Posts Tagged ‘ஜோக்’

அனைவரும் விரும்பத்தக்க 100 சதவீதம் செக்ஸியான பெண் – திக்விஜய்சிங் வர்ணனை!

ஜூலை28, 2013

அனைவரும் விரும்பத்தக்க 100 சதவீதம் செக்ஸியான பெண் – திக்விஜய்சிங் வர்ணனை!

Rahul Gandhi meets potential Youth Congress candidates

सौ टका टंच माल – சௌ டகா டஞ்ச் மால்[1]: மத்திய பிரதேச மாநிலம் மாண்ட்கார் பாராளுமன்ற தொகுதியில் நடந்த விழாவில் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய்சிங், அந்த தொகுதி எம்.பி.யான மீனாட்சி நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். மீனாட்சி நடராஜன் கடந்த தேர்தலில் பிஜேபியை வென்று எம்.பி ஆனார். ராகுலின் முக்கியமான குழுக்களில் உறுப்பினர்.Meenakshi Natarajan with Rahul.2 ராகுலுக்கு வேண்டியவர்[2]. விழாவில் பேசிய திக் விஜய்சிங் தனது பேச்சின் இடையே திடீர் என்று பெண் எம்.பி.யை வர்ணித்தார். முதலில் அவர் பேசுகையில், “இந்த தொகுதி எம்.பி.யான மீனாட்சி நடராஜன் கடினமான உழைப்பாளி, காந்தியவாதி, நேர்மையானவர், தொகுதி மக்களுக்காக இங்கும் அங்கும் ஓடி உழைப்பவர். ஆனால் நான் சமயத்துக்கு தக்க படி நடந்து கொள்ளும் அரசியல் வாதி”, எனக் கூறினார். இறுதியில் திடீர் என்று ‘‘அவர் அனைவரும் விரும்பத்தக்க 100 சதவீதம் செக்ஸியான பெண்’’ [सौ टका टंच माल[3] = sau taka tunch maal] என்று வர்ணித்தார்[4]. இதனால் விழாவில் பரபரப்பு ஏற்பட்டது[5]. ஊடகங்கள் இதனை பெரிது படுத்தியது எனலாம்.

Meenakshi Natarajan with Rahul.3

சலசலத்த செய்தி அடங்கிவிட்டது: திக்விஜய்சிங் எப்பொழுதுமே அடாவடித் தனமான பேசக்கூடியவர் தாம். பொதுவாக பிஜேபி, சங்கப் பரிவார் பற்றி வாய்க்கு வந்ததெல்லாம் பேசுவார். கேட்டால் எல்லாவற்றிற்கும் தன்னிடம் ஆதாரம் உள்ளது என்பார். இது போல் அடிக்கடி பேசி சர்ச்சையில் சிக்கிக் கொள்கிறார். ஆனால், காங்கிரஸ் கண்டு கொள்ளாது. தற்போது அவரது பேச்சுக்கு பாரதீய ஜனதா மற்றும் பெண்கள் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. அவர் மீது காங்கிரஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெண்கள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. திக்விஜய்சிங்குக்கு மனநலம் பாதிக்கப்பட்டு விட்டது. எனவே அவரை மனநல பரிசோதனைக்கு அனுப்ப வேண்டும் என்று பாரதீய ஜனதா கூறியுள்ளது. திக்விஜய்சிங் எப்போதும் இப்படித்தான் பேசுவார். அவரை நாங்கள் பொருட்படுத்தவில்லை என்று பாரதீய ஜனதா செய்தி தொடர்பாளர் மீனாட்சி லெகி கூறினார். ரேணுகா சௌத்ரி என்ற, சோனியாவுடன் நடனம் ஆடிய அம்மையாரும், இதைப் பற்றியெல்லாம் ஒன்று நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்றார்.

Meenakshi Natarajan.3

எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு: ஹிந்தியில் வார்த்தைகளை பலவிதமாக உபயோகப் படுத்தலாம், புரிந்து கொள்ளலாம். நடைமுறையில், சினிமா தாக்கத்தால், பல வார்த்தைகள் இரண்டு பொருள்களுடன் பிரோகிக்கப்படும் நிலை வந்து விட்டது. சில நல்ல வார்த்தைகள் கூட உபயோகிக்க பயமாக இருக்கிறது. ஏனெனில், சாதாரணமான வார்த்தைகளுக்கு அசிங்கமான, ஆபாசமான அர்த்தத்தை ஏற்றிச் சொல்லப்பட்டு, பிரயோகப்படுத்தப் பட்டு வருவதால், அவ்வார்த்தையை உபயோகப்படுத்த தயக்கமாகவும் இருக்கிறது. இல்லை, பொது இடங்களில் வார்த்தையை உபயோகித்தால் தவறாக நினைத்துக் கொள்வார்களோ என்ற நிலையும் வந்து விட்டது. இருப்பினும், வள்ளுவர் சொல்வதை ஏற்றுக் கொள்வது நல்லது:

“எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பதறிவு”

Meenakshi Natarajan with Rahul.4

திக்விஜய் சிங் கொடுத்த விளக்கம்: இங்கு திக்விஜய் சிங் சொல்லியிருப்பதால் தான் விஷயம் விவகாரமாகி இருக்கிறது. கேட்டால் எல்லாவற்றிற்கும் தன்னிடம் ஆதாரம் உள்ளது என்று, யாதாவது சொல்லிவிடுவாரோ என்று ஊடகங்கள் எதிர்பார்க்கின்றன போலும். . இதற்கிடையே திக்விஜய் சிங் பெண் எம்.பி.யை அப்படி வர்ணிக்கவில்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளார். பெண் எம்.பி.யை ‘‘சுத்த தங்கம்’’ என்று தான் சொன்னேன். ஆனால் டெலிவிஷன் செய்தியில் தவறான அர்த்தத்தில் சொல்லி விட்டார்கள் என்று விளக்கம் அளித்துள்ளார்.

Meenakshi Natarajan with Digvijay Singh

மீனாட்சி நடராஜன் எந்த எதிர்ப்பும் தெரிவிக்க வில்லை: திக்விஜய்சிங் பேச்சுக்கு மீனாட்சி நடராஜன் எந்த எதிர்ப்பும் தெரிவிக்க வில்லை. அவர் கூறும் போது, ‘‘திக்விஜய் சிங்கின் பேச்சை தவறான கண்ணோட்டத்தில் பார்க்க கூடாது. அவர் எனது பணியை வரவேற்று பாராட்டினார். ஆனால் கொடூர புத்தி கொண்டவர்கள் தான் அவரது பேச்சை திரித்து கூறுகிறார்கள். அந்த விழாவில் 15 ஆயிரம் பேர் கூடி இருந்தனர். அவர்கள் சரியான கண்ணோட்டத்தில் தான் பேச்சை கேட்டார்கள்’’ என்றார்[6].

Print

வேதபிரகாஷ்

© 28-07-2013


[1] மெட்ராஸ் பாசை அல்லது சினிமா பாசையில் “பிகரு”, “பார்ட்டி” என்பது போன்ற வார்த்தை.

[2] போர்ப்ஸ் பத்திரிக்கையின் படி, அவருடைய பின்னணியில் பலத்துடன் இருப்பவர்களில் இவரும் ஒருவர் ஆவர்.

[6] Natarajan said she wasn’t offended. “His statement has to be looked at in complete perspective. He has appreciated my work.” She told TOI the comments were being misinterpreted by mischievous elements. “It’s the work of an evil mind. There were about 15,000 people at the meeting who took it in the right spirit.”

http://timesofindia.indiatimes.com/india/Digvijaya-calls-Meenakshi-Natarajan-sau-tunch-maal-rapped-for-sexist-remark/articleshow/21380305.cms?