“ரத்தம் சொரிவதற்கு சந்தோஷமாக இருக்கிறேன்” – சபரிமலை, மாதவிலக்கு, தூய்மை – பெண்ணிய வீராங்கனைகளின் ரத்தப் போராட்டம் (2)
“ரத்தப்போக்கிற்கு சந்தோஷமாக இருக்கிறேன்” அல்லது “ரத்தம் சொரிவதற்கு சந்தோஷமாக இருக்கிறேன்” [“Happy to Bleed”] என்று இளம்பெண்கள் ஏதோ பிரச்சினை ஆரம்பித்தபோது, சரி, ஏதோ, பெண்ணிய வீராங்கனைகள் எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள் போலும் என்று நினைத்துக் கொண்டேன். ஆனால், பொறுமையாக அந்த தளத்தில் உள்ள உரையாடல்கள் முழுவதும் படித்த பிறகு, அது சித்தாந்த ரீதியில் தான் உள்ளது என்பதை அறிந்து கொண்டு, அங்கு பதில் அளித்தேன். நாத்திகர்கள், முஸ்லிம்கள், கிருத்துவர்கள் முதலியோர் இப்பிரச்சினையை வைத்துக் கொண்டு, ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு எதிராக செயல்படுவது தெரிந்தது. ஆனால், அக்குழு நாத்திகம், கம்யூனிஸம், இந்திய எதிர்ப்பு[1], காலிஸ்தான் ஆதரவு[2], இந்து-எதிர்ப்பு[3] என்று பலநிலைகளில் செயல்படுவது புரிந்தது. நிகிதா ஆஜாத் என்ற இளம்பெண், சீக்கிய பென் ஆனதால், இவற்றையெல்லாம், ஒரு கலவையாக்கி, இப்பிரச்சினையில் லாபம் பெற முயல்வது தெரிகிறது. “யூத் கி ஆவாஜ்” (இளைஞர்களின் குரல்), “பேஸ் புக்” முதலியவற்றில் உள்ளவையும் அதே தோரணையில் உள்ளன[4]. ஜனநாயக வாலிபர் சங்கம் (DSO) போர்வையிலும் அச்சித்தாந்தங்கள் வெளிப்பட்டு பதிவாகியுள்ளன[5]. தமிழில், தீக்கதிரில், “ரத்தப்போக்கிற்கு சந்தோஷமாக இருக்கிறேன்” என்பது பற்றி, சிறு குறிப்பும், கீழ்கண்டவாறு வெளியாகியுள்ளது. டிசம்பர் 6, 2015 அன்று இடதுசாரி கூட்டங்கள் “பாபரி மஸ்ஜிதுக்கு” ஆதராவாக நடத்திய பேரணிக்கு ஆதரவான பதிவுகள் உள்ளன. இனி, தீக்கதிரில் என்ன உள்ளது என்பதனை பார்ப்போம்.
‘இதே சுத்தமற்ற ரத்தத்தில் தான் நீங்கள் 10 மாதங்கள் அம்மாவின் கருவறையில் இருந்தீர்கள்’[6]: தீக்கதிர், “பெண்களின் மாதவிடாய் பற்றி ஆண்கள் பொது இடத்தில் பேச மறுத்தாலும், மாதவிடாயை பெண்களை அடக்கும் ஒரு கருவியாகத்தான் இன்று வரை கையாண்டு வருகிறார்கள். சமீபத்தில் சபரிமலை ஐயப்பன் கோவில் தேவஸ்தான தலைவர் பிரயார் கோபாலகிருஷ்ணன், “கோவில்களுக்குள் வரும் பெண்களுக்கு மாதவிடாய் ஆகிறதா என்பதை சோதிக்கும் கருவி ஒன்றை கண்டுபிடிக்க வேண்டும். அதற்குபிறகு பெண்களை கோவில்களுக்குள் உள்ளே விடுவது பற்றி யோசிக்கலாம்” என கருத்துத் தெரிவித்திருந்தார். இது பெண்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில், “https://www.facebook.com/events/757746744337128/” என்ற அமைப்பு சமூக வலைத்தளத்தில் பெண்களை, “Happy to Bleed”, (ரத்தம் வருவதில் சந்தோஷம்) என்ற வாசகத்தை நாப்கின்கள், காகிதங்களில் எழுதி அதனை கையில் வைத்துக்கொண்டு புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் அனுப்புமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
அதில், “பெண்கள் மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் போது கோவில்களுக்குள் நுழைகிறார்களா என்பதைக் கண்டறிய ஒரு உபகரணத்தைக் கண்டறிய வேண்டும் என்கிறார்கள். அதனை கண்டறிவது முக்கியமா என்பதை விட பெண்கள் கோவில்களுக்குள் நுழைய வேண்டுமா என்பது பற்றித்தான் பிரயார் கோபாலகிருஷ்ணன் சிந்தித்திருக்கிறார். இதன் மூலம் பெண்கள் மீதுள்ள வெறுப்பை அவர் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்” எனக் கூறப்பட்டுள்ளது. இந்தப் பிரச்சாரத்தில் ஏராளமான பெண்கள் இணைந்துள்ளனர். ஆண்கள் சிலரும் இந்த பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். “எனக்கு கருப்பை இருக்கிறது. அதனால் மாதத்திற்கு ஒருமுறை அதிலிருந்து ரத்தம் வழியும். எனக்கு மாதவிடாய் ஏற்படும்போதும் நான் கோவிலுக்குள் நுழைந்து வழிபட்டால் கடவுளுக்கு ஒன்றும் கோபம் வராது. பிரயார் கோபால கிருஷ்ணன் அவர்களே, உங்களைப் போன்றுதான் பெண்கள் மாதவிடாய் நேரத்தில் சுத்தமற்றவர்கள் என பலரும் நினைக்கிறார்கள். இதே சுத்தமற்ற ரத்தத்தில்தான் நீங்கள் 10 மாதங்கள் உங்கள் அம்மாவின் கருவறையில் இருந்தீர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்” என சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை பதிவிட்டு பெண்கள் விளாசியுள்ளனர்”, என்றுள்ளது[7].
நிகிதா ஆஜாதின் அறிக்கை: நான் அந்த வளைத்தளத்தில் என்னுடைய கருத்தைப் பதிவு செய்து, அவர்களது பாரபட்சம் மிக்க போக்கை எடுத்துக் காட்டினேன்[8]. ஆனால், நிகிதா ஆஜாத் என்ற அந்த இளம்பெண், கீழ்கண்டவாறு, ஒரு பதிவை செய்தார்:
“நண்பர்களே, இது ஒரு முக்கியமான அறிவிப்பு.”. “நாம் பாலியல் ரீதியில் வேற்றுமைப் படுத்தும் எல்லா மதங்கள் மற்றும் சடங்குகள் எல்லாவற்றிற்கும் எதிர்க்கிறோம் என்று தெளிவுப்படுத்தியப் பிறகும், பலர் நமது பிரச்சாரத்திற்கு எதிராக மதப்பிரச்சினை/சண்டைகளை வைத்து பொறுப்பற்ற முறையில் கெட்டப்பயரை உண்டாக்க முயல்கிறார்கள். நாம் வெளிப்படையாக இஸ்லாத்தில் கடைப்பிடிக்கும் பெண்ணுறுப்பு அறுப்பு சடங்கு மற்றும் பெண்களை மசூதிகளில் ஆண்களுக்கு சமமாக தொழுகைப் புரிய அனுமதிப்பது போன்றவற்றை எதிர்க்கிறோம் என்று பதிவு செய்த பிறகும்[9], பார்ப்பன அடிப்படைவாதிகள் நமது இயக்கத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்த இன்னொரு முறையைத் தேர்ந்தெர்டுத்துள்ளார்கள்[10]. நாகரிகம், பண்பாடு போன்றவையற்ற முறையில் செயல்படுவதாக, நம் மீது ஆணாதிக்க வார்த்தைகளை உபயோகித்தும்[11], “உங்கள் தாயார்கள் உங்களுடைய பதிவுகளைப் பார்த்தால்” என்றும் ஆரம்பித்துள்ளார்கள். இதனால், நேரிடையான விவாதம் புரிவது அவர்களது திட்டமல்ல என்று தெரிகிறது[12]. இந்த மதவெறியர்கள் எல்லோரும் பெண்கள் தங்களுக்கு எது சரி என்று எந்த முறையிலும் தங்களது கருத்துகளை வெளியிடவும் ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள். அவர்கள் நமது எதிர்ப்புப் பிரச்சாரம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்றும் ஆணையிட முயல்கிறார்கள்”. “அதுமட்டுமல்லாது, இந்த தனிநபர்கள் நமது இயக்கவாதிகளை விபச்சாரிகள் என்றும், நாமெல்லோரும் கூட்டாக கற்பழிப்பதற்குத்தான் லாயக்கு என்றும், அதனால், சமையலறைகளில் கிடப்பதற்குத்தான் லாயக்கு என்ற வரையில் சொல்கிறார்கள்”. “ஆனால், நமது இயக்கத்திற்கு ஒரே நாள் எஞ்சியுள்ளது என்ற நிலையில், இவ்விதமான பொறுப்பற்ற விமர்சனத்தை ஒதுக்கித் தள்ளுகிறோம். இந்த சந்தேசத்தை / அறிவிப்பை பகிருங்கள். சமூக வளைத்தளத்தில் இப்பிரச்சாரத்தை செய்வதால், நாம் இத்தகைய மிரட்டல்களைப் பெற்றுள்ளோம். உண்மையிலேயே, தெருக்களில் இறங்கி பிரச்சாரத்தை மேற்கொண்டிருந்தால், என்ன நடக்கும் என்பது தெரியவில்லை”. “அதே நேரத்தில் நமது ஆதரவாளர்களை அந்த கோவில் மற்றும் கோவில் அதிகாரிகரிகளுக்கு எதிராக எந்தவிதமான வார்த்தைகளையும் உபயோகப்படுத்த வேண்டாம் என்று வேண்டிக் கொள்கிறேன். பதிலாக சித்தாந்த ரீதியில், வாதங்களை உபயோகப்படுத்துங்கள். அது நமது பிரச்சாரத்தை மேன்படுத்தும்”. |
© வேதபிரகாஷ்.
07-12-2015.
[1] http://www.youthkiawaaz.com/2015/11/gadari-mela-punjab/
[2] The Sikhs Continue To Be Oppressed, But Is Khalistan The Solution To Counter This?
http://www.youthkiawaaz.com/2015/11/punjab-politics-khalistan/
[3] http://www.youthkiawaaz.com/2015/11/sabrimala-temple-open-letter-statement/
[4] https://www.facebook.com/archangelniks
[5] AIDSO பதிலாக DSO என்று பெயரை வைத்துக் கொண்டுள்ளார்கள் போலும். இடதுசாரி சித்தாந்தத்தில் வேளைசெய்கிறது என்பது தெரிகிறது.
[6] தீக்கதிர், ‘இதே சுத்தமற்ற ரத்தத்தில் தான் நீங்கள் 10 மாதங்கள் அம்மாவின் கருவறையில் இருந்தீர்கள்’, Nov 25, 2015.
[7] http://theekkathir.in/2015/11/25/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2/
[8] https://womanissues.wordpress.com/2015/11/24/mensuration-sabarimalai-purity-how-feminists-fight-with-blood/
[9] இவர்கள் இந்த வயதிலேயே, இந்த அளவுக்கு பொய் சொல்ல தேர்ச்சிப் பெற்றுள்ளார்கள் என்பது வியப்பாகத்தான் உள்ளது.
[10] இடதுசாரிகள் தங்களது போக்கை, மற்றவர்கள் மீது ஏற்றிச் சொல்லும் போக்கையும் இங்கு கவனிக்கலாம்.
[11] இதெல்லாம், ஆணாதிக்க வார்த்தைகள் என்று இவர்கள் தாம் கண்டுபிடித்தார்கள் போலும்!
[12] நான் நேரிடையாக வாதம் செய்தபோது, எத்ர்கொள்ள முடியாமல், அப்படியே நம்மீது திருப்பும் போக்கு, சிறுபிள்ளைத்தனமாக உள்ளது. என்ன செய்வது, இவர்கள் எல்லோருமே, நமது பேத்திகள் போன்றுதான் உள்ளார்கள். பொறுத்துத்தான் போக வேண்டியுள்ளது.