Posts Tagged ‘வன்முறை’

400 குழந்தைகளைக் கொன்றுள்ள அதிநவீன ஆங்கில பெண்மணி – ஆங்கிலேய பூதனை!

பிப்ரவரி24, 2013

400 குழந்தைகளைக் கொன்றுள்ள அதிநவீன ஆங்கில பெண்மணி – ஆங்கிலேய பூதனை!

Amelia_dyer1893

இந்தியர்கள் ஏன் ஆங்கிலேயர்களை அறிந்து-புரிந்து கொள்ளவில்லை: ஆங்கிலேயர்கள் என்றாலே அடிவருடும் இந்தியர்கள் இன்றும் உள்ளார்கள், ஆனால், அவர்கள் ஆங்கிலேயர்கள் எப்படி நாகரிகம் அடைந்தார்கள், செல்வம் கொழித்து இன்றுள்ள நிலையை அடைந்தார்கள் என்பதைப் பற்றியெல்லாம் சிந்திப்பதும் இல்லை, கேள்விகள் கேட்பதும் இல்லை. ஏனெனில் அவர்கள் அம்மாதிரியாக மூளைசலவை செய்யப்பட்டு, உருவாக்கப்பட்டுள்ளார்கள். அத்தகைய கூலிமனப்பாங்கிலிருந்து விடுபட இன்னும் ஒரு நூற்றாண்டு ஆனாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

Amelia-dyer-1893-when arrested

இந்தியர்களை ஆங்கிலேயர்கள் நடத்தும் விதம்: இன்றும் இங்கிலாந்திற்குச் சென்றால், அதிலும் இந்திய வல்லுனர்கள் வேலைவிஷயமாக, அவர்கள் அரசே வரவழைத்திருந்தாலும், நம்மவர்கள் சரியாக நடத்தப்படுவதில்லை என்பதுதான் உண்மை. ஏதோ பணம் வருகிறது, இந்தியாவில் தம்மைப் பற்றி கௌரமாக நினைப்பார்கள், மதிப்பார்கள் என்ற எண்ணத்தில் அங்கு தாம் இனவெறி ரீதியில் பேசப்பட்டதை, நடத்தப் பட்டதை சொல்வதில்லை. சில நேரங்களில் தமது வேண்டிய நண்பர்களில் சில விஷயங்களை சொல்வதுண்டு. அதிலிருந்தே ஆங்கிலேயர் இன்றும் இந்தியர்களை தங்களது அடிமைகளாக, தமது அதிகாரத்தின் கீழ் வேலை செய்பவர்களாகத்தான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Ameila dyer - the baby killer

அமிலா எலிசபெத் டயர் – ஆங்கிலேய பூதனை: இந்நேரத்தில் தான் அமிலா எலிசபெத் டயர் (Amelia Elizabeth Dyer (1837 – 10 June 1896) என்ற ஆங்கிலப் பெண்மணி 400 குழந்தைகளை கழுத்து நெறித்து கொன்றுள்ளதாக விவரங்களை வெளியிட்டுள்ளார்கள். இவள் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலைப் பார்த்து வந்தாள். 1770லிருந்து, 1934 வரை உள்ள தேசிய ஆவணக் காப்பகத்திலிருக்கும் தஸ்ஜாவேஜுகளை ஆய்ந்த போது, இந்த கோரமான, குரூரமான, பயங்கரமான விச்ஜ்ஹயம் வெளிவந்துள்ளது . இங்கிலாந்தில் முறைதவறிப் பிறக்கும் குழந்தைகள் 18-19வது நூற்றாண்டுகளில் அதிகமாகவே இருந்துள்ளது. அத்தகைய குழந்தைகளை வேறொருவருக்குக் கொடுத்துவிடவோ, தத்து கொடுக்கவோ அல்லது எப்படியாவது மறைக்கவோதான் தாய்மார்கள் நினைத்தார்கள். அத்தகைய சோரம் போன பெண்கள் மற்றும் சம்பந்தப்பட்ட ஆண்கள் பணக்காரர்களாக, வசதி படைத்தவர்களாக இருந்தால் £80 வரை விஷயத்தை காக்க வசூலிக்கப்பட்டது. £50 கெடுத்த ஆணினிடமிருந்து பெறப்பட்டது. இத்தகைய குழந்தைகள் தாம் இந்த அம்மையாரிடம் சிக்கின, அவை ஒப்பியம் கொடுக்கப்பட்டு அமைதியாகக் கொல்லப்பட்டன. பிறகு பிணங்களை தேம்ஸ் நதியில் தூக்கியெறிந்தாள்.

Amelia-Dyer- details

நர்சாக வேலைப் பார்த்தவள் சரியான வேலையைத்தான் செய்துள்ளாள்: நிறைய பேர்களுக்கு “நர்ஸ்” (Nurse) என்ற வார்த்தைக்கே அர்த்தம் தெரியாமல் இருக்கிறார்கள். ஆரம்பத்தில் “நர்ஸ்” என்றால் குழந்தைகளை / மனிதர்களைக் கொல்பவள் என்றுதான் அர்த்தம். ஆங்கிலேயருக்கு, மேனாட்டவருக்கு, எப்பொழுதுமே தமக்கு பாதகமாக இருக்கும் விஷயங்களை மறைக்க, உண்மைகளை தலைகீழாக்கி சொல்வார்கள். அவ்விதமாகத்தான் இத்தகைய சொற்கள் உருவாகி அகராதியில் இடம் பிடித்தன.

Amelia-Dyer- details-newscutting

கிருத்துவ / யூதமத நம்பிக்கையின் படி தவறாகப் பிறந்த குழந்தை கொல்லப்படவேண்டும்: மத்தியத்தரைக் கடல் நாடுகளில் வளர்ந்த நாகரிகங்களில், குழந்தையை பலி கொடுப்பது என்பது சாதாரணமான விஷயம். அதிலும் தலைப்பிள்ளையை, ஆண்பிள்ளையை பலி கொடுப்பது (sacrifice), ஒரு சிறப்பான சடங்காகக் கொண்டிருந்தார்கள். இந்நம்பிக்கை பிறகு யூத / கிருத்துவ மதங்களிலும் காணப்பட்டது. இருப்பினும், ஏசுகிருஸ்து பிறந்ததை ஏற்றுக் கொள்ளப்பட்டதால், அபார்ஷண் (abortion) செய்து கொள்ளக் கூடாது என்று விதிக்கப்பட்டது. அதாவது, முறைதவறி கர்ப்பமுற்றாலும், குழந்தை வளர்க்கப்படவேண்டும், கொல்லப்படக்கூடாது என்ற எதிர்சித்தாந்தம் ஏற்படுத்தப்பட்டது. இதனால் தான் “கான்வென்ட்” (Convent) என்ற குழந்தைகள் வளர்க்கும், பாதுகாக்கும் மையங்கள், கிருத்துவ மடாலயங்கள் (Monastaries / abbots) அருகில் ஏற்படுத்தப்பட்டன. இத்தகைய மதநம்பிக்கைகளில் வளர்ந்தவர்கள்தாம் ஆங்கிலேயர்கள். இதனைப் பயன்படுத்திக் கொண்டுதான், அம்மையார் இப்படி குழந்தைகளை பலி கொடுத்துள்ளாள்!

Southall-Riots

Southall riots carried out by the British racists against Asians / Indians in particular

இந்தியர்கள் புரிந்து கொள்ள வேண்டும்: இன்றளவும் பொதுவாக இந்தியாவில் நடக்கும் எந்த ஒரு சமூகப்பிறழ்ச்சியும், மிகப்பெரிய அநாகரிகமான, காட்டுமிராண்டித்தனமான நிகழ்ச்சியாகச் சித்தரிக்கப்படுவதாக உள்ளது. ஊடகங்களைப் பற்றி கேட்கவே வேண்டாம். சிசுக்கொலை / சிசு வதை / பெண்கொலை என்றேல்லாம் எழுதி, பேசி, ஆராய்ச்சி செய்து ஆவணங்களை உருவாக்கிக் கொண்டிருப்பார்கள். ஆனால், ஆழமாக சென்று அலசமாட்டார்கள். ஒருவர் சொன்னதை அப்படியே திரும்பச் சொல்லி அல்லது இன்றும் அதிகமாக மாற்றிச் சொல்லி பிரபலம் தேடும் விதத்தில் இருக்கிறார்கள். இங்கு ஸ்டவ் வெடிப்பதும், அங்கு துப்பாக்கி வெடிப்பது ஒன்று என்பதைக் கூட அறிந்து கொள்ள மாட்டார்கள். இப்பொழுதாவது புரிந்து கொண்டால் சரி!

வேதபிரகாஷ்
24-02-2013