Posts Tagged ‘பெண்களின் ஐங்குணங்கள்’
நவம்பர்20, 2017
50 பெண்களைக் கற்பழித்த குரூர கொக்கோகக் கற்பழிப்பாளி: வீட்டில் தனியாக இருந்த பெண்களை கற்பழித்தது – பெண்கள் எப்படி எச்சரிக்கையாக இருக்க வேண்டும்? (3)

கற்பழிப்பு, ஒழுக்கம் குடும்பம், சினிமா முதலியன: இந்திய சினிமாக்களில் கற்பழிப்பு காட்சிகள் “தத்ரூபமாகவே”, 10-15 நிமிடங்களுக்கு தாராளாமாகக் காட்டியுள்ளனர். அத்தகைய வக்கிர காட்சிகளுக்காகவே படங்கள் ஓடியகாலம் [1960-1990] உண்டு, இப்பொழுதும், அத்தகைய நிலை தொடர்கிறது. மலையாள படங்கள் அதற்காக பிரபலமாக இருந்தது. மலையாளப் படம் என்ற பெயரில், நடுவில் ஆபாசப் படம் காட்டும் முறையும் இருந்தது. முன்பெல்லாம் “அடல்ஸ்-ஒன்லி” என்று போஸ்டர் பார்த்து ஜனங்கள் போகும், இப்பொழுதோ, அத்தொல்லையே இல்லை, ஒவ்வொரு குத்தாட்டமே, கற்பழிப்பை விட மோசமான காட்சிகளாக இருக்கின்றன. பாடல்களைப் பற்றி கேட்கவே வேண்டாம், அந்த அளவுக்கு ஆபாசம், கொக்கோகம், நிர்வாணம் முதலியவற்றை எல்லாம் கடந்த நிலையில் இருக்கின்றன. முன்பெல்லாம், அத்தகைய கற்பழிப்புக் காட்சிகளில் “டூப்” போடுவதாகச் சொல்லப்படும். இப்பொழுதோ, அந்நடிகைகளே தாராளமாக நடித்துக் கொடுக்கின்றனர். கற்பழிப்புக் காட்சிகளில், உண்மையாகவே கற்பழித்த நிதர்சனங்களும் உண்டு. பிரபல நடிகைகளே அதில் உள்ளனர். இப்பொழுதும், ஒரு நடிகையைக் கற்பழிக்க, ஒரு நடிகனே கோடிகளில் பேரம் பேசி, ஆளை அனுப்பி, நிறைவேற்றியுள்ளான். ஆனால், அவனை குற்றத்திலிருந்து மீட்கவும் முயற்சிகள் நடந்து வருகின்றன.

கற்பழிப்பு, கொக்கோக விவரிப்பு முதலியவற்றை செய்யும் பொறுப்புள்ளவர்கள், ஆசிரியர்கள், தலைவர்கள்: அத்தகைய பாலியல் பாடல்களை எழுதியவர்கள் தாம், கவி, கவிக்கோ, பெருங்கவிக்கோ, கவிஞர், புலவர் போர்வையில் உலா வருகின்றனர். அத்தகைய ஆபாசமான, அரை-முக்கால் நிர்வாணமான காட்சிகளில் நடித்தவர்கள் தாம் மாதிரிகளாக, தலைவர்களாகச் சித்தரிக்கப் படுகின்றனர். அவர்களுக்கு பட்டம், பணம், பதவி எல்லாம் கொடுக்கப்படுகின்றன. மேலும் கேவலமான விசயம் என்னவென்றால், இவர்கள் பற்பல பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், பொது நிகழ்ச்சிகள் முத்லியவற்றில் வரவழைக்கப் பட்டு, பெண்ணியம், பெண்ணுரிமைகள், குடும்பம், போன்றவற்றைப் பற்றி பேசவும் வைக்கின்றனர். இவற்றால் மாணவ-மாணவியர் எதை கற்றுக் கொள்வர்? மிக-மிக மோசமான காட்சிகள் என்று ஊடகங்களே பட்டியல் இட்டுக் காட்டுகின்றன[1]. அதாவது, அத்தகையக் காட்சிகளைப் பார்த்தால், பார்த்தவர்களும் அவ்வாறே செய்யத் தூண்டப்படுவர் என்ற ரீதியில் சித்தரிக்கிறது[2]. ஆனால், அவையே அதிலும் முதலீடு செய்கின்றன. அதாவது, ஊடகக்காரர்களே, படத்தொழொலும் ஈடுபட்டுள்ளனர்.

பெண்மையை, தாய்மையை, கற்பை, ஒழுக்கத்தை, குடும்ப மேன்மயை, கணவன்–மனைவி உறவுமுறைகளை போற்றாமல் இருப்பது சமுதாயத்திற்கு நல்லதா?: பெண்மையை, தாய்மையை, கற்பை, ஒழுக்கத்தை, குடும்ப மேன்மயை, கணவன்-மனைவி உறவுமுறைகளை போற்றும், பாதுகாக்கும், கடைபிடிக்கும் சித்தாந்திகள், எழுத்தாளர்கள், நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், அரசியல்வாதிகள், தலைவர்கள் எத்தனை பேர் இருக்கின்றனர் என்று பார்த்தால், 1% கூட இல்லை என்றே புலப்படுகிறது. மனைவி-துணைவி-வைப்பாட்டி-காமக்கிழத்தி-கீப் என்ற ரீதியில் வாழும் இவர்கள் எப்படி சமுதாயத்திற்கு மாதிரிகளாக, அறிவுரைக் கூறும் மனிதர்களாக இருக்க முடியும்? பெண்மையை, தாய்மையை, கற்பை, ஒழுக்கத்தை, குடும்ப மேன்மயை, கணவன்-மனைவி உறவுமுறைகளை போற்றும், பாதுகாக்கும், கடைபிடிக்கும் பண்புகளை, குண்ங்களை, சிறப்புகளை பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் போதிக்கப் படுகின்றனவா? அதுவும் இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது. பெண்களின் உரிமைகள் என்று போதிக்கும் போது, கற்புன் மேன்மையினைப் பற்றி சொல்லிக் கொடுக்காமல், வேண்டும் என்றால் சேர்ந்து வாழலாம்-பிரிந்து போகலாம், பெண்கள் குழந்தைகளை உருவாக்கும் எந்திரங்கள் இல்லை, அதனால் அவர்கள் திருமணம் செய்து கொள்ளலாம், வேண்டாம் என்றால் திருமணம் செய்து கொள்ளலாமலே, வாழலாம், வாழ்க்கை நடத்தலாம், குடும்பமும் நடத்தலாம் பொன்றேல்லாம் போதிக்கப்படுகின்றன. பிரச்சார,ம் செய்யப் படுகின்றன. பிரபல நடிகர்களும் அவ்வாறே போதிக்கின்றனர். இதனால், கணவன்-மனைவி உறவுமுறைகள் என்றால் என்ன என்று கேட்கும் நிலை ஏற்படாதா?

வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விவரங்கள்:
- தனியாக இருக்கும் பெண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இத்தகைய முறைகளை [மேலே அவன் குறிப்பிட்ட சாத்திய கூறுகள் முதலியன] கையாளுவதை அறிந்து, அவற்றை முழுக்க தவிர்க்க வேண்டும்.
- பேஸ்புக்,வாட்ஸ்-அப் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.. செல்போன் எண்களை யாருக்கும் கொடுக்கக் கூடாது.
- கதவைத் திறக்காமல் பேசி அனுப்புவது சிறந்தது. உள்ளே வர வேண்டிய அவசியம் ஏற்படும் போது, உடன் ஆண் துணை இருப்பது அவசியம்.
- கேஸ் கொண்டு வருபவன், கேன் – வாட்டர் சப்ளை செய்பவன், பேப்பர் போடுபவன், முதலியவருடன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
- அதே போல வீட்டிற்கு வேலை செய்ய வரும், பழுது பார்க்க வரும், எலக்ட்ரீஷியன், பிளம்பர், போன்றவர்களுடனும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
- தெரியாத பெண்களை வீட்டிற்குள் விடக் கூடாது. தண்ணீர் கேட்டு வரும், குழந்தைகளுடன் வரும் பெண்களையும் விடக்கூடாது.
- அனாதை இல்லம், கோவில் போன்ற வசூலுக்கு வருபவர்களையும் ஊக்குவிக்கக் கூடாது.
- அடிக்கடி வரும், திரும்ப-திரும்ப ஆட்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், ஏனெனில், நாளாக-நாளாக, அவர்களது போக்குவரத்து, சந்தேகம் இல்லாமல் போகும் நிலையை உண்டாக்கும், அது அவர்கள் குற்றத்தை செய்ய தோதுவாகி விடும்.
- வேலைக்காரிகள், அவர்களது உறவினர்கள் மற்றும் அவர்களது பெயர்களைச்சொல்லிக் கொண்டு வரும் ஆண்கள், முதலியோருடன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
- தேவையில்லாத விற்பனை செய்வது போல வருவது, விசாரிக்க வருவது, அட்ரஸ் கேட்டு வருவது,….. போன்ற வகையறாக்களுடனும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
© வேதபிரகாஷ்
19-11-2017

[1] News18, 10 Ultra-Regressive Scenes From Bollywood Movies That Encourage Creep Behaviour, Pathikrit Sanyal, Updated:June 23, 2016, 2:10 PM IST.
[2] http://www.news18.com/news/buzz/10-ultra-regressive-scenes-from-bollywood-movies-that-encourages-you-to-be-a-creep-1027367.html
குறிச்சொற்கள்:அறிவழகன், உடலுறவு, கணவன்-மனைவி உறவு முறை, கற்பழி, கற்பழிப்பது, கற்பழிப்பாளி, கற்பழிப்பு, காமம், சீரழிவுகள், பண்பாடு, பலாத்காரம், பாலியல் பலாத்காரங்கள், பாலியல் பலாத்காரம், பாலுறவு, பெண்களின் உரிமைகள், பெண்களின் ஐங்குணங்கள், பெண்கள் கவனமாக இருக்கவேண்டிய அவசியம், பெண்மை, வீட்டில் தனியாக
அறிவழகன், இலக்கு, உடலின்பம், உணர்ச்சி, எளிதான இலக்கு, கணவன்-மனைவி உறவு முறை, கற்பழிப்பு, கற்பு, கலவி, காமக்கொடூரன், காமத்தீ, காமப் உணர்ச்சி, காமம், காமலீலைகள், காமவெறி பிடித்த காரியம், காமுகன், குரூரம், குற்றம், கைது, கொக்கோகம், சமூகக் குரூரம், சிற்றின்பம், சீரழிவு, சீரழிவுகள், செக்ஸ், செக்ஸ் குற்றம், செக்ஸ் கொடுமை, செக்ஸ் சில்மிஷம், செக்ஸ்-குற்றங்கள், தாம்பத்திய சந்தேகங்கள், தாய், தாய்மை இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
ஓகஸ்ட்12, 2016
மறுபடியும் பேஸ்புக் காதல், ஜாலியாக சுற்றுதல், சினிமா பார்த்தல், தொட்டுக் கொள்வது, கட்டித்தழுவுதல் – கற்பழிப்பில் முடிந்த சோகக்கதை!
மோசடி காதலில் சீரழிந்தது கேத்தரின் மார்க்ரெட் சிம்சன் அல்லது திவ்யா?: தூத்துக்குடியில் பாலியல் பலாத்காரம் செய்து ஏமாற்றிய பேஸ்புக் காதலனை பிடிக்க தன்னை வாலிபர் காரில் கடத்தி பலாத்காரம் செய்ததாக நாடகமாடிய கல்லூரி மாணவியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பார்க் ரோட், ராமன்புதூரைச் சேர்ந்தவர் சார்லஸ் சிம்சன், இவரது மகள் கேத்தரின் மார்க்ரெட் சிம்சன் 21 வயது இளம்பெண் தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் கல்லூரி விடுதியில் தங்கியிருந்து பிஎஸ்சி 3ம் ஆண்டு நியூட்ரிஷியன் சயின்ஸ் பயின்று வருகிறார். நாகர்கோவில் ராஜாவூரை சேர்ந்த ஜோ (26), திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகேயுள்ள வி.வி., இன்ஜி., கல்லூரியில் டெக்னீஷயனாக பணியாற்றி வருகிறார். அப்பெண்ணின் பெயர் திவ்யா என்று “தமிழ்.ஒன்.இந்தியா” இணைதளம் குறிப்பிட்டுள்ளது[1]. ஆக, இது மோசடி-காதல் என்றாலும், கிருத்துவ-கிருத்துவ லவ்-லடாயா அல்லது கிருத்துவ-இந்து லவ்-குரூஸேடா என்று தெரியவில்லை. ஒருவேளை கற்பழிப்பில், பெண்ணின் பெயரைப் போடக் கூடாது என்பதால், இவ்வாறு குறிப்பிட்டிருக்கலாம்.
மூன்று மாத பேஸ்புக் காதல் ஒரு இளம்பெண்ணை தொடும் அளவிற்கு போயிருக்க முடியுமா?: பேஸ்புக்கில் மூன்று மாதத்திற்கு மே மாதத்தில் முன்பாக பழக்கம் ஏற்பட்டுள்ளது[2]. இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந் நிலையில் விடுமுறைக்காக வீடு சென்ற கேத்தரின் கடந்த 8 ம் தேதி தூத்துக்குடி கல்லூரிக்கு வருகை தந்தார். அப்போது அவருடன் பஸ்சில் ஜோவும் பயணம் செய்துள்ளார். தூத்துக்குடிக்கு வந்த இவர்கள் அங்குள்ள ராஜ் தியேட்டரில் பகல் ஷோ சினிமா பார்க்க சென்றனர். அங்கு பால்கனியில் வேறு யாரும் இல்லாததால் கேத்தரினும், ஜோவும் எல்லை மீறி உல்லாசம் அனுபவித்தனர். இதில் கேத்திரினுக்கு ரத்த போக்கு ஏற்பட்டது. காதலன் ஜோ அவரை திருமணம் செய்து கொள்வதாக தெரிவித்தார். ஆனால் வீட்டில் காரில் வந்த மர்ம நபர்கள் இருவர் கடத்தி சென்று கற்பழித்ததாக பொய் சொல்லும்படி தெரிவித்தார். இதன் படியே கேத்ரினும் வீட்டில் பொய் சொல்லியுள்ளார்[3]. இந் நிலையில் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் கேத்ரின் சேர்க்கப்பட்டார். இயல்பாக பெண்களுக்கு, ஆண்கள் தம்மிடம் கெட்ட எண்ணத்தோடு பழகுகிறார்கள் என்றால், உள்ளுணர்வு எச்சரிக்கும் என்பார்கள். அப்படியிருக்கும் போது, இப்பெண் எப்படி அந்த அளவிற்கு இடம் கொடுத்தாள், தொட அனுமதித்தாள் என்பது புரியவில்லை.
மயக்க ஸ்பிரே அடித்து ஒருவர் காரில் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து விட்டார் – என்று எந்த பெண்ணாவது கூறுவாரா?: கடந்த 8ம் தேதி காலை 5.15 மணிக்கு வீட்டில் இருந்து புறப்பட்டு தூத்துக்குடிக்கு வந்துள்ளார். மறுநாளே வீட்டுக்கு திரும்பிய அந்த மாணவி, காலை 7.15க்கு தூத்துக்குடியில் உள்ள கல்லூரி அருகே நான் நடந்து சென்ற போது, என் முகத்தில் மயக்க ஸ்பிரே அடித்து ஒருவர் காரில் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து விட்டார். மயக்கம் தெளிந்து நான் கதறியதும் என்னை மிரட்டி பழைய பஸ் நிலையத்தில் விட்டு சென்று விட்டார் என்று பெற்றோரிடம் கதறியபடி கூறினார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக அவரை நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பின்னர் தூத்துக்குடி போலீசாருக்கு போனில் தகவல் தெரிவித்துள்ளனர். “மயக்கம் தெளிந்து நான் கதறியதும் என்னை மிரட்டி பழைய பஸ் நிலையத்தில் விட்டு சென்று விட்டார்”, என்பது வியப்பாக உள்ளது. சோதனையில் அவள் கற்பழிக்கப்பட்டது தெரியவந்தது.
போலீஸ் விசாரணையில் பெண்ணின் நாடகம் வெளிப்பட்டது: 8ம் தேதி அதிகாலை 5.15 மணிக்கு நாகர்கோவிலிலிருந்து பஸ்சில் புறப்பட்ட அந்த மாணவி 7.15 மணிக்கு தூத்துக்குடி வந்து சேர்ந்து விட்டதாக கூறியதும், மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் இளம்பெண்ணை மயக்க ஸ்பிரே அடித்து காரில் கடத்தி செல்வது இயலாத காரியம் என்பதாலும் சந்தேகம் அடைந்த போலீசார் துரித விசாரணையில் இறங்கினர். தூத்துக்குடியில் இருந்து சென்ற ஒரு பெண் எஸ்ஐ, நாகர்கோவில் உள்ள ஒரு பெண் டிஎஸ்பி ஆகியோர் மருத்துவமனையில் இருந்த அந்த இளம்பெண்ணிடம் துருவித்துருவி விசாரணை நடத்தினர். இதில் அவர் கடத்தப்பட்டதாக சொன்ன சம்பவம் பொய் என தெரியவந்தது[4]. இருப்பினும், இவ்வாறு பொய் சொல்வது, அந்த காதலனைக் காப்பாற்றவா, அவனது அடையாளங்களை மறைக்கவா, தான் கற்பழிக்கப்பட்டிருந்தாலும், உண்மையினை மறைக்கவா என்று நினைக்கும் போது திகைப்பாக இருக்கிறது!
மாணவி கற்பழிக்கப்பட்டது எப்படி?: விசாரணையில், அந்த பெண்ணும் திசையன்விளையில் உள்ள தனியார் கல்லூரி ஊழியரான ராஜாவூரை சேர்ந்த ஜோ (26) என்பவரும் காதலித்துள்ளனர். கடந்த 8ம் தேதி வீட்டில் இருந்து புறப்பட்டு வந்த இளம்பெண்ணுடன் பாளையங்கோட்டையில் காத்திருந்த ஜோவும் சேர்ந்து தூத்துக்குடி வந்துள்ளார். அங்கு கல்லூரிக்கு செல்லாமல் இருவரும் ஓட்டல், ஷாப்பிங் மால் உள்ளிட்ட இடங்களுக்கு சென்றுள்ளனர். இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உறுதியளித்த ஜோ, தூத்துக்குடி டவுனில் உள்ள ஒரு தியேட்டருக்கு அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். “ஜோ, மாணவியை அழைத்துக் கொண்டு பால்கனிக்கு சென்றார். பால்கனியில் காதலர்களை தவிர வேறு யாரும் இல்லை. இதனால் மாணவியுடன் தனிமையில் அமர்ந்து சினிமா பார்த்துக் கொண்டிருந்த ஜோ ஒரு கட்டத்தில் எல்லை மீறினார். பின்னர் ஆசை வார்த்தை கூறி அந்த மாணவியை கற்பழித்ததாக தெரிகிறது”, என்று தினத்தந்தி விளக்குககிறது[5]. இதையடுத்து அந்த மாணவியை பழைய பஸ் நிலையத்தில் விட்டு விட்டு சற்று நேரத்தில் வருவதாக கூறிச் சென்ற ஜோ நீண்ட நேரமாகியும் வரவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த இளம்பெண், விட்டுச் சென்ற காதலனை பிடிப்பதற்காக தன்னை ஒருவர் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக பெற்றோரிடம் புகார் தெரிவித்துள்ளதும் தெரியவந்தது. இதனையடுத்து தூத்துக்குடி மத்தியபாகம் போலீசார் வழக்குபதிவு செய்து தலைமறைவான ஜோவை தேடி வருகின்றனர்[6].
2 / 3 மாதத்துக்கு முன் பேஸ்புக்கில் அறிமுகம் – காதல் கத்தரிக்காய், கற்பழிப்பு: பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவிக்கு, ஜோ கடந்த 2 / 3 மாதத்திற்கு முன்னர் தான் பேஸ்புக் மூலம் அறிமுகமாகியுள்ளார். அதன் பின்னர் இருவரும் செல்போன் எண்களை பரிமாறிக்கொண்டு தங்கள் காதலை வளர்த்துள்ளனர். குறைந்த நாட்களிலேயே பக்காவாக பிளான் செய்த ஜோ, அவரை வலையில் வீழ்த்தி விட்டு தூத்துக்குடி பழைய பஸ் நிலையத்தில் தவிக்க விட்டு கம்பி நீட்டியுள்ளார் என போலீசார் தெரிவித்தனர்[7]. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அம்மாணவி, காதலனை பிடிப்பதற்காக கடத்தல் நாடகம் ஆடியது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது[8]. பேஸ்புக்கில் பழக்கம், காதல் எனும்போது, பேஸ்புக்கில் பகிர்ந்து கொண்ட விசயங்கள், புகைப்படங்கள் முதலியவற்றிலிருந்தே அந்த ஜோவைப் பிடித்து விடலாம். ஆனால், ஒரு மாணவி இவ்வாறு சீரழிந்தது மிக்க வருத்தத்திற்குரிய விசயமாகும். 21 வயதாகியும் காதல்-காமம் என்ற விசயங்களில் ஒரு பெண்ணிற்கு வித்தியாசம் தெரியவில்லை, பெண்ணின் உணர்ச்சிகள் எச்சரிக்கவில்லை, அச்சம்-மனம்-நாணம்-பயிர்ப்பு முதலியவை எடுத்துக் காட்டவில்லை, இதனால், கற்பிழந்தாள் என்ற நம்ப முடியவில்லை. பெண்மைக்கு கற்பு தான் பெரிய அணிகலன், அதனை இழக்கக்கூடாது என்றெல்லாம் சொல்லவேண்டிய நிலைக்கு வந்து விட்டதா என்று நினைக்கும் போது திகைப்பாக இருக்கிறது. அந்த ஆணும் அவ்வாறு செய்திருக்கிறான் என்றால், அவனது வளர்ப்பு நிலை எப்படியுள்ளது என்பதும் கேள்விக்குரியதாக உள்ளது. அவனது பெற்றோர் வளர்ப்பு முறையும் சரியில்லை என்றாகிறது.

circa 1945: **NOT TO BE USED FOR POSTCARDS** Two lovers at the Palace Theatre kissing in the front row. Taken with infrared negative. (Photo by Weegee(Arthur Fellig)/International Center of Photography/Getty Images)
சினிமா மாடலில் கொச்சையான தலைப்புகள்-செய்திகள் – காட்டுவன யாது?: “பலாத்காரம் செய்து கழற்றி விட்ட காதலன்… கடத்தல் டிராமா போட்ட காதலி.. தூத்துக்குடி அருகே பரபரப்பு”, என்றும்[9], “பேஸ்புக்’ மூலம் அரும்பிய காதல்: தியேட்டர் பால்கனியில் வைத்து கல்லூரி மாணவியை கற்பழித்த வாலிபர் சினிமா பார்க்க வேறு ஆட்கள் இல்லாததால் எல்லை மீறினார்” போன்ற[10] தலைப்புகளில் வந்துள்ள செய்திகள், சமூக பிரஞையே இல்லாமல், வெளியிட்டுள்ளது தெரிகிறது. குஷ்பு போன்ற நடிகைகள் திருமணத்திற்கு முன்பாக பெண்களிடம் கற்பு இருப்பது என்பது எதிர்பார்க்க முடியாது என்றெல்லாம் பேசியிருப்பது கவனிக்கத் தக்கது. பல நடிகைகள் ஐந்து-ஆறு திருமணங்கள் செய்து கொண்டு, மகன் – மகள்களைப் பெற்றுக் கொண்டு, உறவுமுறைகள் தடுமாறும் அளவுக்கு சீரழித்துள்ள செய்திகளும் வெளிவந்துள்ளன. கமல்ஹஸன் போன்றவர்களோ, குடும்பம், மனைவி, மகள்கள் போன்ற உறவுகளையே கேவலப்படுத்தியிருப்பது தெரிந்த விசயமே. இவர்கள் எல்லோரும், சமூகப் பிரச்சினைகளுக்கு அறிவுரை கூறிக்கொண்டிருப்பதால், அவர்களது ஒழுக்கம், யோக்கியதை முதலியவற்றைப் பற்றி குறிப்பிட வேண்டியதாகிறது.
© வேதபிரகாஷ்
12-08-2016
[1] தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், திவ்யாவிடம் விசாரணை நடத்தினர். அப்போது திவ்யாவின் வாக்குமூலத்தில் அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
http://tamil.oneindia.com/news/tamilnadu/girl-files-complaint-against-lover-260042.html
[2] தினமலர், காதலன் ஏமாற்றி உல்லாசம்: பலாத்காரம் செய்ததாக கல்லூரி மாணவி புகார் * விசாரணையில் நாடகம் அம்பலம், ஆகஸ்ட்.11, 2016: 04.15.
[3] http://www.dinamalar.com/news_detail.asp?id=1583322
[4] தினகரன், தூத்துக்குடியில் பரபரப்பு ஏமாற்றிய பேஸ்புக் காதலனை பிடிக்க பலாத்கார நாடகமாடிய மாணவி, Date: 2016-08-11@ 00:56:23
[5] தினத்தந்தி, ‘பேஸ்புக்’ மூலம் அரும்பிய காதல்: தியேட்டர் பால்கனியில் வைத்து கல்லூரி மாணவியை கற்பழித்த வாலிபர் சினிமா பார்க்க வேறு ஆட்கள் இல்லாததால் எல்லை மீறினார், பதிவு செய்த நாள்: வியாழன் , ஆகஸ்ட் 11,2016, 7:45; PM IST மாற்றம் செய்த நாள்: வெள்ளி, ஆகஸ்ட் 12,2016, 1:30 AM IST;
[6] http://www.dinakaran.com/News_detail.asp?Nid=238015
[7] http://m.dailyhunt.in/news/india/tamil/dinakaran-epaper-karan/toothukkudiyil-barabarappu-aemarriya-besbuk-kathalanai-bidikka-balathkara-nadakamadiya-manavi-newsid-56573584
[8] http://tamil.oneindia.com/news/tamilnadu/girl-files-complaint-against-lover-260042.html
[9] தமிழ்.ஒன்.இந்தியா, பலாத்காரம் செய்து கழற்றி விட்ட காதலன்… கடத்தல் டிராமா போட்ட காதலி.. தூத்துக்குடி அருகே பரபரப்பு, By: Essaki, Published: Thursday, August 11, 2016, 16:00 [IST].
[10] http://www.dailythanthi.com/News/Districts/Thoothukudi/2016/08/11194517/Theater-with-balconyThe-young-men-who-raped-a-college.vpf
குறிச்சொற்கள்:அச்சம், இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள், உடலுறவு, ஐங்குணங்கள், கற்பழிப்பு, கற்பு, கலாச்சாரம், காமம், சமூகச் சீரழிவுகள், செக்ஸ், ஜோ, திருமணத்துக்கு முன்பாக பாலுறவு, தூத்துக்குடி, நாணம், பண்பாடு, பயிர்ப்பு, பாரம்பரியம், பார்க் ரோடு, பாலுறவு, பெண்களின் ஐங்குணங்கள், பெண்கள் கவனமாக இருக்கவேண்டிய அவசியம், மாணவிகள், ராமன் புதூர்
அசிங்கம், அச்சம், அடக்கம், அந்தரங்கம், ஆனந்தம், இச்சை, இணக்கத்துடன் செக்ஸ், உடலின்பம், உடலுறவு, உடல், உணர்ச்சி, உணர்ச்சியை தூண்டி, உல்லாசமாக இருப்பது, ஊக்குவிப்பு, ஐங்குணங்கள், ஒப்புதலுடன் உடலுறவு, கட்டிப்பிடி, கட்டுப்பாடு, கற்பழிப்பு, கற்பு, கலாச்சாரம், காதலன், காதலி, காதல், காமம், காமலீலைகள், காமவெறி பிடித்த காரியம், காமுகன், கூடா ஒழுக்கம், கூடா நட்பு, கொக்கோகம், கோளாறு, சம்மதத்துடன் உலலுறவு, சிற்றின்பம், சீரழிவு, சீர்கேடு, சோரம், ஜோ, தூத்துக்குடி, பகுக்கப்படாதது, பார்க் ரோடு, ராஜாவூர், ராமன் புதூர் இல் பதிவிடப்பட்டது | 2 Comments »
ஜூன்28, 2016
நெல்லை மாலாவின் தகாத காமமும், கொலையும், கற்றுக் கொள்ளவேண்டிய பாடங்கள் – பள்ளி–கல்லூரிகளுக்கு செல்லும் இளம் பெண்கள் எப்படி இருக்க வேண்டும்?

1960களிலிருந்து மாறிவரும் நிலை: மாலா இறந்து விட்டாள் என்று மக்கள் சும்மா இருந்துவிடக் கூடாது. மறுபடியும், இப்பொழுதுள்ள “நவநாகரிக” சமூகத்தில், உலகத்தில், எதனால்-ஏன்-எப்படி இத்தகைய சமூக குற்றங்கள், கொலைகள் முதலியவை நடக்கின்றன என்பதனை தெளிவாக அலச வேண்டியதுள்ளது. 1960களில் பெண் பள்ளி-கல்லூரி செல்கிறாள் என்றால், பள்ளி-கல்லூரிகளில் விட்டு மறுபடியும் கூட்டி வரும் நிலை இருந்தது. 1970களில் அதே பள்ளி-கல்லூரி நண்பவர்களுடன் அனுப்பி வைத்தனர் எனலாம். 1980களில் சைக்கிள், பைக்குகளில் செல்ல ஆரம்பித்தனர். 1990களில் தனியாக செல்ல அனுமதிக்கப்பட்டனர். 2000களில் அதைப் பற்றி பெற்றோர், உற்றோர், மற்றோர் கவலைப்படுவதில்லை எனலாம். 2010களில் எல்லாவற்றையும் செல்போனிலேயே கவனித்துக் கொள்ளலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. தனிதனி பள்ளிகள், கல்லூரிகள், வகுப்புகள் என்பதெல்லாம் போய் “கோ-எடுகேஷன்”, இருபாலர்களும் சேர்ந்து படிக்கும் முறை வந்து விட்டது. இந்நிலையில் தான் மாணவ-மாணவியர், ஆண்-பெண் பேசிக்கொள்ளும், பழகிக்கொள்ளும் சந்தர்ப்பங்கள் அதிகமாகின.

பாக்கெட் மணி விவகாரமும், எல்லை மீறல்களும்: அப்பொழுதெல்லாம், பெண்களுக்கு போய்-வர பேரூந்து கட்டணம் என்றுதான், ஒரு ரூபாய் / எட்டணா சிலறையாகக் கடுப்பார்கள். அதாவது, பெண்ணிற்கு அதிகமாக பணம் கொடுக்கக் கூடாது, கொடுத்தால், மற்ற விசயங்களுக்கு உபயோகப் படுத்துவாள் என்ற அக்கரை இருந்தது. அது பத்தாகி, நூறாகிவிட்டது. அக்கரை பயமாகி விட்டது, முன்பெல்லாம் வெளியில் சாப்பிட மாட்டார்கள், இப்பொழுது அதுவே பேஷனாகி விட்டது. லஞ்சு-பாக்ஸ் எடுத்துச் செல்வது கூட, அநாகரிகமாக உள்ளது என்ற நிலை வந்துவிட்டது. இதனால், பெண்கள் கான்டீன், ஹோட்டல் என்றெல்லாம் செல்லும் வழக்கம் ஏற்பட்டுவிட்டது. இதெல்லாம், ஆண்-பெண் சந்திப்புகளுக்கு ஏதுவாகின.

பொறியியல் கல்லூரி கலாச்சாரம்: பொறியியல் கல்லூரி கலாச்சாரம் வந்த பிறகு, மாணவர்-மாணவியர் சேர்ந்து செல்லும் வழக்கமும் வந்து விட்டது. இங்கு “பொறியியல்” என்பது உருவகமாகப் பயன்படுத்தப் பட்டுள்ளது. பேற்றோர், உற்றோர், மற்றோர்களுக்கு இவையெல்லாம் தெரிந்து, ஏற்றுக் கொண்ட கலாச்சாரமாகி விட்டன. அந்நிலையில், மாணவியர்-இளம்பெண்களை 24 மணி நேரமும் கண்காணித்து வர முடியாது. பெற்றோர்கள் வேண்டுமானால், “அம்மா, நாங்கள் உன்னை நம்பித்தான் இருக்கிறோம், ஜாக்கிரதையாக இரு”, என்று சொல்லத்தான் செய்கிறார்கள். பெரும்பாலான மாணவியர்-இளம்பெண்களும் அவ்வாறே கச்சிதமாக இருந்து வருகிறார்கள். இருப்பினும், சில நேரங்களில், சில மாணவியர்-இளம்பெண்கள் விசயங்களில் மாறுபட்ட விசயங்கள் நடந்து வருகின்றன. என்னத்தான் மாணவ-மாணவியர், இளம் பெண்-இளம் ஆண் நட்பு என்றேல்லாம் சொல்லிக் கொண்டாலும், இயற்கையான ஆண்-பெண் ஈர்ப்புகளில், போட்டி-பொறாமைகளில், ஊந்துதல்களினால், நட்பு என்ற வட்டத்தை மீறி “காதல்” என்பதை விட “காமம்” என்ற மாயையில் சிலர் சிக்கி விடுகிறார்கள். அது போதையாகி விடும் போது, விடுபட தவிக்கிறார்கள். அது குடும்பப் பிரச்சினையாகும் போது, குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றன; உடைகின்றன; பெற்றோர்கள் மானம் பார்த்து, உற்வுகளை மறந்து, மறைத்து, எங்கேயோ வேறு ஊர்களுக்குக் கூட சென்று தங்கிவிடுகிறனர்.

பள்ளி–கல்லூரிகளுக்கு செல்லும் இளம் பெண்கள் எப்படி இருக்க வேண்டும்?: கீழ்கண்டவை, பல உண்மையான நிகழ்வுகள், அனுபவங்கள் முதலியற்றின் மீது ஆதாரமாகக் கொடுக்கப் படுகின்றன. இவற்றையெல்லாம், “இடைக்காலத் ததத்துவம்”, “பெண் அடக்குமுறை” என்றெல்லாம் சொல்லி ஒதுக்கி விடமுடியாது:
- படிக்க செல்லும் மாணவ-மாணவியர் படிப்பு விவாகரங்களுடன் நிறுத்திக் கொள்ள வேண்டும். பெற்றோர் எவ்வளவோ கஷ்டப்பட்டு, உங்களை பள்ளியில்-கல்லூரியில் சேர்த்துள்ளனர் என்பதனை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவேண்டும்.
- படிப்பது, படித்து முடிப்பது, நன்றாக தேர்ச்சி பெற்று அதிக மார்க்குகள், கிரேடுகள் எடுப்பதில் தான் உங்களது கவனம் இருக்க்க வேண்டும், அதுதான் உங்களது கடமையாகும்.
- பேசுவது, சந்தேகம் கேட்பது, வாத-விவாதங்கள், சமர்பிப்பு போன்ற விவசயங்களும் படிப்போடு நிறுத்திக் கொள்ளவேண்டும். (குறிப்பாக மாணவர்கள்-பையன்களுடன்)
- செல்போனில் பேசுவது, போன் நெம்பர்களை அடுத்தவர்களுக்கு கொடுப்பது, பகிர்ந்து கொள்வது முதலியவற்றில் கவனம் வேண்டும். தேவையில்லாமல், யாருடனும் பேச்சை வளர்க்க வேண்டாம். இதில் சிநேகிதிகள்-சிநேகிதர்கள் எல்லோருமே அடக்கம்.
- பேஸ்புக், வாட்ஸ்-அப் போன்ற சமூக வலைதளங்களிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். “இன்-பாக்ஸ்”, “சேட்டிங்” போன்றவற்றில் ஈடுபட வேண்டாம்.
- “குரூப் ஸ்டெடீஸ்”, எடுகேஷனல் டூர், இன்–ஹவுஸ் டிரைனிங், போன்ற சமாசாரங்களில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். கூட வரும் குரூப்-ஹெட், மாஸ்டர், இவர்களிடமே எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
- கல்லூரி விழாக்கள், இலக்கியம்-இசை-பாட்டு, விளையாட்டு …..போன்ற விவகாரங்களில், எல்லைகளை வரையறுத்துக் கொண்டு, அதற்கு மீறி செல்லக் கூடாது.
- கண்ட இடங்களில் நின்று கொண்டு, பேசுவது, சிரித்து கும்மாளம் அடிப்பது போன்றவற்றை நிறுத்தி கொள்ள வேண்டும். இதில் உங்களுக்கு மாணவர்-பையன்களோடு போட்டி தேவையில்லை.
- கட் அடித்து எங்கேயாவது (சினிமா போன்றவை மட்டும்) சென்றாலும், திருமணம் போன்ற கொண்டாட்டங்களுக்கு சென்றாலும், ஒழுங்காக, நேரத்தோடு வீட்டிற்கு மாலை 6-7 மணிக்குள் வந்துவிட வேண்டும் என்ற முறையினை கடைபிடிக்க வேண்டும்.
- ஒரு மாதிரியாக இருக்கும் சிநேகிதிகள், பெண்கள், கெட்ட பெண்கள்…….முதலியோருடன் சகவாசம் வைத்துக் கொள்ளக் கூடாது. அவர்களை உங்களது நட்பு வட்டத்திலேயே இருக்கக் கூடாது. யாராவது தொடர்பு வைத்திருந்தால், அவளை நீக்கிவிடலாம்.
இவையெல்லாம் கொஞ்சம் தான், ஏனெனில், நடைமுறையில் பிரச்சினை, அடாவடித்தனம், பொறுக்கித்தனம், ஆபத்து….முதலியவை பலவழிகளில், பல உருவங்களில் வரலாம்.

© வேதபிரகாஷ்
28-06-2016
குறிச்சொற்கள்:இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள், கணவன்-மனைவி உறவு முறை, கற்பு, கலாச்சாரம், கல்லூரி மாணவிகள், குழந்தை, கொலை, சார்லஸ், சீரழிவுகள், தமிழ் கலாச்சாரம், திருமணத்துக்கு முன்பாக பாலுறவு, நாகரிகம், நாணம், நெல்லை, பண்பாடு, பாலுறவு, பெண்களின் ஐங்குணங்கள், பெண்கள் கவனமாக இருக்கவேண்டிய அவசியம், பெண்மை, மாணவிகள், மாலா
இன்பம், இலக்கு, இளமை, உடலின்பம், உடலுறவு, உல்லாசமாக இருப்பது, உல்லாசம், ஒழுக்கம், கற்பு, கலாச்சாரம், காமப் உணர்ச்சி, காமம், குறி, குறி வைப்பது, கூடா உறவு, கூடா ஒழுக்கம், கூடா நட்பு, கொக்கோகம், சபலம், சம்மதத்துடன் செக்ஸ், சாதி, சாதியம், சார்லஸ், பகுக்கப்படாதது இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
ஜூன்27, 2016
சின்னாராஜ் நான்கு பெண்களைக் கொன்றது தனிமனித ஒழுக்க சீர்கேடா, சமூக சீரழிவா அல்லது தார்மீக தோல்வியா?
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரைச் சேர்ந்தவன் சின்னராஜ் (35); ஸ்வீட் மாஸ்டர். 2012ல், திண்டுக்கல் மாவட்டம் பழநியில், ஒரு பேக்கரியில் வேலை பார்த்துள்ளான். அப்போது, அருகே இருந்த தேநீர் கடையில் வேலை பார்த்த, சிவகங்கை மாவட்டம், திருப்புத்துார் தாலுகா, கட்டயம்பட்டியைச் சேர்ந்த, சின்னதுரையுடன் நெருங்கி பழகி உள்ளான். பழநியில், வாடகை வீட்டில் குடியிருந்த சின்னதுரையின் வீட்டிற்கு, சின்னராஜ் அடிக்கடி சென்று வந்த போது, தன்னை விட, ஐந்து வயது மூத்தவரும், மூன்று பெண் குழந்தைகளின் தாயுமான, சின்னதுரையின் மனைவி பாண்டியம்மாளுக்கும் (40) [மீனா என்றும் சொல்லப்படுகிறது[1]], அவனுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது[2]. சின்னராஜின் முதல் மனைவி இறந்து விட்டதால் சந்தன வீனா (36) என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார் என்கிறது விகடன்[3]. கூடா உறவு, குடும்ப சீரழிவு இங்கேயே ஆரம்பித்துள்ளது. பாண்டியம்மாளின் படிதாண்டிய விளைவுதான் அழிவிற்கு கூட்டிச் சென்றுள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து, உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். இதை, பாண்டியம்மாளின் கணவர் கண்டித்துள்ளார். அடங்காத கள்ளக்காதல் ஜோடி, ஒரு கட்டத்தில், பழநியை விட்டு வெளியேறி உள்ளது. போதாகுறைக்கு, மூன்று மகள்களையும் கூட்டிச் சென்றுள்ளனர். பாண்டியம்மாள் கணவர் வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டு பாண்டியம்மாள் மற்றும் 3 மகள்களையும் விட்டுவிட்டு தனியாக சென்று விட்டார் என்று பாண்டியம்மாளின் தந்தை பால்சாமி (65) கூறுகிறார்[4].
2012லேயே சென்னை–ராயப்பேட்டைக்கு குடியேறிய பாண்டியம்மாள் முதலியோர்: சின்னராஜுக்கு, ஏற்கனவே சென்னையில் வேலை பார்த்த அனுபவம் உண்டு. 2012ல், பாண்டியம்மாள், 35, அவரது மகள்கள் பவித்ரா, 19, பரிமளா, 18, ஸ்நேகா, 16, ஆகியோருடன், சென்னை, ராயப்பேட்டை காவல் நிலையம் அருகே உள்ள முத்து தெருவில், ராஜாபகதுார் என்பவரின் வீட்டில், அடுக்குமாடி குடியிருப்பின் முதல் தளத்தில், ஐந்து பேரும் வாடகைக்கு குடியேறினர். சின்னராஜ் வீட்டிலேயே இனிப்பு பலகாரங்கள் செய்து, கடைகளுக்கு சப்ளை செய்து வந்துள்ளான். பட்டினப்பாக்கத்தில் உள்ள கடையில் வேலையும் பார்த்துள்ளான். பாண்டியம்மாள் மகள்களில் பவித்ராவை, சோழிங்கநல்லுாரில் உள்ள, தனியார் பாலிடெக்னிக்கிலும், பரிமளாவை, ‘பாரா மெடிக்கல்’ கல்லூரியிலும் படிக்க வைத்துள்ளான். இளைய மகள் ஸ்நேகா, பிளஸ் 2 படித்து வந்தார். அம்மாவின் 2-வது கணவர் என்றாலும், அப்பா என்று தான் 3 மகள்களும் சின்னராஜை பாசமாக அழைத்து வந்துள்ளனர். சின்னராஜூம் 3 பெண்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி தந்து அவர்களிடம் அன்பாக இருந்துள்ளார். நாள்தோறும் சின்னராஜூவிடம் செக்ஸ் உறவில் ஈடுபட்ட வந்த பாண்டியம்மாள் திடீரென்று உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் சின்னராஜூவுடன் செக்ஸ் உறவுக்கு மறுத்து வந்தார். இந்தநிலையில் சின்னராஜ் மனதில் காமவெறி எழுந்துள்ளது. அவருடைய பார்வை வயதுக்கு வந்த 3 மகள்கள் மீது திரும்பியது. மகள்கள் குளிப்பதையும், வீட்டில் ஆடைகளை உடுத்தும் காட்சியையும் சின்னராஜ் மறைமுகமாக பார்த்து நீண்ட நாட்களாக ரசித்து வந்துள்ளார்[5]. நாளடைவில் 3 மகள்களையும் அடைய வேண்டும் என்ற காமத்தீ சின்னராஜ் மனதில் பற்றி எரிய தொடங்கியது. முதலில் மூத்த மகள் பவித்ராவை (19) அடைவதற்காக அவரிடம் இரட்டை அர்த்தங்களிலும், ஆபாசமாக பேசியும் வந்தார். செக்ஸ் தொந்தரவிலும் ஈடுபட்டு வந்துள்ளார்[6]. இதுபற்றி பவித்ரா தனது தாயார் பாண்டியம்மாளிடம் கண்ணீர்விட்டு கதறி அழுதுள்ளார்.
மூத்த மகள் மீது வெறி[7]: மூன்று குழந்தைகளையும் மிகவும் கஷ்டப்பட்டு படிக்க வைத்த போதிலும், பாண்டியம்மாளிடம், மூத்த மகள் பவித்ராவை தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி, சின்ராஜ் கூறியுள்ளான்[8]. இதனால், குடும்பத்தில் பூகம்பம் வெடிக்க துவங்கியது[9]. தன்னுடன் உறவு வைத்திருப்பதோடு, மகளுக்கும் வலை வீசுகிறானே என, பாண்டியம்மாள் வெகுண்டெழுந்து உள்ளார். விஷயம் வெளியே தெரிந்தால் அசிங்கமாகி விடும் என்று கருதிய பாண்டியம்மாள் யாரிடமும் சொல்லாமல், சின்னராஜை கண்டித்தார். இரவு நேரத்தில் சின்னராஜை வீட்டுக்குள் அனுமதிக்க மறுத்தார். இதனால், வீட்டிற்குள்ளேயே அவனை அனுமதிக்க மறுத்ததுடன், தான் வீட்டில் இருக்கும் போது மட்டுமே வர வேண்டும் என, நிபந்தனையும் விதித்துள்ளார். இதனால், பல இரவுகளை, மெரினா கடற்கரையிலேயே கழித்து வந்துள்ளான் சின்னராஜ். எனினும், அவனுக்கு பவித்ராவை அனுபவிக்க வேண்டும் என்ற வெறி இருந்துள்ளது. பாண்டியம்மாளும், அவனுடன் உறவு கொள்வதை முற்றிலும் நிறுத்தியுள்ளார். இதனால், சின்னராஜ், தன் உழைப்பில் மகள்களை படிக்க வைக்கும் பாண்டியம்மாள், தன்னை ஒரு கருவேப்பிலை போல் பயன்படுத்துகிறாரே என்ற ஆத்திரத்தில் இருந்துள்ளான். மேலும், பாண்டியம்மாள் மற்றும் அவரது குழந்தைகளின் நடத்தை மீதும், அவனுக்கு சந்தேகம் இருந்துள்ளது. இது சின்னராஜூக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. 3 மகள்களையும் அடைந்தே தீர வேண்டும் என்று சந்தர்ப்பத்துக்கு காத்திருந்தார். இந்தநிலையில் சம்பவத்தன்று குடிபோதையில் சின்னராஜ் வீட்டுக்குள் வந்தார்.
தீர்த்துக்கட்டினான்: சில நாட்களுக்கு முன், பாண்டியம்மாள் மற்றும் மகள்களுடன் சின்னராஜ், காரைக்குடிக்கு சென்றான். ஜூன் 20ம் தேதி, அனைவரும் சென்னை திரும்பியுள்ளனர். அன்று இரவு, போதையில் அவன் தகராறு செய்துள்ளான். இதனால், அவனை ஹாலில் படுக்க வைத்துவிட்டு, குழந்தைகளுடன் பாண்டியம்மாள், படுக்கை அறையில் துாங்கி உள்ளார். ஆனால், கதவு திறந்தே இருந்துள்ளது. அன்று அதிகாலை, 3:00 மணிக்கு திடீரென எழுந்த சின்னராஜ், இரும்பு கம்பியால், ஆழ்ந்து துாங்கிக் கொண்டிருந்த, பாண்டியம்மாள், பவித்ரா, பரிமளா ஆகியோரை, இரும்பு கம்பியால் தலையில் அடித்து கொடூரமாக கொன்றுள்ளான். அப்போது விழித்து எழுந்த ஸ்நேகாவை, ‘அயர்ன் பாக்ஸ்’ ஒயரில் கழுத்தை இறுக்கி கொன்றுள்ளான் என்று தினமலர் விவரித்துள்ளது. “தி இந்து”வும் இதே விவரங்களை கொடுத்துள்ளது[10].
கொலைப்பற்றிய மாறுபட்ட விவரங்கள்: மூத்த மகள் பவித்ராவை கற்பழிக்க முயற்சித்துள்ளார். அப்போது தடுக்க வந்த பாண்டியம்மாள் தலையில் உலக்கையால் தாக்கியதில், அவர் சுருண்டு விழுந்தார். இதனால் ஆத்திரமடைந்த பவித்ரா, சின்னராஜூவை நகத்தால் கீறி உள்ளார். இதையடுத்து பவித்ராவையும் அவர் உலக்கையால் தாக்கினார். அலறல் சத்தம் கேட்டு எழுந்த பரிமளா, சினேகா ஆகிய 2 மகள்களையும் சின்னராஜ் உலக்கையால் தாக்கி உள்ளார். அவர்கள் தட்டு தடுமாறி எழுந்த போது மீண்டும் மீண்டும் தாக்கியதில் அடுத்தடுத்து 4 பேரும் உயிரிழந்தனர். காமவெறியில் இருந்த சின்னராஜ் உயிரிழந்த 3 மகள்களின் ஆடைகளையும் களைந்துவிட்டு அவர்களை நிர்வாணமாக்கி உள்ளார். பின்னர் அவர்களை 2 நாட்கள் சின்னராஜ் கற்பழித்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. உடல்கள் அழுகிய பின்னரே சின்னராஜ் வெளியே சென்றுள்ளார். மேற்கண்டவாறு புதிய தகவல் வெளியாகி உள்ளது, என்று தினத்தந்தி விவரிக்கிறது.
© வேதபிரகாஷ்
27-06-2016
[1] http://www.newindianexpress.com/cities/chennai/Chennai-shocker-Man-murders-wife-girls-lives-with-their-bodies/2016/06/24/article3497934.ece
[2] தினமலர், சென்னையில் ஐந்து பெண்கள் படுகொலை, பதிவு செய்த நாள் : ஜூன் 25,2016,01:00 IST
[3] http://www.vikatan.com/news/crime/65496-women-murdered-in-chennai-in-the-last-24-hours.art
[4] தினகரன், எனது மகளுக்கு வாரிசு இல்லாமல் செய்து விட்டான்: பாண்டியம்மாளின் தந்தை கண்ணீர் பேட்டி, Date: 2016-06-26@ 01:04:43
[5] தினத்தந்தி, சென்னையில் ஒரே வீட்டில் தாய், 3 மகள்கள் கொலை; 3 இளம்பெண்களும் கற்பழிக்கப்பட்டனரா? போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள், பதிவு செய்த நாள்: ஞாயிறு, ஜூன் 26,2016, 2:31 AM IST; மாற்றம் செய்த நாள்: ஞாயிறு, ஜூன் 26,2016, 2:31 AM IST
[6] http://www.dailythanthi.com/News/India/2016/06/26023143/Woman-and-3-teenage-daughters-found-murdered-in-Chennai.vpf
[7] http://www.dinamalar.com/news_detail.asp?id=1550326
[8] தினமணி, தாய், மூன்று மகள்கள் கொலை: படுபாதக செயலில் ஈடுபட்டது ஏன்? குற்றவாளி வாக்குமூலம், By dn, First Published : 25 June 2016 10:43 AM IST
[9] சின்னராஜ், தனக்கு பெண் பார்க்கிறார்கள் என்றதாகவும், பாண்டியம்மாள் அதனால், தன்னை ஏமாற்றாதே என்றதாகவும், அதற்கு, அப்படியென்றால், உன் முதல் பெண்ணை எனக்கு திருமணம் செய்து கொடு என்றதாகவும் விகடன் கூறுகிறது. http://www.vikatan.com/news/crime/65515-sweet-stall-employee-murders-wife-three-daughters.art
[10] தமிழ்.இந்து, வீட்டில் அழுகிய நிலையில் இருந்த 4 சடலங்கள் மீட்பு: சென்னை ராயப்பேட்டையில் மனைவி, 3 மகள்கள் படுகொலை, Published: June 25, 2016 09:13 ISTUpdated: June 25, 2016 09:22 IST.
குறிச்சொற்கள்:இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள், கணவன்-மனைவி உறவு முறை, கற்பு, கலாச்சாரம், காரைக்குடி, சமூகச் சீரழிவுகள், சிநேகா, சின்னதுரை, சின்னராஜ், பரிமளா, பவித்ரா, பாண்டியம்மாள், பெண்களின் ஐங்குணங்கள், பெண்கள் கவனமாக இருக்கவேண்டிய அவசியம், பெண்மை, மனைவி, மீனா
இச்சை, இணக்கத்துடன் செக்ஸ், இளமை, உடலின்பம், உடலுறவு, உணர்ச்சி, உல்லாசமாக இருப்பது, ஊக்குவிப்பு, ஒருதாரம், ஒழுக்கம், கட்டுப்பாடு, கணவனை ஏமாற்றும் மனைவி, கணவன்-மனைவி உறவு முறை, கண்டித்தும் திருந்தவில்லை, கற்பழிப்பு, கற்பு, கலவி, கல்யாணம், கள்ளக்காதலி, காமக் கொடூரன், காமக்கிழத்தி, காமக்கொடூரன், காமத்தீ, காமம், காமவெறி பிடித்த காரியம், காமுகன், காரைக்குடி, கூடா உறவு, கூடா ஒழுக்கம், சமூகக் குரூரம், சிநேகா, சின்னதுரை, சின்னராஜ், சீரழிவு, சீர்கேடு, தாம்பத்திய சந்தேகங்கள், தாம்பத்தியம், தாய், திருமணம், பகுக்கப்படாதது, பரிமளா, பவித்ரா, பாண்டியம்மாள், பால்சாமி, மீனா இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
ஜூன்8, 2016
“கேரளா லுங்கி கார்ல்ஸ்”, மற்றும் “டிரஸ் கோட்” : உடைக்கட்டுப்பாடு – வேண்டுமா, வேண்டாமா வாத-விவாதங்கள்!

தங்களது தாய், சகோதரி, மனைவி, மகள் முதலியோர் எப்படி ஆடை அணிய வேண்டும், அணியக் கூடாது என்று பரிந்துரை முயற்சிகளில் ஈடுபடவில்லை: பிரபல நடிகைகள் முதல், பெண்ணியவாதிகள் வரை அப்படித்தான் நடந்து கொண்டனர். சிலர் கடவுளர்களே அப்படித்தானே உடையுத்திக் கொண்டுள்ளதாக சித்தரிக்கப் பட்டுள்ளன, நிர்வாணமாகக் கூட சிலைகள், விக்கிரங்கள் உள்ளனவே, அவற்றிற்கெல்லாம் உடை கட்டுப்பாடு ஒன்றுமில்லையா என்பது போன்ற கேள்விகள் எழுப்பி எழுதித்தள்ளினர். நல்லவேளை அவர்கள் தங்களது தாய், சகோதரி, மனைவி, மகள் முதலியோர் எப்படி ஆடை அணிய வேண்டும், அணியக் கூடாது என்று பரிந்துரை முயற்சிகளில் ஈடுபடவில்லை. ஒருவேளை அவர்களும் இதெல்லாம் எங்களது உரிமை என்று பேன்ட், லெக்கிங்ஸ், ஸ்லீவ்லெஸ், டி – ஷர்ட், மினி ஸ்கர்ட் மற்றும் டாப்ஸ் போன்ற உடைகளுடன் தெருவில் இறங்கியிருந்தால் என்ன செய்திருப்பார்கள் என்று தெரியவில்லை. முற்றும் துறந்த நடிகைகள் போன்றோ, முனி-ரிஷிக்கள் போன்றோ, சாதாரண மக்கள் இல்லை. நடிகையர், நாகரிக பெண்மணியர் குற்ப்பிட்ட இடங்களில் அவ்வாறு அரைகுறை ஆடைகள் அணிந்து உலா வரலாம், மற்ற இடங்களில் வந்தால் என்னாகும் என்பது அவர்களுக்கே தெரிந்தது தான். நடிகையர்கள் வாழ்க்கையை சாதாரண பெண்ணோடு ஒப்பிட முடியாது. இருப்பினும், இவர்கள் எல்லோரும் போதிக்க வந்து விடுவதே வேடிக்கையாக இருக்கிறது.

நட்சத்திர ஹோட்டல்கள், கிளப்புகளில் பின்பற்றப்படும் “டிரஸ் கோட்”: இந்திய ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் இந்த “டிரஸ் கோட்” பற்றி எழுதப்படாத விதிமுறைகள் தாம் பின்ப்பற்றப்படுகின்றன[1]. இதெல்லாம் ஹோட்டலுக்கு ஹோடல், ரெஸ்டேரென்டுக்கு ரெஸ்டாரென்ட், சாப்பிடும் இடம், உணவு முதலியவற்றிற்கு ஏற்றபடி மாறும் என்று கூறியும் “இதுதான் ஏற்புடைய உடை” என்று குறிப்பிட்டு சொல்லாமல் தப்பித்துக் கொள்கிறார்கள். பொதுவாக நவீன, மேற்கத்தைய உடைகளை அணிந்து கொண்டு வந்தால் ஒன்றும் கேட்பதில்லை. கோட்-சூட் போட்டுக் கொண்டு வரும் “பிசனஸ் கிளாஸ்” வகையும் உண்டு, அரைகுறை ஆடைகளுடன் வரும் நவநாகரிக வகைகளும் உண்டு[2]. பெண்கள் உடல் பாகங்கள், மார்பங்கள் தெரியும் படி எல்லாம் ஆடை அணிந்து கொண்டு வருகிறார்கள். அத்தகைய முறைகேடுகளை மேனாட்டு ஊடகங்களே எடுத்துக் காட்டியுள்ளன. அதாவது, அங்கேயே அத்தகைய கட்டுப்பாட்டு சிந்தனை இருக்கும் போது, இந்தியாவில் வேறு மாதிரி சிந்திப்பது சரியா-தவறா என்று அவர்களே புரிந்து கொள்ளலாம். ஆனால், வேடிக்கையென்னவென்றால், வேட்டிக் கட்டிக் கொண்டு சென்றாலோ, ஷூ போடாமல் சென்றாலோ உள்ளே அனுமதி கிடையாது.

நீதி மன்றங்களில் உடை கட்டுப்பாடு: உச்சநீதி மன்றம், உயர்நீதி மன்ற, மாஜிஸ்ட்ரேட் கோர்ட், டிரைபூனல் போன்ற நீதிமன்றங்களுக்கு நீதிபதிகள், வழக்கறிஞர்கள் கருப்பு கௌன் அணிந்து கொண்டு செல்கிறார்கள், வருகிறார்கள். ஆண் வழக்கறிஞர்கள்[3] மற்றும் பெண் வழக்கறிஞர்கள்[4] இப்படித்தான் உடையணிந்து வர வேண்டும் என்று “பார் கவுன்சில்” விதிமுறைகளில் சொல்லப்பட்டுள்ளன[5]. ஆங்கிலேயர் காலம் வரை நீதிபதி தலையில் கூட விக் எல்லாம் வைத்திருந்தால், பிறகு விட்டு விட்டார்கள். ஏன் வேறு நிறத்தில் இருக்கக் கூடாது அல்லது அது இல்லாமல் ஏன் நீதிமன்றத்தில் நுழையக் கூடாது என்று யாரும் கேட்பதில்லை. ஆங்கிலேயர் காலத்தில் ஆரம்பித்த இந்த உடைமுறையை மாற்ற வேண்டும் என்று அவ்வப்போது, வழக்கறிஞர்களே கேட்டுப் பார்த்தாலும்[6], இதுவரை ஒன்றும் நடக்கவில்லை. 1685ல் இங்கிலாந்து அரசன் சார்லஸ் II இறந்தபோது, துக்கம் அனுஷ்டிக்க இத்தகைய உடை உபயோகித்ததாகவும், அதனையே வழக்கறிஞர்கள் பின்பற்றுவதாகவும் கூறப்படுகிறது[7]. எது எப்படியாகிலும் கருப்பு துக்கத்துடன் சம்பந்தப்பட்டது என்பது தெரிந்த விசயம்.

ஆபாசப்படங்கள், விளம்பரங்களின் நிலை என்ன? பெண்களின் மீது ஏன் அதிகமான குற்றங்கள் நடக்கின்றன என்று, அரசு வெளியிட்டிருந்த அறிக்கையின்[8] மீதான கட்டுரையை நான் ஏற்கெனெவே பதிவு செய்துள்ளேன்[9]. பெண்களை வைத்துக் கொண்டு சினிமா, கொச்சையான விளம்பரங்கள், ஆபாசப் படங்கள், புளூ பிளிம்கள் / ஊதா சினிமாக்கள், நடனங்கள், விபச்சாரம், என பல நிகழ்ச்சிகள், செயல்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. இவையெல்லாம் கூடாது, பெண்களை கேவலப்படுத்துவது, அசிங்கப்படுத்துவது, செக்ஸ்-பொருள்களாக மதிக்கிறது என்றால், அவற்றை ஏன் பெரிய கம்பெனிகளே ஊக்குவிக்கிறது? கோடிக்கணக்கில் பணத்தை செலவிட்டு, பதிலுக்கு பொருட்களை விற்று பணத்தை அள்ளுகிறது? அதில் பெண்களின் பங்கு இல்லாமல், ஒன்றும் நடக்காது. அத்தகைய விஷயங்களில் பெண்கள் ஈடுபடுகிறர்கள் எனும்போது, அதற்கு என்ன காரணம் என்று பெண்கள் கூற வேண்டும். ஆண்கள் தாம் காரணம் என்று கூறி தப்பித்துக் கொள்ள முடியாது. இல்லை வறுமை என்று பொருளாதார காரணத்தைச் சொல்ல முடியாது, ஏனென்றால், இன்று பணத்திற்காக மட்டுமல்லாது புகழிற்காக பணக்காரப் பெண்களே அத்தகைய விஷயங்களில் ஈடுபடுகிறார்கள். சும்மா இருக்கும் எந்த ஆணும் எந்த பெண்ணிடமும் சென்று செக்ஸ் வைத்துக் கொள் என்று கூறிக் கொண்டு செல்ல மாட்டான். பெண்ணும் அப்படியே ஒப்புக் கொள்ள மாட்டாள். ஆகவே மனோதத்துவ ரீதியில் ஆராய்ந்தால், அதன்படி விளக்கம் கொடுக்க வேண்டும், தீர்வு காண வேண்டும். குற்றவியல் என்று பார்க்கும் போது, மனோதத்துவ ரீதியில் எல்லா காரணங்களும் எடுத்துக் கொள்ளப் படும். பிறகு தான், முக்கியமான காரணம் எது என்று ஆராயப் படும். காலக்கட்டங்களில், குறிப்பிட்ட காரணி தான் காரணம் என்றால், அதனை அவர்கள் எடுத்துக் காட்டுவார்கள். அத்தகைய நிதர்சனத்தை, யதார்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும். குற்றங்கள் ஏற்படாத முறையில் ஆடை அணிவது எப்படி என்பதனை பெண்கள் தான் வரையறுக்க வேண்டும். அவர்களே கூறிவிட்டால் பிரச்சினை இருக்காது.

முலைகளை / மார்பகங்களை, இடுப்பை, பெண்குறியைக் காட்டக் கூடாது என்று யாராவது சட்டத்தையா கொண்டு வர முடியும்?[10]: சமூகத்தில் ஏற்கெனவே ஏற்புடைது என்பதை வைத்துதான் சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. ஒருசிலர், நூறு-ஆயிரம் பேர் மற்றவர்களை விட மாறுபடுகின்றனர் என்பதற்காக இருக்கின்ற சட்ட-திட்டங்களை மாற்றி, அதுதான் எல்லோருக்கும் பொறுந்து என்று திணிக்க முடியாது. “நாகரிகம்” என்றால் என்ன, “நாகரிகமாக உடை அணிவது என்றல் என்ன” என்றெல்லாம் சொல்லிக் கொடுக்கவா வேண்டும்? இல்லை, முலைகளை / மார்பகங்களை, இடுப்பை, பெண்குறியைக் காட்டக் கூடாது என்று யாராவது சட்டத்தையா கொண்டு வர முடியும்? அப்படியும் எடுத்து வந்தால், எந்த அளவிற்கு காட்டலாம், காட்டக் கூடாது எனெல்லாம் வரையறுத்துக் கொண்டிருக்க முடியுமா? பிறகு, அதற்கும் நியாயம் கற்பித்து பேச ஆரம்பித்து விடுவார்கள். “நிர்வாணம்” என்றால் என்ன என்று பேசவந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. இன்று பொதுவாக, ஷாப்பிங் மால், பார்லர், நட்சத்திர ஹோட்டல்கள், ஏன் கல்லூரிகள்-பள்ளிகள் முதலிய இடங்களில் பெண்கள் எப்படி ஆடையுடுத்திக் கொண்டு வருகிறார்கள் என்பது தெரிந்த விசயமே.
© வேதபிரகாஷ்
08-06-2016
[1] DNA India, Fitting into a 5 star, Saadia Dhailey, Sat. 1 June 2013, 11.00 am IST.
[2] http://www.dnaindia.com/lifestyle/report-fitting-into-a-5-star-1842279
[3] Advocates appearing in the Supreme Court, high court, subordinate courts, tribunals or authorities must wear the dress prescribed, which must be sober and dignified. Male advocates must wear a black buttoned-up coat, chapkan, achkan or a black sherwani, and white bands with advocate’s gown or a black open-breasted coat, white shirt, white collar, stiff or soft, and white bands with advocate’s gown. In either case long trousers (white, black striped or grey) or dhoti must be worn.
http://www.lawyersclubindia.com/forum/DRESS-CODE-FOR-AN-ADVOCATE-1271.asp
[4] Women advocates must wear black and full or half sleeve jackets or blouses, a white collar, stiff or soft, with white bands with advocate’s gown. They may wear saris or long skirts (white, or black or any mellow or subdued colour without any print or design) or flare, or Punjabi dress (churidar kurta or salwar kurta, with or without dupatta), white or black.
http://www.lawyersclubindia.com/forum/DRESS-CODE-FOR-AN-ADVOCATE-1271.asp
[5] http://www.barcouncilofindia.org/about/professional-standards/rules-on-professional-standards/
[6]Black clothes absorb more heat causing immense inconvenience to advocates in the state, the petitioner said. The present dress code blindly follows the British colonial heritage, despite six decades of independence. The difficulties during the rainy season are equally tough. Even in Britain, the dress is not accepted in all courts, since 2008. http://www.newindianexpress.com/nation/article1494022.ece
[7] England when robes adopted in 1685 were the symbolic of mourning for King Charles II.
[8] http://ncrb.nic.in/; http://ncrb.nic.in/; http://ncrb.nic.in/CII2010/cii-2010/Table%20Contents.htm;
http://ncrb.nic.in/CII2010/cii-2010/table6.htm
[9] வேதபிரகாஷ், குழந்தைகள் / சிறுவர்–சிறுமியர் இளம்பெண்கள் முதலியோர்கள் மீதான குற்றங்கள் – 2010: புள்ளி விவரங்கள், விளக்கம், விவாதம்,http://atrocitiesonindians.wordpress.com/2011/10/31/crimes-against-children-girls-women-2010/
[10] https://liberalizationprivatizationglobalization.wordpress.com/2012/01/06/dress-code-crime-women-rape-correlation/
குறிச்சொற்கள்:கற்பழிப்பு, கற்பு, கலாச்சாரம், கல்லூரி மாணவிகள், காமம், கேரளா, சமூகச் சீரழிவுகள், சீரழிவுகள், செக்ஸ், பாரம்பரியம், பாலியல், பிரேமம், பெண்களின் ஐங்குணங்கள், மாணவிகள், ஶ்ரீமந்துடு
அச்சம், அடக்கம், அரை நிர்வாண கோலம், ஆடை, இடுப்பு, இன்பம், இளமை, உடல், உடை, ஒழுக்கம், ஓணம், கட்டுப்பாடு, கற்பழிப்பு, கற்பு, கல்லூரி, காமம், குறி வைப்பது, கேரளா, கொக்கோகம், செக்ஸ், செக்ஸ் தூண்டி, நடிகை, நிர்வாண படம், நிர்வாணம், பிரேமம், பெண், பெண்களின் மார்புடை, பெண்ணின்பம், பெண்ணியம், பெண்மை, பெண்மை சீரப்பாழி, மாணவிகள், மாணவியர், வக்கிரம், வழக்கறிஞர், ஶ்ரீமந்துடு இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
பிப்ரவரி10, 2014
இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜா முஸ்லிமாக மாறினார் – பிரச்சினை தனிமையா, தாம்பத்ய தோல்வியா, பலதார திருமணமா – பெண்கள் படும் பாடு.

Women are the sufferers
பெண்கள் படும் பாடு: எந்த மதப் பெண்ணாக இருந்தாலும், ஒரு ஆணை மணந்து கொண்டு வாழ விரும்புகிறாள் என்பது இயற்கையான நியதி, உண்மையும் ஆகிறது. அந்நிலையில் விவாக ரத்து என்பது அவளுக்கு நினைக்க முடியாத அளவுக்கு இருக்கிறது. ஒருவேளை ஆண் பிரிந்து சென்று விட்டால், இன்னொருவளுடன் சேர்ந்திருந்தால், அப்பெண் முதலில் தனித்திருக்கத்தான் விரும்புகிறாள். இன்னொருவனுடன் உறவு கொள்வதை மனதாலும் மறுக்கிறாள். அது கற்பு என்றும் போற்றப்படுகிறது. ஆனால், ஆண் ஒரு பெண்ணிற்கு மேல் உறவு கொள்ளும் போது, சட்டப்படி திருமணம் செய்து கொள்ளும் போது, பெண் ஏன் அதுமாதிரி செய்யக்கூடாது என்று எண்ணம் வரலாம். நவீனகாலத்தில் விவாகரத்து மூலம் அது சட்டமாக்கப் பட்டுவிட்டது. ஆனால், பிறக்கும் குழந்தைகள் தங்களது தாய்-தந்தை என்று ஒருவர்-ஒருவர் அதாவது அம்மா-அப்பா என்று இருவரை மட்டும் தான் நினைக்க முடிகிறது. ஆனால், இப்பொழுது அம்மா ஒருவர், அப்பா ஒருவர் அதாவது வேறு வேறான நபர்கள் என்று தெரியும் போது, குழந்தைகள் தவிக்கத்தான் செய்யும். “உன் அம்மா ஒருத்தி, ஆனால், நீ வேறு அப்பாவுக்குப் பிறந்தவன்” எனும்போது மகன் எவ்வாறு உணர்வான், சமரசம் செய்து கொள்வான். பெண்ணின் நிலையும் அவ்வாறே கேள்வியாகிறது.
முஸ்லிமாக மாறி ஒன்றிற்கு மேலாக மனைவியை வைத்துக் கொள்ள சினிமாக்காரர்கள் பயன் படுத்தி வருகிறார்கள்: இந்தியா ஒரு செக்யூலரிஸ நாடு, ஒருவர் எந்த மதத்தையும் பின்பற்றலாம். அதனால், மதம் பற்றிப் பிரச்சினை இல்லை. அதிலும் சினிமாக்காரர்கள் மதம் மாறுவதிலும் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. அது அவர்களுக்கு ஒரு சட்டையைக் கழட்டி, இன்னொரு சட்டையை மாட்டிக் கொள்வது போலத்தான். ஆனால், சினிமாக்காரர்கள் மதம் மாறுவது எப்பொழுதுமே பலதார திருமண விசயமாகத்தான் இருந்து வந்துள்ளது. அதிலும் முஸ்லிமாக மாறி ஒன்றிற்கு மேலாக மனைவியை வைத்துக் கொள்ள அது பயன் படுத்தப் பட்டு வருகின்றது. இதை கிஷோர் குமார், தர்மேந்திரா போன்ற பிரபல நடிகர்கள் கூட பின்பற்றினார்கள். கிஷோர் குமாருக்கு நான்கு மனைவிகள் – ரூமா குஹா தாகுர்தா, மதுபாலா (முஸ்லிம்), யோகிதா பாலி, லீனா சந்தவர்கர். தர்மேந்திராவுக்கு பிரகாஷ் கௌர், ஹேமாமாலினி முதலியோர். இந்து திருமணச் சட்டத்தின்படி இரண்டு மனைவிகளை வைத்துக் கொள்ள முடியாது அல்லது முதல் மனைவி இருக்கும் போது இரண்டாவது திருமணம் செய்து கொள்ள முடியாது என்பதால் தான், இந்தியாவில் நடிகர்கள் மட்டுமல்ல மற்றவர்களும் இஸ்லாத்திற்கு மாறுவது குறுக்குவழி போல பின்பற்றி வருகிறார்கள்[1].
சாதீய திரிபுவாதம் கொடுக்கப்பட வேண்டிய அவசியம்: உண்மை அவ்வாறாக இருக்கும் போது, சில தமிழ் ஊடகங்கள், வேறுமுறையில் திரிபுவாதம் கொடுத்துள்ளது கவழத்தை ஈர்த்துள்ளது. வழக்கம் போல “இனியொரு.டாட்.காம்”, “தமிழ் நாட்டில் ஒடுக்கப்பட்ட தலித் சமூகத்திலிருந்து இசைத் துறைக்கு வந்து மில்லியன்கள் புரளும் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளரானவர் இளையராஜா. இளையாராஜா தன்னைத் தலித் என்று அழைத்துக்கொள்வதை எப்போதும் விரும்பியதில்லை. இந்துத்துவ தத்துவத்தின் சினிமா இசைக்காவலனைப் போன்று தன்னை வெளிப்படுத்திக்கொண்ட இளையராஜா ஆதிக்க சாதியோடு தன்னை அடையாளப்படுத்திக்கொண்டார்”, என்று ஆரம்பித்து[2], யுவன் சங்கர் ராஜாவின் பிரச்சினைக் குறிப்பிட்டு, “புதிய மதத்திலும் சாதி ஒடுக்குமுறையைச் சந்திக்கின்றனர். இந்துத்துவாவின் வேர்கள் அனைத்து மதங்களிலும் படர்ந்துள்ளன”, என்று முடித்துள்ளது[3]. “இந்துத்துவ தத்துவத்தின் சினிமா இசைக்காவலனைப் போன்று தன்னை வெளிப்படுத்திக்கொண்ட இளையராஜா” எனும்போது, ரஹ்மான் கூட அவ்வ்வாறு இஸ்லாத்திற்கு முக்கியத்துவம் அளித்து வரும் போது, அவரை அவ்வாறு குறிப்பிடுவதில்லையே, அது ஏன் என்று தெரியவில்லை. அதனால், இதன் நோக்கத்தையும், பின்னணியையும் ஆராய வேண்டியுள்ளது.
வந்துள்ள செய்தி, வதந்தி, விளக்கம்: இசைஞானி இளையராஜாவின் மகனும் இசையமைப்பாளருமான யுவன்சங்கர் ராஜா இஸ்லாம் மதத்திற்கு மாறிவிட்டதாக தகவல்கள் வெளியாயின[4]. மேலும் யுவன் 3வதாக ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாகவும் தகவல்கள் பரவின. இதுகுறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள யுவன் சங்கர் ராஜா தான் இஸ்லாத்தை பின்பற்றுவதாகவும், அதற்காக பெருமைப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்[5].. மேலும் மூன்றாவதாக யாரையும் திருமணம் செய்யவில்லை என்று மறுப்பு தெரிவித்துள்ள அவர். குடும்பத்தினர் அனைவரும் தனது முடிவை ஏற்றுக்கொண்டதாகவும் கூறியுள்ளார்[6]. சினிமா இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா, முஸ்லிம் மதத்துக்கு மாறினார். அவர் இப்போது தினமும் 5 வேளை தொழுகை நடத்துகிறார், என்று சுருக்கமாக செய்திகளைக் கொடுத்துள்ளனர்.
இளையராஜாவின் மகன் யுவன்சங்கர்ராஜா: பிரபல சினிமா இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு, கார்த்திக் ராஜா, யுவன்சங்கர் ராஜா என்ற 2 மகன்களும், பவதாரிணி என்ற மகளும் இருக்கிறார்கள். மூன்று பேருமே சினிமா படங்களுக்கு இசையமைத்து வருகிறார்கள். குடும்பமே சேர்ந்து ஒரு தொழிலை செய்வது, வியாபாரம் செய்வது என்பதெல்லாம் ஒன்றும் ஆச்சரியப் படுவதற்கு ஒன்றும் இல்லை. இளையராஜா ஆன்மீகம், பக்தி என்று ஊறித்திளைக்கும் நேரத்தில் தன் மகன் இப்படி மாறுகிறார் என்றால் அது ஆன்மீக தேடலும் இல்லை, பக்தியும் இல்லை ஆனால், அதற்கு மேலாக வேறொன்றுள்ளது என்று தெரிகிறது.
1–வதுதிருமணம் (2005): இளையராஜாவின் மகன் யுவன்சங்கர் ராஜா சினிமா இசையமைப்பாளராகிப் பிரபலமானார். பல திரைப்படங்களுக்குப் பின்னணி இசையமைத்தவர். பிரித்தானியாவில் வசித்த சுஜயா சந்திரன் என்ற ஈழத் தமிழ்ப் பெண்ணை 2002லிருந்து காதலித்து வந்தார். சி. ஆர். வேலாயுதம் மற்றும் சரோஜினி சந்திரன் மகளான இவரை லண்டனில் 2003ல் பதிவு திருமணம் செய்து கொண்டு, மார்ச்.21, 2005ல் பெற்றோர் சம்பதத்துடன் முறைப்படி திருமணம் செய்து கொண்டார். ஆனால்,ஆகஸ்ட் 2007ல் விவாகரத்து மனு போட்டு பிப்ரவரி 2008ல் விவாகரத்து பெற்றனர்[7]. யுவன்சங்கர் ராஜா, சுஜயா மனுவில் கூறியிருந்த காரணம், “தீர்த்துக் கொள்ளமுடியாத வேறுபாடுகள்” [irreconcilable differences[8]] என்று குறிப்பிட்டிருந்தனர்! பிரிந்த பிறகு, சுஜயா, வெளிநாடு போய்விட்டார்[9]. ஆக முதல் திருமணம் தோல்வி என்றாகி விட்டது. என்னத்தான் இசை அமைத்தாலும், மனைவியுடன் இயைந்து வாழ்க்கை நடத்தமுடியவில்லை என்றாகிறது.
2–வதுதிருமணம் (2011): அதன்பிறகு யுவன்சங்கர் ராஜா ஷில்பா என்ற பெண்ணை இரண்டாவது திருமணம் 01-09-2011 அன்று செய்துகொண்டார். இவர்கள் திருமணம் திருப்பதி கோவிலில், பெற்றோர்கள் சம்மதத்துடன் நடைபெற்றது. முதல் திருமணம் டைவர்ஸில் முடிந்ததால், இது ரகசியமாக நடத்தப் பட்டது[10]. குடும்பத்தினர் மற்றும் சில நெருங்கிய நண்பர்கள் [மைத்துனர் வெங்கட் பிரபு, பிரேம்ஜி, மாமா கங்கை அமரன், விஷ்ணு வர்தன், அவரது மனைவி அனு, சுப்பு பஞ்சு, மிர்சி சிவா போன்றோர்] மட்டுமே கலந்து கொண்டனர்[11]. கடந்த சில மாதங்களுக்கு முன்பு யுவன்சங்கர் ராஜாவுக்கும், ஷில்பாவுக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது. இரண்டுபேரும் பிரிந்து வாழ்வதாக கூறப்படுகிறது. ஆக, இரண்டாவது திருமணத்தையும் திருப்திகரமாக இல்லை அல்லது இரண்டாவது மனைவியை திருப்திகரமாக வைத்துக்கொள்ள முடியவில்லை, தாம்பத்தியம் ஒழுங்காக நடத்தமுடியவில்லை என்றாகிறது.
முஸ்லிமாகமாறினார்[12] (2014): இந்தநிலையில், யுவன்சங்கர் ராஜா, முஸ்லிம் மதத்துக்கு மாறியிருக்கிறார். அவர் இப்போது தினமும் 5 வேளை தொழுகை நடத்துகிறார். குரான் படிக்கிறார். தாடியும் வளர்த்துவருகிறார், என்று செய்திகள் வர ஆரம்பித்துள்ளன. யுவன்சங்கர் ராஜா முஸ்லிம் மதத்துக்கு மாறியதை தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் அவர் நேற்று வெளியிட்டார். அதில், ‘‘நான் இஸ்லாம் மதத்துக்கு மாறிவிட்டேன். ஆனால், மூன்றாவது திருமணம் செய்து கொள்ளவில்லை’’ என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார். இதற்கிடையில், யுவன்சங்கர் ராஜா, மூன்றாவதாக முஸ்லிம் பெண் ஒருவரை காதல் திருமணம் செய்துகொண்டதாக சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது. அதாவது இஸ்லாத்தையும், திருமணத்தையும் அவரே இணைத்துப் பேசுவதிலிருந்து அதற்கு சம்பந்தம் உள்ளது என்றாகிறது.
ஏ. ஆர். ரஹ்மான் போல மாறவில்லை என்கிறார்கள்: தன்னுடைய தாயார் 31-10-2011 இறந்ததிலிருந்து[13] அன்று அவர் தனிமையை உணருவதாகக் கூறப்படுகிறது. ஒரு ஆன்மீகக் குருவை சந்தித்து இருப்பதாகவும் தெரிகிறது. இருப்பினும் இஸ்லாமுக்கு சென்றது ஏன் என்று தெளிவாகத் தெரியவில்லை. ஏ. ஆர். ரஹ்மான் போல மாறவில்லை என்கிறார்கள்[14]. கடந்த ஒரு வருடமாக இஸ்லாத்தைப் பின்பற்றி வருகிறார். ஸ்டூடியோவில் இருந்தாலும், வேலையில் இருந்தாலும் தவறாமல் ஐந்துமுறை தொழுகை செய்து வருகிறார். இன்னும் பெயரை மாற்றிக் கொள்ளவேண்டுமா என்பதைப் பற்றொ யோசித்து வருவதாகத் தெரிகிறது. இது அவருடைய தனிப்பட்ட விவகாரம் என்பதினால் அவரது குடும்பத்தினரும் தலையிடவில்லையாம்[15]. ஏ. ஆர். ரஹ்மான் போல முஸ்லிமாக மாறவில்லை என்றால், வேறு எவர் போல முஸ்லிமாக மாற துணிந்தார் என்று அவர்தான் விளக்க வேண்டும். இஸ்லாத்தை இவ்வாறு உபயோகப் படுத்துகிறார்கள், இஸ்லாம் அவ்வாறு உபயோகப்படுகிறது என்றால், இஸ்லாம் அதனை ஏன் ஊக்குவிக்கிறது, அனுமதிக்கிறது, பதிவு செய்கிறது? 1995ல் சரளா முதுகல் தீர்ப்பில் உச்சநீதி மன்ற, இஸ்லாத்துக்கு மாறினால் கூட இரண்டாவது திருமணம் செல்லாது என்று குறிப்பிட்டது[16].
வேதபிரகாஷ்
© 10-02-2014
[4] தினமணி, நான்இஸ்லாத்தைபின்பற்றுவதற்காகபெருமைப்படுகிறேன்: யுவன்சங்கர்ராஜா, பிப்ரவரி.10 2014. By Web Dinamani, சென்னை, First Published : 09 February 2014 02:58 PM IST
[12] தினத்தந்தி, சினிமாஇசையமைப்பாளர்யுவன்சங்கர்ராஜாமுஸ்லிம்மதத்துக்குமாறினார், பதிவு செய்த நாள் : Feb 10 | 02:15 am
[16] In 1995, the Supreme Court ruled in the Sarla Mudgal case that under the Hindu Marriage Act 1955, a Hindu husband cannot marry a second time simply by embracing Islam without lawfully dissolving the first marriage. He would be guilty of bigamy, the Court ruled.
குறிச்சொற்கள்:அச்சம், இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள், கணவன்-மனைவி உறவு முறை, கற்பு, சங்கர் ராஜா, தமிழச்சி, நாணம், பெண்களின் உரிமைகள், பெண்களின் ஐங்குணங்கள், யுவன், யுவன் சங்கர் ராஜா, ராஜா
இருதாரம், ஏகப்பதி, ஏகப்பத்தினி, கற்பு, கலவி, கலாச்சாரம், காமம், சுயமரியாதை, தாம்பத்திய சந்தேகங்கள், தாம்பத்தியம், தாய், நான்காம் பெண்டாட்டி, பலதாரம், முஸ்லிம் ஆவது, மூன்றாம் பெண்டாட்டி, யுவன் சங்கர் ராஜா இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
ஜனவரி13, 2014
சினிமாவின் நிர்வாணம், மேற்கத்தைய கலாச்சாரத்தின் தாக்கம், திசைமாறிய இந்திய நாகரிகம் – முடிவு இளம்பெண்களின் சீரழிவு!

16 வயதாகும்இவளுக்கு 15 வயதுசிறுவனிடம்காதல்ஏற்பட்டததாம்!: வியாசர்பாடி முல்லை நகர் பஸ் நிலையம் அருகில் வசிக்கும் கூலி தொழிலாளி ரவி–அபிராமி தம்பதியின் மகள் செல்வி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 16 வயதாகும் இவளுக்கு அதே பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுவனுக்கும் காதல் ஏற்பட்டது[1]. இப்படி தன்னைவிட வயது குறைவாக உள்ள மாணவனுடன் ஏற்படுவது காதல் அல்ல ஆனால் காமம் தான். ஆனால், கட்டுக்கடங்காத இளம் வயதில் காமத்தினால் இவ்வாறு தள்ளப்பட்டு, கொக்கோகத்தில் ஈடுபட்டுள்ளனர். பெற்றோருக்கு தெரியாமல் சந்தித்து வந்தனர், என்று செய்திகள் கூறுவதால் ஒன்று பெற்றோர்களின் கவனிப்பு சரியில்லை அல்லது அந்த “காதலர்கள்” வீட்டில் பொய் சொல்லி சாதாரணமாக வெளியே சென்றுள்ளனர், உடலுறவு கொண்டுள்ளனர் என்று தெரிகிறது. கடந்த ஜனவரி 7–ந்தேதி இருவரையும் காணவில்லை. இதுபற்றி சிறுமியின் பெற்றோர் எம்.கே.பி. நகர் போலீசில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் நடராஜன் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தார்.

தனிமை எவ்வாறு கிடைத்துள்ளது, உடலுறவு கொண்டு முதலிய புதிர்கள்: வந்துள்ளது போலீஸ் விசாரணையில் இருவரும் விழுப்புரத்தில் இருப்பது தெரிய வந்தது. உடனே எம்.கே.பி. நகர் போலீசார் விழுப்புரம் சென்று அவர்களை மீட்டனர். அப்போது சிறுமி 4 மாத கர்ப்பிணியாக இருப்பதைப் பார்த்து போலீசாரும், பெற்றோரும் அதிர்ச்சி அடைந்தனர்[2]. அதாவதுஇ அக்டோபர் 2013க்கு முன்னரே உடலுறவு கொண்டு வந்துள்ளனர். அந்த அளவிற்கு அவர்களுக்கு தனிமை எவ்வாறு கிடைத்துள்ளது என்பதும் நோக்கத்தக்கது. அவர்களை சென்னைக்கு அழைத்து வந்தனர். 12-01-2014 அன்று முதல் கோர்ட்டுக்கு தொடர்ந்து விடுமுறை என்பதால் 17–ந்தேதி கோர்ட்டில் ஆஜர்படுத்த முடிவு செய்துள்ளனர். அதுவரை சிறுமி கெல்லீசில் உள்ள மகளிர் காப்பகத்திலும், சிறுவன் ராயபுரம் சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும் ஒப்படைக்கப்பட்டனர்.

கோக்கோகோலா, பிட்ஸா, கென்டக்கிசிக்கன், குடி, கூத்து, இனசுற்றுலா: இன்றைய பள்ளி-கல்லூரி மாணவ-மாணவிகளில் பார்பமுலாவே இப்படித்தான் இருக்கிறது. இதற்கு செல்போன், பேஸ்புக் முதலியவை இடையில் தூபம் போட்டுக் கொண்டிருக்கின்றன[3]. போதாகுறைக்கு, ஆபாசமான செக்ஸ் ஜோக்குகள், சினிமா தொகுப்புகள், வீடியோக்கள், சிடி-விற்பனை, புழக்கம் முதலியவை. பெற்றோர்கள் கஷ்டப்பட்டு, சம்பாதித்து, தங்களது மகள்-மகன்களை படிக்க வைத்தால், கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல், அவர்கள் இப்படி கெட்டு சீரழிகிறார்கள். பெரியவர்களுக்கு மதிப்பு, மரியாதை கொடுக்கக் கூடாது என்று ஊடகங்கள் மூலம், தொடர்ச்சியாக பிரச்சாரம் செய்யப்படுவது தான் இதற்கு காரணம். பெற்றோர்கள் கஷ்டப்பட்டு, சம்பாதித்து, படிக்க வைக்கின்றனர் என்றால், அது அவர்கள் கடமை, எங்களது லட்சியம் ஜாலியாக இருக்க வேண்டும், என்றுதான், சிலர் மற்றவர்களை கெடுக்கிறார்கள்.
- கடந்த பிப்ரவரியில் கூட (2013), இதே மாதிரி, ராஜேஸ் என்பவன் தூத்துக்குடியைச் சேர்ந்த 15 வயது பெண்ணை ஜாலியாக இருக்க காரில் கன்னியாக்குமரிக்கு அழைத்து சென்றான். போகும் வழியில், அவனது நண்பர்கள் என்று இருவர் ஏறிக்கொண்டனர். பிறகு, கன்னியாக்குமரி லாட்ஜில் தூக்கமருந்து கொடுத்து, மூவரும் கற்பழித்துள்ளனர். பிறகு, கேரளாவில் கொத்தார்கரா என்ற இடத்தில் விட்டுவிட்டு மறைந்து விட்டனர்[4]. உதாரணத்திற்கு இது கொடுக்கப்படுகிறது.
- பிரியானி சாப்பிட விட்டை விட்டு ஓடிய மாணவிகள்[5].
- காதலிக்கிறேன் என்று சொல்லி நண்பர்களுடன் போதை மருந்து கொடுத்து கற்பழித்த மாணவர்கள்[6].
- மாணவியை ஆபாச வீடியோ எடுத்த மாணவர்கள்[7].
இப்படி தொடற்கின்றன.
மற்ற சிலஉதாரணங்கள்: நான் பல இடுகைகளை இப்பிரச்சினைப் பற்றி கீழ்கண்ட இடுககளில் அலசியுள்ளேன்:
- சினிமாவின் ஆபாசத்தால் தூண்டுதலால் பள்ளிப் பெண்களே காமத்தில் சீரழியும் போக்கு உண்டாகியுள்ளது[8].
- பள்ளிகளில் ஆசிரியர்களே மாணவிகளை கற்பழிப்பதை பார்த்துக் கொண்டு இருக்கமுடியாது[9].
- சகமாணவன் மாணவியை ஆபாசவீடியோ எடுக்கும் அளவிற்கு தமிழகம் உள்ளது[10].
- உயிருக்கு உயிரான தோழியை கற்பழித்த தோழர்கள்[11].
- சிறுமிகளிடம் ஆபாசப்படம் காட்டி சில்மிஷம்[12].
- நான்கு வயது பெண்ணையும் கற்பழிக்கும் கயவர்கள் தமிழகத்திலேயே இருக்கிறார்கள்[13].
பெற்றோர்களின் கவனிப்பு, கண்காணிப்பு, அக்கறை முதலியவை அவசியம் தேவையாகிறது. சினிமாக்காரர்கள் தங்களது சீரழிப்புகளை தங்களோடு வைத்துக் கொள்ள வேண்டும். ஊடகங்களும் விளம்பர விபச்சாரத்தை செய்வது நிறுத்தப் பட வேண்டும். மேலாக சிறுவர்-சிறுமியர், மாணவ-மாணவியர் முதலியோர் நிச்சயமாக தாங்கள் சுத்தமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். இதைத்தான் முன்னர் “பிரமச்சரியம்” என்றார்கள். ஆனால், நாத்திகப் போர்வையில் அவையெல்லாம் கடந்த 60-100 ஆண்டுகளாக ஏளனம் செய்யப்பட்டதால் வெறித்தொதுக்கப் பட்டன. இப்பொழுது, அமெரிக்க சீரழிவுகள் நாகரிகத்தின் போர்வையில் நுழைந்து விட்டுள்ளமையால், கட்டுக் கடங்காத நிலை வந்துள்ளது. இந்தியர்கள் எதிர்த்துதான் ஆகவேண்டும். இந்த கலாச்சார ஊழலை அழிக்க வேண்டும்.
வேதபிரகாஷ்
© 13-01-2014
[2] மாலைமலர், 15 வயது சிறுவனுடன் சென்னை சிறுமி ஓட்டம்: 4 மாத கர்ப்பிணியாக விழுப்புரத்தில் மீட்பு , பதிவு செய்த நாள் : ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 3:08 PM IST
குறிச்சொற்கள்:அச்சம், அம்மணம், ஆரிய-திராவிட மாயைகள், இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள், ஐங்குணங்கள், கணவன்-மனைவி உறவு முறை, கற்பு, கலாச்சாரம், காமம், சமூகச் சீரழிவுகள், தமிழச்சி, தமிழச்சிகளின் கற்பு, தமிழ் பெண்ணியம், பெண்களின் ஐங்குணங்கள், பெண்கள் கவனமாக இருக்கவேண்டிய அவசியம்
18 வயது நிரம்பாத பெண், அசிங்கம், அச்சம், அடக்கம், அடங்கி நடப்பது, அலங்கோலம், ஆபாச படம், உடலின்பம், உடலுறவு, உடல், ஊடக செக்ஸ், கன்னி, கன்னித்தன்மை, கரு, கருக்கலைப்பு, கர்ப்பம், கற்பு, காதலி, காதல், கூடா உறவு, கூடா ஒழுக்கம், கூடா நட்பு, சமூகக் குரூரம், சமூகக்குரூரம், சமூகச் சீரழிவுகள், சமூகம், சமூகவியல், சிற்றின்பம், சீர்மை, சுத்தம், சுய அறிவு, தமிழகப்பெண்கள், தமிழச்சி, தமிழன், தவறுகளைத் திருத்திக் கொள்ளத் தயக்கம், திராவிட மாயை, திராவிடப்பெண், பெண்களின் ஐங்குணங்கள், மனத்தைக் கட்டுப் படுத்தல், மனம், மாணவி-மாணவியர் சேர்ந்து செல்லும் சுற்றுலா, மாணவிகள், மாணவியர், மாணவியிடம் சில்மிஷம், வக்கிரம் இல் பதிவிடப்பட்டது | 1 Comment »
மார்ச்30, 2013
செக்ஸ் வைத்துக் கொள்ள சரியான வயது 16 தான் இருப்பினும் 18 என்று முடிவு செய்யப்பட்டது – சொல்வது ஷிண்டே
“எய்ட்ஸ் தடுப்பு” பிரச்சாரத்திற்குப் பிறகு செக்ஸ் பற்றி வெளிப்படையாக பேசுவது, விவாதிப்பது: சம்மதத்துடன் செக்ஸ், இணக்கத்துடன் செக்ஸ், ஒப்புதலுடன் செக்ஸ், மனம் விரும்பி செக்ஸ் என்றேல்லாம் நாடெல்லாம் வெலிப்படையாக பேசி விவாதங்களும் நடத்தப் பட்டு வருகின்றன. முன்பு, “எய்ட்ஸ் தடுப்பு” பிரச்சாரப் போர்வையில் எப்படி ஜாக்கிரதையான, பாதுகாப்பான, “எய்ட்ஸ்” வராமல் செக்ஸ் வைத்துக் கொள்ள என்னென்ன செய்யவேண்டும் என்று அதிகமாகவே பிரச்சாரம் செய்யப்பட்டது. கோடிகள் செலவழிக்கப்பட்டு, பள்ளிகள், கல்லூரிகள், அலுவலங்கள் என்று பல பொது இடங்களில் “எய்ட்ஸ் தடுப்பு” பிரச்சார பண்டிதர்கள் வந்து கொடுத்து, விவரித்து செயல்முறை விளக்கங்களையும் செய்து காண்பித்தார்கள். இப்பொழுதும் அதே முறையிலான போக்கைக் காணும் போது, ஏதோ அதிகமாக செயல்படுகிறாற்களா என்பது போலத் தெரிகிறது.
நேரிய, ஒழுக்கமான, சரியான ஆலோசனைகள், விளக்கங்கள் கொடுக்கப்படாமல், எதிர்மறையான விளக்கங்கள் கொடுத்து, செய்யக்கூடாததை, எப்படி செய்ய வேண்டும் என்று ஊக்குவிப்பது:
- மனைவியைத் தவிர மற்ற பெண்களுடன், விபச்சாரிகளுடன் உடலுறவுக் கொள்ளக்கூடாது,
- அவ்வாறு செய்வது பெண்களுக்கு இழக்கப்படும் அநீதி, அதர்மம் ஆகும்.
- தாம்பத்திய உறவை புனிதமாகக் கருத வேண்டும்,
- மனைவிக்கு துரோகம் செய்யக் கூடாது,
- பெண்களை விபச்சாரத்தில் தள்ளக்கூடாது
- விபச்சாரத்தை ஊக்குவிக்கக்கூடாது.
- நீ மற்ற பெண்களுடன் அவ்வாறான செயலில் ஈடுமட்டால், மற்றவர்களும், உன் பெண்களுடன் அவ்வாறான செயல்களில் ஈடுபடலாம்.
- பெண்மையைப் போற்று
- தாய்மையைப் போற்று.
என்பது போன்ற நேரிய, ஒழுக்கமான, சரியான ஆலோசனைகள், விளக்கங்கள் கொடுக்கப்படாமல், எதிர்மறையான விளக்கங்கள் கொடுத்து, செய்யக் கூடாததை, எப்படி செய்யவேண்டும் என்பதை தெரியாதவர்கள் கூட தெரிந்து கொள்ளும் வகையில் அசிங்கமான கூத்து நடந்தேறியது. அதேபோல இப்பொழுதும் நடந்து வருவது நோக்கத்தக்கது.
கற்பழிப்பில் சிறுவர்களைச் சிக்க வைப்பது எப்படி: தில்லி கற்பழிப்பிற்கு பிறகு, சிறுவம் கற்பழித்தால் அது குற்றமா இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில் அதில் அகப்பட்ட ஒருவன் 18 வயதிற்கும் கீழாக இருந்தான். அப்பொழுது ஒரு ஆணை அக்குற்றத்தில் சிக்கவைக்க வேண்டுமானால், செக்ஸ் வைத்துக் கொள்ள உகந்த வயது என்ன என்ற விவாதம் வந்தது, உடனே சிறுவர்களையும் சட்டத்தின் பிடியில் சிக்கவேண்டுனமானால், வயது வரம்பைக் குறைத்துதான் ஆக வேண்டும் என்ற நிலையில் 16-18 என்று பரிந்துரைக்க ஆரம்பித்தார்கள்.
செக்ஸ் வயது 16ஆ அல்லது 18ஆ: ஜே. எஸ். வர்மா அறிக்கையில் வயது 16 என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஷிண்டே 18 என்று கூறியிருந்தார். அதன்படியே 16 வயது என்று பேசப்பட்டாலும், வரப்போகின்ற சட்டத்தில் 18 என்றுதான் உள்ளது. ஆனால் சுஷில்குமார் ஷிண்டே வயது 16 என்று வாதிட்டார்[1]. இக்கருத்தை போலீஸ்துறை சீரமைப்புப் பற்றிய மாநாட்டில் தெரிவித்தார்[2]. உடனே அதற்கு அவரது பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் கிருஷ்ணா தீத் என்பவரே எதிர்ப்புத் தெரிவித்தார்[3]. அப்பொழுது, செக்ஸ் வைத்துக் கொள்ள சரியான வயது 16 தான் – சொல்வது ஷிண்டே என்று கூறியது மட்டுமல்லாது அதற்கான ஆதாரம் 1860ல் உண்டாக்கிய இந்திய குற்றவியல் சட்டத்திலேயே இருப்பயதாக எடுத்துக் காட்டினார்[4].
அனைத்துக் கட்சி கூட்டத்தின் விவாதம்: அனைத்துக் கட்சிக் கூட்டம் தோல்வி இதற்கிடையே, பாலியல் வன்கொடுமைத் தடுப்புச் சட்ட மசோதா குறித்து விவாதிக்க இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தின்போது 18 வயதிலிருந்து 16 வயதாக குறைப்பதற்கு பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் கடுமையாக எதிர்த்தன. அரசுத் தரப்பிலோ மசோதாவை நிறைவேற்றுவதில் உறுதியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் முரண்பாடுகளும், முட்டல் மோதல்களும் ஏற்பட்டன.
முல்லாயம் சிங் யாதவ் எதிர்ப்பு: சமாஜ்வாடிக் கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் கருத்து தெரிவிக்கையில், வயதைக் குறைப்பதால் ஆபாசமும், அவமானங்களும்தான் அதிகரிக்கும். குற்றச் செயல்கள் பலமடங்கு அதிகரிக்கும். இதை தவறாக பயன்படுத்தும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றார். மேலும் ஆண்களுக்கு எதிராக சட்டத்தைத் தவறாக பயன்படுத்தும் வாய்ப்புகளும் அதிகரிக்கும் என்றார். இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்குப் பின்னர் மீண்டும் ஒரு கூட்டம் நடத்தபப்ட்டது. அதில் சில திருத்தங்களுக்கு மத்திய அரசு உடன்பட்டது[5].
கம்யூனிஸ்டு கட்சி எதிர்ப்பு: இணக்கத்துடன் கூடிய செக்ஸ் உறவு வயதை, 18லிருந்து, 16 ஆக குறைக்கும், புதிய சட்ட திருத்தத்திற்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது[6]. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு நிறைவு நாள் கூட்டம், டில்லியில் நேற்று நடைபெற்றது. இதில், பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்திற்கு பிறகு, கட்சியின் பொது செயலர் சுதாகர் ரெட்டி, நிருபர்களிடம் கூறியதாவது: “இணக்கத்துடன் கூடிய உடலுறவுக்கான வயதை, 18லிருந்து, 16 ஆக குறைத்ததில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. இதனால், ஏற்படும் பிற விளைவுகளை எண்ணிப் பார்க்க வேண்டும். இதனால், குழந்தை திருமணம் போன்ற விரும்பத் தகாத விபரீதங்கள் ஏற்படும், “ இவ்வாறு சுதாகர் ரெட்டி கூறினார். இதில் வேடிக்கை என்னவென்றால், கம்யூனிஸ்டுகளைப் பொறுத்தவரைக்கும் சித்தாந்ந்த ரீதியில் அவர்கள் இப்படி சொல்வதே போலித்தனமாகும். ஏனெனில் அவர்களுக்கு கற்பைப் பற்றிய அவசியமே இல்லை.
சத்தீஸ்கர் முதல்வர் ராமன் சிங் பிரதமருக்கு எழுதிய கடிதம்: இதற்கிடையே, சத்தீஸ்கர் முதல்வர் ராமன் சிங், இந்த விவகாரம் தொடர்பாக, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: “மத்திய அரசின் இந்த முடிவு, மேற்கத்திய கலாசாரத்தை இளைஞர்கள் மத்தியில் ஏற்படுத்தும். கிராமப் பகுதிகளில் வசிக்கும் சிறுமியர் இதனால் பாதிக்கப்படுவர். அத்துடன், கற்பழிப்பு மற்றும் தேவையற்ற கர்ப்பங்கள், கருக்கலைப்புகள் ஆகியவை அதிகரிக்கும் அபாயம் உள்ளது. தவறான பாலியல் குற்றங்களைத் தடுக்க, பள்ளிகளில் செக்ஸ் கல்வியை அறிமுகப்படுத்துவது தான் சிறந்தது”, இவ்வாறு அவர், தெரிவித்துள்ளார்[7].
சில உதாரணங்கள்: நான் பல இடுகைகளை இப்பிரச்சினைப் பற்றி கீழ்கண்ட இடுககளில் அலசியுள்ளேன்:
- சினிமாவின் ஆபாசத்தால் தூண்டுதலால் பள்ளிப் பெண்களே காமத்தில் சீரழியும் போக்கு உண்டாகியுள்ளது[8].
- பள்ளிகளில் ஆசிரியர்களே மாணவிகளை கற்பழிப்பதை பார்த்துக் கொண்டு இருக்கமுடியாது[9].
- சகமாணவன் மாணவியை ஆபாசவீடியோ எடுக்கும் அளவிற்கு தமிழகம் உள்ளது[10].
- உயிருக்கு உயிரான தோழியை கற்பழித்த தோழர்கள்[11].
- சிறுமிகளிடம் ஆபாசப்படம் காட்டி சில்மிஷம்[12].
- நான்கு வயது பெண்ணையும் கற்பழிக்கும் கயவர்கள் தமிழகத்திலேயே இருக்கிறார்கள்[13].
- சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த் கிழவருக்கே தண்டனை கொடுத்துள்ளபோது, சிறுவனுக்கு ஏன் தண்டனை கொடுக்க முடியாது[14].
- இந்தியக்கற்பழிப்பில் வாடிகன் அக்கறைக் கொள்வதும் ஏமாற்றுவேலையாக இருக்கிறது[15]. ஏனெனில், போப்பே இவ்விஷயத்தில் ஒன்றும் செய்யமுடியாமல் இருக்கும் போழுது, நமக்கு அறிவுரை கூற அவருக்கு, அந்த கூட்டத்தாருக்கு அருகதையில்லை.
என்ன செய்ய வேண்டும்: இதையெல்லாம் பெண்ணைப் பெற்றவர்கள் பார்த்துக் கொண்டு சும்மாயிருக்க முடியாது. வயது வந்துவிட்டதால் அவர்கள் சட்டப்படி என்னவேண்டுமானாலும் செய்யலாம் என்று பெற்றோரோ சமூதாயமோ ஊக்குவிக்க முடியாது. கடந்த 60-100 ஆண்டுகளில் திராவிட சித்தாந்தத்தால், சமூகத்தில் ஏற்பட்டுள்ள சீரழவுகளை பாரபட்சமின்று ஆராய்ந்து, அதனால் விளைந்துள்ள தீமைகளை களைய வேண்டியுள்ளது.
- தாலியறுப்பு விழா கொண்டாடி பெண்மையை உயர்த்த முடியாது.
- ஆபாசத் தமிழில் பாட்டெழுதி கற்ப்பைக் காப்பாற்ற முடியாது.
- குஷ்பு போன்றோர் அறிவுரை கொடுத்து தமிழ் பெண்கள் மேன்மை அடைய முடியாது.
ஆகவே நற்பண்புகளை, ஒழுக்கத்தை, நன்னடத்தையை, பெற்றோர்களை மதிக்கும் குணத்தை, பெரியவர்களுக்கு மரியாதை கொடுக்கும் முறையை போதிக்க வேண்டும். இதுதான் மாற்று மருந்தே ஒழிய வெற்று விவாதங்களும், ஊடகப் பிரச்சாரங்களும் வீண்தான். பொழுது போக்க உபயோகமாக இருக்கும்.
© வேதபிரகாஷ்
30-03-2013
[3] She had claimed that lowering the age of consent was contrary to the Protection of Children from Sexual Offences (POCSO) Act, which made sex with those under 18 a criminal offence. The POCSO Act was cleared by Parliament in May 2012, marking the age of consent for sex to 18 years. The anti-rape ordinance also included the same provisions despite the Justice JS Verma Committee’s recommendation to keep the age of consent at 16 years.
[4] Days after Parliament cleared the Criminal Law (Amendment) Bill, 2013, Union Home Minister Sushilkumar Shinde on Tuesday defended his initial proposal to peg the age of consent for sex at 16 years, citing the 153-year-old Indian Penal Code.“The consent age of 16 years was incorporated in the IPC in 1860. No one had looked into it but when my ordinance came for correcting this…whole Parliament was against it. But I brought it to the notice (that) this law was in existence but we have not realised that it was in existence,” Shinde said.
http://newindianexpress.com/nation/article1518718.ece
குறிச்சொற்கள்:அச்சம், இணக்கத்துடன் செக்ஸ், இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள், எய்ட்ஸ், ஐங்குணங்கள், ஒப்புதலுடன் செக்ஸ், ஒழுக்கம், கட்டுப்பாடு, கணவன்-மனைவி உறவு முறை, கற்பு, கலாச்சாரம், கல்லூரி மாணவிகள், களவு, காமம், குற்றம், குழந்தை, குஷ்பு, சட்டம், சமூகச் சீரழிவுகள், சம்மதத்துடன் செக்ஸ், தடுப்பு, தமிழகம் படும் பாடு, தமிழச்சி, தமிழச்சிகளின் கற்பு, தமிழ் கலாச்சாரம், தமிழ் பண்பாடு, தமிழ் பெண்ணியம், தமிழ்பெண்களின் கலாச்சாரம், தாய், திருமணத்துக்கு முன்பாக பாலுறவு, நடிகைகளின் கற்பு, நாணம், நியாயம், நீதி, பயிர்ப்பு, பாரம்பரியம், பாலுறவு, பிரச்சாரம், பெண்களின் உரிமைகள், பெண்களின் ஐங்குணங்கள், பெரியாரிய நிர்வாணம், பெற்றோர், மனம் விரும்பி செக்ஸ், மாணவிகள்
இணக்கத்துடன் செக்ஸ், இறுதி, உடலின்பம், ஒப்புதலுடன் உடலுறவு, ஒப்புதலுடன் செக்ஸ், கலவி, காமப் உணர்ச்சி, கொக்கோகம், சம்மதத்துடன் உலலுறவு, சம்மதத்துடன் செக்ஸ், புணர்ச்சி, மனம் விரும்பி உடலுறவு, மனம் விரும்பி செக்ஸ் இல் பதிவிடப்பட்டது | 2 Comments »
மார்ச்21, 2013
மலாலா பிரித்தானியப் பள்ளிக்குச் செல்வது என்ன பிரமாதமான விஷயமா? மலாலா பிரித்தானியப்பள்ளிக்குச் செல்வது என்ன பிரமாதமான விஷயமா?: மலாலா மறுபடியும் பள்ளிக்க்குச் செல்ல ஆரம்பித்து விட்டாள், என்று ஆங்கிலேய ஊடகங்கள் ஓலமிட[1], அதனை இந்திய ஆங்கில ஊடகங்களே வடிக்கட்டி அமுக்கி வாசித்துள்ள போது, தமிழ் ஊடலங்கள் ஏதோ இந்த செய்தியையும் போடலாமே என்று போட்டிருக்கிறார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால் “இன்டிபென்டென்ட்” என்ற ஆங்கிலேய நாளிதழில் வந்ததை அப்படியே “தி ஹிந்து” போட்டிருக்கிறது. ஆமாம், வழக்கம் போல ஏகப்பட்ட விஷயங்களை மறைத்திருக்கிறார்கள்.
தலிபான்கள் மட்டுமல்ல, ஆங்கிலேயர்களும் பெண்களை பள்ளிக்கு அனுப்பாமல்தான் தடுத்திருக்கிறார்கள்: இதுதான் உண்மை. பெண்களை அடக்கி வைத்திருப்பதில், இஸ்லாம் மட்டுமல்ல கிருத்துவமும் பெருத்த பங்கு வகித்துள்ளது. ஆனால், இந்தியாவில் பள்ளிகள் மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வந்துள்ளது. அவற்றிலும் பெண்களும் படித்துள்ளார்கள். பள்ளிகள் மட்டுமல்ல, பல்கலைக்கழகங்களும் இருந்து வந்துள்ளன. தர்மபால் என்பவர், மிகவும் அற்புதமாக விவரங்களை “அழகான மரம்” என்ற தலைப்பில், இந்திய கல்வி பற்றி புத்தகத்தை எழுதியுள்ளார். ஆனால், இவர்கள் தாம், இந்தியர்களை குறைகூறி வருகிறார்கள். விஷயம் தெரியாத, சரித்திரம் அறியாத இக்கால மேனாட்டு அடிவருடிகளும், அப்பொய்யை உண்மையாக பேசி-எழுதி வருகின்றனர்.
தலிபான்களால் ஏன் பெண்கள் படிப்புத் தடுக்கப் பட்டது?: தலிபான்களால் சுடப்பட்ட, பாகிஸ்தான் சிறுமி மலாலா, பிரிட்டனில் உள்ள பள்ளியில், தன் படிப்பை தொடர்கிறாள். மிகவும் அருமை, ஆனால், மற்ற சிறுமிகளின் கதி என்ன? அவர்களை யார் படிக்க வைப்பார்கள்? ஆப்கானிஸ்தானில் மட்டுமல்லாது, மற்ற இஸ்லாமிய நாடுகளில் ஏன் சிறுமிகள் இவ்வாறான நிலையில் இருக்க வேண்டும். “இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்றால், வட இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் ஏன்”, என்று பகுத்தறிவுவாதிகள் கேள்விகள் கேட்பது உண்டு. இஸ்லாம் பெண்களுக்கு மற்ர எல்லா மதங்களையும் விட மிக அதிகமாக சுதந்திரம், உரிமை எல்லாமே கொடுக்கிறது என்றால், ஏன் இப்படியான நிலை உருவாக்க வேண்டும்? பெண்கள் கல்வி உரிமை குறித்து இணையதளத்தில் எழுதியதால், கடந்த ஆண்டு, தலிபான்களால் சுடப்பட்ட, பாகிஸ்தான் பள்ளி மாணவி, மலாலா யூசுப், 15, சிகிச்சைக்காக, பிரிட்டனில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள். அங்கு, தலை மற்றும் முகத்தில் ஏற்பட்ட காயங்களுக்காக, அவருக்கு சிசிச்சையளிக்கப்பட்டது. உடல் நலம் தேறிய மலாலா, கடந்த மாதம் “டிஸ்சார்ஜ்’ ஆனாள். தற்போது, பிரிட்டனின், பர்மிங்ஹாம் நகரில் உள்ள “எட்க்பாஸ்டன்’ பெண்கள் உயர்நிலைப்பள்ளியில்[2]‘, சேர்க்கப்பட்டுள்ளாள்[3].
மலாலா பெருமையாகச் சொல்லிக் கொண்டது[4]: “நான் மறுபடியும் பள்ளிக்கு செல்லவேண்டும் என்ற கனவு பூர்த்தியானது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன். உலகிலுள்ள எல்லா சிறுமிகளும் இந்த அடிப்படை சந்தர்ப்பத்தை அடைய வேண்டும் என்று விரும்புகிறேன். மக்களின் நம்பிக்கையால், நான் இப்பொழுது நடக்க முடிகிறது – என்னால் இப்பொழுது ஓடவும் முடியும். பாகிஸ்தானில் உள்ள தோழிகளை பிரிந்தாலும், பிரிட்டனில் புதிய தோழிகள் கிடைப்பர் என நம்புகிறேன்,” என, அவர் தெரிவித்துள்ளாள். பிரிட்டனில் புதிய தோழிகள் கிடைக்கலாம், ஆனால், பாகிஸ்தானில் வாடும் தோழிகளையும் அவள் நினைவில் வைத்திருப்பாள் என்று நம்பலாம். பிரிட்டன் பள்ளியில், மலாலா கல்வியை தொடர்வது குறித்து, முன்னாள் பிரதமரும், ஐ.நா., கல்வி பிரிவின் தூதருமான, கார்டன் பிரவுன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்[5].
இங்கிலாந்தில் பள்ளிகள் ஆரம்பிக்கப்பட்ட கதையே வேறுவிதமாக இருக்கிறது: 1876ல் துவங்கப்பட்ட இப்பள்ளிதான் பிர்மிங்ஹாமில் உள்ள பெண்களுக்கான பள்ளியாம்[6]. அப்படியென்றால், அதற்கு முன்பாக ஏன் சிறுமிகளுக்கு / பெண்களுக்கு தனியான பள்ளி இல்லை என்ற கேள்வி எழுகிறதே? ஆமாம், ஜூலை 1757ல் பள்ளி இயக்கம் ஆரம்பித்தபோது, சேரிகளில் இருந்த பைன்கள் தாம் படிக்க வந்தார்களாம். அதுவும் “ஞாயிற்றுக் கிழமைப் பள்ளி” என்பதில் பைபிள் தான் பாடப்புத்தகமாம். 19ம் நூற்றாண்டிற்கு முன்பு மிகக்குறைந்த பள்ளிக்கூடங்களே இங்கிலாந்தில் இருந்தனவாம். அதுவும் பெரும்பாலும் கிருத்துவமத போதனைப் பள்லிகளாக இருந்தனவாம். 1814ம் வருடம் தாம் அத்தகைய முறை குறைக்கப்பட்டது. 1931ல் கூட 12,50,000 பிள்ளைகள் “ஞாயிற்றுக் கிழமைப் பள்ளி”களில் படித்து வந்தனர். இவர்கள் ஜனத்தொகையில் 25% ஆகும், அதாவது 75% பிரித்தானியர்கள் படிப்பறிவு இல்லாதவர்களாக இருந்தனர்! 1820ல் தான் சாமுவேல் ஒயில்ட்ஸ்பின் என்பவர் சிறார்பள்ளியை முதலில் ஆரம்பித்தார். இதுதான் ஆங்கில பள்ளியின் முன்னோடி என்றும் சொல்லப்படுகிறது. 1833ல் பாராளுமன்றத்தில் நிதியுதிக்கீடு செய்யப்பட்டு, 1837ல் பொதுப்படிப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டது. 1848ல் முதல் “குவீன்ஸ் காலேஜ்” என்ற பெண்கள் கல்லூரி லண்டனில் ஆரம்பிக்கப்பட்டது.
© வேதபிரகாஷ்
21-03-2013
[3] The 15-year-old began her first day at Edgbaston High School in Birmingham yesterday – the city’s oldest independent school for girls – where she will study the full curriculum before selecting her GCSE options next year.
[6] Founded in 1876, Edgbaston High School is Birmingham’s oldest independent school for girls.
குறிச்சொற்கள்:அச்சம், ஆரிய-திராவிட மாயைகள், உண்மை, ஐங்குணங்கள், ஒழுக்கம், கடமை, கட்டுப்பாடு, கணவன்-மனைவி உறவு முறை, கண்ணியம், கற்பு, கலாச்சாரம், கல்லூரி, கல்லூரி மாணவிகள், குரான், குழந்தை, சமத்துவம், சமம், சரித்திரம், சிறுமி, சுதந்திரம், ஞானம், தமிழச்சி, தூய்மை, படிப்பு, பண்பாடு, பயிர்ப்பு, பள்ளி, பாரம்பரியம், பெண், பெண் கல்வி, பெண்களின் உரிமைகள், பெண்களின் ஐங்குணங்கள், பெண்கள், பெண்ணியம், பைபிள், மலாலா, ளுரிமை, வேதம்
ஆன்மீகம், இச்சை, இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள், இந்தியவியல், ஐங்குணங்கள், கலாச்சாரம், கல்லூரி, கல்வி, குரான், குற்றம், சிறார், தண்டனை, தமிழகப்பெண்கள், திராவிடசேய், திராவிடத்தாய், திராவிடநாடு, திராவிடப்பெண், திராவிடம், படிப்பு, பள்ளி மாணவிகள் மாயம், பாலியல், பிராமண, பிராமணன், பிராமணர், பெண் கல்வி, மழலை இல் பதிவிடப்பட்டது | 6 Comments »
மார்ச்20, 2013
திருமணத்துக்கு முன் செக்ஸ் வைத்துக் கொள்வதில் தவறில்லை என்று சொன்ன செக்ஸ் எக்ஸ்ப்ர்ட் இப்பொழுது சொல்வது – 18 வயதில் இருந்தே அனைத்தும் துவங்க வேண்டும்!

சென்னையில் கற்பழிப்பு எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்ட ஒரு பெண்மணி – “இது கற்பழிப்பிற்காக அல்ல” என்பதனை மார்பிலும் வயிற்றிலும் பார்த்து படிக்க வேண்டுமாறு இருக்கமான டி-சர்ட் அணிந்து வந்ததாக “தி ஹிந்து” படத்தை வெளியிட்டுள்ளது.
- இப்படி அம்மணிகள் தமிழகத்தில் உலா வரலாமா?
- அடலேறும் மடலேறுகள் என்ன செய்வார்கள்?
- இல்லை, அன்று “கண்ணில் ஆடும் மாங்கனி, கையில் ஆடுமோ” என்று தமிழ் கவிஞர் பாடியதை போல பாடி காட்டுவரோ,
- பாடி கேட்பரோ,
- இல்லை பறித்தே விடுவரோ?
செக்ஸ்-எக்ஸ்பர்ட் குஷ்பு சொல்வது: செக்ஸில் திறமைசாலியாகி பண்டிதையாகி வரும் குஷ்பு, பல நேரங்களில் பலவிதமான வெளிப்படையான, பரந்த, விசாலமான, ஆழ்ந்த கருத்துகளைச் சொல்லிவருகிறார். ஏனெனில், அவருக்கு அவ்வாறு கூற உரிமை உண்டு, கருத்து சுதந்திரம் உண்ரடு! பெண்ணியத்தின் மறு அவதாரமாக, இந்த பெண்மணி பல கருத்துக்களை சொல்லி வருகிறார்.
- திருமணத்திற்கு முன்பாக செக்ஸ் வைத்துக் கொள்ளலாம் என்றேல்லாம் கூறியிருக்கிறார்.
- இப்பொழுது, செக்ஸுக்கான வயதை 18ல் இருந்து 16க குறைப்பதால் கற்பழிப்பு குற்றங்கள் குறையும் என்று எப்படி நினைக்க முடியும்.
- அது தவறானது. அது கற்பழிப்பு குற்றங்கள் குறைக்க வழி வகை செய்யாது. இந்தியாவில் வயது வித்தியாசம் இன்றி கற்பழிப்பு சம்பவங்கள் நடக்கின்றன. நாட்டில் எங்கோ உள்ள ஒரு மூலையில் 45 வயது பெண் கூட கற்பழிக்கப்படுகிறாள்[1].
- வயதை கூட்டுவதாலோ, குறைப்பதாலோ எந்த வித்தியாசமும் ஏற்படாது.
- ஒருவருக்கு வாக்களிக்கும் வயது 18க உள்ளது.
- அதனால் அந்த வயதில் இருந்தே அனைத்தும் துவங்க வேண்டும் என்றார்[2].
இதுதான் அந்த அம்மாவின் “லாஜிக்”. ஓட்டுப்போடும் வயது வந்தால், எல்லாமே வந்து விடுமா?

சென்னை பப்பில் பெண்கள் – என்று வெளியிடப்பட்டுள்ள புகைப்படம்.
இனி கற்பு பற்றி என் மனதுக்கு பட்டதை சுதந்திரமாக பேச முடியும்: 2010ல் தீர்ப்பு வந்த உடனே, “இனி கற்பு பற்றி என் மனதுக்கு பட்டதை சுதந்திரமாக பேசுவேன்”, என்று நடிகை குஷ்பு கூறியுள்ளார்[3]. கடந்த 2005ம் ஆண்டு நடிகை குஷ்பு வார இதழ் (இந்தியா டுடே செப்டம்பர் 2005) ஒன்றிற்கு அளித்த பேட்டியில், திருமணத்துக்கு முன் செக்ஸ் வைத்துக் கொள்வதில் தவறில்லை. அப்படி வைத்துக் கொள்ளும்போது கர்ப்பமாகாமலும், பால்வினை நோய்கள் பரவி விடாமலும் பெண் தன்னை பாதுகாத்துக் கொள்ள வேண்டும், என்று குறிப்பிட்டிருந்தார்[4]. குஷ்புவின் இந்த பேட்டி தமிழ் கலாச்சாரத்திற்கு விரோதமானது என எதிர்ப்பு கிளம்பியது. ஆனால், தமிழ் நடிகைகள் அரை நிர்வாணமாக நடிப்பதைப் பற்றி யாரும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. ஸ்ரேயாவே, மேடையில் கருணாநிதிக்கு முன்பாக, அரை நிர்வாண ஆடையில் வந்ததில்லாமல், கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து, பெண்மையைத் தூக்கிப் பிடித்தார்.

எதிராஜ் கல்லூரியில் வியாபார விளம்பர நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண்மணிகள்.
பொத்துக் கொண்டு வந்த தமிழர்கள் வழக்குப் போட்டார்கள்[5]: தமிழகம் முழுவதும் குஷ்புவுக்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டன. அவற்றை ரத்து செய்யக்கோரி குஷ்பு தரப்பு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு சுப்ரீம்கோர்ட்டில் நடந்து வருகிறது. சமீபத்தில் இவ்வழக்கு விசாரணை முடிவில் கருத்து தெரிவித்த சுப்ரீம் கோர்ட், குஷ்பு பேசியதில் தவறே இல்லை. மேஜர் ஆன ஆணும் பெண்ணும் விருப்பம் இருந்தால் செக்ஸ் வைத்துக் கொள்ளலாம், என்று கூறியிருந்தது.
Even in the societal mainstream, there are a significant number of people who see nothing wrong in engaging in premarital sex. Notions of social morality are inherently subjective and the criminal law cannot be used as a means to unduly interfere with the domain of personal autonomy. Morality and Criminality are not co-extensive[6]. |
சுப்ரீம் கோர்ட்டின் இந்த கருத்துக்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில் நீதிபதிகளின் இந்த கருத்து பற்றி நடிகை குஷ்பு பேட்டியளித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், இனி கற்பு பற்றி என் மனதுக்கு பட்டதை சுதந்திரமாக பேச முடியும் என நினைக்கிறேன். நமது நாட்டில் பேச்சு சுதந்திரம் இன்னும் வலுவாக இருப்பதாகவே கருதுகிறேன். மேலும் நான் இந்த அளவுக்கு போராட காரணமே, எனது மகள்களுக்கு நான் மனஉறுதி கொண்டவள், அதற்காக நீங்கள் பெருமைப்பட வேண்டும் என்பதை காட்டுவதற்காகத்தான், என்று கூறியுள்ளார்.
According to me, sex is not only concerned with the body; but also concerned with the conscious. I could not understand matters such as changing boyfriends every week. When a girl is committed to her boyfriend, she can tell her parents and go out with him. When their daughter is having a serious relationship, the parents should allow the same. Our society should come out of the thinking that at the time of the marriage, the girls should be with virginity. None of the educated men, will expect that the girl whom they are marrying should be with virginity. But when having sexual relationship the girls should protect themselves from conceiving and getting venereal diseases[7]. |
மேஜர் ஆன ஆணும் பெண்ணும் விருப்பம் இருந்தால் செக்ஸ் வைத்துக் கொள்ளலாம்: குஷ்பு வழக்கில் பாலகிருஷ்ணன் (தீபக் வர்மா மற்றும் பி.எஸ். சௌஹான்) இப்படி தீர்ப்பு வழங்கினார்[8]. இப்படி சுப்ரீம் கோர்ட் கருத்து தெரிவித்தபோது, ஆண்-பெண் எப்பொழுது மேஜர் ஆவர்கள், மேஜர் ஆகும் வயது என்ன என்று யாரும் விவாதிக்கவில்லை. ஆனால், இப்பொழுது, தில்லி-ரேப்பிற்குப் பிறகு, விவாதம் வந்திருக்கிறது. இருப்பினும் இதைப்பற்றி பேச்சில்லை. தீர்ப்பில் மின்னணு ஊடகத்தைக் கண்டித்தனரேயன்றி[9], நடிகைகள் ஆபாசமாக நடிப்பதைப் பற்றி ஒன்றும் கூறவில்லை.

இவர்களும் சென்னை கல்லூரி மாணவிகள் தாம் – பேற்றோர்கள் மனம்!
18 வயதில் இருந்தே அனைத்தும் துவங்க வேண்டும்: குஷ்பு இப்படி சொன்னால், அனைத்தும் எப்படி 18 வயதிலிருந்து துவங்கும், பல பெண்களுக்கு, சிறுமிகளுக்கு, 7 முதல் 13 வரையில் கூட வயது வந்து விடுகிறதே? அதற்கென்ன செய்வது? முன்பு கூட, திருமண வயது குறித்து விவாதம் வந்தது. 25, 20 என்றெல்லாம் சொல்லி பிறகு 18ஆக குறைக்கப்பட்டது. பிறகு “வயது வந்தவர்களுக்கு மட்டும்” என்று சினிமாக்கள் ஏன் எடுக்க வேண்டும்?
- வசனங்களில், ஜோக்குகளில் அத்தகைய கட்டுப்பாடு இல்லையே?
- பப்புகளில் பள்ளி-கல்லூரி மாணவிகள் உள்ளனரே?
- மதுக்கடைகளில் அவர்களும் இருக்கின்றனரே?
- பேருந்துகளில், மாணவர்களுக்குப் போட்டியாக, கலாட்டா செய்து கொண்டு போகிறார்களே?
- சைட் அடிப்பதைப் பற்றி வெளிப்படையாக மாணவிகள் பட்டி மன்றம் என்ற போர்வையில் டிவிசெனல்களில் வந்து கத்துகிறார்களே?

சென்னை நுங்கம்பாக்கத்தில் ஒரு பப்பில் எடுக்கப்பட்ட புகைப்படமாம்.
இந்திய விரோதிகளின் சதிகள்: அந்நிய சரக்கு (ஊசி முதல் எல்லாம் அடங்கும்) விற்கவேண்டும் என்பதற்காக, இந்திய சமூக நிறுவனங்கள் எப்படி மாற்றப்படுகின்றன, இந்திய நலன்களுக்கு எதிராக உபயோகப்படுத்தப் படுகின்றன என்பதை கவனிக்கலாம். அரசியல் முதல் சினிமா வரை, குடி முதல் கூத்தாடி வரை, குத்தாட்டம் முதல் கூத்தாட்டம் வரை இப்படி அனைத்திலும் மேனாட்டு சீரழிவுகளை அறிமுகப்படுத்திக் கொண்டு, வாழும் வாழ்க்கையினை இந்தியர்கள் என்றுதான் ஒதுக்குவார்களோ?
© வேதபிரகாஷ்
20-03-2013
[4] Subsequently, `Dhina Thanthi’, a Tamil daily carried a news item on 24.9.2005 which first quoted the appellant’s statement published in `India Today’ and then opined that, “…it had created a sensation all over the State of Tamil Nadu. This news item also reported a conversation between the appellant and a correspondent from `Dhina Thanthi’, wherein the appellant had purportedly defended her views in the following manner (rough translation reproduced below): "The persons who are protesting against my interview, are talking about which culture? Is there anyone who does not know about sex in Tamil Nadu? Is there anyone who does not know about AIDS? How many men and women do not have sex before marriage? Why are people saying that after the marriage the husband and wife should be honest and faithful to each other? One should have confidence in the other, only to avoid the mistakes from being committed. If the husband, without the knowledge of the wife, or the wife, without the knowledge of the husband, have sex with other persons, if a disease is caused through that, the same will affect both the persons. It will also affect the children. Only because of this, they are saying like that”. குஷ்பு (வாதி)– கன்னியம்மாள் மற்றும் இன்னொருவர் (பிரதிவாதி) – http://indiankanoon.org/doc/1327342/
[9] It is, therefore, not only desirable but imperative that electronic and news media should also play positive role in presenting to general public as to what actually transpires during the course of the hearing and it should not be published in such a manner so as to get unnecessary publicity for its own paper or news channel. Such a tendency, which is indeed growing fast, should be stopped. We are saying so as without knowing the reference in context of which the questions were put forth by us, were completely ignored and the same were misquoted which raised unnecessary hue and cry.
குறிச்சொற்கள்:அச்சம், அம்மாள், ஆரிய-திராவிட மாயைகள், இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள், உடலுறவு, எண்ணம், ஐங்குணங்கள், கணவன்-மனைவி உறவு முறை, கண்ணகி, கன்னி, கன்னித்தன்மை, கருத்து, கற்பு, கலாச்சாரம், கல்லூரி மாணவிகள், காமம், குழந்தை, குஷ்பு, சமூகச் சீரழிவுகள், சிந்தனை, சீரழிவுகள், தமிழகம் படும் பாடு, தமிழச்சி, தமிழச்சிகளின் கற்பு, தமிழ் கலாச்சாரம், தாய், திருமணத்துக்கு முன்பாக பாலுறவு, தூண்டுதல், தூய்மை, நாணம், நிர்வாணம், பண்பாடு, பயிர்ப்பு, பாரம்பரியம், பார்வை, பாலுறவு, புனிதம், புனிதவதி, பெண்களின் உரிமைகள், பெண்களின் ஐங்குணங்கள், பெண்கள் கவனமாக இருக்கவேண்டிய அவசியம், பெண்மணி, போக்கு, மகள், மனம், மயக்கம், மாணவிகள், மாதவி, மெய்யணி, மோகம், வயது
அசிங்கமான குரூரங்கள், அச்சம், அணைத்தல், அம்மணம், அரசியல்-சினிமா-விபசாரம், அரை நிர்வாண கோலம், அலங்கோலம், அவதூறு-தூஷணம், ஆண்குறியை தொடு, ஆபாச படம், இச்சை, இந்திய குழந்தைகளை வதைக்கும் அந்நிய குற்றவாளிகள், இந்தியவியல், இருபாலர், இலக்கு, உடலுறவு, உணர்ச்சியை தூண்டி, உறவு, ஐங்குணங்கள், கட்டிப்பிடி, கணவனை இழந்த மனைவி, கணவன்-மனைவி உறவு முறை, கணவன்-மனைவி வேலை நிமித்தம் விலகி இருப்பது, கன்னி, கன்னித்தன்மை, கன்னியாஸ்திரீ செக்ஸ், கரு, கருக்கலைப்பு, கருணாநிதி, கருத்தடை, கர்ப்பம், கற்பழிப்பு, கற்பு, கற்பும், காமக் கொடூரன், காமத்தீ, காமம், காமலீலைகள், காமவெறி பிடித்த காரியம், காமுகன், குடி, குடும்பம், குற்றம், குற்றவியல், குழந்தை கொலை, குழந்தை விபசாரம், குழந்தை விபச்சாரம், குழந்தைகள் பாலியல் பலாத்காரம், குழந்தைகள் பாலியல் வன்முறை, குஷ்பு, கோளாறு, சந்தேகம், சன் - டிவி, சபலம், சமூக பிரழ்ச்சி, சமூகக் குரூரம், சமூகக்குரூரம், சமூகச் சீரழிவுகள், சமூகவியல், செக்ஸ் கொடுமை, செக்ஸ் சில்மிஷம், செக்ஸ் டார்ச்சர், செக்ஸ் தூண்டி, செக்ஸ் நிபுணர், செக்ஸ் விளையாட்டு, செக்ஸ்-மாஸ்டர், செல்லாத திருமணம், தகாத உறவு, தமிழகப்பெண்கள், தமிழ்-சினிமாவின் தரம், தழுவு, தவறான பிரசாரம், தவறுகளைத் திருத்திக் கொள்ளத் தயக்கம், திராவிடசேய், திராவிடத்தாய், திராவிடநாடு, திராவிடப்பெண், திராவிடம், திருமணத்துக்கு முன் பெண்கள் பாலியல், துறவிகள் துறந்தவரா?, நடிகை-நடிகர் கலாச்சாரம், நடிகைகள்-கற்பு, நிர்வாண படம், நிர்வாண வீடியோ, நிர்வாணமான பெண்கள், நிர்வாணம், பாரம்பரியம், பாலியல், பாலியல் உறவு வைத்துக் கொள்வது தவறில்லை, பெண்களின் மீதான வன்முறை, மனைவி, மருந்து, மார்பகங்களை பிடுத்து, மார்பகம், மார்புடை, முலை, மெய், மெய்யணை, ரோமாஞ்சகம், வக்கிரம், வன்குற்றம், வன்புணர்ச்சி, வன்முறை, வயது இல் பதிவிடப்பட்டது | 9 Comments »