Posts Tagged ‘வன்புணர்ச்சி’

கலிகால குரூர வக்கிர பெருசுகள் – சிறுமிகளை ஆபாசப்படம் போட்டு காட்டி பாலியல் பலாத்காரம் செய்த மூன்று கிழங்கள்!

ஓகஸ்ட்31, 2013

கலிகால குரூர வக்கிர பெருசுகள் – சிறுமிகளை ஆபாசப்படம் போட்டு காட்டி பாலியல் பலாத்காரம் செய்த மூன்று கிழங்கள்!

இவர்களுக்கு இந்த வேலை தேவையா?

இவர்களுக்கு இந்த வேலை தேவையா?

திடீரென கைகளில் பணத்துடன் வந்த மாணவிகள்: தூத்துக்குடி, தாளமுத்து நகரை சேர்ந்த 5 ஆம் வகுப்பு படிக்கும் ஆனந்தி மற்றும் அனுஷ்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஆகிய இரு மாணவிகள் திடீரென கைகளில் பணத்துடன் வந்துள்ளனர். சந்தேகப்பட்டு விசாரித்த போது, பக்கத்து தெருவில் சிமென்ட் கடையில் வேலை பார்க்கும் தாத்தா காசு கொடுத்ததாகவும், பின்னர் தன் தோழியையும் அழைத்து வந்தால் அதிக காசு தருவதாகவும் கூறினார். அதனால் போனோம், காசு கொடுத்தார் என்று கூறி இருக்கிறாள் சிறுமி.  மேலும் விசாரித்ததில் கிழங்கள் செய்த சில்மிஷங்களை அறிந்து கொண்டனர். அறியாத சிறுமிகளை அக்கிழங்கள் பலாத்காரம் செய்துள்ளது தெரிய வந்தது.

தங்களது பேத்திகளை இவர்கள் இவ்வாறு செய்வார்களா?

தங்களது பேத்திகளை இவர்கள் இவ்வாறு செய்வார்களா?

தூத்துக்குடியில் 2 சிறுமிகள் பாலியல் பலாத்காரம் 3 முதியவர்கள் கைது: இந்நிலையில், அந்த மூன்று முதியவர்கள் இரண்டு சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால், தூத்துக்குடி தாளமுத்துநகர் பகுதியில் சில முதியவர்கள் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த மூவர் மீது போலீஸாரில் புகார் கொடுக்கப்பட்டது. இதுகுறித்து சிறுமிகளின் பெற்றோர்களும் தாளமுத்துநகர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இதுகுறித்து விசாரணை நடத்திய போலீஸார் அதே பகுதியைச் சேர்ந்த மூக்கையா (65), பால்ராஜ் (66), சர்க்கரை (65) ஆகிய மூவரையும் வெள்ளிக்கிழமை பிடித்தனர். விசாரணையில் மூவரும் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது.

குற்றம் செய்து மரத்துப் போனவர்கள், திரும்ப குற்றம் செய்கிறார்கள்

குற்றம் செய்து மரத்துப் போனவர்கள், திரும்ப குற்றம் செய்கிறார்கள்

செல்போன் மற்றும் டி.வி.யில் ஆபாச படங்களை போட்டு காண்பித்து மாணவிகளை பாலியல் பலாத்காரம்: சமீர் நகரை சேர்ந்த சிமெண்ட் கடை ஊழியரான பால்ராஜ், வாட்ச்மேன் மூக்கையா, காமராஜ் நகரை சேர்ந்த மீனவர் சர்க்கரை ஆகிய 3 பேரை சமீர் நகர் போலீசார் விசாரித்துள்ளனர். அதில், தினமும் மாலையில் பள்ளி முடிந்து வரும் சிறுமிகளுக்கு மிட்டாய், திண் பண்டங்கள் கொடுத்து வீட்டிற்கு அழைத்து சென்று செல்போன் மற்றும் டி.வி.யில் ஆபாச படங்களை போட்டு காண்பித்து மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்ததை மூன்று முதியவர்களும் ஒப்புக் கொண்டனர். இத்தகைய வீடியோக்கள் தாராளமாக கிடைப்பதும், அவற்றை பிரதிகள் எடுத்து விற்பதையும் தடை செய்யாமல் இருந்தால், வக்கிர புத்தி கொண்டவர்களின் இத்தகைய ஈனத்தனமான செய்ல்கள் தொடரும். கலிகாலத்தின் விபரீதத்தால், கேடுகெட்ட பெருசுகளும், இத்தகைய முறைகளைப் பின்பற்றுவது கொண்டு திகிலாக இருக்கிறது.

வில்-ஹியூம்-heum-pedophile

வில்-ஹியூம்-heum-pedophile

மனைவி மற்றும் குழந்தைகளை கொலை செய்து சிறை சென்று வந்தவர்: இந்த 3 கொடூரர்களில் ஒருவரான மூக்கையா, 15 வருடங்களுக்கு முன்பு தன் மனைவி மற்றும் குழந்தைகளை கொலை செய்து சிறை சென்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது[1]. அதாவது, வழக்காமாக குற்றம் செய்து, மனம் இருகிபோன குரூரக் கொடுமைக்காரன் என்று தெரிகிறது. இதையெடுத்து, தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸாரிடம் இந்த வழக்கு ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் வழக்கப் பதிந்து குற்றம்சாட்டப்பட்ட மூவரையும் வெள்ளிக்கிழமை இரவு 30-08-2013 கைது செய்தனர்[2]. இத்தகைய கிழங்களை தூக்கில் போட்டலும் தப்பில்லை என்றுதான் தோன்றுகிறது. 60-65 வயதான இவர்களால், சமூகத்தில் இத்தகைய சீர்கேட்டை உண்டாக்கும் நிலையுள்ளது எனும் போது, அவர்கள் இல்லாமல் இருப்பதே நல்லது என்றுதான் தோன்றுகிறது.

குழந்தைக் கற்பழிப்பாளிகளை  விட்டு வைக்கக் கூடாதுஅறிவுரை யாருக்கு தேவை?: அப்பாவி சிறுமிகளை ஏமாற்றும் நிலையில் கிழங்கள் உள்ளன அல்லது அவர்களது குரூர சபலத்திற்கு சிறுமிகள் பலிகடா ஆனார்கள் என்பதும் கவலையாக இருக்கிறது. சிறுமிகளுக்கு பெற்றோர் தகுந்த முறையில் அறிவுரை சொல்லவேண்டிய அவசியமும் ஏற்படுகிறது. அவர்கள் நேராக பள்ளிக்குச் சென்றுத் திரும்பவேண்டும், அவ்வாறு செய்கிறார்களா என்று கண்காணிக்கப்பட வேண்டும் என்றும் நிலை ஏற்படுகிறது. மேலும், கிழங்களுக்கும் புத்தி சொல்லவேண்டியுள்ளது. தமிழகத்தில் பொதுவாக, நாத்திகம் முதலியவை போதித்து, கடவுள் நம்பிக்கை, பயம், நேர்மை போன்றவை மறைந்து விட்டதால், பெருசுகள் இவ்வாறு செய்யலாம் என்று துணிகின்றனர் எனலாம்.

© வேதபிரகாஷ்

31-08-2013


சித்தர் பெயரில் மோசடி, கற்பழிப்பு, விபச்சாரம்: கலாச்சாரத்தின் சீரழிவு ஆபத்தான நிலையில் பரவுகிறது!

ஓகஸ்ட்19, 2013

சித்தர் பெயரில் மோசடி, கற்பழிப்பு, விபச்சாரம்: கலாச்சாரத்தின் சீரழிவு ஆபத்தான நிலையில் பரவுகிறது!

Deceit-siddha-rapist

சித்தர்உட்பட 7 பேர்கைது: இப்படி ஊடகங்கள் செய்திகளைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றன. தமிழகத்தைப் பொறுத்தவரைக்கும் சித்தர்கள் எல்லாவற்றையும் கடந்தவர்கள். இதனால்தான் போலும், இப்பொழுது, போதை ஊசி போட்டு சிறுமியை கற்பழித்ததாக கூறப்பட்ட புகார் தொடர்பாக சித்தர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்[1].  மேலும், தலைமறைவான புரோக்கர் உட்பட சிலரை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை வியாசர்பாடி பி.வி காலனியை சேர்ந்தவர் சிறுமலர் (வயது 35) இவரது மகள் அமலா  (பெயர் மாற்றப்பட்டுள்ளது) (வயது 14). இவர் ஆந்திரா மாநிலத்தில் உள்ள திருப்பதி கோவில் வளாகத்தில் சந்தேகபடும்படியாக சுற்றித்திரிந்துள்ளார். சிறுமியிடம் போலீசார் விசாரித்த போது, அவர் மாங்காய் வியாபாரம் செய்து வருவதும், விபசாரத்தில் ஈடுபடுத்தி கொடுமை செய்ததால் தப்பித்து ஓடி வந்ததது தெரிய வந்தது. இதைதொடர்ந்து சிறுமியை ஆந்திர போலீசார் தமிழக போலீஸ் டிஜிபி ராமனுஜத்திடம் ஒப்படைத்தனர். இது தொடர்பாக ராமானுஜம் உத்தரவின் பேரில் சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தினர். இது குறித்து சிறுமியிடம் நடந்த   முதற்கட்ட விசாரணையில் வியாசர்பாடி பிவி காலனியை சேர்ந்த அறவழிசித்தர் (வயது 48) என்பவர் சிறுமிக்கு போதை மருந்து கொடுத்து பல முறை கற்பழித்ததும், இதற்கு அவரது தாயார் சிறுமலர் உடந்தையாக இருந்தார் என்பதும் தெரியவந்தது.

Deceit-siddha-rapist.4

இரவுபூஜைசெய்தால்எல்லாம்சரியாகிவிடும்என்று கற்பழித்த அறவழிசித்தர்: அபர்ணாவுடன் தனது காம பசியை தீர்த்து அலுத்து போன அறவழி சித்தர் பின்னர் அந்த அப்பாவி சிறுமியை விபசார கும்பலிடம் விற்பனை செய்து விட்டார்[2]. மேலும்,  சித்தருடைய நண்பர்களான குமார், செல்வம் உள்ளிட்ட 6 பேர் கொட்டிவாக்கம் கடற்கரையில் வைத்து தன்னை கற்பழித்ததாகவும் சிறுமி பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்[3].   பெரம்பூரைச் சேர்ந்தவர் அந்த சிறுமியின் தந்தை பல ஆண்டுகளுக்கு முன்பே இறந்து விட்டார். தாயார் சசிகலாவுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த ஆண்டு பெரம்பூரில் உள்ள ஒரு ஆசிரமத்திற்கு மகளை அழைத்துச் சென்றார் சசிகலா. அங்கு “அறவழி சித்தர்” என்ற குறி சொல்லும் சாமியாரிடம் அறிமுகப்படுத்தினார். அந்த சாமியாருக்கு வயது 48 ஆகிறது. அந்த சாமியார், சசிகலாவிடம் இரவு பூஜை செய்தால் எல்லாம் சரியாகி விடும் என்று கூறியுள்ளார். இதையடுத்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நள்ளிரவில் பூஜைக்கு ஏற்பாடு செய்தார் அந்த சாமியார். அன்று இரவு பூஜைக்குப் பதில் சிறுமியை தனது காம இச்சைக்குப் பயன்படுத்தி கற்பழித்துள்ளார். அதிர்ச்சி அடைந்த சிறுமி, தனது தாயாரிடம் வந்து கதறியுள்ளார்.

Deceit-siddha-rapist

சாமியார்எதுசெய்தாலும்அதுநல்லதுக்குத்தான்: அதற்கு அந்தத் தாயார், சாமியார் எது செய்தாலும் அது நல்லதுக்குத்தான் என்று கூறி சமாதானப்படுத்தியுள்ளார் மகளை. சிறுமியின் தாயாரே இதைக் கண்டுகொள்ளாமல் விட்டதால் சாமியார் பலமுறை சிறுமியை வரவழைத்து வெறியாட்டம் போட்டுள்ளார்[4]. ஊடகங்களும் தாயே ஒப்புக்கொண்டு மகளை கற்பழிக்க விடுத்தாள் என்பது போல செய்திகளைத் தந்துள்ளன. ஏழ்மை உறவுகளை கெடுத்துவிடும், பந்தங்களை அறுத்துவிடும், பாசங்களைக் போக்கிவிடும் என்று அவர்கள் அறியாதவர் போலும். ஆங்கிலத்தில் “சென்சேஷனல் ஜேர்னலிஸம்” என்பார்களே, அவ்விதத்தில், மகிழ்சியோடு, ரோமாஞ்சனத்துடன் செய்திகளை அள்ளிக் கொட்டியுள்ளார்கள்.

Deceit-siddha-rapist.3

சித்தரின்ஆசிரமத்தில்ஆபாசசி.டி.க்கள்: அறவழி சித்தரின் 2 அறைகள் கொண்ட ஆசிரமத்தில் போலீசார் சோதனையிட்ட போது ஆபாச சி.டி.க்கள் சிக்கியது. விபசாரகும்பலை சேர்ந்த குமார், செல்வம் மற்றும் மேலும் 2 பெண்களை போலீசார் தேடி வருகிறார்கள். இவர்கள் சிறுமி அபர்ணாவிடம் உல்லாசம் அனுபவிக்க விபசார புரோக்கர் செல்வத்துக்கு ரூ.10 ஆயிரம் கொடுத்து உள்ளனர். மீட்கப்பட்ட சிறுமி அபர்ணா தற்போது குழந்தைகள் நல கமிட்டி பராமரிப்பில் காப்பகத்தில் உள்ளார். அவர் உடல் முழுவதும் போதை ஊசி போடப்பட்ட தழும்புகள் உள்ளது. அவர் கூறும் போது,  “விபசார கும்பலிடம் என்னை போல் மேலும் 2 சிறுமிகள் சிக்கி உள்ளனர். ஒருத்தி தி.நகரை சேர்ந்தவள் என்றும், இன்னொருத்தி மூலக்கடையை சேர்ந்தவள்” என்றும் கூறினார். 7-ம் வகுப்பு வரை படித்துள்ள அவர் தொடர்ந்து படிக்க விரும்புவதாகவும் தெரிவித்தாள். அவரது விருப்பத்தை நிறைவேற்ற குழந்தைகள் நல கமிட்டி திட்டமிட்டுள்ளது. கைதான அறவழி சித்தர் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவரை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் திட்டமிட்டுள்ளனர். சித்தரிடம் ஏமாந்த பெண்கள் பற்றியும் விசாரணை நடக்கிறது.

Deported-phedophiles-in-India

மீதுபாலியல்கொடுமை, பெண்வன்கொடுமைஉட்பட  ஐந்துபிரிவுகளின்கீழ்போலீசார்வழக்குபதிவு: இந்த சம்பவம் தொடர்பாக அறவழி சித்தர் மற்றும் சிறுமியின் தாயார் சிறுமலரை 17-08-2013 அன்று போலீசார் கைது செய்து சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ளவர்களை சிபிசிஐடி போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜா சீனிவாசன்  தலைமையில் போலீசார் 17-08-2013 இரவு முழுவதும் தேடுதல் வேட்டையை முடுக்கி விட்டனர். இதில், 18-08-2013 மாலை  கொட்டிவாக்கம் கடற்கரையில் வைத்து சிறுமியை கற்பழித்தவர்களான பி.வி காலனியை சேர்ந்த ராஜேஷ் குமார், அதே பகுதியை சேர்ந்த பப்லு, புதுப்பேட்டையை சேர்ந்த கணேஷ், திருவான்மியூரை சேர்ந்த சதிஷ், நியூ ஆவடி சாலையை சேர்ந்த பப்லு,  ஆகியோரை போலீசார் மடக்கி பிடித்து  5 பேரையும் கைது செய்தனர்[5]. இவர்கள்  ஐந்து பேர் மீது பாலியல் கொடுமை, பெண் வன்கொடுமை உட்பட  ஐந்து பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக சிலரை தேடி வருவதாக சிபிசிஐடி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

IT_Act_does_not_cover_Chold_porn


[1] மாலைச்சுடர், சித்தர்உட்பட 7 பேர்கைது, Monday, 19 August, 2013   03:02 PM

சிறுமியர் பாலியல் பலாத்காரம் – காமக்கிழவருக்கு ஆயுள் தண்டனை!

ஜூலை13, 2012

சிறுமியர் பாலியல் பலாத்காரம் – காமக்கிழவருக்கு ஆயுள் தண்டனை!

சிறுவர்-சிறுமிகளை பாலியல் ரீதியில் சதாய்ப்பது, வன்புணர்ச்சியில் ஈடுபடுத்துவது, கற்பழிப்பது: சமீபத்தில் சிறுவர்-சிறுமிகளை பாலியல் ரீதியில் சதாய்ப்பது, வன்புணர்ச்சியில் ஈடுபடுத்துவது, கற்பழிப்பது போன்ற கொடூர குற்றங்களில் பலர் ஈடுபட்டு வந்துள்ளது தெரிய வந்துள்ளது. பொதுவாக, மேனாட்டவர்கள் இந்திய சிறுவர்-சிறுமிகளை அவ்வாறு படுத்தி வந்துள்ளனர். குறிப்பாகக் கிருத்துவ சாமியார்கள், பிஷப்புகள், பாஸ்டர்கள் முதலியோர் அதிக அளவில் செய்து வச்ந்தனர், மாட்டிக் கொண்டும் உள்ளனர். இப்பொழுது, சோமசுந்தரம் என்ற கிழவர் அவ்வாறு செய்துள்ளதாகவும், தண்டனைக்குட்படுத்தப் பட்டுள்ளதாகவும் தெரிகிறது. ஆபாசப் படத்தை டிவியில் போட்டுக் காட்டி, அதன் பின்னர் 3 சிறுமிகளை கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்த 77 வயது முதியவருக்கு 3 ஆயுள் தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பளித்துள்ளது சென்னை மகளிர் நீதிமன்றம்[1].

சோமசுந்தரக் கிழவன் பயன்படுத்திய யுக்தி: சென்னை வண்ணாரப் பேட்டை பென்சில் பேக்டரி பகுதியை சேர்ந்தவர் ஆ.சோமசுந்தரம். இவருக்கு 77 வயதாகிறது. முன்பு டெய்லர் கடை வைத்திருந்தார். அப்போது அந்தப் பகுதியைச் சேர்ந்த 12, 10 மற்றும் 9 வயதுடைய மூன்று சிறுமிகளை ஒவ்வொரு நாளும் ஒரு சிறுமி என நாசப்படுத்தி வந்துள்ளார். அவர்களை டீ வாங்கி வரச் சொல்லி வீட்டுக்குள் கூட்டிச் செல்வார். பின்னர் அங்கு வீடியோவில் ஆபாசப் படத்தைப் போட்டுக் காட்டுவார். அதன் பின்னர் பாலியல் பலாத்காரம் செய்வார். சில சமயங்களில் சிறுமிகளை கை, கால்களைக் கட்டிப் போட்டும் கூட நாசப்படுத்தியுள்ளார் இந்த காமவெறி பிடித்த நபர். ஒரு சிறுமியிடம் இப்படி மூர்க்கத்தனமாக நடந்து கொண்ட பின்னர் அவளது கையில் 10 ரூபாய் பணத்தை, மிரட்டி அனுப்பியுள்ளார். அந்த சிறுமி தனது பெற்றோரிடம் அழுது கொண்டே நடந்ததைக் கூறியுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கடந்த 2010ம் ஆண்டு ஏப்ரல் 11ம் தேதி புகார் கொடுத்தனர். இதையடுத்து போலீஸார் சோமசுந்தரத்தைக் கைது செய்தனர். விசாரணையில்தான் மொத்தம் 3 சிறுமிகளை அந்த நபர் நாசம் செய்தது தெரிய வந்தது. இதையடுத்து தனித் தனியாக 3 கற்பழிப்பு வழக்குகள் அவர் மீது பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகள் மகளிர் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்தது. நேற்று தீர்ப்பு வழங்கினார் நீதிபதி மீனா சதீஷ்.

நீதிபதி அளித்தத் தீர்ப்பு: மகளிர் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி மீனா சதீஷ் கூறுகையில், “சோமசுந்தரம், தங்கள் கை, கால்களை கட்டிப்போட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக சிறுமிகள் தெளிவாக சாட்சியம் அளித்துள்ளனர். இந்த வழக்கில் அரசு சாட்சிகளின் சாட்சியம், மருத்துவ அறிக்கை உள்ளிட்ட ஆதாரங்கள் அனைத்தும் சோமசுந்தரம் குற்றவாளி என்பதை சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபித்துள்ளன. எனவே சோமசுந்தரம் குற்றவாளி என்று தீர்மானிக்கிறேன். இந்திய தண்டனை சட்டம் 366(ஏ) (தகாத உறவு கொள்ளும் நோக்கத்தில் சிறுமியை மற்றொரு இடத்துக்கு இழுத்துச் செல்லுதல்) குற்றத்துக்காக தலா 10 ஆண்டு வீதம் 30 ஆண்டு சிறைத்தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.30 ஆயிரம் அபராதமும் விதிக்கிறேன். இந்திய தண்டனை சட்டம் 342 (சட்டவிரோதமாக அடைத்துவைத்தல்) குற்றத்துக்காக தலா ஒரு ஆண்டு வீதம் 3 ஆண்டு சிறை தண்டனையும், 376 பிரிவின்படி(கற்பழிப்பு குற்றம்) தலா ஒரு ஆயுள் தண்டனை வீதம் 3 ஆயுள் தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.30 ஆயிரம் அபராதமும் விதிக்கிறேன். இந்திய தண்டனை சட்டம் 506 (2) (கொலை மிரட்டல்) குற்றத்துக்காக 15 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதிக்கிறேன்”, அனைத்துத் தண்டனைகளையும் குற்றவாளி சோமசுந்தரம் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். ஏக காலம் என்று உத்தரவிடப்பட்டிருப்பதால் அவர் ஒரு ஆயுள் தண்டனை மட்டும் அனுபவித்தால் போதுமானது என்பது குறிப்பிடத்தக்கது.

“பிடோபைல்” என்கின்ற வியாதியை  இந்தியா தடுத்து நிறுத்தியே ஆகவேண்டும்: மேனாட்டுப் பாணியில், இத்தகைய காமக் கூரூரத் தன்மையை “பீடோபைல்” என்கின்றனர்.றஆனால், இது எய்ட்ஸை விட கொடூரமானது, மோசமானது. ஆகவே, இது ஏதோ ஒரு சமூக பிரழ்ச்சி, தனிமனித விபரீதமான செயல்,  காமவெறி பிடித்த காரியம் என்று சொல்லி சும்மா இருக்கலாகாது. சிறுவர்-சிறுமிகளை அவ்வாறு சிறு வயதிலேயே கெடுப்பது, மனத்தளவில் அதிகமாக பாதிப்பை ஏற்படுத்துவதோடு, பெரியவர்களாகும் போது, உறவுமுறைகளில் பிரச்சினைகளை ஏற்படுத்தும். தாம்பத்திய உறவுகளில் விரிசல்களும் ஏற்படுத்த்க் கூடும். ஆகையால், “பிடோபைல்” என்கின்ற வியாதியை  இந்தியா தடுத்து நிறுத்தியே ஆகவேண்டும்.

வேதபிரகாஷ்

13-07-2012