Posts Tagged ‘மனம் விரும்பி செக்ஸ்’

செக்ஸ் வைத்துக் கொள்ள சரியான வயது 16 தான் இருப்பினும் 18 என்று முடிவு செய்யப்பட்டது – சொல்வது ஷிண்டே

மார்ச்30, 2013

செக்ஸ் வைத்துக் கொள்ள சரியான வயது 16 தான் இருப்பினும் 18 என்று முடிவு செய்யப்பட்டது – சொல்வது ஷிண்டே

“எய்ட்ஸ்  தடுப்பு”  பிரச்சாரத்திற்குப்  பிறகு செக்ஸ்  பற்றி  வெளிப்படையாக  பேசுவது,   விவாதிப்பது: சம்மதத்துடன் செக்ஸ், இணக்கத்துடன் செக்ஸ், ஒப்புதலுடன் செக்ஸ், மனம் விரும்பி செக்ஸ் என்றேல்லாம் நாடெல்லாம் வெலிப்படையாக பேசி விவாதங்களும் நடத்தப் பட்டு வருகின்றன. முன்பு, “எய்ட்ஸ் தடுப்பு” பிரச்சாரப் போர்வையில் எப்படி ஜாக்கிரதையான, பாதுகாப்பான, “எய்ட்ஸ்” வராமல் செக்ஸ் வைத்துக் கொள்ள என்னென்ன செய்யவேண்டும் என்று அதிகமாகவே பிரச்சாரம் செய்யப்பட்டது. கோடிகள் செலவழிக்கப்பட்டு, பள்ளிகள், கல்லூரிகள், அலுவலங்கள் என்று பல பொது இடங்களில் “எய்ட்ஸ் தடுப்பு” பிரச்சார பண்டிதர்கள் வந்து கொடுத்து, விவரித்து செயல்முறை விளக்கங்களையும் செய்து காண்பித்தார்கள். இப்பொழுதும் அதே முறையிலான போக்கைக் காணும் போது, ஏதோ அதிகமாக செயல்படுகிறாற்களா என்பது போலத் தெரிகிறது.

நேரிய,  ஒழுக்கமான,  சரியான ஆலோசனைகள்,  விளக்கங்கள்  கொடுக்கப்படாமல்,  எதிர்மறையான விளக்கங்கள் கொடுத்து,  செய்யக்கூடாததை,  எப்படி செய்ய வேண்டும் என்று ஊக்குவிப்பது:

  • மனைவியைத் தவிர மற்ற பெண்களுடன், விபச்சாரிகளுடன் உடலுறவுக் கொள்ளக்கூடாது,
  • அவ்வாறு செய்வது பெண்களுக்கு இழக்கப்படும் அநீதி, அதர்மம் ஆகும்.
  • தாம்பத்திய உறவை புனிதமாகக் கருத வேண்டும்,
  • மனைவிக்கு துரோகம் செய்யக் கூடாது,
  • பெண்களை விபச்சாரத்தில் தள்ளக்கூடாது
  • விபச்சாரத்தை ஊக்குவிக்கக்கூடாது.
  • நீ மற்ற பெண்களுடன் அவ்வாறான செயலில் ஈடுமட்டால், மற்றவர்களும், உன் பெண்களுடன் அவ்வாறான செயல்களில் ஈடுபடலாம்.
  • பெண்மையைப் போற்று
  • தாய்மையைப் போற்று.

என்பது போன்ற நேரிய, ஒழுக்கமான, சரியான ஆலோசனைகள், விளக்கங்கள் கொடுக்கப்படாமல், எதிர்மறையான விளக்கங்கள் கொடுத்து, செய்யக் கூடாததை, எப்படி செய்யவேண்டும் என்பதை தெரியாதவர்கள் கூட தெரிந்து கொள்ளும் வகையில் அசிங்கமான கூத்து நடந்தேறியது. அதேபோல இப்பொழுதும் நடந்து வருவது நோக்கத்தக்கது.

கற்பழிப்பில் சிறுவர்களைச் சிக்க வைப்பது எப்படி: தில்லி கற்பழிப்பிற்கு பிறகு, சிறுவம் கற்பழித்தால் அது குற்றமா இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில் அதில் அகப்பட்ட ஒருவன் 18 வயதிற்கும் கீழாக இருந்தான். அப்பொழுது ஒரு ஆணை அக்குற்றத்தில் சிக்கவைக்க வேண்டுமானால், செக்ஸ் வைத்துக் கொள்ள உகந்த வயது என்ன என்ற விவாதம் வந்தது, உடனே சிறுவர்களையும் சட்டத்தின் பிடியில் சிக்கவேண்டுனமானால், வயது வரம்பைக் குறைத்துதான் ஆக வேண்டும் என்ற நிலையில் 16-18 என்று பரிந்துரைக்க ஆரம்பித்தார்கள்.

செக்ஸ் வயது  16ஆ அல்லது  18: ஜே. எஸ். வர்மா அறிக்கையில் வயது 16 என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஷிண்டே 18 என்று கூறியிருந்தார். அதன்படியே 16 வயது என்று பேசப்பட்டாலும், வரப்போகின்ற சட்டத்தில் 18 என்றுதான் உள்ளது. ஆனால் சுஷில்குமார் ஷிண்டே வயது 16 என்று வாதிட்டார்[1]. இக்கருத்தை போலீஸ்துறை சீரமைப்புப் பற்றிய மாநாட்டில் தெரிவித்தார்[2]. உடனே அதற்கு அவரது பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் கிருஷ்ணா தீத் என்பவரே எதிர்ப்புத் தெரிவித்தார்[3]. அப்பொழுது, செக்ஸ் வைத்துக் கொள்ள சரியான வயது 16 தான் – சொல்வது ஷிண்டே என்று கூறியது மட்டுமல்லாது அதற்கான ஆதாரம் 1860ல் உண்டாக்கிய இந்திய குற்றவியல் சட்டத்திலேயே இருப்பயதாக எடுத்துக் காட்டினார்[4].

அனைத்துக் கட்சி கூட்டத்தின் விவாதம்: அனைத்துக் கட்சிக் கூட்டம் தோல்வி இதற்கிடையே, பாலியல் வன்கொடுமைத் தடுப்புச் சட்ட மசோதா குறித்து விவாதிக்க இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தின்போது 18 வயதிலிருந்து 16 வயதாக குறைப்பதற்கு பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் கடுமையாக எதிர்த்தன. அரசுத் தரப்பிலோ மசோதாவை நிறைவேற்றுவதில் உறுதியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் முரண்பாடுகளும், முட்டல் மோதல்களும் ஏற்பட்டன.

முல்லாயம் சிங் யாதவ் எதிர்ப்பு: சமாஜ்வாடிக் கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் கருத்து தெரிவிக்கையில், வயதைக் குறைப்பதால் ஆபாசமும், அவமானங்களும்தான் அதிகரிக்கும். குற்றச் செயல்கள் பலமடங்கு அதிகரிக்கும். இதை தவறாக பயன்படுத்தும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றார். மேலும் ஆண்களுக்கு எதிராக சட்டத்தைத் தவறாக பயன்படுத்தும் வாய்ப்புகளும் அதிகரிக்கும் என்றார். இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்குப் பின்னர் மீண்டும் ஒரு கூட்டம் நடத்தபப்ட்டது. அதில் சில திருத்தங்களுக்கு மத்திய அரசு உடன்பட்டது[5].

கம்யூனிஸ்டு கட்சி எதிர்ப்பு: இணக்கத்துடன் கூடிய செக்ஸ் உறவு வயதை, 18லிருந்து, 16 ஆக குறைக்கும், புதிய சட்ட திருத்தத்திற்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது[6]. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு நிறைவு நாள் கூட்டம், டில்லியில் நேற்று நடைபெற்றது. இதில், பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்திற்கு பிறகு, கட்சியின் பொது செயலர் சுதாகர் ரெட்டி, நிருபர்களிடம் கூறியதாவது: “இணக்கத்துடன் கூடிய உடலுறவுக்கான வயதை, 18லிருந்து, 16 ஆக குறைத்ததில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. இதனால், ஏற்படும் பிற விளைவுகளை எண்ணிப் பார்க்க வேண்டும். இதனால், குழந்தை திருமணம் போன்ற விரும்பத் தகாத விபரீதங்கள் ஏற்படும், “ இவ்வாறு சுதாகர் ரெட்டி கூறினார். இதில் வேடிக்கை என்னவென்றால், கம்யூனிஸ்டுகளைப் பொறுத்தவரைக்கும் சித்தாந்ந்த ரீதியில் அவர்கள் இப்படி சொல்வதே போலித்தனமாகும். ஏனெனில் அவர்களுக்கு கற்பைப் பற்றிய அவசியமே இல்லை.

சத்தீஸ்கர் முதல்வர் ராமன் சிங் பிரதமருக்கு எழுதிய கடிதம்: இதற்கிடையே, சத்தீஸ்கர் முதல்வர் ராமன் சிங், இந்த விவகாரம் தொடர்பாக, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: “மத்திய அரசின் இந்த முடிவு, மேற்கத்திய கலாசாரத்தை இளைஞர்கள் மத்தியில் ஏற்படுத்தும். கிராமப் பகுதிகளில் வசிக்கும் சிறுமியர் இதனால் பாதிக்கப்படுவர். அத்துடன், கற்பழிப்பு மற்றும் தேவையற்ற கர்ப்பங்கள், கருக்கலைப்புகள் ஆகியவை அதிகரிக்கும் அபாயம் உள்ளது. தவறான பாலியல் குற்றங்களைத் தடுக்க, பள்ளிகளில் செக்ஸ் கல்வியை அறிமுகப்படுத்துவது தான் சிறந்தது”,  இவ்வாறு அவர், தெரிவித்துள்ளார்[7].

சில உதாரணங்கள்: நான் பல இடுகைகளை இப்பிரச்சினைப் பற்றி கீழ்கண்ட இடுககளில் அலசியுள்ளேன்:

  • சினிமாவின் ஆபாசத்தால் தூண்டுதலால் பள்ளிப் பெண்களே காமத்தில் சீரழியும் போக்கு உண்டாகியுள்ளது[8].
  • பள்ளிகளில் ஆசிரியர்களே மாணவிகளை கற்பழிப்பதை பார்த்துக் கொண்டு இருக்கமுடியாது[9].
  • சகமாணவன் மாணவியை ஆபாசவீடியோ எடுக்கும் அளவிற்கு தமிழகம் உள்ளது[10].
  • உயிருக்கு உயிரான தோழியை கற்பழித்த தோழர்கள்[11].
  • சிறுமிகளிடம் ஆபாசப்படம் காட்டி சில்மிஷம்[12].
  • நான்கு வயது பெண்ணையும் கற்பழிக்கும் கயவர்கள் தமிழகத்திலேயே இருக்கிறார்கள்[13].
  • சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த் கிழவருக்கே தண்டனை கொடுத்துள்ளபோது, சிறுவனுக்கு ஏன் தண்டனை கொடுக்க முடியாது[14].
  • இந்தியக்கற்பழிப்பில் வாடிகன் அக்கறைக் கொள்வதும் ஏமாற்றுவேலையாக இருக்கிறது[15]. ஏனெனில், போப்பே இவ்விஷயத்தில் ஒன்றும் செய்யமுடியாமல் இருக்கும் போழுது, நமக்கு அறிவுரை கூற அவருக்கு, அந்த கூட்டத்தாருக்கு அருகதையில்லை.

என்ன செய்ய வேண்டும்: இதையெல்லாம் பெண்ணைப் பெற்றவர்கள் பார்த்துக் கொண்டு சும்மாயிருக்க முடியாது. வயது வந்துவிட்டதால் அவர்கள் சட்டப்படி என்னவேண்டுமானாலும் செய்யலாம் என்று பெற்றோரோ சமூதாயமோ ஊக்குவிக்க முடியாது. கடந்த 60-100 ஆண்டுகளில் திராவிட சித்தாந்தத்தால், சமூகத்தில் ஏற்பட்டுள்ள சீரழவுகளை பாரபட்சமின்று ஆராய்ந்து, அதனால் விளைந்துள்ள தீமைகளை களைய வேண்டியுள்ளது.

  • தாலியறுப்பு விழா கொண்டாடி பெண்மையை உயர்த்த முடியாது.
  • ஆபாசத் தமிழில் பாட்டெழுதி கற்ப்பைக் காப்பாற்ற முடியாது.
  • குஷ்பு போன்றோர் அறிவுரை கொடுத்து தமிழ் பெண்கள் மேன்மை அடைய முடியாது.

ஆகவே நற்பண்புகளை, ஒழுக்கத்தை, நன்னடத்தையை, பெற்றோர்களை மதிக்கும் குணத்தை, பெரியவர்களுக்கு மரியாதை கொடுக்கும் முறையை போதிக்க வேண்டும். இதுதான் மாற்று மருந்தே ஒழிய வெற்று விவாதங்களும், ஊடகப் பிரச்சாரங்களும் வீண்தான். பொழுது போக்க உபயோகமாக இருக்கும்.

© வேதபிரகாஷ்

30-03-2013


[3] She had claimed that lowering the age of consent was contrary to the Protection of Children from Sexual Offences (POCSO) Act, which made sex with those under 18 a criminal offence. The POCSO Act was cleared by Parliament in May 2012, marking the age of consent for sex to 18 years. The anti-rape ordinance also included the same provisions despite the Justice JS Verma Committee’s recommendation to keep the age of consent at 16 years.

[4] Days after Parliament cleared the Criminal Law (Amendment) Bill, 2013, Union Home Minister Sushilkumar Shinde on Tuesday defended his initial proposal to peg the age of consent for sex at 16 years, citing the 153-year-old Indian Penal Code.“The consent age of 16 years was incorporated in the IPC in 1860. No one had looked into it but when my ordinance came for correcting this…whole Parliament was against it. But I brought it to the notice (that) this law was in existence but we have not realised that it was in existence,” Shinde said.

http://newindianexpress.com/nation/article1518718.ece