அரசியல், சினிமா, விபசாரம், பத்திரிக்கைச் சுதந்திரம், விளம்பரம், தமிழ்-கலாச்சாரம்: தவறு எங்கே?

அரசியல், சினிமா, விபசாரம், பத்திரிக்கைச் சுதந்திரம், விளம்பரம், தமிழ்-கலாச்சாரம்: தவறு எங்கே?

கருவாடும் நாற்றமும் போல, நகமும் சதையும் போல, தமிழ்நாட்டில் சினிமாவும் அரசியலும் பிரிக்க முடியாதது. இந்த விஷயத்தில் இவ்வளவிற்கு அதிகமாக அரசியல் உள்ளது ஆச்சரியப் படக்கூடியதாக உள்ளது.

முதல்வர் கருணாநிதியுடன் நடிகர், நடிகைகள் சந்திப்பு

சென்னை, வியாழன், 8 அக்டோபர் 2009( 10:46 IST )

http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/0910/08/1091008008_1.htm

நடிகைகள் மீது அவதூறு செய்தி வெளியிட்ட தமிழ் நாளிதழின் செய்தி ஆசிரியரைக் கைது செய்ய நடவடிக்கை எடுத்த முதல்வருக்கு, தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் இன்று நன்றி தெரிவிக்கப்பட்டது.

நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் தலைமையில் நடிகர்கள் ராதாரவி, சத்யராஜ், சூர்யா, விஜயகுமார், நடிகைகள் ராதிகா, ஷகீலா, நளினி, மும்தாஜ் உள்ளிட்டோர் முதல்வர் கருணாநிதியை இன்று சந்தித்து நன்றி கூறினர்.

நேற்று மாலை நடந்த கண்டன கூட்டத்தில் நடிகை புவனேஸ்வரி கைது விவகாரத்தில், தமிழ் நாளிதழில் தவறாக விமர்சிக்கப்பட்ட நடிகைகள் தனித் தனியே மானநஷ்ட வழக்கு தொடர்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

முன்னால் பல தடவை அவ்வாறு ஏற்பட்டுள்ளது. அப்பொழுது, இவர் அந்த மாதிரி வேண்டுகோள் விடவில்லையே?

அப்பொழுது, இவருக்கு கோபம் வந்ததா என்று தெரியவில்லை!

சரி, எங்கே “காதல் இளவரசன்” கமல் ஹஸனைக் காணவில்லை?

தப்பிக்கொண்டு விட்டாரா?

விபசார வழக்கில் கைதாகும் பெண்களின் படத்தை பிரசுரிக்க வேண்டாம்: ரஜினி வேண்டுகோள்

சென்னை, வியாழன், 8 அக்டோபர் 2009( 10:10 IST )

http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/0910/08/1091008005_1.htm

விபசார வழக்கில் கைது செய்யப்படுகிற பெண்கள் உல்லாசத்துக்காக அத்தொழிலை செய்வதில்லை. இரண்டு வேளை சோற்றுக்காக அதைச் செய்கிறார்கள். அவர்களை கைது செய்வதையும், அவர்கள் முகத்தை துணியால் மூடிக்கொண்டு செல்வதையும் புகைப்படமாக எடுத்து பிரசுரிப்பதை பத்திரிகைகள் தயவு செய்து நிறுத்த வேண்டும் என ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நடிகை புவனேஸ்வரி விபசாரம் செய்ததாக சமீபத்தில் காவல்துறையினர் அவரைக் கைது செய்தனர். அவர் காவல்துறையினரிடம் கொடுத்த வாக்குமூலத்தில், மற்ற சில நடிகைகளும் விபசாரத்தில் ஈடுபடுவதாகவும் கூறியதாக தமிழ் நாளிதழ் ஒன்றில் நடிகைகளின் பெயர்கள் படங்களுடன் வெளியானது.

நடிகைகளின் பெயரை வெளியிட்ட நாளிதழைக் கண்டித்து தென்னிந்திய நடிகர் சங்கத்தில் நேற்று மாலை கண்டன கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசுகையில், “நான் கோபமாக இருந்தால், அதிகம் பேச மாட்டேன். ரொம்பக் கோபமாக இருந்தால் பேசவே மாட்டேன். இப்போது நான் மிகவும் கோபத்தில் இருக்கிறேன். இருந்தாலும் என் கருத்துக்களை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.

மிகப்பெரிய அந்தஸ்திலும், மரியாதைக்கு உரியவர்களாகவும், நாகரிகமாக வாழ்ந்து கொண்டிருப்பவர்களாகவும் இருக்கும் சிலரை பற்றி அவதூறாக ஒரு காலை நாளிதழில் செய்தியை படித்த போது, இது ‘ஏப்ரல் முட்டாள்கள் தினம்’ போல் டூப் ஆக இருக்குமோ என்று நினைத்தேன்.

சில நடிகைகளை பற்றிய அவதூறான செய்தியை படித்தபோது மனதுக்கு கஷ்டமாக இருந்தது. இரவு முழுவதும் தூங்கவில்லை. நீங்கள் குற்றமற்றவர்கள் என்பது கடவுளுக்கு தெரியும். உங்கள் சகோதர-சகோதரிகளுக்கு தெரியும். உங்கள் உறவினர்களுக்கு தெரியும். அதனால் கவலைப்பட வேண்டாம்.

சம்பந்தப்பட்ட பத்திரிகை ஆசிரியரை கைது செய்த காவல் துறைக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். முதல்வர் கருணாநிதிக்கும், தமிழக அரசுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நான், கோபமாக இருக்கிறேன். இதற்கு மேல் பேச விரும்பவில்லை” என்று கூறினார்.

தே.மு.தி.க. தலைவரும், நடிகருமான விஜயகாந்த் பேசுகையில், “பத்திரிகைகள் தர்மத்துடன் நடந்து கொள்ள வேண்டும். காவல்துறை கட்டுப்பாடுகளுடன் செய்திகளை கொடுக்க வேண்டும். நான் நடிகர் சங்க உறுப்பினர். நடிகர் சங்கத்துக்கு கட்டுப்பட்டவன். நடிகர் சங்கம் சாதாரண அமைப்பு கிடையாது. கட்டுக்கோப்பானது.

நடிகர் சங்கத்தால் எதை வேண்டுமானாலும் சாதிக்க முடியும். நடிகர், நடிகைகள் யாரும் கிள்ளுக்கீரை கிடையாது. அவர்களுக்கும் குடும்பம் இருக்கிறது. தன்மானம் இருக்கிறது” என்றார்.

நடிகை ரேவதி பேசும்போது, “நடிகர் சங்கத்தில் ஒரு சட்டப்பிரிவை தொடங்கி, இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடைபெறாமல் தடுக்க வேண்டும்” என்றார். பின்னர் பேசிய நடிகர் சூர்யா, “நடிகர் சங்கத்தில் சட்டப்பிரிவு தொடங்கினால், அதற்கு நான் பணம் கொடுக்க தயார்” என்றார்.

இங்கு ரேவதி என்ன சொல்கிறார் என்று புரியவில்லை. “இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடைபெறாமல் தடுக்க வேண்டும்” என்றது, விபசாரம் நடக்கக் கூடாது அல்லது நடிகைகள் விபசாரம் செய்யக் கூடாது அல்லது நடிகைகள் விபசாரம் செய்து மாட்டக் கூடாது, இல்லை அவ்வாறு மாட்டிக் கொண்டாலும் அத்தகைய செய்திகள் வரவிடக் கூடாது………………என்ன சொல்ல விரும்புகிறார்?

புவனேஸ்வரி விவகாரம்: நடிகைகள் மானநஷ்ட வழக்கு தொடர நடிகர் சங்கம் தீர்மானம்

சென்னை, வியாழன், 8 அக்டோபர் 2009( 09:54 IST )

http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/0910/08/1091008004_1.htm

நடிகை புவனேஸ்வரி கைது விவகாரத்தில், தவறாக விமர்சிக்கப்பட்ட நடிகைகள் தனித் தனியே மானநஷ்ட வழக்கு தொடர்வது என நடிகர் சங்க கண்டன கூட்டத்தில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நடிகை புவனேஸ்வரி விபசாரம் செய்ததாக சமீபத்தில் காவல்துறையினர் அவரைக் கைது செய்தனர். அவர் காவல்துறையினரிடம் கொடுத்த வாக்குமூலத்தில், மற்ற சில நடிகைகளும் விபசாரத்தில் ஈடுபடுவதாகவும், அவர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியதாகவும் தமிழ் நாளிதழ் ஒன்றில் நடிகைகளின் பெயர்கள் படங்களுடன் வெளியானது. இது நடிகர்-நடிகைகள் மத்தியில் மட்டுமின்றி மக்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.

இந்நிலையில், நடிகைகளின் பெயரை வெளியிட்ட நாளிதழைக் கண்டித்து தென்னிந்திய நடிகர் சங்கத்தில் நேற்று மாலை கண்டன கூட்டம் நடந்தது. இதில் நடிகர் ரஜினிகாந்த், தே.மு.தி.க. தலைவரும், நடிகருமான விஜயகாந்த், நடிகர் சங்க தலைவர் சரத்குமார் உட்பட ஏராளமான நடிகர், நடிகைகள் கலந்துகொண்டார்கள். அவதூறு கூறப்பட்ட நடிகைகளும் கூட்டத்துக்கு வந்திருந்தார்கள்.

கண்டன கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நடிகர் சங்க தலைவர் சரத்குமார், மேடையில் படித்தார். அதில், தென்னிந்திய நடிகர் சங்கம் அளித்த புகாரின் பேரில் தீவிர விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட நாளிதழின் செய்தி ஆசிரியரை கைது செய்ய சட்டப்படி நடவடிக்கை எடுத்த தமிழக முதல்வர் கருணாநிதிக்கும், காவல் துறைக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

அந்த நாளிதழை சேர்ந்தவர்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில், விழாக்களில் தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்கள் கலந்துகொள்வதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக திரையுலகை சார்ந்த அனைத்து அமைப்புகளிடம் ஆதரவு கோர தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களின் ரசிகர்கள் இன்று முதல் அந்த நாளிதழுக்கு ஆதரவு அளிக்க வேண்டாம் என்றும், தவறாக விமர்சிக்கப்பட்ட உறுப்பினர்கள் அனைவரும் தனித்தனியாக மானநஷ்ட ஈடு வழக்கு தொடர்வது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிட்டு சட்டம், ஒழுங்கு சீர்குலையவும், திரையுலகினர் மற்றும் அவர்கள் குடும்பத்தினரை மன உளைச்சலுக்கும் ஆளாக்கி, பெண்களை இழிவுபடுத்திய அந்த நாளிதழை ஏன் தடை செய்யக்கூடாது? என்று பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா நிறுவனத்திடம் புகார் அளிப்பது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானங்கள் எல்லாம் ஏதோ அந்த குறிப்பிட்ட பத்திரிக்கையை ஒழித்து விடுவது என்பது போன்று இருக்கிறது.

பிறகு, அத்தகைய வாக்குமூலம் கொடுத்த புவனேஸ்வரியின் கதி / கதை என்னாகும்?

அவரும் அந்த சங்கத்தின் உறுப்பினர் தானே?

பதிலுக்கு அவர் இன்னும் அதிகமாக விஷயங்களைச் சொல்ல ஆரம்பித்தால், அவர் மீது நடவடிக்கை எடுப்பார்களா?

சின்னத்திரை / பெரியத் திரைகளில் நடிப்பதைத் தடுத்து விடுவார்களா?

இவர்கள் இவ்வாறாக தீவிரமாக செல்வது, ஏதோ விஷயம் உள்ளது என்று நன்றாகவேத் தெரிகின்றது.

கருணாநிதி வரை செல்லவேண்டிய அவசியம், முக்கியத்துவம் மர்மமாகவே உள்ளது!

6 பதில்கள் to “அரசியல், சினிமா, விபசாரம், பத்திரிக்கைச் சுதந்திரம், விளம்பரம், தமிழ்-கலாச்சாரம்: தவறு எங்கே?”

  1. சென்னை விபச்சாரத்தில் பிரபலமாகிறது – மேனாட்டு கலாச்சாரத்தின் தாக்கம், உள்நாட்டு சினிமா மோகம Says:

    […] [7] https://womanissues.wordpress.com/2009/10/14/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F/ https://womanissues.wordpress.com/2009/10/08/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E… […]

  2. சென்னை விபச்சாரத்தில் பிரபலமாகிறது – மேனாட்டு கலாச்சாரத்தின் தாக்கம், உள்நாட்டு சினிமா மோகம Says:

    […] [7] https://womanissues.wordpress.com/2009/10/14/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F/ https://womanissues.wordpress.com/2009/10/08/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E… […]

  3. சென்னை விபச்சாரத்தில் பிரபலமாகிறது – மேனாட்டு கலாச்சாரத்தின் தாக்கம், உள்நாட்டு சினிமா மோகம Says:

    […] [7] https://womanissues.wordpress.com/2009/10/14/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F/ https://womanissues.wordpress.com/2009/10/08/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E… […]

  4. சென்னை விபச்சாரத்தில் பிரபலமாகிறது – மேனாட்டு கலாச்சாரத்தின் தாக்கம், உள்நாட்டு சினிமா மோகம Says:

    […] [7] https://womanissues.wordpress.com/2009/10/14/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F/ https://womanissues.wordpress.com/2009/10/08/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E… […]

  5. சென்னை விபச்சாரத்தில் பிரபலமாகிறது – மேனாட்டு கலாச்சாரத்தின் தாக்கம், உள்நாட்டு சினிமா மோகம Says:

    […] [7] https://womanissues.wordpress.com/2009/10/14/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F/ https://womanissues.wordpress.com/2009/10/08/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E… […]

  6. மசாஜ் கிளப் என்ற பெயரில் விபசாரம்: 5 அழகிகள் மீட்பு: புரோக்கர்கள் 3 பேர் கைது: எல்லாம் சரி, கற்பு, Says:

    […] [4] https://womanissues.wordpress.com/2009/10/08/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E… […]

பின்னூட்டமொன்றை இடுக