Posts Tagged ‘வில்வின் ரெஜிஸ்’

நான்காவதாக கல்யாணம் செய்ய முயன்ற வில்வின் ரெஜிஸ் கைது!

செப்ரெம்பர்4, 2013

நான்காவதாக கல்யாணம் செய்ய  முயன்ற வில்வின் ரெஜிஸ் கைது!

கல்யாண மோசடி மன்னன்

கல்யாண மோசடி மன்னன்

2013ல் சென்னைக்கு வந்து இன்ஜினியரிங் மாணவிக்கு வலை விரிப்பு: குமரி மாவட்டம் கருங்கல் அருகே உள்ள மிடாலத்தை சேர்ந்தவர் வில்வின் ரெஜிஸ் (வயது 27), ஜாண்ரோஸ் மகன் . கட்டிட தொழிலாளியான இவர் தன்னை போலீஸ் அதிகாரி என்று கூறி பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துள்ளார். இவர் அடிக்கடி சென்னைக்கு சென்று வரும் போது அழகப்பபுரத்தை சேர்ந்த ஒரு பெண்ணுடன் நட்பு ஏற்பட்டது. வீடுவரை தொடர்ந்த பழக்கத்தின் மூலம் அந்த பெண்ணின் மகள் முதலாண்டு இன்ஜினியரிங் மாணவியுடன் வில்வின் ரெஜிசுக்கு பழக்கம் ஏற்பட்டது. அவரிடம் கருப்பு பூனை படையில் அதிகாரியாக வேலை பார்ப்பதாக கூறியதால், இதை நம்பி மாணவியை அவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்[1]. இதன்படி, 03-09-2013 அன்று காலை மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு கிறிஸ்தவ ஆலயத்தில் திருமணம் நடப்பதாக இருந்தது. முன்னதாக பெண் வீட்டாரிடம் ரூ.50 ஆயிரம் வாங்கிய ரெஜிஸ் அதைக்கொண்டு உதய மார்த்தாண்டத்தில் உள்ள தனது நண்பர்கள் உதவியுடன் ஒரு வேனில் நேற்று காலை பெண் வீட்டில் சில சடங்குகளை முடிக்க மணமகனாக அழகப்பபுரம் வந்தார். இந்நிலையில், வில்சன் ரெஜிசை மாப்பிள்ளை கோலத்தில் பார்த்த வேன் டிரைவர் சந்திரசேகர் (30) என்பவர் அதிர்ச்சி அடைந்தார். வில்சன் ரெஜிசுக்கு ஏற்கனவே திருமணமான தகவலை பெண் வீட்டாருக்கு அவர் கூறினார்.

நான்கு பெண்களை ஏமாற்றியவன்

நான்கு பெண்களை ஏமாற்றியவன்

முதல் மனைவி மேரி புனிதா புகார்: தன்னை ஏமாற்றி விட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்ய இருப்பது குறித்து ரெஜிசின் முதல் மனைவியான கருங்கல் அருகே உள்ள தேவிகோடு பகுதியை சேர்ந்த மேரி புனிதாவுக்கு தகவல் கிடைக்கவே அவர் இதுகுறித்து அஞ்சுகிராமம் போலீசில் புகார் செய்தார்[2]. போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்து வில்வின் ரெஜிஸ் திருமணத்தை தடுத்து நிறுத்தி அவரை கைது செய்தனர். பின்னர் போலீஸ் நிலையம் அழைத்து சென்று அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. 2008க்குப் பிறகு அவன் என்ன செய்து கொண்டிருந்தான் என்பதை எப்படி மேரி புனிதா அறியாமல் இருந்தார் என்பது தெரியவில்லை.

ஜோசப் பிலிப் பாதையைப் பின்பற்றிய வில்வின் ரெஜிஸ்

ஜோசப் பிலிப் பாதையைப் பின்பற்றிய வில்வின் ரெஜிஸ்

2008  ஆகஸ்டில் மேரி புனிதாவுடன் திருமணம்: வாட்டசாட்டமாக தோற்றமளிக்கும் வில்வின் ரெஜிஸ் தன்னை திருச்சி ஆயுதப்படையில் போலீஸ் அதிகாரியாக பணியாற்றுவதாக கூறி மேரி புனிதாவை திருமணம் செய்துள்ளனார். 2008 ஆகஸ்டில் இவர்களது திருமணம் நடந்துள்ளது. வரதட்சணையாக கொடுத்த நகை, பணத்துடன் மாமனாரிடம் இருந்து 5 சென்ட் நிலத்தையும் வாங்கிக் கொண்டார். அதன்பின்னர் கூடுதல் வரதட்சணை கேட்டு மனைவியை சித்ரவதை செய்யவே மேரிபுனிதா கருங்கல் போலீசில் புகார் செய்தார். போலீசார் ரெஜிசை அழைத்து பேசினர். அப்போது இனிமேல் புனிதாவுடன் ஒழுங்காக குடும்பம் நடத்துவேன் என எழுதிக் கொடுத்தார். என்றாலும் தொடர்ந்து மனைவியுடன் பிரச்சினை செய்து வந்தார். இதனால் கணவன், மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். சட்டப்படி விவாக ரத்து பெற்றாரா என்று குறிப்பிடவில்லை.

ஜெயசங்கரை மிஞ்சிய வில்வின் ரெஜிஸ்

ஜெயசங்கரை மிஞ்சிய வில்வின் ரெஜிஸ்

2009ல் சந்தியாவுடன் இரண்டாவது திருமணம்: இதையடுத்து திருச்சி சென்ற வில்வின் ரெஜின் அங்கு அரியமங்கலத்தை சேர்ந்த அம்புரோஸ் மகள்  சந்தியா (25) என்ற பெண்ணை திருமணம் செய்தார். இங்கு முதல் மனைவியுடன் சட்டப்படி விவாக ரத்து பெற்றாரா இல்லையா என்று பெற்றோர் விசாரித்தார்களா அல்லது இவன் மரைத்துவிட்டானா என்ற விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை. மேலும் சர்ச்சில் தான் கிருத்துவர்களின் திருமணங்கள் நடக்கின்றன என்ற போது, எப்படி இவ்வாறு திருமணங்களை நடத்தி வைக்கின்றனர் என்பதும் புரியாத புதிடராக உள்ளது. இவர்களுக்கு 2 குழந்தைகளும் உள்ளனராம். ஒரு கட்டத்தில் சந்தியாவையும் ஏமாற்றி விட்டு கோவை சென்றார்[3].

2011ல் மூன்றாவதாக ஜெனிபரை கடத்தல்: அங்கு வ.உ.சி. நகரை சேர்ந்த ஜெனிபர் (19) என்ற பெண்ணை குமரி மாவட்டத்திற்கு கடத்தி வந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் கோவை போலீசார் ரெஜிசை குழித்துறையில் வைத்து கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். 52 நாட்கள் ஜெயிலில் இருந்து வெளியே வந்த அவர் 4–வதாக அழகப்பபுரம் பெண்ணை திருமணம் செய்ய முயன்ற போது தான் போலீசில் சிக்கி உள்ளார். கைது செய்யப்பட்டவன், பெயிலில் வெளியே வருகிறான் என்பதே வியப்பாக இருக்கிறது. போலீசாரால் இவனது பின்னணி விசாரிக்கப்பட்டிருக்க வேண்டும் அல்லது அவன் சொல்லாமல் மறைத்திருக்க வேண்டும். இருப்பினும் எல்லாமெ திருச்சியில் நடக்கிறது எனும் போது வியப்பாகத்தான் உள்ளது.

2010ல் ஜோஷி என்ற பெண்ணை கொலை செய்தது: இந்த தகவல்களை கேட்ட போலீசார் ரெஜிஸ் பணத்துக்காகத் தான் பெண்களை ஏமாற்றி திருமணம் செய்திருக்கலாம் என கருதினர். ஆனால் ரெஜிஸ் பற்றி போலீசாருக்கு கிடைத்த மற்றொரு தகவல் அவர் ஒரு கொலைகாரன் என்பதை அம்பலப்படுத்தியது. 2010–ம் ஆண்டு திருச்சியில் வில்விஸ் ரெஜிஸ் வசித்து வந்த போது தனது பக்கத்து வீட்டில் வசித்த ஒரு பெண்ணுடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டது[4]. அந்த பெண்ணின் கணவர் அதே பகுதியை சேர்ந்த ஜோஸி என்ற பெண்ணுடன் நெருங்கிப் பழகி வந்துள்ளார்[5]. இதையறிந்த அவரது மனைவி தனது கணவரின் கள்ளக்காதலியை தீர்த்துக் கட்ட வேண்டும் என வில்வின் ரெஜிசிடம் கெஞ்சிக் கேட்டாராம். அதற்காக நிறைய பணம் தருவதாகவும் அந்த பெண் கூறவே ரெஜிஸ் கொலைக்கான திட்டத்தை வகுத்தார். அதன்படி ‘நீ அந்த பெண்ணை நைசாக பேசி தஞ்சாவூர் கல்லணைக்கு அழைத்து வந்து விடு, அங்கு நான் என் நண்பர்களுடன் சேர்ந்து ஜோஸியை கொலை செய்து விடுகிறேன்என கூறி உள்ளார். அவரது திட்டப்படி அந்த பெண் ஜோஸியை கல்லணைக்கு அழைத்து செல்லவே அங்கு ரெஜிசும், அவரது நண்பர்களுமாக சேர்ந்து ஜோஸிசை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர்.

தொடர் – குற்றம் செய்யும் ரெஜிஸ் மீது மறுபடியும் வழக்குப் பதிவு: தோகூர் போலீசார் இந்த கொலை தொடர்பாக ரெஜிஸ் உள்பட 4 பேரை கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் ரெஜிஸ் ஜாமீனில் வெளியே வந்த பின்னரும் பெண்களை ஏமாற்றி திருமணம் செய்ததை மட்டும் விடவில்லை. இதனால் மீண்டும் போலீசில் சிக்கிக் கொண்டுள்ளார். இதைத்தொடர்ந்து அஞ்சு கிராமம் போலீசார் ரெஜிசை கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்கள் ரெஜிஸ் மீது இந்திய தண்டனை சட்டம் 498(ஏ) – பெண்களை கொடுமைபடுத்துதல், 406–குற்றம் சதிச் செயலில் ஈடுபடுதல், 494 ஆர்/டபிள்யூ 511–ஏமாற்றி திருமணம் செய்ய முயற்சி செய்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்தனர். பின்னர் அவரை நாகர்கோவில் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்[6].

தமிழகத்தில் கல்யாண மோசடி மன்னன்கள் அதிகரிக்கும் விதம்: இது கோயம்புத்தூர் ஜோசப், பிலிப் ஜோசப், திலிப் ஜோசப் என்ற பெயர்களில் நான்கு பெண்களை திருமணம் செய்து கொண்டு ஏமாற்றியவன் போலவே இருக்கிறது[7]. ஒரேகாலத்தில், தமிழகத்தில் இப்படி ஒரே மாதிரியான பெண்களின் மீதான குற்றங்கள் நடந்திருப்பதால், அதிலும், சர்ச் அம்மாதிரியான திருமணங்களை செய்து வைத்திருப்பதால், அதில் சம்பந்தப்பட்ட பாஸ்டர் முதலியோர்களையும் இவ்விசயத்தில் விசாரிக்க வேண்டும். ஏனெனில், அவர்களது ஒத்துழைப்பு இல்லாமல், இவ்வாறு மேன்மேலும் குற்றங்களை செய்திருக்க முடியாது. கோயம்புத்தூர் வழக்கில், சர்ச்சை சேர்ந்தவர்கள் விசயங்களை மறைக்கப் பார்ப்பது தெரிகின்றது[8]. அதனை ஏமாற்றப்பட்ட மனைவியே இணைதளத்தில் குறிப்பிட்டிருப்பது காணத்தக்கது[9].

© வேதபிரகாஷ்

04-09-2013