Posts Tagged ‘பெண் பித்து’

சித்தர் பெயரில் மோசடி, கற்பழிப்பு, விபச்சாரம்: கலாச்சாரத்தின் சீரழிவு ஆபத்தான நிலையில் பரவுகிறது!

ஓகஸ்ட்19, 2013

சித்தர் பெயரில் மோசடி, கற்பழிப்பு, விபச்சாரம்: கலாச்சாரத்தின் சீரழிவு ஆபத்தான நிலையில் பரவுகிறது!

Deceit-siddha-rapist

சித்தர்உட்பட 7 பேர்கைது: இப்படி ஊடகங்கள் செய்திகளைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றன. தமிழகத்தைப் பொறுத்தவரைக்கும் சித்தர்கள் எல்லாவற்றையும் கடந்தவர்கள். இதனால்தான் போலும், இப்பொழுது, போதை ஊசி போட்டு சிறுமியை கற்பழித்ததாக கூறப்பட்ட புகார் தொடர்பாக சித்தர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்[1].  மேலும், தலைமறைவான புரோக்கர் உட்பட சிலரை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை வியாசர்பாடி பி.வி காலனியை சேர்ந்தவர் சிறுமலர் (வயது 35) இவரது மகள் அமலா  (பெயர் மாற்றப்பட்டுள்ளது) (வயது 14). இவர் ஆந்திரா மாநிலத்தில் உள்ள திருப்பதி கோவில் வளாகத்தில் சந்தேகபடும்படியாக சுற்றித்திரிந்துள்ளார். சிறுமியிடம் போலீசார் விசாரித்த போது, அவர் மாங்காய் வியாபாரம் செய்து வருவதும், விபசாரத்தில் ஈடுபடுத்தி கொடுமை செய்ததால் தப்பித்து ஓடி வந்ததது தெரிய வந்தது. இதைதொடர்ந்து சிறுமியை ஆந்திர போலீசார் தமிழக போலீஸ் டிஜிபி ராமனுஜத்திடம் ஒப்படைத்தனர். இது தொடர்பாக ராமானுஜம் உத்தரவின் பேரில் சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தினர். இது குறித்து சிறுமியிடம் நடந்த   முதற்கட்ட விசாரணையில் வியாசர்பாடி பிவி காலனியை சேர்ந்த அறவழிசித்தர் (வயது 48) என்பவர் சிறுமிக்கு போதை மருந்து கொடுத்து பல முறை கற்பழித்ததும், இதற்கு அவரது தாயார் சிறுமலர் உடந்தையாக இருந்தார் என்பதும் தெரியவந்தது.

Deceit-siddha-rapist.4

இரவுபூஜைசெய்தால்எல்லாம்சரியாகிவிடும்என்று கற்பழித்த அறவழிசித்தர்: அபர்ணாவுடன் தனது காம பசியை தீர்த்து அலுத்து போன அறவழி சித்தர் பின்னர் அந்த அப்பாவி சிறுமியை விபசார கும்பலிடம் விற்பனை செய்து விட்டார்[2]. மேலும்,  சித்தருடைய நண்பர்களான குமார், செல்வம் உள்ளிட்ட 6 பேர் கொட்டிவாக்கம் கடற்கரையில் வைத்து தன்னை கற்பழித்ததாகவும் சிறுமி பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்[3].   பெரம்பூரைச் சேர்ந்தவர் அந்த சிறுமியின் தந்தை பல ஆண்டுகளுக்கு முன்பே இறந்து விட்டார். தாயார் சசிகலாவுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த ஆண்டு பெரம்பூரில் உள்ள ஒரு ஆசிரமத்திற்கு மகளை அழைத்துச் சென்றார் சசிகலா. அங்கு “அறவழி சித்தர்” என்ற குறி சொல்லும் சாமியாரிடம் அறிமுகப்படுத்தினார். அந்த சாமியாருக்கு வயது 48 ஆகிறது. அந்த சாமியார், சசிகலாவிடம் இரவு பூஜை செய்தால் எல்லாம் சரியாகி விடும் என்று கூறியுள்ளார். இதையடுத்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நள்ளிரவில் பூஜைக்கு ஏற்பாடு செய்தார் அந்த சாமியார். அன்று இரவு பூஜைக்குப் பதில் சிறுமியை தனது காம இச்சைக்குப் பயன்படுத்தி கற்பழித்துள்ளார். அதிர்ச்சி அடைந்த சிறுமி, தனது தாயாரிடம் வந்து கதறியுள்ளார்.

Deceit-siddha-rapist

சாமியார்எதுசெய்தாலும்அதுநல்லதுக்குத்தான்: அதற்கு அந்தத் தாயார், சாமியார் எது செய்தாலும் அது நல்லதுக்குத்தான் என்று கூறி சமாதானப்படுத்தியுள்ளார் மகளை. சிறுமியின் தாயாரே இதைக் கண்டுகொள்ளாமல் விட்டதால் சாமியார் பலமுறை சிறுமியை வரவழைத்து வெறியாட்டம் போட்டுள்ளார்[4]. ஊடகங்களும் தாயே ஒப்புக்கொண்டு மகளை கற்பழிக்க விடுத்தாள் என்பது போல செய்திகளைத் தந்துள்ளன. ஏழ்மை உறவுகளை கெடுத்துவிடும், பந்தங்களை அறுத்துவிடும், பாசங்களைக் போக்கிவிடும் என்று அவர்கள் அறியாதவர் போலும். ஆங்கிலத்தில் “சென்சேஷனல் ஜேர்னலிஸம்” என்பார்களே, அவ்விதத்தில், மகிழ்சியோடு, ரோமாஞ்சனத்துடன் செய்திகளை அள்ளிக் கொட்டியுள்ளார்கள்.

Deceit-siddha-rapist.3

சித்தரின்ஆசிரமத்தில்ஆபாசசி.டி.க்கள்: அறவழி சித்தரின் 2 அறைகள் கொண்ட ஆசிரமத்தில் போலீசார் சோதனையிட்ட போது ஆபாச சி.டி.க்கள் சிக்கியது. விபசாரகும்பலை சேர்ந்த குமார், செல்வம் மற்றும் மேலும் 2 பெண்களை போலீசார் தேடி வருகிறார்கள். இவர்கள் சிறுமி அபர்ணாவிடம் உல்லாசம் அனுபவிக்க விபசார புரோக்கர் செல்வத்துக்கு ரூ.10 ஆயிரம் கொடுத்து உள்ளனர். மீட்கப்பட்ட சிறுமி அபர்ணா தற்போது குழந்தைகள் நல கமிட்டி பராமரிப்பில் காப்பகத்தில் உள்ளார். அவர் உடல் முழுவதும் போதை ஊசி போடப்பட்ட தழும்புகள் உள்ளது. அவர் கூறும் போது,  “விபசார கும்பலிடம் என்னை போல் மேலும் 2 சிறுமிகள் சிக்கி உள்ளனர். ஒருத்தி தி.நகரை சேர்ந்தவள் என்றும், இன்னொருத்தி மூலக்கடையை சேர்ந்தவள்” என்றும் கூறினார். 7-ம் வகுப்பு வரை படித்துள்ள அவர் தொடர்ந்து படிக்க விரும்புவதாகவும் தெரிவித்தாள். அவரது விருப்பத்தை நிறைவேற்ற குழந்தைகள் நல கமிட்டி திட்டமிட்டுள்ளது. கைதான அறவழி சித்தர் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவரை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் திட்டமிட்டுள்ளனர். சித்தரிடம் ஏமாந்த பெண்கள் பற்றியும் விசாரணை நடக்கிறது.

Deported-phedophiles-in-India

மீதுபாலியல்கொடுமை, பெண்வன்கொடுமைஉட்பட  ஐந்துபிரிவுகளின்கீழ்போலீசார்வழக்குபதிவு: இந்த சம்பவம் தொடர்பாக அறவழி சித்தர் மற்றும் சிறுமியின் தாயார் சிறுமலரை 17-08-2013 அன்று போலீசார் கைது செய்து சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ளவர்களை சிபிசிஐடி போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜா சீனிவாசன்  தலைமையில் போலீசார் 17-08-2013 இரவு முழுவதும் தேடுதல் வேட்டையை முடுக்கி விட்டனர். இதில், 18-08-2013 மாலை  கொட்டிவாக்கம் கடற்கரையில் வைத்து சிறுமியை கற்பழித்தவர்களான பி.வி காலனியை சேர்ந்த ராஜேஷ் குமார், அதே பகுதியை சேர்ந்த பப்லு, புதுப்பேட்டையை சேர்ந்த கணேஷ், திருவான்மியூரை சேர்ந்த சதிஷ், நியூ ஆவடி சாலையை சேர்ந்த பப்லு,  ஆகியோரை போலீசார் மடக்கி பிடித்து  5 பேரையும் கைது செய்தனர்[5]. இவர்கள்  ஐந்து பேர் மீது பாலியல் கொடுமை, பெண் வன்கொடுமை உட்பட  ஐந்து பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக சிலரை தேடி வருவதாக சிபிசிஐடி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

IT_Act_does_not_cover_Chold_porn


[1] மாலைச்சுடர், சித்தர்உட்பட 7 பேர்கைது, Monday, 19 August, 2013   03:02 PM

பெற்ற மகளை கற்பழித்து கர்ப்பமாக்கிய கொடூரன் : கர்ப்பம் கலையாததால் கொலை செய்த கொடுமை

ஜூன்1, 2010

பெற்ற மகளை கற்பழித்து கர்ப்பமாக்கிய கொடூரன் : கர்ப்பம் கலையாததால் கொலை செய்த கொடுமை

ஏதோ அமெரிக்கா, ஆஸ்திரேலியா மாதிரி, இந்தியாவிலேயே இத்தகைய அசிங்கமான குரூரங்கள், கொடுமையான ஆபாசங்கள், வக்கிர கலவைகள் முதலியன நடப்பது, அத்தகைய மனப்பாங்கை இந்தியர்கள் பெறுவது, முதலியன மனோதத்துவ ரீதியில் ஆய்வுக்குறியதாகிறது.

மேலும், குற்றங்களில் ஈடுபடுகிரவர்கள், மிகவும் அதி நவீன யுக்திகளைக் கைப்பிடிப்பது நோக்கத்தக்கது.

அதாவது, அவர்களின் குற்றமனத்தை, தீவிரவாதத்தை, வன்முறையை தீர்மானமாகவே கடைப்பிடிப்பது உறுதியாகிறது.

அந்நிலையில், அதன் பின்னணி என்ன?

அதாவது அத்தகைய மனப்பாங்கை ஏற்படுத்துகின்ற ஊக்குவிக்கி, கிரியாயூக்கி, செயல்படுத்தி எது என்று அடையாளங்காண வேண்டிய நிலை உள்ளது.

பெண்கள் நிச்சயமாக இதைப் பற்றி ஆராய்ச்சி நடத்த வேண்டும்.

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=10068

நாகர்கோவில் : பெற்ற மகளை கற்பழித்ததுடன், அதனால் உருவான கர்ப்பத்தை மறைக்க கொலை செய்த கொடூர தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம், அருமனை பகுதியை சேர்ந்தவர் புரூஸ்லெட். இவர் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி. இவரது மகள் ஷெர்லிஜாஸ்மின் (18). பிளஸ்டூ படித்து வந்தார். ஷெர்லியின் தாயார் கேன்சர் நோயில் இறந்து விட்டார். இதை தொடர்ந்து ஐடா என்ற பெண்ணை புரூஸ்லெட் இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் , கடந்த 29ம் தேதி காலை புரூஸ்லெட்டும், ஐடாவும் மகளை வீட்டில் விட்டுவிட்டு உறவினர் வீட்டுக்கு சென்றனர். மாலையில் திரும்பி வந்த போது, வீட்டின் பின்பக்க தண்ணீர் தொட்டியில் ஜாஸ்மின் இறந்து கிடந்தார். அவரது கழுத்து மற்றும் காதில் கிடந்த நகைகள், பீரோவில் இருந்த நகைகள் என 14 சவரன் நகைகள் திருட்டு போனது. இது பற்றி அருமனை போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். சம்பவம் நடந்த வீட்டில் மிளகாய்பொடி தூவப்பட்டிருந்தது. இதனால் கொள்ளையர்கள் பக்கம் போலீசாரை திசை திருப்ப முயற்சி நடைபெற்றது. கைரேகை அடிப்படையில் போலீசார், புரூஸ்லெட்டை கைது செய்தனர். “முறைப்படி’ விசாரித்த போது அவர் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

மகளைக் கற்பழித்த தந்தை - நாகர்கோவில்

மகளைக் கற்பழித்த தந்தை - நாகர்கோவில்

திசை திருப்ப முயற்சி: மகளுடன் உடல் உறவு கொள்ள முயன்று நடக்காததால், மயக்கமடைய செய்து உடல் உறவு கொண்டதால், அவர் கர்ப்பம் ஆகியுள்ளார். மாத்திரை கொடுத்தும் கர்ப்பம் கலையாததால் கொலை செய்ய முடிவு செய்ததையும் அவர் ஒப்புக்கொண்டார். சம்பவத்தன்று 2வது மனைவியை நாகர்கோவிலுக்கு அனுப்பி விட்டு, வீட்டுக்கு வந்த புரூஸ்லெட், மகளை கொலை செய்து தண்ணீர் தொட்டியில் போட்டுள்ளார். போலீசார் கவனத்தை திசை திருப்ப மிளகாய் பொடியை தூவி விட்டு நகைகளையும் எடுத்து சென்றுள்ளார். அவர் கொடுத்த தகவலின் பேரில் வீட்டில் ஒரு இடத்தில் ஷூவில் மறைத்து வைத்திருந்த நகைகளை போலீசார் கைப்பற்றினர். புரூஸ்லெட் மீது அப்பகுதி மக்கள் ஆத்திரத்தில் உள்ளனர். அசம்பாவிதங்கள் நடக்காமல் தடுக்க அப்பகுதியில், போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பேத்தியை கற்பழித்து கொலை செய்த மகனை தூக்கில் போடும்படி தாய் ஆவேசம்

கன்னியாகுமரி மாவட்டம், அருமனை பகுதியை சேர்ந்தவர் ரூஸ்வெல்ட்; ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி. இவரது மகள் ஷெர்லி ஜாஸ்மின் (18); பிளஸ் 2 படித்து வந்தார். ஷெர்லியின் தாய், நோய்வாய் பட்டு இறந்து விட்டார். இரண்டாவதாக ஐடா என்ற பெண்ணை திருமணம் செய்தான் ரூஸ்வெல்ட்.  பல பெண்களுடன் இவனுக்கு தொடர்பு உண்டு. பெற்ற மகள் என்றும் பாராமல், ஷெர்லியையும் தன் இச்சைக்கு இரையாக்கினான். மகள் கர்ப்பம் தரித்ததால், அவரை கொலை செய்த ரூஸ்வெல்ட், தண்ணீர் தொட்டியில் மகளின் உடலைப் போட்டான். பின், தன் மகள் தற்கொலை செய்து கொண்டதாக நாடகம் ஆடினான். போலீசார் விசாரணையில், ரூஸ்வெல்ட் கொலை செய்தது தெரியவந்து,  தற்போது ரூஸ்வெல்ட், பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.

இந்த சம்பவத்தால், ரூஸ்வெல்டின் தாய் ராஜம் மனம் நொந்து உள்ளார். அவர் கூறியதாவது: என் மகன், சிறு வயதில் இருந்த பெண் பித்தனாக இருந்து வந்தான். எத்தனையோ முறை கண்டித்தும், அவன் திருந்தவில்லை. திருமணம் செய்து வைத்தால் திருந்தி விடுவான் என நினைத்து, திருமணம் செய்து வைத்தோம். மனைவியையும் அடித்து உதைத்தான்.  பெண் குழந்தை பிறந்த பின், இவன் கொடுமை தாங்காமல் மருமகள், நோய்வாய்பட்டு இறந்து போனார். இவன் வருவதற்காக, மூன்று நாட்கள் அவள் உடலை வைத்திருந்தோம். மூன்றாவது நாள்,  “நான் இறுதிச் சடங்குக்கு வரமுடியாது’ என, போனில் தகவல் கூறிவிட்டான்.

மூன்று மாதம் கழித்து வந்து, “எனக்கு மறுமணம் செய்து வைய்யுங்கள்’ என்று கூறினான். வேறு வழியில்லாமல், ஐடா என்ற பெண்ணை திருமணம் செய்து வைத்தோம். ஆனால், அவனது பெண் பித்து விடவில்லை. இதை கண்டித்த எனது கணவரை, தந்தை என்றும் பாராமல் கல்லால் தாக்கினான். இதில் படுக்கையான அவர், 90வது நாள் இறந்து விட்டார். இவனது மோசமான போக்கால், சொத்துக்களை ஷெர்லின் ஜாஸ்மின் பெயருக்கு எழுதி வைத்து விட்டோம்.  அடிக்கடி பேத்தியை மட்டும் பார்த்து விட்டு வருவேன்.

கதறிக் கொண்டிருந்த பேத்தி: ஒரு நாள், ஜாஸ்மினைப் பார்க்க நான் சென்றபோது, கதறி அழுது கொண்டிருந்தார். அப்பா கொடுமைப்படுத்துவதாக என்னிடம் கூறினார். நான், “கடவுள் காப்பாற்றுவார்’ என, ஆறுதல் கூறினேன். இப்படி செய்வான் என்று எதிர்பார்க்கவில்லை. பெற்ற மகளை இப்படி கொடூரமாக கொலை செய்து விட்டு, தற்கொலை செய்து கொண்டது  போல் நாடகமாடிய பாவியை, சும்மா விடக்கூடாது. அவனை தூக்கில் போட வேண்டும். அவனை என் வயிற்றில் சுமந்ததற்காக வெட்கப்படுகிறேன். அவனுக்கு அதிக பட்ச தண்டனை வழங்க வேண்டும். இவ்வாறு ராஜம் கூறினார்.

பேத்தியும், பாட்டியும்
நாகர்கோவில் (02-06-2010): மகளை கற்பழித்து கொலை செய்த, முன்னாள் ராணுவ அதிகாரியான தனது மகனை தூக்கில் போட வேண்டும் என, அவரது தாய் ராஜம் தெரிவித்துள்ளார்.