Posts Tagged ‘பிவன்டி’

பெண்ணே பெண்ணை கொடுமைப் படுத்தும் போக்கு: விபச்சாரத்திற்கு மறுத்த குஜராத் பெண்ணின் மார்பகங்களைத் துண்டித்த ரூபி பேகம்!

மார்ச்25, 2014

பெண்ணே பெண்ணை கொடுமைப் படுத்தும் போக்குவிபச்சாரத்திற்கு மறுத்த குஜராத் பெண்ணின் மார்பகங்களைத் துண்டித்த ரூபிபேகம்!

Breasts cut off - 2014 Bhiwandi pimp

Breasts cut off – 2014 Bhiwandi pimp

 

பெண்ணின் மார்பகத்தைத் துண்டித்த பெண் கைது[1]: மகாராஷ்டிராவில், தானே மாவட்டத்தில் பிவாண்டி நகரம் உள்ளது.  இந்நகரம் ஜவுளித் தொழிலுக்கு புகழ் பெற்றது  மற்றும்  முன்பு மதகலவரம் நடந்ததாலும் இப்பெயர் நினைவில் உள்ளது. ஏராளமான தொழிலாளர்கள் இங்கு வந்து செல்வதால், பாலியல் தொழிலில் ஈடுபடுவோர் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது. வெளிமாநிலங்களில் இருந்து, புரோக்கர்களின் மூலம் பெண்களை வரவழைத்து, பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி, பலர், லாபம் சம்பாதித்து வருகின்றனர். இங்குள்ள விபசாரவிடுதி ஒன்றில், குஜராத்திலிருந்து, புதிதாக அழைத்து வரப்பட்ட, 29 வயது மதிக்கத் தக்க இளம்பெண்ணை, பாலியல் தொழிலில் ஈடுபடும்படி கட்டாயப்படுத்தினர்[2], ஆனால், அந்தபெண், இதற்கு இணங்கவில்லை[3]. ஆவேசமடைந்த, விபசார விடுதி உரிமையாளரான பெண், தன்னுடன் இருந்த ஆண் அடியாட்களின் துணையுடன், அந்த பெண்ணின் மார்பகங்களை சூடான இரும்பினால் பல முறை சித்திரவதை செய்யப்பட்டு, துண்டித்து, குரூரமாககொடுமைசெய்துள்ளார்[4]. பற்களும்உடைக்கப்பட்டுள்ளன[5]. இதில், அந்தபெண், பரிதாபமாகஇறந்தார், என்றெல்லாம்தமிழ்ஊடகங்கள்அரைகுறையாகசெய்திகளைவெளியிட்டுள்ளன.

 

பெண்களைக் கொடுமைப் படுத்தும் கிருத்துவ குரூரமுறை

பெண்களைக் கொடுமைப் படுத்தும் கிருத்துவ குரூரமுறை

ரூபி பேகம் யார் – நடந்ததுஎன்ன?: ரூபிபேகம் (34) [ Ruby Begum (34)] என்ற பெண் விபசார விடுதியின் உரிமையாளர், இவர் பல பெண்களை வைத்து விபச்சாரத்தைத் தொழிலாக நடத்தி வருகிறார்.  [தமிழ் ஊடகங்கள் இப்பெரைக் கூட குறிப்பிடவில்லை] இவர் மும்பை புறநகர் பகுதியான பிவாண்டி நகரில் விபசார விடுதி வைத்து நடத்தி வருகிறாள். அஸ்லம் ஷேக்  [Aslam Sheikh] என்ற ஏஜென்ட் குஜராத்திலிருந்து தன்னுடைய  சகோதரி என்று சொல்லி அந்தபெண்ணைக் கடத்தி வந்தான். ரூ 30,000/-க்கு அவளுக்கு விற்றுள்ளான்.  இவன், இவனது நண்பன் ஆலம் மற்றும் ரூபி வாடிக்கையாளர்களிடம் விட்ட போது, அவள் மறுத்துளாள்[6]. இதனால் எட்டு நாட்கள் அவளை ஒருஅறையில் பூட்டி வைத்து கொடுமைப் படுத்தியுள்ளனர், ஆனால், அவள்விபச்சாரம்செய்யஒப்புக்கொள்ளவில்லை. இதனால் கோபம் அடைந்த பேகம் ஆலம் மற்றும் அப்சல் என்ற அடியாட்கள் துணையுடன், அந்த பெண்ணின் மார்பகங்களை சூடான இரும்பினா ல்பலமுறை குத்தி சித்திரவதை செய்யப்பட்டு, துண்டித்து, குரூரமாக கொடுமை செய்துள்ளார். ஒருவேளை   இறந்து விடுவாளோ என்று பயந்து விட்டுச்சென்றதாகத் தெரிகிறது. குற்றுயிராகக் கிடந்தஅவளைப் பார்த்த சிலர், பிவான்டியில் .ஜி.எம்.  மருத்துவமனையில் அப்பெண் ணை சிகிச்சைக்கிற்காக சேர்க்கப்பட்டிருக்கிறாள். பாடிப்பினாலும், அதிர்ச்சியினாலும், கொடுமைப்படுத்தியதானாலும்அவள்பேசமுடியாதநிலையில்இருக்கிறாள். அவள்இயல்பானநிலைக்குவந்ததும், போலீஸார்அவளிடத்தில்விசாரித்துஉண்மையினைஅறியஉள்ளனர்.

 

Medieval christian persecution of women as witches

Medieval christian persecution of women as witches

ரூபி பேகம் கைது, சிறை, வழக்குப் பதிவு செய்யப்படுதல்: விசாரித்தததில்ரூபிபேகம் (34) [ Ruby Begum (34)] என்றபெண்தான்அத்தகைய கொடுமை செய்திருக்கிறாள்என்றுதெரியவந்ததால், அவளைப் பிடித்து விசாரித்தபோது ஒப்புக்கொண்டுள்ளாள். மாஜிஸ்ட்ரேட்டின்முன்புகொண்டுவரப்பட்டபேகம், மார்ச் 25 வரைபோலீஸ்பாதுகாப்பில்வைத்திருக்கஉத்தரவிடப்பட்டுள்ளது[7]. இதனால், போலீசாரால்கைதுசெய்யப்பட்டஅவள்சிறையில்அடைக்கப்பட்டார்[8]. ஆலம்மற்றும்அப்சல்என்றஇருவர்ஓடிமறைதுள்ளனராம்[9]. இக்குற்றம்மார்ச் 19 அன்றுநடந்துள்ளதாகத்தெரிகிறது. இந்தியகுற்றவியல்சட்டம்மற்றும்பெண்களைதீயவழிகளுக்குடுபடுத்தும்செயல்தடுப்புசட்டம்முதலியவற்றின்பிரிவுகளில் [Sections of the IPC and the Prevention of Immoral Trafficking Act (PITA)] இவர்களின்மீதுவழக்குப்பதிவுசெய்யப்பட்டுள்ளது[10].

 

விபச்சாரத்தொழிலும், பெண்களும், தார்மீகமும், பிழைப்பும்: அனுமன்தெக்டி / காமாதிபுரா என்றஇடத்தில்விபச்சாரம்அனுமதிக்கப்பட்டுள்ளது. இதுஒருதொழிலாகவேஉள்ளதால், அவ்வாறுஅரசால்அனுமதிக்கப்பட்டுள்ளது. இவர்களதுநலனிற்காகசங்கினி / காமாதிபுராபோன்றஇடங்களில்வங்கியும் [ Sangini Women’s Co-operative Bank] செயல்பட்டுவருகின்றது[11]. அவர்களதுநலன், ஆரோக்யம், குழந்தைகள்வளர்ப்பு, படிப்புபோன்றவிசயங்களில்இவ்வங்கிகள்உதவிவருகின்றன[12]. வழக்கம் போல அந்நிய ஊடகங்கள், இந்திய பெண்களின் உரிமைகள் மறுக்கப்படுகின்றன, கொடுமைப் படுத்தப் படுகிறார்கள் என்பது போல செய்திகளை வெளியிட்டுள்ளன. இக்காலத்தில் விபச்சாரம் சட்டரீதியில் சில பகுதியில் நடத்த அனுமதிக்கப் பட்டுள்ளது. அந்நிலையில், அத்தொழிலைச் செய்ய பெண்கள் தேவை என்ற விசயம் புரிந்து கொள்ள முடியாதது அல்ல. ஆனால், எந்த பெண்ணுமே விபச்சாரத்தை அறிந்து செய்ய முன்வரமாட்டாள். எனவே, ஏற்கெனவே பாதிக்கப் பட்டப் பெண்கள் வருவர் என்பது போல உள்ளது, மேலும் ஏழ்மையில் உள்ளவர்கள் பெண்களை விற்ருவிடுதல், வலுக்கட்டாயமாக விபச்சாரத்தில் ஈடுபடுத்துதல் போன்ற சந்தர்ப்பங்களும் உள்ளன. ஆனால், அதையும் மீறி ஏஜென்டுகளை வைத்துக் கொண்டு பெண்களைக் கடத்திக் கொண்டு வருதல், பணம் கொடுத்து வாங்கிக் கொண்டு வருதல்,, விற்றல் போன்ற வேலைகளில் குழுக்கள் வேலை செய்து வருகின்றன. அவர்களை கண்காணித்து போலீஸாரும் அவ்வப்போது பிடித்து வருகின்றனர்[13].

 

விபச்சாரத்திற்கு பெண்கள் நுகரும் பொருட்களாகும் போது: ஒரு பெண், இன்னொரு பெண்ணை அவ்வாறு செய்ய முடியுமா, நினைத்திருப்பாளா என்று நினைத்துப் பார்த்தால், ரூபி பேகம் போன்றவர்களுக்கு விபச்சாரத்திற்கு எடுத்துவரப்படும் பெண்கள் வியாபாரப் பொருட்கள் தாம். காசு கொடுத்து வாங்குவதால், அபொருட்கள் உபயோகத்திற்குப் போக வேண்டும், அவற்றால், பதிலுக்கு வரும்படி வரவேண்டும். செலவு போக லாபம் பார்க்க வேண்டும். ஆகவே, எப்படி ஒரு வணிகன் அல்லது வியாபாரி உள்ளானோ அதுப்போல இப்பெண்ணும் இருப்பதால், அவளிடத்தில் பெண்மை என்று எதையும் எதிர்ப்பார்க்க முடியாது. அதனால் தான் அவள் பெண்ணின் தனங்களையே அறுத்துக் கொடுமைப் படுத்தியிருக்கிறாள். இங்கு சமூக சேவகிகள், மனோதத்துவ வித்தகர்கள், சமூகமேதைகள் முதலியோர், பெண்கள் ஏன் சீரழிக்கப் படுகின்றனர் என்பதை விட, அவர்கள் சீரழிந்த பிறகு, அவர்களின் உரிமைகள் என்ன என்பனவற்றைப் பற்றி தான் விவாதிக்கிறார்கள். மேலும் இந்தியர்-அல்லாத ஊடக வித்வான்களும் அவற்றைப் பற்றிதான் முக்கியத்துவத்தையும் அளிக்கிறார்கள். இத்தகைய சமூக சீரழிவுகளை எடுத்துக் காட்டினால், அவர்கள் எல்லோரும், நாகரிகத்தை, மற்றத்தை, முன்னேற்றத்தை எதிர்ப்பவர்கள் என்றும் முத்திரைக் குத்தப்படுகிறார்கள்.

 

பெண்களை மதித்தல்-மிதித்தல் என்ற முரண்பாடான போக்கு: இந்தியாவைப் பொறுத்த வரைக்கும் இப்பிரச்சினை பெண்களை மதித்தல்-மிதித்தல் என்ற முரண்பாடான சித்தாந்தத்தில் தான் அறிவிஜீவிகள் அணுகி வருகின்றனர். விபச்சாரம் கூடாது, ஆனால், விபச்சாரிகளின் உரிமைகள் காக்கப்பட வேண்டும்; பெண்களை மதிக்க வேண்டும், ஆனால், எச்.ஐ.வி வராமல் உடலுறவு கொள்ள வேண்டும் என்றெல்லாம் வெளிப்படையாக அறிவிக்கப்படுகின்றன, போதிக்கப்படுகின்றன. இந்திய சமுதாயத்தைப் பொறுத்த வரையிலும் முகலாயர் மற்றும் ஐரோப்பியர் ஆட்சி காலங்களில் விபச்சாரம் பலமுறைகளில் ஊக்குவிக்கப் பட்டது, பெருக்கப் பட்டது. இப்பொழுது எம்,என்,சி கம்பெனிகளின் வரவினால், அமெரிக்கத் தாக்குதல்களினால், விபச்சாரம் மறுபடியும் பலமுறைகளில் ஊக்குவிக்கப் படுகிறது, பெருக்கப் படுகிறது. அவர்களுக்கு வேண்டியவற்றை “சப்ளை” செய்யவேண்டும் எண்ணத்தில் இவையெல்லாம் செய்யப் படுகின்றன. பெங்களூரு எப்படி மேனாட்டவர்களுக்கு ஏற்ப குடி, கூத்து எல்லாம் ஏற்பாடு செய்து கொடுக்கப் பட்டுள்ளனவோ, அதேபோல, எங்கு அத்தகைய தொழிற்சாலைகள் அல்லது அவர்களது தங்குமிடங்கள் உள்ளனவோ அங்கு அவர்களது வசதிகளுக்கு ஏற்ப இவையெல்லாம் செய்துதரப்படுகின்றன. தொழிற்நுட்பம் மாற்றம் செய்ய வரும் ஆலோசகர்கள் என்ற ரீதியில் இவர்கள் வந்து செல்வதாலும், அவர்கள் மூலம், ஆதாயங்கள் கிடைப்பதாலும், இந்திய கூட்டாளிகள் இவற்றைச் செய்துத்தரத் தயங்குவதில்லை.

 

[1]தினமலர், பெண்ணின்மார்பகத்தைதுண்டித்தபெண்கைது, சென்னை, 21-03-2014, பக்கம்.9.

[2]http://tamil.webdunia.com/newsworld/news/national/1403/23/1140323008_1.htm

[3]http://www.ndtv.com/article/cities/thane-woman-brutally-attacked-for-refusing-prostitution-498894

[4]  Ruby allegedly attacked her when she refused to cooperate, said the police. The victim was rescued by locals, and admitted to a local hospital. On Saturday, she was shifted to the Thane civic hospital. The police are yet to record her statement. The victim was earlier branded with hot iron by Ruby.

http://www.thehindu.com/news/cities/mumbai/womans-breasts-cut-off-for-refusing-to-get-into-fleshtrade/article5822615.ece

[5]http://www.hindustantimes.com/india-news/breasts-chopped-off-for-refusing-to-enter-flesh-trade/article1-1199182.aspx

[6]The girl was forced to get into the flesh trade by Alam, Ruby and the brothel-keeper’s boy-friend Afzal. She was produced in front of customers but the brave girl kept refusing, said the police “Getting frustrated that she was not making any money, the trio beat her up eight days ago,” said Bhiwande police inspector Rajan Saste. She was taken into a isolated room where the girl was brutally beaten by Alam and Afzal. “Her breasts were slashed by Alam and her teeth were broken by Afzal,” Saste added.

 

[7]http://indianexpress.com/article/india/india-others/thane-shocker-24-year-old-woman-brutalised-for-refusing-to-enter-flesh-trade/

[8]http://www.dinamalar.com/news_detail.asp?id=939839

[9]http://www.deccanherald.com/content/394121/womans-breasts-chopped-off.html

[10]http://www.thehindu.com/news/cities/mumbai/womans-breasts-cut-off-for-refusing-to-get-into-fleshtrade/article5822615.ece?textsize=large&test=1

[11]http://www.openthemagazine.com/article/real-india/red-light-banking

[12]http://news.bbc.co.uk/2/hi/south_asia/7284180.stm

[13] http://zeenews.india.com/news/maharashtra/prostitution-racket-busted-in-thane_721485.html