புத்தகத்தில் தெரியும்
நடிகை ரஞ்சிதா சென்னை வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவர் தனது தலை முடியை பாப் கட்டிங் செய்திருப்பதாகவும் ஜீன்ஸ், டிசர்ட்டில் மாடல் போல வலம் வருவதாகவும் கூறப்படுகிறது.
ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:
நித்யானந்தா சம்பந்தமாக கடந்த 6 மாதங்களில் என்னை பாதித்த விஷயங்கள், அவற்றை நான் எதிர்கொண்டவற்றை விவரித்து புத்தகம் எழுதுகிறேன். இந்தப் புத்தகம் தனிப்பட்ட பிரச்னையில் சிக்கி தவிப்பவர்களுக்கு உதவும். இதை வெளியிட சில பதிப்பகங்களிடம் பேசி வருகிறேன். இது தவிர நாவல் ஒன்றையும் எழுதி வருகிறேன். இப்போது தத்துவ புத்தகங்களை படித்து வருகிறேன். கடந்த கால சம்பவங்கள் பற்றி பேச விரும்பவில்லை. நான் நிறைய காயப்பட்டு விட்டேன். அதைவிட்டு விட்டு புது வாழ்க்கையை நோக்கி செல்ல விரும்புகிறேன். மீண்டும் சகஜ நிலைக்கு வர இன்னும் சிறிது காலம் ஆகும். சினிமாவில் நடிப்பது பற்றியும் இன்னும் முடிவு செய்யவில்லை. இவ்வாறு ரஞ்சிதா கூறியுள்ளார்.
ரஞ்சிதாவின் அம்மாவிடம் கேட்டபோது, ‘ரஞ்சிதா இங்கு வரவே இல்லை. பேட்டி எப்படி வந்தது என தெரியாது‘ என்றார்.