தமிழகத்தில் ஆயிரக்கணக்கான வழக்குகளைப் பார்த்து விட்டோம். படங்களுடன் செய்திகள் கூட வந்துவிட்டன. ஆசிரியர் மாணவியைக் கட்டிப் பிடித்தது, முத்தமிட்டது, ஓட்டலுக்கு அழைத்துச் சென்று ஜாலியாக இருந்தது, ……………………….என அசிங்கங்கள், ……….ஆபாசங்களும் நிறையெவே வந்துள்ளன. அதுமட்டுமா, இந்திய – தமிழக பாதிரிகள், பிஷப்புகள்……..அமெரிக்கா, இத்தாலி…..என்று சென்று பல பெண்களை, சிறுமிகளை கர்பழித்து விட்டு, மற்ற பாலியல் குற்றவாளிகளைப் போல தமிழகத்தில் வந்து ஒளிந்து கொண்டு விட்டார்கள். கிருத்துவ சபைகள், பிஷப்புகள், மற்ற கிருத்துவர்கல் தாம் அவர்களுக்கு இடம் கொடுத்தது. கன்னியாகுமரியில் ஒருத்தன், ஊட்டியில் ஒருத்தன்……….என்ரு ஒளிந்துள்ளார்கள்.
இவற்றைப் பற்றியெல்லாம் மூச்சுக்குட விடுவதில்லை, சொல்வது-எழுதுவது கிடையாது! ஏன்? ஆனால், அந்த கொடிய-குரூர-காமுகர்கள் என்னவானார்கள்? சொல்லமுடியுமா? அவர்களுக்கு இத்தகைய தண்டனைக் கொடுத்தார்களா? கேரளாவிற்கு ஒரு சட்டம், தமிழகத்திற்கு ஒரு சட்டமா? |
கோழிக்கோடு : மார்ச் 2007ல், ஏ. கே. ஹரிதாஸ் என்ற ஆசிரியர் கைது செய்யப்பட்டார். நான்காம் வகுப்பு மாணவிகளிடம் பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில், ஆசிரியர் ஒருவருக்கு 30 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை அளித்து, கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம், புலியாவு என்ற இடத்தில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளியில் படித்த நான்காம் வகுப்பு மாணவிகளுக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, ஆசிரியர் ஏ. கே. ஹரிதாஸ் என்பவர் மீது ஆறு வழக்குகள் தொடுக்கப்பட்டிருந்தன. இந்த வழக்குகளை விசாரித்த கோர்ட் நேற்று அளித்த தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளதாவது: “ஆசிரியர் சமுதாயத்தில் வகித்த நிலையையும், பாதிக்கப்பட்டவர்களுக்கும், அவர்களது பெற்றோருக்கும் ஏற்பட்ட மனஉளைச்சலையும் கருத்தில் கொண்டு, அவருக்குக் கடுமையான தண்டனை அளிக்க வேண்டும் என்ற அரசுத் தரப்பு வாதம் ஏற்றுக் கொள்ளப்படுகிறது.
அதன்படி, முதல் வழக்கில் ஆறு ஆண்டுகள், இரண்டு மற்றும் மூன்றாம் வழக்குகளில் தலா ஐந்து ஆண்டுகள், நான்காம் மற்றும் ஐந்தாம் வழக்குகளில் தலா ஆறு ஆண்டுகள், ஆறாவது வழக்கில் இரண்டு ஆண்டுகள் என்று அவருக்குக் கடுங்காவல் தண்டனை விதிக்கப்படுகிறது.முதல் மூன்று வழக்குகளுக்கான தண்டனையை தொடர்ந்து அனுபவித்த பின், அடுத்த மூன்று வழக்குகளுக்கான தண்டனையைத் தொடர்ந்து அனுபவிக்க வேண்டும்.இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் அவருக்கு 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட ஐந்து மாணவிகளுக்கு, தலா நான்காயிரம் ரூபாய் வழங்கும்படியும்“, கோர்ட் உத்தரவிட்டது.
அந்தாசிரியர் இந்திய குற்றாவியல் சட்டப் பிரிவுகள் –
IPC sections 354 (assault or criminal force to woman with intent to outrage her modesty = பெண்ணின் கற்ப்பைச் சூரையாட பலாத்காரம் செய்யும் வகையில் தாக்குவது அல்லது அத்தகைய பலாத்காரம் செய்வது),
377 (unnatural offences = இயற்கைக்கு மாறான குற்றங்கள்), and
506 (1) (Punishment for criminal intimidation = குற்ற உணர்வோடு தாக்கும் மனப்பாங்கு மற்றும் முறை).