Posts Tagged ‘சமரசம்’

சிறார் கற்பழிப்புகள், பிடோபைல்கள், சுற்றுலா செக்ஸ் முதலியனவும்: சட்டங்களின் முன்பாக பாதிக்கப்பட்ட சிறுமிகள், பெண்களின் நிலையும்!

ஜூன்27, 2015

சிறார் கற்பழிப்புகள், பிடோபைல்கள், சுற்றுலா செக்ஸ் முதலியனவும்: சட்டங்களின் முன்பாக பாதிக்கப்பட்ட சிறுமிகள், பெண்களின் நிலையும்!

தி ஹிந்து படம் - நீதிபதி விமர்சனங்கள்

தி ஹிந்து படம் – நீதிபதி விமர்சனங்கள்

கற்பழித்தவனை திருமணம் செய்து கொள்ளலாமா, கூடாதா?: கற்பழித்தவனோடு சமரசம் செய்து கொள்ளும் பேச்சுக்கே இடமில்லை என்று சென்னை ஐகோர்ட்டால் சமரசத்துக்கு பரிந்துரைக்கப்பட்ட கடலூர் இளம்பெண் மறுப்பு தெரிவித்துள்ளார். பாலியல் பலாத்கார வழக்கு ஒன்றை சமரச தீர்வு மையத்துக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பிறப்பித்த உத்தரவு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு வழக்கறிஞர்கள் மற்றும் மகளிர் அமைப்புகள் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர், என்று தினகரன் செய்தி வெளியிட்டது[1].  கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அருகே கொடிக்களம் கிராமம் சட்ட நிபுணர்கள் மற்றும் மகளீர் அமைப்புகளின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்துள்ளது இந்த ஊர். இது சட்டத்திற்கு புறம்பானது என்றும் இதனால் எதிர்காலத்தில் பாலியல் குற்றங்கள் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது[2].  ஊடகங்களுக்கோ, விவஸ்தையே இல்லாமல், எல்லாவாற்றையும் போட்டுக் கொண்டிருக்கிறது. “தி ஹிந்து”வில் “சேட்” என்று பட்டிமன்றம் நடத்தியுள்ளது[3].

Rape Indian law position

Rape Indian law position

தமிழகத்தில் சிறார் பாலியல் குற்றங்கள் நடந்துள்ளன: தமிழகத்தில் பாலியல் குற்றங்கள் நடந்து கொண்டுதான் உள்ளது. உலகத்திலேயே பிரசித்திப் பெற்ற பிடோபைல்கள் தமிழகத்தை, குறிப்பாக சென்னையை புகலிடமாகக் கொண்டிருந்தனர். சென்னையில் மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில், குறிப்பாக மகாபலிபுரத்தில், பீடோபைல் / பிடோபைல் என்கின்ற குழந்தைக் கற்பழிப்பாளர்கள் பிடிபட்டுள்ளனர்[4]. வில் ஹியூம் என்பவன், சென்னையில் 30 வருடங்களாகத் தங்கியிருந்தவன் 2011லந்தான் பிடிபட்டான்[5]. பல நூறு குழந்தைகளுடன் அவ்வாறு செக்ஸ் விளையாடல்கள் கொண்டுள்ளான். மே 2002ல் அத்தகைய பாலியல் குற்றங்களுக்கு கைது செய்யப் பட்டான். ஆனால் தப்பி மறைந்து விட்டானாம்.  08-11-2009 அன்று நெதர்லாந்த்தைச் சேர்ந்த வில்லியம்ஸ் என்பவர் குழந்தைகளின் நிர்வாண / ஆபாசப் படங்களை இணைதளத்தில் போட்டதாக கைது செய்யப் பட்டான்[6]. அப்பொழுது இந்த சட்டமேதைகள் எல்லாம் எங்கேயிருந்தனர் என்று தெரியவில்லை. ஆனால், இப்பொழுதோ, அவரவர் கருத்துச் சொல்ல ஆரம்பித்துள்ளனர்.

தி ஹிந்து படம் - நீதிபதி விமர்சனம்

தி ஹிந்து படம் – நீதிபதி விமர்சனம்

அனைத்திந்திய முற்போக்குப் பேரவையின் கருத்து: “அனைத்திந்திய முற்போக்குப் பேரவை” என்று திடீரென்று எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை. இதுகுறித்து அப்பேரவையின் தமிழ்நாடு மாநில பொதுச்செயலாளர் டாக்டர் ஜி. ஆர். இரவீந்திரநாத் வெளியிட்டுள்ள அறிக்கையில்[7], “கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தைச் சேர்ந்த மோகன் என்பவர் 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். அதல் இச்சிறுமி கருத்தரித்து குழந்தையையும் பெற்றுள்ளார். இவ்வழக்கின் மேல் முறையீட்டை விசாரித்த நீதிபதி பாதிக்கப்பட்ட பெண்ணும், குற்றவாளியும் சமரச மையத்தில் தீர்வுகாணலாம் என்று உத்தரவிட்டுள்ளார். இது வருத்தமளிக்கிறது. இது தவறான முன் உதாரணமாக அமைந்துவிடும். பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளான பெண் மற்றும் அவரின் எதிர்காலத்தையும், அவர்களது சமூக பொருளாதார பாதுக்காப்பைக் கருத்தில் கொண்டும் பாலியில் குற்றவாளியையே திருமணம் செய்துகொள்ளும் வகையிலான இத்தகைய சமரச முயற்சிகள் பாதிக்கப்பட்ட பெண்ணின் உரிமைகளுக்கு எதிரானது. திருமணம் என்றால் என்ன என்ற புரிந்துகொள்ளாத செயலாகும். பெண்ணை ஒரு பொருளாக பார்க்கும் மோசமான கண்ணோட்டமாகும். இது அந்தப் பெண்ணுக்கு வழங்கப்படும் மற்றுமொரு தண்டைனயாகும். அப்பெண் உள ரீதியாகவும், உடல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும் அனுபவித்த கொடுமைகளுக்கு, அவமானங்களுக்கு இது நியாயம் வழங்குவதாக இருக்காது.

Wilhelums Weijdeveld - etherlands

Wilhelums Weijdeveld – etherlands

ஒரு பெண்ணை பலர் சேர்ந்து பாலியல் வல்லுறவு செய்தால் அந்த பெண்ணை பாலியல் வல்லுறவில் ஈட்பட்ட அனைவருக்கும் மனைவியாக்க முடியுமா?:  “வன்புணர்சியில் ஈடுபட்டவருக்கு கடுமையான தண்டனை வழங்கிடவேண்டும். அதற்குப் பதிலாக வன்புணர்ச்சியால் பாதிக்கப்பட்ட பெண்ணையே திருமணம் செய்து வைக்க முயல்வது பல்வேறு மோசமான விளைவுகளை எதிர்காலத்தில் ஏற்படுத்தும். குற்றவாளிக்கு தண்டனை என்பதற்குப் பதில் பாதிக்கப்பட்ட பெண்ணையே பரிசளிப்பது போல் உள்ளது.   பாலியல் குற்றவாளி ஏற்கனவே மணமானவர் என்றால் பாதிக்கப்பட்ட பெண்ணை அவருக்கு இரண்டாம் தாரமாக மணம் செய்து வைக்க சொல்வார்களா? ஒரு பெண்ணை பலர் சேர்ந்து பாலியல் வல்லுறவு செய்தால் அந்த பெண்ணை பாலியல் வல்லுறவில் ஈட்பட்ட அனைவருக்கும் மனைவியாக்க முடியுமா? ஒரே நபர் பல பெண்களை பாலியல் வன்புணர்ச்சி செய்தால் பாதிக்கப் பட்ட அந்த பெண்கள் அனைவரையும் பாலியல் குற்றவாளிக்கு மனைவிமார்களாக்க முடியுமா? இதற்கு நீதிமன்றம் என்ன பதில் சொல்லப்போகிறது? இது  நமது நீதித்துறையின் ஆணாதிக்க மனோபாவத்தையே வெளிப்படுத்துகிறது”. பிறகு தொடர்கிறார்.

M.L.Bright-Brite

M.L.Bright-Brite

தவறான முன்னுதாரணமாகி விடும்: “பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும், பாலியல் வல்லுறவின் மூலம் பிறந்த குழந்தைக்கும் பாலியல் வல்லுறவில் ஈடுபட்ட குற்றவாளியே முழுமையான இழப்பீடு வழங்கவேண்டும். அந்த குழந்தையை வளர்ப்பதற்கான அனைத்து பொருளாதார செலவுகளையும் அக்குற்றவாளியே ஏற்கவேண்டும். அதைவிடுத்து, பாதிக்கப்பட்ட பெண்களின் சமூக பொருளாதார பாதுகாப்பை காரணம் காட்டி பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபட்டவனையே மணக்க வைக்க மேற்கொள்ளும் முயற்சி பெண்களை இழிவுபடுத்துவதாகும்.      ஒரு பெண்ணின் தனிமனித உரிமையை மதிக்காமல், அவளது உடலின் மேல் அத்துமீறி செயல்பட்ட ஒரு மிருகத்தை, அப்பெண்ணுக்குவாழ்வளித்தல்என்ற பெயரில் மணம் முடித்துவைப்பது  கொடுமையானது. ஒரு பெண்ணுக்கு ஒரு ஆண்தான் வாழ்வளிக்க முடியும் என்பதே ஒரு ஆணாதிக்க வெளிப்பாடு தான்பெண்கள் சமூகபொருளாதார ரீதியாக ஆண்களையே சார்ந்திருக்க வேண்டும், சுயேச்சையாக வாழமுடியாது என்ற தவறான பிற்போக்கு சிந்தனையையே நீதித்துறையும் கொண்டிருப்பது வருத்தமளிக்கிறது.      பாலியல் வல்லுறவு கொடுமைகளுக்கு உள்ளான பெண்களுக்கும், பாலியல் வல்லுறவு மூலம் பிறந்த குழந்தைகளுக்கும் சமூக பொருளாதார பாதுகாப்பை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மத்தியமாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும்.    எனவே, சென்னை உயர்நீதி மன்றம் தனது சமரச உத்தரவு  முயற்சியை திரும்பப் பெறவேண்டும். பாலியல் குற்றவாளிக்கு கடுமையான தண்டனையை வழங்கவேண்டும்  என அனைத்திந்திய முற்போக்குப் பேரவை  கேட்டுக்கொள்கிறது”, இவ்வாறு கூறியுள்ளார்[8].

St george boarding schoolவி.மோகன் மைனர் பெண்ணை 2009ல் கற்பழித்தது, கைது செய்யப்பட்டது, சிறைதண்டனை பெற்றது: கடலூர் மாவட்டம், விருதாச்சலத்தை சேர்ந்தவர் வி. மோகன். பெற்றோரை இழந்த 17 வயது மைனர் பெண்ணை கற்பழித்ததாக விருதாச்சலம் அனைத்து மகளிர் போலீசாரால் கடந்த 2009-ம் ஆண்டு மோகன் கைது செய்யப்பட்டார். அப்போது, கற்பழிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட அந்த இளம்பெண் கர்ப்பம் அடைந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது, அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. இதற்கிடையில், இந்த வழக்கை விசாரித்த கடலூர் மகளிர் நீதிமன்றம், மோகனுக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து கடந்த ஆண்டு தீர்ப்பு வழங்கியது. மேலும் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணுக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டது.

கற்பழித்தவனின் மேல்-முறையீடு: இதையடுத்து, இந்த தண்டனையை நிறுத்தி வைக்கவேண்டும்என்றும், தனக்கு ஜாமீன் வழங்கவேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில் மோகன் மனு தாக்கல் செய்தார். தம்மால் பாதிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்யவும் விருப்பம் தெரிவித்துள்ளார்[9]. இந்த மனுவின் மீது விசாரணை நடத்திய நீதிபதி பி.தேவதாஸ், இதேபோன்ற இன்னொரு வழக்கில் ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகிய வாலிபர் பாதிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். அதுபோல் இந்த வழக்கிலும் ஒரு முயற்சி எடுக்கலாம் என்று முடிவு செய்துள்ளேன். மனுதாரரை சிறைக்கு அனுப்பி எந்த பலனும் யாருக்கும் ஏற்பட போவது இல்லை. பாதிக்கப்பட்ட பெண்ணும் அனாதையாக உள்ளார். எனவே, மனுதாரர் பெண்ணை திருமணம் செய்ய தயாராக உள்ளாரா? என்று சமரசமாக பேசி அதன் முடிவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இதற்காக மனுதாரருக்கு இடைக்கால ஜாமீன் வழங்குகிறேன் என உத்தரவிட்டார்[10].

பாதிக்கப்பட்ட பெண் சொல்லும், வைக்கும் வாதங்கள்: இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணுடன் தொலைபேசி மூலம் பிரபல செய்தி நிறுவனம் ஒன்று பேட்டி எடுத்தது. அப்போது இந்த உத்தரவு தொடர்பாக கருத்து தெரிவித்த அவர், தனது உறவுக்காரப் பெண்ணை திருமணம் செய்துகொள்ளப் போவதாக என்னிடமே மூன்று முறை கூறியுள்ளார். அப்படிப்பட்டவரை என்னால் எப்படி திருமணம் செய்து கொள்ள முடியும்? என்று மறுப்பு தெரிவித்தார். என் விருப்பத்தோடத்தான் உறவு கொண்டதாக நீதிமன்றத்துல அவர் கூறியுள்ளது சுத்தப் பொய். தற்போது, “ஒழுங்கா என்னை திருமணம் செய்து கொண்டு பண்ணிக்கிட்டு கேஸ்ல இருந்து வெளியில கொண்டு வந்துவிடு.. நான் வேற ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்கிறேன்.. நீ வேற வழியை பார்த்துக் கொள்”, என மிரட்டுகிறார் மோகன். அப்படி செய்யவில்லை எனில் கொன்றுவிடுவேன் என்று மிரட்டுகிறார்[11]. இவ்வாறு பாதிக்கப்பட்ட பெண் கண்ணீருடன் அதிர வைக்கும் புகார்களை அடுக்கி வருகிறார்[12]. தன்னுடைய சொத்துகளை உங்கள் பெயரிலோ, உங்கள் குழந்தை (தற்போது ஆறு வயது) பெயரிலோ எழுதித்தர மோகன் முன்வந்தால் சமரசத்துக்கு ஒப்புக் கொள்வீர்களா? என்ற கேள்விக்கு பதில் அளித்த அந்தப் பெண், ‘அதற்கெல்லாம் வழியே இல்லை. இதெல்லாம் வெறும் வாய்வித்தை. என்னை ஏமாற்றியதுபோல் கோர்ட்டையும் மற்ற அனைவரையும் ஏமாற்ற அவர் எந்த நிலைக்கும் போவார்’ என்று திட்டவட்டமாக கூறினார்[13].

இந்திய சட்டங்கள் சொல்வதென்ன?: குற்றவியல் சட்டம் (திருத்தப்பட்டது) 2013ன்படி, எல்லாவிதமான பாலியல் செயலும் குற்றம் என்று தான் என்றுள்ளது. குற்றம் புரிந்தவனுக்கு 20 வருடம் சிறை மற்றும் தண்டத்தொகையுடன் கடுங்காவல் என்றும் உள்ளது, இது ஆயுள் வரை நீட்டிக்கலாம். பாலியல் குற்றங்களிலிருந்து சிறார்களைக் காக்கும் சட்டம், 2012ன் (POCSO Act) பிரிவுகளின் கீழும் தண்டனை கொடுக்கலாம்[14].  இருப்பினும், இதற்கு முன்னர் நடந்த குற்றங்கள், உரிய சட்டப் பிரிவுகளில் விசாரிக்க்கப்பட்டு, தண்டனை அளிக்கப்படும். இத்தகைய வழக்குகளில், பாதிக்கப் பட்ட பெண்ணின் மீது, குற்றம் புரிந்தவன் அழுத்தம் கொண்டு வந்து, சமரசம் செய்து கொள்ள செய்யக் கூடும், அந்நிலயில் ஏற்றுக் கொள்ள முடியாது என்று உச்சநீதி மன்றம் கூறியுள்ளது[15]. பிடோபைல் குற்றங்களில் மிகவும் பாரபட்சமாகத்தான் இந்திய நீதிமன்றங்கள் நடந்து கொண்டுள்ளன[16]. அதைப் பற்றி ஊடகங்களும் கண்டு கொள்ளாமல் விட்டிருக்கின்றன.

வேதபிரகாஷ்

© 26-06-2015

[1] தினகரன், பாலியல் பலதகாரம் செய்தவரை தூக்கில் போடுங்கள்: சமரச உத்தரவை ஏற்க மறுத்த பெண் உயர்நீதிமன்றத்துக்கு  கோரிக்கை, 19.06.15: வெள்ளிக்கிழமை, 2015-06-26.

[2] http://indianexpress.com/article/india/india-others/madras-high-court-judge-gives-bail-to-rape-accused-to-mediate-with-victim/

[3] Ramya Kannan, City Editor, The Hindu, Sudha Ramalingam, Human rights and gender-issues lawyer, and Vasundhara Sirnate, Chief Coordinator of Research at The Hindu Centre for Politics and Public Policy. Dennis S. Jesudasan என்று பெரிய பட்டாளமே கலந்து கொண்டுள்ளது. http://www.thehindu.com/news/national/live-chat-on-madras-high-courts-directive-rapistvictim-mediation/article7353924.ece

[4] வேதபிரகாஷ், குழந்தை விபச்சாரம்: பாலியல் வன்முறைக்கொடுமைகள், மேலும் விவரங்களுக்கு, இங்கே பார்க்கவும்:https://womanissues.wordpress.com/2009/11/13/குழந்தை-விபச்சாரம்-பாலி/

[5] https://womanissues.wordpress.com/2009/11/17/will-hieum-phedophile-child-rapist-hienous-criminal/

[6] https://womanissues.wordpress.com/2009/11/13/child-prostitution-pedophile-criminals-in-chennai/

[7]  நக்கீரன், பாலியல் வன்புணர்ச்சி குற்ற வழக்குகளை சமரச மையத்துக்கு அனுப்புவது சரியல்ல: .மு.பே, வெள்ளிக்கிழமை, 26, ஜூன் 2015 (22:51 IST)

[8] http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=145779

[9]  http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=152739

[10] மாலைமலர், கற்பழித்தவனோடு சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை: ஐகோர்ட்டால் சமரசம் செய்துகொள்ளும்படி அறிவுறுத்தப்பட்ட பெண் பேட்டி, பதிவு செய்த நாள் : வெள்ளிக்கிழமை, ஜூன் 26, 8:41 PM IST

[11]  தமிள்.ஒன்.இந்தியா, பலாத்கார குற்றவாளியுடனேயே சமரசம்: ஹைகோர்ட் உத்தரவால் மிரட்டப்படும் அபலைப் பெண்!,

[12] http://tamil.oneindia.com/news/tamilnadu/new-controversy-on-hc-order-giving-bail-rape-convict-row-229714.html

[13] http://www.maalaimalar.com/2015/06/26204137/cuddalore-molestation-victim-s.html

[14] http://timesofindia.indiatimes.com/city/chennai/Mediation-after-rape-No-your-honour-say-jurists/articleshow/47808975.cms

[15]  Supreme Court of India – Shimbhu & Anr vs State Of Haryana on 27 August, 2013; Author: P.Sathasivam; Bench: P Sathasivam, Ranjana Prakash Desai, Ranjan Gogoi http://indiankanoon.org/doc/137841605/

[16] https://atrocitiesonindians.wordpress.com/2013/11/17/protection-of-children-from-sexual-offences-act-2012/

தூஷணம் செய்யப்பட்டவர், அவமதிக்கப்பட்டவர் சமரசத்திற்கு அழைக்கப்படும் ரகசியம், பின்னணி என்ன?

ஒக்ரோபர்24, 2012

தூஷணம் செய்யப்பட்டவர், அவமதிக்கப்பட்டவர் சமரசத்திற்கு அழைக்கப்படும் ரகசியம், பின்னணி என்ன?

இணையதளத்தில் அவதூறு பரப்பியதாக புகார்! கைது செய்யப் பட்டோருடன் சமரசம் செய்ய பாடகி சின்மயி மறுப்பு!

டிவிசெனலுக்கு முன்பு வீரநடைபோட்டு, எதையோ சாதித்து விட்டது போலத் தோன்றி, சிறைக்குச் சென்ற பிறகு, குற்றத்தால் தண்டனை பெற நேரிடும் என்று அறிந்து, பிறகு, பாதிக்கப்பட்டவரையே, மிரட்டுவது என்ன வகையில் கருதப்பட்ட வேண்டும் என்று தெரியவில்லை. நாங்கள் என்னவேண்டுமானாலும் செய்வோம்,

முன்பு வெடிகுண்டு வழக்கில் கைதாகி, சிறைவாசம் பெற்றவர்கள் கூட, அப்பட்த்தான் தோன்றினார்கள், சிரித்துக் கொண்டே கைகளை ஆட்டினார்கள். எங்கோ ஜாலியாக செல்வது போல, போலீஸ் வண்டிகளில் ஏறும் போது, நடந்து கொண்டார்கள்!

ஆனால், ஒன்றும் செய்யக்கூடாது. சட்டங்கள், நீதிகள், நீதிமன்றங்கள் எதைப் பற்றியும் கவலையில்லை. மிரட்டி, உருட்டி, பயமுறுத்தியே சாதித்து விடுவோம் என்ற மனப்பாங்கு எப்படி உருவாகிறது? தீவிரவாதத்தால், அப்பாவி மக்கள்

கொல்லப்பட்டார்கள், குரூரமாக சிதறி பலியானார்கள், ரத்தம் பாய்ந்தது, கை-கால்கள் சிதறின என்றாலும், தீவிரவாதிகள் அத்தகைய செயல்களில் ஈடுபட்டுக் கொண்டேதான் இருக்கிறார்கள். அதேபோலத்தான். இவர்களும், நாங்கள் சட்டங்களை மீரிக்கொண்டே இருப்போம், ஆனால் எங்களைக் காட்டிக் கொடுக்கக் கூடாது என்ற மனப்பாங்கு ஏன் வருகிறது?

தமது சகோதரி-தாயார்களுக்கு அத்தகைய தூஷணம் நடந்திருந்தால் என்ன செய்திருப்பர்?: கைது செய்யப்பட்டோரின் வழக்கறிஞர்களுக்கு சட்டம் பற்றி நன்றகத் தெரியும் தானே? அவர்களே சின்மயிக்கு வக்காலத்து வாங்கியிருந்தால், என்ன செய்திருப்பார்கள்? ஒரு பெண்ணை, பெண் என்றுகூட பாராமல், தாயுடன் சேர்த்து தூஷித்து, வெளிப்படையாக, இணைதளத்தில் அவமதித்தப் பிறகு, அத்தகைய எண்ணம் எப்படி வருகிறது? அந்த கைது செய்யப்பட்டோரின் வழக்கறிஞர்கள், யாராவது அவர்களுடைய சகோதரி, தாயார்களை இவ்வாறு அவமதித்திருந்தால்,

பிராண வகுப்பைச் சார்ந்தவர் என்ற காரணத்திற்காக தூஷிக்கபட்டு, அவமானப்படுத்தப்பட்டவரை ஏன் மிரட்டி சமரத்திற்கு பேச முற்படவேண்டும்?

சும்மா விட்டிருப்பார்களா? அந்த மெத்தப் படித்த புரொபசர் சரவண பெருமாள், ராதாமணாளன் முதலியோர் என்ன செய்திருப்பர்? அப்படியென்றால், பிராமணப்பெண் மட்டும், எல்லா தூஷணங்களையும், அவமானங்களையும் சகித்துக் கொண்டு, அடங்கியொடுன்கி பயந்து போக வேண்டுமா? இணையதளத்தில் அவதூறு பரப்பிய புகாரில் கைதாகி சிறையில் உள்ளோருடன் சமரசம் செய்துகொள்ள பின்னணி பாடகி சின்மயி மறுத்துவிட்டார்[1].

சமரசப் பேச்சின் பின்னணி, காரணம் என்ன?: பாடகி சின்மயி தனக்கு டிவிட்டர் மற்றும் பேஸ்புக்கில் ஆபாசமாகக் கருத்துக்கள் எழுதி மன உளைச்சல் ஏற்படுத்துவதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்திருந்தார். புகார் குறித்து விசாரணை நடத்திய போலீசார், கல்லூரி துணை பேராசிரியர் சரணவன பெருமாள் மற்றும் திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் ராதாமணாளன் என்பவரையும் கைது செய்தனர்.  சரவணபெருமாள் ஏற்கனவே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ராதாமணாளன் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு அழைத்துவரப்பட்டு, பின்னர் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் சிலரை இந்த புகாரில் கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.  இந்த நிலையில் கைது செய்யப்பட்டோரின் வழக்கறிஞர்கள், பாடகி சினிமயிடன் சமரசம் செய்து கொள்வதற்காக சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், சமரசத்தை ஏற்க மறுத்த சின்மயி, நீதிமன்றத்தின் மூலமே தீர்வு காண விரும்புவதாக கூறிவிட்டு வெளியேறினார்.

 

சமூகத்தில் நற்பெயர் கெடும் என்றால் அத்தகைய ஈனத்தனமான செயல்களைச் செய்திருக்க மாட்டார்கள்: சமூகத்தில் நற்பெயர் கெடும் என்றால் அத்தகைய ஈனத்தனமான செயல்களைச் செய்திருக்க மாட்டார்கள். படித்துப் பட்டம் பெற்றவர்கள், இணைதளத்தில் பதிவு செய்யக்கூடிய அளவில் வல்லவர்கள், பொறுப்பான உத்தியோகத்தில் இருப்பவர்கள், நாகரிகமான கனவான்கள் என்பவர்கள் அவ்வாறு எப்படி செய்தன்சர்? அதன் பின்னணி என்ன? தூண்டுகோள் என்ன? இவற்றையும் பொது மக்கள் அறியவேண்டும், அறிந்து கொள்ளவேண்டும்..

வேதபிரகாஷ்

24-10-2012