மறுபடியும் பேஸ்புக் காதல், ஜாலியாக சுற்றுதல், சினிமா பார்த்தல், தொட்டுக் கொள்வது, கட்டித்தழுவுதல் – கற்பழிப்பில் முடிந்த சோகக்கதை!
மோசடி காதலில் சீரழிந்தது கேத்தரின் மார்க்ரெட் சிம்சன் அல்லது திவ்யா?: தூத்துக்குடியில் பாலியல் பலாத்காரம் செய்து ஏமாற்றிய பேஸ்புக் காதலனை பிடிக்க தன்னை வாலிபர் காரில் கடத்தி பலாத்காரம் செய்ததாக நாடகமாடிய கல்லூரி மாணவியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பார்க் ரோட், ராமன்புதூரைச் சேர்ந்தவர் சார்லஸ் சிம்சன், இவரது மகள் கேத்தரின் மார்க்ரெட் சிம்சன் 21 வயது இளம்பெண் தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் கல்லூரி விடுதியில் தங்கியிருந்து பிஎஸ்சி 3ம் ஆண்டு நியூட்ரிஷியன் சயின்ஸ் பயின்று வருகிறார். நாகர்கோவில் ராஜாவூரை சேர்ந்த ஜோ (26), திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகேயுள்ள வி.வி., இன்ஜி., கல்லூரியில் டெக்னீஷயனாக பணியாற்றி வருகிறார். அப்பெண்ணின் பெயர் திவ்யா என்று “தமிழ்.ஒன்.இந்தியா” இணைதளம் குறிப்பிட்டுள்ளது[1]. ஆக, இது மோசடி-காதல் என்றாலும், கிருத்துவ-கிருத்துவ லவ்-லடாயா அல்லது கிருத்துவ-இந்து லவ்-குரூஸேடா என்று தெரியவில்லை. ஒருவேளை கற்பழிப்பில், பெண்ணின் பெயரைப் போடக் கூடாது என்பதால், இவ்வாறு குறிப்பிட்டிருக்கலாம்.
மூன்று மாத பேஸ்புக் காதல் ஒரு இளம்பெண்ணை தொடும் அளவிற்கு போயிருக்க முடியுமா?: பேஸ்புக்கில் மூன்று மாதத்திற்கு மே மாதத்தில் முன்பாக பழக்கம் ஏற்பட்டுள்ளது[2]. இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந் நிலையில் விடுமுறைக்காக வீடு சென்ற கேத்தரின் கடந்த 8 ம் தேதி தூத்துக்குடி கல்லூரிக்கு வருகை தந்தார். அப்போது அவருடன் பஸ்சில் ஜோவும் பயணம் செய்துள்ளார். தூத்துக்குடிக்கு வந்த இவர்கள் அங்குள்ள ராஜ் தியேட்டரில் பகல் ஷோ சினிமா பார்க்க சென்றனர். அங்கு பால்கனியில் வேறு யாரும் இல்லாததால் கேத்தரினும், ஜோவும் எல்லை மீறி உல்லாசம் அனுபவித்தனர். இதில் கேத்திரினுக்கு ரத்த போக்கு ஏற்பட்டது. காதலன் ஜோ அவரை திருமணம் செய்து கொள்வதாக தெரிவித்தார். ஆனால் வீட்டில் காரில் வந்த மர்ம நபர்கள் இருவர் கடத்தி சென்று கற்பழித்ததாக பொய் சொல்லும்படி தெரிவித்தார். இதன் படியே கேத்ரினும் வீட்டில் பொய் சொல்லியுள்ளார்[3]. இந் நிலையில் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் கேத்ரின் சேர்க்கப்பட்டார். இயல்பாக பெண்களுக்கு, ஆண்கள் தம்மிடம் கெட்ட எண்ணத்தோடு பழகுகிறார்கள் என்றால், உள்ளுணர்வு எச்சரிக்கும் என்பார்கள். அப்படியிருக்கும் போது, இப்பெண் எப்படி அந்த அளவிற்கு இடம் கொடுத்தாள், தொட அனுமதித்தாள் என்பது புரியவில்லை.
மயக்க ஸ்பிரே அடித்து ஒருவர் காரில் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து விட்டார் – என்று எந்த பெண்ணாவது கூறுவாரா?: கடந்த 8ம் தேதி காலை 5.15 மணிக்கு வீட்டில் இருந்து புறப்பட்டு தூத்துக்குடிக்கு வந்துள்ளார். மறுநாளே வீட்டுக்கு திரும்பிய அந்த மாணவி, காலை 7.15க்கு தூத்துக்குடியில் உள்ள கல்லூரி அருகே நான் நடந்து சென்ற போது, என் முகத்தில் மயக்க ஸ்பிரே அடித்து ஒருவர் காரில் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து விட்டார். மயக்கம் தெளிந்து நான் கதறியதும் என்னை மிரட்டி பழைய பஸ் நிலையத்தில் விட்டு சென்று விட்டார் என்று பெற்றோரிடம் கதறியபடி கூறினார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக அவரை நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பின்னர் தூத்துக்குடி போலீசாருக்கு போனில் தகவல் தெரிவித்துள்ளனர். “மயக்கம் தெளிந்து நான் கதறியதும் என்னை மிரட்டி பழைய பஸ் நிலையத்தில் விட்டு சென்று விட்டார்”, என்பது வியப்பாக உள்ளது. சோதனையில் அவள் கற்பழிக்கப்பட்டது தெரியவந்தது.
போலீஸ் விசாரணையில் பெண்ணின் நாடகம் வெளிப்பட்டது: 8ம் தேதி அதிகாலை 5.15 மணிக்கு நாகர்கோவிலிலிருந்து பஸ்சில் புறப்பட்ட அந்த மாணவி 7.15 மணிக்கு தூத்துக்குடி வந்து சேர்ந்து விட்டதாக கூறியதும், மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் இளம்பெண்ணை மயக்க ஸ்பிரே அடித்து காரில் கடத்தி செல்வது இயலாத காரியம் என்பதாலும் சந்தேகம் அடைந்த போலீசார் துரித விசாரணையில் இறங்கினர். தூத்துக்குடியில் இருந்து சென்ற ஒரு பெண் எஸ்ஐ, நாகர்கோவில் உள்ள ஒரு பெண் டிஎஸ்பி ஆகியோர் மருத்துவமனையில் இருந்த அந்த இளம்பெண்ணிடம் துருவித்துருவி விசாரணை நடத்தினர். இதில் அவர் கடத்தப்பட்டதாக சொன்ன சம்பவம் பொய் என தெரியவந்தது[4]. இருப்பினும், இவ்வாறு பொய் சொல்வது, அந்த காதலனைக் காப்பாற்றவா, அவனது அடையாளங்களை மறைக்கவா, தான் கற்பழிக்கப்பட்டிருந்தாலும், உண்மையினை மறைக்கவா என்று நினைக்கும் போது திகைப்பாக இருக்கிறது!
மாணவி கற்பழிக்கப்பட்டது எப்படி?: விசாரணையில், அந்த பெண்ணும் திசையன்விளையில் உள்ள தனியார் கல்லூரி ஊழியரான ராஜாவூரை சேர்ந்த ஜோ (26) என்பவரும் காதலித்துள்ளனர். கடந்த 8ம் தேதி வீட்டில் இருந்து புறப்பட்டு வந்த இளம்பெண்ணுடன் பாளையங்கோட்டையில் காத்திருந்த ஜோவும் சேர்ந்து தூத்துக்குடி வந்துள்ளார். அங்கு கல்லூரிக்கு செல்லாமல் இருவரும் ஓட்டல், ஷாப்பிங் மால் உள்ளிட்ட இடங்களுக்கு சென்றுள்ளனர். இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உறுதியளித்த ஜோ, தூத்துக்குடி டவுனில் உள்ள ஒரு தியேட்டருக்கு அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். “ஜோ, மாணவியை அழைத்துக் கொண்டு பால்கனிக்கு சென்றார். பால்கனியில் காதலர்களை தவிர வேறு யாரும் இல்லை. இதனால் மாணவியுடன் தனிமையில் அமர்ந்து சினிமா பார்த்துக் கொண்டிருந்த ஜோ ஒரு கட்டத்தில் எல்லை மீறினார். பின்னர் ஆசை வார்த்தை கூறி அந்த மாணவியை கற்பழித்ததாக தெரிகிறது”, என்று தினத்தந்தி விளக்குககிறது[5]. இதையடுத்து அந்த மாணவியை பழைய பஸ் நிலையத்தில் விட்டு விட்டு சற்று நேரத்தில் வருவதாக கூறிச் சென்ற ஜோ நீண்ட நேரமாகியும் வரவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த இளம்பெண், விட்டுச் சென்ற காதலனை பிடிப்பதற்காக தன்னை ஒருவர் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக பெற்றோரிடம் புகார் தெரிவித்துள்ளதும் தெரியவந்தது. இதனையடுத்து தூத்துக்குடி மத்தியபாகம் போலீசார் வழக்குபதிவு செய்து தலைமறைவான ஜோவை தேடி வருகின்றனர்[6].
2 / 3 மாதத்துக்கு முன் பேஸ்புக்கில் அறிமுகம் – காதல் கத்தரிக்காய், கற்பழிப்பு: பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவிக்கு, ஜோ கடந்த 2 / 3 மாதத்திற்கு முன்னர் தான் பேஸ்புக் மூலம் அறிமுகமாகியுள்ளார். அதன் பின்னர் இருவரும் செல்போன் எண்களை பரிமாறிக்கொண்டு தங்கள் காதலை வளர்த்துள்ளனர். குறைந்த நாட்களிலேயே பக்காவாக பிளான் செய்த ஜோ, அவரை வலையில் வீழ்த்தி விட்டு தூத்துக்குடி பழைய பஸ் நிலையத்தில் தவிக்க விட்டு கம்பி நீட்டியுள்ளார் என போலீசார் தெரிவித்தனர்[7]. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அம்மாணவி, காதலனை பிடிப்பதற்காக கடத்தல் நாடகம் ஆடியது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது[8]. பேஸ்புக்கில் பழக்கம், காதல் எனும்போது, பேஸ்புக்கில் பகிர்ந்து கொண்ட விசயங்கள், புகைப்படங்கள் முதலியவற்றிலிருந்தே அந்த ஜோவைப் பிடித்து விடலாம். ஆனால், ஒரு மாணவி இவ்வாறு சீரழிந்தது மிக்க வருத்தத்திற்குரிய விசயமாகும். 21 வயதாகியும் காதல்-காமம் என்ற விசயங்களில் ஒரு பெண்ணிற்கு வித்தியாசம் தெரியவில்லை, பெண்ணின் உணர்ச்சிகள் எச்சரிக்கவில்லை, அச்சம்-மனம்-நாணம்-பயிர்ப்பு முதலியவை எடுத்துக் காட்டவில்லை, இதனால், கற்பிழந்தாள் என்ற நம்ப முடியவில்லை. பெண்மைக்கு கற்பு தான் பெரிய அணிகலன், அதனை இழக்கக்கூடாது என்றெல்லாம் சொல்லவேண்டிய நிலைக்கு வந்து விட்டதா என்று நினைக்கும் போது திகைப்பாக இருக்கிறது. அந்த ஆணும் அவ்வாறு செய்திருக்கிறான் என்றால், அவனது வளர்ப்பு நிலை எப்படியுள்ளது என்பதும் கேள்விக்குரியதாக உள்ளது. அவனது பெற்றோர் வளர்ப்பு முறையும் சரியில்லை என்றாகிறது.

circa 1945: **NOT TO BE USED FOR POSTCARDS** Two lovers at the Palace Theatre kissing in the front row. Taken with infrared negative. (Photo by Weegee(Arthur Fellig)/International Center of Photography/Getty Images)
சினிமா மாடலில் கொச்சையான தலைப்புகள்-செய்திகள் – காட்டுவன யாது?: “பலாத்காரம் செய்து கழற்றி விட்ட காதலன்… கடத்தல் டிராமா போட்ட காதலி.. தூத்துக்குடி அருகே பரபரப்பு”, என்றும்[9], “பேஸ்புக்’ மூலம் அரும்பிய காதல்: தியேட்டர் பால்கனியில் வைத்து கல்லூரி மாணவியை கற்பழித்த வாலிபர் சினிமா பார்க்க வேறு ஆட்கள் இல்லாததால் எல்லை மீறினார்” போன்ற[10] தலைப்புகளில் வந்துள்ள செய்திகள், சமூக பிரஞையே இல்லாமல், வெளியிட்டுள்ளது தெரிகிறது. குஷ்பு போன்ற நடிகைகள் திருமணத்திற்கு முன்பாக பெண்களிடம் கற்பு இருப்பது என்பது எதிர்பார்க்க முடியாது என்றெல்லாம் பேசியிருப்பது கவனிக்கத் தக்கது. பல நடிகைகள் ஐந்து-ஆறு திருமணங்கள் செய்து கொண்டு, மகன் – மகள்களைப் பெற்றுக் கொண்டு, உறவுமுறைகள் தடுமாறும் அளவுக்கு சீரழித்துள்ள செய்திகளும் வெளிவந்துள்ளன. கமல்ஹஸன் போன்றவர்களோ, குடும்பம், மனைவி, மகள்கள் போன்ற உறவுகளையே கேவலப்படுத்தியிருப்பது தெரிந்த விசயமே. இவர்கள் எல்லோரும், சமூகப் பிரச்சினைகளுக்கு அறிவுரை கூறிக்கொண்டிருப்பதால், அவர்களது ஒழுக்கம், யோக்கியதை முதலியவற்றைப் பற்றி குறிப்பிட வேண்டியதாகிறது.
© வேதபிரகாஷ்
12-08-2016
[1] தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், திவ்யாவிடம் விசாரணை நடத்தினர். அப்போது திவ்யாவின் வாக்குமூலத்தில் அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
http://tamil.oneindia.com/news/tamilnadu/girl-files-complaint-against-lover-260042.html
[2] தினமலர், காதலன் ஏமாற்றி உல்லாசம்: பலாத்காரம் செய்ததாக கல்லூரி மாணவி புகார் * விசாரணையில் நாடகம் அம்பலம், ஆகஸ்ட்.11, 2016: 04.15.
[3] http://www.dinamalar.com/news_detail.asp?id=1583322
[4] தினகரன், தூத்துக்குடியில் பரபரப்பு ஏமாற்றிய பேஸ்புக் காதலனை பிடிக்க பலாத்கார நாடகமாடிய மாணவி, Date: 2016-08-11@ 00:56:23
[5] தினத்தந்தி, ‘பேஸ்புக்’ மூலம் அரும்பிய காதல்: தியேட்டர் பால்கனியில் வைத்து கல்லூரி மாணவியை கற்பழித்த வாலிபர் சினிமா பார்க்க வேறு ஆட்கள் இல்லாததால் எல்லை மீறினார், பதிவு செய்த நாள்: வியாழன் , ஆகஸ்ட் 11,2016, 7:45; PM IST மாற்றம் செய்த நாள்: வெள்ளி, ஆகஸ்ட் 12,2016, 1:30 AM IST;
[6] http://www.dinakaran.com/News_detail.asp?Nid=238015
[7] http://m.dailyhunt.in/news/india/tamil/dinakaran-epaper-karan/toothukkudiyil-barabarappu-aemarriya-besbuk-kathalanai-bidikka-balathkara-nadakamadiya-manavi-newsid-56573584
[8] http://tamil.oneindia.com/news/tamilnadu/girl-files-complaint-against-lover-260042.html
[9] தமிழ்.ஒன்.இந்தியா, பலாத்காரம் செய்து கழற்றி விட்ட காதலன்… கடத்தல் டிராமா போட்ட காதலி.. தூத்துக்குடி அருகே பரபரப்பு, By: Essaki, Published: Thursday, August 11, 2016, 16:00 [IST].
[10] http://www.dailythanthi.com/News/Districts/Thoothukudi/2016/08/11194517/Theater-with-balconyThe-young-men-who-raped-a-college.vpf