Posts Tagged ‘கூத்து’

ஐந்து மும்பை நடிகைகள் சொகுசு விபச்சாரம் – கையும், களவுமாக கைது!

ஜூலை16, 2013

ஐந்து மும்பை நடிகைகள் சொகுசு விபச்சாரம் – கையும், களவுமாக கைது!

Photos appearing in the media in the context

மும்பையில் விபச்சாரம்: மும்பையில் விபச்சாரம் என்பது ஒரு சமூகப் பிரச்சினை அதே நேரத்தில் தொழிலாகவும் இருந்து வருகிறது[1]. இந்தியாவிலேயே வெளிப்படையாக “ரெட்-லைட் ஏரியா” என்று குறிப்பிடப் பட்டு விபச்சாரம் தொழிலாக நடத்தப் பட்டு வருகிறது. ஆனால், அதனால், பல பெண்களின் வாழ்க்கை சீரழிக்கப்படுகின்றது. ஜான் கெர்ரி என்ற அமெரிக்க செயலாளரால் வெளியிடப் பட்டுள்ள “Trafikking in persons Report – 2013” அறிக்கையில் இதைப் பற்றி அலசப்பட்டுள்ளது[2]. இது குறிப்பிற்காக இது கவனத்திற்கு கொண்டு வந்தாலும், இன்றைய நிலையில் அமெரிக்காவின் தாக்கத்தால் தான் இந்திய சமூகம் அதிகமாகவே கெட்டு வருகிறது[3]. கம்பெனிகள், அவர்கள் கொடுக்கும் விளம்பரங்கள், அவற்றின் பொருட்கள், சேவைகள் எல்லாமே ஒரே கோணத்தில் தான் செயல்பட்டு வருகிறது. அதில் பெண்மையைப் போற்றுவதாக ஒன்றும் இல்லை. ஆபாசமாக, நிர்வாணமாகக் காட்ட வேண்டும் என்றுதான் அவை உள்ளன. பிறகு அவர்கள் எப்படி இந்தியாவின் மீது குற்றஞ்சாட்டுகிறார்கள் என்று தெரியவில்லை.

Actresses, pimps and prostitution

மாடல் புரோக்கர் விபச்சாரம் நடத்தியது: மும்பை அந்தேரியில் சொகுசு பலமாடி அடுக்குக்கட்டிடங்கள் கொண்ட பகுதி – ஒஸிவாரா, லோகன்ட்வாலா. அங்கு வாழ்பவர்கள் எல்லோருமே IAS மறும்  IPS அதிகாரிகள் தாம். ஒரு சொஸைடி அமைக்கப் பட்டு அவர்கள் அங்கு வாழ்ந்து வருகிறார்கள்.  ஒரு  IAS அதிகாரியின் பிளாட்டை [flat B 1402,  Meera Towers, Oshiwara area, Lokhandwala] இம்தியாஸ் கான் என்ற மாடல்களை வைத்து விழாக்கள் நடத்துபவன் வாடகைக்கு எடுத்திருக்கிறான். ஒவ்வொரு மாடலுக்கும் ரூ.50,000 முதல் ஒரு லட்சம் வரை வசூலிக்கிறானாம். மாடல்களை உருவாக்குகின்றவன், அறிமுகப்படுத்துப்பவன், புகைப்படங்கள் எடுப்பவன், சாதாரணமாக அவ்வாறு மாடலுக்கு வரும் பெண்களுடன் உறவாடாமல் இருக்கமாட்டான் ஏன்ன்பது தெரிந்த விஷயமே. அத்தொழிலுக்கு வரும் பெண்களும் பெண்மைக்குரியவற்றை விட்டுவிட்டுதான் வேலைக்கு வரவேண்டியுள்ளது. கேமராவின் முன்பு, உடலைக் காட்டி-காட்டி பழக்கமாகி விடுவதால் ஒரு நிலையில் விபச்ச்சாரத்திற்கும் ஒப்புக் கொள்கிறார்கள் போலும். அதனால், இம்தியாஸ் கான் அவர்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தி சம்பாதித்து வருகிறான்.

pimps arrested in a high-profile sex racket case being taken into custody on Friday

போலீஸாருக்கு தகவல் கிடைத்தது, கைது செய்தது: இதைப் பற்றி போலீஸாருக்கு தகவல் கிடைத்ததும், விபச்சாரிகளை தேடி வருவது போல வந்து பேரம் பேசியுள்ளனர். புரோக்கர் குறைந்த நேரத்திற்கு என்றால் நடிகைகூட கிடைப்பாள் என்று ரூ. ஒரு லட்சம் கேட்டான். பிறகு பேரம் பேசியதில் ரூ.25,000/-ற்கு ஒப்புக் கொண்டான். ஒரு நடிகையுடன், வெளியே வந்தப்போது, போலீஸார் பிடித்துக் கொண்டனர். இந்நிலையில் குறிப்பிட்ட பிளாட்டை போலீஸார் ரெயிட் செய்தலில் ஐந்து நடிகைகள், மூன்று புரோக்கர்கள் உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த நடிகைகள்[4] டெலிவிஷன் நிகழ்சிகள், தினசரி தொடர்கள், போஜ்பூரி மற்றும் இந்தி திரைப்படங்கள் முதலியவற்றில் நடித்துள்ளனர்[5]. அதில் ஒருவர் பிரபலமான இந்தி நடிகை திரைப்படத்திலும் நடித்துள்ளார் என்பதால், பெயர் வெளியிடப்படவில்லை[6]. பிடிபட்ட புரோக்கர்கள் – இம்தியாஸ் செயிக், இஸ்ரர் ஆலம் மற்றும் கரன் முண்டே [Imtiyaz Shaikh, Israr Alam and Karan Munde] என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்[7].

A girl participated in the anti-rape campaign Chennai - The Hindu photo

நாகரிகத்தின் சீரழிவு: சூரியநெல்லி பெண் வழக்கு பெரிய-பெரிய அரசியல்வாதிகளால் காலம் நீட்டிக்கப்பட்டது. வழக்கின் நிலையும் நீர்க்கப்பட்டது. இன்று கற்பழிப்பு வழக்கு விபச்சார வழக்கு போல மாற்ற முயற்சி செய்யப்படுகிறது[8]. மேனாட்டு நாகரிகம் படித்தவர்களையும் எப்படி பாதிக்கும் என்பது சமீபத்தைய வழக்குகள் எடுத்துக் காட்டுகின்றன[9]. பெண்களே மறைமுக விபச்சாரத்திற்கு ஒப்புக் கொள்ளும் நிலையிம் தெரிகிறது[10]. தில்லி கற்பழிப்பு வழக்கு தேவையில்லாத அளவிற்கு, அநாவசியமான விஷயங்கள் விவாதிக்கப் பட்டு, அந்தரங்கள் ஊடகங்களில் வெளியாகின. உடலுறவுக்கு ஏற்ற வயது எது என்றெல்லாம் அமைச்சர்கள் விவாதித்தனர்[11]. திருமணத்துக்கு முன் செக்ஸ் வைத்துக் கொள்வதில் தவறில்லை[12] என்று சொன்ன செக்ஸ் எக்ஸ்ப்ர்ட் இப்பொழுது சொல்வது – 18 வயதில் இருந்தே அனைத்தும் துவங்க வேண்டும்! பள்ளிமாணவிகள் காதலர்களுடன் சுற்றுலா என்று சென்றது[13], ஆசிரியர்கள் மாணவிகளை செக்ஸ் தொல்லை செய்தது[14], முதலியன சமூக பிறழ்சி என்பதை விட, அமெரிக்காவின் தாக்கம் இந்திய சிறுவர்களை, மாணவர்களை அதிக அளவில் கெடுக்கிறது என்றுதான் தெரிகிறது.

வேதபிரகாஷ்

© 16-07-2013


[4] During the interrogation, the police officers discovered that all the five girls are known actresses; some of them have played character roles in Saas Bahu daily soaps. Others have also acted in Bhojpuri and C grade films.